Category Archives: Mind

நம்மள நாமே பார்ப்போமே 18

 

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா உடன் நடந்த உரையாடல்கள்
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 18
   
அதாவது சொல்லுவாங்க,”ஐந்தில் ஒன்று பழுதுஇல்லை, மூன்றிலே ஒன்று விலக்கனும்”. அப்படின்னு, ஐந்தில் ஒன்று பழுது என்பது ஆகாயத்தை நம்மால் தொடமுடியாது. பார்க்க மட்டும் தான்முடியும். பாக்கி இருக்கக்கூடிய நிலம், நீர், நெருப்பு, காற்று இவை நான்கையும் நாம் உபயோகப் படுத்துகிறோம். அதாவது நீங்க பூமியில் நீ நடந்து எட்டுதிசைகளையும் அசிங்கப்படுத்திட்டே தண்ணியை எல்லாவிதமான வேலைகளுக்குன்னு சொல்லி அதையும் அசுத்தப்படுத்தறே. நெருப்பு பற்றி சொல்லவே வேண்டாம், எல்லாவற்றிற்கும் உபயோகப்படுத்தறோம். காற்றும் அப்படித்தான் உணர முடியும், தொடமுடியாதது எது ஆகாயம் அதனால் அது சுத்தமா இருக்கு.

 அப்ப இந்த நான்கில் எதை நாம் கடைப்பிடிக்கனும்னு பார்த்தா ‘ஓம்’ கிறதை நாம் கையாளனும்  “ஓம்” கிறது என்ன? ‘அ, உ ,ம்’  ”அ” என்பது பிருதிவி, ‘உ’ என்பது நெருப்பு, ‘ம’ என்பது நீர் அப்பஇந்த மூன்றுக்குள்ளேதான் வேலையே ஆரம்பிக்கனும் அப்போ இந்த 3 எது அப்படின்னு நாம பார்க்கப்போனோம்னா, கிழமை, திதி, நட்சத்திரம், நம் வேலை இந்த மூன்றுக்குள்ளேதான். அதனால்தான் கேட்டவுடனேயே கிழமைக்கு பதிலா  உன் பேரைத்தானே கேட்கிறோம், நீ ஒரு பேரைச் சொல்லியிருப்பே, அப்ப நீ அடையாளம் ஆகிறாய். அடுத்து உன்னுடைய நட்சத்திரத்தை கேட்கிறேன். இதுல சைடு தலைப்பா வந்தது இருந்து உன்னுடைய கோத்ரம். எந்த கோத்திரத்திலிருந்து வந்தே, வழி தெரியனும், அதாவது, தொழில், தரம், வகுப்பு, இதை வைச்சுதான் ஒரு பொருளாகட்டும், மனிதனாகட்டும் கணிக்கிறோம். 

அப்ப ஏன் உன்னுடைய அந்த (பேசிக்) கேட்டிருக்கான்னா அதாவது கொங்கணவர் இருந்து திரு மூல நாயனாரை தேடி போயிட்டிருந்த காலகட்டத்திலே நிறைய விஷயங்களை அவர் செய்தார். செய்யும் போது மூலநாயனாரோட பரம்பரையிலுதித்த நாதர் கிட்ட வந்து நிக்கும் போது எங்கிருந்து வர்றே? அப்படின்னு கேள்வி கேட்கிறார். அப்ப அவர் சொலுவார். நான் இங்கிருந்து வர்றேன், இந்த இடம், ஊர், இவருடைய சீடர் விசேஷமான ஆட்களில் அப்போ ஒ நீ அந்த மூல நட்சத்திரத்தைச் சேர்ந்தவனா? அப்படின்னு கேட்பாங்க, அதாவது அதுக்குன்னு இருக்கக்கூடிய அடையாளம் இருந்து நம்முடைய செயல்கள் மூலமாகவும், நாம் வந்திருக்கக்கூடிய அந்த மூலத்தின் மூலமாகத்தான் நம்மளையே எடைபோடறது. இப்ப நீங்க வீட்டிற்கு  வர்றீங்க யார்? யார் அனுப்பின ஆள் ஓ அப்ப எனக்கு தெரிந்தவர் அனுப்பின ஆள்தான், அப்ப அதில் உள்ள இணைவு இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். அப்ப நாம இதை பழக்கத்தில் அனுதினமும் கொண்டு வந்தோம் என்றால் மூலம் எதுவோ அதனுடன் இயல்பான இயற்கையான ஒரே மாதிரியான இசைவு நமக்கு கிடைத்துவிடும். அப்படி கிடைத்தால் வேண்டும், வேண்டாமை, வேண்டுதல் என்பது இயல்பாகவே நமக்கு சித்தி தரும் அவ்வளவுதான் நம் காரியத்தை நாம் தான் தெளிவாக செய்யவேண்டும். இந்த இரண்டையும் நாம் பயிற்சி பெற்றோமென்றால் நாம் தேவையில்லாத துக்கத்தையும், தேவையில்லாத குழப்பத்தையும் நாம் தவிர்த்துவிடலாம்.

