தியானம் செய்ய பல வழிகள் உண்டு

 

            தியானம் செய்ய பல வழிகள் உண்டு.  அதில் எளிமையானது நாம் நம் உள் சென்றுவரும் காற்றைச் சிந்தித்தல் அதன் வரவையும், போக்கையும், கவனித்துக்கொண்டிருத்தலும், தியானத்தின் ஒரு வகையே ஆகும்.  இது நமக்கு எண்ணிறைந்த பலன்களைத் தரும்.  நமது முன்னோர்கள் இதற்கு வைத்தப்பெயர் வாசியோகம். 

            போக்கும் வரவையும் அறியவேண்டும்.   மண்டல வீடுகள் கட்ட வேண்டும்.  ( சித்தர் பாடல்கள் ).  எப்போது நாம் நமக்குள் வந்து போகும் காற்றை சிந்திக்க தொடங்குகின்றோமோ, அப்போதிலிருந்து நமது உடல் 

செயல்,  சிந்தனை, முதலியவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதை அனுபவ ரீதியாய் உணரலாம்.  அதில் படிப்படியாக நிலைத்து நிற்கும்போது நமது வினைகளும், நமது கட்டுக்குள் வருவதையறிலாம்.  அது மட்டுமல்லாமல் தன்னைத்தான் அறியும் நிலையும் சித்திக்கும்.

            நாம் காற்றை சிந்திக்கும் போது தீய எண்ணங்கள் நம்மை அணுகாது. அகத்திலிருந்தும் சரி, புறத்திலிருந்தும் சரி நம்மை தீய எண்ணங்கள் தொல்லைப் படுத்தாது.

            காலை எழுந்தவுடன், நம்முள் சென்று வரும் காற்றைச் சிந்தித்து அதற்கு நமஸ்காரம் சொல்லும் பழக்கத்தை முதலில் கொண்டு வர முயற்ச்சி செய்யவும்.   இதை பயிற்ச்சியின் மூலம் எளிதில் அடையலாம்.

            காற்றாகி –  கனலாகி  என்னுள் இயங்கும் மாபெரும் சக்தியே என்று வணங்கி, நமது தேவைகளை முன்வைக்கவும்.  அது இயல்பாக நடைமுறைக்கு வருவதை அனுபவத்தில் காணலாம்.

            காற்று –  ஐந்து பேர் விளையாடும் மைதானம், யாரந்த ஐந்து பேர் என்றால், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களே, அந்த ஐவர். 

            இந்த ஐவரை நாம் மதிக்க, மதிக்க நம் நிலை உயர்ந்து எல்லோரும் நம்மை மதிப்பர்.  கிரகங்களால் உண்டாகும் தாக்கங்களைத் தாங்கும், வலிவு நமக்கு உண்டாகும்.  பல சமயங்களில் கிரகங்களின் தாக்குதலே நமக்கு இருக்காது.  ஏனென்றால்,  நாம் ஐவருடன் ஆழ்ந்த நட்பையும், மரியாதையையும் கொண்டிருப்பதால்.

            காற்றை கவனிக்கும் போது ஆகார வகைகளில் சில மாறுதல்களை செய்தோமானால் அதனுடன் உறவாட மேலும் சௌகரியமாய் இருக்கும். எப்படியென்றால், அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், மீதமுள்ள கால் பாகம் காற்று.  பயிற்சி கைவல்யம், ஆகும் போது கால் வயிறு ஆகாரம், கால் வயிறு நீர், அரைவயிறு காற்று என ஆகார நிலை மாறும்.  புலால் உணவை நீக்கவும்,  ( தாமஸ குணம் நம்மை அனுகாது ).

            இந்த வழிகளில் காற்றை சிந்தித்து பழகிய பின் ஓம் ஜெபத்தை ஆரம்பிக்கவும், அதன் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தி 1008 – ல் கொண்டுவந்து நிறுத்தவும்.  அதன் பயனை அனுபவத்தில் பார்க்கவும். 

            காற்றின் ஒட்டத்தைக் கொண்டு அதை மூன்று நிலைகளாக நாம் பகுக்கலாம்.

