Category Archives: பொதுவான வழிபாட்டு விஷயங்கள்

D1

நவராத்திரி கொலு

ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார்.

குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான்.

அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான்.

“ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன்.”
என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான்.

எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கமாக இடம் பெறுகிறது.

பொம்மையின் தத்துவம்!

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.

1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)

2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)

3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)

4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)

5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)

6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)

7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.

8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.

9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.

இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.

கொலுப் படிகளின் தத்துவம்

கொலுவில் கீழேயுள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும்;

அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும்;

மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்வ குணத்தை அடையும் வழியை நமக்குக் காட்டுகின்றன.

தேவி வழிபாட்டின் பலன்

வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் தேவியானவள் யாகத்தைக் காப்பவள்.

அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள்.

இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள்.

நலம் தரும் நவராத்திரி **

நான்கு விதமான நவராத்திரிகள் பாரத தேசத்தில் பந்நெடுங் காலமாய் கொண்டாடப் பெற்று வருகிறது.

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வஸந்த நவராத்திரி).(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

நவராத்திரியில் தேவியைக் கொண்டாடுவது எல்லாருக்கும் சிறப்பு தரும்.

நவராத்திரி வழிபாட்டால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர்.

சுமங்கலி பெண்கள் பெறுவது மாங்கல்ய அனுகூலம்.

வயதுமூத்த சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி பெறுவர்.

புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி, விஜயதசமியில் முடிகிறது.

பத்து நாட்கள் கொண்டாடப் படுவதால், “தசரா’ என்றும் வடமாநிலம் களில் அழைக்கின்றனர்.

நவதுர்க்கைகள் :-

வன துர்க்கை,
சூலினி துர்க்கை,
ஜாதவேதோ துர்க்கை,
ஜூவாலா துர்க்கை,
சாந்தி துர்க்கை,
சபரி துர்க்கை,
தீப துர்க்கை,
ஆகரி துர்க்கை,
லவண துர்க்கை.
இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

அஷ்டலட்சுமி:-

ஆதிலட்சுமி,
மகாலட்சுமி,
தனலட்சுமி,
தானிய லட்சுமி,
சந்தானலட்சுமி,
வீரலட்சுமி,
விஜயலட்சுமி,
கஜலட்சுமி.
இவை லட்சுமியின் அம்சங்கள்.

அஷ்ட சரஸ்வதி :-

வாகீஸ்வரி,
சித்ரேஸ்வரி,
துளஜா,
கீத்தீஸ்வரி,
அந்தரிட்ச சரஸ்வதி,
கட சரஸ்வதி,
நீல சரஸ்வதி,
கிளி சரஸ்வதி.
இவர்கள் சரஸ்வதியின் அம்சங்கள்.

உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத தத்துவம்.

அனைத்து உருவங்களிலும், எல்லா இடங்களிலும் தேவி வியாபித்து இருக்கிறாள் என்பதை குறிக்கும் விதமாகவே கொலு வைத்து வணங்குகிறோம்.

images (21)

சுயம்பு முருகபெருமான்!

27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரம் வழங்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் முருகபெருமான்!

சுயம்பு முருகனை காண்பது அரிது. அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம்.

வில்வாரணி நட்சத்திரகிரியில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தனிச்சிறப்பு பெற்றது.

முருகப்பெருமானின் கருணையால் உருவான இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சிதரும் சிறப்பு இங்கு மட்டுமே காண இயலும்.

27 நட்சத்திரங்களும், சிவ சர்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு, இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை.

வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப்பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க கோயில் எனும் பெருமையும் இத்திருதலத்துக்கு உண்டு.

27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோயில் அமைந்திருக்கிறது. எனவேதான், நட்சத்திர கோயில் எனும் சிறப்புடன் பக்தர்கள் அழைக்கின்றனர்.

இக்கோயில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. காஞ்சிபுராணம், அருணாச்சல புராணம் வாயிலாக அறியும் இக்கோயில் தொடர்பான ஆன்மிக வரலாறு மிகவும் சுவையானது.

வேல் விளையாட்டில் வல்லவனாம் வேலவன், வாழைப்பந்தலில் இருந்து எய்த அம்பு, பருவதமலை மீது பாய்ந்தது. அப்போது அங்கு தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன.

