Category Archives: அரிய அபூர்வ தகவல்கள்

images (56)

ஏன் கங்கா ஸ்நானம் – மஹாபெரியவா

இப்படியாக தீபாவளியை நினைத்துக் கொண்டே பகவத்பாதாள் இந்த ச்லோகத்தைப் பண்ணின மாதிரி இருக்கிறது. அது இருக்கட்டும். ‘கங்கா ஸ்நானம்’ என்று ஏன் தீபாவளியன்று வைத்திருக்கிறது என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வந்தேன்.

’பிள்ளை போன நாளைப் பண்டிகையாக எல்லோரும் எந்தக் காலத்திலும் நின்று போகாமல் செய்து வரவேண்டும்’ என்று பூமாதேவி ஆசைப்பட்டாள். பண்டிகை என்பதால் மங்கள ஸ்நானம், புது வஸ்திர தாரணம், பக்ஷண போஜனம் எல்லாவற்றையும் ஏற்படுத்திக் கொடுத்தாள். இதிலே பிள்ளை நினைவு வரும்படி புதிசாக, நூதனமாக ஏதாவது இருக்க வேண்டுமென்று உதயத்துக்கு முந்தியே தைல ஸ்நானம் செய்ய வேண்டும் என்று வரம் வாங்கினாள்.

பகவானே இதற்கு ஒப்புக் கொண்டும் கூட, இப்படி சாஸ்திர விரோதமாக அப்யங்கனம் பண்ண யாராவது பயப்படப் போகிறார்களே என்று நினைத்து, பயம் போகும்படியாக என்ன செய்யலாம் என்று பார்த்தாள். ‘அன்றைக்கு அந்த வேளையில் தேய்த்துக் கொள்கிற எண்ணையில் லக்ஷ்மியும், குளிக்கிற வெந்நீரில் கங்கையும் வஸிக்கும்படி செய்துவிட்டால் யாரும் பயப்பட மாட்டார்கள்; லக்ஷ்மியும் கங்கையும் வேண்டாம் என்று எவருமே நினைக்க மாட்டார்கள். இதனால் ஸகல ஜனங்களுக்கும், பண்டிகை என்ற ஸந்தோஷத்துடன் புண்ணியம் என்பதும் கிடைக்கும்’ என்று நினைத்தாள். இதனால்தான் அந்த ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நானம் என்றே பேர் ஏற்பட்டது.

இப்படி கங்கா ஸ்நானம் பண்ணியவர்களுக்கு நரக பயமும், அபமிருத்யுவும் (அகால மரணம், கோர மரணம்) ரோகங்களும் ஏற்படாமலிருக்க வேண்டும் என்று கூடுதலாக நம்மெல்லோருக்காகவும் வரம் வாங்கித் தந்தாள். அவள் நரகனுக்கு மட்டுமில்லை, நம் எல்லோருக்குமே தாய் அல்லவா? Mother earth என்றே இங்கிலீஷில்கூடச் சொல்கிறார்களே! பசு, பூமி, வேதம் மூன்றையும் ஸகலருக்கும் தாயாராகவே சொல்லியிருக்கிறது.

இருந்தாலும் நரகனை நேரே தான் பெற்றதால் அவனிடம் அதிகப் பிரியம் வைத்து இந்த நாளுக்கு ‘நரக சதுர்த்தசி’ என்றே பேர் ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கிக் கொண்டாள். ஆனாலும் இப்போது பஞ்சாங்கத்தில்தான் அந்தப் பேர் போட்டிருக்கிறதே தவிர, நாம் தீபாவளி என்றே சொல்கிறோம். ‘தீபாவளி’ என்றால் தீப வரிசை. வடக்கேதான் இப்படி விளக்கேற்றி வைத்து நிஜ தீபாவளியாக்க் கொண்டாடுகிறார்கள். நாம் கார்த்திகை தீபோத்ஸவம் என்று வைத்துக் கொண்டு விட்டோம்

My-India-My-Pride-India-Map-Wallpaper-Of-15-August-Indian-Independence-Day

நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம்

இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன் நாங்களும் மாறினோம் இன்று அதையே barbecue என்று kfc , Macdonald இல் விக்கிறான்.
உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப் படுத்தினான் இப்போது உங்கள் toothpaste இல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான்.

மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் star hotel களில் விக்கிறான் .

நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான்.

இளநீர் , பதனீரைப் பருகினோம் coke pepsi ஐ கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.

Corporate company களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம்.

நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செய்கிறேன் என்பது தான் கசப்பான உண்மை.

