Criminal is Always Criminal

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம்
எழுதியிருந்தாள். !!!

அன்புள்ள கணவருக்கு..
நீங்கள் கடத்தல்
வழக்கில் சிறை சென்ற பிறகு நானும்
குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம்
வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய
நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம்
அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச்
செல்லலாம் என்று எண்ணுகிறேன்..

ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான்
தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.
அன்பே.. குடும்பச்
செலவுக்காக
வேறு ஏதாவது வழி செய்து கொள்.
பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.
அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப்
புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப்
போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.

அன்புள்ள கணவருக்கு..
யாரோ ஒரு கூட்டத்தினர்
பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம்
கொல்லைப் புறத்தைத்
தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்..
இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக்
கட்டிகள் எதுவும் இல்லையே..?

கைதி திரும்பவும்
மனைவிக்கு எழுதினான்.
அன்பே.. அவர்கள்
காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய
கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில்
தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில்
தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை..
இப்போ து நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!

“Where there’s a will, there’s a way.”

Michael Jordan was an African-American man, born in 1963, in the slums of Brooklyn, New York.
He had four brothers and his father’s wages were not sufficient to provide for the whole family.
He grew up in a poor neighbourhood which was full of discrimination, to the point where he could not see any hope for the future.

When he was 13 years old, his father gave him a piece of used clothing and asked: “What do you think the value of this outfit would be?”

Jordan replied, “Maybe one dollar.”

His father asked, “Can you sell it for two dollars? If you can sell it, it would mean that you are a big help
to your father and mother. “

Jordan nodded his head, “I’ll try, but no guarantee that I’ll be successful.”

Jordan carefully washed the clothes clean. Because they didn’t have an iron, to smoothen out clothes, he levelled it with a clothes brush on a flat board, then kept it in the sun to dry. The next day, he brought the clothes to a crowded underground station. After offering it for more than six hours. Jordan finally managed to sell it for $2. He took the two dollar bill and ran home.

After that, everyday he was looked for used clothing, washed and ironed it and sold it in the crowd.
More than ten days later, his father again gave him a piece of used clothing, “Now think of a way that you can sell these clothes for 20 bucks?”

Jordan said, “How is it possible? This outfit can only fetch two dollars at the most. “

His father replied in an effort to inspire him, “Why don’t you try it first? There must be a way.”

Finally, Jordan got an Idea He asked for cousin’s help to paint a picture of Donald Duck and Mickey Mouse on the garment. Then he tried to sell it in the school where the children of the rich study. Soon a housekeeper, who was there to pick his master, bought clothes for his master. The master was a little boy of only 10 years but was very fond of clothes. He loved it so much and he gave a five dollar tip. 25 dollars was a huge amount
for Jordan, the equivalent of a month’s salary of his father.

When he got home, his father gave him yet another piece of used clothing. “Are you able to resell it at a price of 200 dollars?” His eyes lit up.

This time, Jordan accepted the clothes without the slightest doubt. Two months later a popular movie actress from the movie “Charlie’s Angels”, Farah Fawcett came to New York for her Movie promos. After the press conference, Jordan made his way through the security forces to reach the side of Farah Fawcett and requested her autograph on the piece of clothing. When Fawcett saw this innocent child asking for her autograph,
she gladly signed it.

Jordan was shouting very excitedly, “This is a jersey signed by Miss Farah Fawcett, the selling price is 200 dollars!”He auctioned off the clothes, to a businessman for a price of 1,200 dollars!

Upon returning home, his father by broke into TEARS and said, “I am amazed that you did it My child!
You’re really great! “

That night, Jordan slept alongside his father. His father said, “Son, in your experience selling these three pieces of clothing, what did you learn about success?”

Jordan replied, “Where there’s a will, there’s a way.”

His father nodded his head, then shook his head, “What you say is not entirely wrong! But that was not my intention. I just wanted to show you that a piece of used clothing which is worth only a dollar can also be increased in value, Then how about us – living & thinking humans? We maybe darker and poorer, but what’s the difference? “

This thought enlightened young Jordan. Even a piece of used clothing could be made dignified, then why not me? There is absolutely no reason to underestimate myself.