  1.  வருவதும் போவதும் தெரியாத நிலை ( உத்தமம் ).
  2. வருவதும் போவதும் தெரியும் நிலை. ( மத்திமம் ).
  3. வேகமாகவும், தடித்தும், கனத்தும் வந்து செல்லும் நிலை. ( அதமம் ).  அதமத்தில் காற்று போய் வருவது,  நம் வினைகளின் கனத்தை – அளவை, குறிப்பிடுவது, பயிற்சியின் மூலமும், முயற்சியின் மூலமும்  அதன் தன்மையை பஞ்சில் பட்ட நெருப்பு போல இல்லாததாக்கி விடலாம்.    

  இதை நீக்க என்ன வழிமுறை, தீர்வைக் கூறுகிறார்  சுத முனிவர்
சுத முனிவர், புனித நீரைக் கொண்டு வாசி மூலம்,  நம் வினைகளின் கனத்தை – அளவை தீர்க்கலாம் என்கிறார். 
1. கங்கா நதியை நாடி அதன் கரை ஓரம் நின்று, ‘‘இந்த உடல் பெரியோர்கள் வழியிலே எக் குற்றத்தை ஏற்று வந்திருந்தாலும் அக்குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும். எப்புண்ணியத்தை தேடி வந்திருந்தாலும் அப்புண்ணிய பலன் மேலோங்க வேண்டும்.’’ என சந்திர கலையில் சூரியன் உதிக்கும் திசையை நோக்கி நின்று பிரார்த்தித்து நதியில் மூழ்கவேண்டும். குளித்து முடித்து நீரில் நின்று அதே சூரியனைப் பார்த்து, 3 கவளம் நீர் எடுத்து அருந்தவும்.
பலன். பித்தத்தால் தேகத்தில் ஏற்பட்ட எரிச்சல் (மந்தாகினி) கர்ம வினையால் ஏற்பட்டது தீரும்.
பின்பு வைத்தியம் செய்ய பூரண குணமாகும். (இது போலத்தான் எல்லா புண்ணிய நதிகளுக்கும். 

2, எமனை விரட்டும் யமுனை நதி, கட்டுப்படாத காய்ச்சல், வெண் குஷ்டம், வெண்பாண்டு (புள்ளி) விந்து நஷ்டம். குணமாகும். 

3, காமதேனுவைப் போன்ற கோதவரி. 3 வித தோல் வியாதி (வாத, பித்தம், அரிப்பு ஆகியவை தீரும். 

4, துன்பத்தைப் போக்கும் துங்கபத்ரா.சய ரோகம் (டி.பி) எலும்புருக்கிநோய், வெப்ப நோய், விந்து நஷ்டம், கண் கோளாறு, இருமல், மூத்திர ரோகம், நுரையீரல் கோளாறு குணமாகும்.

5. நற்பணிக்கு நர்மதா. வாந்தி, விக்கல், காமாலை, வாதம் குணமாகும்.

6. சிறக்புமிக்க சிந்து. சித்தபிரமை, மயக்கம், புண், (தீராத ரணம்) வியர்வை, தாது நஷ்டம்,
குணம் ஆகும்.

7. வைகை.உடலில் ஏற்படும் வலிகள், சூலை குன்மம் உடல் குத்தல், வீக்கம் ஆகியவை தீரும். 

8. காவேரி.சகல தோஷங்களும் தீரும்.

9. தாமிரபரணி. சகல வித காய்ச்சல், பித்த தோஷம், சயம், சுவாசரோகம், சாதாரண டி.பி.தீரும்.

10. நதிகளின் சேர்க்கை.அகால மரணம், போன்ற இறப்புக் குற்றங்கள், விபத்து, மருத்துவத்தால் தீராத வியாதிகள் தீரும்.

தாமரை, அல்லிகுளம், அதிக குளிர்ச்சியான குளம் நீர் நிலையில் குளிப்பதால் சுவாச பேதம், எதிர்பாராத உடல் உபாதை, கடின தோல், முரட்டுத்தன்மை, இறைசக்திபலம் இல்லாத நிலை ஏற்படும்.

சந்திரன் தன் தோஷத்தை நிவர்த்திசெய்வது திங்களுரில் அருள்பாலிப்பது திருப்பதியில்.

குரு சாபம் தீர்த்தது ஆலங்குடியில் அருள்பாலிப்பது திருச்செந்தூரில்.