From
http://divinepowerathma.com/blog/

நம்மள நாமே பார்ப்போமே 17

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா உடன் நடந்த உரையாடல்கள்
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 17
   1.உடல்,மனம்,ஆன்மா

.2.செயல்,விளைவு.   அதனுடைய காரணம்

ஒரு செயல் செய்யறோம். அதனுடைய விளைவு,

அதனால் கிடைக்கக்கூடிய வினை மூனாவது கர்மா.

 அவ்வளவுதான்

. இந்த மூனு மட்டுமே வகுப்பு. இந்த மூனும் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமே வகுப்பு. அதற்கு முன்னாடி இந்த உடம்பை நாம் ஓம்பனும்(சரிப்படுத்தனும்), இந்த உடம்பை இருந்து நாம் சிந்திக்கனும், அப்படீங்கறதுக்கு வேண்டி வர்றோம். வந்தவுடன் அதற்குன்னு இருக்கக்கூடிய சில poses இருக்கு. எல்லோரும் செய்யக்கூடிய, எல்லோரையும் இயல்பாகச் செய்யமுடிகின்ற, அப்படி ஸ்டார்ட்டிங்கில்  முடியலேன்னாலும் ஒரு 15, நாளைக்குள்ள அவங்களே வீட்லே பிராக்டீஸ் பண்ணாங்கன்னா, செய்வதற்கு உண்டான வாய்ப்பு இருக்கக்கூடிய தன்மையிலே இந்த உடம்புக்குத் தேவையான, பலத்தைத் தரக்கூடிய சிலதை செய்கிறோம், 

காலையில் 6 மணி அப்படீன்னுவர்றோம். அதுல0.15 நிமிடம்  யோகாக்குன்னு ஒதுக்குகிறோம், ப்ரீயாகிவிடுவோம். அடுத்த 45 நிமிடத்தில் ஒரு 15 நிமிடம் நீங்க படித்தது, நீங்க தெரிஞ்சுகிட்டது அப்படீங்கறதிலிருந்து அந்த வாரத்திலே இருக்கிறது என்னவோ ஒவ்வொருத்தரா பகிர்ந்துக்கனும்.

நான் இன்றைக்கிருந்து பகவத்கீதையிலே ஒரு ஸ்லோகம் இருந்து போற வழியிலே நான் கேட்டேன், எனக்கு அர்த்தம் தெரியலே உனக்குத் தெரியுமா? இவர் சொல்லுவார், தெரிஞ்சதுன்னா சொல்வார், தெரியலைன்னா அடுத்த வாரம் ஓடிப்போய் நாம சொன்ன ஸ்லோகம் எதுன்னு பார்த்து ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’-க்குப் போய் இந்த ஸ்லோகம் சொல்லி, அது ரீதியான விஷயங்களை சேகரித்து, முடிஞ்சா அந்த ஒரு வாரத்துக்குள்ளேயே எங்கிட்ட வந்து நீ கேட்ட ஸ்லோகத்துக்குண்டான அர்த்தம் இது தான் பெரியவங்க சொல்லியிருக்காங்கன்னு சொன்னா சரி சொல்லைலைன்னாலும் தப்பில்லை அடுத்த வகுப்பு வரும்போது நீ போன வாரம் கேட்டேயில்லை நான் பார்த்துட்டேன் விஷயம் இதுதான். இயல்பா அடிவயித்துலே இருந்து வரக்கூடிய உணர்வின் மூலம் ஏற்படக்கூடிய ஒரு விளக்கம்அது. 

ஒரு 15நிமிடம் கண்களை மூடி உட்கார்ந்துக்கலாமா இல்லை கிளம்பும்போது கண்ணை மூடி உட்கார்ந்துவிட்டு அப்படியே வெளியே போயிரலாமா? ஏன்னா இந்த கலந்துரையாடலை 15 நிமிடம் கடைசியா வைச்சு பண்ணிக்கலாமா அப்படிங்கறதை மட்டும் ஒரு சிறிய கேள்வி, அது உங்களுக்குள்ளேயே ஆலோசனை பண்ணி நீங்க சொன்னீங்கன்னா அதுக்குத் தகுந்த மாதிரி பண்ணிக்கலாம்

.  இதைப்பற்றி ஆரம்பத்திலேயே முடிவு பண்ணிட்டா கொஞ்சம் மனது அமைதியாயிடும் இதுல ஒரு சிக்கல் என்னன்னா, 6மணிக்கு நீ வர்றே கண்களை மூடி உட்கார்ந்தீன்னா தூங்கிடுவே ஏன்னா இது முழு விழுப்புணர்வுக்கு வேண்டி செய்யக்கூடிய விஷயம். அதனாலே இந்த 15லிருந்து 45நிமிடம் பேசி, விஷயங்களை சேகரிச்சு பிறகு நம்ம பழக்கத்துக்கு வருகிறோம். எல்லா வேலைகளும் கரெக்டா ஆகிவிடும். பிறகு அதே நிலையில் அமர்ந்து அறிவதற்குண்டான எல்லா விதமான சாத்தியக்கூறுகளும் இருக்கு. இதுல இன்னொரு விஷயம் சித்தர் பாடல்கள் பற்றி ஒரு சித்தரோடது மட்டும் நாம எடுத்து அதுல இருக்கக்கூடிய பாடல் பேசிகிட்டு போயிடறது. அப்போ அதுக்குன்னு உண்டான தன்மையும், தெளிவும் நமக்கு கிடைப்பதற்குண்டான அதிக அளவு வாய்ப்பு இருக்கு.

