மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

 1. நித்திய சிவராத்திரி
 2. மாத சிவராத்திரி
 3. பட்ச சிவராத்திரி
 4. யோக சிவராத்திரி
 5. மகா சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.images (11)

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் சிவபெருமானைவழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.’சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது,’உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.அதனால் தான் “சிவராத்திரி” விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது

சிவலிங்கம்

லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும்.’லிம்’ என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.’கம்’ என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும்

 

இலிங்கம்லிங்கம் (lingam), அல்லது சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக்குறிக்கும் ஒரு வடிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.

லிங்கம் வானத்தைக்குறிக்கும்.ஆவிடை பூமியைக்குறிக்கும் குறிக்கும்.விண்ணுக்கும் மண்ணுக்குமாகா சிவபெருமான் எழுந்தருளியதை இது குறிக்கின்றது.மற்றோரு கருத்தின்படி ஆவிடை குண்டத்தைக்குற்க்கும் அதில் எரியும் நெருப்பு லிங்கமாகும்.இதன் காரணமாகவே சிவன் செந்தழல் வண்ணன் என்று அழைக்கப்படுகின்றார். குண்டம் போன்ற ஆவிடை உருவத்தையும், தீந்தழல் போன்ற ருத்ர பாகம் அருவுருவத்தையும் குறிக்கின்றது.இதுவே அருவுருவமாகிய சிவனின் சொரூபம் என கூறுகின்றனர்.

மற்றோரு கருத்தின்படி இலிங்கம் ஆண் வடிவம், பெண் வடிவம் என்ற இரு வடிவங்கள் இணைந்தது. இலிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். ஆவுடையார் எனப்படும் பெண் பாகத்தினுள் இந்த ஆண் வடிவம் வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.

ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்த பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். விஷ்ணு பாகம் ஆவுடையாருடன்

பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும்.

ஆவுடையார் என்று அழைக்கப்பெறும் பாகமானது பெண் வடிவமாகும், இதற்கு சக்தி பாகம் என்று பெயர்.

 • ருத்ர பாகம்
 • விஷ்ணு பாகம்
 • பிரம்ம பாகம்
 • சக்தி பாகம்

இலிங்க வகைகள்

சிவபெருமான் சதாசிவ மூர்த்தி தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து லிங்கங்களை தோற்றுவித்தார். இவை பஞ்ச லிங்கங்கள்எனவும் அறியப்படுகின்றன.

 1. சிவ சதாக்கியம்
 2. அமூர்த்தி சதாக்கியம்
 3. மூர்த்தி சதாக்கியம்
 4. கர்த்திரு சதாக்கியம்
 5. கன்ம சதாக்கியம்

இவற்றில் கன்ம சதாக்கியமாகிய பீடமும், லிங்கங்க வடிவமும் இணைந்து வழிபட்டோரால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவையாவன,

 1. சுயம்பு லிங்கம்– தானாய் தோன்றிய லிங்கம்.
 2. தேவி லிங்கம்– தேவி சக்தியால் வழிபடபட்ட லிங்கம்.
 3. காண லிங்கம்– சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட லிங்கம்.
 4. தைவிக லிங்கம்– மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட லிங்கம்.
 5. ஆரிட லிங்கம்– அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.
 6. இராட்சத லிங்கம்– இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
 7. அசுர லிங்கம்– அசுரர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
 8. மானுட லிங்கம்– மனிதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.

இவை தவிற பரார்த்த லிங்கம். சூக்கும லிங்கம்,ஆன்மார்தத லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், ஆகாச லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம் என எண்ணற்ற லிங்கங்கள் உள்ளன.

 

 

ஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்!- அரிய அபூர்வ தகவல்கள்

ஐந்து download (3)அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்!- அரிய அபூர்வ தகவல்கள்!

ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு (5000)ஆலயம் ஒன்று உள்ள‍ து.

கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில்

உள்ள‍து “பேரூர் ” என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்.

நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு “நடராஜப்பெருமான்” ஆனந்த தாண்டவம் ஆடியபோது . . . அவர் காலில்

அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச்

செய்தியும் உண்டு.images (2)

இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்,. . .

*இறவாத “பனை”,

*”பிறவாத புளி,”

*”புழுக்காத சாணம்,”

*”எலும்பு கல்லாவது,”

*”வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து.”

“இதுதான் அந்த அதிசயங்கள்”

இறவாத பனை:-

பல ஆண்டுகாலமாக இன்றும் பசு மைமாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று

கொண்டிரு க்கிறது.

இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.

இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், . . .

தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள். இது தான் “இறவாத பனை”

பிறவாத புளி:-

அடுத்து “பிறவாதபுளி,” என்றுபோற்ற‍ப்படும் “புளியமரம்” இங்கு இருக்கிறது.

