Category Archives: Body

55210072-implant-technology-or-transplants-and-implants-concept

மனித உடல்

மனித மூளையின் நிறம் சாம்பல் நிறம்.

 ரத்தவகை ஆயுள் முழுவதும் மாறாது.

யோகாசனம் என்னும் பயிற்சி 21 வகைப்படும்

1. பத்மாசனம், 2. சித்தாசனம், 3. வஜ்ராசனம், 4. உட்கடாசனம், 5. பட்சி மோத்தாசனம், 6. வக்ராசனம், 7. உஷ்டிராசனம், 8. அர்த்த சிரசாசனம், 9. பாதஹஸ்தாசனம், 10. திரிகோணாசனம், 11. தனுராசனம், 12. விருட்சாசனம், 13. ஹனுமானாசனம், 14. தாடாசனம், 15. அர்த்த சக்கராசனம், 16. சோணாசனம், 17. புஜங்காசனம், 18. வீரபத்ராசனம், 19. சக்கராசனம், 20. அதோமுக சவாணாசனம் 21. நாற்காலி ஆசனம்.

 மனித உடலில் வினாடிக்கு 15 மில்லியன் ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன. அதேசமயம் அழியவும் செய்கின்றன.

மனித உடலில் உள்ள ஐம்புலன்களின் உறுப்புகளில் கடைசியாகச் செயலிழப்பது காது.

இடது நுரையீரலை விட அதிகமான காற்றை வலது நுரையீரல் உள் வாங்குகின்றது.

 மனித மூளையின் நினைவுத்திறன் நான்கு டெராபைட் அளவை விட அதிகமானது.

 நமது நாக்கின் நீளம் 10 செ.மீ. எடை 56 கிராம். சுவை அறியும் சுவை மொட்டுகள் நாக்கில் உள்ளன. அதன் மூலம் சுவை அறிய முடிகிறது. பேசும் சாதனம். உமிழ்நீர் சுரக்கும் இடம். நுனி நாக்கில் உப்பு சுவை மொட்டுகள், நடுவில் இனிப்பு சுவை அறியும் மொட்டுகள், உள் நாக்கில் கசப்பு சுவை மொட்டுகள், நாக்கின் ஓரத்தில் காரச்சுவை உணரும் மொட்டுகள் உள்ளன.

 நமது தலையின் எடை அளவு 3,175 கிலோ கிராம்.

* நமது உடலில் 600 தசைகள் உள்ளன.

நமது உடலில் இருக்கும் கொழுப்பைக் கொண்டு 7 சோப்புகள் செய்யலாம்.

மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.

மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும் தன்மையுடையது.

 மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் சத்துப்பொருட்கள் புரதச்சத்து ஆகும்.

தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர்.

‘மெலனின்’ என்று ஒரு ரசாயனப் பொருள்தான் நமது உடம்பின் தோலுக்கு நிறம் கொடுக்கிறது.

 ஒரு நாளில் நமது இரத்தம் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல்கள் 23 ஆயிரத்து 40 தடவைகள் சுவாசிக்கின்றன.

இதயம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 689 தடவைகள் துடிக்கிறது.

குழந்தை பிறந்த போது 270 எலும்புகள் இருக்கும். பிறகு சேர்ந்து 206 எலும்புகள் நிலைக்கும்.

கைரேகையைப் போலவே நாக்கிலுள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

* மனித உடலில் சதை அழுத்தமாக உள்ள பகுதி நாக்கு.

 மனிதர்களின் இரண்டு பக்க மூக்குத் துவாரங்களும் நுகர்வதர்கு வெவ்வேறாக செயல்படுகின்றன மனதுக்கு பிடித்த வாசனைகளை இடது பக்கத்தைக் காட்டிலும், வலது பக்கத் துவாரங்களே அதிகம் உணருகின்றன. எனினும், சரியான வாசனைகளைத் துல்லியமாக உணர இடது பக்கமே உதவுகிறது.

மூக்கை அடைத்துக்கொண்டு ஆப்பிளையோ உருளைக்கிழங்கையோ வெங்காயத்தையோ சாப்பிட்டால் எல்லாம் ஒரே ருசியாகத்தான் தெரியும்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, நமக்கு வாசனை உணர்வுகள் ஏற்படாது.

கோபம் மிகும்பொது முகத்திலுள்ள சிறு நாளங்கள் விரிந்து அதிக இரத்தம் பாய்கிறது. அதனால் முகம் சிகப்பாகிறது.