From
http://divinepowerathma.com/blog/

நம்மள நாமே பார்ப்போமே 16

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா உடன் நடந்த உரையாடல்கள்
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 16
   
என்னிக்காச்சும் உயிரு கொஞ்சம் கொஞ்சமா போயிட்டிருந்திருக்கா? மொத்தமா போயிடுவான். அதோட முடிஞ்சுபோச்சு, அவன் இழுத்துட்டிருந்தா என்ன? படுத்திட்டிருந்தா என்ன? அது கிளம்புனும்னா கிளம்பிடும்.

 இந்த உடல்ல ஆன்மா நுழையறதும் அப்படித்தான். உயிர் ஆன்மாங்கறது  பத்தி ஒரு 15, 20 வகுப்பு போனதுக்கப்புறம் நாம்  தெருஞ்சுக்கலாம்    ஒன்னு வேண்டாம் அப்படின்னு முடிவு பண்ணிட்டா வேண்டாம் அப்படீன்னு முடியுது இல்லையா, அப்பவே அது வேண்டான்னு ஆயிரனும்  அப்ப உடம்பை இருந்து நாம கவனிக்கனும், நாம் செய்யக் கூடிய ஒவ்வொரு விஷயங்களிலும், நமது முழு கவனம் இருக்கனும். அதன், பிறகு கண்ணை மூடி இருக்கனும். பார்ப்பதற்கு உண்டான அதிகாரம் இருந்து எது பார்ப்பானாக இருக்கிறதோ அதைப் பார்க்கனும், பார்ப்பானா இருப்பதை எவன் பார்க்கின்றனோ அவன்தான் பாப்பான். அவன் சொல்றான் இல்லியா ஐயர்ன்னுட்டெல்லாம் பாப்பான்னுட்டெல்லாம் சொல்றானில்லியா? அவன் என்னத்தே பார்ப்பான். அவன் மரத்தைப் பார்க்கிறான், நானும் மரத்தைப் பார்க்கறேன் அப்படீன்னா எனக்கும், அவனுக்கும் என்ன வித்தியாசம்? பார்ப்பானாக எது நமக்குள் இருக்கிறதோ அதை எவனொருவன் பார்க்கின்றானோ அவனே பாப்பான். அதுதான் நிஜம். அப்போ  நாமளும் அப்படி ஒரு பாப்பான் அப்படீங்கற ஒரு தகுதியை அடைவதற்கும் இங்கே விஷயம் என்னன்னா, அடுத்தவர்கள் தரக்கூடிய சர்டிபிக்கெட்டுகள் இங்கு கிடையாது. உங்களுடைய விஷயங்களாகட்டும் அதை நீங்க போடறது மட்டுமே. இந்த வகுப்புல நாம சிந்திக்கக்கூடிய, சிந்திக்கப்போகின்ற விஷயங்கள் இருந்து உடல், மனம், ஆன்மா, இது ஒரு பாடம் இதை நீங்க மனசுலே வைச்சுகிட்டு அது ரீதியான விஷயங்களை இருந்து நீங்க கேட்டீங்கன்னா ஒவ்வொரு வாரமும் அது ரீதியான விளக்கங்கள் கிடைக்கும். 

From
http://divinepowerathma.com/blog/

நம்மள நாமே பார்ப்போமே 15

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா உடன் நடந்த உரையாடல்கள்
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 15

இப்போ நாம் சிந்திக்கக்கூடிய குருநாதர்கள் நம்மை வழிநடத்துவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கக்கூடிய பிரபஞ்சத் தொடர்புமிக்க மனிதர்களை நாம் சிந்தித்துப் பார்த்தோம் என்றால் பெரும்பாலும் யாருமே அதிகமா படிக்கவில்லை இல்லையா? இப்ப இருக்கக்கூடிய விஷயங்களில் நீங்க ஒரு டாக்டரா இருந்தா, ஒரு மரியாதை, ஒரு இன்ஜீனியரா இருந்தா ஒரு மரியாதை . அதுக்குன்னு அதெல்லாம் தப்புன்னு சொல்லவரலை. தேவை இது சமுதாய நிலை. ஆனால், அது உன் நிலையில் எந்த அளவுக்கு உனக்கு உபயோகப்பட்டிருக்கு  அப்படீங்கறதைப் பத்தி நீ இருந்து தெரிஞ்சுக்கும் போதுஅதன்மூலம்  அடுத்தவர்கள் எந்த அளவுக்குப் பயன்பட்டிருக்கிறார்கள் அப்படீங்கறது நமக்குத் தெரியும் போது மட்டுமே அதன் உள்ளார்ந்த தன்மையை தெரிந்துகொள்ள முடியும்

