Category Archives: வாசித்ததில் நேசித்தது

download (26)

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை.

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.

சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் பகிர்கிறோம்.

அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 

என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 

நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 

இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 
கவலைப்படவில்லை.

திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன்.

எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி,

மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 

நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, 

அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.

‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்?

அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.

எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.

உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி,

அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், 

ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன்.

ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள்.

அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள். 

உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? 

அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 250 ரூபா விலை சொல்றான்” என்றாள்.

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு

ஆச்சர்யப்பட்டேன்.

பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், 

ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 250 ரூபாயாகக் கூடிவிட்டதே!

இதை நினைக்கிறபோது,

நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்

steve

பணம் பணம் பணம்

பணம் பணம் பணம் என்று அதை நோக்கியே நேர் வ்ழியிலும் சரி, குறுக்கு வ்ழியிலும் சரி செயல்படும் நண்பர்களுக்கு..

உலகமே வியந்த, பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவ்னத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வ்யதில் உலகைப் பிரிவதற்கு முன்பாக விட்டுச் சென்ற செய்தியை அவரின் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்திச் சொல்கிறேன்..

“வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.

உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாரிக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.

எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்? திரும்ப கிடைக்கவே கிடைக்காது.வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.

நாம் பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கெடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கெடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும். செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.

ஆகவே..உங்களைச் சுற்றிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான குடும்பத்தினர் அனவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி. அது நீங்கள் வாங்கிய அல்லது வாங்க விரும்பும் எந்தப் பொருளிலும் இல்லை.

பின் குறிப்பு:

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த போது அவர் விட்டுச் சென்ற சொத்துக்களின் மதிப்பு 2011ல் 10.2 பில்லியன் டாலர்ஸ்!( இந்திய மதிப்பில் அறுபத்து ஐந்தாயிரம் கோடிக்கு மேல்)

20150911234922 (1)

Top Management

Agency: ” Sir, we found 3 candidates as per your requirements, now how do you want their placements sir?”

M.D: “Put about 100 bricks in a closed room. Then send the candidates into the room & close the door, leave them alone & come back after a few hours and analyse the situation:-

1) If they are counting the bricks, Put them in Accounts deptt.

2) If they are re-counting the bricks, Put them in Auditing.

3) If they have messed up the whole room with the bricks, Put them in Engineering.

4) If they are arranging the bricks in some strange order, Put them in Planning.

5) If they are throwing the bricks at each other, Put them in Operations.

6) If they are sleeping, Put them in Security.

7) If they have broken the bricks into pieces, Put them in Information Technology.

8) If they are sitting idle, Put them in Human Resources.

9) If they say they have tried different combinations yet not a single brick has been moved, Put them in Sales.

10) If they have already left for the day, Put them in Marketing.

11) If they are staring out of the window, Put them in Strategic Planning.

And…….

12) If they are talking to each other and not a single brick has been touched, Congratulate them and put them in Top Management

download (7)

வாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வை தரும்

ஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன.

அதில் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம்.மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.

ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார்.
அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.

அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான்.
அவரும் ” இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்” என்று ஆசி கூறினார்.

அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன.

எப்படி நடந்தது என்று தெரியாத படி வருமானம் பெருகியது.

இரண்டு மாடுகள் நாலாகி , நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள்.

சிறிய கூரை வீடு பெரிய காரை வீடு ஆனது.

திரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு. நிற்கவும் நேரமில்லை.
ஆண்டுகள் ஓடின. மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார்.

தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அவன் அவரைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் குடியானவன் வரவில்லை.
மனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம்.

இருந்தாலும் அவரே நேராக அவன் வீட்டுக்குப் போனார்.

அவர் சென்ற நேரத்தில் அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.

அவனது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையை கணவனிடம் தெரிவித்தாள்.
அவனும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுதாக சொல்லி அனுப்பினான்.

ஞானிக்கு வந்தது பாருங்கள் கோபம்.
காசு பணம் வந்ததும் பழசை எல்லாமே மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே!.இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது.
பழைய படி இரண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும் “!.
சபித்து விட்டு வேகமாகச் சென்று விட்டார்.