 நம் உடலில் அதிகம் உள்ள சுரப்பி வியர்வைச் சுரப்பிகளே. ஏறத்தாழ 20 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.

 ‘ஆக்சிஜன் படகு’ எனப்படுவது ஹீமோகுளோபின்.

மனித உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன.

 நம் உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை 830.

 நமக்கு களைப்பு ஏற்படும்போதும், மூளை சோர்வு அடையும்போதும், இதனை நமக்கு அறிவிக்கும் செயலே கொட்டாவி ஆகும்.

 நாம் உண்ணும் உணவில் அதிகப்படியாக புரதப் பொருள் இருந்தாலும், புளிப்பு பொருள்கள் இருந்தாலும் இவற்றை சிதைக்கும்பொழுது ஏற்படும் வாயு ஏப்பமாக வெளிவருகிறது.

உதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து செயல்பட முடியாத போது ஏற்படும் சுவாச சிக்கலே விக்கலாக மாறுகிறது.

 உணவுப் பாதையில் செல்லவேண்டிய உணவுத் துணுக்குகள் சுவாசப் பாதையில் பாதை மாறி நுழையும் பொது பொரை ஏறுதல் நிகழ்கிறது.

சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் ஒவ்வொரு நிமிடமும் நம் மூளைக்குள் பாய்கிறது.

 நம் கையின் கட்டை விரல் நகம்தான் மிகவும் மெதுவாக வளர்கிறதாம். வேகமாக வளர்வது நடு விரல் நகம்.

 உடல் உறுப்புகளில் தானாகவே இயங்கும் உறுப்பு இதயம் ஆகும்.

 மனித உடலில் இரத்தம் பாயாத இடம் விழி வெண் படலம். அதற்கு இரத்தமே செல்வதில்லை. தனக்குத் தேவையான ஆக்ஸிஜெனை அது காற்றிலிருந்து எடுத்துக் கொள்கிறது.

 மனித உடலில் வியர்வைச் சுரப்பிகள் உண்டு. ஆனால் பறவைகளுக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது அதனால் அதற்கு வியர்ப்பது இல்லை.

மனிதக் கண்களின் எடை 1.5 அவுன்சுகள் மட்டுமே ஆகும்.

 நமது உடலிலிருந்து தினமும் 0.8 லிட்டர் வியர்வை வெளியேறுகிறது.

நமது உரோமம் 0.004285 சென்டி மீட்டர் வளர்கிறது.

 பெண்களைக்காட்டிலும் 40 சதவீதம் அதிகமாக ஆண்களுக்கு வியர்க்கிறது.

நமது உடலில் வியர்க்காத பகுதி உதடு.

கை விரல்களில் சுட்டு விரலுக்கு உணர்வு அதிகம்.

 சுவாசித்தல் சிதை மாற்றம் எனும் வழியின் கீழ் அடங்கும்.

நமது உடல் 866 டிகிரி வெப்பத்தை வெளியேற்றுகிறது.

 நமது உரோமம் 0.04285 செ.மீ. வளர்கிறது.

நமது விரல் நகம் 0.00115 செ.மீ. வளர்கிறது.

 நமது இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.

 நாம் 76,09,000 மூளை அணுக்களுக்கு வேலை தருகிறோம்.

 உடலில் மிகத் துரிதமாக செய்தியைக் கடத்துவது நரம்பு மண்டலம்தான். இது ஒரு மணி நேரத்தில் 283 கி.மீ. வேகத்தில் செய்தியைக் கடத்துகிறது.

நாம் தூங்கும்போது எல்லா உறுப்புகளும் ஒரே நேரத்தில் ஓய்வெடுப்பதில்லை. முதலில் கண்கள், பின்பு காது, தோல் என ஒவ்வொன்றாக ஓய்வெடுக்கத் துவங்கும்.

images (55)

ஆபரணமும் உடல் ஆரோகியமும்

நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகிற்கும் ஆடம்பரத்திட்கும் மட்டுமே நகைகள் என்று நினைப்பது முற்றிலும் தவறான விடயம்.

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை.

நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.

அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.

இன்று தங்கத்தை சாதாரண மக்கள் உபயோகிப்பது குறைந்து வருகிறது ஏன் என்றால் தங்கத்தின் விலை மிக உயர்ந்ததாகவும் பலவிதமான fashion நகைகள் சந்தைக்கு வந்ததே காரணமாகும்.

நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் கட்டாயமாக இருந்தது நமது தமிழர் பாரம்பரியத்தில். அது நமது ஆரோக்கியத்தை முன் நிறுத்தியே ஆகும்.

ஆரம்ப காலத்தில் நாம் எல்லோரும் கொலுசு அணிந்தோம். பின்னர் இடைப்பட்ட காலத்தில் அது பழங்கால பழக்கம் என்று கைவிடப்பட்டது. தற்பொழுது அது மீண்டும் வழக்கத்திற்கு வந்ததுள்ளது. அதிலும் ஒற்றைக் காலில் கொலுசு அணிவதுதான் பேஷன். பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.

தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.

உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை ஸ்திரப் படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.

images (52)மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும். ஏன் என்றால் பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.கொலுசைப் போலவே மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும். ஏன் என்றால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊ டுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல்உள்ளது.

முக்கியமாக கருப்பை நோய்களை கட்டுப் படுத்துகிறது. கர்ப்பத்தின் போது உருவாகும் மயக்கம், வாந்தி என்பவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி அவசியப்படுகிறது.

கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப்படுவதால்  நமது உடல் பிணிகளை, முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களது உடல் பிணிகளை க் குறைகிறது.

சிறு குழந்தையாக நாம் இருக்கையில் நமக்கு இடுப்பில் அரை நாண் கொடி அணிவிப்பது வழக்கம். உடலின் நடுப்பகுதியான இடுப்பில் அணிவிப்பதன் முக்கிய நோக்கமே உடலில் குருதி சுற்றோட்டத்தை பேணுவதற்கு தான். மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் செல்லும் இரத்த ஓட்டம் சீராகவும் சமநிலையுடனும் இருக்கவே அரை நாண் கொடி பயன்படுகிறது. அத்துடன் ஆண் பெண் மலட்டுத்தன்மையை நீக்கவும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் அரை நாண் கொடி பயன்படுகிறது.

விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளம் என்பவற்றுக்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது.

அதனால்தான், திருமண மோதிரம் கட்டாயமாக மோதிரவிரலில் அணிய கட்டயாப்படுத்தப்படுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் என்பவை நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணிதல் தடுக்கபடுகிறது ஏன் என்றால் இதய கோளாறுகள் ஏற்படும். 

பருவ வயதை அடைந்த பெண்களுக்கு தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக்  கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு  சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில்  இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்

காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி.

நமது மூளையின் அடிபகுதியில் நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக்கூடிய சில பகுதிகள் உணர்ச்சி களை செயல்படுத்தும். இந்த பகுதியின் செயல் பாட்டை பெண்களுக்கு அதிகப்படுத்த மூக்குத்தி அவசியப்படுகிறது.பெண்களின் இடதுபுற மூக்கில் குத்தக்கூடிய மூக்குத்தி, வலது புற மூளையையும் வலது புற மூக்கில் குத்தும் மூக்குத்தி இடதுபுற மூளையையும் இயக்க கூடியதாக உள்ளது.

இன்று இருபுறமும் மூக்குத்தி அணிந்தாலும் சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் தான் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனா சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.

நமது முன் நெற்றிப்பகுதியில் இருந்து சில நரம்புகள் மூக்கு தூவாரம் வரை கீழ் இறங்கி மூக்கு பகுதியில் மெல்லிய துவாரங்களாக இருக்கும். இதில் அணியப்படும் தங்க மூக்குத்தி உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்கும்.

மூக்கு மடலில் ஏற்படுத்தப்படும் துவாரம் நரம்பு மண்டலத்தில் உள்ள அசுத்த வாயுவை அகற்றும்.  ஒற்றைத்தலைவலி, நரம்பு நோய்கள், உளச்சோர்வு ஏற்படமல் மூக்குத்தி தடுக்கிறது.

images (53)காது சோனையில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே. வயிறும் கல்லீரலும் தூண்டப்படும் ஜீரணக்கோளாறு, கண்பார்வை கோளாறு சரியாகும்.