அதனால் பெருக்கெடுத்த உதிரம் ஆறாக பெருக்கெடு த்து மலையில் இருந்து வழிந்தோடியது. உதிரம் பெருக்கெடுத்து ஆறாக பாய்ந்ததால் இன்றைய செய்யாற்றுக்கு சிவப்பு நதி, செய்நதி எனும் பெயரும் உண்டு.

சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்ம கத்திதோஷம் பிடித்தது.
எனவே செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் பூஜித்தால் முருகப்பெருமானுக்கு தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி உபதேசித்தார்.

அதேபோல் முருகப்பெருமான், செய்நதியின் வலதுகரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், குருவிமலை, பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடதுகரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு, ஓரந்தவாடி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, மோட்டுப்பாளையம், பழங்கோயில், மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

இன்றளவும் இந்த 14 இடங்களிலும் முருகன் வழிபட்ட சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.

முருகப்பெருமான் வழிபட்ட இந்த 14 சிவாலயங்களை யும் இரண்டு சிவாச்சாரியார்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்விருவரும் ஆடிக்கிருத்திகை நாளில் திருத்தணி சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.

ஒரு வருடம் ஆடிக்கிருத்திகைக்கு திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. அதனால், மனம் வருந்தினர். இருவரின் கனவிலும் தோன்றிய முருகன், திருத்தணிக்கு செல்லவில்லை என வருந்தவேண்டாம், நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாக சிவசுப்ரமணிய ஐக்கியத்தில் குடியிருக்கிறேன். சூரியன், சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கின்றன.

எனவே, நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட என்னை வந்து சேருங்கள் என இருவர் கனவிலும் முருகர் அருள்புரிந்தார்.

திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு, நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்கு சென்றனர். அப்போது, சப்பாத்திகள்ளி புதரில் சுயம்பு வடிவாக முருகப்பெருமான் காட்சியளித்தார்.

முருகனே அருள்காட்சியளித்த நட்சத்திரகிரி கோயிலில், சித்திரை பிறப்பு பால்குட அபிஷேகம், ஆடிக்கிருத்திகை பெருவிழா, கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், தைக்கிருத்திகை, பங்குனி உத்திர பிரம்மோற்சவம், மாதாந்திர கிருத்திகை விஷேசமானவை.

கிருத்திகைதோறும் நட்சத்திரகிரியை வலம் வருவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

இவ்வாலயத்தில் கிருத்திகைகளில் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்க ளின் நாகதோஷம் புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும்; புதுவாழ்வு பிறக்கும்.

பாலபிஷேகம் செய்து, சிவந்த விருட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகும்; நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை!

ஆலய அமைவிடம் :

திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதேபோல் வேலூரில் இருந்து போளூரில் இறங்கி அங்கிருந்து 16 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. பஸ், ஆட்டோ வசதி அதிகளவு உள்ளது.a

download (22)

Saptha Sthaana Shiva

There are seven great Shiva temples in Mylapore, Chennai. Most have heard of the famous Kapaleeswarar Temple, but how about the other six? In fact, many who visit the Kapali temple regularly have not even stepped inside the important Velleeswarar Temple just next door to it!

The key to this Siddha worship procedure is that devotees should offer worship at the six other Shiva temples first before visitng the Kapaleeswarar Temple.

Order of temple in which we need to visit:

Mylapore Saptha Sthaana Shiva worship includes (1) Sri Karaneeswarar Temple, (2) Sri Theerthapaleeswarar Temple, (3) Sri Velleeswarar Temple, (4) Sri Virupaksheeswarar Temple, (5) Sri Valeeswarar Temple, (6) Sri Malleeswarar Temple and (7) Sri Kapaleeswarar Temple, in that order.

All these temple is built or renovated in 12th centuary.

The Siddhas say that this is so only because of the seven great Shiva deities who grace this town. Lord Sri Rama and Lord Sri Skanda, at the Singaravelan shrine (which is part of the Kapali temple) in Mylapore have visited these temples in order and performed Pooja . These deities are that ancient! Temples may get rebuilt, but these deities themselves are timeless. Such is the sacredness due to the seven Shivas here. So devotees should consider it a great honor to be able to offer worship at all seven Shiva temples here.