எல்லா கோவில்களிலும் ஞானம் உண்டு. அதற்குத்தான் உண்டாக்கப்பட்டது. நாம் தான் கோயில். 32 மூடிச்சு கொடி மரம். முதுகு முதலில் கொடி மரம் நமஸ்கரித்து பின்புதான் உள்ளே செல்ல வேண்டும். மூலஸ்தானம் ஞானம் மூலாக்கினி, ஞானத்தை அள்ளித் தருபவள் கோவை கோணியம்மன், மயிலையில் கர்ப்பகாம்பாள், காஞ்சியில் காமாட்சி. 

தந்தை — தந்தை வழிக்குற்றம், குழந்தை, குழந்தை வர்க்கக்குற்றம் சூரிய கலையில் சிந்தனை செய்ய வேண்டும். 

குழந்தை ஆரோக்கியமாக — புஷ்டியாக சந்திரகலையில் ஆகாரம் கொடுக்கவும். குழந்தை பெற்ற தாய் முதலில் சூரிய கலை பக்கம் பால் ஊட்டியிருந்தால் அக்குழந்தைக்கு ஞானம் விருத்தியாகும். சந்திரகலை சோற்றுப்பட்டாளம். காம இச்சை அதிகமாகும்.

நல்ல வாசி யோகி ஒருவன் தேகத்தைத் தொட்டாலே தேகம் புனிதமாகும்.

மருத்துவம்: . ஈனாத வாழைத்தண்டுச் சாறு எடுத்து சூரியகலையில் சிந்தனை பண்ணிகொடுக்க
சிறுநீரில் கல்லும் கரையும்.

பயிற்சி:  . நாக்கு நமக்கு வாகனம். நாக்கை குழாய்போல் மடித்து இழுத்து மூக்கு வழியாக வெளியேற்ற குளுமை தரும். 

சுவாசம் : நமக்குள் இயங்கக் கூடிய சவாசம் தாய், தந்தை, முன்னோர் பலத்தின் மூலம் செயல்படுகிறதா.,     இல்லை நம் பலத்தில் செயல்படுகிறதா
நமக்குத் தெரியாது. ஆனால் சுவாசத்துக்கு தெரியும். நாம் தெரிந்த கொள்ள 12 வருடம் யோகப் பயிற்சிக்குப் பின்புதான் உணர முடியும். கோள்களை வைத்து கர்மாவை வியாக்யானம் செய்ய முடியுமே தவிர அது பேசுமா., ‘‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்.’’ இதுதான் வாசி. 2 பேர் இணைவு இருக்க வேண்டும் சுவாசத்துக்கு தலை வணங்க வேண்டும். 

நமக்கு சந்திரகலை நடக்கும் போது ஒருவர் வந்து அமர்கிறார். நாம் காற்றை சிந்திக்க காற்று தடுமாறினால்….வந்தவர் மனக் குழப்பத்துடன் வந்துள்ளார் , தாய் வழி கர்மா–, 
நமக்கு சூரிய கலையில்….தந்தை வழி கர்மா, குழப்பம் சூரியகலை தந்தை வழி கர்மாவைக் காட்டும்.
காற்றை சிந்திப்பவனுக்கு செய்வினை, கண் திருஷ்டி வராது. நம்பிக்கை முக்கியம்.,
சூரிய கலை 2 மணி நேரம் 5 பங்கு, குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சனி.
குரு. தெய்வ குற்றம், குருசாபம், சிசு சாபம், அபார்ஷன், பிறர் பணம், சொத்தை களவாடியகுற்றம்.
சுக்கிரன். பெண்கள், காமம், ஏமாற்றியது, ஆடம்பரம், உல்லாசம்.
செவ்வாய். அடிதடி சண்டை, ரத்தம் பார்க்கும் அளவு.
புதன் . காற்றை சுவாச பந்தனம் செய்தல்.
சனி . வயது முதிர்ந்த நோயாளிகள் இறக்கும் நேரம். சரியான உதவி செய்தாதது, பலாத் காரம், கடத்தல் மிரட்டல்.