அவர் பேசியது எல்லாம் அவன் காதில் விழ, பதறியடித்து ஓடி வந்தான். அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவன் நினைக்கவே இல்லை. அவரைத் தேடி ஓடினான்.ஆனால் அவர் எங்கு எனத் தெரியவில்லை. சோர்ந்து போய் வீடு திரும்பினான். கொல்லைப் புறத்தில் அவர் சபித்த படியே இரண்டே மாடுகள். தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

என் அலட்சியத்தால் எல்லாம் போச்சே. இனி பழைய படி வறுமையில் கஷ்டப்படப் போறோமே! என்று புலம்பினான்.

அவன் மனைவி அவன் அருகில் வந்து சொன்னாள் , “இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க”.

அவனுக்கு மேலும் குழப்பம் வந்தது. “மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய?!. இதைத் தவிர வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாதே ” என்றான்.

மனைவி மறுபடியும் மாடுகளை விற்க வலியுறுத்தினாள். “சரி போ. நடக்கறது நடக்கட்டும் ” என்று சொல்லி இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு சந்தைக்குக் கிளம்பினான்._*

நன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது.

மனது கணக்க , கண்ணில் கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தான். அவனது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவனை வரவேற்றாள்.

குடியானவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை!. அவளாகவே சொன்னாள்.

“கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க என்றாள் “.போய் பார்த்தான்.

அவன் கண்களையே அவனாலேயே நம்ப முடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள்.கேள்வியுடன் மனைவி முகத்தை ஏறிட்டான்.

மனைவி சொன்னாள், ” எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கணும்ங்கறதுதானே சாபம்?.

அப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா? “.

அவனுக்கு அவள் சொன்னதும் புரிந்தது, புத்தியுள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் பாக்கியவான் என்பதும் புரிந்தது.

அன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்தான்.
முன்பை விடப் பெரிய பணக்காரன் ஆனான்.

சில நேரத்தில் நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான். உரிய நேரத்தில் சொல்லும் அறிவுரையை இவளுக்கு என்ன தெரியும் என்று உதாசீனப் படுத்தி விடாதீர்கள்.

வாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வை தரும்.சிறு விஷயத்தை பூதாகரமாக பார்க்காதீர்கள்.
விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவது இல்லை.

குணவதியின் கரம் பிடித்த எல்லாருமே கோடிஸ்வரர்கள்தான்..!

பெண்கள் குணவதியாக இருக்க ஆண்களும் காரணம்.

images (8)

கதைகள் பேசும்

எதிர்பாராத சந்தோஷம் கிடைக்கும்போது நாம் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம்! இதுபோலவே எதிர்பாராத சந்தோஷத்தை நாம் யாருக்காவது உருவாக்கி தருகிறோமா என்ன?

சீனாவின் பழங்கதை ஒன்று இதைப் பற்றிப் பேசுகிறது. அந்தக் காலங்களில் உறைவிடப் பள்ளி ஆசிரியர்கள் வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் குறிப்பாக புத்தாண்டு தொடங்கும்போது 10 நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அப்போது சிறப்பு சம்பளமும் பெறுவார்கள்.

வாங் என்ற ஆசிரியர் புத்தாண்டு விடுமுறைக்காக ஊருக்குப் புறப்பட்டார். தனக்காக மனைவி காத்திருப்பாளே என நினைத்து வேகவேகமாக தன் கிராமத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். அவரது நண்பரான ஷாங் உடன் பயணம் செய்தார். மூன்று நாட்கள் பயணம் செய்தால்தான் வாங் தன்னுடைய கிராமத்தை அடைய முடியும்.

பயண வழியில் ஷாங் தன் கையில் இருந்த பணத்தில் குடித்தார். சூதாடினார். கடனாளியாகியாகவே வீட்டுக்குத் திரும்பி போனால் மனைவியும் பிள்ளைகளும் திட்டுவார்களே என நினைத்து பள்ளிக்கே திரும்பி போய்விட்டார்.

ஆனால், வாங் மனைவிக்கான புத்தாடை மற்றும் இனிப்புகளுடன் வீடு நோக்கிப் பயணித்தார். வாங் தனது கிராமத்துக்குப் போகிற வழியில்தான் ஷாங்கின் ஊர் இருந்தது. அதைக் கடக்கும்போது ஷாங்கின் மனைவியும் பிள்ளைகளும் அவருக்காக காத்திருப்பதைக் கண்டார். ஷாங்கின் மனைவி வாங்கிடம் தன் கணவரைப் பற்றி விசாரித்தாள். ‘‘புத்தாண்டு கொண்டாட எங்களிடம் பணமில்லை. அவர் வந்தால்தான் பிள்ளைகளின் பசி தீரும். அவர் எப்போது வருவார்?’’ எனக் கேட்டாள். அதைக் கேட்ட வாங்கிற்கு என்ன பதில் சொல்வது எனப் புரியவில்லை.