வளையல் அணிவதன் முக்கிய நோக்கம் ஹார்மோன்களின் குறைப்பாடுகளை களைவதாகும். பிறந்தது முதல் நமது உடலில் ஹார்மோன்களின் குறைப்பாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் அக்காலத்தில் இறுதிவரை வளையல் அணிதல் கட்டாயமாக்கப் பட்டு இருந்தது.

images (54)அதிலும் கர்ப்பமான பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் வளைகாப்பு சடங்கு முக்கியம் பெறுகிறது நமது பாரம்பரியத்தில். வளையல் அணிவதால் சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்துமா போன்றவை குறையும். நன்றாக தூக்கம் வரும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கவும் உடல் சூடு தனியவும் இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்தது.

images (34)

குடலின் இயக்கம்

குடல் என்பது ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதியாகும். குடலில் ஏற்படும் கோளாறுகள் உடல் இயக்கத்தை பெருமளவில் பாதிக்கிறது. மலச்சிக்கல் ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால், அல்லது மலம் மிகவும் வலியுடனுடம் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என ஆங்கில மருத்துவம் கூறுகிறது.
நபருக்கு நபர் குடலின் செயல்பாடுகள் மாறுபடும். வாழ்வில் எல்லோருக்கும் எப்பொழுதாவது மலச்சிக்கல் ஏற்படும். இது சில காலம் நீடிக்கும். இது எதனால் ஏற்படுகிறது என புரிந்து கொண்டால் இதைத் தடுக்க முடியும்.
நாம் உண்ணும் உணவு வயிற்றிலும், சிறுகுடலிலும் பயணிக்கும்போது பல்வேறு இரசாயனங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு, அதில் இருந்து உடலுக்குத் தேவையான சத்துக்கள் எடுக்கப்படுகின்றது. தேவையான சத்துக்களைப் பிரித்தெடுத்த பின் மிஞ்சும் சக்கை, கழிவாக பெருங்குடலுக்கு வந்து சேர்கிறது. பெருங்குடலில் தண்ணீர் அனைத்தும் உறிஞ்சப்பட்டவுடன், மீதி உள்ளவை மலமாக வெளியேற்றப்படுகிறது.
மலச்சிக்கல் ஏற்பட பொதுவான காரணங்கள்:
உணவுமுறையில் மாற்றம் குறைந்த நார்ச் சத்துள்ள உணவு சாப்பிடுவது தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகள் அருந்தாமை இரும்பு, சுண்ணாம்பு மாத்திரைகள் மற்றும் வலியை மட்டுப்படுத்தும் சில மாத்திரைகள் உடல் உழைப்பின்மை அதிக மனஅழுத்தம் பிரயாணம் மலம் வரும் போது கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்வது பெருங்குடல் மிக மெதுவாக வேலை செய்தால், கழிவுப்பொருட்கள் அதிகநேரம் தங்கி மலம் இறுகிவிடுகிறது.
மருத்துவக் காரணங்கள்:
பெருங்குடல், ஆசனவாய் இவற்றில் உள்ள தசைகளில் கோளாறு ஏற்படுவது தைராய்டு குறைவாகச் சுரப்பது சர்க்கரை நோய் பெண்களில் சிலருக்கு கர்ப்ப காலத்திலும், சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மட்டும் மலச்சிக்கல் ஏற்படும். எவ்வாறு விடுபடுவது: வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சரி செய்யலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் மலத்தை இளக்கும். நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவினால் மலச்சிக்கல் ஏற்படுகிறதா எனக் கவனிக்கவும். நீர் வறட்சி மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதிக திரவ உணவுகள் வறட்சியைத் தடுப்பதற்கு உதவும். ஆனால் காபி, டீ மற்றும் மது போன்றவற்றைத் தவிர்க்கவும். தொடர் உடற்பயிற்சி, குடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும். மலம் வரும்போது, வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் புறக்கணிக்காமல் செல்லவும். எப்போதும் தளர்வு நிலையில் இருப்பது உதவும்.
மருந்துகள்:
இப்பிரச்சினை மிகவும் பாதிப்பாக இல்லையென்றால் மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது. மிகுந்த தொந்தரவாக இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நீங்களாகவே எடுத்துக்கொள்ளும் மருந்துகள் குடலின் செயல்பாட்டைப் பாதிக்கும். ரத்தம் கலந்த அல்லது கறுப்பான மலம்: மலத்தில் இரத்தம் கலந்திருந்தால், ஜீரண மண்டலத்தில் ஏதோ காயம் ஏற்பட்டிருக்கிறது என அர்த்தம். வாயிலிருந்து ஆசனவாய் வரை ரத்தக் கசிவு எங்கிருந்து வேண்டுமானாலும் ஏற்படலாம். ரத்தம் கறுப்பு நிறத்திலிருந்தால் ஜீரண மண்டலத்தின் முதல் பாதியிலிருந்தும் – சிகப்பு நிறத்தில் இருந்தால், ஜீரண மண்டலத்தின் இரண்டாவது பகுதியிலிருந்தும் வருவதாகக் கொள்ளலாம். வயிற்றுப் புண், ரத்த நாளங்களின் கோளாறுகள் போன்றவை கறுப்பான மலத்தை ஏற்படுத்தும்
. ஆசன வாயில் வெடிப்பு, ஹெமராய்ட்ஸ், குடலில் ஏற்படும் தொற்று, புற்றுநோய் மற்றும் குடல் நோய்கள் போன்றவை சிவப்பு நிற ரத்தப்போக்கை ஏற்படுத்தும். இரும்புச் சத்து மாத்திரைகள் மற்றும் பிற மருந்துகளும் மலத்தைக் கறுப்பு நிறமாக்கும். ஆஸ்பிரின் மற்றும் புரூஃபன் போன்ற வலி மாத்திரைகளைத் தேவைக்கதிகமாக உட்கொண்டால் வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ளவும்.
வயிற்றுப் போக்கு:
மலம் நீராகக் கழிவதும், ஒரு நாளில் மூன்று முறைக்குமேல் கழிவதும் வயிற்றுப் போக்கு எனச் சொல்லலாம். பொதுவாக, ஓரிரு நாளில் இது சரியாகிவிடும். இது அதிகமானால் உடலில் சரியான அளவு நீர் இல்லாமல், வறட்சி ஏற்பட்டு, உடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இத்தகைய நீர்வறட்சி உயிருக்கே ஆபத்தாக முடியும்.
வயிற்றுப் போக்கின் அறிகுறிகள்:
வயிற்றுப் போக்குடன், அதன் காரணியைப் பொறுத்து, வயிற்றில் வலி, அசௌகரியம், உப்புசம், குமட்டல் உடனடியாக மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு, ஜுரமோ அல்லது இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கோ நேரிடலாம்.
வயிற்றுப்போக்கு எதனால் ஏற்படுகிறது
பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளாலும் ஒட்டுண்ணிகளாலும் தீவிர வயிற்றுப் போக்கு ஏற்படும். உடலில் உள்ள மற்ற நோய்களாலும் நாட்பட்ட வயிற்றுப்போக்கு ஏற்படலாம். தொற்றுநோய்க் கிருமிகள் உணவு மற்றும் தண்ணீர் மூலமாக நமது உடலுக்குள் செல்கிறது. சிலரால் குறிப்பிட்ட உணவுப் பொருட்களை ஜீரணிக்க முடியாத போது வயிற்றுப் போக்கு ஏற்படும்.
சில வகையான ஆன்டிபயாடிக் மருந்துகள், பெருங்குடலில் எரிச்சல் மற்றும் தொற்றால் ஏற்படும் வியாதிகள் ஆகியவை வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். குழந்தைகளின் வயிற்றுப்போக்கு: மேற்சொன்ன காரணங்களினால் குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கு ஏற்படும். குறிப்பாக ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, வறட்சி எளிதாக ஏற்பட்டு இறக்கவும் வாய்ப்பு உள்ளது. உடனடியாக நீர் அல்லது திரவங்கள் கொடுத்து வறட்சியைச் சரி செய்ய வேண்டும்.
வயிற்றுப் போக்கின்போது மலத்தில் ரத்தம் அல்லது சளி, கறுப்பான நிறத்தில் மலம், ஜுரம், அத்துடன் வாய், தோல், நாக்கு உலர்தல் போன்றவை இருந்தால் உடனே மருத்துவ உதவி தேவை. நீர் வறட்சி (Dehydration) வயிற்றுப் போக்கின்போது மலத்துடன், நீர் மற்றும் உடலுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்கள், உப்பு மற்றும் சத்துப் பொருட்கள் வெளியேறுகின்றன. உடனே சரி செய்யாவிட்டால் இது ஆபத்தில் முடியலாம்.
வறட்சியின் அறிகுறிகள்:
தாகம் சிறுநீர் கழித்தல் குறைவது, எரிச்சலுடன் சிறுநீர் கழிவது, சிறுநீர் நிறத்தில் மாற்றம் உடல் உஷ்ணம் சருமம் உலர்தல் அசதி தலைச் சுற்றல் குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள்: உலர்ந்த நாக்கு, உதடு மற்றும் சருமம், குழி விழுந்த கண்கள், கன்னம், காரணமின்றி அழுவது, அதிக ஜுரம், 3 மணி நேரங்களுக்கு மேல் சிறுநீர் கழிக்காதது, அழும்பொழுது கண்ணீர் வராதது.
வறட்சியை எவ்வாறு தடுப்பது