 

Physical form

We always try to see God in some abstruse, abstract way, not realising that most often, or perhaps always, God presents himself to us only in a form in which we can recognize Him. That is the human form. So when Masters come to us, it is the Almighty Himself who comes to us. It is in a form which we can recognize, in a form which we can learn to love, from which we can receive our teachings. So, that is another great function of Masters when they come to us in their physical form

திராட்சைப் பழம் பற்றிய குறிப்புகள்

திராட்சைப் பழத்தில் வைட்டமின் ” சி ” உள்ளது.  இது அரேபியா நாட்டில் இருந்து  பயிராகி பல நாடுகளுக்கு இறக்குமதியாகியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.  வேறு வகையான வைட்டமின்களும் உள்ளன.  இப்பொழுது  எல்லா நாடுகளிலும் வெகு சுலபமாக பயிராகிறது.   சாதாரணமாக கிடைக்கும் இந்தப் பழம் பல மருத்துவ குணம் நிறைந்து காணப்படுகிறது. 

                குறைவான இரத்தஅழுத்தம்,   அனிமியா குணம் அடையும்.  ( இரத்த சோகை ) .  நரம்புத் தளர்ச்சிக்கு மிகச் சிறந்த இயற்கை உணவு திராட்சை. வயிற்றில் உள்ள குடல் புண் ஆறவும் இந்தப் பழம் பெரிதும் உதவுகிது. மூட்டுவலி, இடுப்புவலி இவைகளுக்கும், காமாலை நோய் உள்ளவர்களுக்குத் திராட்சை சாறு மருந்தாகப் பயன்படுகிறது.  மலட்டுத் தன்மை நீங்கவும், ஆண்மைத் தன்மை வளரவும், திராட்சையைப் பெரும் அளவு பயன்படுத்துகின்றனர்.

                புற்றுநோய் நீங்க திராட்சை சாற்றை இயற்கை வைத்திய நிபுணர்கள் கொடுத்து வியாதிகளைக் குணப்படுத்தி உள்ளனர். சிலர் நடைமுறையில் பயன்படுத்தியும், குடல் புண்களை ஆற்றியுள்ளனர்.  தினமும் முடிந்த அளவு திராட்சையைப் பயன்படுத்தி உடல் நலத்தை நல்ல பேணி காணுங்கள்.

கிச்சிலிப்பழம் பற்றி குறிப்புகள்.

பொதுவாக கிச்சிலிப்பழத்தை யாரும் பயன்படுத்துவதில்லை.  காரணம் இது இனிப்புச் சுவை இல்லை.  கசப்புத் தன்மை அதிகம் கொண்டது.  மரத்திலேயே பழுத்தால்தான் சாப்பிடவும் முடியும்.  இது வளரத் தண்ணீர் அதிகம் தேவை.  இல்லையென்றால் காய்கள் வெம்பி கீழே விழுந்து விடும்.

                கிச்சிலிப் பழத்தில் ஊறுகாயும் போடுவது வழக்கம்.  மற்ற எந்த பழத்திலும் இல்லாத  மிக முக்கியமான வைட்டமின் ”  சி ”  பி”  என்ற வைட்டமின் அதிகம் உள்ளது.  இந்த ” பி ” என்ற வைட்டமின் உடலில் ஓடும் ” தந்துகிகளை ”  இரத்தம் ஒட பயன்படும் குழாய்களுக்கு தந்துகிகள் என்று பெயர்.  ஆரோக்கிய நிலையில் அதிக ரத்தம் தந்துகிகளில் படியாமல் பாதுகாக்கப் பயன்படுகிறது.

                எலுமிச்சம் பழத்தினால் என்ன  வியாதிகள் குணமாகுமோ அந்த வியாதிகள் அனைத்தும் இதில் குணமாகும்.   நாம் சாப்பிடும் உணவுகளில் இரும்புச் சத்தைக் குடலில் உறிஞ்சுவதற்கு ” சி ” வைட்டமின் மிகமிகத் தேவை.   புற்று நோயைக் குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.  இதன் வகைகளாக சாத்துக்குடி, ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு போன்றவகைளில் முடிந்த அளவிற்கு நாம் சேர்த்துக் கொள்வது ஆரோக்கிய வாழ்விற்கு அடிகோலும்.

