கோள்களின் கோலாட்டம் -1.13 நவகோள்களின் நக்ஷத்ர எதிரடை சாதக அட்டவினை

செவ்வாயின்  எதிரடையான  நட்சத்திரங்கள் 

செவ்வாய் நின்ற நட்சத்திரம் 1 2 3 4 5
அஸ்வினி கார்த்திகை புனர்பூசம் மகம் சுவாதி உத்திராடம்
பரணி ரோகிணி பூசம் பூரம் விசாகம் திருவோணம்
கார்த்திகை மிருகஷேரிஷம் ஆயில்யம் உத்திரம் அனுஷம் அவிட்டம்
ரோகிணி திருவாதிரை மகம் அஸ்தம் கேட்டை சதயம்
மிருகஷேரிஷம் புனர்பூசம் பூரம் சித்திரை மூலம் பூரோட்டாதி
திருவாதிரை பூசம் உத்திரம் சுவாதி பூராடம் உத்திரட்டாதி
புனர்பூசம் ஆயில்யம் அஸ்தம் விசாகம் உத்திராடம் ரேவதி
பூசம் மகம் சித்திரை அனுஷம் திருவோணம் அஸ்வினி
ஆயில்யம் பூரம் சுவாதி கேட்டை அவிட்டம் பரணி
மகம் உத்திரம் விசாகம் மூலம் சதயம் கார்த்திகை
பூரம் அஸ்தம் அனுஷம் பூராடம் பூரோட்டாதி ரோகிணி
உத்திரம் சித்திரை கேட்டை உத்திராடம் உத்திரட்டாதி மிருகஷேரிஷம்
அஸ்தம் சுவாதி மூலம் திருவோணம் ரேவதி திருவாதிரை
சித்திரை விசாகம் பூராடம் அவிட்டம் அஸ்வினி புனர்பூசம்
சுவாதி அனுஷம் உத்திராடம் சதயம் பரணி பூசம்
விசாகம் கேட்டை திருவோணம் பூரோட்டாதி கார்த்திகை ஆயில்யம்
அனுஷம் மூலம் அவிட்டம் உத்திரட்டாதி ரோகிணி மகம்
கேட்டை பூராடம் சதயம் ரேவதி மிருகஷேரிஷம் பூரம்
மூலம் உத்திராடம் பூரோட்டாதி அஸ்வினி திருவாதிரை உத்திரம்
பூராடம் திருவோணம் உத்திரட்டாதி பரணி புனர்பூசம் அஸ்தம்
உத்திராடம் அவிட்டம் ரேவதி கார்த்திகை பூசம் சித்திரை
திருவோணம் சதயம் அஸ்வினி ரோகிணி ஆயில்யம் சுவாதி
அவிட்டம் பூரோட்டாதி பரணி மிருகஷேரிஷம் மகம் விசாகம்
சதயம் உத்திரட்டாதி கார்த்திகை திருவாதிரை பூரம் அனுஷம்
பூரோட்டாதி ரேவதி ரோகிணி புனர்பூசம் உத்திரம் கேட்டை
உத்திரட்டாதி அஸ்வினி மிருகஷேரிஷம் பூசம் அஸ்தம் மூலம்
ரேவதி பரணி திருவாதிரை ஆயில்யம் சித்திரை பூராடம்
 

 

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் எந்த நட்சத்திரத்தை பெற்றுள்ளதோ அந்த நட்சத்திரத்தில் இருந்து எண்ணி பார்க்கும்போது எதிரிடையான நட்சத்திரங்கள் ஏதவாது ஒன்றில் ஜென்ம நட்சத்திரம் அமையுமானால் ஜாதகருக்கு செவ்வாயால் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது.
செவ்வாயின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்னம் அமைவது அந்த ஜாதகரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் அமையாது.
செவ்வாய் அவரவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு அதிபதியாய் நிற்கின்றதோ அந்த பாவாதிபதி செவ்வாயின் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் அந்த பாவாதிபதி செவ்வாயின் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் அந்த பாவத்திற்கு செவ்வாய் மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் கிடைக்காது.

கோள்களின் கோலாட்டம் – 1.12 நட்சத்திர பாவ ஆய்வு

45

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.              

சூரியன் நின்றால்:-  தந்தை வகை ஆதரவு சுகம் சொத்து வகைகள் கிடைப்பது அரிது.   அரசாங்க வகையால் தொல்லைகள் கண், எலும்புகளில் பாதிப்பு அரசு வகை தொழில் இல்லாமை நீடிக்காமை.

 

சந்திரன் நின்றால் :- தாய் வகை ஆதரவு, சுகம் சொத்து வகைகள் கிடைப்பது அரிது.  மனக்கலக்கம், பயம், உடல் பாதிப்பு, ஜலகண்டம், தொழில் வகையில் பல துன்பங்கள், எதிலும் பிடிப்பற்ற நிலை.

 35

செவ்வாய்நின்றால்:- சகோதரர்கள் இல்லாமை, ஒற்றுமைக்குறைவு, பிரிந்து வாழ்வது, இரத்த சம்பந்தமான நோய் தொல்லைகள், நிலம், விவசாய விசயங்களின் பாதிப்பு எதிர்பாராத விபத்து நெருப்பால் பயம்.

 

புதன் நின்றால்:-  மாமன் வர்க நாசம், அவர்களால் நன்மை இல்லாத நிலை கல்வியில் தடை, கற்ற கல்வி கைகொடுக்காத சூழ்நிலை, நரம்பு, தோல் சம்பந்தமான நோய் பயம், தொழில் வியாபாரங்களால் பாதிப்பு.

 33

குரு நின்றால்:- குழந்தைகள் பாதிப்பு அவர்களால் நன்மை இல்லாமை அவர்களால் அவமானம், பொருளாதாரத்தில் சீர்குலைவு, அடிக்கடி பணத்தட்டுப்பாடு, மூளை வளர்ச்சி குறைவு, உயர்ந்த பதவிகளில் வீழ்ச்சி இறக்கம்.

 

சுக்கிரன் நின்றால்:- இல்லற வாழ்வு சிறப்பில்லாமை, கணவன், மனைவி ஒற்றுமைக் குறைவு, விவாக தடை, தாய் வகை பாதிப்பு, மேக ரோகங்கள், பெண்கள் கையில் அபகீர்த்தி பாதிப்பு, துர்நடத்தையால் அவமானம்.

 

சனி நின்றால்:- நீண்ட ஆயுளுக்கு பங்கம் கடுமையான சோதனைகளுக்கு ஆளாகுதல், தோல் – வாதம் போன்ற நோய் தொல்லை சிறை பயம் அபராதம், தகாத நடவடிக்கைகளால் அவமானம் எதிரிகளால் வரும் ஆபத்துக்கள்.

ராகு, கேது நின்றால்:-தாய், தந்தை வர்காதிகளுக்கு குற்றம், தரித்திர தன்மை, பிற மதத்தினரால் பயம், துர்தேவதா தேவதைகளால் பாதிப்பு, மது, மங்கை போன்ற ஈடுபாடுகள் அதிகம்.  வெளியிடங்களில் ஏற்படும் அவமானம்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு.  

சிம்ம லக்னம்

Simmam

                லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற

                நட்சத்திரத்தில் எதிரிடையான நட்சத்திரத்தில்.

 

  சந்திரன் நின்றால்:- தாய், தாய் வகை ஒற்றுமையில் குறைவு, பிரயாணத்தில் பாதிப்பு, இடது கண் கோளாறு, அரசு வகை தொழில் தொடர்புகள் பாதிப்பு, குடும்ப முன்னேற்றம் தடைபடுதல் செய்யும் காரியங்கள் வெற்றி பெறாநிலை, நிலம், வீடு, வாகனங்களால் செலவீனம் பாதிப்பு, குழந்தைகளுக்கு எதிர்பாராத ஆபத்து, ஆயுள்பயம், நாஸ்தீக தன்மை, எதிரிகள் வீழ்ச்சி, கணன், மனைவி விரோத நிலை.

செவ்வாய் நின்றால்:- உடன் பிறப்புக்களால் வரும் தீங்கு, ரத்த சம்பந்தமான பாதிப்புகள், வீண் சண்டை, நிலை, வீடு, வாகன விசயமின்மை திடீர் வீழ்ச்சி, தாய் – தந்தை வகை சொத்துக்கள் இழப்பு, பூர்வீக சொத்து விரையம், எதிரிகள் பலம் பெறுதல்.

 புதன் நின்றால்:- பொருளாதார வீழ்ச்சி, எத்தொழிலும் விருத்தயாகாமை, லாபம் பெற முடியாமை, மூத்த சகோதர வகை பாதிப்புகள், மாமன் வகை குற்றங்கள், உடன் பிறப்பின் பாக்கியங்களுக்கு பங்கம், விரையம், தாய்க்கு ஆயுள் பயம், புத்திர புத்திரிகளின் இல்லறம் தொழில் பாதிப்புகள் எதிரிகளுக்கு ஏற்படும் பங்கம் மனைவிக்கு அல்லது கணவனுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்.

குரு நின்றால்:-  குழந்தைகளுக்கு எதிர்பாராத வகையில் பாதிப்புகள், பூர்வீக சொத்தால் வரும் தொல்லைகள் அச்சொத்து விருத்தியில்லாமை, தெய்வீக விசயங்களால் வரும் இடையூறுகள் மனக்குழப்பம் கௌரவ குறைவு அதிர்ஷ்டமில்லாத நிலை, விபத்துக்களால் ஏற்படும் செலவீனம், பயம் தந்தை இழப்பு, அவருக்கு ஏற்படும் பாதிப்புகள் தொழில் முடக்கம்.

சுக்கிரன் நின்றால்:- பெண்கள் வகையில் ஏற்படும் அவமானம், காதல் தோல்வி, இல்லற வாழ்வு பாதிப்பு, வீரிய பலம் இல்லாத நிலை, தொழில் வகையில் ஏற்படும் தடைகள், குடும்பத்தில் உள்ள பொருள்கள் உடமைகளுக்கு சேதம், உடன் பிறப்பிற்கு ஏற்படும் கணடாதி தோஷங்கள், பிரயாணங்களில் வரும் பயம், நிலம், வீடு வாகன இழப்பு குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு, மனைவி அல்லது கணவனின் பாக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்பு, ஜாதகனுக்கு எதிர்பாராமல் வரும் ஆயுள் பயம்.

 சனி நின்றால்:-  கணவன், மனைவி ஒற்றுமையில் பாதிப்பு, மனைவி வகையினரின் எதிர்ப்புகள், வாத வாயு ரோகங்கள், உடல் ஹீனம், தேக பங்கம், தந்தையின் தொழில் ஜீவனம் பாதிப்பு, உடன் பிறப்பிற்கு புத்திர தோஷம், பூர்வீக சொத்தால் பாதிப்பு, நிலம், வீடு, வாகன விசயங்களால் பொருள் இழப்பு, குழந்தைகளின் முன்னேற்றம் தடைபடுதல், தொழிலில் தடை.

 ராக நின்றால்:-  பொருளாதார பாதிப்பு, பிற மதத்தினரால் வரும் கெடுதல் விஷபயம், மாந்திரீக தொல்லை அறுவறுக்கத் தக்க நோய்கள் மன பேதம், செயற்கை மரணம்.

கேது நின்றால்:- நாஸ்தீக தன்மை.  பிற மதத்தினால் வரும் பயம் தொல்லைகள், விஷ ஜந்துக்களால் வரும் ஆபத்து, துர்தேவதா சேஷ்டைகளால் வரும் பாதிப்பு கெட்ட ஆவிகளின் தொல்லை.

கடக  லக்னம்.

kadakam

                லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.

 சூரியன் இருந்தால்:- பிதா தனகுறைவு, கண் கோளாறுகளால் பாதிப்பு, தந்தை வழி குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடும் சொல்லால் அவமானம், குழந்தைகளால் ஈமக்கிரிகை செய்ய முடியாத நிலை, தாய் சுகம் கெடுதல், மனைவிக்கு இரகசிய நோய்.

செவ்வாய் இருந்தால்:-புத்திரர் அற்பம், புத்தி சுவாதினம் அற்ற குழந்தைகள், பாக்கியம் பிரயோசனப்படாமல் போகுதல், இரத்த காயம், விபத்து, தொழிலில் மறைமுக எதிரிகளால் இழப்பு, அவமானம், நஷ்டம், சகோதர பலம் குறைதல்.

புதன்இருந்தால்:-அம்மான்வர்க்கத்தாருக்கு பிரயோசனம் இல்லாமை சகோதரர்கள் பிரிந்திருத்தல் நாடோடி தன் ஊரைவிட்டு வெளியேறுதல், சுயஸ்தானத்தில் தங்காமை, வித்தை பங்கம், இரகசிய மனவருத்தல், நிலையான புத்தி இல்லாமை, எப்போதும் சுயநலக்காரர்களால் சூழ்ந்திருத்தல்.

குரு இருந்தால்:-எதிரிகளால் அபாயம், மறைமுக நோய், பாக்கியம் இல்லாததிருத்தல், கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத நிலை, கடன் தொல்லை பிதா ஆதரவு இல்லாதிருத்தல், மேலோர் சாபம்.

சுக்கிரன் நின்றால்:-களத்திர சுகம் கிட்டாமை, இரகசிய தொடர்பு அதனால் அவமானம், கீர்த்தி பங்கம், மாதா சுகக் குறைவு, மாதவின் ஆதரவு இல்லாதிருத்தல், வீடு நிலம், வாகனங்களால் கண்டம், நஷ்டம் எப்போதும் சுகக்கேடு.

சனி இருந்தால்:-ஆயுள் பீதி, அங்க ஹீனம், மரணத்திற்கு ஒப்பான வேதனையை நித்தமும் அனுபவித்தல், மனைவியை பிறர் கொண்டு செல்லல், திருமணத்தினால் அவமான, இல்லறத்தினால் சுகம் கிட்டாமை.

ராகு இருந்தால்:-பாட்டன் வகையில் இலாபின்மை, மருந்து மாந்தீரிகத்தால் பீடை, முன்ஜென்மம் தோஷம், அதனால் ஏற்படும் விவகாரம், கோணல் புத்தி, சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால்:-சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

மேச, விருச்சிக லக்னம்:-

com

 

லக்கினாதிபதி செவ்வாய் ஆகி அவர் இருந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில்

    சூரியன் இருந்தால்:- புத்திரர்களால் இலாபமின்மை தேவையான நேரத்தில் புத்தி செயல்படாமை, செய் தொழில் நஷ்டம், விரும்பாத தொழில், ராஜ்ஜிய விரோதம், அரசாங்க  சம்பந்தப்பட்ட செயல்களில் அவமானம், தனித்திருத்தல், குடியினால் மனம் பேதலித்தல்.

சந்திரன் இருந்தால்:- மாதா குண தோஷம், தந்தைக்கு இரண்டு தார நிலை உடல்நல குறைவினால் தாயின் மனோநிலை சரியில்லாமை, ஊன, ஈன பெண்களின் தொடர்பு தன் நிலைக்கு ஒவ்வாத காரியத்தை செய்தல்.

 புதன் இருந்தால்:- கண்டம், விபத்து, சகோதர ஒற்றுமை குறைவு, புத்திரர் கலகம், அற்பம், அம்மான் வர்க்கத்தாருக்கு கெடுதல், தனித்திருத்தல், முறையற்ற வழியில் வந்த லாபத்தினால் வந்த கெடுதி.

குரு இருந்தால்:- வித்தை குறைவு, அன்னிய தேச வாசம், பாக்கிய நஷ்டம், தனம் எப்போதும் நில்லாமை, குடும்பத்தில் கோளாறு, பிராமண சாபம், கையாடல் மோசடி.

சுக்கிரன் நின்றால்:- ஒழுக்கம், குறைவுள்ள களத்திரம், அதனால் நஷ்டம், தம் எப்போதும் நில்லாமை, குடும்பத்தில் கோளாறு, பிராமண சாபம், கையாடல் மோசடி.

சனி இருந்தால்:- எக்காரியத்திலும் லாபமின்மை, ஈனத்தொழில், அதிக பிரயாசை உழைப்பினால் நஷ்டம், சகோதரர்களால் பீடை கலக்கம், கீழ் சாதியினரால் அவமானம், கண்டம் விபத்து ஙிணீநீளீ றிணீவீஸீ  அதனால் ஏற்படும் கோளாறுகள்.

 ராகு இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

 கேது இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

மிதுன ,கன்னி லக்கினம்.

comm1

 

    லக்கினாதிபதி, புதனாகி அவர் இருந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில்

   சூரியன் இருந்தால்:- அற்ப சகோதரம் , சகோதர ஒற்றுமை குறைவு, அரசாங்க அவமரியாதை சகோதர பிரிவு தந்தையின் ஆதரவு இல்லாதிருத்தல், தந்தையின் செல்வ நிலை நாளுக்கு நாள் தேய்தல்.

சந்திரன் இருந்தால்:- எப்போதும் குடும்பத்தில் குழப்பம், வார்த்தை மாறுதல், செய் தொழிலில் திருப்தியின்மை, பொருளாதார சிக்கல், எப்போதும் அந்நியரை சார்ந்திருக்கும் நிலை.

செவ்வாய் இருந்தால்:- எதிரிகளால் ஆபத்து, மறைமுக நோய், நோயின் தாக்கம் எப்போதும் அதிகமாய் இருத்தல், மூத்த சகோதரருடன் பிணக்கம், ஆபத்து, தொலைதூரம் செல்லுதல்.

குரு இருந்தால்:- தாயின் ஆசையை நிறைவேற்ற இயலாமை, வீடு அமைப்பினால் ஏற்படும் தோஷம், தொழிலினால் லாபமின்மை, பிறர் லாபம், ஏமாளித்தனம், சூது வஞ்சனை குறையுள்ள உள்ளம், அதிகார துஷ்பிரயோகம்.

சுக்கிரன் இருந்தால்:- புத்திரர்களால் தொல்லை, அவமானம் சந்ததி இல்லாதிருத்தல், மனக்கட்டுப்பாடு இல்லாமை, போக சுகம் அற்று போதல், அதனால் ஏற்படும் மனஇறுக்கம், அந்நிய தேச வாழ்க்கை, களத்திரம் அமைய தாமதமாகுதல் அதனால் ஏற்படும் அவமானம், கூட்டாளிகளால் நஷ்டம்.

சனி இருந்தால்:- ஆயுள் பீதி, மலடு தன்மை, அற்ப புத்திரம், எதிரிகளால் அவமானம், ஆயுத பயம், ரண சிகிச்சை, பிரயாண ஆபத்து, தந்தைக்கு பீடை.

ராகு இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

 கேது இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

 

தனுசு ,மீன ,லக்கினம்.

Comm2

லக்கினாதிபதி குருவாகி உள்ள தனுசு, மீன

லக்னதாரர்களுக்கு லக்னாதிபதி இருந்த

 நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில்

 

சூரியன் இருந்தால்:-பிதாவிற்கு பாதிப்பு, புண்ணிய யாத்திரைகள் தடைபடல், நோய், கடன் தொல்லை, இரகசிய விரோதிகளால் ஆபத்து துக்கம்.

சந்திரன் இருந்தால்:-தாயின் உடல் நலக்குறைவு கண்டம், விபத்து அவமானம், பெரியோரை நிந்தித்தல், சுபசோபன விஷயங்களில் தாமதம் புத்திரர்களால் அவமானம், புத்திர நாஸ்தி.

செவ்வாய் இருந்தால்:-ரண சிகிச்சை, ஆயுத பயம், ஊர் ஊராக சுற்றுதல், தீயோர் சூழ்ந்திருத்தல், இரகசிய மணம், தீய வழிகளில் நாட்டம், பாவ செய்கையுடைய புத்திரர்கள், துர்குணமுடைய புத்திரர்கள், தனக்குறைவு, வாக்கினால் அவமானம், குடும்பத்தில் கலகம்.

 புதன் இருந்தால்:-வித்தை பங்கம், விபரீத பழக்கம், சுகக்குறைவு, களத்திர ஹானி, அலிகளின் சேர்க்கை, செய்தொழில் பங்கம், விபரீத புத்தி, சேஷ்டை அதிகம்.

சுக்கிரன் இருந்தால்:-இரகசிய வியாதியினால் தொல்லை, மிக குறைந்த வயதுள்ள பெண்களின் சேர்க்கையால் அவமானம் அந்தஸ்து இழத்தல், மூத்த சகோதரர் பிரிவு.

சனி இருந்தால்:-நாணயம் கெடல், சகோதரர் ஒற்றுமை குறைவு, ஆண் தன்மை குறைதல், கோழைத்தனம், ஈகை குணம் இல்லாதிருத்தல், வஞ்சம் பொய் சூது எண்ணங்கள் எப்போதும் குடி கொண்டிருத்தல், மித மிஞ்சிய குடி அதனால் ஏற்படும் அவமானம்.

ராகு இருந்தால்:-சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால்:-சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

ரிஷப, துலா லக்னம் .

comm3

லக்னாதிபதி சுக்கிரன் இருந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான   நட்சத்திரத்தில்.                                                                         

 சூரியன் இருந்தால்:-  தாயால் துக்கம், தாய், தந்தையர் பிரிந்திருத்தல், அரசாங்கத்தாரால் தொல்லை, வாகன நஷ்டம், மூத்த சகோதரர்களால் கடும் தொல்லை, தந்தையின் செல்வ நிலை பாதிப்பு.

 சந்திரன் இருந்தால்:- மனோ வியாகூலம், ஸ்திர புத்தி இன்மை, சஞ்சல மனம், தாய்க்கு ரோகம், ஊன ஈன புத்திரர்களால் ஆண், வாரிசு இல்லாமல் குழந்தைகளால் துக்கம் சகோதரி பாதிப்பு.

செவ்வாய் இருந்தால்:- இரத்த சம்பந்த தொடர்பு அறுந்து போதல், ஆயுத ரணங்கள், கொடூர செய்கை, தன வீழ்ச்சி குடும்ப சுக குன்றுதல், சொன்ன வார்த்தையை காப்பாற்றாமை, ஈன களத்திரம், அந்நிய குல சம்பந்தம், விபரீத உறவு சுய தேசத்தை விட்டு வெளியேறுதல்.

புதன் இருந்தால்:- தர்க்க வாதத்தினால் அவமானம், செல்வமின்மை, தீயோர் தொடர்பு, சிறைபடுதல், பிதாவின் ஸ்தானம் பங்கமடைதல், இளைய தார பிள்ளைகளால் தொல்லை, அதனால் அவமானம், தற்கொலை சிந்தனை.

குரு இருந்தால்:- பிராமண தோஷம், விபரீத வித்தை தக்க சமயத்தில் வித்தை மறந்து போதல், அதனால் அவமானம், தன நிலையில் வீழ்ச்சி, கண்டம், விபத்து, அவமானம், இரகசிய செய்கையால் வேதனை.

சனி இருந்தால்:- நீச தேவதைகளின் தொல்லை, அந்தஸ்திற்கும் அறிவிற்கும் சம்பந்தம் இல்லாத தொழில் அதனால் பாதிப்பு இறை சக்தி இல்லாமை.

 ராகு இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

 

மகர  கும்ப லக்னம் .

comm4

 

 

                லக்னாதிபதி சனிபகவான் இருந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான    நட்சத்திரத்தில்                                                                           

சூரியன் இருந்தால் :-  தந்தை மகன் உறவு பாதிப்பு, களத்திர துக்கம், விபத்து அவமானம், ஆறாத காயம், நித்திய ஈனம், அரசாங்க சம்பந்தப்பட்ட அனைத்திலும் தோல்வி துக்கம்.

சந்திரன் இருந்தால் :-  தாயால் அவமானம், தாய்க்கு ரோகம், சபல புத்தி உடைய களத்திரம், ஸ்திர புத்தி இல்லாமை, மிக விரைவில் நோய் வாய்ப்படும் களத்திரம்.

செவ்வாய் இருந்தால் :-  வீடு நிலம் வாகனம் போன்றவற்றில் பாதிப்பு, சகோதரர்களால் பீடை, துக்கம் அதிக செலவு அதனால் அவமானம் எதிலும் லாபமின்மை, செய் தொழில் பாதிப்பு.

 குரு இருந்தால் :-  தன நஷ்டம், திரவிய லாபம் இல்லாதிருத்தல், மேலோரால் தொல்லை, சகோதர வகை பிரிவு, நஷ்டம், வித்தை குறைவு, வலது கண் ரோகம்.

சுக்கிரன் இருந்தால்  :-  விபரீத காமம், முறையற்ற புணர்ச்சி, தாய், தந்தையர் ஒற்றுமை குறைவு குடும்ப கலகம், வாகன நஷ்டம் ஆபத்து, வீடு மனையோகம் இல்லாமை, வெட்டி செலவு, கலைகளில் ஈடுபாடு கூட்டி கொடுக்கும் குணம்.

ராகு இருந்தால்  :-  சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால் :-  சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

நட்சத்திர சாதக நிலை

சிம்ம லக்னம்

Simmam

சூரியன் லக்கினாதிபதியாகி அவர் நின்ற நட்சத்திரத்தின்

சாதகமான நட்சத்திரத்தில்

சந்திரன் இருந்தால்:-  நல்ல அயன சயன சுகம் கிடைக்கும்.  தாய்க்கு ஆயுள் பலம், அடிக்கடி பிரயாணங்கள் கிட்டும்.  சுபகாரிய செலவுகள் காணும்.  நல்ல காரியங்களுக்கு பணம் செலவிடுவர்.  மன அமைதிக்கான சூழ்நிலைகள் ஏற்படும்.  சகோதரர்களின் தொழில் விருத்தியாகும்.  தாய் வகை பாக்கியம் கிடைக்கும்.  குழந்தைகளுக்கு ஆயுள் பலம் ஏற்படும்.  பட்டம் பதவிகள் ஏற்படும்.  நல்ல பொருள் கிட்டும்.

செவ்வாய் இருந்தால்:-வீடு, மனை, வாகன அமைப்பு உண்டாகும்.தந்தையின் உடல்நிலை, ஆயுள் பலம் நன்றாய் அமையும்.  தர்ம காரியங்களை அடிக்கடி செய்ய சந்தர்ப்பம் அமையும்.  களத்திர வர்க்க உறவினர்களால் லாபம் கிட்டும்.  தாய், தந்தையர் ஒற்றுமையுடன் இருப்பர் குழந்தைகளுக்கு வெளி தேச வாசம் ஏற்படும்.  சகோதரர்களுக்கு தன லாபம் உண்டாகும்.

 புதன் இருந்தால்:- தன தான்ய லாபம் கிட்டும்.  செய் தொழிலும் அதிக லாபம் வரும்.  கலைகளில் தேர்ச்சியும் அம்மான் வர்க்கத்தார்க்கு மேன்மையும் உண்டாகும்.  சகோதரர்கள் சுபகாரியத்தை முன்னிட்டு தன விரயம் செய்வர்.  மூத்த சகோதரர் உறவு நல்லபடியாய் அமையும்.  தாய்க்கு தனலாபமும் தந்தைக்கு சகோதரர்களால் ஆதாயமும் உண்டாகும்.

 குரு இருந்தால்:-நல்ல சற்புத்திர அமைப்பு ஏற்படும்.  எதிர்பாராத தனவரத்து திடீர் என ஏற்படும்.  கல்வி கேள்வி சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் மறைமுக சாஸ்திரங்களில் தேர்ச்சியும் ஏற்படும்.  நீண்ட ஆயுளும் தெய்வ பலமும் மிகும்.

சுக்கிரன் இருந்தால்:-அதிக தைரியமும், வீரியமும் உண்டாகும்.  போகம் மிகுந்த வாழ்க்கை உண்டாகும்.  கலைகளில் தேர்ச்சியும் கலை சம்பந்தப்பட்ட துறைகளில் ஜீவனமும் அமையும்.  பெண் சகோதரர்களால் லாபம் உண்டாகும்.  தந்தையின் தன நிலை மேலோங்கும்.  களத்திர வர்க்கத்தாரால் மேன்மையுண்டாகும்.

சனி இருந்தால்:-களத்திரத்தால் ஆதாயம் ஏற்படும்.  நோய் அணுகாது.  மறைமுக எதிரிகள் மறைவர்.  தனக்கு கீழ்ப்பட்டவர்களின் ஆதாவு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

ராகு இருந்தால்:-எதிர்பாராத யோகம், கடின உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வரும் நிலை.  ஒய்வில்லாமல் சிந்திக்கும் ஆற்றல், எவ்வகை தொழிலிலும் நுழைந்து, திறமையுடன் செயல்படும் ஆற்றல், அந்நிய நாட்டின் தொடர்புகள்.  பிற மதத்தினரின் அரவணைப்பு.

கேது இருந்தால்:-ஞானம் புத்தி, தெய்வீக தன்மை, மத கலாசாரங்களில் பற்று, எதையும் சிந்திது செயலாற்றும் திறன் மறைமுக சக்திகளின் தூண்டுதலால் ஏற்படும் நன்மைகள், பலவகையான ஸ்தல வழிபாடுகள், சாஸ்திர ஞானம் மந்திர சித்தி, அமானுஷ்ய சக்திகளால் ஏற்படும் லாபம்.

கடக லக்னம்

kadakam

லக்னாதிபதி சந்திரனாகி சந்திரன் நின்ற நட்சத்திரத்திற்கு

 சாதகமான நட்சத்திரத்தில்.

 

சூரியன் இருந்தால் :- தன தான்ய சம்பத்து சேர்க்கை, நல்ல வாக்கு பலம் அமைதியான மனமகிழ்ச்சி மிக்க குடும்பம்.  தாயின் அரவணைப்பு தந்தைக்கு மிக்க முன்னேற்றம் முதலியவை உண்டாகும்.

செவ்வாய் இருந்தால்:- பெண் சகோதரர்களால் ஆதரவும் அதனால் முன்னேற்றமும், கலைகளில் நாட்டமும் அதில் தேர்ச்சியும், நல்ல தைரியம், பராக்கிரமும் ஏற்படும்.  அது மட்டுமில்லாது வெளிதேச உத்தியோகமும் படகு போன்ற வீடும் அமையும்.  விவசாயத்தில் நல்ல பலன் உண்டாகும். வாகன வசதிகள் ஏற்படும்.

புதன் இருந்தால்:- நல்ல சகோதரர்கள் அமைவார்கள்.  சகோதரர்கள் அனைவருக்கும் நல்ல அந்தஸ்து உண்டாகும்.  கலைகளில் தேர்ச்சியும் – வாயினால் உண்டாகும் அனைத்து தொழில்களிலும் நல்ல பிரபலமும் வெகுமானமும் கலைத்துறையில் நல்ல ஈடுபாடும் ஏற்படும்.  மிகுந்த மேதாவிலாசம் ஏற்படும்.  பிறருக்கு உதவக்கூடிய வாய்ப்பு அதிக அளவு கிட்டும்.

குரு இருந்தால்:- சொல்லுக்கு எதிரிகள் கட்டுப்படும் நிலை ஏற்படும்.  ஆலய நிர்மாண பணிகள் செய்ய வாய்ப்பு ஏற்படும்.  பெரியோர்களின் ஆசி, புண்ணிய நதியில் நீராடும் வாய்ப்பு முதலியவை உண்டாகும்.

சுக்கிரன் இருந்தால்:- பெண்களால் லாபம் நல்ல களத்திரம் கிட்டும்.  தாயின் உடல்நிலை நல்ல நிலையில் இருக்கும்.  வீடு, வாகனம் முதலியவை ஆடம்பரமாய் அமையும்.  எப்போதும் எதிலும் சுகம் அனுபவித்து கொண்டிருக்கும் தன்மை.  எதிலும் வெற்றி, பங்கு வியாபாரத்தில் அதிக அளவு லாபம் அழகிய ரூப லாவண்யம் மிக்க மனைவி அதனால் ஐஸ்வர்யம் முதலியவை உண்டாகும்.

சனி இருந்தால்:- மறைத்து வைத்த தனம் கிட்டுதல், பூர்வ சொத்துக்கள் கிட்டுதல், நீண்ட ஆயுள் தனக்கு மேம்பட்ட அந்தஸ்த்தில் இருந்து மனைவி அமைதல், எத்தொழிலும் தந்தைக்கு நிகரற்ற லாபம் காணுதல், இரும்பு சம்பந்தப்பட்ட வகையில் ஜீவனம் ஏற்பட்டு அதில் நல்ல அந்தஸ்து போன்றவை உண்டாகும்.

ராகு இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

மேஷ ,விருச்சிக லக்னம்.

comm3

செவ்வாய் லக்னாதிபதியாகி செவ்வாய் இருந்த நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தில்

சூரியன் இருந்தால்:-  நல்ல சத் புததிரர்கள் அவர்களால் குலமே பெருமை அடைதல், எத்தொழிலிலும் நிகரற்ற தலைமை ஸ்தானத்தை வகித்தல் அரசியலில் ஆதாயம் அந்தஸ்து, மந்திர உபதேசம் பெறல் ஆன்மீக நாட்டம் சிவபக்தி நல்ல மனோதிடம், அபரிமிதமான மூளை, பலம் முதலியவை உண்டாகும்.

சந்திரன் இருந்தால்:- பூர்வ புண்ணய வசத்தால், அனைத்து யோக பாக்கியங்களையும் அனுபவித்தல் தந்தையின் ஆதரவு மிக பலமாய் இருக்கும்.  தாய், தந்தையர் ஒற்றுமை மிக நன்றாக இருக்கும்.  உயர் கல்வி அமையும்.  கல்வியினால் அந்தஸ்தும், அதனால் லாபமும் உண்டாகும். ஆலயம் புதுப்பித்தல், டிரஸ்டியாய் இருத்தல் போன்ற பல தெய்வீக பணிகளை செய்ய வாய்ப்பு கிட்டும்.  கடல் கடந்து செல்லும் பாக்கியமும் அங்கு புகழ் பெரும் நிலையும் உண்டாகும்.

புதன் இருந்தால்:-  வேத ஞான சாஸ்திரத்தில் அதிக தேர்ச்சி அதனால் லாபம் கண்ணால் பார்த்ததை கையால் செய்யும் ஆற்றல் எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் குணம்.  மூத்த சகோதரத்தால் லாபம், அம்மான் வர்க்கத்தாரின் நிலை உயர்தல், பல மொழிகளில் தேர்ச்சி முதலியவை உண்டாகும்.

குரு இருந்தால்:-தன தான்ய விருத்தி, சொல்லுக்கு மதிப்பு, அமைதியான குடும்ப வாழ்க்கை, சத் புத்திரர்களை பெறும் வாய்ப்பு, மந்திர உபதேசம் பெரியோர்களின் ஆதரவு.  பாக்கியத்தினால் உண்டாகும் லாபம் பெரியோர்களின் நேசம், பக்தி புண்ய ஸ்தலங்களுக்கு வாய்ப்பு, தன புழக்கம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் நிலை.  அந்நிய தேசத்தில தனம் தேடும் நிலை புத்திரர்களினால் ஆதரவு போன்றவை உண்டாகும்.

சுக்கிரன் இருந்தால்:-தன் அந்தஸ்த்திற்கு மேற்பட்ட இடத்தில் இருந்து களத்திரம் அமைதல், அதனால் லாபம், மனம் கோணாமல் நடக்கும் மனைவி அனைத்து சுகங்களும் குறைவற்று அனுபவிக்கும் நிலை, கலைகளில் தீவிர நாட்டம் இசையில் மிகுந்த விருப்பம் நல்ல நண்பர்கள் அமைதல், சகோதரர்களின் வாழ்க்கை மேன்மை அடையும் நிலை போன்றவை உண்டாகும்.

சனி இருந்தால்:-நல்ல வீடு, வாகன அமைப்பு, சகோதரர்களுக்கு லாபம், நல்ல தைரியம் வீரியம் இருக்கும்.  மாதாவிற்கு நீண்ட ஆயுள் நல்ல பொறுப்புள்ள பணிகளில் ஜீவனம் ஏற்படும்.  பழைய பொருட்களை வாங்கி விற்றலில் நிகரற்ற லாபத்தை தரும்.  நியாயம், நீதி, தர்மத்தின் பேரில் ஆழ்ந்த ஈடுபாடு முதலியவை உண்டாகும்.

ராகு இருந்தால்:-சிம்ம லக்னத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால் :- சிம்ம லக்னத்திற்கு சொன்ன பலன்.

மிதுன கன்னி லக்னம்

Comm2

லக்கினாதிபதி புதனாகி புதன் இருந்து நட்சத்திரத்திற்கு

 சாதகமான நட்சத்திரத்தில்.

சூரியன் இருந்தால்:-நல்ல தைரியம், வீரியம், பராக்கிரமம், நல்ல ஆதரவு உள்ள சகோதரர்கள் அரசாங்கத்தில் நல்ல ஆதரவு, நல்ல தூக்கம், திட ஆரோக்கியம் தந்தையின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்தல் பெபாது ஜென்ம தொடர்பால் உண்டாகும் ஜீவனம், அதனால் மேன்மை, இலாபம், அந்தஸ்து முதலியவை உண்டாகும்.

சந்திரன் இருந்தால்:-மாதாவின் ஆதரவு, மிகும், தாய்க்கு நல்ல ஆயுளும் வித்தைகளில் நல்ல தேர்ச்சியும் உண்டு.  குடும்பம் மிக உன்னத நிலைக்கு வளர்ந்து செல்லும், பெரியோர்களின் ஆதரவினால் தனம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.  ஆபரண தொழிலில் நிகரற்ற லாபம் தரும் கலைத்துறையிலும் ஜீவனம் அமையும், அதில் பொருள் சேர்க்கையும் உண்டாகும்.

குரு இருந்தால்:-குடும்பம், கோயிலாக இருக்கும்.  பெரிய குடும்பமாக இருக்கும்.  நிச்சயமாய் மனைவி ஒரு மந்திரியாய் அமைவாள்.  தாயின் ஆதரவும் அன்பும் எப்போதும் இருக்கும்.  நல்ல வீடு அமையும்.  அதனால் பாக்கியமும் செல்வமும் வளரும் அமைப்பு உண்டாகும்.

சுக்கிரன் இருந்தால்:-போகம் மிகுந்த வாழ்க்கை அமையும்.  எதிர்பால் உள்ளவரின் ஆதரவும் அதனால் எப்போதும் லாபம் உண்டாகும்.  நல்ல வாகனங்கள் அமையும்.  அடுத்தவர்களின் உதவியால் ஆடம்பர உல்லாச வாழ்க்கை அனுபவிக்கும் யோகம் உண்டாகும்.