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,
ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,
காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியைவிட்டோம்,
வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம், நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,
திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம், உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.
பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.
இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிது.

images (21)

உலகில் மிகச்சிறந்த மருந்துவர் – உங்கள் உடல். உலகில் மிகச்சிறந்த மருத்துவம் – உண்னாநோன்பு.

வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.

நமது உடலை இயக்கும் ‘உயிர்சக்தி’ மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும்.

இது தான் அந்த மூன்று சக்தி

1 – செரிமான சக்தி
2 – இயக்க சக்தி
3 – நோய் எதிர்ப்பு சக்தி

இதில் ஒவ்வொன்றாக எப்படி வேலை செய்கிறது என்று சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.

காய்ச்சலின் போது உங்களுக்கு பசிக்குமா ? பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது. காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா ? முடியாது, உடல் இயக்க சக்தியை குறைத்துக்கொள்ளும். எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.

மதியம் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியுமா ? முடியாதல்லவா, உடல் இயக்கம் சக்தியை குறைத்துக்கொள்ளும், நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.

உண்ணா நோன்பு இருக்கிறீர்கள். செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா ? இல்லை. இயக்க சக்தியையும் குறைத்துக்கொள்வோம். இப்பொழுது செரிமானம் மற்றும் இயக்க சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு ? என்ன ? பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்திவிடும்.

இப்படி மூன்று சக்திகளும் அந்தந்த நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடம் இருந்து சக்தி பெற்று, மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும்.

உடல் முதல் முக்கியத்துவம் செரிமானத்திற்கு கொடுப்பதால் ஒவ்வொறு முறை நாம் உணவு எடுக்கும் போது, உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்துவிடும். ஏனென்றால் வெளியில் இருந்து ஒரு பொருள் வருகிறது, அது என்ன ஏது என உடல் பார்த்து சீரமைக்க வேண்டும்.

உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.

உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.

இதற்காக நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாள் தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அந்த ஆறு நாளும் ஆறுமுகனை மையப்படுத்தி அழகான ஒரு திருவிழாவாக வடிவமைத்து உள்ளார்கள்.

ஆம், அது தான் தீபாவளி முடிந்து வரும் மறைமதியை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படும் ‘கந்த சஷ்டி விழா’. கந்த சஷ்டி விழா என்றாலே நமது நினைவிற்கு வருவது ‘சஷ்டி விரதம்’ தான்.

ஐப்பசி 3 ஆம் தேதி (Oct -20) துவங்கி, ஐப்பசி 8 ஆம் நாள் (Oct 25) நிறைவு பெறுகிறது

உண்ணா நோன்பு மற்றும் கந்தர் விழாவின் ஆறுநாள்.

‘செரிமான சக்தி’ தான் ‘முருகனின் தாய்’. ‘நோய் எதிர்ப்பு சக்தி’ தான் ‘முருகன்’. ‘நோய்’ தான் ‘அரக்கன்’. வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது.

இந்த விழாவில் எப்படி ‘முருகப்பெருமான்’ தனது தாயிடம் இருக்கு சக்தி பெற்று அசூரனை வதம் செய்கிறாறோ, அதேப்போல் நமது உடலில் உள்ள ‘நோய் எதிர்ப்பு சக்தி’ தனது தாயான செரிமான சக்தியிடம் இருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது.

வெளியில் முருகனுக்கும்,அரக்கனுக்கும் நடக்கும் அதே போர் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்று உலகிற்கே தெரியும்.

எப்படி ஒவ்வொரு நாளும் ‘முருகன்’ சக்தி பெற்று ஆறாவது நாள் அசூரனை வதம் செய்கிராறோ, அதேப்போல் தான் ஒவ்வொரு நாளும் நமது ‘நோய் எதிர்ப்பு சக்தி’ வலிமையடைந்து ‘டெங்கு போன்ற எந்த வைரஸ் கிருமிகள், நோய்கள்’ இருந்தாலும் வதம் செய்துவிடும்.

உடலில் நடக்கும் இந்த அறிவியல் உண்மையை நமக்கு சூட்சமமாக சொல்லவோ என்னவோ, ஆறு நாட்களையும் ‘உண்ணா நோன்புடன்’ அழகான விழாவாக வடிவமைத்துள்ளார்கள்.

சரி, எப்படி உண்ணா நோன்பு இருப்பது ?
——————————————————-

1 – உங்கள் ஊர் வழக்கப்படி இருக்கலாம்.
2 – சமய முறைப்படி இருக்கலாம்.
3 – ஆறு நாளும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம்.
4 – ஆறு நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம்.
5 – ஆறு நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம்.