From then on, Michael Jordan felt that his future would be beautiful and full of hope.

Our potential is so great, and not to be viewed small & low only because of our status, looks or wealth. Even a diamond is like a stone before it has been polished

திருமலை ஸ்ரீ வேங்கடேச உன் திருவடிகளே சரணம்

திருமலை திருப்பதி இந்த க்ஷேத்திரத்துக்கு இணையான வேறு க்ஷேத்திரம் இல்லை; திருமலை திருவேங்கடவனுக்கு இணையான வேறு தெய்வம் இல்லை.

உண்மைதான்! ஏழுமலையானைக் கண்கண்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட அவன் அடியார்களுக்கு, அவனுடைய திருநாமமே உயிர் உந்தும் மந்திரம்; அவன் கோயில்கொண்டிருக்கும் திருமலையே உலகம். இன்றைக்கும்… வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் லட்சோபலட்சம் பக்தர்களும் திருமலையில் குவிகிறார்கள் என்றால், திருவேங்கடவனின் அருட்கருணையே அதற்குக் காரணம்!

download (7)

வருடத்தின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்சவங்களும் இவருக்கன்றி வேறு எந்த தெய்வத்துக்கும் நடைபெறுவதில்லை. அதனால்தான் என்னவோ திருப்பதியை, ‘பூலோக வைகுண்டம்’ என்றே சிறப்பித்திருக்கிறார்கள்.

சீமாந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில்கொண்டிருக் கிறான். சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ‘ஏழுமலையான்’ என்றொரு திருநாமம். திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும், பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.

தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இந்தத் தலத்தை திருவேங்கடம் என்றே குறிப்பிடுகின்றன. திருப்பதியை திரு பதி எனப் பிரித்தால், திருமகளின் நாயகன் என்றும் பொருள் வரும். ஆமாம்! திருமகள் பரிபூரணமாக வசிக்கும் திருத்தலம் அது. அதுமட்டுமா? வைணவ திவ்ய தேசங்களில் திருவரங்கத்துக்கு அடுத்ததான தலம் இது. ஆழ்வார்களில் பத்து பேரின் பாசுரங்களைப் பெற்ற க்ஷேத்திரம்!

திருப்பதியின் தல வரலாற்றுக் கதை, தேவ லோகத்தில் பிருகு முனிவரிடமிருந்து துவங்குகிறது.

ஒரு முறை, துயரங்கள் அநீதிகள் எல்லாம் அகன்று, உலகில் சகல நன்மைகளும் பெருகவேண்டும் என்பதற்காகப் பெரும் யாகம் நடத்தத் தீர்மானித் தார்கள் முனிவர்கள். யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் ஒருவருக்கு அளிப்பது என்று முடிவானது. மூவரிலும் தகுதியானவர் யார் என்பதை அறியும் பொறுப்பு, பிருகு முனிவரிடம் விடப்பட்டது. பிருகு முனிவருக்குப் பாதத்தில் ஞானக் கண் உண்டு. எதிர்காலத்தை உணரும் சக்தியும் உண்டு. இதைப் பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம்! இதனால் உண்டான அவரது கர்வத்தை பங்கம் செய்ய பரம்பொருளும் தருணம் எதிர்பார்த்திருந்தது.

பிருகு முனிவர் முதலில் சத்தியலோகம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு, அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்துவிட்டார். பிரம்மா இதைக் கண்டித்தார். இதனால் கோபம் கொண்ட பிருகு, ‘பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு உலகில் பூஜையே நடக்காது’ எனச் சபித்துவிட்டு, திருக்கயிலாயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அங்கே, சிவ பார்வதியர் தனித்திருந்தனர். அங்கும் தடைகளைப் பொருட்படுத்தாது உள்ளே நுழைந்தார். சிவனாரும் கோபத்துடன் அவரைக் கண்டித்தார். பக்தர்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லையே என்று கருதி, ஈசனுக்கும் சாபம் தந்தார் பிருகு. ‘பூலோகத்தில் உமக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும்’ என்று சபித்தவர், அடுத்து வைகுண்டத்துக்கு சென்றார்.