சனி இருந்தால்:-தர்ம சிந்தனையுள்ள புத்திரன் அதனால் பெருமை குரு ஸ்தானத்தில் தந்தை அமைவார்.  பிதாவின் அறிவு எப்போதும் துணை நிற்கும்.  தோல்விகளை படிக்கட்டுகள் ஆக்கும் மனோதிடம் எப்போதும் இருக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வல்லமை உண்டாகும்.

ராகு இருந்தால்:-சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

தனுசு மீனம் லக்னம்

Comm2

லக்னாதிபதி குருவாகி குரு நின்ற நட்சத்திரத்திற்கு

 சாதகமான நட்சத்திரத்தில்

சூரியன் இருந்தால்:-பிதாவிற்கு நல்ல ஆயுள் காலத்தையும், பிதாவினால் மிகுந்த ஆதரவும் கிட்டும்.  புண்ணிய தீர்த்த யாத்திரைகள் கைகூடும்.  நோய் அணுகாது.  குருவருள் பாக்கியத்தினால் கிட்டும்.  எதிரிகள் அனைவரும் தன்னைத்தானே அடங்கிப் போவர்.  தலைமை பதவி எப்போதும் காத்திருக்கும்.  அரசு வகையில் இருப்பவர்களால் பலவித அனுகூலங்கள் எப்போதும் கிட்டும்.

சந்திரன் இருந்தால்:-மாதா அன்பும், ஆதரவும், ஆயுளும் பெருகும்.  நல்ல சத் புத்திரர்களினால் குலப் பெருமையும் கௌரவமும் ஓங்கும்.  மந்திர தீட்சை கிட்டும்.  பெரியவர்கள், ஞானிகள் போன்றவர்களின் ஆசி கிட்டும்.  அது எப்போதும் துணை நிற்கும்.  ஆன்மீகத்தில் மனது எப்போதும் நாட்டம் கொண்டிருக்கும் நிலையான ஸ்திரமான புத்தி உண்டாகும்.  அலைபாயாத மனம்  கிட்டும் விரைவில் தியானம் கைகூடும்.

செவ்வாய் இருந்தால்:-தன தான்ய  விருத்தி ஏற்படும்.  வாக்கு பலம் உண்டாகும்.  வாக்கு பலிதம் உண்டாகும்.  தந்தைக்கு ஆயுள் பலமும், தீர்த்த யாத்திரையும் உண்டாகும்.  சகோதர ஆதரவு மிகவும் உண்டாகும்.  நல்ல அயன சயன சுகம் கிடைக்கும்.  அடிக்கடி பிரயாணங்கள் உண்டாகும்.  சுப செலவுகள் அதிகம் உண்டாகும்.  சகோதரர்களின் தொழில் விருத்தியாகும்.  அதனால் லாபமும் மேன்மையும் உண்டாகும்.

புதன் இருந்தால்:-கலைகளில் தேர்ச்சியும் நல்ல ஆதாயமும் படித்த பண்புள்ள மனைவி கிட்டும்.  அம்மான் வர்க்கத்தாருக்கு மேன்மையும் ல்£பமும் உண்டாகும்.  எழுத்துத் துறையில் பிரகாசம் ஏற்படும்.  மிகுந்த மூளை பலம் உண்டாகும்.  நண்பர்களால் எப்போதும் ஆதாயம் கிடைக்கும்.  மாதா ஆதரவும் மாதாவிற்கு வித்யா அய்யாசமும் உண்டாகும்.  தாயின் பண்பு குடும்பத்தை கோயிலாக்கும்.

சுக்கிரன் இருந்தால்:-பெண் சகோதரத்தால் லாபம் எதிரிகள் ஒடுங்குதல், காதலில் ஜெயம், பெண்களால் ஆதாயம் எத்தொழிலும் லாபம், கவர்ச்சியான பேச்சு எவரையும் வசப்படுத்தும் திறம், கலையினால் புகழும் செல்வாக்கும் செல்வமும் உண்டாகுதல்.

சனி இருந்தால்:-நிலையான, சொத்துக்கள், குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், கறுப்பு வர்ண சம்பந்தப்பட்ட பொருள்களில் அதிக லாபம் காணும்.  கீழ்மட்டத்தில் உள்ளவர்களிடம் சம்போக நிலை ஏற்படும்.  ஆன்ம விசாரம் ஏற்படும்.  தீவிர மத சம்பந்தப்பட்ட சடங்குகளில் நம்பிக்கையும் பற்றும் ஏற்படும்.

ராகு இருந்தால்:-சிம்ம லக்னத்திற்கு சொன்ன பதில்.

கேது இருந்தால்:- சிம்ம லக்னத்திற்கு சொன்ன பதில்.

ரிஷப துலா லக்னம்

comm3

லக்னாதிபதி சுக்கிரனாகி சுக்கிரன் நின்ற நட்சத்திரத்திற்கு

சாதகமான நட்சத்திரத்தில்

சூரியன் இருந்தால்:-  நல்ல குடும்ப அமைப்பு, தாய், தந்தையர் ஒற்றுமை, நிலம், வாகன யோகம், அதனால் ஆதாயம் மூத்த சகோதரரால் இலாபம், நல்ல நண்பர்கள் குடும்ப பாரம்பரிய சொத்து அழியாதிருத்தல் போன்றவை ஏற்படும்.

சந்திரன் இருந்தால்:-மாதா ஆயுள் பங்கபடாதிருத்தல், தைரிய, வீரியம், பராக்கிரமம் பெருகுதல், தொழில் நிலையில் நல்ல முன்னேற்றம் காணுதல், தீர்த்த யாத்திரை புண்ணிய யாத்திரை சென்று புண்ணிய நதிகளில் நீராடும் யோகம் கிடைத்தல்.

செவ்வாய் இருந்தால்:-நல்ல அயன சயன சுகம் கிடைக்கும்.  களத்திரனால் லாபமும் நல்ல களத்திரமும் உண்டாகும்.  தன நிலை எப்போதும் குறையாது.  கையில் காசு புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.  மிகப் பெரிய கண்டங்களில் இருந்து கடைசி நேரத்தில் தப்பிக்கும் நிலை ஏற்படும்.  நிகரற்ற வாக்குவன்மை உண்டாகும்.  பிரயாணங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.

புதன் இருந்தால்:-குடும்ப சுகம் இருக்கும்.  குழந்தைகளால் மேன்மையும் அவர்களால் ஆதரவும் கிட்டும்.  கலைகளில் தேர்ச்சியும் அதனால் பிரபல்யமும் உண்டாகும்.  சுப செலவுகள் அதிகமாக ஏற்படும்.  தூரதேச பிரயாணமும் அந்நிய தேசத்தில் பொருள் தேடும் நிலை ஏற்படும்.

குரு இருந்தால்:-குரு சாஸ்திரத்தில் நிகரற்ற தேர்ச்சி ஏற்படும்.  கற்போர் தொடர்பினால் வாழ்க்கை மேன்மை அடையும்.  குரு அந்தஸ்து கிட்டும்.  மறைமுக சாஸ்திரத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் நம்பிக்கையும் தேர்ச்சியும் ஏற்படும்.  நோய் தொல்லை தீரும்.  சத்ரு பயம் அறவே இராது.  தெய்வ பயம் எப்போதும் துணை நிற்கும்.

சனி இருந்தால்:-பாக்கியங்கள் பூர்வ புண்ணியங்கள் பெருகி மிகுந்த யோகத்தை தரும்.  தர்ம ஸ்தாபனங்களை நிர்வகித்தல் அறக்கட்டளைகளை ஸ்தாபித்தல், கோயில் கட்டுதல், குளம் வெட்டுதல் போன்ற அறப்பணிகள் செய்ய வாய்ப்பு கிட்டும்.  மனமானது நீதி நியாயம் போன்றவற்றில்  எப்போதும் நிலைத்து நிற்கும் தர்ம புத்திரன் மூலம் புகழ் செல்வாக்கு ஓங்கும்.

ராகு இருந்தால்:-சிம்ம லக்னத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால்:-சிம்ம லக்னத்திற்கு சொன்ன பலன்.

மகரம் கும்ப லக்னம்

comm4

சனி லக்னாதிபதியாகி சனி நின்ற நட்சத்திரத்திற்கு

சாதகமான நட்சத்திரத்தில்.

சூரியன் இருந்தால் :- நல்ல அறிவுள்ள மனைவி அமைவாள்.  மனைவியின் ஆதரவு எப்போதும் கிட்டும்.  மறைமுக எதிர்ப்புகள், விஷ சூனியங்கள் அண்டாது.  சகோதரர்களுக்கு தெய்வ அனுக்கிரகம் கிட்டும்.  தந்தை, மகன் உறவு மிக கண்ணியமாய் இருக்கும்.  அரசாங்க சம்பந்தப்பட்ட அனைத்திலும் எப்போதும் ஆதரவும் வெற்றியும் உண்டாகும்.

சந்திரன் இருந்தால்:-குணவதியான  தாய் நல்ல குணமுள்ள தாரம் எதிலும் உறுதியான மனநிலை, நோய் அணுகாத நிலை தாய்க்கு நீடித்த ஆயுள் கீழோர் தொடர்பினால் லாபம்.

செவ்வாய் இருந்தால்:-வீடு, நிலை, வானம், முதலியவை நல்ல முறையில் அமையும்.  சகோதர ஒற்றுமை மிகும் சகோதரர்களால் ஆதரவும் அன்பும் கிட்டும்.  தொழில் ஸ்திர தன்மையுடன் நடந்து லாபம் கிட்டும்.  எத்தொழிலும் ஆதாயத்தை தரும் தைரியம், பராக்கிரமத்தால் காரியங்கள் செய்யப்படும்.

புதன் இருந்தால்:-நுண் கலைகளில் ஆழ்ந்து அதில் இருக்கும் ரகசியங்களை அறிந்து கொள்ளும் திறம் ஏற்படும்.  நல்ல புத்திர, புத்திரிகள் மூலம் செல்வாக்கும், குலபெருமையும் தழைத்தோங்கும்.  எதிரிகள் தொல்லை, அறவே இராது.  பிதாவிற்கு ஆயுள் பலம் மிகும்.  புண்ய யாத்திரைகள் கைகூடும்.

குரு இருந்தால்:-தன தானிய சம்பத்து எப்போதும் நிலைத்து நிற்கும்.  செய் தொழில் ஆதாயம் கிட்டும்.  அயன சயன சுகம் அமையும்.  மேதா விலாசம் ஏற்படும்.  வேதாந்தத்தில் பற்று ஏற்படும்.  எதையும் தீவிரமாக சிந்தித்து செயல்படுத்தும் தன்மை இருக்கும்.

சுக்கிரன் இருந்தால்:-சாஸ்திரப்படி உள்ள சூட்சும வீடு அமையும்.  மாதா ஆயுள் சுகம் பெருகும்.  வாகன வசதி உண்டாகும்.  பிதாவின் ஆயுள் அந்தஸ்து உயரும்.  எதிர பாலினர் ஆள் ஆதாயம் மிகும்.  ரகசிய சம்போகம் வெளியில் தெரியாது.  அதனால் அவமானம் உண்டாகாது.  கலைகளினால் பெரும் புகழும் கிட்டும்.

ராகு இருந்தால்:-சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால்:-சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கோள்களின் கோலாட்டம் – 1.11 நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.

43

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்தால் முன்னிற்கு முரணாக செயல்படும் ஜாதகமாகும்.  லக்கினாதிபதியால் கிடைக்கும் பலன்கள் ஜாதகனுக்கு கிடைக்காது சரிவர செயல்படாது.

                2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் பலன்கள் ஜாதகருக்கு கிடைக்காது.  சந்திரன் அமர்ந்தால் அனுபவிக்க இயலாது.

                3 –  க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமைந்தால் 3 – க்குரியவரால் 3 – ஆம் பாவத்தில் கிடைக்கக்கூடிய பலன்கள் முழுமையாக இல்லாமல் போகலாம்.  அப்படி கிடைத்தாலும் அதை அனுபவிக்க முடியாமல் போகும்.  இதே போல் 12 பாவத்திற்குரியவர் அமைப்பும் பார்த்து பலன்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம்,

                லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ – சந்திரனோ அமைந்தால் லக்கினாதிபதியால் கிடைக்கக்கூடிய பலன்கள் சிறப்புகள் உயர்வுகள் ஜாதகருக்கு உறுதியாக கிடைக்கும்.

                2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின எதிரிடையான நட்சத்திரத்தில்  லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் அனைத்து பலன்களும் ஜாதகருக்கு கிடைக்கும் அனுபவிக்கும் நிலையும் ஏற்படும்.

                3 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 3 – க்குரியவரால் கிடைக்கும் அனைத்து பலன்களும் ஜாதகருக்கு கிடைக்கும் அனுபவிக்கும் நிலையும் ஏற்படும்.

                இதே போல் 12 பாவத்திற்குரியவர்களின் பலனையும் பார்த்து நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

                நட்சத்திரங்களின் எதிரிடை, சாதக நிலைகளை அந்தந்த பாதரீதியாக பார்ப்பது சூட்சம நிலையாகும் அப்படி பாத ரீதியாக நட்சத்திர எதிரிடை, சாதக நிலை அமைந்து விட்டால் சொல்லும் பலன்களில் தவறு வருவதற்கில்லை.

                உதாரணமாக :-  லக்கினாதிபதியாக சுக்கிரன் நின்ற நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரத்தின் முதல் பாதம் எனில் இதன் எதிரிடையான நட்சத்திரம் அஸ்தல் முதல் பாதமாக வரும் இந்த நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் எதுவோ அது இந்த ஜாதகருக்கு எதிரிடையாக செயல்பட்டு பாதிப்பான பலன்களைத் தரும்.

                இதே போல் லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரமான அனுசம் முதல் பாதத்திற்கு சாதகமான நட்சத்திரம் சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதமாகும்.  இந்த சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நிற்கும் கிரகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் சாதகமாக செயல்பட்டு நல்ல பலன்களை அதன் தசாபுத்தி காலங்களில் தரும்.

                நட்சத்திரங்களின் எதிரிடை —  சாதக தன்மைகளை நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் பார்ப்பது சூட்சும நிலை.  பாதரீதியாக பார்ப்பது அதி சூட்சும நிலை இவ்வகை நிலைகளைப் பொறுத்தே கோள்களின் சூட்சம விளையாட்டுக்கள் ஏற்படுகிறது.

                எந்த ஒரு பாவாதிபதியானாலும் அந்த பாவாதிபதி பெற்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் எந்த ஒரு பாவத்தின் அதிபதி நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி எதிரிடையாக செயல்படுவார்.

                5 – ஆம் பாவாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் 9 – ஆம் பாவாதிபதி நின்றால் தந்தையால் குழந்தைகளுக்கு பெற்ற பிள்ளைகளுக்கு எதிரி£ன செயல்கள் இதேபோல் பலன்கள் மாறி மாறி செயல்படும் என்பதை ஜோதிட கலைஞர்கள் வாசகநேயர்கள் யுக்தியோடு தெரிந்து செயல்படுவது நல்லது.  இதன் மூலம் மிக நுட்பமான சூட்சுமமான பலன்களை எளிதில் அறியலாம்.

                எந்த ஒரு கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது லக்கினம் அல்லது லக்கினாதிபதி நின்றால் அந்த கிரகத்தின் காரகத்திற்கு எதிர்ப்பாக ஜாதக செயல்படுவார்.

                உதாரணமாக சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது லக்கினம்.  லக்கினாதிபதி இருந்தால் ஜாதகர் தந்தைக்கு எதிராக செயல்படுவார்.  தந்தை மீது பற்றில்லாதவராக தந்தை மகன் மீது பற்று இல்லாதவராக அரசாங்கத்திற்கு விரோதமாக, அரசாங்க ஆதரவு இல்லாதவராக இருப்பார்.  ஆக சூரியனுக்கு உரிய காரக பலன்கள் இல்லாமல் இருக்கும்.

 40

                                ஆதிக்கம் செலுத்தும் கிரகம்.

 

                ஒருவரின் பிறந்த கிழமைக்குரியவர், நட்சத்திரத்திற்குரியவர், ராசிக்குரியவர், லக்கினத்திற்கு உரியவர், லக்கினம் நின்ற நட்சத்திரத்திற்கு உரியவர்களாக எந்த கிரகங்கள் வருகிறதோ அந்த கிரகத்தின் நட்சத்திரத்திலோ, ராசியிலோ, அந்த கிரகத்தின் நட்சத்திரங்கள் உள்ள ராசியிலோ, அந்த கிரகம் உள்ள ராசியிலோ அல்லது அக்கிரகம் பார்த்த ராசிகளிலோ எந்த பாவாதிபதி உள்ளாரோ அப்பாவாதிபதிகளின் இயக்கமே ஜாதகருக்கு மேலோங்கி இருக்கும்.

                உதாரணமாக ஒருவர் பிறந்த கிழமை, திங்கள், நட்சத்திரம், ரோகிணி, ராசி, ரிசபம், லக்கினம் துலாம் நின்ற நட்சத்திரம் விசாகம் என்றால் சந்திரன், சுக்கிரன், குரு போன்ற கிரகங்களின் ஆதிகத்திற்கு உட்பட்டு இவர் பிறந்து உள்ளார்.  இவர் 10 – க்குரியவர் சந்திரனாகி 2 – இல்  உள்ள சுக்கிரன் கேதுவைப் பார்ப்பதால் இவர் நாவன்மை சொல்லாற்றல் கல்வி என்ற வழியிலேதான் தனது உயர்வுகளை பெற முடியும் என்பதாகிறது.

                ஜாதகத்தை ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களாக உள்ளவைகளின் காரகத்திற்கு தக்கவாறு தனது ஆதிபத்தியத்தின் மூலம் ஜாதகருக்கு தனது பலன்களை தரும் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களில் பலமான கிரகம் எதுவோ அது முதலிடம் வகிக்கும்.  வக்கிரம் அஸ்தானம் பெற்ற கிரகங்களை முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பது சரியாகி வராது.

                ஜாதகரை ஆதிக்கம் செலுத்தும் கிரகங்கள் ஐந்தில மூன்று கிரகங்கள் பலம் குறைந்ததாகவோ நீச்ச அஸ்தமனம் வக்கிரம் பெற்றதாக இருந்து விட்டால் ஜாதகரின் உயர்வு பற்றி சிந்திக்க வழியில்லை.  அவ்வகை ஜாதகம் எந்த அளவில் போக அமைப்பு பொருந்தியதாக இருப்பினும் அந்த யோகத்திற்கு எதிராகவே ஜாதகரின் வாழ்க்கை நிலை அமையும்.

                பிறப்பு காலத்தில ஆதிக்கம் செலத்தும் கிரகங்களின் நட்சத்திரம் ராசிகளில் கோச்சாரத்தில் எந்த பாவாதிபதிகள் வருகிறார்களோ அப்பாவ பலன்கள் உறுதியாக அந்த காலங்களில் நடக்கும்.

                உதாரணம் :-

                ஜாதகரின் பிறந்த கிழமை நாதன் :-                        சந்திரன்

                ஜாதகரின் பிறந்த நட்சத்திரநாதன்:-                        சந்திரன்

                ஜாதகரின் பிறந்த ராசி நாதன்:-                                     சுக்கிரன்

                ஜாதகரின் லக்கின நாதன் :-                                                   சுக்கிரன்

                ஜாதகரின் லக்கினம் நின்ற நட்சத்திரநாதன்:-       குரு

                                          

                சந்திரன், சுக்கிரன், குரு போன்றவர்கள் மூலமே ஜாதகருக்கு பலன்கள் கிடைது வரும்.  ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களோடு ராகு, கேது தொடர்பு பெற்றால் அவர்களும் சேர்ந்து நல்ல தீய பலன்களை தங்கள் மூலம் தர தகுதி பெற்றவர்களே.

                உதாரணமாக எடுத்துக்கொண்ட ஜாதகருக்கு சந்திரன், சுக்கிரன், குரு போன்றவர்களும் இவர்களோடு சேர்ந்த ராகு, கேதுக்களும் சேர்ந்து நல்ல தீய பலன்களைத் தர தக்கவர்களாக சந்திரன், சுக்கிரன், குரு, ராகு, கேது போன்றவர்கள் வருகிறார்கள்.  இவர்கள் மூலமே ஜாதகருக்கு பலன்கள் கிடைக்கும்.

                உதாரணமாக எடுத்துக் கொண்ட ஜாதகருக்கு பலன் தர அதிகாரம் பெற்றவர்களாக வரும் கிரகங்கள் சந்திரன், சுக்கிரன், குரு, ராகு, கேதுவும் இவர்களுடைய நட்சத்திரங்களும் ஆகும்.  இவருக்கு ரோகிணி, அஸ்தல்ம், திருவோணம், பரணி, பூரம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அசுவனி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் கோச்சாரத்தில்.

                லக்கினாதிபதி வரும்போது சாதனைகளை செய்வது மகிழ்ச்சி பாராட்டு, பிறர் பணம் கிடைப்பது நெடும் பயணம் ஏற்படுவது பிரசங்கம் மேடை பேச்சு போன்றவைகளும், 2 – ஆம் பாவாதிபதி வரும்போது வருமானம் வருமானத்திற்காக வாய்ப்பு, குடும்ப காரியங்கள் கடன் தீர்தல் அல்லது குறைத்தலும் நாவன்மை சொல்லாற்றலும்.

                3 – ஆம் பாவாதிபதி வரும்போது அன்னியர்கள், தொடர்பு, சகாயம், குறுகிய பயணம், காரிய வெற்றி யோக பாக்கியம் உடன்பிறப்பு வகை காரியங்களும்.

                4 – ஆம் பாவாதிபதி வரும்போது தன் சுகம் அதிகரித்தலும் நிலம், வீடு, வாகன சேர்க்கை அவ்வகை காரியங்களும் தாய் வகை பிரச்னைகளையும் தரும் மற்றும் நான்காம் பாவ விசயங்கள்.

                5 – ஆம் பாவதிபதி வரும் போது தெய்வீக உபசானா வகையில் சிறப்பு புகழ், பதவி, கீர்த்தி, புத்திர உற்பத்தி அவ்வகை சிந்தனை அவர்களுக்கு நற்காரியங்களை செய்வது மற்றும் ஐந்தாம் பாவ விசயங்கள்.

                6 – ஆம் பாவாதிபதி வரும்போது கடன் கிடைத்தல், உடல்உபாதை, தந்தைக்கு ஆயுள் பயம் தொழில் வாய்ப்பு திருட்டுத்தனமான காரியங்களை செய்தல், செய்யத்தூண்டுதல், பொருள்களை விற்று செலவுகளை சமாளித்தல் எதிர்பாராத தனம் கிடைத்தல் மற்றும் ஆறாம் பாவ விசயங்கள்.

                7 – ஆம் பாவாதிபதி வரும்போது அப்பாவ விசயங்களும் இதே போல் 8, 9, 10, 11, 12 – ஆம்பாவதிபதிகள் வரும்போது அப்பாவ பலன்களையும் பெறுவார்.

                மேலே சொல்லும் நட்சத்திரங்களில் வரும் கிரகங்களில் வரும் கிரகங்களின் தன்மைகேற்ப பலன்கள் கிட்டும்.  சந்திரன் மேற்படி நட்சத்திரங்களில் வரும் நாளிலும் பலன்கள் நடைமுறையில் வரும்.

                ஒருவரின் ஜாதகப்படி ஆதிக்கம் செலுத்தி தன் மூலம் பலன்களை தர தகுதி பெற்ற கிரகங்களின் நட்சத்திரங்களில் 2, 6, 10 – க்குரியவர்கள் கோச்சார காலத்தில் வரும்போது சிறப்பு மிக்க பலன்களை பொருள் வசதி, தன விர்ததி, ஆதாயம், காரிய ஜெயம் தொழில் வாய்ப்பு, பதவி, புகழ், விருது, பாராட்டு சத்காரியங்கள் நடைமுறையில் வருவதைப் பார்க்கலாம்.

                வக்கிரம், நீச்சம், அஸ்தமம் பெற்ற கிரகங்கள்,  பாதகாதிபதியாக உள்ள கிரகங்கள், 3, 4, 12 – ஆம் பாவாதிபதிகள் வரும்போது பல பாதிப்பான பலன்களை பெறுவர்.

                ஆதிக்கத்திற்க உரிய பலன்களை தன் மூலம் தகுதி பெற்ற கிரகங்கள் 1, 2, 5, 6, 10 – க்குரியவர்களாக இருந்து விட்டால் அந்த ஜாதகர் மிக உயர்ந்த ஜாதகராக இருப்பார்.  இந்த ஜாதகர் எப்போதும் நன்மையான பலன்களையே பெறுவார்.  இந்த நிலையைப் பெற்றவர்கள் புண்ணியம் பெற்ற பிறவிகளே.

 41

 நட்சத்திர இயக்கம்.

                லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரகத்தின் காரகம் ஜாதகருக்கு பயன் தராது அல்லது அந்த காரகம் இல்லாமல் போய்விடும் அல்லது மிகவும் பாதிக்கும்.

                தசாநாதன் அல்லது புத்திநாதன் அல்லது சந்திர நாதன், நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையாகத் திரமாக பிறந்த நட்சத்திரம் வந்தால் சுப பலன்கள் இருக்காது.  அந்த திசாபுத்தி அந்திர காலங்கள் பாதிப்பே.  ஜாதகருக்கு எந்த பலனும் இருக்காது.

                திசாநாதன், புத்திநாதன் அல்லது சந்திர நாதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் கோச்சாரத்தில் எந்த கிரகம் வருகிறதோ அந்த கிரகத்தின் காரகம் ஆதிபத்தியம்  ( பாவ பலன்கள் ) பாதிப்படையும்.

                திசாநாதன் சாதகமான நட்சத்திரத்தில் இருந்து புத்தி நாதன் எதிரிடை நட்சத்திரத்தில் இருந்தால் கிரகங்களின் நைசர்க்க பலத்தை பொறுத்து பலன் சொல்ல வேண்டும்.

                                                                                                                                                             *  ஜெனன காலத்தில் உள்ள ஒரு கிரகத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் கோச்சாரத்தில் கிரகம் சஞ்சரிக்கும் போது அக்கிரக ஆதிபத்தியம் மூலம் பாதிப்பை தரும் ( உ.ம் ) ஜெனன காலத்தில் செவ்வாயின் எதிரிடை நட்சத்திரத்தில் 6 – ஆம் பாவாதிபதி கோச்சாரத்தில் வரும்போது அந்த ஜாதகருக்கு சகோதர வகையில் இடையூறுகள், குழப்பம், பாதிப்பு எதிர்ப்பு நோய் தொல்லைகள் காணும்.

                லக்னம், 4, 9 பாவாதிபதி லக்கானாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தில் இருந்தால் கிரகங்கள் எவ்வளவு வலுப்பெற்று இருந்தாலும் யோகத்தை தராது.  இவ்வமைப்பில் ஜனித்தவன் குடும்பம் சிதறுண்டு போகும்.  நிலம், வீடு, வாகன பலம் சேதம்.  தாய், தந்தை வகையில் பாதிப்பு தொல்லை தாய், தந்தை விட்டு பிரிந்து சென்று விடும் நிலை ஆகிய பலன்கள் கடுமையாக நடக்கும்.

                * லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் நின்ற எதிரிடை நட்சத்திரத்தில் 2 – ஆம் பாவாதி இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குடும்பத்தை விட்டு பிரிதல் பண தட்டுப்பாடு, பண்த்தொல்லை, கண் கோளாறு, பல வகையில் பாதிப்பு திருட்டு பயம், நீச்ச வார்த்தை பேசுதல், திக்கி பேசுதல், வாக்கு நாணயம் தவறுதல் வழக்கு வியாஜ்ஜியங்கள் ஏற்படுதல்.

                *லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரங்கள் அதன் திரிகோண நட்சத்திரங்களில் 3 . ஆம் பாவாதி நின்றால் உடன்பிறப்பு வகையில் பகை பிரயாணத்தில இடையூறு உயிருக்கு உயிரான நண்பர் இழப்பு, பாக, தகாத இச்சைகள், அதனால் அவமானம், தகாத, கெட்ட, பழைய உணவு வகைகளை உண்ணுதல், காரிய தடை, வீரிய பலம் கெடுதல், உடல்நிலை சரிவர இருக்காது.  தனிப்பட்ட சுகங்களை பாதிக்கும்.  சகோதர வகை பிரயோசனப்படாது.  தொண்டை, காது சம்பந்தப்பட்ட வியாதிகள் தாக்கும்.

                லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் அல்லது அதன் திரிகோண நட்சத்திரத்தில் 5 – ஆம் பாவாதிபதி இருந்தால் பூர்வீக சொத்துகளில் வில்லங்கம், வழக்கு வியாஜ்ஜியங்கள், திருமண விஷயத்தில் கோளாறு, புத்திர தோஷம், மத்திம வயதில் புத்திர, புத்திரிகளை இழந்து புத்திர சோகம் அடைதல் மனக் கோளாறு காதல் தோல்வி, லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தில் 6 – ஆம் பாவாதிபதி இருந்தால் பட்டப்படிப்பு தடைபடுதல், கடுமையான நோய் தொல்லைகள் வேண்டாத வேலைகளை செய்து மாட்டிக் கொள்ளுதல் அகால போஜனம், திருட்டு, பொருள்களை பறி கொடுத்தல், திருடர்களால் ஆபத்து, சிறை பயம், கடன் தொல்லையில் சொத்துக்கள் இழப்பு, தாய் வழி மாமன் விருத்தி இல்லாமல் போகுதல் எதிரிகளால் பயம், மூத்த உடன் பிறப்புக்கு மதிப்பு,ஆயுள் பயம்.

                லக்னாதிபதி நின்ற நட்த்திரங்களில் எதிரிடைய நட்சத்திரத்தில் அதன் திரிகோண நட்சத்திரங்களில் 7 – ஆம் பாவாதிபதி இருந்தால் களத்திர ஹானி, இல்வாழ்வில் குழப்பம் கூட்டு தொழில் பங்கம் பெண்களால் அப கீர்த்தி கணவன் மனைவியிடையே கருத்து வேற்றுமை, கலப்பு மணம் புரிதல், தாயாரின் சொத்து வகையில் குழப்பம், நீண்ட ஆயுளுக்கு பங்கம், காம இச்சையால் தவறான வழியில் செல்லுதல் இரகசிய நோய், அதில் அவமானம் ஒப்பந்தம் குத்தகையில் பாதிப்பு நஷ்டம்.

                லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தில் எதிரிடை நட்சத்திரத்தில் அதன் திரிகோண நட்சத்திரத்தில் 8 – ஆம் பாவாதிபதி இருந்தால் செயற்கை மரணம்.  நீர், நெருப்பு கயிறால் பயம், நம்பிக்கை, மோசம் வழி கெட்ட பெயர் எடுத்தல், எதிரிகளால் பயம், கடத்தப்படுதல், பலாத்காரம், அறுவை சிகிச்சை, தொத்து நோயால் தொல்லை, கற்பழிப்பு, ஜெயில் தண்டனை, கீழே விழுதல், கீர்த்தி பங்கம் முதலியவை உண்டாகும்.

                * லக்னாதிபதி எதிரிடை நட்சத்திரத்தில் அதன் திரிகோண நட்சத்திரங்களில் 9 – ஆம் பாவாதிபதி இருந்தால் பாக்கியம் இழப்பு, பதவி பறிபோதல், அவமானம் நாஸ்திக தன்மை, கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் தோல்வி, கெட்ட ஆவிகளால் தொல்லை, தந்தை , தந்தை வகை விரோதம், ஆபத்து கண்டம், கடல் ஆகாய பயணங்களில் ஆபத்து, தந்தையின் உடல் நிலை உயர்வு நிலைகளில் பாதிப்பு சொத்து வகையில் தகராறு பாதிப்பு.

                லக்னாதிபதியின் எதிரிடை நட்சத்திரங்களில் அதன் திரிகோண நட்சத்திரங்களில் 10 – பாவாதிபதி இருந்தால் தன் பெற்றோர்களுக்க தன்னை சேர்ந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கரும சடங்குகள் செய்ய முடியாமற் போகுதல் நிலையான தொழில் இல்லாமை, சமூக பணிகளில் கெட்ட பெயர், ஸ்தல யாத்திரைகளில் பாதிப்பு, பட்டம் பதவி இழப்பு, மூத்தவர்களுக்கு ஆபத்து, தொழில் பிடிப்பற்ற நிலை.

                * லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடைய நட்சத்திரத்தில் அதன் திரிகோண நட்சத்திரங்களில் 11 – ஆம் பாவாதிபதி இருந்தால் இன பந்துக்களால் தொல்லை எடுத்த காரியத் தோல்வி, உடல் பாதிப்பு, தாயின் நீண்ட ஆயுள் கெடுதல், மருமகன், மருமகளால் தொல்லை, கடிதங்கள் மூலம் வருத்தம், எதிரியால் தோல்வி, மூத்த சகோதர வகையில் திருப்தியற்ற நிலை அல்லது இல்லாமை 2 – ஆம் தாரத்தினால் விவகாரம், பாட்டன், பாட்டிமார்களால் தொல்லை பாதிபபு போன்றவை உண்டாகும்.

                லக்னாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தில் திரிகோண நட்சத்திரங்களில் 12 – ஆம் பாவாதிபதி இருந்தால் தூக்கம் இன்மை, படுக்கை சுகம் கெடுதல், தொலை தூர பயணத்தால் பாதிப்பு, பரதேச வாசம், மோசடி, பிரிவிணை, ராஜ துரோக செயல்கள் சிறை பயம், கீழ்தரப்பட்ட ஆட்களால் ஆபத்து, மிருக பயம், உடல் பங்கம், சூறையாடுதல், கொள்ளை அடித்தல் அரசாங்க விரோத காரியத்தால் பயம், இடக்கண் கோளாறு, தேகத்தில் இடது பாகம் கோளாறு, கால் பாதம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

                *தனகாரகன் அல்லது தனாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தில் ராசியாதிபதி செல்லும் போது தன நஷ்டம் திருட்டு பயம், சோரபயம் போன்றவை ஏற்படும்.

                திசா நாதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்களில் கோச்சாரத்தில் எந்த பாவாதிபதி சஞ்சாரம் செய்கிறாரோ அக்காலத்தில் அப்பாவ சம்பந்தப்பட்ட விஷயங்கள் மூலம் பாதிப்பு ஏற்படும்.  இப்பாதிப்பு திசா நாதன் நட்சத்திரத்திலோ அப்பாவதிபதிகளின் நட்சத்திரங்களிலோ அதன் திரிகோண நட்சத்திரங்கள் வரும் நாளில் ஏற்படும் இதன்படி புத்தி நாதனுக்கும் அந்திர நாதனுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.

கோள்களின் கோலாட்டம் – 1.10 கோள்களின் இயக்கம்

51

 

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்ற வார்த்தைகளுக்கு பொருள் தேடுவது என்றால் எங்கும் செல்ல வேண்டாம்.  இதன் பொருள் நம்மிடமே உள்ளது.  ஆண் அண்டத்தில் உள்ள கோள்களின் கதிர் வீச்சு பிண்டமான நம்மை ஆட்கொள்வதில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.  அண்டத்தில் உள்ள கோள்களின் கதிர்வீச்சு பூமியில் பாய்வதையே அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கிறோம்.  பஞ்ச பூதங்களை நவக்கிரகமாகவும், 27 நட்சத்திரங்களாகவும் பாகுபடுத்தி விட்டு இவைகளையே மனிதனின் அங்கங்களில் குடியேற செய்து வீட்டின் உரிமையாளராக பஞ்சபூதமும் அவரின் உதவியாளர்களாக நவக்கிரகங்-களும், இந்த உதவியாளர்களுக்கு காரியதரிசிகளாக  27 நட்சத்திரங்களும் இருந்து மனித உடலுக்கு வாடகையாக தந்து வாடகையை வசூலிக்கும் தன்மைகளைப் பார்க்கும்போது இதன் விநோதம் என்ன? அதன் விளையாட்டும் ஆடும் ஆட்டமும் படுத்தும் பாடும் அப்பப்பா…..

                பஞ்சபூதங்களான பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற தன்மைகளின் பிரதிபலிப்பாக குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், புதன், சனி, ராகு, கேது முறையே பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற இயக்கத்தை எடுத்துக் கொண்டு மேசம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளை தன்னுள் அடக்கி மனிதனை இயக்கும் கர்த்தாவாக திகழ்ந்து சிவசக்தி சொரூபமாக நின்று இயங்கும் ” ஜம் ” பீஜத்தின் தன்மையான ‘‘ நகாரம் ’’ இதுவே.  லம், ‘ க்லீம் ’ பீஜத்தின் தன்மையான ‘‘ மகாரம் ’’ ‘‘றீம்’’ பீஜத்தின் தன்மையான ‘ வகாரம் ’ இதுவே யம்

‘‘ ஸ்ரீம் ’’ பீஜத்தின் தன்மையான ‘‘ யகாரம் ’’ இதுவே ஹம்.  இதுவே தான் அண்டமான நின்று இயங்கும் ‘‘ நமசிவய ’’ இதன் ஒடுக்கமே பரம்பொருள்.  இதுவே ஜோதிமயம்.  இதனுள் நின்று செயல்படுவதே சக்திமயம்.

                ஜோதிமயமாக நின்று இயங்கும் பராசக்தியின் பல உரு தோற்றப் பிரிவுகளே படைக்கும் தொழிலுக்கான பிரம்மா இவரின் இயக்கத்தில் குரு காக்கும் தொழிலுக்கான விஷ்ணு இவரின் இயக்கத்தில் சுக்கிரன், சந்திரன், அழிக்கும் தொழிலுக்கான ருத்திரன் இவரின் இயக்கத்தில் சனி, ராகு, கேது அருள் பாலிக்கும் தொழிலுக்கான மகேஸ்வரன், இவரின் இயக்கத்தில் புதன் ஆக நவக்கிரகங்கள் அவரவரின் இயக்க கர்தாவின் ஏவலாளிகளாக நின்று செயல்படுவது தான் மனித தேகம்.  மரம், செடி, கொடி, புல் பூண்டு, ஊர்வன, பறப்பன, நடப்பன போன்ற அனைத்தும் நவக்கிரங்களின் சக்தி மூலமே நடைபெறுகிறது.

                இந்த நவக்கிரகங்கள் மனித தேகத்தினுள் புகுந்து விளையாடும் போது? நான்.. எனது..சாதூர்யம்..திறமை..பராக்கிரமம்..புத்திசாலித்தனம் முயற்சி.. என்பதெல்லாம் எங்கே? இந்த மனிதனுக்க எது சொந்தம்? மனிதனி தேகத்தில் அமைந்த 72000 நாடி நரம்புகளும், நவக்கிரகங்களின் உப அதிகாரிகள் பங்கு எடுத்து செயல்படுவதேயாகும்.  இம்மனிதனின் தேகத்தின் முக்கியமான அம்சம் வாதம்-பித்தம்-சிலேத்துமம்.  இவைகளில் குரு-புதன்-சனி-வாத அதிகாரியாகவும், சூரியன்-செவ்வாய்-ராகு-கேது பித்த அதிகாரியாகவும் நின்று செயல்படுவதை கண்கூடாக பார்க்கலாம்.