 நாம பெரியவங்க அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கிறவர்கள் எல்லாம் இந்த உள்ளார்ந்த நிலையை உணர்ந்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள் 

 ஆனா, இவங்க யாருமே — நாம சிந்திக்கக்கூடிய நிலையில் இல்லாதவர்கள், நல்ல டாக்டரா கிடையாது. நல்ல தொழில் அதிபரா அதுவும் கிடையாது, சரி ஒரு பொருளாதார நிபுணனோ இல்லை, ஒரு கம்ப்யூட்டர் தொழிலாளியோ இல்லை, ஆனால் அவர்கள் உணர்ந்த நிலை மிகப்பெரியது. எந்ந சாப்ட்வேர் இன்ஜினீயர்னாலே எந்த ஸ்பேஸ் ரிசர்ச்லே இருக்கறவனும் தொடமுடியாத ஒரு நிலையை இயல்பாகப் பெற்று இயற்கையாக அதனுடன் இணைந்து போனவங்க.

சரி, இது வரைக்கும் பேசினதினுடைய அந்தச் சூட்சும சாராம்சத்தை இருந்து இப்போ முதல்லே இருந்து சொல்றேன் ஒழுக்கம்  என்பது அடுத்தவங்க நமக்குப் போதிக்கக்கூடாது. இது பொது, உடலை இருந்து நாம் அதிக அளவில் நேசிக்கனும். அதற்கு இடையூறாக இருக்கக்கூடிய விஷயங்களை தவிர்க்கனும். 

From
http://divinepowerathma.com/blog/

நம்மள நாமே பார்ப்போமே 14

 

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா உடன் நடந்த உரையாடல்கள்
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 14

 இப்ப கீதாசாரமே சிக்கிட்டு நிக்குது. கிருஷ்ணனுக்கே அந்த  நிலைமை இப்ப கிருஷ்ணன் சொல்லி நாம கேட்கலே. அதானே நிஜம். அப்ப கிருஷ்ணன் சொன்னது நம்மளை ஒழுங்கா வந்தடையவில்லை.

ஒரு ஆசிரியர் என்றால் அவர் சொன்னது எல்லோருக்கும் தெரியணும், எல்லோரும் அது பிரகாரம் நடக்கனும். ஆனானப்பட்ட கீதையை உருவாக்கிய கண்ணனே தோத்துப் போன பிறகு அப்புறம் எந்த குருமார்களாலே ஜெயிக்க முடியும்.

ஜெயிக்கமுடியாது. ஆனா, அதுக்காக எந்த வேலையையும் நிறுத்த முடியுமா? சொல்லித்தராமத்தான் இருக்கமுடியுமா? இல்ல பகிர்ந்துக்காமத்தான் இருக்கமுடியுமா? அதுனால ஊதற சங்கை ஊதிவைப்போம். விடியும்போது  விடியட்டும். அல்லது யாருக்கெல்லாம் விடியனும்னு  இருக்கோ அவங்களுக்கு விடியட்டும்.

அதுக்குன்னு ஸ்ரீ கிருஷ்ணன் சொன்ன பிரகாரம் நடக்காதவன் இந்தப் பிரபஞ்சத்துலே இல்லைன்னு நம்மனாலே சொல்ல முடியாதே, அதே அளவுக்கு கேட்டவங்களும் இருக்காங்க. 

அப்போ மனம் என்பது ஒழுங்கா இருக்கனும், சரி இந்த ஒழுங்கு என்கிறது என்ன? வந்து வகுப்பில உட்காரும்போதே நான் உங்ககிட்டே அந்த ஒரு வார்த்தையை சொன்னேன். ஒழுங்கு என்பது அடுத்தவங்க நமக்குசொல்லித்தருவதாக இருக்கக்கூடாது. அப்படீங்கறதை நா சொன்னேனா? ரைட்

நல்லது, கெட்டது,  சரி, தப்பு எல்லாமே நமக்கு தெரியும். நாம் பிறந்த குழந்தையல்லவே. ஒரு மாதிரி நமக்கும் இந்தப் பிரபஞ்சத்துலே இருக்கக்கூடிய பல வஸ்துக்களுக்கும் தொடர்பு ஏற்பட்டு நாம் நினைக்கக்கூடிய அளவுலே சில காலங்கள் ஆனதுலே, எது நல்லது, எது கெட்டது, எது சரி, எது தப்பு அப்படீங்கறது இருந்து நமக்கு ஒரு மாதிரி தெரியுது, இதுல பார்த்தோம் அப்படீன்னா பொதுவான சரி தப்புகள். நமக்கு தெரியும்  அதே மாதிரி தனிப்பட்ட சரி தப்புகளும் நமக்கு தெரியணும்

இப்ப எப்படீன்னு பார்த்தீங்கன்னா ஒரு நல்ல ஆச்சார பிராமணன் இருந்து ஒரு சூத்திரன்கிட்டேயிருந்து ஒருடம்ளர் நீர்கூட வாங்கிக்குடிக்கமாட்டான். இது அவனைப் பொறுத்தவரைக்கும் இருக்கக்கூடிய சரி தப்பு. ஒரு சமுதாயத்தைப் பொறுத்தவரைக்கும், தீண்டத்தகாதது என்பது மாபெரும் தவறு.,

இந்த இரண்டுலேயும், இந்த இரண்டையும் நாமிருந்து அலசி ஆராய்ந்து நமக்கு நாமே தெரிந்து பழகிக்கொள்ளனும்.