அங்கே சயனத்தில் இருந்த திருமால், முனிவரின் வருகையை அறிந்தும் அறியாதவராக அரிதுயில் கொண்டிருந்தார். மிகுந்த கோபம் கொண்ட பிருகு, பகவானின் மார்பில் எட்டி உதைத்தார். ஆனால் எம்பெருமானோ கோபம் கொள்ளவில்லை. குழந்தை மார்பில் உதைத்தால், தந்தைக்கு சினம் எழுமா என்ன? அதேநேரம், குழந்தையின் துடுக்குத்தனத்தை களைய வேண்டாமா? பிருகுவின் பாதம் நோகுமே என்று பிருகுவின் பாதத்தைப் பிடித்துவிடுபவர்போல் அதிலிருந்த ஞானக் கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டார் பகவான். பிருகு முனிவர் பகவானின் சாந்தத்தைக் கண்டு, அவரே யாக பலனை ஏற்கத் தகுதியான மூர்த்தி என்று முடிவு செய்தார். ஆனால், தான் வசிக்கும் எம்பெருமானின் திருமார்பை முனிவர் எட்டி உதைக்கிறார், அவரை தன் நாயகன் கண்டிக்கவில்லையே என்ற கோபம் திருமகளுக்கு. எனவே, பெருமாளைவிட்டுப் பிரிந்தாள். பூலோகத்தில் ஆகாசராஜனின் மகளாக அவதரித்தாள்.

மாலவனால் மலர்மகளைப் பிரிந்திருக்க முடியுமா? அவளைத் தேடி, அவர் பூலோகத்துக்கு இறங்கியதும், அவரை வகுளாதேவி மகனாக ஏற்றதும், பின்னர் அவர் வேடனாக வந்து பத்மாவதியை சந்தித்ததும், அவளை மணந்துகொள்ள ஆசைப்பட்டதும், வகுளாதேவியின் முயற்சியால் ஆகாசராஜனின் அனுமதி பெற்று பத்மாவதியை பெருமாள் மணம் புரிந்ததும், கல்யாணத்வகுளாதேவி மகனாக ஏற்றதும், பின்னர் அவர் வேடனாக வந்து பத்மாவதியை சந்தித்ததும், அவளை மணந்துகொள்ள ஆசைப்பட்டதும், வகுளாதேவியின் முயற்சியால் ஆகாசராஜனின் அனுமதி பெற்று பத்மாவதியை பெருமாள் மணம் புரிந்ததும், கல்யாணத் துக்காக குபேரனிடம் கடன்பட்டு, அந்தக் கடனை இன்றுவரையிலும் அவர் செலுத்திக்கொண்டிருக்கும் கதையும் எல்லோரும் அறிந்ததுதானே

ஏழுமலையானுக்கு இங்கு கோயில் எழுப்பியது ஆகாசராஜனின் தம்பியான தொண்டைமான் என்கிறது தல வரலாறு. ஸ்வாமியைத் தரிசிக்க முப்பத்துமுக்கோடி தேவர்களும் இங்கு கூடினர். பெருமாளுக்கு பெருவிழா நிகழ்த்த அனுமதி வேண்டினான் பிரம்மன். பரம்பொருளும் இசைந்தது. அதுமுதல் துவங்கியது திருமலையின் பிரம்மோற்ஸவம்.

திருப்பதி மலைமேல் உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்றெல்லாம் போற்றுவர். பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவருக்குச் சூட்டிய பெயர் என்ன தெரியுமா? வெறுங்கை வேடன்!

திருப்பதி திருமலையின் மூலஸ்தானம் ‘ஆனந்த நிலையம்’. பெயருக்கு ஏற்ப… வாழ்வில் ஒரே ஒருமுறையேனும் கண்டடைய மாட்டோமா என்று திருமால் அடியவர்கள் ஏங்கித் தவிப்பதும், அவர் களுக்கு சில விநாடிப் பொழுதுகளில் பலகோடி புண்ணியம் தரும் பேரானந்த தரிசனம் வாய்ப்பதும் இங்குதான். தங்கத் தகடுகளால் வேயப்பட்டு, காணக்கிடைக்காத பேரழகுடன் திகழ்கிறது, ஆனந்த நிலையம்.