                நமது தேகத்தின் கால் பகுதியை பிரம்மாவும், வயிற்றின் பகுதியை விஷ்ணுவும், மார்பின் பகுதியை ருத்திரனும், கண்டஸ்தானத்தின் பகுதியை மகேஸ்வரனும், புருவ மத்தியில் சதாசிவமும் நின்று மற்ற பகுதிகைளை நவக்கிரகங்களுக்கு அளித்து நவக்கிரகங்கள் தனது இயக்கத்தை 27 நட்சத்திரங்களுக்கு அதன் தேவதைகளுக்கு பங்கிட்டு தந்து நடத்தும் மாயா வினோதத்தை என்ன சொல்வது?

                எலும்பு மாமிசம் தோல், நரம்பு, ரோமம் போன்றவற்றின் பராமரிப்பு குருவும், வேர்வை, மூத்திரம், வாய்நீர், உதிரம், விந்து போன்றவற்றின் பாராமரிப்பு சுக்கிரன்-சந்திரனும், பசி, தாகம், நித்திரை, மைதுனம், சோம்பல் போன்றவற்றின் பராமரிப்பு சூரியன், செவ்வாயும், உசும்புதல் நடத்தல், இருத்தல் தாண்டல், படுத்தல் போன்றவற்றின் பராமரிப்பு புதனும், பயம் மோகம், துவேசம் வெட்கம் திடம் போன்றவற்றின் பராமரிப்பு சனி-ராகு-கேதுக்கள் எடுத்துக்கொண்டு ஆடும் கோலாட்டம் அப்பப்பா… குரூர குணத்தின் செயலாளராக சந்திரன், புதன், குரு, சுக்கிரன் நின்று நர்த்தனம் புரியும் லீலையை சொல்லவும் வேண்டுமா? சத்தியம், தர்மம், போன்றவற்றிற்கு குரு, புதன், சுக்கிரன் அதர்மம் கலந்து சந்திரன், சூரியன், சனி, செவ்வாய், ராகு தர்மம் அதர்மம் கலந்து நிலைக்கு சந்திரன், கேதுவாக நின்று இயங்கும் இதே போல் நமது தேகத்தின் ஒவ்வொரு மயிர் துவாரத்திலும் நின்றுஇயங்கும் தெய்வம் கிரகம் நட்சத்திரம் தன் தேவதைகள் போன்ற அமைப்பை இதுவரையில் நாம் தத்துவார்த்தமாகவும் சித்தர்கள் ஞானிகள் மகான்களின் வழிமுறைகளிலும் பார்த்தோம்.  இவ்வமைப்பு பெற்ற கிரகங்கள் மனித பிறவி எடுத்த நாம் இப்பூமியில் அவதரித்த பிறந்த நேரத்திற்கொப்ப ஊழ்வினை புண்ணிய பாவங்களுக்கு தக்கப்டி சோதிட சாஸ்திர ரீதியில் ஜாதகத்தில அமர்ந்து நடத்தும் நாடகங்களை செயல்பாடு இயக்கங்களை பற்றிய விசயங்களை பார்க்கலாம்.

                நிலத்தின் இயக்க கர்த்தவான குரு வார்த்தை ( நாளை ) யும், நீரின் இயக்ககர்த்தாவான சுக்கிரன்-சந்திரன் திதியையும் நெருப்பின் இயக்க கர்த்தாவான சூரியன், செவ்வாய் நட்சத்திரத்தையும் காற்றின் இயக்க கர்த்தாவான புதன் யோகத்தையும், ஆகாயத்தையுன் இயக்க கர்த்தாவான சனி, ராகு, கேது கரணத்தையும், இயக்கும் தன்மையை, ‘‘ பஞ்சாங்கம் ’’ இதுவே நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் போன்ற ஐந்து.

                அண்டத்திலிருந்து செயல்படும் இவைகள் பிண்டமான பூமி நீரில் அடங்கி பூமிநீர் இரண்டும் நெருப்பில் அடங்கி நிலம், நீர், நெருப்பு, மூன்றும் காற்றில் அடங்கி இவைகள் நான்கும் ஆகாயத்தில் அடங்கி ஒடுங்கி செயல்படும்.  இவ்வுண்மை நிலையை கண்டவரே வியோமவெளி யான, பரவெளியில் நின்று ஒளிப்பிழம்பாக இருந்து அருள்பாலிக்கும் சித்தர் மகான் யோகி மகரிஷி போன்றவர்கள் இந்லையை வாசி மூலம் அறியும் பெரும் பாக்கியத்தை பெறும் வாய்ப்பு மனித பிறவிக்கேயாகும்.

                ‘‘அரிது அரிது மானிட பிறவி கிடைத்தல் ’’ என்ற பெரும் பேற்றை பெற்ற இம் மனித பிறவியை நவக்கிரகங்களின் கதிர்வீச்சு காற்றில் கலந்து சுவாசத்தின் மூலம் மனித தேகத்திற்குள் சென்று தோற்றுவிக்கும் விசித்திரங்கள் தான் எத்தனை எத்தனை..

                பராசக்தியின் படைப்பில் எவ்வளவோ மாற்றங்கள், விசித்திரங்கள், வினோதங்கள் இவையெல்லாம் எப்படி எவ்விதத்தில் நிகழ்கின்றன என்பதை சிந்தித்துப்பார்த்தால் சிந்தனை தான் சிறகடித்து பறக்குமே ஒழிய நிலையான முடிவிற்கும் இடத்திற்கும் வரமுடிவதில்லை.  இதேபோல் அத்தெய்வத்தால் சிருஷ்டிக்கப்பட்ட நவநாயகர்கள் நடத்தம் வினோத விசித்திரங்களை காணும்போது மிகவும் ஆச்சரியமும் ஆராய்ச்சிக்குரியதாகவும் உள்ளது.  நவக்கிரகங்கள் நம்மை பல கோணங்களிலும் இயக்கி நன்மை தீமைகளை அடை செய்கின்றன.  இதே போல் நம் உடல் உறுப்புகளையும் இயங்க செய்கின்றன.

                * நம் கண்களுக்கு ஒரு விதமான காந்த சக்தியையும் எலும்புகளுக்கு பலத்தையும் உடலை இயக்கும் ஆன்மாவாக உடலை உருவாக்க காரணமாக, தந்தை என்ற தகுதியோடு செயல்படும் சூரியன்…

                * உடலுக்கும், மனத்திற்கும், எண்ணங்களுக்கும் தாய்க்கும் அதிபதியாக சந்திரன் நன்று இயங்குகிறார்.  இவர் மிகவும் துரிதமாக செயல்படும் கிரகமாகும்.  க்ஷண நேரத்தில் மனிதனின் மனதை மாற்கும் தன்மை உள்ள இவர் செய்யும் வினோதங்கள் பல.. பல..பல..

                * வீறு கொண்டு செயல்பட செய்யும் தைரிய பராக்கிரம சாதுர்யம் உஷ்ணத்தை ஏற்றும் கோபத்தை  தோற்றுவித்து இரத்த வேகத்தை அதிகப்படுத்தும் சகோதரகாரகர் எனற் பொறுப்பை ஏற்று செயல்படும் பூமகன் செவ்வாய் நகைச்சுவை நரம்புகளை முறுக்கேற்றும் நிலை அறிவாற்றல் பலவகையான சூழ்நிலைகளிலும் அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளும் ஆற்றல் தாய்வகை மாமன் என்ற தகுதியை பெற்ற புதனின் மர்மம்.

                * உடலின் தலைமையகமாக இருந்து செயல்படும் மூளையை கொண்டு செயல்படும் காரண காரியங்களுக்கும் போக பாக்கியமான உடல் உறவிற்கும் வம்சவிருத்திக்கும், ஆஸ்திக தன்மைக்கும் பணம் என்ற பெரும் தகுதிக்கு உரியவராக குரு காம உணர்வு உல்லாசம், அழகுபடுத்திக் கொள்ளும் தன்மை மதியை மயங்கச் செய்யும் உணர்வுகளுக்கும் கணவன், மனைவியை அழைத்து வரும் பொறுப்பாளராகவும் நின்று இயங்கும் சுக்கிரன் தன் லீலா வினோதங்களை நடத்தும் பாங்கே தனி.

                * நீச்ச உச்ச தன்மைகளுக்கும் பலாத்காரம், பிடிவாதம், நியாயம், தர்மம், புண்ணியம், பாவம் இவைகளை சீர்தூக்கி பார்க்கும் அதிகாரம் பெறுவதோடு ஆயுளுக்கு பொறுப்பாளாரக நின்று இயங்கும் சனி.

                * யோகத்தையும், உடல் உறுப்புகளில் இடுப்பிற்கு கீழ் உள்ளவைகளை செயல்படுத்தும் திறன், அறுவறுக்க தக்கவைகளை அனுபவிக்க தூண்டும் ராகு.

                * ஞானம் எந்த காரியத்தை எவ்வகையில் செயல்பட வேண்டும்.  இடம், பொருள் அறிந்து செயல்படும் ஆற்றல் எதையும் சிந்தித்து செயல்படும் தன்மை போன்றவைகளை இயக்கும் கேது.

                இவர்கள் நமது வினை விதி செயல்களுக்கொப்ப நமது உடல் அமையும் சக துக்கங்களை தன்னுடன் வைத்து நடத்தும் கோலாட்டம் எந்தெந்த வகையில் எப்படி செயல்பட்டு மனித வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை கோள்கள் மூலம் அறியும் பல சிறப்பு விதிகளைப் பற்றி பார்க்கலாம்.

 44

                                                            நட்சத்திர இயக்கம்.

                சோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு உள்ள விசயங்கள் அனைத்தும் நடைமுறைக்கு ஒத்து வருவதாக இல்லை.  பலவகையான கணிதங்கள் ஆய்வுகள் செய்தும் பலன்கள் தவறுவததை பார்க்கும் போது இந்த கோள்களின் கோலாட்டத்தை நினைக்கும் போது புரியாத புதிராக உள்ளதை யாரும் மறுக்க இயலாது.  இவ்வகை கோலாட்டத்தை ஒரளவாவது எவ்வகையிலாவது தெரிந்து நடந்து கொண்டால் நம் வாழ்க்கைக்கும் பெரும் வழிகாட்டியாக இருக்கும்.  ஜாதகத்தில் சொல்லப்பட்டுள்ள எத்தணை வர்க்க கணிதங்கள் உண்டோ அத்துணை கணிதங்களையும் போட்டு பார்த்து பல நூல்களில் சொல்லப்பட்டுள்ள பாடல்களை அனுசரித்து பலன்களை சொல்லும்அபாது பலன்கள் பிசகி விடுவதைப் பார்க்கிறோம்.  இதற்கு எங்காவது ஒரு வழி தென்படுமா என்ற ஆதங்கத்தோடு வாசி நிலையில் இருந்து பார்த்தபோது ஒரு வழி தென்பட்டது.

                அவ்வழியின் முழுவடிவமே இந்த நூல் என்றால் மிகையாகாது.  ஒரு சின்ன விசயத்தில் பெரும் ரகசியமே அடங்கி உள்ளதைப் பார்க்கும்போது இது கோள்களின் கோலாட்டமே என்பது உறுதியாகிறது.  பல வகையான ஆராய்ச்சிகள் நூல்களின் ஆதாரங்கள் எல்லாம் ஒரு சின்ன சமாசாரத்தில் பறந்து விடுகிறது.  எனில் இந்த கோள்களின் கோலாட்டத்தை என்ன வென்று சொல்வது.

                பெரும் ஜோதிட மேதைகள் ஆராய்ச்சியாளர்கள், வானிலை ஆய்வாளர்கள், அனுபவசாலிகள் எல்லாம் இந்த கோள்களிடம் என்ன செய்ய இயலும்?

                கிழமை-திதி-நட்சத்திரம் இந்த மூன்றும் நமக்கு சாதாரண விஷயம். இதில் எவ்வளவு நட்பங்களை அடக்கி உள்ளார்கள்.  எவ்வளவு செயல்பாடுகள் இத்தோடு யோகம்-கரணம் இந்த ஐந்தும் பஞ்ச பூதங்களாக நின்று நம்மை கோள்களின் வழியாக எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதை காணும்போது இதற்கு என்ன பெயர் சொல்வது.  இது கோலாட்டம் தானே, ஒரு ஜாதகத்தில் கோணாதிபதி, கேந்திராதிபதி, உச்சம், ஆட்சி, நட்பு, பல யோகங்கள், சப்தவர்கம், அட்டவர்கம், தசவர்கம் இதில் எல்லாம் நுழைந்து பார்த்து இன்னும் என்னென்ன வழிகள் எல்லாம் உள்ளதோ அதில் எல்லாம் நுழைந்து வெளியே பந்து ஒரு பல நிர்ணயம் செய்யும் போது ‘‘ ரிசல்ட் ’’.

                ஜாதகத்தில் சொல்லப்பட்ட வர்தனீ குல சம்பதாம் பதவீ பூர்வ புண்ணியனாம் என்ற நிலைப்படி ஜாதகனின் குலசம்பத்து வர்கங்களின் தன்மையையும், அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு தக்கப்படிதான் கோள்களின் கோலாட்டம் என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டியதாகும்.  ஜாதகத்தில் சொல்லப்பட்ட எந்த யோகமானாலும் அவன் செய்த பாவ புண்ணியத்திற்கு தக்கப்படிதான் செயல்படும் என்பது உறுதியான ஒன்றாகும்.

                இப்பூர்வ பாவபுண்ணிய பலத்தை நாம் நட்சத்திரங்களின் அமைப்பை பொறுத்தே தான் தெரிந்து கொள்ளமுடியும் என்பது தெளிவு, 27 நட்சத்திரங்கள் ஒரு ஜாதகனின் பலமான கட்டிடத்திற்கு உரிய தூண்கள் ஆகும்.  இந்த தூண்களின் பலம் குறைந்தால் கூட்டம் ஆடத்தான் செய்யும். இந்த 27 தூண்களில் எந்த இடத்தில் உள்ள தூண் பலம் குறைந்ததாக உள்ளதோ அந்த இடம் மட்டும் பழுதாகி விடலாம்.  அந்த பழுதான இடத்தில் எவ்வளவு பலம் பொருந்திய கோள் இருந்தும் என்ன பயன்?

                நட்சத்திரங்கள் என்னும் தூண்களின் பலம் அறிய பல நூல்களில் பல முறைகள் சொல்லி உள்ளனர்.  அதை பெரும்பாலான ஜோதிட ஆய்வாளர்கள் பெரிதாக எடுத்துக் கொளவதில்லை.  இதனால் என்ன வரப்போகிறது என்ற நிலையில் அதை எல்லாம் கண்டு கொள்வதில்லை. காரணம் அதை பெரிய அளவில் எந்த நூலிலும் சொல்லப்படவில்லை.

                அப்படி பெரிய அளவிலும் சொல்லப்படாத ஒரு சின்ன விசயத்தை பெரிய ரகசியமான சமாச்சாரம் உள்ளதைப் பார்க்கும்போது இது கோலாட்டம்தானே?

                ஜெய்முனி சூத்திரம் 8000, பெரிய வருஷாதி நூல் சினேந்திரமாலை, குமாரசுவாமியம், சுகர் பிரம்மரிஷி வக்கியம், போன்ற பழைய  பிரதிகளின் அடிப்படையில் சொல்லப்பட்டவைகளை கையாண்டு பார்த்ததில் கிடைத்த முத்தை ஏன் மாணிக்கத்தைத்தான் உங்கள் முன் வைத்துள்ளேன். அதில் சொல்லி உள்ள சின்ன விசயங்களை மிகைப்படுத்தி பார்த்த பொழுது ஆச்சரியப்படும் அளவில் பலன்கள் கிடைத்தபோது இந்த கோலாட்டத்தை என்ன சொல்வது.

                பல பெரிய யோகங்களை அடக்கிக் கொண்டுள்ள ஜாதகத்தை பார்க்கும் போது அதற்குரியவர்நிலை… யோகத்திற்கும், ஜாதகருக்கும் சம்பந்தம் இல்லாத ஒன்றை காண்கிறோம்.  அதே சமயத்தில் எந்தவிதமான யோகங்களையும் தன்னுள் அடக்கிக் கொள்ளாத ஒரு ஜாதகத்தைப் பார்க்கும்போது, அதற்குரியவர்நிலை ஆச்சரியப்படும்படியாக உள்ளது.

                இதற்கெல்லாம் காரணம் ஜாதகத்தின் நட்சத்திர தூண்களே.  இத்தூண்களின் அமைப்பைப் பொறுத்தே அனைத்தும் நிகழ்கிறது.  கோள்களுக்கு ஆதாரமே நட்சத்திரங்கள்தானே.  ஒருவரின் உயர்ந்த நிலை, பதவி, கௌரவம், பணபலம், உடல்பலம் போன்ற எல்லாவற்றிற்கும் நட்சத்திரத்தூண்கள் சரியாக இருக்க வேண்டும் என்பது உறுதியாகும்.

                ஒரு ஜாதகத்தை கையில் எடுத்துக்கொண்டோமேயானால், அந்த ஜாதகனின் நிலை இப்படித்தான் என்பதை முதலில் நிர்ணயம் செய்து கொள்ள வழி வகுப்பது இந்த நட்சத்திரத் தூண்களே.  இந்த நட்சத்திரத் தூண்கள் பலம் இழந்து எதிரிடையான நிலையில் இருந்தால் என்னதான் போகவானாக ஜனித்து இருந்தாலும் அது செயல்படுவதில்லை என்பது கண்கூடு.  ஜாதகர் பிறக்கும் போது நின்ற கோள்களின் அடிப்படையான ஆதாரமான ஊன்றுகோலான நட்சத்திரங்கள் ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரங்களின் கோள்கள் நின்று விட்டால் அவ்வளவே.

 

 45

 

நட்சத்திரங்களின் எதிரிடை.

                ஒருவரின் பிறந்த லக்கினமோ அல்லது லக்கினத்தின் எதிரிடையான நட்சத்திரமாக ஜாதகர் பிறந்த நட்சத்திரம் அமைந்துவிட்டால் இவரின் நிலை எவ்வளவு உயர்ந்ததாக இருந்துவிட்டாலும் இவர் அனுபவிக்காத நிலையை தந்து விடுகிறது.

                * ஜாதகரின் லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் பிறந்த லக்கினம் அமைந்துவிட்டால் இவர் வாழ்க்கை விசித்திரமாகத்தான் இருக்கும்.

                * லக்கினத்தின் 4,5,7,9,10,11 க்குரியவர்கள் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரம் ஜாதகரின் பிறந்த நட்சத்திரமாக இருந்து விட்டாலும் பாதிப்பான பலன்களையே தந்துவிடுகிறது.

                * ஒரு பாவாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் இன்னொரு பாவாதிபதி நின்றால் அந்த பாவத்தின் பலன்கள் செயல்படாமல் நின்றுவிடுகிறது.

                * உதாரணமாக :- நான்காம் பாவாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் 10- ஆம் பாவாதிபதி நின்றால் தொழில் வகை-தாய் வகை சுகம் ஜாதகருக்கு கிடைப்பதில்லை.

                * தன குடும்ப வாக்குஸ்தானதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரம் ஜாதகரின் பிறந்த நட்சத்திரமாக வந்தால் மேற்படி பலன்கள் சித்திப்பதில்லை.

                * சகோதர தைரிய வீரிய பராக்கிரம ஸ்தானாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரம் ஜாதகரின் பிறந்த நட்சத்திரமாக வந்தாலும் மேற்படி பலன்கள் சித்திப்பதில்லை.

                *  எந்த ஒரு பாவதிபதியின் நட்சத்திரன் எதிரிடையான நட்சத்திரம் ஜாதகரின் பிறந்த நட்சத்திரமாக வந்து விட்டால் அந்த ஜாதகருக்கு அப்பாவத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் முழுமையா கிடைப்பதில்லை என்பதை அனுபவத்தில் காணலாம்.

                * ஜாதகரின் லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் 5, 9 – க்குரியவர்கள் நிற்பது மிகவும் தவறை காட்டுவதாகும்.  இப்படிப்பட்ட ஜாதகங்கள் யாவும் பூர்வ கர்ம தோஷம் மிகுந்ததாக உள்ள ஜாதகமாக செயல்படுவதையும் பார்க்கலாம்.

                * தலைவர் காமராஜைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது.  அவர் ஜாதகத்தில் லக்கினாதிபதியான சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான ஆயில்யம் நின்ற நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்ததால் தான் அவர் எவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்த போதிலும் தனிப்பட்ட சுகம் எதுவும் அடைய முடியாத நிலைக்கு ஆளானார்.

                * இதே போல் சந்திரனின் எதிரிடையான நட்சத்திரத்தில், 7 -க்குரிய சனி உத்திராடத்தில் அமைந்ததால் இல்லற சுகம் பாதித்தது.  9 – க்குரிய – வரான குரு, சந்திரனின் எதிரிடையான ஆயில்யம் நின்ற நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்ததால் தான் அவர் எவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்த போதிலும் தனிப்பட்ட சுகம் எதுவும் அடைய முடியாத நிலைக்கு ஆளானார்.

                * இதே போல் சந்திரனின் எதிரிடையான நட்சத்திரத்தில், 7 – க்குரிய உத்திராடத்தில் அமைந்ததால் இல்லற சுகம் பாதித்தது. 9 – க்குரியவரான குரு, சந்திரனின் எதிரிடையான நட்சத்திரமான ரேவதியில் இருந்ததால் அரச பதவிகள் நிலைக்காமல் போனதற்கு ஒரு காரணமாக அமைவதைப் பார்க்கும்போது இது ‘‘ கோள்களின் கோலாட்டம் ’’ என்பதில் சிறிதும் சந்தேகமில்லையே.  இதே போல் சாதாரண நி¬யில் இருந்த இவர் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வர சாதகமாக இருந்த நட்சத்திரம் என்னவாக இருக்கலாம் அதையும் பார்க்கலாமே ..

                * பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான 5 – க்குரிய செவ்வாய் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரமான மகத்தில் நாலுக்குரிய சுக்கிரன் வாக்குஸ்தானாதிபதியான சூரியன் நின்ற நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தில் சுக்கிரன் அமர்ந்ததால் கல்வி அறிவு இல்லாமலே பெரும் புகழ் பெறக் காரணமாகிறது.

                * பதவி ஸ்தானாதிபதியும் பாக்கியாதிபதியுமான குரு நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் பூர்வ புண்ய ஸ்தானாதிபதியும் ராஜ்ய ஸ்தானாதிபதியுமான செவ்வாய் அமர்ந்து உள்ளதால் இவருக்கு உயர்ந்த பதவிகள் சென் இடமெல்லாம் சிறப்பு பெரிய ராஜ தந்திரியாக பவனி வந்தார் என்றால் இதுவும் ஒரு கோலாட்டம்தானே.

                * தற்போது இந்த கோலாட்டத்தில் சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கும் பிரதமர் நரசிம்மராவ் ஜாதகப்படி அவரின் சாதக நட்சத்திரங்களின் நிலையும் எதிரிடையான நட்சத்திரங்களின் நிலையும் எவ்வாறு அமைந்து உள்ளது என்பதை பார்க்கலாம்.  இவர் தற்போது இந்த கோள்களின் பலத்தால் தான் நிற்கிறார் என்பது மறுக்க முடியாது. 

                இவரின் முதல் பலம் லக்கினாதிபதியான புதன் நின்ற நட்சத்திரத்தில் எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரனும் எதிரிடையான நட்சத்திரத்தில்

9-க்குரிய சுக்கிரனும் இல்லாமல் இருப்பதுதான்.

                * லக்கினாதிபதியான புதனின் சாதகமான நட்சத்திரத்தில் 9 – க்குரிய சுக்கிரன் இருப்பது 5 – க்குரிய சனி இருப்பது இவரின் பூர்வ புண்ணிய பலமே என்றால் தவறில்லை.  அரசியல் வாழ்வில் நீடித்த நிலையில் ஏதோ ஓர் பதவியை நீண்ட காலமாக வகித்து வந்த இவரின் பூர்வ புண்ணிய பலமே என்றால் தவறில்லை.  அரசியல் வாழ்வில் நீடித்த நிலையில் ஏதோ ஓர் பதவியை நீண்ட காலமாக வகித்து வந்த இவரின் ஜாதகம் பற்றி சொல்லும்போது இக்கோலாட்டத்தின் வினோதத்தை அறிய முடிகிறது.

                லக்கினாதிபதியான புதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரமான பூரத்தில் குரு உள்ளதால் இவருக்கு அடிக்கடி மறைமுக எதிர்ப்புகளும் பதவிக்கு ஆபத்து வரும் சூழ்நிலைகளும் உருவாகிறது.

                * தற்சமயம் இவருக்கு தசாநாதனான செவ்வாய் சாதகமான செவ்வாய் நின்ற நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தில் லக்கினாதிபதியான புதன் உள்ளதால் இவரை 10.3.1995 வரை அசைக்க முடியாத நிலையே காணுகிறது.  இத்தேதிக்குப் பின் இவராக ஒரு முடிவிற்கு வரும் நிலையே தெரிகிறது.

                சிறப்புமிக்க பாரம்பரித்தில் பிறந்து வழிவழியாக அரச பதவிகளில் நின்று செயல்பட்ட இந்தியாவையே விலைக்கு வாங்கும் தகுதி படைத்த குடும்பத்தில் பிறந்த அரச பதவியை வகித்து அரசியலில் தன் காலத்தை கழித்து எதிர்பாராத வகையில் துர்மரணமடைந்த மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இருவர் ஜாதகத்தில் ஏற்பட்ட கோலாட்டத்தைப் பற்றி பார்க்கலாமா?

                ரோஜாவின் ராஜாவாகத் திகழ்ந்த நேரு அவர்களின் புதல்வியும் மக்கள் மனதில் குடி கொண்ட இந்திராகாந்தி அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி நின்ற நட்சத்திரமாக உத்திராடத்தின் சாதகமான நட்சத்திரமான பூசத்தில் லக்கினம் அமைந்த நிலை 9 – க்குரிய குரு ரோகிணியால் அமர்ந்த நிலை,  இரண்டும் இவரின் பதவிகளுக்கு பேரும் புகழுக்கும் காரணமாக இருந்த நிலையாகும்.  9 – க்குரிய குரு நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில், 5 – 10 – க்குரிய செவ்வாய், புதன் நின்றதால் தைரியம்-பராக்கிரமம்-ராஜதந்திரம்-அரசியல் சிறப்பு- கல்விவளம்-பேச்சுதிறன் எல்லாம் அமைந்தது.  இப்படி அமைந்த இவரின் ஜாதக நிலையில் கோள்களின் கோலாட்டம் நட்சத்திரங்களின் எதிரிடையாக நின்று செயல்பட்ட ஒரு வினோத நிலைமை பார்க்கும்போது…

                ஆயுள்காரகரும், அஷ்டமாதிபதியுமான சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் இவரின் விரையாதிபதி அமர்ந்து உள்ளது. 12-ல் உள்ள கேது அமர்ந்து உள்ளது குறிப்பிடத் தக்கது.  இவரின் உயிர் இழப்புக்கு புதன் என்ற அரசியல் வாழ்வு கேது என்ற அன்னிய மறைமுக எதிர்ப்பு சக்திகள் காரணமாகிறது.  இவர் இறந்தது புதன் கிழமை என்பது மறக்கமுடியாதது.

                புதன் நின்ற நட்சத்திரத்தின எதிரிடையான நட்சத்திரத்தைப் பெற்று செவ்வாய் புத்தி காலத்தில், புதனின் எதிரிடையான நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில், புதனின் நட்சத்திரமான ஆயில்யத்தில் சனி இருந்து தனது தசையை நடத்தும்போது, லக்கினாதிபதியான சந்திரன் ( என்ற உடலுக்கு ) நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தைப் பெற்ற செவ்வாய் என்ற ஆயுதத்தால் மரணம் ஏற்பட்டது.  இதுவும் 3 – ஆம் இடம் என்ற அடிமை ஸ்தானமான ( தனது வேலைக்காரர் என்ற ) பாவத்திற்கும் புதனே வருகிறார் என்றால் இந்த கோலாட்டத்தை என்னவென்று எப்படியென்று சொல்வது?

                முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் புதல்வர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஜாதகத்தை ஆய்வு செய்யும்போது இவரின் ஜாதகப்படி அமைந்த கோள்களைப் பார்க்கும்போது இவருக்கு எப்படி பிரதமர் பதவி கிடைத்தது என்ற சிந்தனைக் ஜோதிட ஆய்வாளர்களை இட்டு செல்லும் இவர் பிரதமர் ஆவதற்கும், யாருமே சிந்தித்து பார்க்க முடியாத அளவில் கற்பனை கூட பண்ண இயலாத ஒரு நிலையில் இவர் மரணம் ஏற்பட்ட கோர நிலைக்கு என்ன காரணம் என ஆய்வு செய்யும்போது…

                9 – க்குரிய பாக்கியாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினாதிபதி புதன், 5 – க்குரிய ராஜ்ய ஸ்தானாதிபதியான சனி நின்ற நட்சத்திரன் சாதகமான நட்சத்திரத்தில் சந்திரன் 9- க்குரியவரான சுக்கிரன் அமைந்துள்ள சிறப்பு இவருக்கு எதிர்பாராத பிரதமர் பதவியை தந்தது.  சனி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தை பெற்ற சந்திரன் வீட்டில் உள்ள ராகு தசையில் லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தைப் பெற்ற குருவின் புத்தி காலத்தில் இவருக்கு பிரதமர் பதவி கிடைத்தது.

                இவருக்கு பாதிப்பை தந்த எதிரிடையான நட்சத்திரங்க¬ப் பற்றி பார்க்கும்போது…

                5, 6 – க்குரிய சனியின் சாதகமான நட்சத்திரத்தை பெற்ற சந்திரன் வீட்டில் இருந்த ராகு ஐந்தாமிட ராஜ்ஜிய பதவியும் ஆளும் இட சத்துரு ஸ்தான பலனையும் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  பிரதமர் பதவி தந்த இதே ராகு தசைதான் ராஜீவ் காந்தியை எதிரிகளால் உயிர் இழக்க செய்த விந்தையை காணலாம்.

                ஆயுள்காரகர் சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் உடல் காரகர் சந்திரன் நின்று உள்ளது.  இங்கே ஆறுக்குடைய ஆதிபத்தியம் பெற்ற சனி சத்துருக்களால் சந்திரன் என்ற உடலுக்கு பாதிப்பை தர வாய்ப்பை உண்டாக்கி உள்ளது.  லக்கினாதிபதி புதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரமான திருவாதிரையில் ஆயுள்காரகர் சனி அமர்ந்து உள்ளதால் லக்கினாதிபதியான ஜாதகனின் உயிர் பீதி பயத்தை அதிர்ச்சியைத் தரும் அளவில் பிரிந்தது.  இம்மாதிரி செயல்கள் அனைத்தும் நட்சத்திரங்களின் அடிப்படையிலேயே செயல்படுகிறது என்பதை அறியலாம்.

                நமது இந்தியாவின் தற்போது உள்ள ஜனாதிபதி சங்கரதயாள்சர்மா அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தில் 9 -க்குரிய புதன் உள்ளார்.  சந்திரன் உள்ளார் 9-க்குரிய புதன் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினம் அமர்ந்து உள்ளதால் இவருக்கு இவ்வகை சிறப்புகள் கிடைத்து உள்ளது.  இந்த சிறப்பு நீடித்த அளவில் இருக்கும்.  இவருக்கு லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் புதன் இருந்து தனது தசையை நடத்தும் காலத்தில் லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரமான கேட்டையில் ராகு உள்ள புத்தி காலத்தில் ஜனாதிபதி பதவி கிடைத்து உள்ளது.  இன்னும் மூன்று வருட காலம் அவர் பதவியில் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

                கவிதைகளுக்கு நாயகனாய் வார்த்தைக்கு சித்தனாய் எழுத்தில் சுடர் ஒளியாய் ஆன்மீகத்தில் ஜோதியாய், படைப்பில் ஞானியாக திகழ்ந்து வரும் வார்த்தை சித்தர் வலம்புரிஜான் பிரம்ம ஞானியாகத் திகழும் நட்சத்திர சாதக பாதகங்களை ஆய்வு செய்யும்போது,

                லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் பாக்கியாதிபதி புதன், சந்திரன் இவர்கள் இருவரும் நினவாற்றல் கற்பனா வளம் சாதுர்யமம், மனபலம் நுட்பமான ஆய்வு திறன் கதை, கட்டுரை, கவிதைகளை படைக்கும் ஆற்றல் போன்றவை-களோடு, கல்வி ஞானத்தையும் தருகிறார்கள்.

                5 -க்குரிய ராஜ்ஜிய ஸ்தானாதிபதியான சனி நின்ற நட்சத்திரத்திற்கு 9-க்குரிய பாக்கிய ஸ்தானாதிபதியான புதன் சாதகமான நட்சத்திரத்தில் உள்ளதால் இவருக்கு பதவிகள் கிடைத்து.  இனியும் கிட்டும்.  இதில் 9-க்குரிய புதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் 5-க்கரிய சனி இருந்ததால் இடையில் தடை ஏற்பட காரணமாகியது.  எது எப்படி இருப்பினும் லக்கினாதிபதிக்கு 5,9க்குரியவர்கள் நின்ற நட்சத்திர அமைப்பு நன்றாக உள்ளதால் இவர் செல்வாக்கு எக்காரணத்தை கொண்டும் குறைய வழி இல்லை, பட்டம் பதவிகள் கிடைக்கும்.

                பாக்கியாதிபதியான புதன் நின்ற நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தில் ராகு உள்ளதால், 5-க்கரிய சனி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் ராகு உள்ளதால் இந்த ராகு புத்தியில் ஏதாவது ஒரு பதவி கிட்டும் வாய்ப்பு உறுதியாக தெரிகிறது.

                சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் 9 -க்குரியவர் 3,6 -க்குரியவர் நின்ற நட்சத்திரம் ஏற்பட்டதால் இவர் அடிக்கடி பல வகையான எதிர்ப்புகள் போட்டி பொறாமைகள் மனகலக்கம் பயம் வேதனை போன்றவைகளை அனுபவிக்க வேண்டி உள்ளது.

                5 – க்குரிய சனி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் 9-க்குரிய புதன் உள்ளதால் லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தில் புதன் உள்ளதால் சனி தசாகாலம் உயர்வும் உண்டு.

                * சந்திரன் -சுக்கிரன், குரு போன்றவர்களின் நட்சத்திரங்களில் 1, 4, 5, 8, 9, 10, 11 – க்குரியவர்கள் செல்லும்போது எந்த ஒரு சுப பலனும் நடைமுறையில் வருவதை காணலாம்.  2, 3, 7, 12 -க்குரியவர்கள் செல்லும் போது சிறப்பான பலன்களை காண முடியாது.

                9 – குரியவரின் சாதகமான நட்சத்திரங்களான கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நச்டத்திரங்களில் 1, 4, 5, 9,10, 11 – க்குரியவர்கள் செல்லும்போது சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.

                தன் வாழ்க்கையில் பல வகையான கஷ்டங்களை துன்பங்களை அனுபவித்து தனது கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படா வண்ணம் செயலாற்றி ஆன்ம பலம், தெய்வ பலம் மிகுந்த தயாள குணம், தர்ம சிந்தனையின் உருவாக திகழ்ந்து இன்று ஓரளவுதன் வாழ்க்கையை சிறப்புடன் நடத்தி வரும் திருவாளர் எஸ்.எஸ்.மணியன் அவர்கள் ஜாதகப்படி சாதக பாதகங்களை பார்க்கலாம்.

                லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் பாக்கியாதிபதியான புதன் நின்றுள்ளார்.  பாக்கியாதிபதியான புதன் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில், ராகு உள்ளதால் சிறப்பான பலன்களை தருவார்.  இவ்வமைப்பு இவருக்கு உள்ளதால் கீழ்நிலைக்கு வராமல் மேற்படி நட்சத்திர அமைப்பு இவரை பாதுகாக்கும். 51 வயதுக்கு மேல் இவர் உயர்வடையும் வாய்ப்ப்குள் உள்ளது.

                லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் சாதகமான சந்திரன் நின்றதால் இவருக்கு அடிக்கடி பல பாதிப்புகள் மன பயம், குழப்பம், ஏற்றம், இறக்கம் போன்றவை நிகழ்ந்து மறையும்.

                நட்சத்திரங்களின் சாதக நிலையில் உள்ள நட்சத்திரங்களின் உள்ளே கிரகங்கள் தனது ஆதிபத்தியத்திற்கொப் உயர்வு தாழ்வுகளை தருவார்கள்.  வம்சாவழி அவரவர் செய்த புண்ணிய பாவங்களுக்கு தக்கபடி அவர்களின் உயர்வான பதவிகள் யோகம் அமைகிறது.  நட்சத்திரங்களின் எதிரிடையான நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து தசை நடத்தும்போது புத்திநாதன் பெற்ற நட்சத்திரம் சாதகமான நிலையில் இருப்பின் சாதக பாதகம் கலந்து நடக்கும்.  இதில் எந்த கிரகம் பலவானாக உள்ளாரோ அக்கிரகத்தின் பலன்கள் அதிகரித்து காணும்.

                * தெய்வபலம், வம்சாவழி, பாரம்பர்ய தன்மை, குலத்தின் சிறப்பு, புண்ணியத்தின் பலம் போன்றவைகளை பொறுத்து பலன்கள் சிறந்து காணப்படுவதும் தாழ்ந்து காணப்படுவதுமான இருக்கும்.  ஆனால், சுப பலன்களை தராமல் இருக்காது.