1. Karneeswarar temple
This is a 12th Century temple and history of this temple is dated back to the Chola period . It’s said that Karaneeswarar temple had lots of inscriptions belonging to the Chola period, which is recorded by ASI. The temple is said to be worshipped by Sage Vasishta. Karana means cause. Karana + Iswara = Karaneeswara, the Lord who is the Cause. He is the primordial cause of this universe which is His very form. Since Shiva is the ‘reason’ for everything, He is called Karaneeswarar (Karanam in Tamil means reason).

2. Sri Theerthapaleeswarar Temple
Sri Theerthapaleeswarar Temple is worshipped by Sage Adri and sage Agasthya . It is the second temple in the series of 7 great Siva temples. In age-old times, there were 64 angelic theertha ponds from this temple arch appropriate up to the adjacent sea. It is an argya shakti divya sthala, say the Siddhas. Numerous rishis accept performed argya adoration here. During the theerthavari festival during the month of Masi when the seven deities of the Sapthasthana temples take bath in the sea this deity takes the first place.

3. Sri Velliswarar Temple
Sri Velliswarar Temple is devoted to Sri Velliswarar and Mother Kamakshi. Vellee means Sukra and Velleeswara means Lord of Sukracharya. The Sage Angeerasa worshipped Shiva in this temple. The eye sight which Sage Sukracharya lost at the hands of Lord Vamana got back here after worshipping the Lord Shiva. In this temple devotees can worship the shrine form of Sri Sukra worshipping the Lord Shiva.It is believed by the locals that Lord Velleeswara is the divine eye doctor, who can cure eye related problems. Lord Shiva in this temple also protects his devotees from the attack of the problems related to their eyes

4. Sri Virupaksheeswarar Temple
Sri Virupaksheeswarar Temple is located near Karaneeswarar temple in Bazaar Road. Virupakesheeswarar temple is the fourth Saptha Sthana Shiva temple .In this temple Lord Shiva is known as Virupaksheeswarar along with the consort Sri Visalakshi Amman. Sri Visalakshi Amman has a “Bali Peetam” which is said to be unique in Shiva temples. Also Lord Bhairava and Lord Surya are together near Ambal sannidhi. Virupakesheeswarar temple is one of the oldest temples in Mylapore. It is believed that it was built by a devotee named Sivanesan Chettiar. His daughter Poompavai died, and the great saint Thirugnana Sambandhar brought her back alive from her burnt bones
Sage Kutsa worshipped Lord Shiva here in this temple and Sundaramoorthy Nayanar worshipped Lord Shiva here and saw Nataraja Thandavam . The Puranas tell us that the holy land of this temple is the subtle divine factory where the jeeva shakthi needed for the survival of all beings is created. The union togetherness of mind, body and heart in God that Virupakshi blossom shows and thus Virupakshi flowers garland was worn by Mother Visalakshi in this temple.

5. Sri Valeeswarar Temple
Sri Valeeswarar Temple, is located at Gopathy Narayana Chetty Street opposite to Kolavizhiamman Temple & opposite Sri Karaneeswarar Temple. The lord Shiva is said to be worshipped by Sage Gautama, this is 2000 years old temple . Vali (of Ramayana) is said to got all his powers after his tapas towards Easwaran here. Pancha lingams came out from the earth as seen in a separate shrine. Sri Valeeswarar and Mother Periya Nayaki are the reigning this temple

6. Sri Maleeswarar Temple

Sri Maleeswarar Temple, is located in the area behind Sri Karaneeswarar Temple. Lord Maleeswara is worshipped by Sage Brigu,. The entire place was supposed to be forest of Jasmines and so name Malleeswarar.

“Malligai vana eesa malleesa,
Maragadhavalli’yudan magizhum ma mylai puri vasa!
Solli thuthiporkku thunayyagum arul nesa,
Ellorkkum nalam arulwai emmane potri potri!!”

It is also said that Prarthan, King of Ayodhya, was in tapas and conducted a Yagna here towards Lord Shiva. Indhra tries to sabotage his tapas but could not. In praise of the intensity of his tapas, Shiva appeared before him along with his consort. Neem and Aswatha trees are grown together as a single tree is one of the divine combinations .The worship of Sri Malleeswara and Mother Maragathambal will ensure that husband, wife and children are highly moral and they don’t fall into evil ways. Offering fragrant flowers and perfumes pleases lord Maleeswarar & Sri Maragadhambal.