இதில் உங்களுக்கு பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் எளிய முறை என்னவென்றால்.

பசித்தால் தண்ணீர் மட்டும் குடித்து வாருங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திரும்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திருப்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும்.

இது தொடரட்டும் ஒரு கட்டத்தில் பசிக்கும் போது தண்ணீரை கண்டாலே உங்களுக்கு பிடிக்காது, குடிக்கவும் முடியாது, எதாவது சாப்பிட தோன்றும் அப்பொழுது உங்களுக்கு பிடித்த பழங்களை ரசித்து ருசித்து உமிழ்நீர் கலந்து சாப்பிடுங்கள்.

திரும்ப பசிக்கும் போது பழங்களை அதேப்போல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். வேளை கணக்கு எல்லாம் கிடையாது. பசிக்கும் போது சாப்பிடலாம். இதேப்போல் ஆறு நாட்களும் இறைவன் சமைத்த உணவை மட்டும் சாப்பிட்டு வரலாம்.

இறைவன் சூரிய அடுப்பை கொண்டு சமைத்த உணவான பழங்களை நாம் அதிகம் சாப்பிட இந்த ஆறு நாள் நமக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது.

வேலைக்கு செல்வோருக்கு, வேறு உணவு தேவைப்பட்டால், தேங்காய், வேர்கடலை சாப்பிடலாம், இதனால் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.

எதையெல்லாம் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியுமோ அதை எல்லாம் சாப்பிடலாம். பழங்கள், இளநீர், நாட்டு காய்கனிகள், தேங்காய், வேர்கடலை என பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்கள் எடுக்கலாம்.

உடலில் பல்வேறு பிரச்சனை உள்ளவர்கள், ஆங்கில மருந்து எடுப்பவர்கள், நோயாளிகள், ஆறு நாள் பழங்களை மட்டும் எடுக்க முடியாதவர்கள் எல்லாம் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

நோன்பின் போது என்ன நடக்கலாம் ?
———————————————-

ஆண்டுக்கணக்கில் தேங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம்.

1 – சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம்.
2 – மலம் கருப்பாக வெளியேறலாம்.
3 – சளி வெளியேறலாம்.
4 – உடல் ஓய்வு கேட்கலாம்.
5 – காய்ச்சல் வரலாம் (காய்ச்சல் ஒரு கொடை)
6 – வலிகளை உணரலாம்.

என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ?
——————————————

1 – அதிக உடல் எடை சீராகும்
2 – முகம் பொழிவு பெறும்
3 – கண்ணில் ஒளி வீசும்
4 – சுறுசுறுப்பு அதிகரிக்கும்
5 – இரத்தம் தூய்மை பெறும்
6 – தோலின் நிறம் சீராகும்
7 – மன உளைச்சல் குறையும்
8 – கவலை, பயம், கோபம் குறையும்
9 – புத்துணர்வு கிடைக்கும்
10 – உடல் பலம் பெறும்
11 – மன அமைதி பெறும்
12 – ஆழ்ந்த தூக்கம் வரும்

ஆக மொத்தத்தில்

உடலில் ஆரோக்கியமும் !
எண்ணத்தில் அழகும் !
மனதில் நிம்மதியும் !

கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இன்னும் பல எண்ணிலடங்கா அதிசயங்கள் நிகழலாம்.

கந்தன், அரக்கனை அழிப்பது போல்
உடல், உங்கள் அனைத்து பிரச்சனைகளை அழித்துவிடும்.

நமது பண்பாட்டையும், உடல், மன ஆரோக்கியத்தையும் பிரித்தே பார்க்க முடியாது. இவை இரண்டும் ஒன்றிற்கொண்டு பின்னிபினைந்தவை. பினைக்கப்பட்டவை.

உடலின் பேராற்றலை புரிந்து, அதன் அற்புத புதையல் கொண்ட அறிவியல் உண்மைகளை, அழகான திருவிழாவாக நமக்கு வடிவமைத்து தந்த நமது முன்னோர்களுக்கு கோடி நன்றிகளை சொல்ல நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

p1

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்

அவசியம் அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.
=======================
1. சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும்.

2. சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.

3. சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.

4. குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.

5. சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.

6. சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.
பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.
இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.

7. சாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.

8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.

9. சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.

download (13)

Guided Life

These are the things that are vital to life: how can I run my life when I can still utilize my powers of thought and of action wisely to run my future for me? How can I use the wisdom of older people to my advantage? How can I use authority to restrict my life and guide it? This is called guided wisdom, guided vision, guided enterprise, a guided life.

maa-durga-wallpapers

ஸ்ரீ துர்கா சப்த ச்லோகீ

கலியுகத்தில் சண்டி தேவியும் கணேச பெருமானும் விரைவில் நன்மையை தருவார்கள் என்பது பழமொழி. துர்க்கா தேவி தான் சண்டி என்றும் சண்டிகா என்றும் அழைக்கப்படுகிறாள். துர்க்கா தேவியின் பெருமையை கூறும் நூல்களுள் தேவி மஹாத்மியம் மிக சிறந்தது. இது மார்க்கண்டேய புராணத்தில் அடங்கியது. எழுநூறு மந்திரங்கள் கொண்டது. ஆகவே இந்த நூலை சப்த சதி என்றும் கூறுவர். இந்த மந்திரங்களால் தான் சண்டி ஹோமம் செய்ய படுகிறது. தினசரி அல்லது நவராத்ரி நாட்களில் இதை பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும் உண்டாகும். குறிப்பாக துர்க்கா சப்த ஸ்லோகி சப்த சதியின் சக்திமிக்க மந்திரங்கள் ஆகும்.

சைய்த்ர வம்சத்தில் தோன்றிய சுரதன் எனும் அரசன் வினை வசத்தால் நாடிழந்து கொலாவித்வம்சி எனும் பகைவரால் துரத்தப்பட்டு காட்டை அடைந்தான். அங்கும் தன் நாடு, மனைவி, மக்கள் இவற்றை நினைத்து வருந்தினான். அங்கே வாடிய முகத்தோடு ஒரு வைசியனை கண்டு விசாரித்ததில் அவனும் தன்னை போலவே இருப்பதை உணர்ந்து இருவரும் ஒரு முனிவரை அணுகி அறிவுள்ளவராக இருப்பினும் எங்களுக்கு நாடு, மனைவி, மக்களிடம் அன்பு உண்டாக காரணம் யாது என்று கேட்டனர். அம்முனிவர் மஹா மாயையினால் நீங்கள் மயங்கிநீர்கள், அந்த மாயை தான் பந்த மோட்சத்திற்கு காரணம். மாயை ஞானிகளின் மனதையும் மயக்கும் திறமையுடையது என்றார். அரசன் மாயை பற்றி வினவினான். மாயை நித்யயானாலும் தேவர்களின் காரியத்திற்காக தோன்றும், அப்போது உற்பதியனதாக சொல்வர்.

முன்னொருகாலத்தில் விஷ்ணு யோகநித்திரையில் ஆழ்ந்திருந்த பொழுது அவருடய காது மலத்திலிருந்து மது கைடபன் என்று இரு அசுரர் தோன்றி திருமாலின் நாபிகமலத்திலுள்ள பிரம்ம தேவனை கொல்ல முற்பட்டனர். பயந்த பிரம்மன் விஷ்ணுவின் யோகமாயை ராத்ரி ஸுக்தம் என்ற ஸ்துதியால் துதித்தார். யோகமாயை விலகி விஷ்ணு சக்தி பெற்று அவ்வசுரர்களுடன் போரிட்டார். மயங்கிய அசுரர் வரம் அளிக்கிறோம் பெற்று கொள் என்றனர். “நீங்கள் என்னால் கொல்ல படவேண்டும் இதுவே என் வரம்” என்று விஷ்ணு கூற, வஞ்சிக்க பட்ட மது கைடபர்கள் எங்கும் ஜலமயமாக இருப்பதை கண்டு, “ஜலத்தால் நனையாத இடத்தில எங்களை கொள் என்றனர். விஷ்ணுவும் தனது மடியில் வைத்து அவர்களை கொன்று மதுசூதனன் என பெயர் பெற்றார். கைடபஜித் என்ற பெயர் மாலுக்கும், யோகமாயை விலக்கி அவருக்கு சக்தி உண்டாக்கினமையால் சக்திக்கு மதுகைடபஹந்த்ரி என்றும் பெயர் விளங்குகிறது.

மகிஷாசுரனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் பிரம்மனின் தலைமையில் மாலிடமும், சிவனிடமும் முறையிட அப்போது சகல தேவர்களின் சரீரங்களில் உள்ள சக்திகள் யாவும் வெளிப்பட்டு ஒன்று சேர்ந்த ஒரு தேவியின் உருவம் பெற்றது. தேவர்கள் யாவரும் தங்களது அனைத்து ஆயுதங்களையும், படைகளையும் தேவிக்கு தந்தனர். அன்னை போருக்கு ஆயத்தமானாள். மகிஷாசுரன் போர் தொடுத்தான். கோடிகணக்கான யானை, தேரில் குதிரை, காலாட்படைகளுடன் வந்து சிக்ஷுரன், சாமரன், உதக்ரன், மஹாஹநு, அசிலோமன், பாஷ்கலன், பிண்டாலன் முதலிய அசுர சேனாதிபதிகள் கத்தி, தோமரம், பிண்டிபாலம், வில், வேல் சூலம் முதலிய பல ஆயுதங்கள் கொண்டு தேவியுடன் போரிட்டு தோற்றனர். வகானமாகிய சிங்கம் கோடனுக்கோடி பேரை கொன்றது. அசுரர்கள் உடலின் உறுப்புக்களை இழந்து பல திக்குக்களில் ஒட்டமெடுத்தனர். போர்களத்தில் குருதி வெள்ளம் நிரம்பி செல்ல முடியாமல் கடல் போல் சூழ்ந்தது.

சேனைகள் நாசமடைந்தது கண்ட சிக்ஷுரன், சிங்கத்தை அடித்து அம்பிகையை வாளால் வெட்டினான். ஆனால், கத்தி தூள்த்தூள் ஆனது. யானை மீது வந்த அசுரனை பூமியில் தள்ளி சிங்கமே அவனை கொன்றது. முற்கூறிய அத்தனை சேனை தலைவர்களும் மாண்டனர். சைதன்யம் அழியவே அசுர அரசன் எருமை மாட்டின் உருவம் கொண்டு கொம்பாலும், வாலாலும், முகத்தின் அசைவிநாலும், குளம்பினாலும் தேவியின் பல கணங்களை போரிட்டு வீழ்த்தினான். தேவி பாசத்தால் அவனை கட்டிய போது சிங்க ரூபமாக, யானை ரூபமாக, மனித ரூபமாக எல்லா ரூபங்களிலும் போரிட்டு முடிவில் எருமை ரூபத்தோடு போரிட்டான். தேவி வீரபானம் அருந்தி அவன் கழுத்தில் காலை ஊன்றி, சூலத்தால் அடித்து, வாளால் வெட்டி வீழ்த்தினாள்.

தேவர்கள் தேவியை துதித்து சூலேனயாகி என்று தொடங்கிய நான்கு ஸ்லோகங்களும் கவசமும் நீயே. உலகின் படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளுக்குக் காரணமும் நீயே, உன்னை சேவிப்போருக்கு வறுமை, பிணி, துக்கம் உண்டாகாது. பக்தரிடம் தயையும், பகைவரிடம் உன் வீரமும் ஒப்ப்றன. நீயே லக்ஷ்மி, நீயே கௌரி, நீயே துர்க்கை, எங்களை எவ்வகையிலேனும் எங்கள் உடலின் எல்லா இடங்களிலும் துன்பமின்றி காக்க வேண்டும் என்று மலர்களால் அர்ச்சித்தனர். மகிழ்ந்து பிரசன்னமான தேவியிடம் எங்களுக்கு எந்த குறையும் இல்லை, ஆனாலும் உன்னை நினைத்தபோதெல்லாம் எங்களை காப்பாயாக. மேலும், இந்த ஸ்தோத்திரம் துதிப்போருக்கெல்லாம் சகல வித நன்மையும் அருள வேண்டும் என்று துதித்தனர். அவ்விதமே அருள் செய்து அந்த மகிஷாசுரமர்த்தினி மறைந்தாள்.