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக இழந்த நீர் மற்றும் தாதுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தண்ணீர் மட்டும் போதாது. அதனுடன் தாதுப் பொருட்களும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு எளிய வழி தண்ணீருடன், உப்பு மற்றும் சர்க்கரை கலந்து எடுத்துக் கொள்ளலாம்
. (ஒரு லிட்டர் சுத்தமான நீர் அல்லது காய்ச்சி ஆறிய நீர் + 1 டீஸ்பூன் உப்பு + 8 டீஸ்பூன் சர்க்கரை)
குடலில் ஏற்படும் நோய்கள்:
கீழ்க்கண்டவை அனைத்தும் மலம் கழிப்பதில் மாற்றம் ஏற்படுத்தும். குடல் எரிவு வியாதிகள் (Inflammatory bowel disease) இந்த வியாதி குடல் எங்கிலும் எரிச்சலால் புண் ஏற்படுத்தும். பொதுவாக இது 15 – 30 வயதுகளில் ஆரம்பமாகும்.
வயிற்று வலி மற்றும் இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும். இது தவிர தோலில் புண், மூட்டுவலி, எடை குறைவு, அசதி, இரத்த சோகை போன்றவை ஏற்படும். பதற்றம், மன அழுத்தம் ஆகியவை இந்த அறிகுறிகளை அதிகப்படுத்தும்.
குடல் புற்றுநோய்:
மலம் கழித்தலில் மாற்றம், வயிற்றில் அசௌகரியம், ரத்தம் கலந்த மலம் போன்றவை குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பொதுவாக இந்நோய் ஏற்படும். குடலில் எரிவு நோய்கள், அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ளுதல், ஏற்கனவே குடும்பத்தாருக்கு குடல் புற்றுநோய் இருப்பது போன்றவை இந்நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.
இரிடபிள் பௌவல் சின்றோம் (Irritable bowel syndrome) குடலின் செயல்பாடுகளை தானியங்கி நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. சிலவகையான உணவு மற்றும் மனஅழுத்தத்திற்கு சிலரின் குடல் வெகுவாக எதிர்விளைவு உண்டாக்கும். அதன் காரணமாக, வயிற்றில் வலி, மலம் கழித்த பிறகு வயிற்றுவலி குறைதல், உப்புசம், மலத்தில் சளி ஆகியவை ஏற்படும்.
நோய்க்கான காரணிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதிக உணவு, சாக்லேட், பால், காபி, டீ போன்ற உணவு வகைகள், சிலவகை மருந்துகள், உணர்ச்சிவசப்படுதல், மனச் சோர்வுடன் இருத்தல், பதற்றமடைதல் இவை அனைத்தும் இந்நோயின் வீரியத்தை அதிகப்படுத்தும்.
யோகா எவ்வாறு உதவுகிறது
யோகா உடலை பலவகையான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார் செய்கிறது. உடலை எப்போதும் தளர்வான நிலையில் இருக்கச் செய்வதால் மன அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் உடலின் பல்வேறு செயல்கள் திறம்பட நடக்கிறது. யோகா, குறிப்பாக, தானியங்கி மண்டலத்தை சமன் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடலின் செயல்பாடுகள் அனைத்தும் தானியங்கி மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அது சமனாக இருந்தாலே, குடலில் ஏற்படும் கோளாறுகள் குறைகின்றன.

55210072-implant-technology-or-transplants-and-implants-concept

5 FACTS IN OUR BODY

1. The cracking sound made by knuckles, necks, backs, and other joints when they’re cracked is the sound of bubbles popping in the joints’ fluid. Is it harmful? Not terribly. But cracking a joint too often can hurt the cords, called ligaments, that surround the joint

2. Just one drop of blood contains about 10,000 while blood cells and 250,000 platelets

3. . The Brain is a very wrinkly organ! If you spread it out, your brain would be about the size of a pillowcase. By the time you are six years old, your brain is already 90 percent of the size it will be when you are an adult

4. The liver has an amazing ability to grow back if part of it is removed due to injury, disease, or surgery. It will even grow to be just the right size for the body it’s in.

5. Your salivary glands produce two to six cups of (0.5-1.5 litres) of saliva a day. Six cups of saliva would come close to filling a big, two-litre (67.6) ounce soda bottle!