7. Sri Kapaleeswarar Temple
Sri Kapaleeswara is worshipped by Sage Kasyapar, This is one of the 275 Thevara Padal Petra Sthalams; and one of the 40 temples that have west facing Shiva shrines. The original temple was said to be located near the sea but got submerged in the sea and the current temple was built around 350 years back. Parvathi Devi worshipped Shiva here in the form of Peacock .The original temple was constructed by the Pallavas in the 8th century. The key atractions of this temple include, Sri Narthana Vinayagar , Sri Singara Velar Sannidhi.

ganesh

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்

முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்

மோதகத்தை மகிழ்ச்சியோடு கரத்தி லேந்தும் நாதனே!
முக்தியினை பக்தருக்கு அருளும் டுண்டி ராஜனே!

பிறைமதியை முடியில் சூடிக் காட்சி தரும் காந்தனே!

போற்றித் துதிக்கும் அடியவரைக் காத்தருளும் வேந்தனே!

தன்னையாளும் தலைவனில்லா தலைவனேவி நாயகா!

தாரணியைக் காக்கவென்று தானவனைக் கொன்றவா!

பக்தர்களின் பாவங்களை நாசம் செய்யும் நாயகா!

பணிந்து உன்னை வணங்குகின்றேன் காப்பாய் விநாயகா!

நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

உன்னை வணங்கித் தொடங்கி விட்டால் விக்னம் தீர்த்து அருளுவாய்!

உதய காலக் கதிரவன் போல் ஒளி மிகுந்து விளங்குவாய்!

தேவர்களைக் காத்திடவே அசுரர்களைச் சிட்சிப்பாய்!

ஆபத்துகள் எதுவந்தாலும் அடியவரை இரட்சிப்பாய்!

உம்பருக்கு அரசனே நவநிதிக்கும் நாதனே!

யானைகளின் ராஜனே கணங்களுக்குத் தலைவனே!

தேவருக்கு தேவனாகி மஹா தேவன் ஆனவா!

தெண்டனிட்டு வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!

ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

அகிலமெல்லாம் சுகம்பெறவே வரமளிக்கும் கணபதி!

அசுரயானை கஜாசுரனைக் கொன்றழித்த கணபதி!

பானை வயிற்றில் புவனமெல்லாம் பொத்திக் காக்கும் கணபதி!

யானை முகத்து ஐங்கரனே அழிவில்லாத கணபதி!

பிள்ளைகளின் பிழைகள் தம்மை மன்னித்தருளும் கணபதி!

பிழைகள் தம்மைப் பொறுத்து நல்ல வழியில் செலுத்தும் கணபதி!

பக்தருக்கு மகிழ்ச்சி, கீர்த்தி, மேன்மை நல்கும் கணபதி!

பணிந்து உன்னை வணங்குகின்றேன் காத்திடுவாய் கணபதி!

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்

ஏழை பங் காளனாகி காக்கும் ஏக தந்தனே!

அநாதியான வேதங்களும் வணங்கும் வக்ர துண்டனே!

திரிபுரத்தை ஒரு சிரிப்பால் எரித்த ஈசன் மைந்தனே!

தானவரின் கர்வந் தன்னை ஒடுக்கும் ஐந்து கரத்தனே!

காலனையும் கலங்கச் செய்யும் காலனே கஜானனே!

விஜயன் போன்ற வீரர்களும் பணியும் விகட ராஜனே!

முதற் பொருளாய்த் தோன்றி உலகை வழி நடத்தும் ஜேஷ்டனே!

மாசில்லாத அன்பினாலே வணங்குகின்றோம் நேசனே!

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

வெண்மையான தந்தம் மின்னத் திகழும் விக்ன ராஜனே!

இடது காலால் காலன் தன்னை உதைத்த சிவனின் பாலனே!

கற்பனைக்கும் எட்டாத வடிவம் கொண்ட கஜமுகா!

துக்கம் தீர்த்து விக்னங்களைக் களைந்து விடும் ஹேரம்பா!