தன் கையில் இருந்த புத்தாடை, இனிப்பு மற்றும் தனது சம்பளப் பணம் அத்தனையையும் அவர்களிடம் கொடுத்து ‘‘ஷாங்கிற்கு விடுமுறை கிடைக்கவில்லை என்பதால் இவற்றைக் கொடுத்து அனுப்பினார். அவர் வசந்த காலத்தில் ஊருக்கு வருவதாகச் சொல்லி அனுப்பியிருக்கிறார்’’ என்றார்.

புத்தாடை, இனிப்பு, பணம் இவற்றை கண்ட ஷாங்கின் குடும்பம் சந்தோஷத்தில் மூழ்கியது. வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் வாங்கிற்கு நன்றி சொன்னார்கள்.

வெறும்கையோடு வாங் வீடு திரும்பினார். நடந்த விஷயத்தை அவர் மனைவியிடம் சொன்னதும் அவள் கோபித்துக் கொண்டாள். ‘‘வெறும்கையை வைத்துக் கொண்டு எப்படி புத்தாண்டு கொண்டாடுவது? யாரோ ஒருவருக்கு பணத்தைத் தூக்கி கொடுத்தது உங்கள் தவறு!’’ என்று சண்டையிட்டாள்.

வாங் அவளை சமாதானம் செய்ய முயற்சித்துத் தோற்றுப் போனார்.

விடிந்தால் புத்தாண்டு. வாங்கின் வீடு இருண்டு கிடந்தது.

இரவில் மனைவி ஓர் ஆலோசனை சொன்னாள்: ‘‘இந்த ஊரில் உங்களிடம் படித்த மாணவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களிடம் போய் கடன் கேளுங்கள். கடனாக பணம் வாங்கி வந்தால் மட்டுமே நாளை நம் வீட்டில் உணவு. இல்லாவிட்டால் புத்தாண்டில் நாம் பட்டினி கிடக்க வேண்டியதுதான்!’’

‘‘மாணவர்களிடம் கடன் கேட்பது தவறானது. அதுவும் புத்தாண்டு அன்று ஒருவன் கடன் கேட்கக் கூடாது’’ என வாங் மறுத்துவிட்டார். வாங்கின் மனைவி அவரை மோசமாகத் திட்டினாள்.

புத்தாண்டு பிறந்தது. வாங் வீட்டில் எந்த விசேஷமும் இல்லை. கதவைக்கூட அவர்கள் திறக்கவில்லை.

திடீரென யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு, வாங்கின் மனைவி கதவைத் திறந்தாள்.

வாசலில் பத்து மாணவர்கள், ஆளுக்கு ஒரு தட்டில் பரிசு, புத்தாடை, உணவு, இனிப்புகளுடன் நின்றிருந்தார்கள். தங்கள் ஆசிரியருக்கு புத்தாண்டுப் பரிசாக இவற்றை அளிக்க விரும்புவதாகச் சொன்னார்கள்.

வாங்கின் மனைவியால் நம்பவேமுடியவில்லை. உள்ளே அழைத்தாள். வாங் தனது மாணவர்களின் அன்பை கண்டு சந்தோஷம் அடைந்தார்.

மீண்டும் வாசல் கதவு தட்டப்பட்டது.

வாசலில் ஷாங்கின் மனைவியும் பிள்ளைகளும் நின்றிருந்தார்கள். அவர்கள் கையிலும் பரிசுப் பொருட்கள் இருந்தன.

ஷாங்கின் மனைவி சொன்னாள்: ‘‘நேற்றிரவு எனது கணவர் வீடு திரும்பிவிட்டார். அவர் குடித்தும் சூதாடியும் சம்பளப் பணத்தை இழந்த கதையைச் சொன்னார். உங்கள் பணத்தை எங்கள் சந்தோஷத்துக்காக நீங்கள் தந்தது உங்களின் பெருந்தன்மை. இந்த மனசு யாருக்குமே வராது. பெரிய மனசோடு நீங்கள் கொடுத்தப் பணத்தை செலவு செய்ய மனமில்லை. ஆகவே, திரும்பி தந்துவிட்டுப் போக வந்திருக்கிறோம்!’’