இது முதல் கடைசி வரை உத்தம சரிதம் எனப்படும். பின்னொருக்காலத்தில் சும்பநிசும்பர்களால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் இமயம் சென்று முன்பு தேவி வரம் கொடுத்ததை நினைத்து துதித்தனர். இந்த ஸ்துதி தேவி ஸ்துதி எனப்படும். கங்கையில் நீராட வந்த பார்வதியின் சரீரத்திலிருந்து ஒரு தேவி தோன்றினாள். கொசத்திலிருந்து தோன்ரினமையால் கௌசீகி என பெயர் பெற்றால்.கௌசீகி தோன்றிய பிறகு பார்வதி கருப்பாக ஆகி காளிகா என பெயர் பெற்றால். கௌசீகியின் அழகு ரூபத்தை கண்ட ஒற்றர் இருவர், சும்ப நிசும்பர்களிடம் சென்று அவள் அழகை வர்ணித்து சிறந்த பொருட்க்களுக்கு இடமாக இருக்கும் அரசரிடத்தில் சிறந்த பெண்மணியும் இருக்க வேண்டும் என்றனர். சபலமடைந்த அரசன் சுக்ரீவன் என்ற தூதனை தேவியிடம் அனுப்பினான். அவன் அசுர அரசனின் பெருமைகளை கூறி தேவியை வரும்படி அழைக்கிறான். அதற்க்கு தேவி ” என்னை போரில் வேல்பவனையே நான் மணப்பதாக முன்பே உறுதி கொண்டேன், ஆதலில் அசுரர் என்னை போரில் வென்று கைபற்றட்டும்” என்றாள். “தேவி கர்வம் கொள்ளாதே, அசுரர் பலசாலிகள் பிறகு அவமானம் அடைவாய்” என்று தூதன் மறுமுறை கூறினான். “அறிந்தோ, அறியாமலோ நான் சபதம் பூண்டுவிட்டேன், என் உறுதி மாற்ற முடியாதது, அவர்களை சீக்கிரம் வரச்சொல்” என்றால் தேவி.

சும்பாசுரனால் ஏவப்பட்ட தூம்ரலோசனன் தேவியை வரும்படி அழைக்கிறான். ” நீ பலவான் பலவானால் அனுப்பப்பட்டவன், சேனையுடன் வந்துள்ளாய், பலாத்காரமாய் என்னை இழுத்து செல்லலாம் ” என்றாள். அசுரன் ஆவேசத்துடன் ஓடி வரும் பொழுது ஹூங்காரத்தால் அவனை மடிய செய்தாள். சேனை யாவும் வாகனமாகிய சிங்கத்தால் அழிந்தது. அசுர மன்னன் சண்டன் முண்டன் என்ற இரு அசுரர்களை மறுபடியும் தேவியிடம் அனுப்பினான்.

வந்த சண்ட முண்டர்களை கண்டு கோபித்த கௌசீகியின் நெற்றியிலிருந்து காளி தோன்றினாள். கையில் கத்தி குழிந்த கண்கள் புலித்தோல் ஆடை அகன்ற வாய் நாக்கை நீட்டி அடிக்கடி தொங்கவிடுகிறாள், பயங்கரமான சப்தம், இப்படிய தோற்றத்துடன் காளி பல ஆயுதங்கள் கொண்டு அசுர படையெல்லாம் அழித்து சண்ட முண்டர்களையும் கொன்று, சண்டனுடைய தலையையும், முண்டனுடைய முண்டத்தையும் அம்பிகை முன் காணிக்கையாக்கி வணங்கினால், “கௌசீகி சண்ட முண்டர்களை கொன்றமையால் நீ சாமுண்டா என்ற பெயருடன் விளங்குவாயாக” என்று அருளினாள்

பின் கூட்டமாக சகல அசுர அரசர்களும் ரக்தபீஜன் என்ற அசுரனை துணையாக கொண்டு வருகின்றனர். ரக்தபீஜன் உடலிலிருந்து ரத்தம் பூமியில் விழுமாயின் அவனை ஒத்த பலமுடைய அசுரர்கள் ஒரு சொட்டிற்கு ஒருவர் வீதம் உண்டாவர் என்பது அவன் பெற்ற வரம். தேவி சிவனை அசுரரிடம் தூது அனுப்பினால். “அசுரர் பாதாளம் செல்லட்டும், இந்திரன் த்ரிலோகத்தை ஆளட்டும், இல்லாவிட்டால் போரில் என்னை சூழ்ந்துள்ள நரிகள் உங்களை தின்று திருப்தி அடையும்” என்ற தேவியின் வாக்கை கேட்ட பிறகும் அசுரர் போரிட்டனர். சக்திகளால் அடிபட்ட அசுரனின் ரத்தத்திலிருந்து பல அசுரர் தோன்ற உலகம் நிறைந்து விட்டது. தேவர் பயந்தனர். அம்பிகை சாமுண்டா தேவியை அழைத்து, “நான் அவனை அடிக்கிறேன், பெருகுகின்ர ரத்தத்தை நீ கீழே விழாதபடி பருகு, அதனால் அவன் ரத்தமின்றி இறப்பான்” என்றாள். சாமுண்டா தேவி அப்படியே செய்யவும் அவன் இறந்தான். தேவர் மகிழ்ந்தனர். சிவனை தூதாக அனுப்பிய அம்பிகைக்கு சிவா தூதி என பெயர் உண்டாயிற்று.