வாழ்க்கை என்பது இருந்து வாழ்ந்து முடித்தல் அல்ல.  வாழ்வதற்கு உண்டான பயிற்சியைப் பெறுதல்தான் வாழ்க்கை

, நிச்சயமாக பயிற்சிக்கு உண்டானதுதான் வாழ்க்கையே அல்லாமல் வாழ்க்கை என்பது வாழ்வதற்கு அல்ல. எப்போது நீ வாழ்ந்ததாக அர்த்தம் என்றால் நீ புறப்பட்ட இடத்துக்கு எப்ப போகப்போகிறாயோ அப்பத்தான் நீ வாழ்ந்ததாக அர்த்தம். கிளம்பின இடத்தை ரீச் பண்றது.தான் வாழ்ததற்குண்டான அர்த்தம் 

From
http://divinepowerathma.com/blog/

நம்மள நாமே பார்ப்போமே 13

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா உடன் நடந்த உரையாடல்கள்
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 13

 அப்போ, அடிப்படையிலே உடலும், மனமும் இணைந்து நடக்கக்கூடிய கிரியைக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய, இருக்கவேண்டிய விஷயங்கள்லே இந்த யோகாவும், ஒண்ணு.

இப்போ 64 கலைகள் அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க அப்போ யோகாசனம் 64 அப்படி என்று நாம் வைத்துக்கொள்ளலாம். காலப்போக்குலே பரிணாமத்துலே பார்க்கும்போது அது 75,92,108,128 இப்பபோன இரண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு புஸ்தகத்தில் 762 விதமான யோகா இருப்பதை படித்தேன். நின்னா யோகா, அமர்ந்தா யோகா, படுத்தா யோகா 40டிகிரியிலே, இருந்தா 90டிகிரியிலே இருந்தா ஒரு யோகா. 120க்கு போயிட்டின்னா ஒரு யோகா. இது பூராவுமே டிகிரி கணக்கு. பான்பராக்கு போயிராதீங்க, ஏன்னா 40,60,90,120-ன்னு அவன் போயிட்டிருக்கான் இதெல்லாம் கோணத்தைப் பற்றிச் சொல்வது. 

             உடம்பை வளைக்கக்கூடியதோ, அல்லாட்டி நீ உட்கார்ந்திருப்பதைப் பத்தியோ நான் சொல்லிக்கொண்டுள்ளேன். ஏன்னா மனம் இருந்து பழக்கமானதைத்தான் இயற்கையாக பற்றும் 120-ன்னா உடனே அந்த பாட்டில் (சிரிப்பு) விஷயம் புரியாதவங்களுக்கு, பழக்கம் இல்லாதவங்களுக்கு இதென்ன 120 சொல்லிட்டிருக்காரு, ஓ இது ஒரு ஏங்கில்  (கோணம்) தானே.

விஷயம் இருந்து ஒன்னாகவும், பற்றக்கூடியதிலிருந்து அவங்கவங்க மனசு சம்பந்தமாகவும் இருக்கு. அப்ப விஷயத்தை தப்புன்னு சொல்ல முடியாதே. உங்களுடைய மனப்பழக்கம் சம்பந்தப்பட்ட விஷயமாகத் தான் அது நிக்குது. அதனால்தான் எல்லா வாத்தியார்களும் தோற்றாங்க. உலக ஞானிகள் எல்லோருமே தோற்கக் காரணம் என்னன்னா அவங்க சொன்னது பூரா உண்மை. ஆனா எடுத்தவன் அவன் லெவலுக்கு எடுத்துட்டுப்போயிட்டான். (சிரிப்பு) அப்ப என்ன ஆச்சுன்னா அந்த ஆள் சொன்ன பாடமே தப்புங்கற மாதிரி ஊருக்குள்ளே . ஆயிருச்சு 

From
http://divinepowerathma.com/blog/

நம்மள நாமே பார்க்கலாமே 12

 

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா உடன் நடந்த உரையாடல்கள்
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 12

 இப்ப உடலுக்கு சோப்பு போட்டு குளிச்சாச்சு, விதவிதமான சோப்பு போடறோம் ,நீர்விட்டு கழுவி உடலை சுத்தம் செய்கிறோம். ஆனால் குடலை எதை வைத்து கழுவிகிறோம்

அதனாலேதான் நாம் ‘ஆதி சக்தியை  வியக்கறோம்’ உள்ளுக்குள்ளே இருக்கக்கூடிய அழுக்கு இருந்து ஆசனவாய் மூலம் வெளியே போறதுக்கு ஒரு வழியையும் இயல்பா நார்மலா ஏதாச்சும் உள்ளே போய் இக்கட்டான சூழ்நிலை ஆயிடுச்சுன்னா அது பிரியறதுக்கு உண்டான மார்க்கத்தையும், எல்லா இடத்தையுமே கரெக்டா வைச்சிருக்கு.