‘‘ஏழு குழந்தைகள், வயதான தந்தை- தாய்… என உங்கள் குடும்பம் பெரிசு. நீங்கள் புத்தாண்டு கொண்டாடுவதுதான் பொருத்தமானது. இங்கே நான் என் மனைவி இருவர்தானே. ஆகவேதான் எனது சம்பளப் பணத்தை உங்களுக்காகக் கொடுத்தேன். உங்கள் சகோதரன் கொடுத்த பணமாக நினைத்து புத்தாண்டு கொண்டாடுங்கள்!’’ என்றார்.

‘‘வாங் உங்களின் அன்பு மகத்தானது. ‘ஆசிரியரே அதிகமானவர்களை சந்தோஷப்படுத்துகிறவர்’ என்பதற்கு அடையாளமாக இருக்கிறீர்கள், நன்றி நன்றி!’’ என அந்தக் குடும்பமே நன்றி சொல்லிப் போனது;

இந்த விஷயம் ஊருக்குள் பரவியது. உடனே ஊரில் இருந்த அத்தனை பேரும் தனது மனைவி பிள்ளைகளுடன் புத்தாண்டில் வாங்கிடம் ஆசி பெற வேண்டும் என விரும்பி பரிசுப் பொருட்கள், இனிப்புகளுடன் திரண்டு வந்தார்கள். வாங்கின் வீடு நிறைய பரிசுப் பொருட்களும் இனிப்புகளும் நிரம்பின என முடிகிறது அந்தக் கதை.

எளிய மனிதர்கள் தங்களால் முடிந்த அளவு சந்தோஷத்தை உருவாக்கவே முனைகிறார்கள். பணம் படைத்தவர்களோ, சந்தோஷத்தை இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துக்கொள்கிறார்கள். சந்தோஷப்படுத்துவதில்தான் வாழ்க்கையின் இன்பம் இருக்கிறது என்பதை அறியாமல்.

T1

தெருவில் ஒலித்து மறைந்த குரல்கள்..

என்னுடைய சிறு வயது முதல் இளமைக் காலம் வரை நம் ஊரில் பெரும்பாலும் தனி வீடுகள்தான் இருந்தன.

பிரிட்ஜ், டி.வி., வாஷிங் மெஷின், போன்றவை 90% வீடுகளில் கிடையாது.

கிரைண்டர், மிக்ஸி, டூ வீலர் போன்றவையே ஆடம்பரம்தான்.

ஏ.சி.யா? அப்படீன்னா..என்ன?

சூப்பர் மார்க்கெட் என்னும் கான்செப்ட் பெரிதாக வளரவில்லை. எல்லோரும் பக்கத்தில் இருக்கும் நாடார் கடையிலோ, செட்டியார் கடையிலோதான் மாதாந்திர கணக்கில் சாமான்கள் வாங்குவார்கள்.

அதற்கென்று ஒரு குட்டி நோட்டு உண்டு. அந்த கடைகளில் பிளாஸ்டிக் பை தர மாட்டார்கள்.

நாம்தான் சாமான்கள் வாங்க துணிப் பையும், எண்ணெய் வாங்க தூக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

எனவே அப்போதெல்லாம் தெருக்களில் நிறைய சாமான்கள் விற்றுக் கொண்டு வருவார்கள்.

விதம் விதமான குரல்களிலும், தொனி- களிலும் தங்கள் பொருள்களை விற்றுக் கொண்டு போவார்கள்.

வீடுகளில் அம்மியும், ஆட்டுக்கல்லும் மட்டுமே இருந்ததால் “ஆட்டுக்கல் குத்தலையோ, அம்மிக்கல் குத்தலையோ” (ஆட்டுக்கல்லையும், அம்மிக்கல்லையும் பொள்ளுவதை “குத்தலையோ?” என்பார்கள்). என்றபடி தலையில் ஒரு சிறிய சாக்கு பையை வைத்துக் கொண்டு ஒருவர் கூவிக் கொண்டே செல்வார்.

ஒவ்வொரு ஞாயிறென்றும் பகல் மூன்று மணி அளவில் கடிகாரம், பேனா ரிப்பேர் செய்வதாக ஒருவர் ஒரு பெரிய மரப்பெட்டியை சுமந்து கொண்டு வருவார். அதில் வித விதமான பேனாக்கள் வைத்திருப்பார்.