தவ முனிவர் தேவர் மூவர் யாவருடைய மனதிலும்
நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நிகரில்லாத நாயகா!

ஒற்றைத் தந்தத்தோடு திகழும் ஒப்பில்லாத உன்னையே ஒரு மனதாய் உள்ளத்திலே சிந்திக்கின்றேன் உண்மையே!

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்

காலையிலே எழுந்ததுமே கணபதியை நெஞ்சிலே
கருத்துடனே நினைத்தபடி சிரத்தையுடன் வணங்கியே
மஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த நூலையே
மந்திரமாய் மனதில் வைத்து ஜெபித்து வரும் போதிலே
பிணிகளெல்லாம் நொடியினிலே விட்டு விலகி ஓடுமே!

பிறவிப்பிணி என்னும் பெரிய பிணியும் தீர்ந்து போகுமே!

images (7)

காயத்ரி மந்திரங்கள்!

ஒம் பூர்ப் புவஸ் வக
தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோன ப்ரசோதயாத்.

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

1. வினாயகர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.

2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்

4. ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி

ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்

5. ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்

6. ஸ்ரீ துர்க்கை காயத்ரி

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்

7. ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி

ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்

8. ஸ்ரீ ராமர் காயத்ரி

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்

9. ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி

ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

10. ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி

ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்

11. ஸ்ரீ சாஸ்தா காயத்ரி

ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்

12. ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

13. ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்

14. ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி

ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

15. ஸ்ரீநிவாசர் காயத்ரி

ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

16. ஸ்ரீ கருட காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

17. நந்தீஸ்வரர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்

18. ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி

ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீசப் ப்ரசோதயாத்

19. ஸ்ரீ பிரம்ம காயத்ரி

ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்

20. ஸ்ரீ காளி காயத்ரி

ஓம் காளிகாயைச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்

21. ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவப் ப்ரசோதயாத்

22. காலபைரவர் காயத்ரி

ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவப் ப்ரசோதயாத்

23. சூரிய காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

24. சந்திர காயத்ரி

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்

25. அங்காரக காயத்ரி

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

26. புத காயத்ரி

ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்

27. குரு காயத்ரி

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்

28. சுக்ர காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

29. சனி காயத்ரி

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்

30. ராகு காயத்ரி

ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

31. கேது காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

32. நவகிரஹ சாந்தி ஸ்லோகம்

ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குருசுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ

33. வருண காயத்ரி

ஓம் ஜலபிம்பாய வித்மஹி
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்

இதை எல்லோரும் படித்தால் ரொம்ப நல்லது; நல்ல மழை பொழியணும் என்று வேண்டிக்கொண்டு சொல்லுங்கோ

34. ஸ்ரீஅன்னபூரணி (என்றும் உணவு கிடைக்க)

ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

35. குபேரன்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்…..

images (37)

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்- மஹா பெரியவா!!

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்- மஹா பெரியவா

மொத்தம் 20 வகை பிரதோஷங்களும் அதன் பலன்களும்:
சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும் நன்றாகும்]

மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் .

1.தினசரி பிரதோஷம்
2.பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7.தீபப் பிரதோஷம்
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்

20 வகை பிரதோஷங்கள் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

1.தினசரி பிரதோஷம் :

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

3. மாசப் பிரதோஷம் :

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :

பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம் :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் :

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் :

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் :

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் :

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் :

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் :

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

images (50)

திருநீறும் -தியானமும்

வெறும் நெற்றி பாழ் என்பது முன்னோர் சொல். இந்து சமயத்தில் சைவ நெறியை பின்பற்றுபவர்கள் திருநீறு இட்டுக்கொள்வது மரபு.

சைவத்தின் முழுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.

“மந்திரமாவது நீறு”  என்கிறார்  திருஞானசம்பந்தர்.        மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.

20160320065730புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.

இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் மன வசியம்  எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம்.

அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை. அது கபாலக் குகைக்குள்தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்கும்.

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

images (51)ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். 

இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.

images (40)

வீட்டில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?

 தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டரக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நு}ல்கள்.

மேலும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.

தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும் :

கோலமிடப்பட்ட வாசலில் : ஐந்து விளக்குகள்

தின்ணைகளில் : நான்கு விளக்குகள்

மாடக்குழிகளில் : இரண்டு விளக்குகள்

நிலைப்படியில் : இரண்டு விளக்குகள்

நடைகளில் : இரண்டு விளக்குகள்

முற்றத்தில் : நான்கு விளக்குகள்

பு ஜையறையில் :

இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

சமையல் அறையில் :

ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் :

எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

தீபத்தின் வகைகள் :

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகைகள் உண்டு. அவை

சித்ர தீபம் :

வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.

மாலா தீபம் : அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

ஆகாச தீபம் :

வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

ஜல தீபம் :

தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.

படகு தீபம் :

கங்கை நதியில் மாலைவேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்கு பெயர் படகு தீபம் ஆகும்.

சர்வ தீபம் :

வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.

மோட்ச தீபம் :

முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.

சர்வாலய தீபம் :

கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவன்கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.

அகண்ட தீபம் :

மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.

லட்ச தீபம் :

ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.

மாவிளக்கு தீபம் :

அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்

download (12)

நாக வழிபாடும், நாக தோஷமும்

நாக வழிபாடு, கேரளத்தில் ஆதியில் இருந்தே அதிகமாக இருக்கிறது. சேர, சோழ, பாண்டியர் காலத்தை எடுத்துக்கொண்டால் இப்படிப்பட்ட வழிபாடு சேர நாட்டில்தான் அதிகமாக இருந்தது. சேரர்கள் நாட்டில் இந்த வழிபாடு ஏன் அதிகமாக இருக்கிறது என்று பார்க்கப்போனால், அவர்கள் குறுக்கில்தான் அதிகம் சென்றிருக்கிறார்கள். எனவே காவல் தெய்வங்கள், எல்லை தெய்வங்கள், வன தேவைதைகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். கேரளத்தில் தடுக்கி விழுந்தால் பகவதியம்மன் கோயிலைக் காணலாம். பிள்ளையார் கோயில்களை விட அதிகமாக பகவதி அம்மன் கோயில்கள் இருக்கும். இப்படியான உக்கிரமான தேவைகள் அங்கு அதிகம்.

இதுபோலவே நாகத்தையும் அவர்கள் அதிகம் வழிபடுகிறார்கள். இங்கேயும் நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், திருவேற்காடு கருமாரியம்மன் என்று வழிபடுகிறோம். இவையாவும் நாக தேவதைகள், நாக கன்னிகள்தான். சில சமூகத்தில் பார்த்தீர்களானால் முதலில் பிறப்பது ஆண் பிள்ளையாக இருந்தால் அதற்கு நாகராஜன் என்றும், பெண் பிள்ளையாக இருந்தால் நாக கன்னி அல்லது நாகம்மா என்று பெயர் சூட்டுவார்கள். பிறந்த 13வது நாள் பெயர் சூட்டும் விழா நடத்தும்போது, குழந்தையின் காதில் நாகராஜா, நாகராஜா, நாகராஜா என்று மூன்று முறை கூறுவார்கள், இதுபோல் பெண் குழந்தையாக இருந்தால் மூன்று முறை நாகம்மா என்று கூறுவார்கள். அது அவர்களின் குல வழக்கமாகும்.

சேர நாட்டில் மற்றொன்றையும் நீங்கள் பார்க்கலாம். அங்கு புற்றுகள் அதிகம், எனவே புற்றாங்கண் வழிபாடு அதிகமாக இருக்கும். பாம்புகள் அதிகம் வாழும் இடங்களில் அது நம்மைத் தீண்டிவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது. கை கூப்பி அதனை வணங்குவதால் அது நம்மைத் தீண்டாது என்ற நம்பிக்கை அங்கு நீண்ட காலமாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் கூட பல சமூகங்களில் நாகத்தம்மன் குல தெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம். எனக்குத் தெரிந்த ஒரு பெரிய பண்ணையார் இருந்தார். 100, 120 ஏக்கர் நிலம் இருந்தது. நல்ல விளைச்சல் இருந்தது. ஒரு நாள் அவர் நல்ல பாம்பு ஒன்றை அடிக்க வேண்டியதாகிவிட்டது, அடித்துக் கொன்றுவிட்டார். அதன் பிறகு ஏழெட்டு ஆண்டுகள் அவருடைய நிலத்தில் விளைச்சலே இல்லாமல் போய்விட்டது. அவரும் என்னென்மோவெல்லாம் செய்து பார்த்துவிட்டார், வேளாண் பட்டதாரிகளையெல்லாம் அழைத்துவந்து மண் பரிசோதனையெல்லாம் செய்துபார்த்துவிட்டார், விளைச்சல் இல்லை. இதை ஒரு ஆய்வாக நான் பார்த்தேன். அதற்குக் காரணம் நாக தோஷமே என்று புரிந்துகொண்டேன். அந்தக் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக நைந்து போய்விட்டதைக் கண்டேன்.