தேவிக்கும் சும்ப நிசும்பர்களுக்கும் கடும் போர் நடந்தது. தேவி நிசும்பனுடைய ஹ்ருதயத்தில் குத்தின பொழுது அங்கிருந்து அசுரன் ஒருவன் தோன்றினான். அவன் தோன்றும் போதே தேவியின் கத்திக்கு இறயனான். மகேஸ்வரி, வாராகி முதலிய சக்திகளும் பல அசுரர்களை வீழ்த்தினர்.

தம்பி இறந்தது கண்ட சும்பன் பிறருடைய பலம் கொண்டு சண்டை இட்டு வீண் கர்வம் கொள்ளாதே என்று கூறினான். அதற்க்கு தேவி பதில் சொன்னாள் “உலகில் நான் ஒருவளே இவர்கள்லெல்லாம். என் விபூதியே என்னுள் இவர்களை அடக்கிகொள்கிறேன்” என்று கூறி தன்னுடலுள் யாவரையும் அடக்கி கொண்டாள். சும்பனும் தேவியும் பூமியிலும் வானத்திலும் மாறி மாறி சண்டை இட்டனர். இறுதியில் தேவி சூலத்தால் குத்தி வீழ்த்தினாள். இதுவரை இருந்த பல அபசகுனங்கள் விலகின. காற்று இனிமையாக வீசியது, கதிரவன் ஒளிவிட்டான்.

இவ்வத்தியாயம் நாராயணி ஸ்துதி எனப்படும். சரணடைந்தவர்களை காப்பவள் நீயே, உலகிற்கு ஆதாரமாய் இருப்பவளே, சுவர்க்க மோட்சங்களையும் அளிப்பவளே, பஞ்சக்ருதியும் புரிபவளே. மகேஸ்வரி, வைஷ்ணவி, வாரகி, நாரஸிம்ஹி, ஐந்த்ரி, சிவதூதி, கௌமாரி, சாமுண்டா, பிராம்மணி முதலிய ரூபங்களுடன் அசுரரிடம் போரிட்டு உலகை காத்தவளே திருடன் முதலியவர்களிடம் இருந்தும் எங்களை காப்பவளே, உனக்கு வணக்கம் என்று துதித்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கு இறங்கி மூவுலகிற்கும் சகல வித நன்மையும் அளிப்பதாக தேவியே கூறினாள். நந்தா விந்த்யசலவாசிணி, பீமா பிரைமரி துர்கா, ரக்ததந்திகா சதாக்ஷி முதலிய பல அவதாரங்கள் எடுத்து தேவ சத்ருக்களை அழிப்பேன், அனைத்துயிரையும் காப்பேன் என்கிறாள்.

தேவி மகாத்மியமாகிய இந்த என் சரிதத்தை படிப்போருக்கு எல்லா வித துன்பங்களையும் பேக்குவேன், பரம புருஷார்த்தங்களையும் அளிப்பேன். அறிந்தோ அறியாமலோ செய்யப்படும் பூஜை, ஹோமம், ஜபம், பாரணங்களால் மிகவும் மகிழ்வேன். தேவி மஹாத்மியம் படிக்குமிடத்தில் நான் எப்போதும் நடமாடுவேன். வம்சம் அபிவ்ருத்தி அடையும். என்னை நோக்கி எனக்காக தூப தீபமிட்டு நைவேத்யம், அபிஷேகம் பல வித தானங்கள் எல்லாம் செய்து வருட கணக்காக செய்கின்று பூஜையினால் எனக்குஏற்படும் மகிழ்ச்சியை, ப்ரீத்தியை தேவி மகாத்மியத்தை ஒரு தரம் மிகுந்த பக்தியுடன் படித்தால் அல்லது படிக்க கேட்டாலே யான் அதைவிட சந்தோஷித்து மகிழ்வேன். தேவி ஸ்துதி, பிரம ஸ்துதி, பிர்மரிஷி ஸ்துதி இவைகளை ஜபிபதால் நல்ல புத்தி உண்டாகும். என்னை நினைத்தமாத்திரத்தில் எல்லா விதத்திலும் எல்லா வித ஆபத்திலிருந்தும் காப்பேன் என கூறி மறைந்தாள். தேவர்கள் சுவர்க்க லோகம் சென்றனர். இந்த தேவி தான் உங்களுக்கு மயக்கத்தை உண்டாக்கி நாடு, மனைவி, மக்களிடம் அன்பு கொள்ள செய்தவள். அவளை வணங்கி பூஜித்து நற்கதியை அடையுங்கள் என்று முனிவர் கூறி முடித்தார்