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 27

குறள் 27:
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
 
பரிமேலழகர் உரை:
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை – சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு – ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம். (அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். ‘வகைதெரிவான் கட்டு’ என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.).
 
Translation:
Taste, light, touch, sound, and smell: who knows the way Of all the five,- the world submissive owns his sway.
Explanation:
The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -27

சந்தி எனத் தக்க தாமரை வாள் முகத்து
அந்தம் இல் ஈசன் அருள் நமக்கே என்று
நந்தியை நாளும் வணங்கப் படும் அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே

சந்தி எனப்படும் அந்தியின் நிறம் சிவப்பு. அந்நிறம் போலும் தாமரை செந்தாமரை. அம் மலர்போலும் ஒளியுடைத் திருமுகம் சிவபெருமான் முகம். அவனே ஆண்டவன். அவன் திருவருள் எந்நாளும் நமக்கேயாம். அவ்வருளை அளிப்பவன் அழிவில் செல்வத்தன் ஆகிய நந்தி. அந் நந்தியை நாளும் வணங்கும் நல்லன்பர்தம் பிறந்த அறிவினுள் சிவபெருமான் புகுந்து நின்றனன்.

இய‌ற்கை வைத்தியம்,—- மருத்துவ டிப்ஸ்,

சின்ன சின்ன உணவுப் பொருட்கள் மூலம் நாம் சிறப்பான பலன்களை பெறமுடியும். நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.
* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.
* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
* தொண்டையில் புண், வலி ஏற்பட்டால் கொஞ்சம் சித்தரத்தைப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடவும். தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.
* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்

சிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்!

சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம்.

அறிகுறிகள் என்ன ?
முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம்.

தைராய்டு பிரச்சினை
பரம்பரையாக சிறுநீரகக்கல் பிரச்சினை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம். அலட்சியப்படுத்தினால் கல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, மான் கொம்பு அளவுக்கு வளர்ந்து நிற்கும்.

5 மில்லிமீட்டரை விட சிறிய கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8 மி.மீ. என்றால் 80 சதவிகித வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது, செயலிழக்கும்.

ரத்தப்பரிசோதனை மூலம் கல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு ஸ்கேன் உதவியுடன், கல் இருக்கும் இடம், அதன் அளவைத் தெரிந்து கொள்ளலாம். அய்.வி.பி. எக்ஸ்ரே மூலம் சிறுநீரகம் எப்படி இயங்குகிறது என்பதையும், அதில் அடைப்புள்ளதா, வேலை செய்யும் திறனை இழக்குமா என்பனவற்றைக் கண்டுபிடிக்கலாம். மருந்துகளால் முடியாத பட்சத்தில், அதிர்வலை சிகிச்சை மூலம் கல்லை மட்டும் உடைத்தெடுக்கலாம்.

பெரிய கல் என்றால் முதுகுவழியே துளையிட்டு, டெலஸ்கோப் வழியே பார்த்து உடைக்கலாம். சிறுநீர் பாதை வழியே டெலஸ்கோப்பை செலுத்தி உடைக்கிற யூரெத்ரோஸ்கோப்பியும் பலனளிக்கும். ஒருமுறை கல்லை அகற்றினால் மறுபடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

வீட்டு வைத்தியம்
சிறுநீரக் கல்லை வெளியேற்ற வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.

பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

வாழைத்தண்டு
முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

எதை சாப்பிடக்கூடாது?
சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

வலுவான எலும்பு.. வளமான வாழ்வு…

நாற்பது வயதைத் தாண்டி விட்டாலே பல்வேறு நோய்களோடு எலும்பு தேய்மானமும் பெண்களைத் தேடி வந்து ஒட்டிக் கொள்கிறது. இந்தியாவில் சுமார் 6 கோடி பெண்கள் எலும்பு தேய்மானம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 40

நாற்பது வயதைத் தாண்டி விட்டாலே பல்வேறு நோய்களோடு எலும்பு தேய்மானமும் பெண்களைத் தேடி வந்து ஒட்டிக் கொள்கிறது. இந்தியாவில் சுமார் 6 கோடி பெண்கள் எலும்பு தேய்மானம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 40 ஆண்டுகளில் இந் நோய் 30 கோடி பேரைத் தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

  சர்வதேச அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஐம்பது வயதைத் தாண்டிய பெண்களில், 2 பேரில் ஒருவர் எலும்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக  கூறப்பட்டுள்ளது.

  மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது எலும்பு தேய்மானம் நோயால் இந்தியப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

  இந் நோயின் ஆரம்ப அறிகுறியாக மூட்டின் மேல் பகுதியில் லேசான வலி, குதிகாலில் வலி ஏற்படும். சிலருக்கு முதுகுப் பகுதியில் விட்டு விட்டு வலி வரலாம். இந்த பாதிப்புகள் உள்ளவர்கள் உடனடியாக மூட்டுமாற்று சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.

  எனினும், வரும் முன் காக்கும் நடவடிக்கையாக அன்றாட உணவில் கால்சியம், வைட்டமின் கே, டி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் எலும்பு நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

  பால் தயாரிப்பு உணவுப் பொருள்களில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. ஒரு டம்ளர் பாலில் 300 கிராம் கால்சியம் அடங்கியுள்ளது. இனிப்பு அதிகம் சேர்க்காமல் பால் உணவுப் பொருள்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை தவிர, கடல் மீன்கள், பாசிகள், சோயாபீன்ஸ், மொலாசஸ், முளைவிட்ட கொண்டை கடலை ஆகியவற்றிலும் கால்சியம் சத்து உள்ளது.

  அன்றாட உணவு வகைகள் மூலம் உடலுக்கு போதுமான கால்சியம் கிடைக்கவில்லை என்றால் நாள்தோறும் 1,000 முதல் 1,500 மில்லி கிராம் கால்சியமும், 300 மில்லி கிராம் மேக்னிசியமும் டாக்டரின் ஆலோசனைபேரில் மருந்தாக உட்கொள்ளலாம்.

  எலும்புகள் வலுவடைவதற்கு வைட்டமின் கே, டி ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு உண்டு. கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கனிகளில் வைட்டமின் கே-வும்,  சிறிய மீன்கள், பால், முட்டை, காளான்களில் வைட்டமின் டி சத்தும் நிறைந்துள்ளன.

  “பைதோஸ்’ என்றழைக்கப்படும் தாவர வகையிலிருந்து கிடைக்கும் சத்துகளும் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உணவில் காய்கனிகள், கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

   பொட்டாசியம், லூடின் சத்து போதுமான அளவு கிடைக்க பழ வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இனிப்பு வகைகள், அதிக உப்பு, குளிர்பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது.

  பெரும்பாலான பெண்களுக்கு மெனோபாஸýக்குப் பின்னரே எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க அந்தப் பருவத்தில் அவர்கள் கால்சியம் சத்து மிகுந்த பொருள்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  உடல் பருமனாக இருப்பவர்களுக்கு எலும்பு தேய்மானம் நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அவர்கள் உடல் எடையைக் குறைக்கும் எளிய பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளலாம்.

  இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை நடுத்தர வயது பெண்கள் இப்போதே கடைபிடித்து வந்தால் எதிர்காலத்தில் எலும்பு தேய்மானம் இன்றி இனிமையாக வாழலாம்.

நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறையையும் காப்போம்!!!