இருளர்கள் இருக்கிறார்களே, அவர்களின் தொழிலே பாம்புகளைப் பிடிப்பதும், கொன்று போட்டுவிட்டு, அதன் தோலை எடுத்து விற்பதும்தான், அவர்களை இந்த தோஷம் தாக்கவில்லையா என்று கேட்டார்கள். அவர்களையும் தாக்குகிறது. செங்கல்பட்டிற்கு அப்பால் ஒரு இருளர் குடியிருப்பு உள்ளது. அங்கு தலைகட்டு ஆக இருந்த ஒருவரைச் சந்திக்கும்போது அவர் நாகதோஷம் தங்களையும் தாக்குகிறது என்று ஒப்புக்கொண்டார். தனக்கு 12 பிள்ளைகள் பிறந்ததாகவும், கடைசி பிள்ளைதான் தங்கியதாகவும் கூறினார்.

ஒன்றன்பின் ஒன்றாக 11 பிள்ளைகள் பிறந்து பிறந்த இறந்துவிட்ட நிலையில், அங்குள்ள புற்றாங்கண்ணிற்குச் சென்று, இதற்குமேல் எந்த நாகத்தையும் பிடிக்க மாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு வந்த பிறகுதான் தனக்குப் பிறந்து 12வது குழந்தை இன்று வரை வாழ்கிறது என்று கூறினார்.

எனவே நாக வழிபாடு, தோஷம் ஆகியன எல்லா இடத்திலும் உணரப்பட்ட ஒன்றாக உள்ளது.

images (30)

காவல் தெய்வங்கள்

ஊ‌ர்‌‌க் காவ‌ல் தெ‌ய்வ‌ங்க‌ளி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்!
ம‌ற்றொ‌ன்று ஒவ்வொரு ஊரிலும் உள்ள காவல் தெய்வம். எங்க‌ள் ஊரில் பார்த்தீர்களானால் ஊர் காவல் தெய்வமாக உள்ள ஐயனாருக்கு வைகாசியில் காவடி எடுக்கிறோம். இப்படி ஊர்க் காவல் தெய்வத்தையும் குல தெய்வங்களுக்கு இணையாக வழிபடுகிறோம், இதை எப்படி பார்ப்பது?

 குலம் காக்கும் தெய்வம் குல தெய்வம். இது வழிவழியாக வருவது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாரம்பரியமாக வழிபட்டுவரும் தெய்வம். ஆதிகாலத்தில் மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தான். அப்போது பஞ்ச பூதங்களின் கூட்டாக குல தெய்வங்களை உருவாக்கி வழிபட்டு வந்திருக்கிறார்கள். இதேபோல்தான் காவல் தெய்வமும்.

இதில் குல தெய்வதிற்குரிய முக்கியத்துவம் என்னவெனில், எந்த நல்ல காரியம் செய்வதென்றாலும், எடுத்துக்காட்டாக திருமணம் என்று சொன்னால், முதல் திருமண பத்திரிகையை குல தெய்வத்திற்கு வைத்து வணங்கிவிட்டுத்தான் பிறகு மற்ற தெய்வங்களுக்கு வைத்து வணங்கி, பிறகு கொடுக்கத் தொடங்குவார்கள். இதேபோல் காவல் தெய்வமும் மிக முக்கியமானது. காவல் தெய்வத்தை எல்லைக் கடவுள் என்றும் சொல்கிறோம். எந்த ஒரு நல்ல காரியத்தை முன்னெடுக்கும் போதும், காவல் தெய்வத்தை வணங்கிவிட்டு அல்லது அது இருக்கும் திசையை நோக்கியாவது ஒரு கற்பூரத்தை ஏற்றி வணங்கிவிட்டுச் செல்வர்.

