download (12)

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -20

மன்னிய வாய்மொழியாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே

நிலைபெற்ற வாய்மை மொழியாகிய திருவைந்தெழுத்தை இடையறாது கணிக்கும் எண்ணரிய சிறப்பாலும், சிவபெருமானின் பொருள்சேர் புகழை எப்பொழுதும் சொல்லும் எழிலாலும் மெய்யன்பராவர். அத்தகையோர் தூயவுள்ளத்து அவன் எழுந்தருள்கின்றனன். அத்தகைய முழுமுதல் விழுப்பொருளை அவன் திருவாணை பெற்று உலகத்தைப் படைக்கின்ற பிரமனாகிய அவனும் நினைப்பன் ஆயினும் அவனாலும் உணரவொண்ணா தென்க. மதித்தல் – தியானித்தல்; உள்ளந்தழுவல். உணரலுமாம் + ஏ – உணரலுமாமே. ஏகாரம் ஏதிர்மறை வினாப்பொருள். ஆதலால் உணர வொண்ணாதென்பதாம்.

Thiru

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-20

குறள் 20:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
பரிமேலழகர் உரை:
யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் – எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது – அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது. ( பொருள் இன்பங்களை ‘உலகியல்’ என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், ‘நீர் இன்று அமையாது உலகம் எனின்’ என்றார். இதனை,’நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது’ என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.).
Translation:
When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’.
Explanation:
If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.
download (12)

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -19

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறன் நெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே

ஆக்கப்பாடுகளாகிய மாயாகாரியப் பொருள்கள் அனைத்திற்கும் முடிவாகிய இறப்பினையும் தோற்றமாகிய பிறப்பினையும் முன்னுதலாகிய திருவுள்ளத்தானே படைத்தருளியவன் சிவபெருமான். அவனே அடிகள். அவன் உறையும் அறநெறியினை ஆராயின் அஞ்சத் தகுந்த இடியும் வேறு பல முழக்கமும் ஈசர் உருவும் தனக்கு அடக்கம் என்பதனைப் புலப்படுத்த ஆண்டும் உறைவன். மேலும் அவன் எங்கும் நிறைந்தவன். அதனால் எதுவும் அவனுக்கு விலக்கன்று. ஆருயிர்க்கு அருள் செய்தற் பொருட்டு அம்மையும் தானுமாய் எழுந்தருளி இருப்பது நறுமணம் கமழாநின்ற திருக்கயிலாய மலையதுவாகும். வெள்ளி – அறிவின் அடையாளம்.

Thiru

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-19

குறள் 19:
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்
பரிமேலழகர் உரை:
வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா – அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் – மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.).
Translation:
If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of ‘penitence’.
Explanation:
If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.
download (12)

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -18

இதுபதி ஏலம் கமழ் பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூது அறிவாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி ஆக அமருகின்றானே

மணங் கமழாநின்ற ஏழுலகமும் சிவபெருமானின் உடைமைப் பதியாகும். இவற்றினும் சிறப்பாகப் பேரொடுக்கக் காலத்துத் தோன்றும் சுடுகாடாகிய முதுபதியினையே தன் இருப்பிடமாக அமைத்துக் கொண்டவன், இயற்கையுணர்வும் முற்றுணர்வும் இயல்பாகவே அமைந்த மூதறிவுசேர் பேரறிவாளன் அவன்; ஆயினும் திருவருள் துணையால் திருவடியுணர்வால் தன் நெஞ்சினை அச் சிவனுக்கு இருப்பிடமாக அமைக்கும் நற்றவத்தோர் உள்ளமே உறைவிடமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றனன்

Thiru

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-18

.
குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
 
பரிமேலழகர் உரை:
வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது – தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் – மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் ‘செல்லாது’ என்றார். ‘உம்மை’ சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)
 
Translation:
If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore.
Explanation:
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.
download (12)

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -17

அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறை தவ நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின்
இதுபதி கொள் என்ற எம் பெருமானே

அளகை வேந்தனாகிய செல்வக் கிழவனை அந் நகர்க்குத் தலைவனாக்கி அருளினவன் சிவன். அச் செல்வக் கிழவனைச் சிவன் நோக்கி அளவில்லாத செல்வத்துக்கு உரியவனாகும்படி அருளினன். இதுவே உனக்குச் சிறந்த திருவூர் கொள்ளென வழங்கியருளினவன் சிவபெருமான்.

Thiru

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-17

குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
பரிமேலழகர் உரை:
நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் – அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் – மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின். (உம்மை சிறப்பு உம்மை. தன் இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம். ஈண்டுக் குறைத்தல் என்றது முகத்தலை. அது “கடல்குறை படுத்தநீர் கல் குறைபட வெறிந்து”(பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.
 
Translation:
If clouds restrain their gifts and grant no rain, The treasures fail in ocean’s wide domain.
Explanation:
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).
Thiru

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு-16

குறள் 16:
 
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
பரிமேலழகர் உரை:
விசும்பின் துளி வீழின் அல்லால் – மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது – வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. (‘விசும்பு’ ஆகு பெயர். ‘மற்று’ வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.).
 
Translation:
If from the clouds no drops of rain are shed. ‘Tis rare to see green herb lift up its head.
Explanation:
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.
download (12)

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -16

காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அது மிகும் அவ்வழி
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே

காயம் இரண்டு ஆருயிர்கட்கு உள்ளன. ஒன்று விரும்பத் தகுந்து தூய மாயையினின்றும் தரப்படும் சிவவுலக அருவுடம்பு. இது வெங்காயம் எனப்படும். மற்றொன்று தூவா மாயையினின்றும் தரப்படும் உரு உடம்பு. இது பெருங்காயம் எனப்படும். இவ்விருவேறு மாறுபட்ட உடல்களும் கலந்திருப்பினும், கூட்டுப் பொருள்களோடாகிய கத்தூரி மணம் மிகுதல்போல் தூமாயை அருவுடம்பின் குணமாகிய மணம் மிக்குத் தோன்றும். அவ்விடத்துத் தேசங்களாகிய அனைத்துலகையும் கடந்து நின்றதொரு முழுமுதற் றெய்வம் சிவபெருமான் என்று எண்ணின் உண்டாம் அவன் உறவுக்கு ஒப்பில்லையாகும்.