இந்த “புளியமரத்தின்” கொட்டைகள் மீண்டும் முளைப்ப‍தேயில்லையாம்.

“புளியம்பழத்தின்” கொட்டைகளை மீண்டும் முளைக்க‍ வைப்ப‍தற்காக

வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து

பார்த்து விட்டார்கள்.download (2)

“முளைக்க‍வே இல்லை.”

இந்த “புளியமரம்” இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ள‍தாம்.

அதனால் “பிறவாத புளி “என்று அழைக்கிறார்கள்.

புழுக்காத சாணம்,:-

மூன்றாவதாக புழுக்காத “சாணம்,” கோயில் இருக்கிற “பேரூர்” எல்லைக்

குட்பட்ட‍ பகுதிகளில் . . .

ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் “சாணம் “

மண்ணில் கிடந்தால் . . .

எத்த‍னை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்க‍ள் உண்டாவதே இல்லையாம்.

மனித எலும்புகள் கல்லாவது:-

அடுத்து “மனித எலும்புகள்” கல்லாவது.

இங்குள்ள‍வர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த‍ப் பிறகு

மிச்ச‍மாகும் எலும்புகளை . . .

இ ந்த ஆத்மா புண்ணியம் பெறவேண்டும் என்பதற்காக இங்குள்ள‍ நொய்யால்

ஆற்றில் விடுவார்களாம்.

அப்ப‍டி ஆற்றில் விடப்படுகிற “எலும்புகள் “சிறிது காலத்தில் “கற்களாக

உருமாறி” கண்டெடுக்க‍ப்படுகிறதாம்.

என்ன‍அதிசயமாக

இருக்கிறது அல்ல‍வா?

*அதுதான்” பட்டீஸ்வரரின்” திருவருவள்.

த‌மது வலது “காதை” மேல் நோக்கி வைத்த‍படி மரணிப்ப‍து:-

ஐந்தாவதாக “பேரூரில்” மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும்

இறக்கும் தருவாயில் தமது “வலது காதை” மேல் நோக்கி வைத்த‍படிதான் மரணம்

அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற “பட்டீஸ்வரர்,” . . .

இங்கு அமைதியாகத்தான் காட்சித்தருகிறார்.

ஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்ச‍ரியத்தைத் தருகின்றது.

முன்பு இக் கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம்.

அப் போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும் . . .

*அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள‍ பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம்.

இதைப்பார்த்த‍ ஒருவன் மற்ற‍வர்களிடம் சொல்ல‍ அவர்கள் அந்த இடத்தைத்

தோண்டும்போது கிடைத்த‍வர்தான் நமது “பட்டீஸ்வரர்.”

கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்த‍வர் இவர்.

இவரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த‍ நிலை, . . .

மார்பில் பாம்பின் பூணூல்,

தலையில் அழகழகாய் சடைக்கொத்துக்கள்,

சடைகளுக்கு அரணாய் இருப்ப‍துபோல் கங்கை, அன்ன‍மும், பன்றியுமாய் பிரம்மா,

விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள்,

இவைகளோடு ” பட்டீஸ்ரர்” தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும்,

கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன.

இதையெல்லாம் பார்த்த‍ மக்க‍ள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித் திருக்கிறார்கள்.

இவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்க‍ளைச் சொறிந்து

கொண்டிருக்கின்றன.images (4)

ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர்

என்று வந்திருக்கின்றான் மன்ன‍ன் “”திப்பு சுல்தான்.””

இந்தக் கோயில் . . .

அதிசயங்களை எல்லாம் பார்க்க‍ வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்திஐ

இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள்.

ஆம் இறைவன் குடியிருக்கும் “சிவலிங்கம்” அடிக்க‍டி அசையும் என்று, சொல்கிறார்கள்

“சிவாலயத்தின் உள்ளவர்கள் “

ஓம் நமசிவாயdownload (1)

பணபுழக்கம் அதிகரிக்க

சிவ மூலிகை செடிக்கு வெள்ளிக்கிழமை சூரிய உதயத்தில் 4
காப்பு கட்டி அடுத்த வெள்ளிக்கிழமை தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, தக்ஷ்ணை, வைத்து அவல், சர்க்கரை பிரசாதம் வைத்து குருவையும், குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் பிரார்2 த்தித்து ஆனி வேர் அருந்து போகாமல் எடுத்து தங்கம், வெள்ளி, செம்பு, மூன்றையு3 ம் சமன் எடை கூட்டி குலிசம், செய்து, அதனுள் இந்த வேரை வைக்கவும் , பின் அந்த குலிசத்தை அமாவாசை அன்று பாம்பு சட்டையில் வைத்து பௌர்ணமி வரை பூஜித்து கழுத்திலோ, வலது புஜத்திலோ அணியவும்
5