கடிகாரத்தை சர்வீஸ் செய்யக் கொடுத்தால் கண்களில் ஒரு லென்ஸை மாட்டிக் கொண்டு, “பார் எத்தனை அழுக்கு” என்று நம்மிடம் காட்டுவார்.

“ஸ்ப்ரிங் சரியில்லை, முள் சரியில்லை” என்று ஏதோ கூறி, என்னவோ செய்து ஓடவிட்டு செல்லுவார்.

அந்த கடிகாரம் கொஞ்ச நேரம் ஓடும் பிறகு நின்று விடும். சரி செய்தவரிடம் கேட்கலாம் என்றால் கொஞ்ச நாள் தலையை காட்ட மாட்டார்.

இவரைத் தவிர, “பூ…ட்… ரிப்பேர்(பூட்டு ரிப்பேர்), கொடை ரிப்பேர் என்று கூவியபடி ஒரு ஆள் அடிக்கடி வருவார்.

மழைக் காலங்களில் சிலர் அவரிடம் தங்கள் வீட்டு குடைகளை ரிப்பேர் செய்து கொள்வார்கள்.

வெள்ளிக் கிழமை என்றால் காலையில்,” உப்பு, உப்பு..” என்று கை வண்டியில் உப்பை தள்ளிக் கொண்டு விற்க வருபவரிடம் பெரும்பாலும் எல்லோரும் உப்பு வாங்குவார்கள்.

வெள்ளிக் கிழமை உப்பு வாங்க வேண்டும் என்பது ஐதீகம் அல்லவா?

வாரத்தில் இரண்டு முறை கெரசின் ஆயில் விற்றுக் கொண்டு வருபவர் அந்த வண்டியில் உள்ள மணியால் ஒலி எழுப்பும் பொழுது தாய்மார்கள் தெரிந்து கொள்வார்கள் கெரசின் என்று.

அப்போ- தெல்லாம் எல்லா வீடுகளிலும் கேஸ் அடுப்பு கிடையாது.

கேஸுக்கு புக் பண்ணிவிட்டு கனெக்ஷனுக்காக காத்திருக்க வேண்டும்.

சிலிண்டர் தீர்ந்து விட்டாலும் புது சிலிண்டர் அத்தனை சீக்கிரம் வந்து விடாது. எனவே எல்லோர் வீட்டிலும் மண்ணெண்ணெய் அடுப்பும், அதற்கு தேவையும் இருக்கும்.

மண்ணெண்ணெயை ட்ரம்மில் வாங்கி வைத்துக் கொள்வார்கள். அதிலிருந்து ஒரு பாட்டிலுக்கு இறைத்து வைத்துக் கொள்வார்கள். அப்படி இறைக்க ஒரு பம்பும் எல்லார் வீடுகளிலும் இருக்கும்.

1974-75 கால கட்டங்களில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இருந்தது. விற்பவர் ஒரு வீட்டுக்கு இரண்டு லிட்டருக்கு மேல் விற்க மாட்டார்.

எனவே மண்ணெண்ணைக்காக காத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு அந்த வண்டியின் மணி சத்தம் இன்பத் தேன் வந்து காதில் பாய்ந்தது போல இருக்கும்

இதைத் தவிர அந்தந்த ஸீசன்களுக்கு ஏற்றாற்போல கோல மாவு, வடு மாங்காய் எல்லாம் தெருவில் வரும்.

மல்லி, ஜாதி, கனகாம்பரம் போன்ற பூ விற்கும் பெண்கள், மாலையில்தான் வருவார்கள்.

மல்லிகைப் பூ சீசனில் மதியம் இரண்டு மணிக்கே உதிரிப் பூவை சைக்கிளில் விற்றுக் கொண்டு வருவார்கள்.

பால்காரர்கள் சைக்கிளில்தான் வருவார்கள்.

சைக்கிள் பாரில் சற்று பெரிய மணியை கட்டி வைத்து, அதை அசைத்துதான் ஒலி எழுப்புவார்கள்.

ஒவ்வொரு பால்காரரின் மணியும் வித்தியாசமாக ஒலிக்கும்.

காலை,மாலை என இரு வேளை மட்டுமே பால் கிடைக்கும். பாக்கெட் பாலும் கிடையாது, அதை வைத்துக் கொள்ள குளிர்சாதன பெட்டியும் கிடையாது.