முதல்ல  இந்த குடலை சுத்தம் பண்ணறதுக்கு உண்டான வேலை என்ன பண்ணனும்னு நமக்குத் தெரியுமா? தெரியாது. நாம் பைப்பை திருகுவோம் தண்ணீர்வரும் கழுவுவோம், எங்கே கழுவினோம்? குடலைக் கழுவினோமா? உடம்பைக்கழுவினோமா? “குடல்” மண்டைக்காஞ்சு போகும். நாம கழுவுறது

உடம்பைத்தானே கழுவுவோம். (சிரிப்பு) உடம்புக்குள்ளே இருக்கிறதை இருந்து உடம்பே கழுவித்தான் வெளியே எடுக்கனும். ஆனா, உடம்புக்குள்ளே இருக்கறதை உடம்பு கழுவறதுக்கு தடையா இருக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் இந்த 24 மணிநேரத்துலே நாம சந்தோஷமா செஞ்சுட்டு இருப்போம் இல்லையா?

நான் சொல்றது புரியுதா உங்களுக்கு? அப்போ இந்த உடம்புன்னு இருக்கக் கூடிய குடலை உள்ளுக்குள் இருக்கறதை கழுவனும்? எப்படி? சுத்தம் செய்வதற்குண்டான மார்க்கம் என்னன்னு கேட்டுட்டாங்க. சுத்தம் சோறுபோடும். உண்மை அது உள்ளே மட்டும் தானா? இல்ல வெளியே மட்டுந்தானா? உள்ளே தேவையில்லையா? உள்ளே தான் அதுவே சுத்தம் செய்கிறது. நம்முடைய இயக்கங்கள் பூராவும் எல்லாமே அது அதுதானே நடக்குது.  

              இப்ப உப்புத்தண்ணி வந்துட்டு இருக்குன்னு வையுங்களேன், ஒரு குழாயிலே தண்ணி வந்துட்டுருக்கு ஆனா உப்பு படிஞ்சிருக்கு இல்லையா? குழாய் அழுக்காகி விடுகிறது.

அத மாதிரி 35வயது, 40வயது, 45வயது உள்ளுக்குள் இருக்கிறது வேலை பண்ணிட்டேதான் இருக்கு. பாவம் என்னிக்காச்சும் ஒருநாள் அது இருந்து நின்றுவிடுகிறது. நின்றுவிட்டால், ஆஸ்பத்திரி போகனும், பணம் வேண்டும் இப்படி கேள்வி வரும். அதுக்கு நாம தினமும் ஒரு அரைமணி நேரம் அதே மாதிரிதான் இதையிதை சுத்தம் பண்றதுக்கு நம்மானலே மேஜரா எல்லா ரூமும் சுத்தம் பண்ணமுடியலேயப்பா, தப்பு இல்லை இருக்கிற இடத்துலே கொஞ்சமாச்சும் இப்ப சாணி போட்டு மொழுகவேண்டாம், சும்மா ஒரு துணியை எடுத்து சுத்தம் செய்தால் போதும், நான் ரொம்ப பீல் பண்ணப்போறேன்னு நீ தினமும் எல்லாம் வெள்ளையடிக்க வேண்டாம். எல்லாப் பொருளையும் எடுத்து வைச்சுட்டு நீ அதையெல்லாம் பண்ணாதே, இந்த அவசர யுகத்துலே உனக்கு இருக்கக்கூடிய பிக்கல் பிடுங்கல்லே அது கஷ்டம். ஆனா, உக்காரும் போது சைக்கிள் சீட்டைத் துடைக்கிறோமாஇல்லையா? அதே மாதிரியாச்சும் உடம்புக்குள்ளே ஏதாவது ஒரு 2,3 தட்டு தட்டலாம். அப்படித்தட்டறதுதான், அப்படித்ததட்டுவதற்கு உண்டான அந்த பாடம்தான் 

யோகா. 