                * கோள்கள் மனிதனை தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்தி பலவகையான செயல்களில் ஈடுபடுத்தி அவர்களின் உயர்வு, தாழ்வை நிகழ்த்துகிறது.  அவ்வகையில் உயர்வடைந்த சில ஜாதகங்களைப் பார்க்கும்போது அரசியலில் ஈடுபட செய்து அதன்மூலம் மக்களின் நன் மதிப்பை பெற வைத்த பிரதமர், ஜனாதிபதி, மந்திரி, முதல்வர், எம்.பி., எம்.எல்.ஏ போன்ற பதவிகளைத் தேடித்ர சூரியன், புதன், செவ்வாய், சனி என்ற நான்கு கோள்களின் ஆதிக்கம் நல்லமுறையில் இருந்தால் அவர்கள் அரசியலில் உயர் பதவிகளை பெற வழிவகுக்கும்.  அரசு சம்பந்தப்பட்டவைக்கு ஆன்ம பலம் பொருந்திய சூரியன் மக்களின் தன்னை சார்ந்தவர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுத்தர உதவும் புதன் ( இவர் சகலவிதமான செயல்களுக்கும் தூண்டும் கோலாய் இருப்பவர் ) அத்தோடு அறிவாற்றலுக்கு சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளும் செயலுக்கும் உரியவர் புதன், எதையுமே துணிந்து தைரியத்தோடு சமாளிக்கும் ஆற்றலுக்கும், நிர்வாகத்திறனுக்கும் உரிய செவ்வாய், கடுமையான செயல்களுக்கும் அந்நிய பரிபாலனத்திற்கும் எதையும் சீர்தூக்கி பார்த்து செயல்படுத்தும் திறனுக்கும் உரிய சனி போன்ற கோள்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் அவர்கள் அரசியல் நிபுணர்களாகவும் சாதூர்யம் மிக்கவர்ககளாகவும, நாவன்மை பேச்சுதிறனுக்கு உரியவர்களாகவும், உயர்ந்த பதவிகளை பெறுபவர்களாகவும் ஆகின்றனர்.  இதற்கு பின் நட்சத்திர இயக்கம் தொடங்க வேண்டும்.  அவ்வகையில் உள்ள சில ஜாதகங்களை உதாரணமாக பார்ப்போம்.

                * 5, 9, 10 – ஆம் இடங்கள் அரசியல் பதவி அரசருக்கு சமமான அந்தஸ்துகளை தரக்கூடியவைகள் இந்த இடங்களில் சூரிய, புதன், செவ், சனி போன்றவர்களின் தொடர்பு இருந்தால் நல்ல பதவிகள் கிடைக்கிறது.

அது நீண்ட நாள் வரை செயல்படுகிறது.  தற்போது இந்தியாவின் பிரதமராக உள்ள திரு . நரசிம்மராவ் அவர்கள் தனது 36 வயது முதல் தொடர்ந்து பல பதவிகளில் அரசியல் ரீதியாக இருந்து வந்தவர்.  அவருக்கு 10 – ஆம் இடத்தில் சூரி, புதன், செவ், சனி யோகாதிபதியாக 10 – க்கு வெற்றி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

                * எந்த லக்கினமாக இருந்தாலும் ஒரு சில கிரகங்களின் சேர்க்கையானது 3, 5, 6, 9, 10 – இல் இருந்தால் அதனுடைய சிறப்புத் தன்மை பொருந்தியதாக உள்ளத.  அதே போல் 1, 5, 9, 10 – க்குரியவர்கள் நின்ற நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று சாதகமான நட்சத்திரங்களில் அமைந்து விட்டால் அதன் சிறப்பே தனியாக உள்ளது.

                * 5 – க்குரிய சனி 10 – இல், 10 – க்குரியவர் 3 -ல், 3 -க்குரியவர் 9-இல் சூரியன், புதன் சேர்க்கை உள்ள ஜாதகம் நமது ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அவர்களின் ஜாதகமாகும். 

                * 5 -க்குரிய செவ்வாய் 3-ல், 3-க்குரியவர் வுதன் சூரியனுடன் சேர்க்கை, 9 .க்குரியவர் 5-க்குரியவர் ஒருவருக்கொருவர் தொடர்பு இது மறைந்த தலைவர் காமராஜர் ஜாதகம்.

                5 -ல் சூரியன், புதன், 9-க்குரியவர் பார்வை, 10-க்குரியவர் 5-க்குரியவர் சூரியனோ பரிவர்த்னை இந்த ஜாதகம் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களுடையது.

                * சூரியன், சந்திரன் சேர்க்கையை 9 -க்குரியவர் பார்வை, 10 -க்குரியவர் பலம் பெற்று 10-ஆம் இடத்தை பார்க்கும் அமைப்பு தலைவர் கருணாநிதி ஜாதகத்தில்.

                5 – க்குரியவர் 10-ல், 10-க்ரியவர் 3, 9 -க்குரியவரோடு இணைவு சூரியன், புதன் சேர்க்கை இது மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி உடையது.

                * 5 -க்குரியவர் 10 -ல், 9 -க்குரியவர் 5-ல், 1,9 – க்குரியவர் சேர்க்கை 5 – ல் உள்ள இந்த ஜாதகம் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுடையது.

                * 9 – 1 -க்குரியவர் 1-ல், 5 -க்குரியவர் 11- ல், 3 -க்குரியவர் 9 – ஆம் இடத்தைப் பார்க்கும் இந்த ஜாதகம் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களுடையது.

                * 5 – க்குரிய சனி 10-ல், 3, 9 க்குரியவர் சேர்க்கை, லக்கினத்தில் செவ்வாயோடு, 10 -க்கு வெற்றி ஸ்தானத்தில் சூரியன் அமைந்த இது வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்களுடையது.

                மேலே சொன்ன உதாரண ஜாதகங்கள் படி பார்க்கும்போது சூரியன், புதன், செவ்வாய், சனி தொடர்புகள் 3, 5, 6, 9, 10 – ஆம் இடத்தின் இணைவுகள் இல்லாமல் எந்த ஜாதகமும் இல்லை.  இவ்வகை அமைப்பு பெற்ற ஜாதகங்கள் அரசியல் வாழ்க்கையில், மேடை பேச்சில் மக்களின் அன்பை பெறும் வழிகளில் தனது செயல்களை உருவாக்கிவிடுகிறது.

                அடுத்து ஆன்மீக துறையில் தொடர்பு சிறப்பு மிகுந்தவர்களுக்கு சனி, குரு, சந்திரன், கேது, சுக்கிரன், சூரியன் போன்ற கிரகங்களின் தொடர்பு ஒன்றுக்குள் ஒன்றாக நின்று மனிதனை இயக்கினால் அவர்கள் ஆன்மீக வழியில் சிறப்பு மிக்கவர்களாக உள்ளனர்.  இத்தோடு 1, 4, 5, 10, 12 – ஆம் பாவாதிபதிகளின் தொடர்பும் தேவைப்படுகிறது.  இவ்வகையில் உள்ள சில ஜாதகங்களைப் பார்க்கலாம்.

 • 10 – ல் சூரியன், புதன், சுக்கிரன் இணைவு 5 – இல் கேது, சந்திரனுக்கு குருபார்வை, 10-க்கு, 9- ல் சனி இந்த அமைப்பு ஆதி சங்கரருக்கு உரியது கடக லக்னம்.
 • 10 -ல் குரு, சூரியன், புதன் சேர்க்கை சந்திரன் பார்வை 10 – க்கு
 • 5 – ல் சனி, கேது போன்ற அமைப்பு காஞ்சிமா முனிவர் சங்கராச்சாரியார் அவர்களுடையதாகும்.  சிம்ம லக்னம்.
 • 4 – க்குரிய செவ்வாய் 3 – இல், 3 -க்குரியவர் புதன் சூரியனுடன் சேர்க்கை 9 – க்குரியவர் 5 – க்குரியவர் ஒருவருக்கொருவர் தொடர்பு இது மறைந்து தலைவர் காமராஜர் ஜாதகம்.
 • 5 – ல் சூரியன், புதன், 9 – க்குரியவரின் பார்வை, 10 – க்குரியவர் 5 – க்கரியவர் சூரியனோ பரிவர்த்தனை இந்த ஜாதகம் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களுடையது.
 • 10 – ல் சூரியன், சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை சனி, கேது, சந்திரன் தொடர்பு.  இது அருணகிரிநாதர் ஜாதகம்.  தனுசு லக்னம்.

                மேற்படி கோள்களின் அமைப்பு ஆன்மீகத் துறையிலும் சன்னியாச வாழ்க்கைக்கும் இட்டு செல்கிறது.

                இனி கலைத்துறை, சினிமாத்துறைக்கு உரிய கோள்களின் ஆதிக்கமானது மனிதனுக்கு எவ்வகையில் அமையும் என்றால் கலைக்கு அதிபதி சுக்கிரன் அழகுக்கதிபதி சந்திரன் வேடத்திற்கு அதிபதி புதன். நடிப்பிற்கு அதிபதி சனி, பார்வைக்கு அதிபதி சூரியன் போன்றவர்களின் தொடர்பு ஒன்றுக்கொன்று ஒன்று இருந்து 1,2,3,5,6,10 – ஆம் இடத்தில இணைவுகள் ஏற்பட்டால் சினிமா கலைத்துறையில் கோள்கள் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது.  அவ்வகை ஜாதகங்கள் சிலவற்றை பார்ப்போம்.

 •  3 – ல் சனி, சூரியன், புதன் சேர்க்கை, சந்திரன், குரு.. உள்ள ஜாதகம் கமலஹாசன் அவர்களுடையது.  சிம்ம லக்னம்.
 •   சூரியன் – சனி – சந்திரன் – புதன் – சேர்க்கை பெற்று, 3 – ல் சுக்கிரன் உள்ள ரிசப லக்கின ஜாதகம் இசைஞானி இளையராஜா.
 • 5 – ல் சுக்கிரன் – புதன் இருந்து தனித்தன்மை பொருந்தியதாக உள்ள சிம்ம லக்கின ஜாதகம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
 • 10 – ல் சனி – கேது, 9 – ல் சுக்கிரன் – புதன் போன்ற சிறப்பு மிகுந்த அமைப்பை பெற ஜாதகம் நடிப்பின் இமயம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கும்ப லக்கினம்.
 •                சூரியன் – சுக்கிரன் – புதன் – செவ்வாய் இணைவு 9 – ல் சந்திரன் அமைந்த ஜாதகம் அமிதாப்பச்சன் கும்ப லக்னம்.
 •                சனிக்கு திரிகோணத்தில் சுக்கிரன் பலம் பெற்று சூரியன் – புதன் சேர்க்கை இருப்பின் கலைத்துறையில் பிரகாசிப்பர்.  இந்த அமைப்பு ஏ.பி.நாகராஜன் அவர்களுக்க உள்ளது.
 •                 சனி – சுக்கிரன் – குரு தொடர்பு பெற்று சூரியன் – புதன் சேர்க்கை இருப்பின் கலைத்துறையில் பிரகாசிப்பர்.  இந்த அமைப்பு வி.சாந்தாராம் அவர்களுக்கு  உள்ளது.

 

                                                                சங்கீத ஞானம்.

 

                கோள்களின் ஆதிக்கத்திற்கும் விளையாட்டிற்கும் கட்டுப்பட்ட மனிதனுக்கு சங்கீத ஞானத்தை தந்து விளையாடும் அமைப்புகள் சிலவற்றை பார்ப்போம்.

                ஜாதகத்தின் 2 – ஆம் இடம் விளையாட்டு.

                ஜாதகத்தின் 3 – ஆம் இடம் இசை.

                கையும் – காலம் உபயோகப்படுத்தும் இசைக்கருவி பயிற்சி 3-12 – ம் இடம்.

                சுக்கிரன் – புதன் – சந்திரன் – சனியின் தொடர்பு இசை சங்கீத ஞானத்திற்கு உறுதுணை.

 • 5 ஆம் இடத்திற்கு சனி, செவ்வாய், சுக்கிரன் போன்றவர்களின் தொடர்பு ஏற்பட்டால் தவில், தபேலா, மிருதங்கள், டோலக், கஞ்சிரா முதலியவற்றின் உயர்வு தருகிறது.
 •  மிதுனம் – துலாம் – கும்பம் பிறப்பு லக்கினமாகி குறுகிய ராசிகளான மேசம், ரிசபம், கும்பம், மீனம் இவற்றின் ஒன்றில் சந்திரன் அசுவனி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரம், அவிட்டம் 3 – 4 பாதம் சதையம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரம் பெற்று இருந்தால் புல்லாங்குழல் ஷெனாய், வீனை முதலியவற்றில் தேர்ச்சி கிட்டும்.
 •  மிதுனம் – துலாம் – கும்பம் பிறப்பு லக்கினம் ஆகி நீண்ட ராசிகளான சிம்மம் – கன்னி – துலாம் – விருச்சிகம் போன்ற ராசியில் ஜனித்தவர் நாதஸ்வரம் – கிளாரினெட் போன்றவற்றில் தேர்ச்சி பெறுவர்.
 • கடகம் . கன்னி – விருச்சிகம் – மீனம் போன்ற ராசிகள் பிறப்பு லக்கினமாகவோ சந்திரா லக்கினமாகவோ 3 ஆம் இடமாகவோ அமைந்தால் ஜலதரங்கம், புல்லாங்குழல் வாய்ப்பாட்டில் தேர்ச்சி 2 – க்குரியவர் சுக்கிரன் சம்பந்தம் பெற்றால் இனிமையான குரல் அமைப்பு கிட்டும்.
 • மிதுனம் – துலாம் – கும்பம் – கனி – விருச்சிகம் போன்றவைகளில் ஒன்றில் சுக்கிரன் இருப்பது வீணை வித்வான் நல்ல இனிமையான சங்கீத ஞானம் கிட்டும்.
 •  மேசம் – ரிசபம் – கும்பம் – மீனம் போன்ற ராசியில் புதன் சுக்கிரன் தொடர்பு இருப்பின் வயலின் தேர்ச்சி கிட்டும்.
 •  5 – ஆம் இடத்தை சனி வலிமையுடன் பார்த்தோ இருந்தோ சுக்கிரன் தொடர்பு பெற்றால் இசை ஆசிரியர் மேற்படி அமைப்பில் புதன் தொடர்பு பெற்றால் பாடல்களை இயற்றலாம்.
 • 5 ஆம் பாவத்தில சனி – புதன் – சுக்கிரன் தொடர்பு பெற்று பலமுடன் இருந்தால் மனக்கிளர்ச்சி உணர்வுகளை தூண்டும் தத்துவ பாடல்களை இயற்றுவார்.
 •  5 – க்குரியவராகவோ 5 – ஆம் இடத்திலோ சனியின் தொடர்பு ஏற்பட்டு குரு – செவ்வாய் – செவ்வாய் – சந்திரன் தொடர்பு ஏற்பட்டால் பாடல்களை இயற்றும் ஆசிரியராக, இசை மேதையாக வரலாம்.
 • 5 –  ல் கேது இருந்து சுக்கிரன் – புதன் – செவ்வாய் – சேர்க்கை எங்கு இருந்தாலும் பாடல்களை இயற்றுவதில் சிறப்பு மிக்கவர்.  இந்த அமைப்பு கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு உள்ளது.
 • 2 – க்குரியவர் சுக்கிரன் தொடர்பு விருச்சிகத்தில் சந்திரன் இருப்பின் இனிமையான குரலில் பாடி பரவசப்படுத்தும் பாடகர் ஆவார்.  இந்த அமைப்பு லதா மங்கேஸ்கருக்கு உள்ளது.

                இதுவரையில் நாம் பார்த்த கோள்களின் அமைப்புப்படி உள்ள பலன்களை நடைமுறைக்கு எல்லோருக்கும் வருகிறதா?  என்பது கேள்விக் குறியான விசயமாக இருந்த போதிலும் இவ்வகை பலன்களை கோள்களின் இயக்கம் அவரவர் பெற்ற நட்சத்திரங்களின் அமைப்பை பொறுத்தே செயல்படும் யோக அமைப்புக்குத் தக்கபடி உயர்வு தாழ்வு கிட்டும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.  கலைத்துறையில் ஈடுபாடு ஏற்படும் அமைப்பு ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் அவன் ‘‘ லைட்பாய்’’ ஆக இருப்பதும், ‘‘ தயாரிப்பாளராக ’’  ‘‘ டைரக்டராக ’’ இருப்பதும் அவன் பெற்ற யோகத்தை பொறுத்தேயாகும்.  ஆனால் அவன் செயல்படுவது கலைத்துறைதான்.

 

   கிரகத்திற்கு கிரகம் நிற்கும் பலன்.

 1. அருக்கனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                அரசன் அம்புலி ஆரல் இருந்திடில் அவனே

                                மெத்த தீரன் மிதமோகி வெகு நபர் நேசன்

                                புத்தி செலுத்தும் மிகுயூகி புவியாளும் அரசனே.

                சூரியனுக்கு 4,5,9,10 – ல் குரு – சந்-செவ்வாய்க்குரிய பாடல்.

 

 1. அல்லோனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                அருக்கன் அரசன் அசுரன் மந்தன் இருந்திடில்

                                கலைக்கரசனும் யோகவான் போகவான்

                                முற்பிறவியில் வரும் பலன்கள் வீண் போகாதே

                சந்திரனுக்கு 4, 5, 10-ல் சூரியன், குரு, சுக்கிரன் – சனிக்குரிய பாடல்.

 

 1. மங்களனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                மன்னன் மாலவன் தின்னவன் இருந்திடில்

                                உயர்ந்த யோகன் கனவிலும் மறவா தீரன்

                                முன்னவர் செய்தவப்பயனாய் சீமானாகி அரசாள்வானே

                செவ்வாய்க்கு 4, 5, 9, 10 – ல் குரு, புதன், ராகுக்குரிய பாடல்.

 

 1. மாலவனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                மந்தன் மன்னன் நன்னவன் இருந்திடில்

                                ஓதிடும் பற்கலைகளிலும் திறவானென்றும்

                                ஞானமிகு அம்பிகை வாசியோகனே

                புதனுக்கு 4,5,9,10 – இல் சனி அருளி, குரு, கேதுக்குரிய பாடல்

 1. மன்னவனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                மந்தன் மங்களன் அசுரன் இருந்திடில்

                                கடினத்தன்மை ஆளுடன் கனகமும் தனமும்

                                வண்மையுள் இனத்தார்க்கும் ஊரார்க்கும் அரசனே

                குருவிற்கு 4,5,9,10 – இல் சனி, செவ்வாய், சுக்கிரக்குரிய பாடல்.

 

 1. அசுரனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                அரசன் மந்தன் ஞானி இருந்திடில்

                                கலைஞானி சிறப்புறும் கூத்தாடி வெகுதனவான

                                போகமுடன் வெகுபூமி வாகனங்கள் பகன்றிடலாமே

                சுக்கிரனுக்கு 4,5,9,10 – இல் கேது, சுக்கிரன், புதனுக்குரிய பாடல்.

 

 1. மந்தனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                நன்னவன் அசுரன் மாலவன் இருந்திடில்

                                மின்னோன் செய்த பாக்யிமே வடிவெடுத்து

                                வந்த ஞானத்தால் உயர் புகழ் பெற்றிடுவானே

                சனிக்கு 4, 5, 9 10 – இல் சூரியன், சுக்கிரன், புதனுக்குரிய பாடல்.

 

 1. அரவிற்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                அருக்கன் அசுரன் மந்தன் இருந்திடில்

                                நெஞ்சனங்கட்கு பகலும் திட சிந்தனை

                                கூறும் ஆன்ம ஞானி சாது சங்க பிரியனே

                ராகு, கேதுவிற்கு 4, 5, 9, 10 – ல் சூரிய, சுக்கிர, சனிக்குரிய பாடல்.

 

                                                                சூரி, சந், குரு கேந்திர அமைப்பு மிக நல்லது.  இதில் யாராவது இருவர் சேர்ந்து இவர்களுக்கு 4,5,7,9,10 – ல் ஒருவர் இருப்பது விசேஷம்.

                குரு, சந், 1,4,7,10 – இல் இருப்பது குரு சந்திரயோகம்.  கஜகேசரி யோகமாகும்.  இந்த யோகம் நன்கு செயல்பட வேண்டுமானால் இவர்களுக்கு துணையாக சூரி, செ, சனி போன்றவர்கள் இருந்தேயாக வேண்டும்.

                சூரியனுக்கு 1,3,4,5,6,7,9,10,11 என்ற ஏற்படும் போதும் குருவிற்கு 1,4,7,10 என்ற நிலை ஏற்படும்போதும் இவர்களோடு செவ்வாய், சனி தொடர்பு எப்படியும் இருக்க வேண்டும்.

                சூரியனுக்கு 1,4,7,10 – ல் சந்திரன் அமையும்போது அல்லது 5,9 என்ற நிலை ஏற்படும்போது செவ்வாய்க்கோ, சூரியனுக்கோ, சந்திரனுக்கோ நிச்சயமாக குரு பார்வை கிடைக்க வேண்டும்.

                குரு, சூரி, சந் போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் 4,5,7,9,10 ஆக இருந்து சோபனம், அதிகண்டம், சூலம் அர்ஷனம், வஜ்ரம், வரியான், சுபம், சுபப்பிரியம், வைதிநதி நாமயோகங்கள் ஒன்றில் பிறந்தால் ஜாதகர் சிறப்பான் பலன்கள் அடைவது உறுதி.

                குருவிற்கு 1,4,5,7,910 – ல் சந்திரன் அமைந்த கிரக நிலை உள்ள ஜாதகங்களுக்கு, சூரியனுக்கு சந்திரன் அல்லது செவ்வாய் 1,4,5,7,9,10 என்ற நிலை நிச்சயமாய் இருக்க வேண்டும்.  அத்தோடு செவ்வாய் ஆட்சி உச்சம் திக்பலம் பெற்றும் இருந்திடல் வேண்டும்.  இப்படி அமைந்த நிலையானது ஜாதகரை நிச்சயமாய் உயர்த்தும்.

 

 

 

கோள்களின் கோலாட்டம் -1.9 ஜோதிட சிறப்பு விதிகள்

                                                28ஜென்ம லக்கினஸ்புடத்தை 5 – ல்பெருக்கி வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் மாந்தியின் புடத்தை கூட்ட வருகிற மொத்த ஸ்புடம் ஜீவன் அல்லது பிராணன் என்றும்,

சிறப்பு விதிகள் ( A )

 •                  ஜெனன காலத்தில் சந்திரனுடைய ஸ்புடத்தை 8 – ஆல் பெருக்கி வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் மாந்தியின் ஸ்புடத்தை கூட்ட வருகின்ற மொத்த ஸ்புடம் தேகம் என்றும்,
 •                  ஜெனன காலத்தில் மாந்தியினுடைய ஸ்புடத்தை 7 – ஆல் பெருக்கி வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் சூரியனுடைய ஸ்புடத்தை கூட்ட வருகின்ற மொத்தஸ்புடம் மிருத்தியு என்றும்,
 •                ஜீவஸ்புடத்தையும், தேகஸ்புடத்தையும், கூட்டி வருகின்ற மொத்த தொகைமிருத்தி யூஸ்புடத்தைவிட அதிகமாக இருபூபின் பூர்ண ஆயுள் ஏற்படும்.  குறைந்தால் அற்பு ஆயுள்.
 •                  ஜீவன் – தேகம் – மிருத்தியு இந்த மூன்று ஸ்புடங்களையும் ஒன்றாகக் கூட்டி வருகின்ற மொத்த  ஸ்புடதொகைக்கு உரிய ராசியில் சநி கோச்சாரத்தில் வரும்போது தனநாசம் ஏற்படும்.  இந்த ராசிக்கு 1, 5,9 ல் அல்லது ஸ்புடதொகைக்குரிய நவாம்சராசியில் சனிவரும்போது கண்டம், மாரகம் ஏற்படும்.
 •                 சூரியனுடைய அஷ்டவர்கத்தில் சூரியன் இருக்கும் ராசியில் எத்தனை பரல் உண்டே அத்தனையாவது கெற்பமாக.  ஜாதகர் ஜெனிப்பார்.  சூரியன் பலத்தை பொருத்து ஏற்றம் இறக்கம் செய்யும்.
 •                 ஜென்ம லக்கினத்திற்கு 1, 4,7, 10 – ல் புதன் இருந்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் 1, 4, 7, 10 – ல் செவ்வாய் இருப்பின் அவதார யோகம் நல்ல நிலையில் வாழ்வர்.
 •                  சுக்கிரன் கோபுராம் சத்திலும் குரு பாராவதாம்சத்திலும் இருந்து சந்திரனும், பாராவதாம் சத்திலிருந்தால்  ஹரிஹர பிரம்மயோகம்.  இது எவ்வித குறைவும் இன்றி ஆரோக்கியத்துடன் தர்மவான் என பெயர்கிட்டும்.
 •                  மாளவியாயோகம், குரு, சனி சேர்க்கை இருப்பினும் பார்வை இருப்பினும், சுக்கிரனுடன் கேது சேர்ந்தாலும் கிட்டாது.
 •                  ஜென்ம நட்சத்திராதிபதி தன் உச்ச ராசி அம்சத்தில் இருப்பின் லட்சுமி யோகம்.
 •                 லக்கினத்தில குரு – சுக்கிரன்சேர்க்கை 3 – ல் செவ்வாய்-சனி சேர்க்கை இருப்பின் லட்சுமி யோகம், 25 வயதுக்கு மேல் பாக்கியமும் 30  வயதுக்கு மேல் அதிபாக்கியயோகமும் ஏற்படும்.  விரோதத்தால் கண்டம் வரும் தப்பித்தால் 61 – வயதில் கண்டம் 71 – வயதில் மாரகம் ஏற்படும்,
 •                  ஸ்திர ராசியில் பிறந்தவர்களுக்கு 2 – ல் பாவர் இருந்து சந்திரனுக்கு 8, 12 – ல் பாவர் இருப்பின் யோக பங்கம் ஏற்படும்.  துக்கம் ஏற்படும்.
 •                எந்த கிரகம் நீச்ச ஸ்தானத்தில் உள்ளதோ அந்த ஸ்தானாதிபதி குரு அல்லது அந்த நீச்சஸ்தானத்தில் உச்சமடையும் கிரகமாவது சந்திரனுக்கு 1, 4, 7, 10 – ல் இருப்பின் நீச்சபங்கம் ஏற்படும்.

                               யோகதன்      25

                லக்கின 5, 9 ஆம் பாவாதிபதிகளின் உதயலக்கின ராசி எதுவோ அந்த இராசியே நவாம்ச சக்கரத்திலும் திரேக்காண சக்கரத்திலும் இருப்பின் அக்கிரகம் யோகதன் ஆவார்.

 • யோகதனாக வரும் ரிககத்தோடு 6 – க்குரியவர் சேர்க்கை, பார்வை பெற்று இருப்பின் 6 – க்குரிய திசை யோகம் தரும்.
 • சனி- செவ், யோகதனைப் பார்த்தால் யோகமும், பெரிய பதவியும் உண்டு.  குரு, சுக், சந்திரன யோகதனைப் பார்த்தால் ஜலயோகம் பெரிய பதவி உண்டு.  குரு, சந்திரன் யோகதனைப் பார்த்தாலம் மேற்படி பலன் ராகு யோகதனுடன் கூடி இருப்பின் பூமியோகம்.
 • யோகதனுக்கு 6 – க்குரியவர் 1, 4, 5, 7, 9, 10 – ல் இருப்பின் யோகமே. 
 • யோகதனுடன் 7 – க்குரியவர் பார்க்க கூட வெகு பெண்களை அடையவான்.
 • யோகதனுக்கு 12 – க்குரியவர் யோகதனுடன் சேர பார்க்க சொர்ண பொக்கிஷ அதிகாரி.
 • யோகதனுக்கு 3 -க்குரியவர் யோகதனுடன் காவல் விலங்கு தண்டனை கிட்டும்.
 • யோகதனுக்கு 4 – க்குரியவர் யோகதனுடன் கூட, பார்க்கபெரிய பதவி உண்டு.
 • யோகதனுக்கு 5-க்குரியவர் யோகதனுடன் கூட, பார்க்க மந்திரியாவான்.
 • யோகதனுக்கு 8 – ல் செவ்வாய், ராகு இருப்பின் அக்கினை அதிகாரி, கசாப்புக்கடை அதிகாரி இல்லையேல் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
 • யோகதனுக்கு 8 – ல் சூரி, சனி இருப்பின் வாதரோகம், ராகு இருப்பின் விஷபயம், சந்திரன், இருப்பின் சுயரோகம்.  புதன், இருப்பின் அபிசார ரோகம், செவ்வாய் இருப்பின் புண், ரணம் வரும்.
 • பிறப்பு ஜாதகத்தில் எந்த கிரகம் பலம் பெற்று 3, 6, 10, 11 போன்ற இடத்தில் உள்ளதோ அந்த கிரகத்திற்குரிய நபர்கள் காரகம் மூலம் பலன்கள் அடையலாம்.
 • ராகு, சந்திரன் சேர்க்கை இருப்பது ஒரு வகை சண்டாளயோகம்.
 • சனி 5 – ல் 10 – ல் இருப்பின் மனைவியின் போக்கே ஜாதகருக்கு எமனாக முடியும்.
 • 4 – க்குரியவர் நீசம் அடைந்து 1, 2 ஆம் இடத்தைப் பார்த்தால் மன நிம்மதியோ, சுகமோ பூர்ணமாக இருக்காது.
 • பிறந்த லக்கினமான ராசியை, ராசி சக்கரத்திலோ நவாம்ச சக்கிரத்திலோ சனி பார்த்தால் முன் பிறப்பில் விட்டதை பூர்த்தி செய்ய மட்டும் பிறப்பார் எனலாம்.
 • பிறந்த  ராசியின் 12 – ம் இடமும் நவாம்சத்தின் 12 – ம் இடமும் சூரியன் தொடர்பு பெற்றாலும் முன் பிறப்பில் விட்டதை பூர்த்தி செய்ய மட்டும் பிறப்பார் எனலாம்.
 • 4 – ல் சந் – மாந்தி ( அ ) நவாம்ச ராசியில் சந்திரன் மாந்தி இணைவு இருப்பின் தற்கொலை புரியும் வாய்ப்பு உண்டு. 
 • சுக்கிரன் சேர்க்கை நல்ல நிலையில் சிம்மராசியில் இருப்பின் கலை சம்பந்தமான விஷயங்களில் நல்ல திறமை ஏற்படுவதுடன் பிற்காலத்தில் சினிமா நாடக சம்பந்தமான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும்.
 • ஜென்ம லக்கினத்திற்கோ, சந்திரன் நின்ற ராசிக்கோ 12 – ல் குரு கோச்சார ரீதியில் பெயர்ச்சி அடையும்போது வெகுகாலமாக சுணக்கமடைந்த திருமணம் நடைபெற்று குடும்ப வாழ்க்கை ஏற்படுகிறது.
 • மேசம், கடகம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் சனி இருந்து சந்திரன் தொடர்பு பெற்று பாவர் சம்பந்தம் பெற்றால் ( அ ) 9 – ல் சனி, சந், சேர்ந்த பாவருடன் சேர்ந்து பார்த்து இருப்பின் காலில் ரோகம் ª£நண்டியாகும் வாய்ப்பு உண்டு.
 • லக்கினாதிபதி, சுக்கிரன் வலுப்பெற்று சந், சூரியன் இருவருக்கும் 6, 8, 12- ல் இருப்பின் வயோதிக காலத்தில் தாய், தந்தையை நிர்க்கதியாக விட்டு தானும் மனைவியும் மக்களும் சந்தோஷமாக வாழ்வர்.
 • 1, 9, 10 – க்குரியவர்கள் சரராசியில் இருப்பினும் சரராசி கிரகங்களின் சாரம் பெற்று இருப்பின் பிறந்த இடம்விட்டு வெளிநாடு வெளியிடங்களில் பொருள் தேடுவர்.   
 • லக்கினத்தில் குரு ( அ ) சந்திரன் பலம் பெற்று இருப்பினும் ( அ ) பார்த்தாலும், லக்கினத்தில் லக்கினாதிபதி பலம் பெற்று இருப்பினும் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் உண்டு.
 • லக்கினத்தில் சூரியன் – புதன் – கேது சேர்க்கை நல்ல நிலையில் இருந்தால், தெய்வீகபக்தி, தெய்வீக நாட்டம் முதலிய எண்ணம், இளமை முதல் பலம் பெறும். பிற்காலத்தில் காடுமலை திரிந்து அபூர்வமான மூலிகை – களையும், மகான்களை சந்தித்து அருளாசி பெரும் பாக்கிய மாக, அமையும்.
 • லக்கினத்தில் பாவக்கிரகங்கள் பலம் பெற்று அமைவது நல்லதே. செல்வசுகம், இளகிய மனம், பரோபகாரசிந்தை ஏழை எளியவர்களுடன் பழகி வாழும் மனமும் அதனால் செல்வத்தையும் புண்ணியத்தையும் வாழ்க்கையில் சமமாக அடைவர்.
 • 1, 3 – க்குரியவர்களோடு புதன், செவ்வாய், சனி கூடி எங்கு இருப்பினும் சிறுநீர் நோய், கல்லடைப்பு நோய் ஏற்படும்.
 • ஜென்மலக்கினத்தில் பாவகிரகங்கள் இருந்தால் தாய்க்கு தோஷம். பிரசவ காலத்தில் தாயா, பிள்ளையா, என்ற கேள்வியோடு பிரசவம் வரலாம்.
 • ( ஜென்மலக்கினத்திற்க ) குரு லக்கினாதிபதியாகி இவரை புதன் பார்த்தால் அரச பதவியில் உள்ளவர்களுக்கு நேசம் ஆவார். வாழ்நாளில் பெரும்பகுதி அரச மரியாதை இருக்கும்.
 • புதன் கேந்திராதி பத்தியம் பெற்றோ ( அ ) லக்கினத்திற்கோ சந்திரனுக்கோ 1, 4, 7, 10 – ல் இருந்து 2 – ஆம் இடத்தை லக்கினாதிபதி குருவோடு பார்த்து இருந்தால் வாக்குபலிதம், வாக்குவசியம் ஏற்படும். ஜோதிடத்தில் புகழ் பெறுவர்.
 • லக்கினாதிபதி நல்ல பலன் பெற்று இருந்தால் வாழ்க்கையில் ஓர் உச்ச நிலை வந்தே தீரும்.
 • சனி, சுக், சந், 6, 8, 12 ஆக இருப்பது ( அ ) சுக், சந்தி, சேர்க்கை, சனிக்கும் 6, 8, 12 ஆக அமைவது மணவாழ்வு சோபிக்காது. இல்லற வாழ்வு கடலில் தத்தளிப்பதற்குட்- பட்டது போல் ஆகிவிடும்.

 

யோக சித்த புருஷநிலையடைய

 • மகர லக்கினமாகி, சனி, குரு சேர்ந்து, கேது வேறு கிரகத்தோடு 5, 6, 11 – ல் இருந்து, புதன் ஏதோ ஒரு கிரகத் தோடு, சேர்ந்து எங்கேனும் இருக்க, பார்க்க, ஞானமணி சித்தனாவான்.
 • மேசத்தில் சந்திரன், சுபத்தன்மை பொருந்தி சுபகிரகங்கள் சூழ்ந்து நின்றால் குணவான். ஞானி, குரு ஆவான்.
 • சனி சந்திரன் சுபத்தன்மை பொருந்தி சேர்ந்து இருப்பின் ஆயுள்பலம் பெற்று இல்லறத்திலிருந்தே யோக நிஷ்டை கைவல்யம் பெறுவர்.
 • மகர லக்கினமாகி 9 – ல் சந்திரன் தனித்து இருக்க, குரு, சுக், செவ், கூடி இருப்பின் அஷ்டாங்கயோக ஞானி. அதிக வயதுடன் இருப்பான்.

 

காம சேஷ்டைகள்

 • பிறந்த ராசிக்கு 3, 7 – க்குரியவரோடு ராசியாதிபதி சேர்க்கை பெற்று பெண் ராசியிலிருந்தால் காம இச்சை தூண்டப்பட்டு விபரீத செயல்கள் நடக்கும். ஓரினசேர்க்கை புணர்ச்சிக்கு வழி வகுக்கும்.
 • ராசிக்கு 3 – ல் ராசியாதிபதி இருந்து ராசிக்கு 3, 7 – க்குரியவர் சேர்க்கை பெற்றால் மேற்படி பலன்.
 • 3, 5, 7, 12 – க்குரியவர் சேர்க்கை பார்வை ராசியாதிபதிக்கு கிடைத்தாலும், ராசிக்குமேல் 6 – ல் 12 – க்குரியவரோடு சுக்கிரன் சேர்ந்தாலும் மேற்படிபலனே.
 • 36 முதல் 38 விதிகள் 1, 3, 4, 5, 6, 7, 12 -க்குரியவர்களின் திசாபுத்தி அந்தரகாலங்களில் தான் நடக்கும்.

 

நீச்சபங்க ராஜயோக விதிகள்

 • எந்த கிரகம் நீச்சத்திலிருக்கிறதோ, அந்த கிரகத்தின் நீச்ச ராசிக்கு அதிபதியும், அந்த கிரகத்தின் உச்சராசிக்கு அதிபதியும் சந்திரனுக்கு 1, 4, 7, 10 – ல் இருந்தால் ராஜயோகம்.
 • நீச்சம் அடைந்த கிரகத்தின் ராசிநாதன் தனது உச்சத்திலோ, கேந்திரத்திலிருந்து சந்திரனுக்கு 4, 7, 10 – ல் வந்தால் ராஜயோகம்.
 • நீச்சம் அடைந்த ராசி எதுவோ, அந்த ராசிக்கு அதிபனால் நீச்சம் அடைந்த கிரகம் பார்க்கப்பட்டால் ராஜயோகம்.
 • நீச்சம் அடைந்த கிரகம் உள்ள ராசிநாதன் நீச்சம் அடைந்த கிரகத்தின் உச்ச வீட்டின் அதிபனோடு லக்கினத்திற்கோ, ராசிக்கோ 1, 4, 7, 10 – லிருந்தால் ராஜயோகம்.
 • நீச்ச கிரகம் இருந்த வீட்டுக்குடையவன் தக்குரிய உச்ச வீட்டில் இருக்க இதற்குடையவன் 5, 9 லிருக்க ( அ ) சந்திரன்காகிலும் ( அ ) நீச்சனுக்காகிலும் கேந்திரத்திலிருக்க அதோடு குருவர்க்க மேற்படில், நீச்சபங்க ராஜயோகம். ( முதல் தரம் ) சுந்தசேகரம்.
 • எந்த கிரகம் நீச்ச ஸ்தானத்திலிருக்கிறதோ அந்த நீச்ச ஸ்தானாதிபதியாவது ( அ ) அந்த நீச்ச ஸ்தானத்தில் உச்சம் அடையும் கிரகமாவது சந்திரன் நின்றராசிக்கு 1,4, 7, 10 – ல் இருந்தால் நீச்ச பங்க ராஜயோகம் ( கர்க்கஹோசர )

 

                சிறப்பு விதிகள் ( B )

 • சனி சுக்கிரன் இல்லத்தில் இருப்பது இல்லறத்தை பாதிக்கலாம். சனி லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருப்பது நலமே.
 • லக்கினாதிபதி 6, 8, 12 போன்ற ஸ்தானங்களில் அமையப் பெற்றவர்களுக்கு 5, 7, 10, 11 – க்குரியவர்கள் பலம் பெற்று நல்ல இடத்தில் நிற்பது நலமே.