நடுவில் யாராவது விருந்தாளிகள் வீட்டுக்கு வந்து விட்டால், அக்கம் பக்கத்தில் யார் வீட்டிலாவது பால் இருக்குமா என்று கேட்க வேண்டும்.

பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் கூட சிறிய மணியை ஒலி எழுப்பியபடிதான் வருவார்கள்.

இரவில் எட்டு மணிக்கு மேல் கடலை வருத்தபடி செல்லும் வண்டிக் காரர் அந்த இரும்பு சட்டியில் தட்டி ‘டங் டங்’ என்று ஒலி எழுப்புவார்.

பத்து பைசாவுக்கு ஒரு பொட்டலம் கடலையில் அடியில் ஒரு சிறு வெல்லத் துண்டும் போட்டு கொடுப்பார்.

தலை நரைத்து, வெள்ளை புடவை கட்டிக்கொண்டு வெண்ணை,நெய் கொண்டு வரும் கவுண்டர் பெண்மணியின் அருகில் சென்றாலே வெண்ணை வாசம் அடிக்கும்.

வெண்ணை அளந்து போட்ட பிறகு, கையை நீட்டினால் ஒரு உருண்டை வெண்ணை கையில் போடுவார்.

பெரும்பாலும் மதியத்தில்தான் “பழைய சேலைகளுக்கு பாத்திரம், பிளாஸ்டிக் பக்கெட்” என்று குரல் எழுப்பியபடி எவர்சிவர், அலுமினிய பாத்திர வியாபாரிகள் வருவார்கள்.

விடுமுறை நாட்களில் வண்டியில் ஐஸ் க்ரீம் விற்பவர்கள் மற்றும் பலூன்காரர்கள் சிறு குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் நகராமல் ‘பாம் பாம்’ என்று ஹாரன் ஒலி எழுப்புவார்கள்.

பாத்திரங்கள் துலக்க அரப்புத்தூள் கொண்டு வரும் பெண்மணி பசலைப் பொடி என்று பச்சை நிறத்தில் ஒரு பொடி கொண்டு வருவார், கொஞ்சம் கொழகொழப்பாக இருக்கும் அதை சிகைக்காயோடு சேர்த்து தலைக்கு தேய்த்துக் குளிப்போம்.

இதைத் தவிர காவடி போல நீண்ட கழியின் இரு புறங்களிலும் தொங்க விடப்பட்டிருக்கும் பானைகளை சுமந்தபடி ‘பதநி , பதநி’ என்று விற்றுக் கொண்டு செல்லும் பதநீர் வியாபாரிகள்.

காலை வேளைகளில் கீரை, காய் கறி இவைகளைக்கொண்டு வருபவர்களின் அழைப்பு.

ஒரு கைப்பிடி அரிசிக்கு ஒரு கட்டு கொத்தமல்லி தரும் பாட்டி. இதே ஒரு கைப்பிடி அரிசிக்கு இலந்தை பழம்,களாக்காய் எல்லாம் வாங்கி சாப்பிட்டிருக்கிறோம்.

இதில் விளக்குமாறு விற்பவர்களும், ஒட்டடை கம்பு விற்பவர்களும்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.

எல்லோரையும் போல அவர்களும் தங்கள் பொருளின் பெயரை குறிப்பிட்டுதான் கூவுவார்கள்.

நாமும் அவர்களை கவலையேப் படாமல் ஏ! விளக்குமாறு! ஏ! ஒட்டடை கம்பு! என்று அழைப்போம், கொஞ்சம் கூட பாதிப்படையாமல் அவர்கள் வருவார்கள்.

சாதாரணமாக யாரையாவது இப்படி அழைத்து விட முடியுமா?

எண்பதுகளின் இறுதியிலிருந்து நிலைமை மாற ஆரம்பித்தது.

மிக்ஸியும், கிரைண்டரும் ஆடம்பரம் என்பதிலிருந்து அத்தியாவசியம் என்னும் நிலைமைக்கு மாறத் துவங்கின.

தொன்னூறுகளின் இறுதியில் ஐ.டி. பூம் ஏற்பட்ட பிறகு, குளிர்சாதன
பெட்டியும், வாஷிங் மிஷினும் அத்தியாவசியமாகி விட்டன.

கடன் அட்டைகள் புழங்க ஆரம்பித்த பிறகு நாடார் கடைகளின் இடத்தை சூப்பர் மார்கெட்டுகள் பிடித்துக் கொண்டன.

