images (8)

Willingness

   Prospective entrants to this system invariably ask one question: “What are the qualifications required to be a member of this system?” Master’s only answer to this question is, “Your willingness is the only qualification needed.” And invariably people wonder how this can be so…. But in a yogic system where the present is the only criterion, what other qualities can there possibly be which are important? Willingness alone is in the present.

images (72)

Liberation

The popular belief that the attainment of liberation is not only difficult but also impossible within the span of one life is a mistaken notion. Who knows, this very life of ours might be the last one to bring us to the level of liberation. Indeed our great Master has boldly asserted that one can, for sure, attain liberation in this very life, nay, even in a part of it, provided one is really earnest about it and has the fortune of having a proper guide

images (1)

பிரச்சனைகள் அஞ்சி ஓடும்…

ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.

போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.

சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது.

“என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே” என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார்.
முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார்.

வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. “இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்” என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார்.

போகும் வழியில் “பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார் முதலாளி.

தச்சர் வீடு வந்ததும் “தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா” என்று முதலாளி சொன்னார். “வீட்டுக்குள் வாங்க முதலாளி” என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார்.

தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.
தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார்.

images (2)

தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார்.

காலையில்
நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார்.
தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.

வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், “இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது” என்றார்.

“அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன்.
வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது.

காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்?

நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு போவேன்.

ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்”. தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.

நண்பர்களே! நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள். பிரச்சனைகள் அஞ்சி ஓடும்…

images (74)

மனித உறவுகள் சீராக இருக்க….!!!

A – Appreciation

மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

B – Behaviour

புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

C – Compromise

அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதிர்கள்; நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

D – Depression

மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

E – Ego

மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள்.

F – Forgive

கண்டிக்கக்கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

G – Genuineness

எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விடயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

H – Honesty

தவறு செய்தால் உடனே மன்னிப்புக் கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

I – Inferiority Complex

எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

J – Jealousy

பொறாமை வேண்டவே வேண்டாம் அது கொண்டவனையே அழிக்கும்.

K – Kindness

இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

L – Loose Talk

சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

M – Misunderstanding

மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

N – Neutral

எப்போதும் எந்த விடயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.

O – Over Expectation

அளவுக்கு அதிகமாகவும் தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.

P – Patience

சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

Q – Quietness

தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் தெரியாததைப் பேசுவது தான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

R – Roughness

பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

S – Stubbornness

சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

T – Twisting

இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

U – Underestimate

மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

V – Voluntary

அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திரமால் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள். பின்பு, அதற்கு பதில் கொடுங்கள்.

W – Wound

எந்தப் பேச்சும், செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

X – Xero

நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

Y – Yield

முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

Z – Zero

இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும்.

S123

Become Light

A lighter thing always tends to rise upwards or, in other words, it moves towards its source. Thus, everything that comes into activity by the effect of the divine flow tends to fly towards the Origin. Man has also inherited the same tendency, so when his downward tendency is checked, the thought of reaching the Origin automatically revives in his heart. This is why he begins to feel inclined towards sandhyaand upasana [meditation and devotion]

images (70)

தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது

தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?

என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.

கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.

அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான். நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.

மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.

குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்.

அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே! உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.


கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!


தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!
நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும்.


ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!
உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!

10

யாருக்கு எங்கே பலம் ? -3

சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில் பகை நீச்சம் பெற்றிருந்தால் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் சுபாதிபத்தியத்திற்கு பாபியாகவும், பாப ஆதிபத்தியத்திற்கு எதிர்பாராத நன்மையைத் தரும் யோக கிரகமாகவும் மாறி ஜாதகரின் வாழ்க்கையில் சுபாசுபப் பலன்களை வழங்கும் என்பது விதி.

சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 1,4,7ல் அமர்ந்து சனி 1,4,10ல் அமர்ந்து இதர கிரகங்களால் பார்க்கப்படும் போதும், இவர்களுடன் சேரும் போதும் அந்தந்த கிரகங்களின் ஆதிபத்தியம் அடிப்படையில் இவர்களுக்கு சம்பந்த பலன் ஏற்படும்.

இந்த சம்பந்த பலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் கேந்திரத்தில் இருக்கும் கிரகங்களுடன் சேரும் போதும் சம்பந்த கிரகங்களின் பலத்தின் அடிப்படையில் பலன்கள் அமையும்.

கேந்திர பலம் பெற்ற கிரகங்களின் திசை புத்தி நடைபெறும் காலத்தில் நல்ல பலன்கள் அனுபவத்துக்கு வரும்.

கேந்திரத்தில் உள்ள கிரகங்களுடன் சம்பந்த பலம் பெற்ற கிரகங்களின் திசை புத்தி நடைமுறையில் வரும் போது அந்தந்த கிரங்களின் ஆதிபத்திய பலத்தில் கேந்திர பலம் பெற்ற கிரகத்தின் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் மாறுதல்கள் ஏற்படும்.

images (11)

Devotion

Devotion and love, of course, remain so easy and yet so difficult an achievement at once. Real devotion has no tinge of affection in it and goes hand in glove with enlightenment. In the initial stages the devotee may be conscious of his feeling towards the object of his love; but at higher stages the foam and fury is dimmed to the extent of an almost total loss of its awareness at the Ultimate stage