 

 

ஆரஞ்சுப்பழம் பற்றிய குறிப்புகள்

ஆரஞ்சுப் பழத்தின் தோல் மஞ்சள் கலந்து சிவப்பாகத் தோற்றமளிக்கும்.  இந்தப் பழத்தின் சுவை இனிப்பு, புளிப்பு, இரண்டும் கலந்தும் இருக்கும். 75 விழுக்காடு தண்ணீர் கொண்ட பழத்தில் நிறையத் தாது உப்புகளும், வைட்டமின்களும் உள்ளன.  உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.  இந்தப் பழத்திற்கு இன்னொரு பெயரும் உண்டு.  கமலா ஆரஞ்சு என்றும் கூறுவர்.  இது கிச்சிலிப் பழ வகையைச் சேர்ந்தது.  தோலை உரித்தால் தோலின் மேல் பகுதியில் இருந்து சாறு வெளிவரும்.  அந்தச் சாறும் மருத்துவ இயல்பு கொண்டது.  அந்தச் சாற்றைத் தலைவலிக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.  அந்தச் சாற்றை கண்களிலும் போடலாம் எரியும், ஆனால் கண்ணுக்கு ரொம்பவும் நல்லது.

                பற்கள், எலும்புகள் பல்லீறுகள் வியாதிகளுக்கு இது நல்லமருந்து.  எலும்புருக்கி நோயைத் தடுக்கும்.  பல்லில் வரும் ரத்தம் ஈறு வீங்குதலுக்கு இது நல்ல பலன் கொடுக்கும்.  ஸ்கர்வி நோய்க்கு இது நல்ல மருந்து, புற்று நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.  இந்த பழத்தை தினமும் உட்கொள்ளலாம்,  குறிப்பாக குழந்தைகள் உட்கொள்வது நல்லது.

                சிவசைலம் என்ற இடத்தில் உள்ள நல்வாழ்வு ஆசிரமத்தில்  இயற்கை உணவு ஆராய்ச்சி மையம் உள்ளது.  இங்கு புற்று நோய்க் குறிப்பாகத் தொண்டையில் உள்ள புற்று நோய்க்கு ஆரஞ்சுச் சாற்றையே முக்கிய இயற்கை உணவாக அளித்துக் குணப்படுத்தி உள்ளனர்.  அதே போன்று பல வியாதிகளைக் குணப்படுத்த ஆரஞ்சுச் சாற்றைப் பயன்படுத்துகின்றனர்.

                அலோபதி மருத்துவர்களும், நோயாளிகளை ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிடும்படி பரிந்துரை செய்கின்றனர்.   கோடையில் அதிகமாக ஆரஞ்சுப்பழத்தைச் சாப்பிடப் பழக வேண்டும்.  உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது.  பல வியாதிகளைக் குணப்படுத்தும் ஆரஞ்சு நம் வாழ்க்கையிலும், உணவிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பூரம் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள்

பிரியமாக பேசுபவன், சிவந்த கண்களையுடையவன், கஷ்டப்பட்டு சம்பாதிப்பவன், பின்வரும் காரியங்களை அறிபவன், பலவிதமான தொழில்களை செய்பவன், தாசிகளை மதனலீலையால் வெற்றி கொள்பவன், தனவான்,.

                பூரம் முதல் பாதம் :

சரீர காந்தியுடையவன், தானம் செய்ப்பட்டவன், தர்ம சாஸ்த்திரம் அறிபவன், அரசு துறையில் பணித்திருப்பவன், எந்தவிதமான ஆபத்திற்கும் முன்னே நின்று தலையிடும் வீரம் உடையவன்.

                பூரம் இரண்டாம் பாதம் :

சற்குணம் உடையவன், வியாபார செய்து ஜீவிப்பவன், குடும்பத்தின் மேல் பிரியமுடையவன், எதிலும் சந்தேகம் உடையவன். பிறருக்கு உதவுவதில் சந்தோஷமுடையவன்,  அதிக அளவு யாத்திரை செய்பவன்,

                பூரம் மூன்றாம் பாதம் :

 வலிமையுடையவன், பெருமையும், கீர்த்தியையும் உடையவன், எல்லோரையும் காக்க ஆசைப்படுபவன், அதிக புகழுடையவன், நம்பி வந்தவரை எந்த சந்தர்ப்பத்திலும் கைவிடாதவன்.

                பூரம் நான்காம் பாதம் :

அடுத்தவரால் ஏமாறுபவர், மனதில் நீங்காத துயரம் உடையவர், தீய தொழில் புரிபவன், ஆன்றோரையும், சான்றோரையும் மதிக்காதவன்.  துரோகி, குலத்திற்கு புறம்பான செயல் செய்பவன்.  பிற தாரங்களை இச்சிப்பவன்.  அதிக குழந்தையுடையவன். தனம் அதிகம் இல்லாதவன்.  அடிமையாய் வாழ்நாளை கழிப்பவன்.