தனி வீடுகள் குறைந்து கேட்டட் கம்யூனிட்டிகள் பெருகிய பிறகு வீதியில் சாமான்கள் விற்றுக் கொண்டு வருபவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் ஆன் லைனில் ஆர்டர் கொடுத்தால் சாமான்கள் அட்டை பெட்டியில் அழகாக வந்து விடுகின்றன.

மாறுதல்தானே வாழ்க்கை!

images (23)

வாசித்ததில் நேசித்தது

கணவனுக்கும் மனைவிக்கும் பயங்கர சண்டை.

அப்புறம் நாள் முழுக்க ரெண்டு பேரும் பேசவே இல்லை..

மனைவியால பொறுக்க முடியல..

கணவன் கிட்ட வந்தாங்க..

இப்படி பேசாம இருக்கிறது இனிமேலும் சரி இல்லை.

ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்து
ஆளுக்கொரு நல்ல காரியம் செஞ்சா
சமாதானமாப் போயிடலாம்னாங்க.

கணவன்: ரொம்ப நல்லது.
என்ன செய்யலாம் சொல்லு…?

மனைவி:
நீங்க பெரிய மனசு பண்ணி செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேளுங்க..,
நான் பெரிய மனசு பண்ணி உங்களை மன்னிச்சு விட்டுடறேன்..

My-India-My-Pride-India-Map-Wallpaper-Of-15-August-Indian-Independence-Day

சொர்க்கமே என்றாலும் அது நம் பாரததேசம் போலாகுமா?

சிங்கப்பூரை பார், அமெரிக்காவைப் பார், சீனாவைப் பார் என அதன் பாஸிடிவ் அம்சங்களை மட்டும் கூறுபவர்கள் அந்த நாடுகளின் கொடூரமான மறுபக்கத்தைப்
பற்றி சொல்ல மாட்டார்கள்.

சிங்கப்பூர் என்பது மேற்கத்திய நாடுகள் நடத்தும் நட்சத்திர விடுதி.

அப்படித்தான் அதனை சொல்லமுடியும்.

எதிர்கட்சி, போராட்டம், அரசை பற்றிய விமர்சனம் எல்லாம் அங்கு நினைத்துபார்க்க முடியாதவை

கிட்டதட்ட ஒரு கம்யூனிஸ்ட் நாட்டு பாணியில் அமைக்கபட்ட நாடு அது. ஒரு வார்த்தை இது உரிமை என பேசிவிட முடியாது.

சீனா கேட்கவே வேண்டாம், தேர்தல் வேண்டும் என்றதற்காக போராடிய லட்சகணக்கான மாணவர்களை தியான்மார் சதுக்கத்தில் ராணுவ டாங்கி கொண்டு நசுக்கி ரத்த பீடத்தில் தன் அதிகாரத்தை நிறுத்தியிருக்கும் நாடு.

அரசுக்கு எதிரான கருத்துக்கள் பேசினால் அவ்வளவுதான், மக்கள் உரிமை என்பதெல்லாம் அங்கு …. கு சமானம்

பத்திரிகை முதல் எல்லாம் அரசு கட்டுப்பாடு

அமெரிக்கா வில் வரி 30%, அது யாராயினும் கட்டித்தான் ஆகவேண்டும்,

மக்களை வேறுவகையான வாழ்க்கை முறையில் திருப்பிவிட்டு ஒரு மாதிரியான அரசியல் செய்யும் நாடு அது.

அம்மக்களின் மனநிலையே வேறு, இந்திய மனநிலைக்கும் அவர்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இந்திய அமெரிக்க ஒப்பீடு எல்லாம் அர்த்தம் இல்லாதது.

அவர்கள் சாதி,மதம், இனம், திரைப்படம் பார்த்தெல்லாம் வாக்களிப்பதில்லை. இங்கு அப்படி வாக்களித்துவிட்டு அமெரிக்காவினை பார் என சொல்ல தகுதியே இல்லை.

அரபுநாடுகள் கேட்கவே வேண்டாம் எல்லாம் மன்னர் ராஜ்ஜியம். எவனும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசிவிட முடியாது. தொலைத்துகட்டி விடுவார்கள்

ஆக உலகெல்லாம் வளமாக இருப்பது போலவும், இந்தியா மட்டும் கட்டுபாடும் வாழ சிரமமும் உள்ள நாடாக சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

உண்மையில் உலகில் மிக சுதந்திரமான நாடு ஒன்று உண்டென்றால் அது இந்தியா மட்டுமே.