     திறத்தால் உயராவிடுனும் இணைந்தால் கைதூக்கிவிடுவர்.  சுயபலம் இல்லாத சூழ்நிலைக்கு பலியாக வேண்டிவரும்.

 • லக்கினாதிபதி பலம் பெற்று 5, 7, 10, 11 ஆகிய இடத்தின் அதிபதிகளோடு சேர்ந்து உள்ளவர்கள் பெரிய நிலைகளை தொடமுடியும்.
 • 7 – ல் செவ் ( அ ) 8 – ல் சனி ( அ ) சந்திரன் – சுக் 6, 8 ஆக வருவது கூடாது. இல்லற பாதிப்பு, மறுமணம், திருமணமானவர்களை சேரும் அமைப்பு தரும்.
 • கேந்திராதிபதி தோஷம், சகடதோஷம் அஸ்தமன தோஷம் இருப்பின், குரு, சுக், புதன் பார்வையால் நன்மை இல்லை.
 • ராகு, கேது, 2, 8 – ல் இருந்தால் தேமாஷம் ஆனால் மேசம், ரிசபம், மிதுனம், சிம்மம், தனுசு ராசியில் இருப்பின் தோஷம் இல்லை.
 • சனி, சுக்கிரன் சேர்க்கை 3- ல் இருப்பின் முன்பின் யோசிக்காமல் எதுவும் செய்ய நேரிடும். மணவாழ்வில் சச்சரவு உண்டு. 
 • சனி, சுக் சேர்க்கை 6 – ல் இருப்பின் நல்ல விஷய ஞானங்கள் இருந்தும் சோபிக்காது. பல பெண்களை போகித்தவன், தாரதோஷம் உண்டு.  பெண்களால் அபகீர்த்தி உண்டு.  பல ஊர்களை சுற்றிய காமுகன் ஆவான்.
 • 7 – க்குரியவர் சுபராகி பலமான சனியோடு எங்குசேர்ந்து இருப்பினும் புனர்பூயோகம். மறுமணம் புரியும் யோகம் வரலாம்.
 • லக்கினாதிபதி நின்ற வீட்டிற்கு 5, 9 – ல் சந், சூரியன் இருப்பின் ஜாதகர் உயர்ந்த அந்தஸ்தை பெறுவர். லக்கினாதிபதியோடு இத்தனை கிரகம் சேர்ந்தாலும் அத்தனை பலமும் லக்கினத்திற்கு கிடைக்கிறது.
 • 6 – ஆம் பாவம் பலம் பெற்று இருந்தால் வாத பித்த சிலேத்தும மாதுஸ்திதிதோஷத்தால் உடல் பாதிப்பை அடைவர். நவாம்சநிலையை பார்க்கவும்.
 • 8 – ஆம் பாவ பலமாக இருந்தால் ஸ்திரி கோபத்தால் தேவ – குரு பிதுர், தெய்வ தோஷத்தால் பாதிப்பை அடைவர். நவாம்சநிலையை பார்க்கவும்.
 • 12 – ம் பாவம் பலமாயிருந்தால் ஸ்திரீ சாபத்தால் போட்டி பொறாமை வைராக்கியத்தால் அதர்வன தோஷத்தால் மாந்தீரிக குற்றத்தால் பாதிப்பை அடைவர்.  நவாம்ச நிலையையும் பார்க்கவும்.
 • புதன் நின்ற வீட்டிற்கு 5, 7 ஆதிபத்திய பலனோ ( அ ) அந்த வீட்டு ( அ ) அந்த வீட்டின் அதிபர் நின்ற இடத்தின் பலனை சிறப்பாகத் தருவார்.
 • சனி, அந்தந்த பாவத்துக்கு 8 – க்ரியவர் நவாம்ச ராசியில் உள்ள இடத்தை அடையும்போது அந்த பாவத்துக்கு தீங்கு ஏற்படும்.
 • «ரியனுடைய அஷ்டவர்க்கத்தில் சூரியன் தான் இருக்கும் ராசியில் எத்தனை பரல் உள்ளதோ அத்தனையாவது கர்பமான நபராக இருப்பார்.
 • ஒரு வீட்டில் தனியாக ஒரு கிரகம் யார் சேர்க்கை பார்வை பரிவர்த்தனை இன்றி இருப்பின், அக்கிரகத்தின் காரகத்தன்மைக்கு பிற பலம் இராது.
 • தனித்னியாக கிரகங்கள் நிற்குமாயின், அக்கிரகங்களின் சுயபலம் எவ்விதத்திலும் அதிக பலம் ஏற்பட்டு இருந்தாலும் அதுவேறு கிரகத்தின் இணைவு பலத்தைக் காட்டிலும் குறைவானதே.
 • தனி கிரகமாய் நிற்கும் கிரகம் எவ்விதத்தாகிலும் பலம் பொருந்திய தாயினும் அந்த பாவத்தின் காரக பலனைத் தவிர கூட்டுபலன் கிடையாது.
 • ஒரு கிரகம் தனியாக இருப்பதைவிட வேறு கிரகத்துடன் இணைந்து இருப்பது அதிக பலத்தைத் தரும். அப்படி இணைந்து இருப்பதால், அந்த பாவக பலன் அதிகப்படும்.
 • சுக்கிரனோடு, குரு, சனி, கேது சேர்ந்தாலும் பார்த்தாலும், மனைவியோகம் கிட்டாது.
 • ஜென்ம நட்சத்திராதிபதி தன் உச்ச ராசி அம்சத்தில் இருப்பின் லட்சுமி யோகம்.
 • லக்கினத்தில் குரு – சுக் சேர்க்கை 3 – ல் செவ், சனி சேர்க்கை இருப்பின் லட்சுமியோகம், 25 வயதுக்கு மேல் யோகம் தரம்.
 • இரு ஆதிபத்தியம் பெற்று உள்ளகோள்கள் முதலில் மூலத்திரிகோணராசி பாவபலனையும் பின் சுயஷேத்திர பலனையும் தரும்.
 • நவாம்ச லக்கினாதிபதி ஆண் கிரகத்தோடு சேர்ந்து 3, 7, 8, 9 – ல் இருப்பின் திருமண வாழ்வு இராது. சரிபடாது.
 • எந்த லக்கினமானாலும் சரி, துலாராசியில் தனித்த சுக்கிரன், விருச்சிக ராசியில் தனித்த செவ்வாய் பார்வையும் பெறாமல் இருந்தால் மேற்படி தசாபுத்திகாலங்களில் கணவன், ( அ ) மனைவி பிரிவினை ஆயுள் தோஷம் கண்டம் ஏற்படலாம்.
 • அஸ்தமனத்தில் இருக்கும் கிரகம் தசாபுத்தி காலங்களில் சிறப்பைத்தராது. ஜெனன காலத்தில் அஸ்தமனமான கிரகம், கோச்சாரத்தில் அஸ்தனம் பெற்று அக்கிரகம் தசாபுத்தியும் இருப்பின் எக்காரியமும் சோபிக்காது.
 • 6, 8 – ம் பாவாதிபதிகள், ஒன்றாய் கூடி, சனி சேர்க்கை பார்வை இருப்பின் அற்ப ஆயுள்.
 • மேசம், மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம் இவற்றில் 8 – க்குரியவர் மீனத்திற்கு 2, 7, – க்குரியவர், தனுசு, கன்னிக்கு 11 -க்குரியவர் பலத்தை அறிந்து நன்மை, தீமைகளை சொல்லவு.

 

             சிறப்பு விதிகள் ( C )

 

” பாவஸ்ய சக்ர ஸஹ்தித்யா யோகே நபல மீரயேத்

ராசி மாத்ரஸ்தி தேர்ஜ்ஞழனம் வ்ய பிர ஹ தம்பவேத் ”

                                ஜாதகார்ண வபதீபிகா கருத்துப்படி ராசி சக்கரத்தை வைத்து பலன் சொல்லுவது தவறு என்பதும் பாவக சக்கிரப்படி பலன் சொல்லுவதே சாஸ்திர சம்மதமும் அனுபவ சித்தமும் ஆகும்.

                                ” சாதக முகூர்த்தமாதி சாற்று மாரூடங்கட்குப்

                                போதனா முறையே பாவப்புடத்தினாற் கோள்கள்நின்ற

                                நீதி சேர் தலங்க ளோர்ந்து பலனெலாம் நிகழ்த்த வேண்டி,

                                ஓதீனார் சீபதக் கோனுத்தம் சீடர்க்கம்மா “

                ஜாதகம் – முகூர்த்தம் – ஆரூடம் ஆகியவைகளுக்கு அவசியமாகப் பாவ சக்கரத்தைக் கொண்டே பலா பலன்களை நிச்சயத்தறியவேனும் என்பது ஸ்ரீபதி கூற்று.

                ஒரு கிரகம் எந்த சாரத்தில் இருந்தபோதும் அக்கிரகம் பாருடைய வீட்டில் அமைந்துள்ளதோ அக்கிரகத்தின் குணம்தான் பிரதானமாக இருக்கும்.

                ஜெனன லக்கினம் எதுவாக இருந்தாலுமூ ஜெனன லக்கினாதிபதி நின்ற இடத்திற்கு 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் லக்னம் சூரியன், சந்திரன் இருப்பதும் 1, 5, 9 – ல் சூரிய – சந்திரன் நின்ற வீட்டதிபதிகள் இருப்பதும் மிகுந்த சிறப்பு.

                லக்கினாதிபதி நின்ற இடத்திற்கு 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் லக்னிம் சூரியன், சந்திரன் இருப்பதும் 1, 5, 9 – ல் சூரிய- சந்திரன் நின்ற வீட்டதிபதிகள் இருப்பதும் மிகுந்த சிறப்பு.

                லக்கினாதிபதி நின்ற இடத்திற்கு 1, 4, 5, 7, 10 – ல் அதிக கிரகங்கள் நிற்பது ஜாதக பலத்தை காட்டும்.

                லக்கினாதிபதிக்கு 6, 8, 12 – ல் அதிக கிரகங்கள் வரக்கூடாது. 

                தனித்து நிற்கும் எந்த ஒரு கிரகமும் பலன்களைத் தரமுடியாது. 

                ஒருவரின் லக்கினம் நன்கு செயல்படவேண்டுமானால் 4-ம் பாவாதிபதி  நல்லநிலையில் இருக்கவேண்டும்.  இதேபோல் எந்த ஒரு பாவமும் நன்கு செயல்படவேண்டும் என்றால் அந்த பாவத்தின் நான்காம் பாவாதிபதி நன்றாக இருக்க வேண்டும்.

                ” மத்யம் தினகதெ பாகுறள

                முகூர்த்தோபி ஜிதாஹ்வய

                அபிஜித் ஸர்வ தே சேஷ ¨

                முக்யம் தோஷ விநாச கிருத் “

சூரியன் உச்சியில் வருகின்ற சமயம் அபிஜித் முகூர்த்தம் முக்கியமான தோஷங்களை இல்லாமல் செய்கிறது.

                ” நசார வானரா நச லக்ன யோ ரசா

                நவிஷ்டிரிக் தோ நதீதி கிரகச்ச

                ரவி பிரவே சாஸ்தமயே சகாலே

                கோதூளி லக்குன பஹ ¨ கார்ய ஸித்தி ”     

   சூரிய உதயமும், அஸ்தமனமும் ஆகும் வேளை கோதூளி முகூர்த்தம் ஆகும்.  இக்காலத்தில் செய்யும் சகல காரியங்களுக்கும் சித்தியாகும்.  இதற்கு தி, வாரம், லக்கினம், விஷடிரத்தை கிரக தோஷம் ஒன்றுமே கிடையாது.

                வக்ரீ சுவச்சபலா சவக்ரஸ்ஸகிதே

                மத்யம் பலம் துங்கரே

                வக்ரீ நீச பல ஸ்வா நீச பாவானே வக்ரீ

                பலம் துங்கஜம்

                வக்கிரம் பெற்ற கிரகம் மற்றொரு வக்ரம் பெற்ற கிரகத்தோடு கூடியிருக்கும் போது மிக அதிக அளவு பலம் பெறுகிறது.  வக்கிரம் பெற்று கிரகமானது தன்னுடைய உச்ச ராசியில் இருக்கும்போது மத்திம பலன், சொந்த வீட்டில் பலம் இல்லை, நீச்ச ராசியில் இருப்பின் பலம் அதிக பலம்.

                பாப கிரகம் வக்கிரம் பெற்றால் சுப பலனும், சுபகிரகம் வக்கிரம் பெற்றால் பாப பலனும் ஏற்படுகிறது.

                குரு பாப கிரகங்களை கெடுதி செய்யும் கிரகங்களைப் பார்ப்பது நல்லது யோகத்தை தரும் ஆதிபத்தியம் கொண்ட எந்த கிரகத்தையும் குரு நோக்கிடல் கூடாது.

                சநி நின்ற வீட்டிற்கு 9, 10 – ஆம் பாவாதிபதி அல்லது அப்பாவத்தில் உள்ளவர்கள் சனிக்கு நட்பாகவோ,  நல்ல ஆதிபத்தியம் பெற்றவராகவோ இருந்துவிட்டால் சனி பா£வையும் அவர் தசாபுத்தியும் நல்ல யோகதை செய்து விடுகிறது.

 

நட்சத்திரம் முதல் பாதம் இயக்குவது 2 வது பாதம் இயக்குவது 3 வது பாதம் இயக்குவது 4 வது பாதம் இயக்குவது தலைமை
அஸ்வினி செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் சூரியன்
பரணி சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் சூரியன்
கார்த்திகை குரு சனி சனி குரு சூரியன்
ரோகிணி செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் சந்திரன்
மிருகஷேரிஷம் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் சந்திரன்
திருவாதிரை குரு சனி சனி குரு சந்திரன்
புனர்பூசம் செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன்
பூசம் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய்
ஆயில்யம் குரு சனி சனி குரு
மகம் செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் புதன்
பூரம் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் புதன்
உத்திரம் குரு சனி சனி குரு புதன்
அஸ்தம் செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் குரு
சித்திரை சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் குரு
சுவாதி குரு சனி சனி குரு குரு
விசாகம் செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் சுக்கிரன்
அனுஷம் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் சுக்கிரன்
கேட்டை குரு சனி சனி குரு சுக்கிரன்
மூலம் செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் சனி
பூராடம் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் சனி
உத்திராடம் குரு சனி சனி குரு சனி
திருவோணம் செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் ராகு
அவிட்டம் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் ராகு
சதயம் குரு சனி சனி குரு ராகு
பூரோட்டாதி செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் கேது
உத்திரட்டாதி சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் கேது
ரேவதி குரு சனி சனி குரு கேது

 

                9 கிரகங்கள் மூன்மூன்று நட்சத்திரங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து ஒவ்வொரு பாதத்தை ஒவ்வொரு கிரகத்தின் இயக்கத்தில் செயல்படவைக்கும் சிறப்பு விதியை பட்டியல் போட்டுத் தந்துள்ளேன்.

                உதாரணம் அசுவனி, பரணி, கிருத்திகை இம்மூன்று நட்சத்திரத்தை சூரியன் தலைமையேற்று தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, முதல் பாதங்கலை செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் மூலம் பலன்களை தர செய்கிறார்.

                ஒரு விருச்சிக லக்கின ஜாதகம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

 cOMM5

 

                இவருக்கு புதன் தசை நடப்பதாக வைத்தக் கொண்டால், தசாநாதன் புதன் ஆயில்யம் 4 – ல் உள்ளார்.  இவர் செவ்வாயின் தலைமையின் கீழ் குருவின் மூலமாக தனது பலன்களைத் தரவேண்டி உள்ளது.

                லக்கினாதிபதி செவ்வாய் ஆகி விடுவதால் இந்த ஜாதகரை புதன் தசாகாலம் முழுவதும் செவ்வாய் தான் தலைமை ஏற்று நடத்த வேண்டி உள்ளது.  இவரின் தலைமையின் கீழ் குரு மூலமாக புதன் தனது பலன்களை தரவேண்டும்.

                தசாநாதன் புதனின் 8, 11 – க்குரிய பலன்கள் 1, 6 என்ற ஆதிபத்தியத்தின் கீழ் 2, 5 – க்குரிய குரு மூலம் வருகிறது.

 

                தசாநாதனின்புதனின் ஆதிபத்தியம் இத ஸ்தூல நிலை.

                போராட்டம் மரண பயம் மனக்கலக்கம் கௌரவம், பணபலம், லாபம், கடின உழைப்பு, காரிய வெற்றி போன்ற இவைகளை.

                தலைமை ஏற்ற செவ்வாய் ஆதிபத்தியம் இது சூட்சும நிலை.

                ஜாதகனின் உயர்வு, போராட்டம், வெளியிட மதிப்பு, கடன் நோய், எதிர்ப்பு போன்றவைகள் மூலம்.

 

 

இயக்கும் குருவின் ஆதிபத்தியம் இது அதி சூட்சும நிலை.

வாக்கு, சாதுர்யம், திறமை, பூர்வ புண்ணியபலம், தெய்வ அனுக்கிரகம் அதிர்ணடம், பெரியோர்களின் ஆதரவு என்ற வழியில் தருகிறார்.

                இதே போல் ஒவ்வொரு ஜாதகரின் தசா பலன் புத்தி பலன் அந்திர பலன்களையும் பார்க்கலாம்.

                உதாரண ஜாதகம் கேட்டை 1 – ல் லக்கினம் அமைந்ததால் இது சுக்கிரனின் தலைமையின் கீழ் குருவின் இயக்கத்தில் வருவதால் இந்த ஜாதகமே.  சுக்கிர – குருவின் இயக்கத்தில் செயல்படுவதாக கொள்ளலாம்.

சூரியன்:-

                                                     பாரப்ப மூன்று அறு பத்து ஒன்று

                     பகருகின்ற பன்னொன்றில் வெய்யோன் நிற்கில்

      சீரப்பா சீவனுட மனையில் தானும்

      சி சிவா தெய்வங்கள் காத்து இருக்கும்.

1, 3, 6, 10, 11 – ல் சூரியன் இருப்பது நல்லது.  இப்பாடல் மேச- ரிசப-கடக-சிம்ம-விருச்சிக-தனுசு போன்ற லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பொருந்து.

 

சந்திரன்:-

                     கேளப்பா கலையினுட பெருமை சொல்வேன்

      கனமுள்ள தனலாபம் கேந்திர கோணம்

      ஆறப்பா அகம் பொருளும் நிலமுங்காடி

                      அப்பனே கிட்டுமடா.

1, 2, 4,,5, 7,9, 10 – ல் சந்திரன் இருப்பது நல்லது.  இப்பாடல் மேசம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், மீனம் போன்ற லக்கினத்திற்கு பொருந்து.

 

செவ்வாய்;

கேளப்பா  செவ்வாயும் ஓன்று பத்து

கனமுள்ள தனலாபம் ஆறில் நிற்க

ஆளப்பா அகம் பொருளும் நிலமும் செம்பொன்னும்

அப்பனே  கிட்டுமடா

1,6,10,11ல் செவ்வாய் இருப்பது குறிக்கும் பாடல்  இது மேஷம்  கடகம் சிம்மம்  விருச்சிகம்  தனுசு   மீனம்  லக்னங்களுக்குபொருந்தும்

புதன்:

சொல்லுகிறேன் இரு மூன்று  ஈராறெட்டும்

சுகமில்லை ஜென்மத்துக்கு குய்யரோகம்

 சொல்லுகிறேன் கேந்திர கோணம் நன்று

1, 4 ,5, 7 ,9, 10 புதன் இருப்பது குறிக்கும் பாடல்  இது

 ரிஷபம் மிதுனம் சிம்மம் கன்னி துலாம்  மகரம் கும்பம் லக்னங்களுக்கு பொருந்தும்

குரு

பாரப்பா பரம குரு நாலு எழு பத்து

பகருகின்ற கோணமுடன் தனமும் லாபம்

சீரப்பா ஜன்மனுக்கு யோகம் செப்பு

4, 7 ,10, 5, 9, 2, 11 குரு   இருப்பது குறிக்கும் பாடல்  இது

மேஷம்  கடகம் விருச்சிகம்  கும்பம் மீனம்  லக்னங்களுக்கு பொருந்தும்

சுக்கிரன்

கேளப்பா ஆசுர குரு கேந்திர கோணம்

கெட்டவர்கள் கண்ணுற்று  பார்த்திட்டாலும்

ஆளப்பா அசுர குரு பலனளிப்பார்

1, 4, 7, 5, 9 ,10 சுக்கிரன் இருக்கும் பாடல்

ரிஷபம் மிதுனம் கன்னி துலாம்   மகரம் கும்பம் மீனம்  லக்னங்களுக்கு பொருந்தும்

சனி

கனமுள்ள நவுமாறு லாபம் மூன்று

கதிர் மைந்தன் அதிலிருக்க விதியும்  தீர்க்கம்

3, 6, 9, 11 சனி இருப்பதை குறிக்கும் பாடல் இது

மேஷம்  ரிஷபம்  மிதுனம்  கன்னி  துலாம் விருச்சிகம் 

தனுசு  மகரம் கும்பம்  லக்னங்களுக்கு பொருந்தும்

ராகு     கேது

சொல்லப்பா செம்பாம்பு கோணம் லாபம்

சுய தேச அரசர் லாபம்

கேது  1, 4, 9, 11 இருப்பதை குறிக்கும் பாடல் இதுமேஷம் மிதுனம் துலாம் கடகம் மகரம்விருச்சிகம் தனுசு   மீனம்  லக்னங்களுக்கு பொருந்தும்

   புல்லப்பா கருநாகம் கேந்திரங்கள் நலம்

புனிதமுள்ள செம்பாம்பின் பதியைப்பரே

ரகு 1, 4, 7, 10 ல் இருப்பது நல்லதுராகு அமர்ந்த வீட்டின் அதிபதியை பொருத்து யோகம் நடக்கும்.

 

 

 

 

 

 

கோள்களின் கோலாட்டம் – 1.8 12 லக்கினத்தாருக்கும் பலன்களை தரும் கிரகநிலை

பிறந்த லக்னம் 1 மேஷம் 2 ரிஷபம் 3 மிதுனம் 4 கடகம்
மேஷம் சூரி,சந்,குரு ,செவ் சுக்,ராகு கேது சந்,குரு
ரிஷபம் 12 புதன்,சுக்,சனி 1 புதன்,குரு,சுக் 2 3
மிதுனம் சூரி,செவ் 11 12 புதன்,சுக்,சனி 1 சந்,குரு 2
கடகம் சூரி,செவ் 10 11 12 சந்,செவ் 1
சிம்மம் சூரி,செவ் 9 புதன்,சுக் 10 புதன்,சனி 11 12
கன்னி 8 புதன்,சுக்,சனி 9 புதன்,சுக்,சனி 10 சந் 11
துலாம் 7 8 புதன்,சுக்,சனி 9 சந் 10
விருச்சிகம் செவ் 6 ராகு 7 செவ் 8 சந் 9
தனுசு சூரி,செவ்,புதன்,குரு 5 ராகு 6 7 8
மகரம் 4 புதன்,சுக் 5 6 ராகு 7
கும்பம் ராகு 3 4 புதன்,குரு,சுக் 5 சனி 6
மீனம் சந்,செவ்,குரு 2 ராகு 3 4 சந்,செவ்,குரு 5
பிறந்த லக்னம் 5 சிம்மம் 6 கன்னி 7 துலாம் 8 விருச்சிகம்
மேஷம் சூரி,செவ்,குரு ராகு
ரிஷபம் சூரி,புதன் 4 புதன்,சுக்,சனி 5 சனி,ராகு 6 7
மிதுனம் சூரி,புதன் 3 புதன்,சுக், 4 புதன்,சுக்,சனி 5 குரு,கேது 6
கடகம் 2 ராகு 3 சுக்,சனி 4 செவ்,குரு 5
சிம்மம் சூரி,செவ்,புதன் 1 புதன்,ராகு 2 சனி,ராகு 3 சூரி,செவ் 4
கன்னி 12 புதன்,சுக்,ராகு 1 புதன்,சுக்,சனி 2 கேது 3
துலாம் 11 12 புதன்,சுக்,சனி 1 2
விருச்சிகம் சூரி,செவ்,சுக் 10 புதன்,சனி 11 12 சூரி,செவ்,குரு 1
தனுசு சூரி,செவ்,புதன்,குரு 9 10 சுக்,சனி 11 12
மகரம் 8 புதன்,சுக்,சனி,ராகு 9 சுக்,சனி 10 கேது 11
கும்பம் ராகு 7 8 9 புதன்,சுக் 10
மீனம் ராகு 6 7 8 9
பிறந்த லக்னம் 9 தனுசு 10 மகரம் 11 கும்பம் 12மீனம்
மேஷம் சூரி,செவ்,குரு சந்,செவ் ராகு
ரிஷபம் 8 புதன்,சுக்,சனி 9 புதன்,சுக்,சனி 10 சுக்,சனி,ராகு 11
மிதுனம் 7 8 சுக்,சனி,ராகு 9 சுக் 10
கடகம் சனி,ராகு 6 சந்,செவ் 7 8 சந்,செவ்,குரு 9
சிம்மம் சூரி,செவ்,குரு 5 சனி,ராகு 6 சூரி 7 8
கன்னி 4 புதன்,சுக்,சனி 5 புதன்,சனி,ராகு 6 ராகு 7
துலாம் குரு,சனி,ராகு 3 செவ் 4 5 குரு,ராகு 6
விருச்சிகம் சூரி,செவ் 2 செவ்,குரு,ராகு 3 4 குரு 5
தனுசு சூரி,புதன்,குரு 1 குரு,சனி 2 சனி,ராகு 3 ராகு 4
மகரம் 12 புதன்,சுக் 1 சனி 2 சுக்,சனி,ராகு 3
கும்பம் ராகு 11 12 புதன்,சுக் 1 சுக் 2
மீனம் 10 சந்,செவ்,குரு,ராகு 11 12 சந்,செவ் 1

A – ஜாதகைர் பிறந்த லக்குனத்தை குறிப்பது    &  1 முதல் 12 க்குரிய எண் கிரகங்கள் உள்ள வீடை  குறிக்கிறது.

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு

  48

                யௌவன காவியம் – தாண்டவமாலை – கார்க்ய நாடி – ஜோதிட சாகரம் – சந்திர கலா நாடி – சாந்திர காவியம் – குமாரசுவாமியம் போன்ற பல சிறப்பான நூல்களில் சொல்லியுள்ளவிஷயங்களைத் தொகுத்து அனுபவ ஆராய்ச்சி மூலம் நடைமுறையில் கண்ட எனது 20 ஆண்டு கால ஜோதிட ஆராய்ச்சியின் வாயிலாக இதனை உங்கள் முன் படைக்கிறேன்.

 

மேச லக்னத்தில் பிறந்தவர்களுக்கு

 

மேச லக்னத்தக்கிரவி பொன்னல்லர் மிக்கவும் யோககாராங்

கூடியேயிரக்கிற்..பிரபல யோகங்

கொடப்பர்மால் கவிசனி தீயோர்

மாடுறுகவியோடு கொன்றிடான் சனி மால்

மாரகத் தானமாமிரண்டு

பாடுறு மூன்றே ழெட்டிறுதியினும்

பரிவுறிறகண்ட மென்றுரையே                    

                                                    ( யவன காவியம் )

 

” மந்தனொடு மால்கங்கன் மாபாவி நல்லவர்கள்

கொந்தலர் பூங்கோதாய் குருவிரவி – சந்ததமும்

தீயபலன் காரியடுதேவபிரான் சேர்ந்தக்கால்

ஈயுமவனோடொற்றதே.”

” மாரகத்தானப் பதியா மண்ணுகின்ற பார்க்க வனும்

மாரகத்தைச் செய்யானெம் மானவர்க்கும் – மாரகத்தை

செய்வார் சனி முன்னோர் செவ்விய மேடம் பிறந்தோர்க்

கிவ்வாறுரைப்பீரிருந்து ”

                                                       ( தாண்டவ மாலை )

 

” தானுறு மேடத்தார்க்குச் சனிபுகர் புந்திபாவர்

வானுறும் பரிதிதேவ வான்குரு சுபனாம் என்றே

கானுறு மிவர்கள் கூடி கடினமாம் பலன்களற்பம்

தேனுறுஞ் சுக்கிரயன்றன் திசையிற்றான் மாரங்கள் ”

                                                           ( ஜாதக அலங்காரம் )

” மேன் மேட லக்கினத்தைமேவிப் பிறக்கிலிருந்து

பண்புகர் மாலும் சனியும் பாவி ”

                                                 ( சந்திர காவியம் )

” சூடப்பா சரராசி ஜெனித்த பேர்க்கு

சுகமில்லை லாபாதிபதியினாலே

ஆடப்பா அகம் பொருளும் நிலமும் சேதம்

அப்பனே அரசரிட தோஷமுண்டாம்

தேடப்பாதிர வியமு மளித்தர தேடமாட்டான்

வீடப்பா தோனித்திலிருக்க நன்று

விளம்பினேன் புலிப்பாணி வினைவைப்பாரே ”

                                                            ( புலிப்பாணி )

 

                இப்படி பல நூல்களில் பல வகையான கருத்துக்களை சொல்லுகிறார்கள்.  நடைமுறையில் பார்க்கும் போது மேலே சொல்லப் பட்ட, பாடல்களுக்க ஒப்ப 75 %  நடைமுறைக்கு வருகிறது.  ஒரு சில விஷயங்களில் மாறுபாடு தெரிகிறது.  இது நமது நடைமுறை அனுபவ – ஆராய்ச்சிக்கு ஒப்ப நாம் தெளிவு படுத்திக் கொண்டோமானால் மிகவும் சிறப்புடையதாக இருக்கும்.

மேச லக்னம் :-

                பஞ்சமாபதி சூரியனும், பாக்கியாதிபதி குருவும் சுபத்தன்மை பெற்றவர்கள்.  இவர்கள் இருவரும் எங்கு கூடியிருப்பினும், அத்தன்மைகளுக்கேற்ப யோக பலன்களை விருத்தி செய்கின்றனர்.  எவ்வளவு கஷ்டங்கள் வந்த போதிலும் வீழ்ச்சி பெற வைக்காது.  காப்பாற்றி விடுகின்றனர்.  சூரியன் – குருவானவர் சுப வர்க்கத்தன்மை பெற்ற இருப்பின், அவர்கள் தசா – புத்தி – அந்த காலங்களில் யோக பலன்களைத் தந்து விடுகின்றனர்.

                புதன், சுக்கிரன், சனி கொடி தன்மை பெற்றவர்கள் ஆவர்.  இவர்கள் 2, 7, 8, 12 – ல் இருப்பின் இவர்கள் தசாபுத்தி, அந்திர காலங்களில் நோய், சத்துரு, தொல்லை, வழக்கு வியாஜ்ஜியம், கண்டாதி, கருமாதி தோஷங்கள் தொழில், முடக்கம், திடீர் இழப்பு ஆகியவற்றைத் தருகின்றனர்.  இதில் சனி, புதன் அதிக பாதிப்பை தருவதாக உள்ளது.  சுக்கிரன் பல கொடுமைகளைச் செய்தாலும், நன்மைகளையும் செய்யாமல் இல்லை.  சந்திரன், நன்மை தீமையின்றி சமமான பலன்களைத் தந்து வருகிறார்.

                செவ்வாய் – ஜாதகரை சில தவறான காரியங்களில் ஈடுபடுத்தி, பல பாதிப்புகளைத் தந்து திருத்துபவராக உள்ளார்.  ராகு, கேதுக்கள் இந்த மேச லக்கினத்திற்க உப – ஜெயஸ்தானங்களான 3, 6, 11 ஆகிய இடங்களில் இருந்து சுபத்தன்மை பெற்று இருப்பின் நல்ல பலன்களைத் தருகிறார்கள்.

                ராகு, கேதுக்களுடன் சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் சேர்ந்து எங்கு இருப்பினம் எதிர்பாராத பாதிப்பான பலன்களை தருகிறார்கள்.  ஆயுதம், நெருப்பு விஷ ஜந்துக்களால் பயம் போன்றவற்றையும் பெண்கள் வகை, விதவா, நீச்ச ஸ்திரி தொடர்புகள் தந்து அபகீர்த்தியையும் தருகிறார்கள்.  ராகு, கேதுக்கள், குருவுடன் சேர்ந்து இருப்பின் ஆஸ்தீகத் தன்மை, ஆன்மீக விஷயங்களில் நாட்டம், கௌரவ பதவி, செல்வாக்கு, புண்ணிய தீர்த்த ஸ்தலங்கள், தரிசனம் ஆகிய பலன்கள் உண்டு.  ராகு, கேதுக்கள் சூரியன், சந்திரன் சேர்க்கை பெற்றால் மாதா, பிதாவுக்கு தோஷம்.

                ஒன்றொட்டுக் குடையோனைப் பாரு – அவர்

                உச்ச திரிகோணம் ஆட்சியாய் நிற்க

                பண்டு பொருள் விதியுண்டு – சென்மன்

                பார் மன்னர் தோஷம் பகர்ந்தாண்டி தோழி.

       இந்த மேச லக்கினத்திற்கு செவ்வாய் 1 – 8 க்குரியவராகிறார்.  இவர் 1, 5, 8, 9, 10 – ல் இருந்தால் ஆயுள் பலம் ஏற்படுகிறது.  சொத்துக்கள் சேரும்.  ஆனால் அரசாங்க வகையில் பயம் ஏற்படும்.  காவல் துறையினால் தண்டனைகள் ஏற்படலாம் என்ற விதி சொல்லப்படுகிறது.

                செவ்வாய் மேற்படி இடங்களில் சுபத்தன்மை இழந்து இருப்பின் வசதி வாய்ப்பை தருவதில்லை.நல்லநிலையில் இருப்பின்யோகம் தருகிறது.

 

    ரிசப லக்கினம்.

 

” விடைதனிலுதித் தோற்கிரவியுஞ்சனியு

மிக்க வர்சனி யிறையோகன்

படிமிசை மதிபொன் சுக்கிரன்பாவர்

பனிமதி பொன் குசனிவர்கள்

மடியுமாரக ராகம் புந்தியோ கொல்லான்

மாடிகருட னெவரேனும்

அடையினுங்கண்ட காலமேன்றாய்ந்திங்

கறைகுவர் சோதிட முணர்ந்தோர்”

                                                      ( யவன காவியம் )

குரு வெள்ளியிந்து கொண்டாடக் கொடியவர்

மருவு சுபக்கோண் மந்தனென்றூழ்  திருவுமா

யோகங்கொடுப்பான் சனி யருவனாமெனவே

ஆகுமெனப்பாவாயறி.

குரு மதலாய்க் கூறுகின்றகோட்களே கொல்லும்

மருவினைய ராராயினென்றுந் – தெரியும்

படியிடப் வோரையினிற் பார்மிசையிற்றோன்றும்

முடியுடையார் கட்குமொழி.

                                                         ( தாண்டவ மாலை )

” களமே ரிசபஞ் சென்மித்தோர் கரசன்புகர் சூரியன்மூவர்

உளவாம்பாவி கதிர்தனியு முயர்ந்தசுபனாம் யோகங்கள்

வளமார் புகுருந்தான் குடும்பமாரகத் தோணாம்பாவி

புளகார்குததலையுறுங் கொங்கைபூவைக் குரலாரும் மானே”

                                                          ( ஜாதக அலங்காரம் )

” தன்னிடப் லக்கினத்தைச் சாரச் சனித்தவர்க்குப்

பன்னுமதி பொன்புகரும் பாவியாம் – மன்னிரவி

காரியந்தானல்லவர்கள் காண் சனியன் மாத்திரந்தான்

சாரரசர் யோகம் தரும் ”

தருகுருவும் செவ்வாயும் சார்ந்தமதியும்

வருமாரகனாக வாட்டி வெருவியிடக்

கொன்றிடுவர் புந்திகொல்லோன் கூறுதிசை தன்னிலுந்தன்

நன்றறிவாய் சொன்னே நயந்து ”

                                                              ( சந்திர காவயிம் )

                ரிசப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, குரு 8, 11 – க்குடைய ஆதிபத்தியம் பெறுகிறார்.  சந்திரன் 3 – ஆம் அதிபத்தியமும், சுக்கிரன் 6 – ஆம் ஆதிபத்தியமும் பெறுகிறார்கள்.  இதில் குருவுக்கு மட்டும் இரண்டு மாரகாதிபத்தியம் ஏற்படுவதால் அவர் கொல்லத்தகுதி உடையவராகிறார். இதில் குருவும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றோ – பார்வை பெற்றோ ( அ ) வேறு வகை தொடர்புகைளப் பெற்றாலும், சுக்கிரனும் ஒரு மாரகரே.

                சந்திரன் மாரகத்தன்மை வலுப்பெற்றவர் அல்ல.  புதன் பஞ்சாமாதி- யத்தினால் சுபராயினும், இரண்டுக்குடைய ஆதிபத்தியமுமூ பெறுவதால் அசுபராகிறார்.  பெரும்பாலும் புதன் ரிசப லக்கினத்திற்கு யோகப் பலன்களைத் தருவதில்லை.  குருவின் தொடர்பை பெறாத சனி, ரிசப லக்கினத்திற்கு பாதகாதிபதி என்ற தன்மையை இழந்து, யோகர் அகி சுபபலன்களை அள்ளித் தருவார்.

                சூரியன்-செவ்வாய் ரிசப லக்கினத்திற்கு அதிக பாதிப்பைத் தருவதில்லை.  ஜாதகரை வீழ்ச்சி பெறவும் வைப்பதில்லை.  ராகு-கேது ஆகியோர் சனி-புதன்-சுக்கிரன்-சூரியன் ஆகிய கிரகங்களின் தொடர்பை பெற்றால் பாதிப்பைத் தருகிறார்கள்.

                சூரியன்-சனி போன்றோர் யோகத்தன்மையும், சந்திரன், குரு-சுக்கிரன் போன்றோர் அசுபத்தன்மையும், சந்திரன் குரு, செவ்வாய் மாரகத்தன்மையும் புதன் அசுபனாயினும் மாரகர் ஆகிறார்.  சந்திரன்-குரு, செவ்வாய் போன்றவர்களோடு சேர்ந்த எந்த கிரகமும் தீமைகளைத் தருவதோடு ஆயுள் தோஷத்தையும் தர காரணமாகிறார்கள் என்று ” யௌவன காவியம்” கூறுகிறது.