ஐயனார் கோவில் என்பது ஊருக்கு வடக்கே ஐந்தாறு கிலோ மீட்டர் தாண்டித்தான் இருக்கும். ஐயனார், முனீஸ்வரர், கருப்புசாமி ஆகிய எல்லைக் கடவுள்கள் எல்லாம் ஊருக்கு வெளியேதான் இருக்கும். இதேபோல் சில பெண் தெய்வங்களும் காவல் தெய்வங்களாக உள்ளன. இந்த தெய்வங்களுக்கெல்லாம் உயிர்ப் பலி கொடுக்கும் வழமை பண்டையக் காலத்தில் இருந்தே உள்ளது. இதை எதற்கு செய்கிறார்கள் என்றால், நாம் முன்னெடுக்கும் காரியத்தில் வழித்துணையாக காவல் தெய்வங்கள் இருக்கும் என்பதால்தான். வழித்துணைக் கடவுள் என்பதுதான் காவல் தெய்வம்.

காரில் நீண்ட பயணம் போகும் முன்னர் கூட, முன் சக்கரங்களில் இரண்டு எலுமிச்சை பழங்களை வைத்து நசுக்கிவிட்டு எடுக்கிறோம். அப்போது கூட காவல் தெய்வங்களை வணங்கிவிட்டுத்தான் அதனைச் செய்கிறோம். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று கூறுகிறார்கள் அல்லவா? அந்த தெய்வம் இந்தக் காவல் தெய்வம்தான். ஒரு பெரிய ஆளை சந்திக்கப் போகிறோம், அவ‌ர் எப்படி நடந்துகொள்வா‌ர், அவ‌ர் பெரிய மலை என்றால், நான் மடு போன்று சிறியவன், என்னை தூக்கி எறிந்துவிடக் கூடாது, ஐயனாரப்பா நீ என் கூட துணையாக இருக்கனும் என்றெல்லாம் வேண்டிச் செல்வார்கள்.

மேலும் அந்த நாட்களில் எல்லாம், இப்போது உள்ளதுபோன்று சாலை, வாகன வசதிகளெல்லாம் கிடையாது, தனியாக, காட்டு வழியில் சென்றாக வேண்டும். அப்படி பல ஊர்களுக்குப் பயணம் ஆகும் போதெல்லாம், இப்படி ஆங்காங்குள்ள காவல் தெய்வங்களை வணங்கிக் கொண்டுதான் சென்று வந்தார்கள். அந்த அளவிற்கு காவல் தெய்வங்கள் மீது அவர்களுக்கு அதீத நம்பிக்கை இருந்தது.

ஆகவே, குல தெய்வம் என்பது குலம் காக்க வந்த தெய்வம், குழந்தைக்கு முதல் முடி எடுப்பதில் இருந்து முதல் கல்யாண பத்திரிகை வைப்பது வரை வீட்டில் எந்த விசேடமானாலும் முதல் வணங்குதலு‌க்குரியது. அந்தக் காலத்தில் எல்லாம் குல தெய்வத்தை தனித்து வழிபடக் கூடாது என்றுதான் சொல்வார்கள். குடும்பக் கொத்து என்று சொல்வார்கள் அல்லவா, அப்படி சித்தப்பா, பெரியப்பா, மாமன் மச்சான் உள்ளிட்ட எல்லோருடனும் சென்றுதான், கலந்துதான் வழிபட வேண்டும். அப்போதெல்லாம் எல்லோரும் வண்டி மாடு கட்டிக்கொண்டுச் சென்று முதல் நாள் சைவமாக படைப்பார்கள், அடுத்த நாள் அசைவமாக இருக்கும், மூன்றாவது நாள் இரண்டும் கலந்த உணவு சமைத்து படைப்பார்கள். வேண்டுதல், கேளிக்கை எல்லாமும் கலந்தே இருக்கும். அப்போதுதான் பெண், மாப்பிள்ளை பார்ப்பது, பேசி முடிப்பது என்றெல்லாம் நடக்கும். இன்றைக்கு அது பெரிதும் சுருங்கி தனித்தனியாக நடந்து வருகிறது.