நம்மள நாமே பார்க்கலாமே 11

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா உடன் நடந்த உரையாடல்கள்
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 11

தவம், என்பது தன்னுள் தான் அமிழ்ந்திருத்தல் மட்டுமே தவம். தன்னுள் தான் அமிழும் போது இந்த பிரபஞ்சத்தை இயக்குவிக்கக்கூடிய சக்திக்கு உண்டான

சக்தியிடம் நாம் தொடர்பு கொள்வதற்கு உண்டான ஒரு உணர்வு (ஆத்மா) நம்மிடம் இருந்து கிளம்பும். அது உடல் சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால், உடலும் ஒரு சம்பந்தம் ஏன்? இந்த உடல் இருக்கிறதனாலேதானே நாம பேசறோம். இந்த உடல் இருக்கிறதுனாலே தானே இதைப் பத்தியெல்லாம் சிந்திக்கிறோம். அப்போ எந்த அளவிற்கு நாம் இறைவனைப் பற்றியும், ஆன்மீகத்தைப் பற்றியும் நாம் சிந்திக்கின்றோமோ, அதே அளவு இந்த உடலைப்பற்றியும் சிந்தித்தே தீரனும். 

 உடலினுடைய தன்மைகளை ஒழுங்குபடுத்துவதற்கு உண்டான ‘கற்ப’ முறைகள், உணவு பழக்க வழக்கங்கள் அதற்கு அடுத்தபடியா பலம் அதிகம் தேவை என்பதற்கு வேண்டி

நாம் செய்யக்கூடிய காரியத்திற்கும், செய்யக்கூடிய செயலுக்கும், உகந்தபடி பலம் வேணும். அப்படிங்கறதுக்கு வேண்டிய சில பயிற்சி முறைகள், அது எதுல வரும்? யோகாவில் . 

யோகாசனம் என்பதுடைய அடிப்படையிலேயே உடலையும், மனதையும் இணைத்து செய்யக்கூடிய ஒரு வேலை

என்னன்னு பார்த்தீங்கன்னா, இது தனியாகவும், அது தனியாகவும் நிற்காது. யோகா ஆரம்பத்தில் பயிற்சி பெறும்போது இது தனியாவும், அது தனியாகவும் தான் தெரியும். ஆனால் அதனுள் இணைந்து உள்ளே போய் அப்படியே வெளியே வரும்போது பார்த்தோம்ன்னா, உடலும், மனமும் இணைந்து ஒன்றுக்கொன்று கைகோர்த்து இயல்பான சூழ்நிலையில் நடக்கக்கூடிய விஷயங்கள்.

நம்மள நாமே பார்ப்போமே 10

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா  உடன் நடந்த உரையாடல்கள் 
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 10

எப்போது நீங்கள் முதலாளியோ அப்போது உங்களுக்கு சுமை அதிகம். எப்போது நீங்கள் தொழிலாளியோ அப்போது உங்களுக்கு சுமை குறைவு. முதலாளிக்கு தொழில்பற்றிய எல்லா விஷயங்களும், தெரிந்தும் தெரிந்த வேலையில் ஈடுபட்டுக்கொண்டேயிருக்கனும். எப்போதும் கவனமாக இருக்கனும், கவனம் பிசகினால் அவனுக்கு நஷ்டம், கஷ்டம் வந்துரும். ஆனால் தொழிலாளிக்கு அப்படி இல்லை, அவன் அன்றைய வேலை என்னவோ சரியான டைம்க்குப் போய், சரியான நேரத்திற்கு வெளியே வந்துவிட்டான் என்றால் முடிந்தது. அன்றைய வேலை  அன்றோடு முடிந்தது. வேலையைப் பற்றிய கவனம் அவனுக்கு இருக்காது. அடுத்தநாள் சரியான நேரத்திற்கு போகனும் என்கிற நினைவுதான் வரும். ஆனால் முதலாளிக்கு அப்படி இல்லை எப்போ வேனாலும் கம்பெனிக்குப் போகலாம், வரலாம். ஆனால், எப்பொதும் கம்பெனியைப் பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கவேண்டும். அப்ப நாம என்ன பண்ணறோம்னா,

“நின் செயலால் அன்றி ஆவதொன்றில்லை”

அப்படிங்கும்போது நாம் ஓரிடத்தில் நம்மை வேலைக்காரன் ஆக்கிகிறோம்.அப்படி ஆக்கிட்டு நீ என்ன சொன்னாலும் நான் செய்யறேன், நீ ஒரு டிச்சுக்குள் போய்அதை சுத்தம் பண்ணனும்னு சொன்னா அந்த நாற்றம் அந்த அசுத்தம், அது எல்லாமே எம் மனசுலே இல்லாம நான் சுத்தம்  பண்ணிறேன். ஒரு நல்ல பஞ்சு மெத்தையிலே ஒரு நல்ல ஏசிரூம்மில் நீ இருன்னு சொன்னாலும் இருந்துக்கறேன். எனக்கு அதுவும் வேலைதான். இதுவும் வேலைதான். நீ என்ன வேலை தர்றியோ அதை நான் செய்துட்டுப்போறேன்.