வாழைப் பழம் பற்றிய பயன்கள்

வாழைப்பழத்தைப் பற்றி நிறையவே சொல்லலாம்.  நல்லதுக்கும், கெட்டதுக்கும் முக்கியப் பொருளாக விளங்குகிறது.   வைட்டமின் நிறைந்த மிக சக்தி வாய்ந்த பழம் வாழை.  இதில் பல்வேறு வகைகள் உள்ளன. பூவன் பழம், நேந்திரம் பழம், ரஸ்தாலி, கற்பூர வாழை, மலைப் பழம், செவ்வாழை, மோரீஸ், நாட்டுப் பழம், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். 

                எல்லாப்பழங்களிலும் சர்க்கரைச் சத்தும், பி, டி, ஏ இப்படிச் சில வைட்டமின்கள் குறைந்த அளவு இருந்தாலும் மாவுச் சத்து அதிகமாக உள்ளது.  மலம் இளக்கியாக இருக்கும் இந்த வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் மென்மையான தன்மையுடையதாக நம்பப்படுகிறது. இரவில் எல்லோரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

                அம்மை போன்ற வியாதிகளுக்கு பேயன் பழம் சாப்பிடலாம்.  பூவன் பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.  பச்சைப்பழம் உடல்உஷ்ணத்தை குறைக்கும். மெலிந்து காணப்படுபவர்கள் மலைப்பழம் சாப்பிடலாம், இதய நோய்க்கு இது மிகவும் நல்லது. ரஸ்தாளி ஆரோக்கியத்திற்கு நல்லது.  கற்பூர வாழை உடல் அழகாக இருக்க உதவும்.  அன்றாடம் ஏதாவது ஒரு பழத்தை மாற்றி மாற்றி சாப்பிட்டு வரலாம்.

மகம் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள்

ஐந்து நட்சத்திரங்கள் ஒன்று கூடி வீடு போல வான வெளியில் காட்சியளிக்கும். இதக் அதிபதி கேது,  அக்னி மண்டலம், சுப நட்சத்திர வரிசையில் அமையும்.  அதிதேவதை சுக்கிரன், தாமஸ கணம், ராட்சச கணம்.  ஆண் நட்சத்திரம்.

  எல்லோருக்கும் உதவக்கூடியர்கள், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பர், சுய கௌரவம் அதிகம் பாராட்டுவர், உறவினர்களையும், மற்றவர்களையும் அரவணைத்துச் செல்வர்.  நிர்வாகத்திறன்இருக்கும், அளவுக்கு மீறிய ஆசையிருக்கும்,¢ 

                மகம் முதல் பாதம் :

மனைவியிடம் பிரியமாக நடந்து கொள்வர், சிற்பம், ஒவியம் போன்ற கலைகளில் நாட்டம் உடையவர்.  அரசரைப் போல் செல்வாக்கு உள்ளவர்.  அற்ப நித்திரையுடையவன், வலது பக்கம் மரு உடையவன், அளவாக பேசுபவன்.

                மகம் இரண்டாம் பாதம் :

பல நூல்களைப் படித்தவர், விவேகி, சாதுர்யபேச்சுமிக்கவர்.  தந்தை மேல் மிகுந்த பிரியமும், மரியாதையும் உடையவர்.  மூரக்கன். முரட்டு சுபாவம் உள்ளவன்,

                மகம் மூன்றாம் பாதம் :

எதையும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உடையவர், சாந்தகுணம் உடையவர், வைராக்கியம் உடையவர். தாது சம்பந்தப்பட்ட நோய்களையுடையவர்,  தீர்த்த யாத்திரையில் விருப்பம் உடையவர், குடும்பத்தின் மேல் பற்றும் பாசமும் உள்ளவர். குறைந்த அளவு குழந்தையுடையவர்.

                மகம் நான்காம் பாதம் :

 சுய கௌரவம் அதிகம் பாராட்டுவர், பொறாமையுடையவர், நன்றியைஉடனே மறப்பவர், மனசஞ்சலம் உடையவர், மனைவி சொல்லோ மந்திரம் என்று இருப்பர், தோல் சம்பந்தப்பட்ட நோய் உடையவர், எதையும் தீர்க்கமாக ஆலோசிக்காமல் செய்பவர், எந்த பிரச்சனைக்கும் உடனடி தீர்வை எதிர்பார்ப்பர். 