தேவி மஹாத்மியம் கேட்ட சுரதன் என்ற வேந்தனும், சமாதி என்ற வைசியனும் நதியின் திட்டில் மூன்ராண்டுகாலம் நியமத்துடன் மண்ணால் உருவம் செய்து வைத்து தேவியை பூஜித்து வந்தனர். அம்பிகை தோன்றினாள், என்ன வரம் வேண்டும் என கேட்டாள். வைசியன் வைராக்யம் மேலிட்ட ஞானத்தை வேண்டினான், அரசனோ மறுபிறவியிலும் பக்தி நீங்காமலிருக்கும்படி இழந்த அரசை வேண்டினான். அம்பிகை அவ்விதமே அருளினாள். அவ்வரசனே மறுப்பிறப்பில் சூரியனுக்கு பிறந்த சாவர்ணி என்ற மனுவாக ஆனான். எழுபத்தி ஒரு தேவயுகம் கொண்டது ஒரு மனுவின் காலம். இதையே மன்வந்திரம் என்று கூறுவது வழக்கம். காமதேனுவை போன்ற எல்லாவற்றையும் சளைக்காமல் கொடுக்கவல்ல தேவியை வழிபட்டு அவள் அருளுக்கு பாத்திரராகுதல் மனித பிறவி எடுத்ததன் பயன். ஆதலில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த தேவி மஹாத்மியத்தை படியுங்கள், அத்தோடு இயன்றவரை துர்க்கா சப்தச்லோகியையும் பாராயணம் செய்து வந்தால் மகாசக்தியின் பேரருளால் அணைத்து நலன்களும் அசுரவேகத்தில் சித்திக்கும்.

1

லலிதா சகஸ்ரநாமம்

லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.

துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே” என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.

லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர்

அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின்
பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.

தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன்.

இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும்.

செல்வத்தை அளிக்கும்.

அபமிருத்யுவை போக்கும். (அப மிருத்யு என்றால்
அகால மரணம்) நீண்ட ஆயுள் தரும்.

பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.

கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி
பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டைk செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.

இது பாவத்தை நீக்கும்.
பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன் .

பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும்.

பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.

எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்து விடுவாள்.

அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.

இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.

ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீலலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.

பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.

கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும்.

தேவியின் அருளின்றி யாரும் இதனைப்பெறமுடியாது” என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.

லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.

எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

images (41)

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா

1. எது இதமானது ?

தர்மம்.

2. நஞ்சு எது ?

பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?

பற்றுதல்.

4. கள்வர்கள் யார் ?

புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

5. எதிரி யார் ?

சோம்பல்.

6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?

இறப்புக்கு.

7. குருடனை விட குருடன் யார் ?

ஆசைகள் அதிகம் உள்ளவன்.

8. சூரன் யார் ?

கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

9.மதிப்புக்கு மூலம் எது ?

எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

10. எது துக்கம் ?

மன நிறைவு இல்லாமல் இருப்பது.

11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?

குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?

இளமை, செல்வம், ஆயுள்…. ஆகியவை.

13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?

நல்லவர்கள்.

14. எது சுகமானது ?

அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

15. எது இன்பம் தரும் ?

நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

16. எது மரணத்துக்கு இணையானது ?

அசட்டுத்தனம்.

17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?

காலமறிந்து செய்யும் உதவி.

18. இறக்கும் வரை உறுத்துவது எது ?

ரகசியமாகச் செய்த பாவம்.

19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?

துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்… ஆகியோர் !

20. சாது என்பவர் யார் ?

ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?

சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?

எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

23. செவிடன் யார் ?

நல்லதைக்
கேட்காதவன்.

24. ஊமை யார் ?

சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

25. நண்பன் யார் ?

பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

26. யாரை விபத்துகள் அணுகாது ?

மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்

download (3)

பழனி

ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார்.

அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள்.

ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார்.

குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார்.

விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார்.

இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார்.

அன்றிலிருந்து அவரது நின்ற இடம்

“பழம் நீ “

(பழனி)

என அழைக்கப்படுகிறது.

பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன்.

அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

புராணங்களில் இப்படியான பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி.

பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும்.

அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.

முருகன் சிலையின் சிறப்பு.

முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது.

நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது.

இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது.

இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

போகர் என்ற சித்தர்

போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார்.

இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும்.

அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்து வந்தது.

அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார்.

போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.

அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர்.

ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர்.

இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.

#ஓம்சரவணபவ