வேலை செய்யறது மட்டுமே என்னோட வேலை அல்லாமல்  இந்த வேலை அந்த வேலை என்று தரம் பிரிப்பது அந்த வேலையினு டைய தன்மையில் என்னுடைய சிந்தனையில் செலுத்தி இது உயர்ந்தது, தாழ்ந்தது என்று நினைக்கிறது என்னுடைய வேலை இல்லையின்னு  சிந்திச்சிட்டோம்,அப்படீன்னா

 காலை எழுந்ததும் கண் விழிப்பதும், முகம் கழுவி, பல் தேய்ப்பது, குளிப்பது, உடை உடுத்துவது, சாப்பிடுவது முதல், இரவுபடுத்து உறங்குவது வரைக்கும், நாம் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து, உணர்ந்து செயலாக்கக்கூடிய பக்கவத்தை நாம் பெற்றொமென்றால் ரொம்ப இயல்பாகவும், ஈஸியாகவும் இருக்கும்

  நம்மை இயக்கக்கூடிய சக்திக்கும், நமக்கும் இருக்கக்கூடிய தொடர்பை அறிவதற்கு உண்டான ஒரு மார்க்கம் இருந்து இயல்பா ஏற்படும், அப்ப என்ன பண்ணனும்? பல் தேய்க்கும் போது நம்முடைய பல் இப்போது சுத்தம் ஆகிறது. ப்ரஸ்ஸில் பல் பட்டு பேஸ்ட் மூலமா சுத்தம் ஆகிறது. தேய்க்க, தேய்க்க சுத்தமாகிறது என்கிற சிந்தனையோடு அதோடு ஒன்றினால், நாம் ஒவ்வொரு காரியத்திலும் இப்படி செய்தால் நம்மால் ஈஸியாக தவம் செய்யமுடியும்.

நம்மள நாமே பார்ப்போமே 9

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா  உடன் நடந்த உரையாடல்கள்
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 9

உங்களுடைய இந்த ஞாபக சக்தி இந்த ஜன்மாவிலேயோ,
அல்லது இந்த 10, 20 வருஷ காலகட்டத்திலேயோ, நீங்கள் செய்யலை அப்படீன்னு நீங்க அடிச்சுப் பேசலாம். அது இப்ப இருக்கக்கூடிய நமது , நீதி மன்றங்களும் ஒப்புக்கொள்ளலாம். தவறு இல்லாத மனிதன், எந்த விதமான ஒரு குற்றமும் இவன் புரியவில்லை அப்படீங்கலாம். ஆனால் உங்களோடது இருந்து ஒரு பகுதிதானே, காலம் என்பது நாம் அறிந்து கொண்டிருக்கக்கூடிய வரையில் மட்டும் தானே. இது எத்தனை பெரிய தொடர்பு எந்த நிலையிலே நாம போயிட்டிருக்கோம்கிறது தெரியாம நாம அதை பத்தி எந்த முடிவுக்குமே வரமுடியாது. அப்ப அந்த நிலை க்கு  ஒரு பேரு தேவைப்பட்டது. அதுக்கிருந்து பெரியவங்க வைச்சதுதான் ஜன்மா. இது முதல் ஜன்மம். இது இரண்டாவது   ஜன்மம், இதற்கு அடுத்த ஜன்மாவில் ஏதாவது ஒரு ஜன்மத்தில் நீ இருந்து இந்த வினைகளை  செய்த காரணத்தினால் உனக்கு இந்த மாதிரி சூழ்நிலைகள் வந்து இருக்கும். ஏனென்றால் காலம் என்பது நமக்குத் தானே அல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய, இயக்கிக்கொண்டிருக்கக்கூடிய சக்திக்கு இல்லை.

அப்போ நம்மைப் பொறுத்தவரைக்கும் நாம் விரும்பக்கூடிய நிலையில் ஒரு சந்தோஷம் ஏற்பட்டாலோ, நாம் துக்கப்படக்கூடிய நிலையில் ஒருநிலை ஏற்பட்டாலும், அதற்கும், நமக்கும், சம்பந்தம் இல்லை, இந்தத் துன்பமாகட்டும், அந்த சந்தோஷமாகட்டும் இரண்டுமே மாயை, அப்படீன்னு பெரியவங்க  நமக்குத் தெளிவா சொல்லிட்டுப் போயிட்டாங்க.

சின்ன சின்ன வார்த்தைகளிலேயே அவங்க நமக்கு நிறைய விஷயங்களை சொல்லிட்டுப் போயிருக்காங்க. அந்த சின்ன, சின்ன வார்த்தைகள் என்பது பாடலாக மற்ற விஷயங்களாக நமக்கு கொடுத்து இருக்காங்க. நம்ம மனதில் பட்ட இப்போ

“நன்றேவரினும் தீதேவரினும் நின் செயலால் அன்றி ஆவது  யாதொன்றுமில்லை”.

அவங்க கொடுத்திருக்கக்கூடிய ஒரே விஷயம் இந்த ஒரு வரியை   மட்டும் நீங்க வைச்சு இந்த ஒருலைனுக்குள்ளேயே நீங்க உள்ளேபோய் இந்த ஒரு வரியிலேயே நீங்க சரியாக நின்னுட்டீங்க அப்படீன்னா உங்களுக்கு சுகம் என்பதும், துக்கம் என்பதும்இருக்கவே இருக்காது இது நிஜம்.