கொய்யாப்பழம் பற்றிய சில குறிப்புகள்

கொய்யாவில் வைட்டமின் ” சி ” உள்ளது.  கொய்யாவில் பச்சை நிறம், மஞ்சள் கலந்த நிறமும் உண்டு.  மஞ்சள் நிறத்தில் வைட்டமின்

” ஏ ” சக்தி உள்ளது.  இந்தப் பழம் வயது வித்தியாசமில்லாமல் சாப்பிடலாம்.  சர்க்கரை நோய் உள்ளவர்கள் பச்சைகாயாக சாப்பிட நல்லது.   மாலையில் கொய்யாப்பழத்தை சாப்பிட மிகவும் நல்லது.

                மலம் இலக்கும் தன்மை கொண்டது.  பற்களுக்கும், எலும்புகளுக்கும்  உள்ள வியாதிகள் குணம் உண்டாகும்.  டிப்திரியா, நிமோனியா, என்புருக்கி,  முதலிய தொற்று வியாதிகளை எதிர்த்து வரவிடாமல் செய்யும் குணம் உண்டு.  ஸ்கர்வி நோய்க்கு நல்ல மருந்து, இரும்புச் சத்த குடலில் உறிஞ்சப்படுவதற்கு இந்த ” சி ” வைட்டமின் நிறைந்த கொய்யா பெரும் அளவு உபயோகப்படுகிறது.

                கொய்யாவின் நிறத்துக்கேற்ப அதன் சக்துக்களும் மாறுபடும்.  பொதுவான கருத்து.  இந்த பழத்தின் தன்மைகள், சத்துக்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

ஆயில்ய நட்சத்திரத்தைப் பற்றி சில குறிப்புகள்.

                ஆறு நட்சத்திரங்கள் கூடி அம்மி அல்லது குயவன் சக்கரம் போல் வானவெளியில் தென்படும். இதன் அதிபதி புதன்.  பூராடம் இதன் பாகை நட்சத்திரம்.  வாயு மண்டலம்  அசுப நட்சத்திர வரிசையில் அமையும். ஆதிசேஷன் இதன் அதி தெய்வம்.  சாத்வீக குணம்.  ராட்சச கணம்.  பெண் நட்சத்திரம். 

                பேச்சு சாமார்த்தியம் நிறைய இருக்கும்.  பெரிய மனிதர்களின் ஆதரவும், நட்பும், பெற்றவர்கள்.  பிரயாணம் அதிகம் உடையவர்கள்.  மிக சிறிய விஷயத்திற்கும் விரோதம் பாராட்டுவார்கள். 

                ஆயில்யம் முதல் பாதம் :

  ஞானம் உடையவர்.  அஞ்சாத நெஞ்சுடையவர், பிறரை வஞ்சித்துப் பொருள் தேடுபவர், செல்வந்தன், பெண், பூமி இவற்றில் மிக்க ஆசையுடையவன்.  பல தொழில் செய்பவன்.

                ஆயில்யம் இரண்டாம் பாதம் :

  தீய நடையுடையவன், பாவகாரியங் களை தயங்காமல் செய்பவன், குரூர புத்தியுடையவன்.  தீயவர்களின் சகவாசத்தால் பொருள் தேடுபவன். 

                ஆயில்யம் மூன்றாம் பாதம் :

அதிகமாக பொய்பேசுபவர்கள்.  நல்லதை காட்டிலும் தீயதே இவர்களை ஈர்க்கும்.  யாருடைய புத்திமதியும் இவர்களிடம் செல்லாது.  சோம்பலுடையவன்.  பெண்களை துன்புறுத்துபுவன். 

                ஆயில்யம் நான்காம் பாதம் :

தாய், தந்தையருக்கு ஆகாது.  பிறர் பொருளை அபகரிப்பவர்.  நீசப்பெண் சேர்க்கையுடையவன், தீயவர்களோடு நட்பாயிருப்பான்.  பாவச் செயல்களை துணிந்து செய்வான்.  தரகு, விற்பனையாளர்கள், செய்தித்துறை, பத்திரிக்கைதுறை, சினிமாத்துறை, இவர்களக்கு மிகவும் ஏற்றது.