இங்கு அரசு முதல் ஆண்டி வரை நம்மால் கிழிக்க முடிகின்றது, எந்த பிரச்சினையானாலும் யாரும் கருத்து சொல்ல முடிகின்றது, போர்கொடி தூக்க முடிகின்றது

ஜிஎஸ்டிக்கு ஸ்பெல்லிங் தெரியாதவனெல்லாம் டிவியில் அதுபற்றி பேசமுடிகின்றது.

இன்னும் என்னென்ன அழிச்சாட்டியம் எல்லாம் செய்ய முடிகின்றது

இதில் இடஒதுக்கீடு வேறு.

சிங்கப்பூர், சீனா, ஜப்பான், அமெரிக்கா எங்காவது இட ஒதுக்கீடு கேள்விபட்டிருக்கின்றோமா? இல்லை

மாறாக உலகெல்லாம் இருந்து அறிவு ஜீவிகளை வாங்கி படிக்க வைத்து வேலை கொடுக்கின்றார்கள்.

சிங்கப்பூர் அரசை முகநூலில் விமர்சித்தவன் கணக்கை முடக்கி அவனையே முடக்க ஒருமுறை தீவிரமாய் அலைந்தது சிங்கப்பூர்

இந்தியாவின் முகநூலும் டிவிட்டரும் எப்படியெல்லாம் அரசை கிழிக்கின்றன என்பது சொல்லியா தெரியவேண்டும்? அவ்வளவு #சுதந்திரம் நமக்கு இருக்கின்றது.

ஒன்று இந்த சுதந்திரத்தினை அனுபவியுங்கள்

அல்லது சிங்கப்பூர் போல, சீனா போல கட்டுபாட்டுக்குள் அடிமைபட்டு வாழ வாருங்கள். அப்பொழுது வசதிகள் பெருகலாம் ஆனால் பேச முடியாது

இரண்டும் பெறுவது என்பது சாத்தியமே இல்லை. அதுவும் இந்தியாவில் அறவே இல்லை..

வாக்களிப்பது இந்திய பாணியில் ஆனால் ஆட்சியினை எதிர்பார்ப்பது அமெரிக்க பாணியில் என்றால் அதன் பெயர் கனவு, பகல் கனவு.

தேர்தலே வேண்டாம் சீனா போல வாழ தயார் என சொல்ல எவனுக்கு இந்நாட்டில் தைரியம் இருக்கின்றது, ஆனால் சீனாவின் வளர்ச்சியினை பார் என்றுமட்டும் வெட்கமே இல்லாமல் சொல்வார்கள்

ஒவ்வொரு நாடும் அதன் மக்களை எப்படி எல்லாம் கண்காணித்து அடக்கி ஒடுக்கி மூச்சுவிட மட்டும் அனுமதிக்கின்றன என பாருங்கள், அப்பொழுது இந்நாட்டின் அருமை தெரியும்.

images (15)

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை என்று வாழ்வோம்

திராட்சை பழம் கிலோ எவ்வளவு என்றேன்
60 ரூ. என்றார்

அதே கூடையில் உதிர்ந்த திராட்சை ரூ.30.என்றார்

அதற்கும் , இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன்

இரண்டும் ஒரே ரகம்தான் , இது உதிர்ந்தது – அது கொத்தாக இருக்கிறது

இரண்டும் ஒரே ருசிதான் என்றார்

யோசித்தேன்
சேர்ந்து இருப்பதால் தரமும் , விலை உயர்வாகவும்
இருக்கிறது

பிரிந்து
விட்டால் ………

இது போலத் தானே நட்பும் , உறவும் என்று மனதில் நினைத்தேன்

images (58)

மரணம் ஏன் வருகிறது?

ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.
அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.
அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.
.
இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!
.
இறந்தவரின் மனைவி சொன்னாள்..
”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..?
நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..!
.
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை…
.
கடைசியில் அவர் கேட்டார்
”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.
பின் சொன்னார்..
”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம்.
இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..!
.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை.
அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்”
ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?”
.
தந்தை சொன்னார்
”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்”
.
தாயைக் கேட்க அவள் சொன்னாள்
”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?”
.
மனைவி சொன்னாள்
”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்”
.
குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்
”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?”
.
அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்
”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?”
.
குருஜி சொன்னார்
”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..!
”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்”
“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”.
எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்……