                ரிசப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 4 – ல் சந்திரனிருந்து புதன்-குருவின் தொடர்பை பெற்றால் ( அ ) பார்க்கப்பட்டால், யோக பலன்கள் விருத்தியாகும்.  சனி, ரிசப லக்கினத்திற்கு சூரியன் – புதன் ஆகியோரின் தொடர்பை பெற்றால், நிச்சம் யோக பலன்களைத் தருகிறார்.

                இந்த லக்கினத்திற்கு குரு-செவ்வாய் சேர்க்கை, ராகு, கேதுக்களுடைய தொடர்பை பெற்று இருப்பின் இல்லற வாழ்க்கை பாதிக்கிறது.  பிரிவினை, தாரதோஷம், வம்தோஷம் மனைவிக்கு அகால மரணதோஷம், ஆகிய பலன்களைத் தருகிறது.  புதன், குருவுடன் கூடுவது, சம்பந்தப்படுவது, யோகத்தை கெடுத்து விடுவதோடு நல்ல பலன்களையும் விருத்தி செய்வதில்லை.  இதே புதன் செவ்வாயுடன் சம்பந்தப்பட்டால் நன்மையான பலன் நிச்சயம் தருகிறார்.  அவரவர் தசாபுத்திகளின் போது கை கொடுத்து உதவுகிறார்கள்.  சனி உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டு இருந்தால் மட்டும் இராஜயோகத்தை தர காரணமாகிறார். 3-ல் செவ்வாய், யோக பலன்களைத் தருகிறார்கள்.  கொடிய மாரகன் சொல்லப்பட்ட குரு, 3, 5, 12 ஆகிய இடங்களில் அமர்ந்து ராகு-கேது புதன்-சனி ஆகியோரின் தொடர்களைப் பெற்றிருப்பின், குரு தனது தசையில் பிற்பகுதியில் யோகப் பலன்களைத் தருகிறார்.

                அணியேழுக்குடைய«£னப் பாரு – அவர்

                அங்காரகனாக வாட்சியாய் நிற்க

                குனிதம் விதி பிசகாது – சென்மன்

                குமரிக்கு விதியுண்டு சுமங்கலி – தோழி

                ரிசப லக்கினத்திற்கு 7 – ல் 12 – ல் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை என இக்கவி மூலம் அறிகிறோம்.

 

 

 

                                                                   மிதுன லக்கினம்.

”மைதுனவோரை வந்தவற்கிரவி

மண்மகன் பீத்கன் கொடுமை

செய்குவர் பொன்னுஞ்சனியுமே கூடிற்

செகமிமை யோககாரகராம்

ஐயவெண் பிறையு மாரகனல்ல

வந்றியுங் குசனு மாரகனாம்

பைரவதனைக் கவர்ந்த ரசிலையைப்

பழித்திடுங்கடி தடத்தணங்கே”

                                              ( யவன காவியம் )

”சேய்சீவனோடிரவி சேராக் கடுங்கோடியர்

ஆயபுகரோ னொருவனான கோள் – சேயிழையாய்

மந்தனொடு மந்திரியும் வன்மையுடன் கூடுமெனல்

நந்துமேடப்படியே நாடு”

                                                      ( தாண்டவ மாலை )

”மானேமிதுனல லக்கினத்திற் கரசன் செவ்வாய் கதிர்பாவி

தனேசுக்கிரன் சுபனாகு மதியுஞ் சனியுமற்றபலன் ”

                                                       ( ஜாதக அலங்காரம் )

”சொல்மிதுன லக்கினத்தில் தோய்ந்து பிறந்திடவே

புல்சேயும் பொன் இரவிபொல்லாதவர்-நல்லவெள்ளி

தானொருவன் நல்லவன் சனி குருவுங் கூடியிடில்

மேனரச யோகமில்லை மீது”

                                                       ( சந்திர காவியம் )

 

                மிதுன லக்கினத்திற்கு குரு-சனி சேர்க்கை ” ராஜயோகம் ” என ‘‘ கவி ’’ கூறுகிறது. ஆனால் அனுபவத்தில் குரு-சனி ‘ பரஸ்பர பார்வை’

( அ ) 5,9,3,10 பார்வைகள் மட்டுமே யோகத்தைத் தரும்.  மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரி, செவ்வாய், குரு கொடுமைகளை அதிகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்கள் ஆகிறார்கள்.

                இந்த லக்கினக்காரர்களுக்கு சுக்கிரன்-புதன் சேர்க்கை எங்கு இருப்பினும் நல்ல யோகத்தை விருத்தி செய்கிறார்கள்.  சந்திரன் மாரகத்தை செய்யான்.  ஆனால் குரு பகவான் கேந்திராதிபதி தோஷத்தில் பலம் பெற்றவராகி- பாதகாதிபதியானதால், இவர் 1,4,5,7.9.10,11 ஆகிய ஸ்தானங்கள் ஒன்றில் அமர்ந்ததிருந்தால் ஜாதகர்களின் பாடு படு திண்டாட்டம்தான்.  இவ்வித அமைப்புப் பெற்ற மிதுன லக்கினக்காரர்களுக்கு வெளி உலகில் மதிப்பும் மரியாதையும் நல்லபடி இருக்கும்.  ஆனால் உள்ளே ஏராளமான தொல்லைகள் மனைவி, உடல் நலம் புத்திரர்கள், தொழில் பாக்கியம் ஆகிய விஷயங்களில் இடையூறுகளைத் தந்து கொண்டே இருப்பார்.  இந்தக் குரு பகவான் அதிலும் குரு திசை வந்து விட்டாலோ, வெளி வட்டாரத்தில் உயர்த்திக் கொண்டே போவார்.  தனிப்பட்ட முறையில் பல பாதகங்களைச் செய்து கொண்டே இருப்பார்.

                இது போல் மிதுன லக்கினகாரர்களுக்கு 7 ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள் எதுவானாலும் தங்கள் தசாபுத்தி காலங்களில் நன்மையான பலன்களைத் தருவதில்லை.  அதிலும் 7-ஆம் வீட்டில் இருக்கும் ரிககம் தனது திசையை ‘மூலம்’ சாரம் பெற்று நடத்தினால் கேது புத்தி வரையிலும் ‘ பூராடம்’ சாரம் பெற்று நடத்தினால்-சுக்கிர புத்தி வரையிலும் ‘உத்திராடம்’ சாரம் பெற்று நடத்தினால் – சூரிய புத்தியில் 4-ல் ஒரு பங்கு வரையிலும் பல தொல்லைகளை நிச்சம் தருகிறது.

                ஜெமினி ராசி லக்கினத்தில் பிறந்த இவர்களுக்கு சூரியன் குரு, செவ்வாய், இவர்களின் சேர்க்கை ( அ ) பார்வைக்கு மாரகம் தரக்கூடிய அதிகாரம் உண்டு.  இவர்களோடு ராகு, கேதுக்கள் சேர்க்கை பெற்றோ ( அ) தொடர்பு பெற்றோ பலமுடன் இருப்பின் இவர்களம் மாரகத்தை தரக்கூடியவர்களே.

                இந்த மிதுன லக்கினகாரக்களக்குப் பெருபாவியான குரு பகவான் தனது வீட்டிற்க மறைந்து இருப்பினும் ( அ) உடல் ஸ்தானம் என்கிற சந்திரனுக்கு 2,3,6.8,12 ஆகிய இடங்களில் அமர்ந்து இருப்பினும் நல்ல யோகங்களை விருத்தி செய்யக் காரணம் ஆகிறார்.  2-ல் உள்ள குருபகவான் சனி சாரம் பெற்றாலும் நல்ல யோக பலன் உண்டு.

                இந்த மிதுன லக்கினக்காரகர்கள் எக்காரணம் கொண்டும் மனம் தளர்ந்தவிடக்கூடாது மனம் தளர்ந்தால் மென்மேலும் சிக்கல்களே தொடரும்.  ஆகவே எவ்வித சோதனைகள் வந்தாலும் துணிந்து போராடினால் நிச்சயமான வெற்றி உங்கள் பக்கம்தான்-இதில் சந்தேகமில்லை.

இதே லக்கினத்திற்கு,

                அந்தணரும் கேந்திர மேர

                அவர் செய்யும் கொடுமையிது மெத்தவுண்டு

                குரு 1,4,7,10-ல் இருப்பது தவறு.  ஆயுள் குற்றத்தை தர இடம் உள்ளது. மிதுன லக்கினத்திற்கு குரு பலம் பெறுவது தவறு 9 – ல் வரும்போது பலன் சொல்ல முடியாத நிலையே.

                செப்புவாய் உபயத்தில் செனித்த பேர்க்கு

                சிறந்த தொரு சப்தமனு மாகாதப்பா

  இந்த பாடலும் குருவைப் பற்றி நல்ல பலனை சொல்லவில்லை.

                பத்தாமிட மீன மாகில் அதில்

                பவுமனும் பால் மதி சேர்ந்திருந்தாலும்

                சிறப்பாக கங்கா ஸ்நானம் செய்வாண்டி

                இப்பாடலில் செவ்வாய், சந்திரன் 10-ல் இருந்தால் புண்ணிய தீர்த்தம் ஆடும் வாய்ப்பு கிட்டும் என சொல்கிறது.

 

     கடக லக்கினம்.

” கடக லக்கினத்தோர்க்கமைச்சன் சேய்கபராங்

காரகன் யோககாரகனா

முடனிருந்திடினும் பிரபல யோக

முற்றவனி ரவியோ கொல்லான்

றிடமுள பளிங்கு மாலிவர சுபர்

செப்பிய விவரொடுங்கொடிய

முடவன் மாரகனாமாரகத்தான்

முற்றிடிற் கண்டடமு மொழியே”

                                          ( யவன காவியம் )

“சுங்கனிந்து மைந்தனிவர் சூழாக்கொடுக்கோட்கள்

மங்கலன்மா வேந்தனிவர் மன்னுகின்ற-துங்கமுள்ள

நல்லோர் கணல்லயோகக் கிறைவனாகுமவன்

சொல்லுறிற்பூ சிதனமாய் சொலல்

                                           ( தாண்டவ மாலை )

“நூதலுங்கடகம் புதர்புந்திநேயாய் செய்பவர் குரு செவ்வாய்,

இதமார் சுபனாம் செய்யோகம் இருக்கும்”

                                             ( ஜாதக அலங்காரம் )

“கார்க்கடக லக்கினத்தில் காணச் சனித்தவர்க்கு

சொற்புதனும் சக்கிரனும் சொல்பாவி-நற்குருவும்

செல்சேய் நல்லவர்கள் செய் குருவும் கூடியிடில்

நல்யோகந் தந்திடுவர் நாடு.”                   

                மேற்படி கவிகள் படி பார்க்கும்போது, கடக லக்கினத்தில பிறந்தவர்களுக்கு குரு-செவ்வாய் சேர்க்கை ( அ ) பார்வை-கேந்திர திரி கோணங்களில் இருப்பின் யோகத்தை செய்ய தகுதி உடையவர்களே.

                குரு-செவ்வாயின் சம்பந்தம் பெறாத சூரியன்-சந்திரன் யோகத்தைத் தரமாட்டார்கள்.  கடகலக்கினத்திற்கு யோகாதிகள் என்கிற வகையில் குரு-செவ்வாய்-சூரியன்-ராகு ஆகியவர்களை நாம் எடுத்துக்கொள்ள இடமுண்டு.  ஆனால் புதன், சுக்கிரன், சனி கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றால் நிச்சயம் யோகத்தைத் தருவதில்லை.  இது அடியேன் அனுபவம்.

                கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாதிப்பைத் தரும் கிரக வரிசையில் சுக்கிரன்-புதன்-சனி-கேது கிரகங்களைச் சொல்லியுள்ளனர். ஆனால் பாதிப்பைத் தரும் கிரகங்கள் 3,6,8 ஆகிய ஸ்தானங்களிலிருந்து சூரியன், சந்திரன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பை பெற்று இருப்பின் மறைமுகமாக ஜாதகனை முன்னேற்றம் அடையச் செய்யும் செய்து, பலவித குறுக்க வழி வருமானங்களைத் தந்து ஒரு உயர்ந்த அந்தஸ்தையும் தந்து விடுகிறார்கள்.

                இருப்பினும் “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல, குடும்ப சுகம்-மனைவி-புத்திரர்-புத்திரி போன்றவைகளில் ஏதோ ஒரு வகையில் சிக்கலை உண்டாக்கி உடல் நலம்-மனநிலை பாதிப்பைத் தந்து, ஒரு சந்நியாசி கோலத்தைஉண்டாக்குவர்.

                இவ்வகை அமைப்பை பெற்றவர்கள், மாற்றான் தோட்டத்து மல்லிகையை ‘ நோட்டம் ‘ விடாமல் இருந்தால் சரி, அப்படி நோட்டம் விடாமல் இருப்பது இவர்கள் வாழ்க்கைக்கு ஒளி சேர்ப்பதாக அமையும்.  இந்த லக்கினத்தில் பிறந்த பெரும்பாலான ஆண்கள், தம் மமைவியை துன்புறத்தாமல் இருப்பதில்லை.  பெண்கள் தன் கணவனிடத்தில் அலட்சிய நோக்கோடு செயல்படாமல் இருப்பதில்லை.

                நிலையான இடத்தில் தன் தொழிலைப் பலப்படுத்த முடியாத இளைஞர்களுக்கு சனி, ராக திசைகள் பெரும் யோகத்தைத் தருகிறது.  ஆனால் நிலையற்றதாகவே அவை இருக்கும்.  குரு திசை கடைக்கூறும்,செவ்வாய் திசை முதற்கூறம் யோகத்தைத் தருகிறது.  சூரியன் பிதுர்நிலை, சந்திரன் மனோநிலை தடுமாறச் ªச்யவர்.  கேது சந்நியாசத்தை உண்டாக்குவர்.  சக்கிரன் மதுபானம், பெண்கள் வகை உல்லாசம்.  சல்லாபங்களைத் தந்து ஜாதகரை படு குழியில் தள்ளுவார்.  ராக காம இச்சையை அதிகப்படுத்துவார்.  சனி, புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களோடு சம்பந்தப்பட்ட எந்தக் கிரகங்களும் கண்டம், விபத்து, மாரகம் போன்றவைகளைத் தராமல் இருக்காது.  ஆனால் குருவும், செவ்வாயும் ஒன்று சேர்ந்து இருப்பின் எவ்வகை பாதிப்பு ஏற்பட்டாலும், தன்நிலையை உயர்த்தி அறிவையும் புகட்டுவார்கள்.           

                கூறப்பா கடகத்தில் ஜெனித்த பேர்க்கு

                கொடுமை பலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி”

                இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் பாதிப்பான பலன்களையே எங்கிருந்தாலும் தருகிறார்.  5,9-ல் இருப்பது அதிக பாதிப்பு இல்லை.

                இந்த சுக்கிரன் மற்ற கிரகங்களோடு சேரும்போது பலன்கள் மாறுபட்டு நடக்கிறது.

                அஞ்சுக்கும் பத்துக்கும் மடையோன்-அவர்

                அன்பாக வைத்தேழு தனலாபம் பத்தில்

                கொஞ்சும் குழவிக்கு யோகம் -சித்தர்

                கூறினார் விதி தீர்க்கும் அறிந்துறை தோழி

                செவ்வாய் 2,5,7,10,11-ல் இருப்பது மிக நல்லதாக சொல்கிறது.  இப்பாடல் நல்லமுறையில் சரியாக வருகிறது.

 

சிம்ம லக்கினம்.

 

“சிங்க வோரையினிலுத்தவர்க் கிரவி

சேய் சுபர்கவி புதன்பாவர்

மங்கல குசனும் யோககாரனாய்

வரினுமம் மண் மகனாலுக்

கங்க மாயுள் ளோனாதலிற்றீமை

யாம் பலனீ குவன் வெள்ளி

பங்குமாரகாரகமாரகத் தானம்

பரிவினுங் கண்ட மாய்ப்பகரே”

                                       ( யவன காவியம்)

 

” புந்தியும் பார்கவனும் போற்றற் கரும்பாவி

செந்நிறத்த செவ்வாயே செம்மைக் கோள்- அந்நிறத்தாய்

யோகமுற்றோர் இப்பலனை யோராதளித்திடுவார்

ஆகமதியாரார் புகர் ”

                                       ( தாண்டவ மாலை )

 

” முதலே சிங்கம் புந்தி புகர் மோதும் பாவர்,

செய்சுபனாம் ”,

” சேர்ந்த சிங்க லக்கினத்தைச் சேர ஜனித்தவர்க்கு

ஏந்துசனி சுக்கிரனுமே பாவி – போந்த செவ்வாய்

ஏறுமிரவி நல்லன் இன்புகர் செய் கூடியிடில்

வீரிய யோகங்களுண்டாம் வேறு ”.

                                            ( சந்திர காவியம் )

 

” யாரப்பா சிங்கத்தில் ஜெனித்த பேர்க்கு

பவுமனுமே திரிகோணமேரி நிற்க

சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூதி

சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு

வீரப்பா மற்றயிடந்தனிலே நிற்க

வெகுமோசம் வருகுமடா விளையால் துன்பம் ”.

                                              (   புலிப்பாணி  )

 

” திரித்தியை கருமணைப்பாரு – அவர்

திடமாக யீறிரண்டு தசம் நட்பு கோணம்

கரும் பிதிர்வர்க்கமுண்டாம் – சென்மென்

கனவானந் தொழிலள்ளோன் நேசனாந்தோழி ”.

 

                புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது என்ற நியதியில் பிறந்த இந்த சிம்ம லக்கினக்காரக்ளின் செயல்பாடுகள் தன்மைகள் தனித்தன்மை பொருந்தியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

                மேற்கண்ட கவிகளின்படி 2, 11 க்குரிய புதன் மாரக தன்மை பொருந்தியவனாக வந்தாலும் நல்ல யோக பலன்களை தருவதில் தவறில்லை.  இவர் நல்ல இடங்களில் இருந்து சூரியன் – செவ்வாய் தொடர்பை பெற்றால் கல்வியில் நல்ல தேர்ச்சியை தருகிறார் மருத்துவத்துறை – பொறியியல்துறை, கணக்கு துறையில் தேர்ச்சியும் உயர்தர பதவிகளும் கிடைக்கிறது.  3.10 க்குரிய சுக்கிரன் இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்க தனித்த நிலையில் நன்மைகள் செய்வதில்லை.  தனித்த நிலையில் இறந்துவிட்டால் அவர் காலம் வரும்போது பல பாதிப்பான பலன்களை தருகிறார்.  செவ்வாயுடன் சேரும்போது யோகத்திற்கான வாய்ப்பு உள்ளது.  தர்மகர்மாதிபதி யோகம் என்ற அமைப்பு உண்டாகிறது இதுவும் முழுமையாக செயல்படுவது இல்லை.

                4,9 க்குரிய செவ்வாய் தனித்து யோகங்களை தருவதில்லை.  தனித்து இருந்து தனது தசாபுத்தி காலங்களை நடத்தும்போது பாதிப்பான பலன்களையே தருகிறார்.  குரு, புதன், சூரியன், ராகுவின் சேர்க்கைகள் பெற்று 1,4,5, 7, 9, 10,11 – ல் உள்ள போது அவரால் நல்ல பலன்கள் கிடைக்கிறது.  5, 8 க்குரிய குரு இந்த லக்கினத்திற்கு சமநிலையில் நின்று தன்னோடு சேர்ந்த கிரகங்களுக்கு தக்கடிப நன்மை தீமைகளைத் தருகிறார்.  6, 7 – க்குரிய சனி மாரகாதிபதி என்ற நிலையில் சுக்கிரன், புதன், குரு இவர்களோடு சந்திரன் இணைவு பெறும்போது பெறும் தீமைகளை தருகிறார்.  சனி, செவ்வாய், புதன், கேது சேர்க்கையில் சுக்கிரன், தொடர்பு இல்லாமல் இருந்தால் மிக நல்ல பலன்களைத் தருகிறது.  சனி, சுக்கிரன், சந்திரன் சேர்க்கை தொடர்பு அவர் தசாபுத்தி காலங்களில் மிகவும் பாதிப்பான பலன்களை தருகிறது.  இவர்களோடு லக்கினாதிபதியான சூரியன் சேர்க்கை கூடாது.  மற்றபடி யாருடன் சேர்ந்தாம் சிறப்பான பலனை தருகிறார்.  தனித்த சனி, சூரியன், சேர்க்கை சுக்கிரன், சூரியன், சேர்க்கை ஒருவாறு நல்ல பலன்களையே தருகிறார்கள்.  12-க்குரிய சந்திரன் யாருடன் இருந்தாம் தனித்து இருந்தாலும் பெறும் நன்மைகளைத் தருவதில்லை.

 

 

 

 

 

                                                கன்னி லக்னம்.

 

                ” கன்னிலக்கினத்தக்கசுரருக்கிறைபொன்

                 காரியுஞ்சுபர்மதியரிசேய்

                 மன்னிய மூவரசுபராங்கவி

                 மாலுமேயோக காரகராம்

                 உன்னியவன்னோர்மருவினுமதிக

                 யோகமே தரவரவசுபர்

                 பன்னுமாரகராமாரகத்தானப்

                 பதிவரிற்கண்டமாம்பலனே ”

                                                                                                                                              (யவன காவியம் )

                செவ்வாயுஞ் செம்பொன்னுஞ்சேரா மதியுமிவர்

                செவ்வாயர்வெள்ளி விளம்புங்கால் – ஒவ்வசுபன்

                பார்ப்பவனும் பங்கய்மா வைரிமைந்தன்னானிவர்கள்

                ஆர்ப்பொருமாயோகத்தாராங்கு ”

                                                                                                                                            (தாண்டவமாலை )

                ”மாதேகன்னி சேய்மதிபொன் மன்னும் பாவர் புதன் சுபனாகும்

                காலேயோகம் புந்திபுகர் ”

                                                                                                                                                 (ஜாதக அலங்காரம் )

 

                மேற்கண்ட கவிகளின்படி 1 – 10  – க்கு புதனும், 2, 9 – க்கு சுக்கிரனும் 5 – 6 – க்கு சனியும் ஆதிபத்தியம் பெறுவதால் இந்த கன்னி லக்கினக்காரர்- களுக்கு இவர்கள் யோக பலன்களைத் தருவார்கள் என்றும், குரு 4 – 7 – க்கும், செவ்வாய் 3 – 8 -க்கும், சந்திரன் 11 – க்கும், சூரியன் 12 – க்கும் ஆதிபத்தியம் பெறுவதால் இவர்கள் தீமையான பலன்களைத் தருவர் எனவும், யோக கிரகங்களுடன் சேர்ந்த இராகு-கேது யோக பலன்களையும், தீமைதரும் கிரகங்களுடன் சேர்ந்த இராகு – கேது தீமையான பலன்களையும் தருவார்கள் எனவும் ஜோதிட சுருதிகள் சொல்லுகின்றன.

                4 – 7 – க்குடைய குரு மிகவும் பாதிப்பைத் தருவார் என்றும் குரு நின்ற வீட்டின் அதிபதி, குருவிற்கோ, லக்கினத்திற்கோ, அல்லது சந்திரனுக்கு 5 – 9 – ல், இருப்பின் லட்சுமியே வீட்டில் வாசம் செய்வாள்.  மனையில் தெய்வம் உண்டு என ஆணித்தரமாக சொல்கிறார் ” புலிப்பாணி

முனிவர்.  இது மறக்க முடியாத உண்மை, உண்மையே..

                சுக்கிரன் – புதன் – சனி ஆகியவர்கள், செவ்வாய் – சூரியன் – குரு ஆகியோரின் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரத்திற்கு 3-5-7-ல் இருப்பின், சனி தசாபுத்தி காலங்களில் கண்டம்-விபத்து-நோய்த்தொல்லை, சொத்துக் களை இழத்தல், மாரகம் போன்ற பாதிப்புகள் நிச்சயம்.  சந்திரன், கன்னி லக்கினத்தாருக்கு ‘ சுபர் – பாவர் ‘  என்ற வரிசையில் பெறாமல் சமநிலையில் செயல்படுகிறார்.

                பாவர்கள் என்று சொல்லப்படும் சூரியன்-செவ்வாய்-குரு ஆகியவர்கள் 3-6-8-12 – ல், இருந்த, சனி சுக்கிரன், புதன், சந்திரன், ராகு, கேது தனப்பிராப்தியும் பெரிய முன்னேற்றகளையும் தந்து, கடைசியில்

”ஓட்டாண்டியாக ” நிற்க வைப்பார்கள்.  இந்த கன்னிலக்கினக்காரக்களுக்கு பெண்களாலேயே யோகமும்,  பின் தரித்திரமும் வரும், பெற்ற அன்னை

( அ ) சிற்றன்னையின் அரவணைப்பு குறைந்து, அவர்களே பகைவர்களாக மாறி செயல்படும் விந்தையான அமைப்பு இவர்களுக்கே உரியது, கவர்ச்சியான உடல் அமைப்புடன் சிரித்துப்பேசி வசீகரிக்கும் தன்மையும் கொண்ட இவர்கள் இல்லறத்தில் இன்பம் பெறுவது கடினமே, கடினமான குணம் கொண்ட மனைவி ( அ ) மாமியார் – மாமனாரால் தொல்லைகள் பல பெறும் கன்னிலக்கினத்தாருக்க சுகமான வாழ்வு அல்லது மிதமான சொத்து, சொகுசுவாகம் – நாகரிக ஆடையாபரணம் ஆகியவைகளுக்கு குறைவிருக்காது.

                மேலும் இந்த லக்கினத்தாருக்கு சனியுடன், புதன்- சுக்கிரன் – ராகு – கேது சேர்க்கை ( அ ) பார்வை இருப்பின் நலமான யோகம் கண்டிப்பாக உண்டு.  சூரியன் – புதனுடன் குரு சம்பந்தம் பெற்றாலோ, ( அ ) குரு நின்ற வீட்டின் அதிபதி கெட்டுவிட்டாலோ,கேந்திராதி பத்தியம் கிடையாது.   ‘கஜகேசரியோகம் ‘  – ‘சசிமங்களயோகம்’  ‘குருமங்களயோகம்’ ஆகியவைகள் நன்மை தருவதில்லை.  சுக்கிரன் புதன் சேர்க்கையான தர்மகர்மாதிபதி யோகம், 1,5-ல் சந்திரன் அமைந்து, சூரியன் – செவ்வாய் – ரா க – கேது இன்றி சந்திரனுக்கு 2-12-ல் மற்ற கிரகங்கள் இருந்து தரும் அன்பாசுனபாயோகம் எவ்விதத்திலாயினும் யோகங்களைத் தந்திடும்.

                எதிர்பாராத வகையில் வாழ்வில் முன்னேற்றம் பெறும் இவர்கள், தாய், உடன்பிறப்பு, புத்திரர் வகையில் நன்மதிப்பு மன அமைதி பெற முடியாதவர்கள், ஆயினும், இந்த கன்னி லக்கினக்காரர்கள் தாழ்ந்த வாழ்க்கையை நிச்சயமாக அடையமாட்டார்கள்.  அனேகருக்கு யோகம் உள்ள, லட்சுகடாட்சம் பொருந்திய கணவனுக்கு தைரியம் ஊட்டுபவளாக மனைவி அமைகிறாள்.  சிலருக்கு இரண்டுதாரம் ஏற்படுகிறது.  இரண்டாம் தாரம் திருபூதிப்படுவதில்லை. சிலர் ” சின்னவீடு ” வைத்துக் கொண்டு நாடகமாடுவதும் உண்டு.  பெண்களின் அரவணைப்பு இவர்களை அணைக்கத் துரத்தி வரும்.  இவர்கள் பெண் தெய்வ வழிபாடு உபாசனைகள் செய்து வந்தால் வித்யாபலம், தொழில், ஞானம் சாதுர்ய திறமைகள் மேலோங்கும்.  வாழ்வு உயர்வு பெறும்.

                குறித்திட்டேன் கன்னியிலே பிறந்தபேர்க்கு

                குற்றம் வந்து சேருமடா குருவினாலே

இந்த லக்கினத்திற்கு குரு தீமையான பலனைத் தருவார் என்கிறது.

 

 

 

 

                                                                                துலாம் லக்கினம்.

                துலை தன்க்கருணன் புகர்சனிசுபராஞ்

                சூரியனிலமகன் சுபர்

                கலைமதிமகனும்மயோககாரகனாங்

                காணுமவ்விருவருமருவிற்

                றலமிசை மிகுந்த பலனது துருவர்

                தபனனுங்குருவுமாரகராங்

                குலநவமிரண்டே முடையவர்கொல்லார்

                கொல்வதம் மாரகர்குணமே.

                                                                                                                                             (யவன காவியம் )

 

                குருவிரவி சேய்கொடியர்கூறுசனிபுந்தி

                மருவு நலமுடையார் வண்டில்-திருமருவும்

                யோகத்தாரிந்து மேயச்சுதனுமொண்ணுதன்மீ

                தாகுமறகத்தாயறி.

                                                                                                                                              (தாண்டவமாலை )

                ”போலாந் குலாத்திற் சேய்பரிது குருவும் பாவர் சனியுதனும்

                மேலாம் சுபர்கள் மதிபுந்தியோகன் மாரகன் சேயே ”

                                                                                                                                         (ஜாதக அலங்காரம் )

                துலையிற் பிறந்தார்க்குச் சூரியன் சேய்பொன்னும்

                சொலும்பாவி புந்திசனிசுங்கன் நிலை சுபர்கள்

                புந்திமதியுங் கூடிற் பேராசர்யோக முண்டாம்

                வந்த செவ்வாய் கொல்லான் வளைந்து

   ( சந்திர காவியம் )

                மேலே சொல்லிய பாடல்களின் பிரகாரம் துலாலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் – சுக்கிரன் – சனி சுபபலன்களைத் தருவார் என்றும் சூரியன் – செவ்வாய் அசுபபலன்களைத் தருவார் என்றும், சந்திரன் – புதன் யோக பலன்களைத் தருவதாகவும் சொல்லப்பட்டு உள்ளது.  ஆனால் புலிப்பாணி கூறுவது,

                ” கொற்றவனே கதிரவனும் கோணமேற

                சீரினேன் ஜென்மனுக்கு யோகம் மெத்த ”

என்றபடி சூரியன் 5 – 9 -ல் இருப்பினும் யோகபலனைத் தருபவார் எனச் சொல்லி உள்ளது.  நடைமுறையில் செயல்படுத்துவதாகும்.  இதேபோல் சுக்கிரன் 1,4,5,7,9,10 -ல் இருந்து அந்த வீட்டின் அதிபதி சுக்கிரனுக்கு நல்ல நிலையில் இருப்பின் நல்ல யோகங்களை விர்த்தி செய்கிறார்.                                                                                                                                                                                                                                                               

                லக்கினாதிபதியான சுக்கிரன் 8 – க்குரிய ஆதிபத்திய தோஷம் செய்யார் என பல நூல்கள் சொல்லி இருப்பினும், லக்கினாதிபதியான சுக்கிரன் திசை, திருவாதிரை, சுவாதி, சதயம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் துலாலக்கினமாக பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை வரும்போது மாரகம், கண்டம் தர இடம் உண்டு.  இக்காலம் மிருத்துஞ்ச ஹோமம் பயன்தரும்.

                இந்த லக்கினத்தில் பிறந்த அனேகருக்கு 2 தாரம் ஏற்படுகிறது.  யோகபலன்களைத் தரும் புதன், சுக்கிரன், சனி போன்ற கிரகங்கல் பாதிப்பைத் தருவதையும் பார்க்கிறோம்.  காரணம் என்ன? புதன் பாக்கிய பிரையாதிபதி, கொடுத்து, கெடுக்கும் தன்மை உள்ளவர்.  சந்திரன் நிலையான தன்மை பெற்றவர் அல்ல.  இவ்வமைப்பு பெற்ற புதன், சந்திரன் சேர்க்கை யோக பலனை விர்த்தி செய்வதில்லை.  யோக பலன்களைத் தந்தால் கடைசியில் கெடுத்துவிடுவது கண்கூடு.  மேலும் இந்தப் புதன், சந்திரன் சேர்க்கையோடும், 2, 7 – க்குரிய செவ்வாய் சேர்ந்தால் போச்சு, அவர்கள் தசாபுத்திவரம்காலம் காமம் தலைக்கேறி கண் மறைத்து கண்றாவியான செயல்களையும், குழந்தை, குமரி, கிழவி என்ற தராதரம் இன்றி செயல்படும் எண்ணத்தைத் தந்து, வேடிக்கை பார்க்க வைத்து விடுகிறார்கள்கள்.  ” அவன் அவன் தலை எழுத்து.

                புதன், சனி சேர்க்கையானது, துலாம், மகரம், கும்பம், மீனம், மிதுனம், கடகம் போன்ற இடங்களில் இருப்பின், உறுதியாக யோகபலன்களைத் தராமலிருக்காது.  இவர்கள் தசாபுத்தி காலங்களில், சொத்து சேர்க்கை – கௌரவம்-பட்டம் பதவி உண்டு

                துலாம் லக்கினத்திற்கு ராகு, கேது, செவ்வாய் போன்றவர்கள் அதிக பாதிப்பைத் தருவதில்லை.  செவ்வாய் சமத்துவமான கிரகமாக செயல்படுகிறார்.  ராகு, கேதுவோடு புதன், சனி சேர்க்கைபெற்றால் ராகு, கேது தசாபுத்தி காலங்கள் நன்மையைச் செய்கிறது.  லக்கினாதிபதியான சுக்கிரனோடு சேர்க்கைப் பெற்ற ராகு, கேது முக்கால் பங்கு யோக பலனையும், கால் பங்கு அவயயோகத்தையும் தருகிறார்கள்,

                பூர்ண சுபகிரகம் என சொல்லப்படும் குரு, துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பூர்ண பாவியாகி பலவித பாதிப்பு – நோய் – கடன் – சத்ரு உபாதைகளை தர காரணமாகிறார்.  இவர் தனுசு, கும்பம், மீனம், கன்னி, மிதுனம் ராசிகளில் தனித்தோ, அல்லது வேறு எந்தஒரு கிரகம் சேர்க்கை பெற்றோ இருப்பினும்.  குரு தனது தசாபுத்தி காலங்களில் நல்ல யோகத்தைத் தந்து அடுத்துவரும் தசையில் ஒன்றும் செயல்படமுடியாத அளவு செய்துவிடுகிறார். 

                பூர்ண பாவியாகிய சனி, துலாம் லக்கினத்திற்கு பூர்ண சுபராகி விடுவதால் யோகத் தன்மை பெற்று நல்ல பலன்களை தர வல்லவராகி விடுவதாக நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது.  ஆனால், இவர் தசா புத்திகள் நடக்கும்போது ஏற்படும் பலன்களை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.  பலவிதமான சோதனைகளுக்கு உட்பட்டுவருபவர் களுக்கு, மட்டும் தான் தெரியும்.

                பலாபலன்களில் பாதிப்பை எழுத இடம் கொள்ளாத சனி இங்கு பாபியாக செயல்படும் காரணம்?

                கிருத்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், சித்திரை, மிருகசீரிடம், புனர்பூசம், விசாகம்.  பூரட்டாதி நட்சத்திரம் பெற்ற சனி, பாபியாகி மிகவும் பாதிப்பான பலன்களைத் தருவது உண்மையே.  சூரியன், ராகு, கேது, செவ்வாய் ஆகியோருக்கு குருவின் பார்வையோ – சேர்க்கையோ, துலா லக்கின ஜாதகருக்கு இருப்பின் புத்திர கணவன், மனைவி, தொழில், குடும்ப ஒற்றுமை, தனநிலை போன்றவைகளில் பாதிப்பைத் தந்து விடுகிறது.  தீராத நோய்த் தொல்லைகளையும் தரலாம்.

                மேலே சொல்லப்பட்ட நட்சத்ரத்தை பெறாத சனி யோகபலன்களை நிச்சயம் தருவார். 

                இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு தர்மகர்மாதிபதியோகம், கஜகேசரியோகம், குரு மங்களயோகம் தருவதில்லை.  அதியோகம், சசிமங்களயோகம் போன்றவைகள் நன்மை பல தருகிறது.

 

                                                                                விருச்சிக லக்னம்.

                ”தேளினிற் செனித் தோற்கிரு சுடரோடுந்

                                தேவர்கட்கிரை வனுஞ்சுபராய்

                கோளாறு சேய் மாலுசனனுமதர்

                                குபேரனுமி ரவியும் யோகர்

                கேறுடன் கூடிலி ராஜயோக மதாங்

                                கிளத்தியவசுபர் மாரகராய்

                நாளுமே கொடுப்பர் குருசனி கொல்லார்

                                நங்கையற்கினிய தெள்ளமுதே ”

                                                        ( யவன காவியம் )

                ” புந்தியஞ்சேயும் புகரும் பொல்லாக் கொடியர்

                இந்து வொருத்தனே யேந்தினழயாய் – சந்ததமும்

                நல்லனிஞ் ஞால நலனளிப்போன் ஞாயிறுடன்

                அல்லவனுமாகவறு

                                                       ( தாண்டவமாலை )

                ” ஏய தேள்புதன் சேயும்பளிங்கே

                இயன்ற பாவர் இந்து சுபன் ”

                                                       (  ஜாதக அலங்காரம் )

                ” தேளிர் பிறந்தார்க்கு சேய்புகர் மான் மைபாவி

                நாளும் பொன்னி ரவி நல்லாவரா – நீளிரவி

                சந்திரனுங்கூடியிடிற்றாறரசர் யோகமுண்டாஞ்

                சொந்த குரு ககரி கொல்லாம் சொல்”

                மேற்கூறிய கவிகளின்படி இந்த விருச்சிக லக்கினத்திற்கு இரு சுடர்கள் அதாவது சூரியனும் – சந்திரனும், குபேரனென்று சொல்லப்படும் குருவும் யோகாதிபதிகள் ஆவார்.  இவர்கள் ஒருவருக்கொருவர் எங்கு இணைந்திருப்பினும் யோகத்தை தரக்கூடியவர்கள்.  லக்கினாதிபதியான செவ்வாய் 6 – க்குடைய ஆதிபத்தியமும் பெற்றதனால் அகுபராகிறார்.  8-11 – க்குடைய புதன் மாரகராகிறார். 7-12 – க்குடைய சுக்கிரனும் மாரகஸ்தானத்தை வகிப்பதால், புதன் – சுக்கிரன் எங்கிருப்பினும் அவர்களின் தசாபுத்தி காலங்களில் கண்டம் – மாரகம் – கணவன் ( அ ) மனைவி பிரிவினை, தொழிலூ பாதிப்பு போன்றவைகளைத் தருகிறார்கள்.  இவர்களோடு செவ்வாய்-ராகு-கேது சேர்க்கை பெறின் பாதிப்புகள் உறுதியாக நடைபெறுமென கூறலாம்.

                இந்த விருச்சிக லக்கினத்தாருக்கு சனி அதிக பாதிப்பைத் தருவதில்லை.  இந்த சனியோடு புதன் – குரு சேர்க்கை பெறின், ஏதோ ஒருவகையில் திறமை பெற்றவராகவும், தரித்திரமில்லா வாழ்க்கை வாழ்பவராகவும், வாக்கு மேன்மை தெய்வபலம் ஆகியவை சிறந்து விளங்கும்படி இருப்பதையும் நடைமுறையில் காணலாம்.  விருச்சிக லக்கினத்திற்கு 2-5-க்குரிய குரு எங்கு இருப்பினும் நன்மைகள் தராமல் இருக்கமாட்டார்.  இவரோடு சம்பந்தப்பட்ட சூரியன்-சந்திரன்ஆகிய இருவரும் ஆதிபத்திய – காரகப்படி, நல்ல யோகத்தை தர காரணமாகிறார்கள்.  நடைமுறையில் ஆய்வு செய்யும் போது சூரியன் – சந்திரன்-குரு ஆகீயவர்களின் தொடர்பை எவ்விதத்திலாயினும் பெற்ற இந்த விருச்சிக லக்கினக்காரர்கள் அரசாங்க தொடர்புள்ள தொழில் நிறுவனங்கள் – பொதுத்தொண்டு போன்றவைகளில் சிறப்பான அங்கம் வகிப்பவர்களாக இருப்பார்கள்.  அனேகர் பொதுமக்களிடையே செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்பதவிகளை வகிப்பவர்களாகவும் இருப்பார்கள்.  ஞானம், அறிவு, யுக்தி மிகுந்தவர்களாகவும் எழுத்தாற்றல் பெற்றவர்களாகவும் இருப்பதைக் காணலாம்.

                செவ்வாய்-சுக்கிரன்-சனி-ராகு-கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றிருக்கும் இந்த விருச்சிக லக்கினக்காரர்கள் தீய செயலுக்கு உட்படுவதும், சூதாட்டம் – மது – மங்கை போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.  பலருக்கு அனேக மனைவிகள் உண்டாவதும் உண்டு.  இத்தகைய அமைப்பு பெற்றவர்களில் சிலர், கொலை – பாதகம், ராகு – கேதுவுடன், புதன் சேர்க்கை பெற்றிருக்கும் அமைப்புக்கொண்ட விருச்சிக லக்கினக்காரர்கள் நல்ல நலைமையில் இருப்பதையும் காண்கிறோம். குரு, புதன் சேர்க்கை புத்திர நாசத்தையும், குடும்பம் பாதிப்படைதலும் மூடத்தனமாக காரியங்கள் செய்வதையும் முரட்டு சுபாவத்தையும், நாஸ்திகத்தன்மையையும் தருகிறார்கள்.

                இவரோடு சம்பந்தப்பட்ட சந்திரன் – செவ்வாய் தீராத உடல் வியாதிகளையும், இனம் புரியாத மனபயம் – காம இச்சை அதிகரித்தலால் சில பல பாதிப்புகளையும் தருவார்.  தன் உடல்நிலையைத் தானே கெடுத்துக் கொள்ளும் மனோபாவத்தையும் தருவார்கள்.

                இந்த விருச்சிக லக்கினக்காரர்களுக்கு ” குரு திசை ” சுபத்தைத் தருகிறது.  குற்றங்களை நீக்கி நன்மைகளை அதிகரிக்கச் செய்கிறது.  செவ்வாய் . சுக்கிரன் – ராகு – கேது சேர்க்கை வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளைத் தருகிறது.

                ” உன்னதமான லக்கினம் ” என்று புகழ்ந்து சொல்லப்படும் விருச்சிகத்தை லக்கினமாகக் கொண்டவர்களுக்கு சூரியன் – சந்திரன் – குரு ஆகியோரின் தொடர்புகள் ஜாதகத்தில் நன்கு இருப்பின் ‘ ஒருவரப் பிரசாதமே ‘.  இந்தலக்கினத்திற்கு புதன் – சனி சேர்க்கை 5, 9, 11 – ல் இருப்பின் எவ்வகையிலும் குறைவில்லா வாழ்க்கையைத் தருகிறார்கள்.  ஆனால், இல்லறத்தில் மட்டும் தீராத குழப்பம் காணும்-  சூரியன் – குரு சேர்க்கை 5, 2, 6, 9, 10  ஆகிய இடங்களில் இருந்து செவ்வாயின் தொடர்பை பெற்றால், உன்னத பதவிகளை வகிக்கும் வாய்ப்பு கிட்டும்.  சூரியன்- புதன்சேர்க்கை நல்ல பாண்டித்யமும், கல்வி அறிவும், குடும்ப சூழ்நிலையும், மனைவி வகையில் நல்ல நிலைமையும், தெய்வீக ஆன்மீக தொடர்புகளில் பிரகாசமும், அரசியல், ராணுவம், காவல் போன்ற துறைகளில் புகழும் கிடைக்கிறது.

                சூரியன் – சந்திரன் சேர்க்கை 5, 6, 10, 11 – ல் இருந்தால் மட்டுமே யோகம் தரும். குரு – சந்திரகேந்திரயோகம்.  கஜகேசரி யோகம், நன்மையைச் செய்கிறது.  குரு, செவ்வாய் தொடர்பான குருமங்கள யோகமும் நற்பலனைத் தருகிறது.  விருச்சிகத்தில் செவ்வாய், ரிசபத்தில் சந்திரன் அமைந்த சந்திரமங்கள் யோகம் நன்கு பிரகாசிக்கிறது.

 

 

                                                                தனுசு லக்னம்.

                வில்லினுக்கிரவிசேய் சுபராகும்

                                வெள்ளியங்கொரு வனேபாவி

                யெல்லு மாலவனும் யோகரா மன்றி

                                யியைந் தொரு ராசியிலிருப்பின்

                நல்லவாம் பலனைத் தருவர் மாரகராய்

                                நவிலுவர்கவி புதனிவரை

                யல்லிருங் குழலாயிரண்டு மூன்றேழி

                                ஒனுகினுங் கண்ட மென்றுரையே

                                               ( யவன காவியம் )

                ” ஒருவன் புகர்பொல்லா னொண்சேயிரவி

                மருவுநல் யோகரென மன்னுந் – திருவிடையோர்

                பார்க்கவனும் புந்தியென்று பாம்மேரகலல்குல்

                சீர்க்க மலச் சேயிழையாய் செப்பு ”.

                                               ( தாண்டவமாலை )

                                ஆயுதனுசில் புகர்பாவி

                                யாரால் பருதி சுபனாகும் ”

                                               ( ஜாதக அலங்காரம் )

                ” தனுசிற் பிறந்தவர்கக்கு தண்புகர் பொன்பாவி

                சனி செவ்வாய் சூரியன்றான் நல்லர் ”

                                                       ( சந்திர காவியம் )

                ” பாரப்பா வில்லு தனில் உதித்த பேர்க்கு

                பகருவேன் புந்தியுமே பகையுமாவர் ”

                                             ( புலிப்பாணி)

                ”ஆறுக்கும் பதினொன்றுக்குடையோன் அவர்

                அன்பாக கேந்திரம் அமர்ந்திருந்தாலும்

                பாரினில் தாயாதிபண்டு – சென்மன்

                பாங்காக கொள்வரண்டி தோழி ”

                மேற்படி பாடல்களின் படி 1-4 – க்குரிய குரு லக்கினாதிபதி என்றாலும் அவர் 1, 4, 7, 10 – ல் இருப்பது அவர் தசாபுத்தி காலங்களில் மிகுந்த பாதிப்பை தருகிறது.  சனி 2,3, – க்குரிய நல்ல யோகக்ளைத்  தருவதில் சிறப்புடையவராகிறார் இவர்.  2, 3, 6, 11 – ல் இருப்பது சிறப்புடையதாகும்.  குரு, சனி, சூரியன், புதன், ராகு, கேது இவர்கள் 5 – க்குரிய 9 – க்குரியவர்களான செவ்வாய் – சூரியனின் நட்சத்திரங்களைப் பெருவபது நல்ல பயன்களைத் தரும் நிலை ஏற்படுகிறது.  மேற்படி கிரகங்களோடு சந்திரன், சம்பந்தப்பட்டால் பலன்கள் தரும் போல் தந்து கெடுத்துவிடுகிறது.

                இந்த லக்கினத்திற்கு குரு, செவ்வாய், தொடர்பான குரு மங்களயோகம், சூரியன்-புதன் சேர்க்கையான தர்மகர்மாதி யோகம் போன்றவைகள் நன்மை செய்யும்.  கஜகேசரி யோகம்.  சந்திர மங்கள யோகம், அதியோகம் மாளவியாயோகம் போன்றவை சிறப்பைத் தராது.

                5, 12 – க்குரிய செவ்வாய் 9 – க்குரிய சூரியன் சுபத்தன்மை பெற்று யோகத்தின் நிலையில் உள்ளபோது இவர்களோடு குரு, புதன் சம்பந்தப்படும் போது நல்ல பலன்களைத் தருகிறது.

                6, 11 – க்குரிய சுக்கிரன் 11 – 4 -ல் இருந்தால் தாய்வழி சொத்துக்கு வழி வகுக்கின்றார் மற்ற இடங்களில் உள்ள போது நல்ல பலன்களை எதிர் பார்க்க முடிவதில்லை.  இவரோடு குரு, புதன், சூரியன், செவ்வாய், தொடக்க பலவகை பாதிப்பை தருகிறது.

                7, 10 – க்குரிய புதன் தனித்து இருந்தாலும், சுக்கிரன், சந்திரன், குரு வோடு, சேர்ந்தாலும் மிக பாதிப்பான பலன்களைத் தருகிறது.

                ராகு, கேதுக்கள் யாருடன் சேர்ந்தாலும் நல்ல பலன்களை தருகிறார்கள்.  தனித்து உள்ளபோது 2, 3,6, 9, 10, 11 – ல் இருப்பின் நல்ல யோகத்தைத் தருவதில் தவறுவதில்லை.

                8 – க்குரிய சந்திரன், குரு, புதன், சுக்கிரன் உடன் சேர்ந்தால் மட்டுமே பெறும் பாதிப்புகளைத் தருகிறார்.  தனித்து உள்ளபோது பெரும் பாதிப்புக்கள் இல்லையென்றே சொல்லலாம்.  குரு 3, 6, 8, 12 – ல் இருப்பது ஓர் வகையில் நல்லயோகம் என்றே சொல்லலாம். இந்த அமைப்பை பெற்றவர்கள் தகுதிகள் பலபெற்றவராகவே உள்ளனர்.  இவர்கள் சோடை போகாதவர்கள் என்றே சொல்லலாம்.

                சேர்க்கையானது பாதிப்பை தருகிறது.  ஜாதகரின் உடல் நலம் மன நலத்தை கெடுதியை உண்டாக்குகிறது.  3, 12 – க்குரிய குரு தவறைத்தான் அதிகம் செய்கிறார்.  இவர் 3, 6, 8, 12 – உள்ள போது பெரும் பாதிப்புகளுக்கு இடம் இல்லை.  எதிர்பாராத யோகமும் கிடைத்துவிடுகிறது.  4, 11 – க்குரிய செவ்வாய் இக்குருவுடன் சனி, சந்திரன், சூரியனும் சேருவதோ ராகு, கேதுவின் தொடர்பு பெறுவதோ தனித்து இருப்பதோ பெரும் பாதிப்பிற்கு காரணமாகிறது.  இந்த லக்கினக்காரக்ள் செவ்வாயை நம்பி செயல் படமுடியாது.

                5 – 10 – க்குரிய சுக்கிரன் தனித்து எங்கு இருந்தாலும் யாருடன் சேர்ந்தாலும் தனக்குரிய யோக பலன்களைத் தருவதில் தவறுவதில்லை.  இந்த சுக்கிரனோடு புதன் – சனி – ராகு, கேதுக்களின் சேர்க்கை மிக நல்ல பலன்களைத் தருகிறது.  6, 9 – க்குரிய புதன்தனித்து இருக்கும் போது தரும் பலன்களை விட வேறு பல கிரகத்தோடும் சேர்ந்தாலும், பார்த்தாலும், பார்க்கப்பட்டாலும் நல்ல பலன்களைத் தருகிறார்.  அவர் காரக பலன்கள் அதிகரிக்கின்றது.

                7, 8 – க்குரிய சந்திரன், சூரியர்கள் யாருடன் சேர்ந்தாலும் தனித்து இருந்தாலும் சுப பலன்களைத் தருவதில்லை.  எந்த கிரகங்களோடு சேருகிறார்களோ அக்கிரகங்களின் பலன்களே தடைபடுத்துகின்றனர்.

                கஜகேசரி யோகம் – அதியோகம் – சந்திரமங்கள் யோகம் – குருமங்கள் யோகம் போன்ற எதுவுமே இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பிரகாசிப்பதில்லை.  தர்மகர்மாதிபதி யோகம் இந்த லக்கினத்திற்கு செயல்பட நியாயம் உள்ளது.  இந்த யோகமானது, பெரும் சிறப்பை தராவிட்டாலும் குறைவற்ற வாழ்க்கை உறுதியாக தருகிறது.  இந்த லக்கினத்தைப் பெற்றவர்கள் உழைப்பையே பெரும் மூலதனமாக வைத்து செயல்படுவர் பயன் பெறுவர்.

                6 – ல் பாவர் இருந்து 1, 5, 9 – ல் புதன் இருப்பின் எதிரிகளை அழித்து அதிர்ஷ்டமான வாழ்க்கையை பெறுபவன்.

 

                                                    மகர லக்னம்

                              

                                ” மகரமாம் பவனத்துதித்தவர் தமக்கு

                                                மண்மகன் மால் கவி சுபராஞ்

                                சுகமதி குருவுமத மராய் வருவர்

                                                சுக்கிரன் யோகனாமதியின்

                                மகனையே சேரின ரச யோகமதா

                                                மந்தனும் பரிதியுங்கொல்லான்

                                ககன வான வருக்கிறைவனுமதியுங்

                                                கண்டகஞ் சªய்யுமாரகரே ”

                                                  ( யவன காவியம் )

                ” ஆரல் பொன்னிந்து பொல்லா ரானவர் சுங்கன்புந்தி

                வீரமிகுயோக பரன் வெள்ளியே – காரனைய

                கூந்தன் மடமானே கும்விகொல் லானென்றே

                ஆயந்துணந்தோர் தாமுரைத்தா ராம் ”

                                                   ( தாண்டவ மாலை )

                ”மாகஞ்சுருவிற் குரு செவ்வாய் மதியம் பாவர் புகர்புந்தி

                ஆகுஞ்சுபரா மா யோக மருளும் சுக்கிரன் ”

                                                  ( ஜாதக அலங்காரம் )

                ”தாய் மகரலக்கினந்தான் றோன்றப் பிறந்தவர்க்கு

                கேய் விளங்குஞ்சந்திரனு மே குருவூம் -தீய்பாவி

                வெள்ளி செவ்வாய் நல்லாண் ”

                                                  ( சந்திரகாவியம் )

                அரைந்திட்டேன் இன்னமொன்று அன்பாய் கேளு

                அப்பனே மகரத்தில் உதித்த சேய்க்கு ”வுமனுமே யாகாதப்பா

                திறந்திட்டேன் திரவியமும் மணையும் சேதம் புலிப்பாணி”

                                ஆறுக்கும் ஒன்பதுக்குடையோன் அவர்

                                அன்பாக திரிகோணம் உச்சத்திலேறே

                                ஆறினில் தீயர்கள் நிற்க – சென்மன்

                                அதிர்ஷ்டவானாம் சத்துருபுங்கனும் தோழி.

                மேற்படி கவிகளின்படி ஆய்வு செய்து பார்க்கும்போது லக்கினாதிபதி சனி எங்கிருந்தாலும் பெரிய தவறுகளைத் தருவதில்லை 1, 4, 6, 9, 10 போன்ற இடங்களில் இருந்தால் நல்லபலன்களைத் தருகிறார்.  இவரோடு சுக்கிரன்-புதன்-ராகு, கேதுக்கள் சேருவது சிறப்பைத் தருவது.  குருவுடன் சேர்க்கை சிறப்பை தருவதில்லை.  இதே போல் சந்திரன் – செவ்வாய்.

 

 கும்ப லக்கினம்.

                                                ”எழுந்த கும்பத்துக்கனுவழி மழைக்கோ

                                                                ளிருஞ்சனி சுபரிடருசுடர்க

                                                ளழிந்தவரசுவர் யோக காரகரா

                                                                மொண்கவி சேயுடன் கூடி

                                                செழுந்தரா தலத்திற் செல்வமுந்தருவர்

                                                                சேய்மதி மாரகர் குருவும்

                                                விழுந்தடிற் கொல்லாரசுபர்மாரகத்தின்

                                                                மேவிடக்கண்டமுமாமே ”

                                                          ( யவன காவியம் )

                பொன்மதிசேய் பொல்லார்புகரொருவனே புனிதன்

                நன்னயஞ்சேர்யோக நயந்தளிப்போன் – கன்னனிகர்

                ஆனமொளி மாதேயசுரர் தமக்கென்றும்

                ஞானநிலையுரைப்போனன்கு ”

                                                           ( தாண்டவமாலை )

                ” பாகார் கும்பக்குரு மதிசேய் பாவர் சுக்கிரன் சுபனாகும்

                தாகார் யோகம் பளிங்குபுதன் ”

                                                           ( ஜாதக அலங்காரம் )

                ”கும்ப விலக்கினத்திற் கூடிப் பிறந்தவர்க்குப்

                பம்புகுரு சேய்பாவி பண்பிறவி- விம்புபகர்

                புந்தி சனிநல்லன் புகர் சேயுங்கூடியிடிற்

                றந்தரசா யோகந்தரும் ”

                                                          ( சந்திரகாவியம் )

                ”பாடினேன் இன்ன மொரு புதுமை கேளு

        பாங்கான கும்பத்தி லுதித்தசேய்க்கு

                ஆடினேன் அசுர குரு கோண மேற

                அப்பனே கூப்பரிகை மேடையுண்டு ”

                                                         ( புலிப்பாணி )

                உண்டு பதிக்கொரு நான்கில் – நல்ல

                உத்தமர் அம்புலி உச்சத்திலேற

                பண்டு பொருள்களும் உண்டு.

 

                லக்கினாதிபதியான சனி 12 – க்குரியவராகி விடுவதால் இவர் தரும் பலன்கள் குறைவே இவர் சுக்கிரன் புதன், குருவுடன் ராகு, கேதுவுடன் சேரும்போது நல்லப்பலன்களை தர வாய்ப்பு உள்ளது.  தனித்த சனி எங்கு அமர்ந்தாலும் யோக பலன்களைத் தருவதில்லை.  யோகம் தந்தால் கொடுத்தவனே, பறித்துக் கொண்டாண்டி என்ற நிலை 2,11 – க்குரிய இந்த லக்கினத்திற்கு சுபதன்மை பொருந்தியவர் ஒன்றே சொல்லலாம்.  இவர்தனித்து 1, 2, 5, 6, 8, 10, 11 போன்ற இடங்களில் இருந்தால் நல்ல பலனைத் தருகிறார்.  இந்த இடங்களில் இவரோடு ராகு, கேது, சூரியன், சுக்கிரன் சேருவது நன்மையே தருகிறது.  3, 10 – க்குரிய செவ்வாய் இந்த லக்கினத்திற்கு பாபியாகி விடுகிறார்.  சூரியன், செவ், சனி, சேர்க்கை எங்கு இருப்பினும் அதிகபட்ச பாதிப்பான பலனைத் தருகிறார்.  குரு, செவ், சுக், சேர்க்கையானது எங்கு இருந்தாலும் தவறே.  எதிர்பாரார விபத்து ஆயுள் பயம் போன்றவைகளை தந்து விடுகிறார்.  இவர்களோடு சனி தொடர்பு பெறுவது தவறை அதிகப்படுத்துவதாக இருக்கிறது.

                4, 9 – க்குரிய சுக்கிரன் 3, 6, 8, 12 – ல் இருப்பது சிறப்பாக தெரிகிறது. அவர் தசாபுத்தி காலங்களில் பல நன்மைகளை செய்கிறது,  இவரோடு ராகு, கேது, சனி, புதன் தொடர்பு பெறுவதும் நல்லதே.  5, 8 – க்குரிய புதன் சுபன் எந்றாலும் இவர் செய்யும் நல்ல பலன்களை கடைசியில் கெடுத்து விடுகிறது.  இவர் 4, 5, 8, 10 – ல்இருப்பது யோக பலன்தரும் அமைப்பேயாகும்.  இவரோடு சேர்ந்த ராகு – கேதுக்கள்நன்மையே செய்கின்றனர்.  6 – க்குரிய சந்திரன் சனி, குருவுடன் தொடர்பு பெறுவது நன்மை தருகிறது.  கடின உமைழப்பை தந்து உயர்த்துகிறது.  7 – க்குரிய சூரியன் 3, 5, 10, 11 – ல் இருந்தால் நல்ல பலனைத் தருகிறது.  மதற்ற இடங்களில் இருப்பது தவறைத் தருகிறது.

                இந்த லக்கினத்திற்கு கஜகேசரி யோகம், குரு மங்கலயோகம், அதியோகம் நன்மைகளைத் தருவதிலலை.  மாளவியா யோகம், நிபுணயோகம் நன்மையான பலன்களை தருகிறது.  சந்திரமங்கள யோகமும் சிறப்பு பெறுவதில்லை.  சந்திரன் 4-ல் இருப்பது ஒருவகையில் நல்ல பலன்களை தந்துவிடுகிறார்.

 

 மீன லக்கினம்

                                ” மீனனுக்கலவேன் சேய் சுப்ரிரவி

                                                மேதைசுக்கிரன் சனிபாபி

                                மானசேய் குருவும் யோகராய் வருவர்

                                                மருவிடின் மிகவதியோம்

                                தானர்க்கினறவும் மாலவன் பரிதி

                                                சனியுடனால் வர்மாரகராம்

                                ஆனசேய் ª£கல்லான் சுருதியுத்தியினோ

                                                டனுபவத்தாலி துரையே ”

                                                     ( யவன காவியம் )           

                காரிபகுர் வெய்யோன்மால் காணாக் கடுங்கொடியர்

                ஆரலோடிந்துவிவ ரானவரே – சேர்ந்தக்கால்

                செய்யோன் குருவிவரே செல்வமளிக்கும் பெரியோர்

                ஐயநுனி நூலிடையா யாய்ந்து

                                                     ( தாண்டவ மாலை )

                ” பாவி மீனங் காரி புதன் பளிங்கு சூரியந் பாவியரே

                மேவும் செவ்வாய் மதிசுபராம் விளங்குயோகங் குருவால் ”

                                                              ( ஜாதக அலங்காரம் )

                ” மீன விலக்கினந்தான் மேலா பிறந்தவர்க்குச்

                சூன சனிபுந்திபுகள் சூரியன் பொன் – ஊனமுடன்

                பாவியாஞ் சேய்மதியும் பண்புடைய நல்லவர்கள்

                கோவுகுரு செவ்வாய் கூடில் ”

                                                     ( சந்திரகாவியம் )

                ” கூறே நீ மீனத்தில் குழவி தோன்ற

                கொற்றவனே மாலோடு வெள்ளியாகா ”

                                                  ( புலிப்பாணி )

                றாலேழக் குடையோன்பைபாரு – அவர்

                நலமாக திரிகோணண் தன லாப மேற

                நாலில் சுபர்களும் நிற்க – சேய்க்கு

                நாரியுடன் கூடி சகித்திருப்பாண்டி தோழி

 

                லக்கினாதிபதியான குரு கேந்திராதிபதி என்ற நிலையில் அவயோகத்திற்கு வழிவகுக்கும்இவர் 5,9 – ல் இருப்பது விசேஷமாக தெரிகிறது.  4, 7 – ல் 10 – ல் இருந்து புதன் – சுக்கிரன் தொடர்பு பெற்றுவிட்டால் பெரும் பதிப்புக்கு ஆளாக்கிவிடுகிறார்.  முழுப் பாவத்தன்மை பெற்று விடுகிறார்.  மாரகம், ஆயுள்பயம் கண்டாதித் தோஷங்களைத் தர தயங்குவதில்லை.

                2, 9 – க்குரிய செவ்வாய் முழு சுபனாகி யோகாதிபதி ஒன்றாலும் தனித்த செவ்வாய் போக பலனைத் தருவதில்லை.  குரு – சந்திரன் உடன் சேரும்போது அவரின் தொடர்பு  பெறும்போது நல்ல பலன்களைத் தருகிறார்.  இந்த லக்கினத்திற்கு கஜகேசரி யோகம்.  சந்திரமங்கல யோகம்.  குரு மங்கள யோகம்.  பிரகாசிக்கின்றது.  இது ஜாதகரை உயர்த்துகிறது.  இவரோடு சேர்ந்த ராகு, கேது நன்மைகளையே தருகின்றனர்.  3, 8 – க்கரிய சுக்கிரன் அசுபத்தன்மை பெற்றுபாபியானாலும் இவரோடு சனி, ராகு, கேது, புதன், சூரியன், இணைவு பெரும்போது பீதி பலம் நீடித்த உபாதைகள் சோகமான நிலைகளை உண்டாக்குவதில் தவறுவதில்லை.  தனித்த சுக்கிரன் பெரும்பாதிப்புகளைத் தருவதில்லை.

                4, 7 – க்குரிய புதன் – சுக்கிரன் – சூரியனோடு தெடார்பு பெறும்போது சோதனையான பலன்களையே தருகிறார்.  தனித்த புதன் நன்மை செய்கிறார்.  செவ்வாய், சந்திரனோடு சேரும்போது மாறுப்பட்ட பலனைத் தருகிறார்.  இவரோடு சேர்ந்த ராகு, கேதுக்கள் பாதிப்பையே செய்கின்றனர்.  5 – க்கரிய சந்திரன் யாருடன் சேர்ந்தாலும் தனது தசாபுத்தி காலத்தில் பெரும் தவறுகளே செய்வதில்லை.  6 – க்குரிய சூரியன், புதன், சனி, சுக்கிரனோடு சேர்ந்தால் பாதிப்போ.  இவர் தனித்து 3, 6, 11, 12 – ல் இருந்தால் நல்ல பலன்களைத் தருகிறார்.

                இந்த லக்கினத்திற்கு குரு, சந்தி, செவ் போன்றவர்கள் தனித்து இருந்தா£களேயானால் அவர்களின் முழுபலனை தருவதில்லை.  அவர்களின் காரக பலன்கள் கெட்டுவிடுகிறது.

                                                யோகத்தைத் தரும் மிருத்துபாகை அந்தகாம்சம்.

யோகத்தைத் தரும் மீருத்துபகை அந்தகாம்சம்
மேஷம் இதன் 21வது பாகை 21வது பாகை இல்லை
ரிஷபம் இதன் 14வது பாகை 9வது பாகை 6 முதல் 10 வரை பாகை
மிதுனம் இதன் 24வது பாகை 21வது பாகை 9 முதல் 15 வரை பாகை
கடகம் இதன் 7வது பாகை 22வது பாகை 18 முதல் 27 வரை பாகை
சிம்மம் இதன் 21வது பாகை 25வது பாகை 19 முதல் 21 வரை பாகை
கன்னி இதன் 14வது பாகை 2வது பாகை இல்லை
துலாம் இதன் 24வது பாகை 4வது பாகை 27 முதல் 30 வரை பாகை
விருச்சிகம் இதன் 7வது பாகை 23வது பாகை 20 முதல் 23 வரை பாகை
தனுசு இதன் 21வது பாகை 18வது பாகை 26 முதல் 29 வரை பாகை
மகரம் இதன் 14வது பாகை 20வது பாகை 29முதல் 10 வரை பாகை
கும்பம் இதன் 24வது பாகை 24வது பாகை 6 முதல் 29 வரை பாகை
மீனம் இதன் 7வது பாகை 10வது பாகை இல்லை

                யோகத்தை தரும் பாகையில் எந்த ஒரு கிரகம் இருப்பினும் அந்த கிரகத்தின் காலம் வரும்போது யோக பலன்களை தரும் அப்பாகையில் உள்ள கிரகம் எந்த தன்மையில் உள்ளதோ அவ்வகை மூலம் யோகம் தரும்.  இப்பாகையில் லக்கினமோ – லக்கினாதிபதியோ இருந்து விட்டால் அந்த ஜாதகம் யோக ஜாதகம் என்பதில் சந்தேகமில்லை.                குறிப்பிட்ட ராசியின் மிருத்துப்பாகையில் எந்த ஒரு கிரகம் இருப்பினும் அந்த கிரகத்தின் காலம் வரும்போது அக்கிரகத்தின் ஆதிபத்தி யகாரகம் மூலம் மருத்துவப் பயம், விபத்து, ஆயுள்பயத்தை தருகிறது.  இப்பாகையில் லக்கினமோ – லக்கினாதிபதியோ இருந்துவிட்டால் நீடித்த ஆயுளுக்கு பங்கம் ஏற்படுகிறது.                அந்த காம்சப்பாகை உள்ள ராசியில் எந்த ஒரு கிரகம் இருந்தாலும் அது செயல்படுவதில்லை.  ஒளிவற்ற நிலைஅக்காலம் வரும்போது பிரகாசிப்பதில்லை.  இப்பாகையில் லக்கினமோ – லக்கினாதிபதியோ இருந்து விட்டால் அந்த ஜாதகம் பிரகாசிப்பதில்லை.                மேலே சொல்லியுள்ள விசயங்கள் சிறப்பு விதிகள் ஆகும்.  இவ்வகை பலன்களை அனுபவ ரீதியாக பார்க்கலாம்.                     

கோள்களின் கோலாட்டம் – 1.6 பாவங்களின் செயல்கள்.

 

84

 1. ஜனன தன்மை முடி-மெய்:- பிறர் பணத்தை தனதாக்குதல், தோல் சம்பந்தம், இளைய சகோதர விசயம், தாய்வழி சொத்து, உயர் தர கல்வி, நெடும் பிரயாணம், வெளிநாட்டு வாழ்க்கை, தாய் மாமனுக்கு வரும் ஆபத்து, தந்தையின் தொழில் வியாபாரம், ஜாதகனின் சிறப்பு பழக்க வழக்கங்கள் திடகாத்திர நிலை பலம்.
 2. குடும்பஸ்தான கற்பனை:- வலது நேத்திரம், முகம், வித்தை, தனம், உணவு, வாக்கு, நெற்றி, ஜீவ காருண்யம், நாசி, பல், பாத்திர பண்டம், அன்னதானம், இரண்டாம் விவாகம் குடும்பஸ்தானம் கற்பனை உடல் உறுப்புகள் பேங்க் நடவடிக்கை, வீடு வாங்குதல்.
 3. சகோதர ஸ்தானம்:- ஆபரணம், பலம், கதை, கேள்வி, வலது காது, சகோதர ஸ்தானம், மன பேதலிப்பு, ஞாபக சக்தி, சொத்து பிரிவினை, உணவு வகை குறுகிய பிரயாணம், தைரிய வீரிய பராக்கிரமம், எதிர்பாராத வெற்றிகள், வெளியீடு, தொடர்புகள்.
 4. சுகஸ்தானம்:-  கண்டம், வீடு, நீர்நிலை, தாய், கன்று, காபி, நட்பு, வேலைக்காரர், சுகம், வாகனம், வலக்கை, வஸ்திரதானம், அந்தரங்கமும்
 5. புத்திரஸ்தானம்:-  புத்திரன், அன்பு, கணையம், மார்பு, பிரபு ஸ்தனாம், புத்திரஸ்தானம் மனைவிக்கு அல்லது கூட்டுத் தொழில் பார்ட்னருக்கு வரும் யோகம், அதிர்ஷ்டம், சினிமா, நடனம், நாடகம், சங்சீதம், சீட்டாட்டம், சூதாடுதல், குதிரை பந்தயம், காதல் விஷயங்கள், வேத பாராயணம், மந்திர உச்சாடனம், உபாசனை பலம்.
 6.  சத்துருஸ்தானம்:– சோரம், கடன்,  புண்கள், பசி, வயிறு, சத்துரு, ரோகம் சத்ருஸ்தானம் டாக்டர் தொழில் சகாதாரம் மூலிகை கடினமான மனநோய், அகாரல போஜனம் திருட்டு ஆபத்து, சிறை பயம்.  ஜாதகர் செய்யும் தொழிலின் பலம் கடின உழைப்பு, மறைமுக செயல்கள்,
 7. களஸ்திரஸ்தானம்:–  காமம், ஆண், பெண் லட்சணம், சையோகம், கூட்டுத்தொழில் விசயம், வழக்கு அபராதம் விவாக பிரிவினை குத்தகை அன்னிய தேச செல்வாக்கு,  நீண்ட ஆயுளுக்கு பங்கம், இழந்ததை பெறல் தத்து பிள்ளை.
 8. ஆயுள் ஸ்தானம்:- அவமானம், அபகீர்த்தி, நித்தி¬, மரணம், தீர்க்காயுள் கொலை செய்தல், தந்திரம், தத்து ஸ்தானம், மறுபிறப்பு, ஆயுள் ஸ்தானம், உயில் விவரம், செயற்கை மரணம்.  எதிரியால் பயம், பழி, கெட்ட பெயர்.  முற்றுகை, அறுவை சிகிச்சை , தொத்து நோய், கற்பழிப்பு.
 9. பாக்கியஸ்தானம்:- பிதா, பாக்கியம், தர்மம், குரு, தபசு, விவேகம், சயன ஸ்தானம், தெய்வ வழிபாடு, அதிர்ஷ்டம், பாக்கியஸ்தானம் தத்துவ ஞானம், சமய சார்பு பக்தி வைதீக சாஸ்திர வல்லுனர், புதியன கண்டு பிடித்தல், கடல் பயணம், ஆகாய பயணம்.
 10. ஜீவனஸ்தானம்:- ஆசாரம், கீர்த்தி, ஆக்கினை, வெகுமானம், செய்தொழில் சிறப்பு, யாத்திரை, இடக்கை துடை ஸ்தானம், சமய பணிகள், பரிசுகள் பெறுதல் ஜீவன ஸ்தானம், மல்யுத்தம், தாய், தந்தையின் ஆயுள் பயம்.
 11. லாப ஸ்தானம்:-  இடது செவி முழங்கால் மூத்த சகோதரன் லாப ஸ்தானம் இதம் – வார்த்த பலம் – ஆதாயம் இனபந்து, எடுத்த காரியம் வெற்றி, நோய் குணமடைதல், கடித தொடர்பான லாபம், வைத்தியமனையில் இருந்து வீடு திரும்புதல்.
 12. அயன சயன சுகஸ்தானம்:-  பாதம் இடக்கண் – விரயஸ்தானம், கடும் உழைப்பு அயன சயன சுகஸ்தானம் விலைக்கு வாங்குதல், முதலீடு செய்தல் பிரிவினை ராஜதுரோகம் சிறை பயம்.  மிருக பயம், சூழ்ச்சியால் கொல்லப்படுதல், உடல் பங்கம் சூறையாடல் கொள்ளை அடித்தல் விஷமிடல் உள்ள கடத்தல் ரகசிய செயல்.

கோள்களின் கோலாட்டம் – 1.5 லக்ன நிர்ணயம்

71

கிரேதாயுகத்திற்கு நிஷேக முகூர்த்தமே ஜென்ம லக்கினமாகும்.  திரேதாயுகத்திற்கு – ஆதான முகூர்த்தமே ஜென்ம லக்கினம் துவாபர யுகத்திற்கு சிரசு உதயமே ஜென்ம லக்கினம்.  கலியுகத்திற்கு பூ உதயமே ஜென்ம லக்கினமாக கொள்ள வேண்டும் என்பது குமார சுவாமிகள் கருத்து.

                இக்கலியுகத்தில் சிசு தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளியே வந்து பூமியின் இயக்கத்தில் கட்டுப்படும் நேரமே அதாவது பூ உதய நேரமே ஜென்ம லக்கினமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

                தாயின் கர்ப்பத்தில் சிசு உள்ள போதே நவக்கிரகங்களின் கதிர் வீச்சு குழந்தைக்கு எற்படுகிறது.   ஆண், பெண் சேர்க்கை ஏற்படும் போதே பெண்ணின் கர்ப்பத்தில் கரு உருவாகும் காலம் முதல் நவக்கிரகங்களின் இயக்கம் செயல்படுகிறது.  இது வினை விதிக்கு உட்பட்டது.

                தாய் கர்ப்பத்தில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த சிசு பூமியின் செயல்பாடுகளில் இயங்கும்போது ஏற்படம் நவக்கிரகங்களின் கதிர் வீச்சுகள் அந்த சிசுவின் வினை விக்குட்பட்டே செயல்களை அனுபவிக்க வைக்கிறது என்பதால் உதய காலத்தை ஜென்ம லக்கினமாக எடுத்து நாம் பலா பலன்களை பார்க்கிறோம்.

58                    

      கால பலம்.

பகலில் பிறந்தவர்களுக்கு … சூரியன், குரு, சுக்கிரன், பலம்.

இரவில் பிறந்தவர்களுக்கு ..  சந்திரன், செவ்வாய், சனி, ராகு,கேது பலம்.

புதன் பகல் இரவு எந்த நேரமும் பலம்.

                         கேந்திரத்தின் வலுத்தன்மை.

 • லக்கின கேந்திர ராசியாக : – மிதுனம், கன்னி, தனுசு ஆகவருவது பலம்.
 • சதுர்த்த கேந்திரராசியாக :- கடகம், மகரம், மீனம் ஆகவருவது பலம்.
 • 7வது இட கேந்திரராசியாக :- விருச்சிகம், ஆக வருவது பலம்.
 • 10வது இட கேந்திரராசியாக :- மேச,ரிச,சிம்,தனுசுவின் முதல்15 பாகை  பலம் மகரத்தின் 15முதல்30 பாகை பலம்.

                           கிரக பலம்.

 • சூரியன-செவ்வாய்-சனி-ராகு-கேதுக்கள், மேசம்-மிதுனம்-சிம்மம்- துலாம்-தனுசு-கும்பம் போன்ற ராசியின் முதல் 15 பாகைக்குள் இருப்பது மிக நல்லது.
 • ரிசபம்-கடகம்-கன்னி-விருச்சிகம்-மகரம்- மீனத்தில கடைசி 15 பாகைக்குள் இருப்பது நல்லது.
 • சந்திரன்-புதன்-குரு-சுக்கிரன் போன்றவர்கள் மேசம்-மிதுனம்-சிம்மம்-துலாம்-தனுசு- கும்பத்தின் பின் 15 பாகைக்குள் இருப்பது நல்லது.
 • தை-மாசி-பங்குனி-சித்திரை-வைகாசி-ஆனி போன்ற மாதங்களில் சூரிய சந்திரருக்கு அதிக பலம்.

 

கோள்களின் கோலாட்டம் – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும்

images (15)

 மேசம் :-

                “தகடோடு எகரேல்” என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த ராசி.  வான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் ஆதியாய் இருப்பது ஆடு தலை உடைய மேஷம் ஆகும்.  இது உறுதியானது.  துணிவு மிக்கது முரட்டு சுபாவம் மிக்கவை.  நிலையான பலமும் தூய நம்பிக்கையும் ஊட்டும் தன்மை மிக்கது.  வடமுகராசிகளில் முதலாய் வருவது. விஷீஹ ரேகைக்குரிய ராசியில் முதலாவது நெருப்பு தன்மை உடைய ராசி அதனால் இயற்கையிலேயே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும் வைராக்கியமும் மிக்கது.  இது வரண்ட ராசியாகும்.  எடுக்கும் முயற்சி சித்தியாவதில் அதிக அளவு பிராசையும் துன்பத்தையும் தரும்.  மலடான ராசியும் கூட அதிக சீற்றம் உடைய ராசி, எதையும் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் செய்து முடிப்பன, மிருகத் தன்மையுள்ள ராசி இது கால புருஷனின் தலை, முகத்த குறிக்கிறது.  குணத்தில் இது தமோ குணராசி, பிருஷ்டோதய ராசி எனவே இரவில் வீரியமிக்கது.  இதில் வரும் முதல் 10 பாகை முதல் திரிகோணம் எனப்படும் தன்மை.  ஆண் ஆதுங்களை தாங்கிய வடிவம் அதிபதி செவ்வாய், இரண்டாவது 10 பாகை மூன்றாவது திரிகோணம் எனப்படும்.  ஆண் தன்மை ஆயுதங்களைத் தாங்கியதும் க்ருமானதும் அதிபதி குருவும் ஆகும்.  இதில் 1 பாகை இரண்டு மைலை குறிக்கும்.  இந்த இடத்தில் சூரியன் உச்சநிலை அடைகிறான்.  சனி நீச தன்மை அடைந்து வலிமை இழக்கிறான்.  சுக்கிரன், சந்திரன், புதன், சமம் என்ற அந்தஸ்தை அடைகிறது.  குருவிற்கு நட்பு வீடாகவும் ராகு, கேதுவிற்கு பகைவீடும் ஆகும்.  இது கள்ளர் தங்குமிடம் குதிரை லாயம் மணல் அல்லது புல்தரை போன்ற இடங்களை குறிக்கும் இது சத்ரியராசி ஆகும்.                 

 

ரிஷபம் :-

                “ரிடபத்தானோடு தோரேல் ” என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த ராசி.  காளை மாட்டின் உருவத்தை ஒத்த இந்த ராசியான மண்டலத்தில் 30 டிகிரி பாகை முதல் 60 பாகை வரை வியாபித்து இரண்டாவதாக அமைந்திருக்கும் ராசியாகும்.  இதன் அதிபதி சுக்கிரன்.  இது பெண் தன்மையுள்ளது.  சரத்திய ராசி, சமராசி ஸ்திர ராசியும் கூட எனவே இது அமைதியானது.  ஆர்பாட்டம் செய்ய ஆசைப்பட்டாலும், செய்ய துணிவில்லாதது அதிக சுய இரக்மும் சுய பச்சாதாபமும் மிக்கது வட முக ராசிகளில் இரண்டாவதாய் வருவது மண் தன்மை உடைய ராசி எனவே சிந்தனை எல்லாம் லோகாதாய வாழ்க்கையைப் பற்றியே இருக்கும்.  சுய பாதுகாப்பும் மெதுவானதும் சிக்கனமானதும் ஆகும்.  நிர்வாக பலமும் ஆற்றிலில் ஊக்கமும், அமைதியும் கை தேர்ச்சியான பண்பும் உடையது.  அரை பயனுள்ள ராசி முயற்சிக்கு அடுத்தவர் ஆதரவும் அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் மனோ நிலையும் அதற்கு தகுந்த அமைப்பும் கிடைக்கும் ராசியாகும்.  மிருகத் தன்மையுள்ள ராசி இது கால புருஷனின் கழுத்தை குறிக்கிறது.  இதன் திசை தெற்கு ஆகும் ராஜகுணம் உடையது பிருஷ்யோத ராசி இரயில் அதிக வீரியமிக்கது.

                இதில் முதல் 10 பாகை முதல் திரேக்காணம், தன்மை பெண் குணம் கொடியது அதிபதி சுக்கிரன். 

                இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரேக்காணம் தன்மை ஆண் குணம் நாற்கால் ஜீவன் அதிபதி புதன்.

                மூன்றாவது 10 பா¬ மூன்றாவது திரேக்காணம், தன்மை ஆண் குணம் நாற்கால் ஜீவன் இது சனியின் உடையது.  1பாகை இரண்டு பர்லாங்கை குறிக்கும்.  இங்கு சந்திரன் உச்ச சந்தஸ்தை அடைகிறது.  ராகு நீச்சம் அடைகிறது.  சூரியன் ஒணரு பகை பெறுகிறது. செவ்வாய் சமம், புதன் நட்பு வீடாக அமைகிறது.  மாடுகள், ஆடுகசள் அடைத்து வைக்கம் இடம்.  விவசாய நிலம் 4- ல் தரை மரச்சாமான்களை குறிக்கும்.  இது வைசிய ராசி ஆகும்.

 

மிதுனம் :-

                “தண்டுக்கொண்டு இல்புகே”என்ற இந்த ராசி ஆணும், பெண்ணும் இணைந்திருப்பதை போன்ற தோற்றமுடைய இந்த ராசி வான வெளியில் 60 பாகை முதல் 90 பாகை வரை வியாபித்துள்ளதாகும்.  கால புருஷனின் மூன்றாவது ராசியான இது ஆண் தன்மை உடையது.  உபய £சி இதன் அதிபதி புதன் ஆனும்.  ஒற்றை ராசி என்ற அமைப்பை கொண்டது.  உறுதியும் துணிவும் மிக்கது.  அதிக அளவு மூளை பலம் மிக்கது.  அதிக புத்திசாலி தனத்தையும் மிகச் சிறந்த திறமையும் உடையது.  இரட்டை அமைப்புகொண்டது.  வளையும் தன்மை மிக்கது.  இரக்க உணர்ச்சியும் இணங்கி போதலும் இதன் குணமாகும்.  வடமுக ராசியில் மூன்றாவது காற்று ராசி.  இயற்கையிலேயே கற்பனை வளம் உடையது.  சங்கீதம் ஆடல், பாடல் ஆகியவற்றில் விருப்பும் நல்ல மனோ சக்தியையும் உடையது.  வரண்ட ராசியான இது மலட்டுத் தன்மை உடையது.  எண்ணிய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க அதிக பிரயாசையும் வெற்றி அடைய அதிக உழைப்பும் தேவைப்படும் ராசி இதன் முதல் 10 பாகை முதல் திரிகோணம் பெண் தன்மை உடையது.  புதனுடைய ஆளுமைக்கு உட்பட்டது.

                இரண்டாவது 10 பாகையாயுள்ள இரண்டாவது திரேக்காணம் ஆண் பறவை ஆயுதமுடையது சுக்கிரனுடைய ஆளமைக்க உட்பட்டது. 

                மூன்றாவது 10 பாகை மூன்றாவது திரிகோணம் ஆண் தன்மை ஆயுதமுடையது சனியின் ஆளுமைக்கு உடையது.

                இந்த ராசியில் எந்த கிரகமும் உச்சமோ, நீச்சமோ அடைவதில்லை.  குரு, செவ்வாய் பகை அடைகிறது.  சூரியன் சமம் என்னும் அமைப்பை அடைகிறது புதனின் ஆட்சி வீடாகிய இது மற்ற கிரகங்களுக்கு நட்பு ஸ்தானமாகவே இருக்கிறது.  இதில் 1 பாகை 4 பர்லாங்கை குறிக்கும் சிரோதய ராசி பகல் இரவு இரண்டிலும் பலம் மிக்கது.  இது பெட்டிகள், குன்றுகள், மலைகள் பள்ளிகூடங்கள் வாசக சாலை முதலியவற்றை குறிக்கும் காலபுருஷனின் புஜங்களை குறிக்கும்.

 

கடகம் :-

                “நண்டானுக்கு இடம் கொடேல்” என்ற இந்த ராசி, நண்டின் அமைப்பை கொண்ட இந்த ராசி 90 பாகை முதல் 120 பாகை வரை வான மண்டலத்தில் பரவியுள்ளதாகும்.  காலபுருணனின் நான்காவது ராசி ஆகும்.  இது ஒரு ராசி பெண் தன்மை உடையது.  பேராசையின் மீது விருப்பம் உடையது.  பலவந்தம், விருப்பங்களில் மாற்றமும் திருத்தி அமைப்பதும் போன்ற குணங்கள் நீர் தன்மை உடையதில் முதலாவது ராசிமிக சிறந்த கற்பனை வளம் கோழைத்தனம் புறமுதுகில் துத்துதல் ஆணவத் தன்மை எதையும் எவரையும் மதியாமை அதிக சுயநலமுடைய அமைப்பு பயனுள்ள ராசி சித்தியளிக்காது.  கூடுமான வரை ஆசையை மெய்ப்பிக்கும் தன்மை உடையது.  வட முக ராசியின் நான்காவது இதன் அதிபதி சந்திரன் இதன் முதல் 10 பாகை முதல் திரிகோணம் ஆண் தன்மை உடையது. நாற்கால் ஜீவன் இதற்கு அதிபதி சந்திரன்.

                இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரிகோணம்.  பெண் தன்மை உடையது.  அதிபதி  செவ்வாய்..

                மூன்றாவது 10 பாகை மூன்றாவது திரிகோணம்.  ஆண் தன்மை பாம்பின் தோற்றம் அதிபதி குரு.

                தமோ குண அமைப்பைக் கொண்ட இந்த ராசி வடதிசையை குறிக்கிறது.  குருவின் உச்சவீடு செவ்வாயின் நீச்சவீடு சந்திரனின்  சொந்த வீடு சூரியன் சமம் என்னும் அமைப்பை அடைகிறது.  சனி, சுக்கிரன், ராகு, கேது பகை தன்மை அடைகிறது.  பிரஷ்டோதய ராசி இரவில் அதிக பலமும் சீற்றமும் மிக்கது.  ஆறுகள், ஏரிகள் கடல்கள் ஊற்றுகள் முதலியவற்றைக் குறிக்கும்.

                இதில் 1 பாகை 2 மைலை குறிக்கும்.

 

சிம்மம்:-

                “சிங்கத்தானோடு செருஏரேல்” என்ற இந்த ராசி.  சிங்கத்தின் உருவை தன்னகத்தே கொண்டுள்ள  இந்த ராசியானது, கால புருஷனின் 5 வது ராசியாகும்.  வானவெளியில் 120 பாகை முதல் 150 வரை வியாபித்துள்ளது.  ஸ்திர ராசி, ஒற்றை ராசி எனப்படும்.  ஆண் ராசி, எனவே அதிக அளவு துணிவும் தலைமை பதவி வெறியும் எவருக்கும் அடங்காத தன்மையும் அடக்க வேண்டும் என்கிற சர்வாதிகள் போக்கும் கம்பீரமும் மிக்கது.  வட, முக ராசிகளில் 5 வது இதன் அதிபதி உலகு உயிர்க்கெல்லாம் ஒளி வழங்கிய ஆத்ம நாயகள் சூரிய பகவான் ஆவார்.  இது சிரோதய ராசி எனவே பகலில் பலம் மிக்கது.  இது நெருப்புத் தன்மை உடைய ராசி எனவே அதிக பிரயாசையும் கடின உழைப்பும் கொண்ட இது சாரமில்லாதது முதல் பத்து பாகை முதல் திரிகோணம் ஆகும்.  ஆண் தன்மை உடையது பறவை இனம் அதிபதி சூரியன் இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரிகோணம் ஆண் தன்மை உடையது.  ஆயுதமுடையது அதிபதி குரு.  மூன்றாவது 10 பாகை ஆண் தன்மை உடையது நாற்கால் ஜீவன் ஆயுதமுடையது அதிபர் செவ்வாய்.

                இந்த ராசியில் கிரகமும் உச்சமோ, நீச்சமோ அடைவதில்லை.  சூரியனின் ஆட்சி விடாகிய இது சந்திரன், செவ்வாய், குரு இவர்களுக்கு நட்பு வீடாகவும் சனி, சுக்கிரன், புதன், ராகு, கேதுக்கு பகை வீடாகவும் அமைகிறது.  இந்த ராசி கிழக்கை குறிக்கிறது.  ராஜகுணத்தை உடைய இதை உலகில் உள்ள அனைவராலும் விரும்பபப்படும் அமைப்பை கொண்டது இதில் 1 பாகை, 2 பர்லாங்கை குறிக்கும்.  சிரோதய ராசி பகலில் பலம் மிக்கது.  காடு பாலைவனம் கற்பாறை கோட்டை அடுப்புகள் முதலியவற்றை குறிக்கும்.

 

கன்னி:-

                “கன்னி மகனை கைவிடேல்” என்ற இந்த ராசி, அழகிய பெண்ணை போல தேற்றமுடைய அமைப்பை உடைய இந்த ராசி வான மண்டலத்தில் 150 பாகை முதல் 180 பாகை வரை வியாபித்துள்ள பகுதியாகும்.  கால புருஷனின் ஆறாவது ராசியாகிய இதன் அதிபதி புதன் ஆனும். இது உபய ராசி ஆகும்.  இருமடிப்புள்ள இரட்டை தன்மையுடைய ராசியாகிய இது சஞ்சலப்படுதல் வளையும் தன்மை இரக்க குணம் உடையது.  மண் தன்மையுடையது அதனால் லோகாதாய வாழ்க்கையில் விருப்பும் சிந்தனை அனைத்தும் அதிலேயே இருக்கும்.  தன் காரியத்திலேயே கண்ணாய் இருப்பர் சிக்கன தன்மை உடைய இந்த ராசி சுய பாதுகாப்பும் மிக்கதாகும்.  வரண்ட ராசியாக இது மலட்டு ராசியும் கூட எல்லா காரியங்களிலும் அதிக அளவு பிரயாசை ஊக்கம், உழைப்பு தேவைப்படும்.  ராசி குணத்தில் இது சத்துவ குணம் உடையது.  இது தென் திசையை குறிப்பது.

                புதன் இந்த ராசியில் உச்ச அமைப்பும் சுக்கிரன் நீச்ச தன்மையும் அடைகிறது.  சூரியன், சந்திரன், செவ்வாய், குரு இவைகளுக்க பகைவீடாகவும் சனி, ராகு, கேதுவுக்கு நட்பு வீடாகவும் அமைகிறது சிரோதய ராசி.

                இதன் முதல் பத்து பாகையாகிய முதல் திரிகோணம் பெண் தன்மை உடையது அதிபதி புதன் இரண்டாவது 10 பாகையாகிய இரண்டாவது திரிகோணம் ஆண் ஆயுதம் தாங்கியது அதிபதி சனி மூன்றாவது 10 பாகை மூன்றாவது திரிகோணம் ஆகும்.  பெண் தன்மை உடையது அதிபதி சுக்கிரன்.  இது 1 பாகைக்கு 4 பர்லாங்கை குறிக்கும்.  வாசக சாலை விளையாட்டு மைதானம், புத்தகங்கள் அடிக்கி வைக்கும் கட்டு, அச்சுகூடம் முதலியவற்றை குறிக்கும்.  வடமுக ராசியில் கடைசி ராசி.

 

துலாம் :-

                “துலாத்தான் எவ்விடத்திலும் தோளான்” என்ற இந்த ராசி, நீதியின் தன்மையை உணர்த்தும் பாவ, புண்ணியங்கள் எடையிடும் வண்ணம் தராசு போல தோற்றமுடைய அமைப்பை உடைய இந்த ராசி வான மண்டலத்தில் 180 டிகிரி பாகை முதல் 210 பாகை வரை பரவியுள்ளது.  கால புருஷனின் ஏழாவது ராசியாகிய இது தென்முக ராசியில் முதல் ராசியாகும்.  விஷ ¨ ல ரேகைக்குரிய ராசியில் இரண்டாவது ராசியாகும்.  ஞஜை, ஒற்றை எனப்படும் ஆண்ராசி எனவே இது உறுதியானது பலங்கொண்டது.  அதிக ஆற்றலில் நம்பிக்கை கொண்ட சர ராசி அதனால் துணிவாக செயல் படுதல் பேராசையின் மீது அதிக விருப்பமும் உடையது.  காற்று ராசியானதால் மனோ பலமும் மனோ ரீதியாய் செய்யப்படும் அனைத்து காரியங்களில் வெற்றியும் மிகச் சிறந்த கற்பனை வளமும் கலைகளில் ஈடுபாடும் உடையது அரை பயன் உள்ள ராசி சிரோதய ராசி எனவே பகலில் பலமுடையது.  தமோ குணத்தையுடையது இதன் அதிபதி சுக்கிரன் ஆகும் இது மேற்கு திசையை குறிக்கும்.

                சனி பகவான் இந்த ராசியில் உச்ச பலம் அடைகிறார் சூரியன் நீச்சம் அடைந்து பலம் இழக்கிறார் சந்திரனும், செவ்வாயும் சமம் என்ற அந்தஸ்தை அடைகிறார்கள் குருவுக்கு பகைவீடாகவும் மற்ற கிரகங்களுக்கு நட்பு வீடாகவும் அமைகிறது.

                முதல் 10 பாகை முதல் திரிகோணம் ஆண் தன்மை உடையது.  மனித உருவம் அதிபர் சுக்கிரன்.

                இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரிகோணம் ஆண் தன்மை பறவையின் உருவம் அதிபர் சனி பகவான்.

                மூன்றவாது 10 பாகை மூன்றாவது திரிகோணம் ஆண் தன்மை நாற்கால் ஜீவன் குரங்கின் உருவம் அதிபர் புதன் இது 1 பாகை 2 மைலை குறிக்கும்.

                படுக்கை அறைகள் உள் அறைகள் கண்ணாடி இயந்திரங்கள் அதிக காற்றோட்டமுள்ள இடங்களை குறிக்கும்.

 

விருச்சிகம்:-

                “தேளானைப் பேணிக்கொள்” என்ற இந்த ராசி, வான மண்டலத்தில் தேளைப் போன்ற அமைப்பை உடையது.  இந்த ராசியாகும்.  இது கால புருஷனின் தர்ம ஸ்தானங்களை குறிப்பிடுகிறது.  இது 210 டிகிரி பாகை முதல் 240 பாகை வரை பரவியுள்ள ராசியாகும்.  இது தென் முகராசிகளில் இரண்டாவது ராசியாகும்.  இதன் அதிபதி செவ்வாய் பெண் ராசி அதாவது இரட்டை ராசி என்ற பெயரும் கொண்டது.  ஸ்திர ராசி அதிக சீற்றமுள்ள ராசி எனவே மிகத் துணிவும் மிகுந்த தன் நம்பிக்கையும் போர் குணமும் எதற்கும் கலங்காத தன்மையும் கொண்டது. நீர் தன்மையுடைய ராசி அதனால் ஏற்றுக் கொள்த்தக்க ஆலோசனை உடையதும் கற்பனையும் உணர்ச்சி மிக்கதும் ஆகும்.  பயனுள்ள ராசி எக்காரியங்களிலும் சித்தி அளிப்பது, தென்முக ராசிகளில் மூன்றாவது, இது மௌனமான ராசியும் கூட இந்த பாகத்தில் சந்திரன் நீச்சம் அடைகிறது.  செவ்வாயின் ஆட்சி வீடு ரஜோ குணமுடையது.  இந்த ராசி குரு சூரியன் நட்பு, சுக்கிரன், புதன் சமம் கேது உச்சம் சனி பகை என்னும் அமைப்பை பெறுகிறது.  இது வடதிசையை குறிக்கிறது.  முதுல் 10 பாகையாகிய முதல் திரிகோணம் பெண் தன்மை உடையது பாம்பினம் செவ்வாய் உடையது.

                இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரிகோணம் பெண் தன்மை பாம்பினம் குருவின் ஆதிபத்தியத்தில் வருவது.

                மூன்றாவது 10 பாகை  மூன்றாவது திரிகோணம் ஆண் தன்மை கொண்டது ஆமை முகமும் சிங்க உருவமும் கொண்டது. அதிபதி சந்திரன் 1 பாகை 2 பர்லாங்கை குறிக்கும்.

                வாய்க்கால்கள், குளிக்கும் அறை, சேற்று நிலபகுதிகள், குளிக்கும் தொட்டிகள், சலவை செய்யும் இடம் முதலியவற்றை குறிக்கும்.

 

தனுசு:-

                “வில்லானை சொல்லால் வளை” என்ற இந்த ராசி, அம்பு எய்யும் அமைப்பை போல் வான மண்டலத்தில் தோன்றும் இந்த ராசி காலபுருஷனின் ஒன்பதாவது ராசி ஆகும்.  இது 240 பாகை முதல் 270 பாகை வரை வியாபித்துள்ளது.  இதன் அதிபதி குருவாகும்.  உபய ராசியாகிய இது குற்றை ராசி எனப்படுமூ.  ஆண் ராசி ஆகும் நெருப்பு தன்மையுள்ள இந்த ராசி வேகத்தையும், விபரீதத்தையும் உடையது.  தென் முக ராசிகளில் மூன்றாவதாக வருவது ஆண்மை, வைராக்கியம் மிகுந்த ஊக்கமும் தர்மத்தில் நாட்டமும் பற்றும் கொண்டது.  அரை பயன் தரும் ராசிகளில் இதுவும் ஒன்று.

                சஞ்சலமும் விட்டுக் கொடுத்தலும் இயற்கையான தன்மை சத்துவ குணம் உடையது.  சிரிஷ்போதய ராசி இரவில் சீற்றமும் அதிக பலமும் மிக்கது.  இந்த ராசி கிழக்கை குறிக்கிறது.  இந்த ராசியில எந்த கிரகமும் பகை பெறுவதில்லை.  உச்சமோ, நீச்சமோ அடைவதில்லை குருவீன் ஆட்சி வீடு கூடவே மூலத் திரிகோண வீடும் ஆக அமைகிறது.  சூரியன், செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது நட்பு என்ற அமைப்பும் மற்ற கிரகங்கள் சம பலமும் பெறுகின்றன.

                முதல் 10 பாகையாகிய முதல் திரிகோணம் ஆண் தன்மை நாற்கால் ஜீவன் குதிரை உடல் போன்றது ஆயுதம் தாங்கியது.  அதிபதி குரு இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரிகோணம் பெண் தன்மை அதிபதி செவ்வாய்.

                மூன்றவாது 10 பாகை மூன்றாவது திரிகோணம் ஆண் தன்மை உடையது.  ஆயுதம் தாங்கியது அதிபதி சூரியன்.

                1 பாகை 4 பர்லாங்கை குறிக்கும். குதிரை லாயம், குன்று, மேட்டு நிலம், பூசை அறை, பணம் வைத்திருக்கும் அறை முதலியவற்றை குறிக்கும்.

 

மகரம்:-

                “மகரத்தோன் முதலைக் கண்ணீர் வடிப்போன்” என்ற இந்த ராசி பெண் தலையும் மீன் உருவமும் கொண்ட தோற்றத்தில் வானவெளியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.  இந்த ராசி கால புருஷனின் கர்மஸ்தானமாகும்.  இது 270 பாகை முதல் 300 பாகை வரை வியாபித்துள்ளது.  இதன்அதிபதி சனீஸ்வரன் ஆவார் இது பெண் ராசி ஆகும்.  சரராசியும் தென்முக ராசிகளில் நான்காவதாக இடம் வகிக்கும் இது அயன ரேகைக்குரிய ராசியும் ஆகும்.  மண் தன்மையுள்ள ராசியாதலால் லோகாதாய விருப்பம் செயலை எண் எழுதிலேனும் தன் காரியத்தை காகித்துக் கொள்ளல் அரை பயன் அளிக்கும் ராசி ஆகும்.  இன்ப வாழ்க்கையிலேயே கண்ணாய் இருப்பது தென் திசையை குறிப்பது பிரஷ்மேதய ராசி இரவில் சீற்றமும் வேகமும் உடையது.  கால புருஷனை முழங்கால் முட்டிகளை குறிப்பிடும் இடமாகும்.  தமோ குணத்தை உடையது.

                செவ்வாயின் உச்சவீடாகவும் குருவிற்கு நீச்ச வீடாகவும் சனி ஆட்சி வீடாகவும் அமையும்.  இந்த ராசி ராகு, கேது, சுக்கிரன் வீடாகவும் சூரியனுக்கு பகையாகவும் சந்திரன் புதனுக்கு சம வீடாகவும் அமைகிறது.

                முதல் 10 பாகையாகிய முதல் திரிகோணம் ஆண் தன்மை உடையது நாற்கால் ஜீவன் சங்கிலியால் கோர்க்கப்பட்ட அமைப்பு கொண்டது.  அதிபதி சனீஸ்வரன்.

                இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரிகோணம் பெண் வாய்ந்தது.  சந்திரன் அதிபதி.

                1 பாகை, 2. மைலை குறிக்கும்.  தட்டுமுட்டு சாமான்கள் இட்டு வைக்கும் அறை, களஞ்சிய அறை, முள்ளான பிரதேசங்கள் ஆகியவற்றை குறிக்கும்.

 

கும்பம்:-

                “கும்பத்தகோன் குன்நின்று வெல்வோன்” என்ற இந்த ராசி, கும்பம் அலங்கரித்தது போன்றதும் கோயில் கோபுர கலம் போலவும் தோற்றம் தரும்.  இந்த ராசி கால புருஷனின் லாபஸ்தானம் என்னும் பெருமை பெற்றதாகும்.  இது 300 பாகை முதல் 330 பாகை வரை வான மண்டலத்தில் வியாபித்து உள்ளது.  இதன் அதிபதி சனிஸ்வரன் ஆகும்.  ஒற்றை ராசி என்றும் ஆண் ராசி என்றும் வழங்கப்படும்.  ஸ்திர ராசியும் ஆகும் தென்முக ராசியில் 5 – வதாக வரும் இது காற்றுத் தன்மையுள்ள ராசி ஆகும்.  அதனால் இது உறுதியானது.  துணிவு மிக்கது.  கோபமூட்டுவதும் இயல்பான மனமிசைந்த காரியங்கள் செய்வதில் ஆற்றலும் மனோ சக்தியும் அதனால் ஆகக்கூடிய அனைத்து காரியங்களையும் திறம்படி முடிக்கும் ஆற்றல் பெற்றது.  மிதமிஞ்சிய நிர்வாக பலமும் ஆற்றலில் தொய்வில்லாத தன்மையும் உடையது.  இந்த ராசியில் எந்த கிரகமும் உச்சமோ, நீச்சமோ அடைவதில்லை.  சூரியன், ராகு, கேது பகை சனியின் மூலத்திரிகோண வீடாகிய இது சந்திரன், செவ்வாய், புதன், குரு சமம் என்னும் அமைப்பையும் சுக்கிரன் நட்பு ஸ்தானத்தையும் அடைகிறார்.

                முதல் 10 பாகையாகிய முதுல் திரிகோணம் ஆண் தன்மை கொண்டது.  கழுகு முகம் போன்ற உருவம்.  சனியின் உடையது.

                இரண்டாவது 10 பாகையாகிய இரண்டாவது திரிகோணம் பெண் தன்மை உடையது.  குரூரமானது.  அதிபதி புதன் மூன்றாவது 10 பாகையாகிய மூன்றாவது திரிகோணம் ஆண் தன்மை உடையது சுக்கிரனுடையது.

                1 பாகை இரண்டு பர்லாங்கை குறிக்கும்.  சுரங்கங்கள், உலோகங்கள், நீர் தொட்டி முதலியவைகளை குறிக்கும்.

 

மீனம் :-

                “மீன மகனைவிடேல் விடேல் ” என்ற இந்த ராசி, இரண்டு மீன்கள் தலைமாறி இருப்பதை போன்ற அமைப்புடைய இந்த ராசி கால புருஷனின் கடைசி ராசியாகும்.  உபயராசி இரட்டை ராசி என்று அழைக்கப்படும் பெண் ராசி கௌரவமும் தன் அடக்கமும் கொண்டது.  நீர் தன்மையுடையது.  அதிக கற்பனை வளம் அரசியலில் வெற்றியினை அதிக அளவு சுயநலம் கொண்டது.  இதன் அதிபதி குருவாகும்.  தென் முக ராசியில் கடைசி ராசி பயனுள்ள ராசி.  ஆனால் மௌனமானதும் கூட நினைத்ததை அடைய அதில் பிரயாசை தேவைப்படாது.  அதிக அளவு கண்ணியமும் வேகமும் மிக்கது.  இது வான மண்டலத்தில் 330 பாகை முதல் 360 பாகை வரை வியாபித்து உள்ளது.  இந்த ராசி இரு கால் ராசியாகும்.  வடக்கு திசையை குறிக்கிறது.  சத்துவ குணம் உடையது குருவிற்கு ஆட்சி வீடாகவும் சுக்கிரனுக்கு உச்ச வீடாகவும் புதனுக்கு நீச்ச வீடாகவும் இது அமைகிறது.  சந்திரன், சனி சமம், சூரியன், செவ்வாய், ராகு, கேது நட்பு என்னும் அந்தஸ்தை பெறுகிறது.

                முதல் 10 பாகை முதல் திரிகோணம் ஆண் தன்மை உடையது.  நீரில் மிதப்பது போன்றது.  குருவின் தன்மை உடையது.  இரண்டாவது 10 பாகை பெண் தன்மை உடையது.  நன்கு அமர்த்தப்பட்டது சந்திரனுடையது.

                மூன்றாவது 10 பாகை மூன்றாவது திரிகோணம் ஆண் தன்மை கொண்டது. பாம்பின் அமைப்பு உடையது. அதிபதி செவ்வாய்.

                1 பாகை 4 பர்லாங்குகளை குறிக்கும்.  கிணறுகள், ஆறுகள், குட்டைகள், நீர் இயந்திரம், குழாய் முதலியவைகளை குறிக்கும்.

 79

யாப்பிய ராசிகள்;-

                மேஷம், கடகம், சிம்மம், கன்னி எதையுமே விரைவாக செய்ய நினைப்பார்கள்.  ஆனால் குறைவான பலன்களை தரும்.  ஆன்மிக உணர்வுகளை வெளிப்படுத்தும் உயர்ந்த தன்மைகளை தரும்.  பிறப்பின் வேறுபாடு, செயல் வேறுபாடு பெருமை-சிறுமை, ஆணவம், அகங்காம், ஆசை போட்டி பொறாமை போன்றவைகளை காண்பது.

சாத்திய ராசிகள்:-

                ரிஷபம், மிதுனம், துலாம் மெதுவாக செயல்படுத்தும் சரீர அழகை எடுத்துக்காட்டும்.  மலட்டுத் தன்மைகளை தரும்.  அறிவு படைத்த சாஸ்திர ஆராய்ச்சி மிகுந்த ராசிகள் ஆகும்.  நெறி தவறா நடத்தைக்கு உறுதுணையாக செயல்பட்டு முறையான காரியங்களை நிகழ்த்துவது.

அசாத்தி ராசிகள்:-

                விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் தர்ம தன்மைகளையும், புத்திர விருத்தியினையும், ஆத்ம ஞான போதனைகளையும் கற்பனா வளம் மிகுந்த தன்மையினையும் சாஸ்திர நுட்ப ஆய்வுத் திறன்களையும், எதையுமே உடனுக்குடன் செய்யவேண்டும் என்ற ஆற்றலையும் தருவது, மனித செயலின் மாறுபாடு கண்டு தரம் பிரித்து ஏற்றுக்கொள்ளும் தன்மை.

மேசம் – சிம்மம் – தனுசு :-

                இது சத்திரிய பாவ ராசிகள், இதில் ஒன்றில் லக்கினம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகள் ஒன்றில் இருப்பின் எதிலும் வெற்றி பெற வேண்டுமூ என்ற ஆர்வம் எதிர்ப்புகளைக் கண்டுபயப்படாத நிலை, துணிவு, தைரியம், எதிலும் முந்திக் கொள்ளும் குணம், அரசு நிர்வாகம், அரசியல் தொடர்புகளில் மிகுந்த திறமை, மற்றவர்களின் தவறைக் கண்டு கொதித்து எழுவது, சுயநலம், சகாஸம், வீரம், பராக்கிரமம், தண்டிக்க ஆசைப்படுதல், மற்றவர்களைத் தன் பாதைக்குக் கொண்டு வர முயற்சித்தல் குறுகிய காலத்தில் பெரும் பணம் தேடும் ஆர்வம், தன் வழியில் குறுக்கீடு செய்பவர்களை வெறுத்து ஒதுக்குதல் எத்துறையிலும் முதன்மை பெற ஆர்வம் கொள்ளுதல் பிறர் தவறுகளை சுட்டிக்காட்டும் குணம் கொண்டவர்கள்.  புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது என்ற கொள்கையை உடையவர். இவர்களுக்கு தெய்வபக்தி உண்டு என்பதை வெளியே காட்டிக் கொள்ளாதவர்கள். நியாயம், தர்மம் புண்ணியத்திற்கு துணை நிற்பவர்கள். 

 

ரிஷபம், கன்னி, மகரம் :-

                இது வைசிய பாவ ராசிகள். இதில் ஒன்றில் லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றில் இருந்தால் பணமே குறியாய் இருப்பார்கள்.  உழைப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள், எத் தொழில் செய்வதற்கும் தயங்காதவர்கள்.  எவ்வகையிலாவது வாழ வேண்டும் என்று குறிக்கோள் உடையவர்கள். சதா ஏதாவது ஒன்றை செய்து கொண்டேயிருக்கவேண்டும் என்ற பிரியம் உடையவர்கள்.  மிக ஏழ்மையான நிலையிலிருந்து பல கஷ்டங்களையும் துன்பத்துயரங்களையும், அனுபவித்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.

தனக்கு நன்மை தரக்கூடியவர்களிடம் மட்டுமே பழக்கம் நட்பு கொள்வார்கள்.  இவர்களிடம் ஏதோ ஒரு வித்தை குடி கொண்டிருக்கும். வாய் சாதுரியம் நாவன்மை மிக்கவர்கள்.  கலை, இலக்கியம், கதை போன்றவைகளில் ஆர்வம் மிக்கவர்.  திறமை மிக்கவர், மேடை பேச்சு, அரசியல், திறன் கொண்டவர்கள்.  கீழ்நிலை, மேல்நிலை உள்ளவர்களின் தொடர்பை வைத்துக்கொள்வர்.  எல்லா வகை சுகங்களையும் அனுபவிக்கத் துடிப்பவர்கள்.  தெய்வ பக்தி ஞானம் உடையவர்கள்.  தன் சிறப்பு வசதி வாய்ப்புகளை வெளியே காட்டிக்கொள்ளாதவர்கள்.

 75

மிதுனம், துலாம், கும்பம்:-

                இது சூத்திர பாவ ராசிகள்.  இதில் ஒன்றில் சிறப்பு லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றின் இருப்பின் பொறுமையுள்ளவர், குட்ட குட்ட குனிபவர் பொறுமையிழந்தால் மனிதனாக செயல்பாடாதவர். நிமிர்ந்து நின்றால் யாராலும் வளைக்க முடியாதவர்கள்.  எதிலும் பிந்தி நிற்பவர் தாழ்வு மனப்பான்மை எதற்கும் ஆமாம் சாமி போடும் குணம், உள்ளவர்.  சந்தேகம் வந்துவிட்டால் அதை உறுதி படுத்தாமல் தீர்வு காணாமல், உறக்கம் கொள்ளாதவர்கள்.  பிறருக்கு உதவி செய்யும் குணம் உள்ளவர்கள்.  நீதி, நேர்மைக்கு பயந்தவர்கள்.  நம்பியவரை மோசம் செய்யாதவர்கள்.  வாழ்க்கையில் முன்னேற வேண்டும் தனக்கென வசதி வாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள்.  ஆனால் இதில் பெரும் ஆசை கொள்ளாதவர்கள்.  வரும் போது வரும் என்று வேதாந்தம் பேசுபவர்கள்.  அளவான வாழ்க்கையை விரும்புவார்கள்.  பாசவலையில் சிக்கி தவிப்பவர்கள் இவர்களே. 

 

கடகம், விருச்சிகம், மீனம் :-

                இது பிராமண பாவ ராசிகள் இதில் ஒன்றில் பிறப்பு லக்னம் அமைந்து சந்திரனும் லக்னாதிபதியும் மேற்படி ராசிகள் ஒன்றின் இருப்பில் சரியான பிடிவாத குணம் உள்ளவர்கள்.  அடிக்கடி பொறுமையை இழப்பவர்கள் அறம், பொருள், இன்பத்தில் பற்று கொண்டவர்கள்.  தெய்வீக ஆன்மீக வழியில் அதிக நாட்டம் கொண்டவர்கள்.  தான் நினைத்ததை சாதிக்கும் தன்மையுடையவர்கள், தன் விருப்பதிற்கு மாறாக நடப்பவர்களை தூக்கி எறியும் சுபாவம் உள்ளவர்கள்.  தலைவணங்காதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்களிடம் சமமாக பழகுபவர்கள்.  ஜாதி, மதம் பாராதவர்கள், தியாக மனப்பான்மை கொண்டவர்கள், அரசு, அரசியல் துறைகளில் சிறப்பு பெறுபவர்கள்.  கல்விமான், உயர்தர பதவிகளை வகிப்பவர்கள், பிறரை அடக்கி ஆளும் ஆற்றல் உடையவர்கள், இவர்களால் பலர் நன்மையடைவார்கள்.  தன் குடும்பத்தாரை கட்டிக் காக்கும் குணம் கொண்டவர்கள்.  பிறரை தன் பேச்சுத் திறமையாலும், நடவடிக்கைகளாலும், கவர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள்.  வேத, ஆகம, சாஸ்திரங்களை கற்பவர்கள், அதை மதிப்பவர்கள், பிறரின் பாராட்டுகளுக்கும், ஆசை வார்த்தைகளுக்கும் அசையாதவர்கள்.  தற்புகழ்ச்சியை விரும்பாதவர்கள்.  பிறர் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பாதவர்கள்.