தயவு செய்து யாரும் புரோட்டாவும்முட்டையும் அதிக அளவில் தினமும்உட்கொள்ள வேண்டாம்…..கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற வைத்து சாப்பிடும் எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம்!!!திங்கள் அன்று இறந்தவர் வயது 37(மாரடைப்பு).புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு, புரோட்டா. தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள்.இதில்தான் எத்தனை வகைகள்?விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா… சில்லி புரோட்டா இப்படியாக இளைஞர்களைக் கவரும் புரோட்டா பலவகை இதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்தே வருகிறது.ஆனால் இந்த புரோட்டாவினால் உடலுக்கு தீங்கு வரும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கேரளாவில் மைதாவில் உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் மைதா பொருட்களுக்கு தடைவிதித்துள்ளன.புரோட்டா மட்டுமல்லாமல் இன்னும் பல வகை உணவுகள் இந்தக் கொடிய மைதாவால் செய்யப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால்மைதா மாவினால் செய்யப்பட்ட உணவு புழங்கத் தொடங்கின. புரோட்டாவும் பிரபலமடைந்தது.மைதாவில் நார்ச்சத்து எதுவும் கிடையாது. அதனால் நமக்கு செரிமான சக்தி குறைந்து விடுகிறது. குறிப்பாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, மைதா மாவினால் தயாரிக்கப்படும்ரொட்டிப் பொருள்கள், கேக் வகைகள் போன்றவைகளை நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.நன்றாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்.ஆனால் அதிலிருந்து மைதா தயாரிக்க கோதுமை மாவில் ‘பெண்சாயில் பெராக்ஸைடு’ என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.இந்த ரசாயனம்தான் நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த நச்சு ரசாயனம் மாவில் உள்ள புரோட்டீன் சத்துடன் சேர்ந்து கணையத்தை சேதமாக்கி நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது. அதுமட்டுமல்ல, அலோக்கான் என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்கவும், ஆர்ட்டிஃபிசியல்கலர், மினரல் ஆயில், டேஸ்ட் மேக்கர், சாக்கரின் சர்க்கரை அஜினேமோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதால் புரோட்டா இன்னும் அபாயகரமாகிறது. மைதா சாப்பிடுவது இந்தியாவில்தான்அதிகம். உலகளவில் சர்க்கரை நோயாளிகளும் நம் நாட்டில்தான் அதிகம். மேலும் சிறு நீரகம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் இதனால் வருவதாக கூறுகிறார்கள்.கேரளாவில் இந்த விசயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தொண்டு நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிப்பது கிருஷ்ணகுமார் என்பவர் தலைமையில் இயங்கும் மைதா வர்ஜனா சமிதி ஆகும். பாலக்காடு மாவட்டம் முழுவதும் மைதாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களிலும்அங்கு பிரச்சாரம் தொடர்கிறது.இனிமேலாவது நம் பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு, சோளம் உட்கொண்டு அந்நிய உணவான மைதா என்கிற ரசாயனம் கலந்தபுரோட்டாவை புறம் தள்ளுவோம். நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறையையும் காப்போம்!!!

அதிதி போஜனம்

பல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மகா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக் கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆசார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள். ”அடடே… யாரு… பாலூர் கோபாலனா! ஒரு வருஷத்துக்கு முன்னால வந்திருந்தே. அப்போ… என்னமோ கஷ்டத்தயெல்லாம் சொல்லிண்டு வந்தயே… இப்ப செளக்யமா இருக்கியோல்லியோ?” என்று சிரித்துக் கொண்டே வினவினார்.

உடனே அந்த பாலூர் கோபாலன், ”பரம செளக்யமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு ‘அதிதி’க்கு (எதிபாரா விருந்தாளி என்று சொல்லலாம்) சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வறது பெரியவா! வயல்கள்ல விளைச்சல் நன்னா ஆறது… முன்ன மாதிரி பசுமாடுகள் மரிச்சுப் போறதில்லே! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம், இப்போல்லாம் கைல தங்கறது. எல்லாம், நீங்க அநுக்ரகம் பண்ணி செய்யச் சொன்ன அதிதி போஜன மகிமதான் பெரியவா… தினமும் செஞ்சுண்டிருக்கேன். வேற ஒண்ணுமே இல்லே” என்று கண்களில் நீர் மல்கக் கூறினார். அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர். உடனே ஆச்சார்யாள், ”பேஷ்… பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறத புரிஞ்சுண்டா சரிதான்… அது சரி. இன்னிக்கு நீங்க ரண்டு பேரும் கெளம்பி இங்க வந்துட்டேளே… அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா?” என்று கவலையுடன் விசாரித்தார்.

உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு, ”அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத்தான் பெரியவா வந்ருக்கோம். ஒரு நா கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது!” என்றாள்.

இதைக் கேட்டவுடன் மகா ஸ்வாமிகளுக்குப் பரம சந்தோஷம். ”அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்யம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரகத்த பண்ணி குடும்பத்த காப்பாத்தும்! ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்துல வந்து ஒக்காந்து சாப்டுவார். தெரியுமா?” குதூகலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்ரக வார்த்தைகளைக் கேட்டு மகிழ, க்யூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர். அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.
ஒரு பக்தர், ஸ்மாமிகளைப் பார்த்துக் கேட்டார்: ”அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி?”

உடனே ஸ்வாமிகள், ”ஆமாமா! மோட்சத்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ய தர்மம் அது! ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணிருக்கு! அத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள்ட்ட கேட்டாத்தான் சொல்லுவா. அப்பேர்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!” என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.
ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டுப் பவ்யமாக, ”எம் பேரு ராமசேது. திருவண்ணாமல சொந்த ஊர். நாங்க அத்தன பேருமா சேந்து பிரார்த்தன பண்றோம்… இந்த அதிதி போஜன மகிமயப் பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா… நாங்கள்ளலாம் நன்னா புரிஞ்சுக்றாப்ல கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருப பண்ணணும்!” என்றார்.

அவரைக் அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:

”ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தெட்டு… முப்பத்தொன்பதாம் வருஷம்னு ஞாபகம். ஸ்ரீசங்கர மடம் கும்மாணத்ல (கும்பகோணம்) நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. அப்போ நடந்த ஒரு சம்பவத்ததான் இப்போ நா சொல்லப் போறேன். அத நீங்கள்ளலாம் சிரத்தயா கேட்டுட்டாலே இதுல இருக்கற மகிமை நன்னா புரியும்! சொல்றேன், கேளுங்கோ.” – சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்:
”கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைல ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரி ஒருத்தர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு… அவரோட தர்மபத்னி பேரு சிவகாமி ஆச்சி! அவா காரைக்குடி பக்கத்ல பள்ளத்தூரை சேர்ந்தவா. அந்தத் தம்பதிக்குக் கொழந்த குட்டி கெடயாது.

கடத்தெரு மளிகைக் கடய பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையன அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டிருந்தா. குமரேசன் செட்டியாருக்கு அப்போ அம்பது… அம்பத்தஞ்சு வயசிருக்கலாம். அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ள இருக்கும். சதாசர்வ காலமும் அவா ரண்டுபேரோட வாய்லேர்ந்தும் ‘சிவ சிவ… சிவசிவ’ங்கற நாமஸ்மரணம்தான் வந்துண்டிருக்கும். வேற பேச்சே கெடயாது! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தமாட்டு வண்டி உண்டு. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஓட்டிண்டு போவார்! நித்யம் காலங்கார்த்தால ரண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா. ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா. அப்டி ஒரு அந்நியோன்ய தம்பதியா அவா இருந்தா. அவாள பத்தி, இதயெல்லாத்தயும் தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாசாரம் சொல்லப் போறேன், பாருங்கோ…”

சொல்லிவிட்டு சஸ்பென்ஸாக கொஞ்ச நாழிகை மெளனம் மேற்கொண்டார் ஸ்வாமிகள். சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள், ஸ்வாமிகள் என்ன சொல்லப் போகிறாரோ என ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: ”பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன கார்யம் பண்ணிண்டு வந்துண்டிருக்கா தொயுமா? அதிதிகளுக்கு உபசாரம் பண்றது! ஆச்சர்யப்படாதீங்கோ! பிரதி தினமும் மத்யானம் எத்தனை சிவனடியார்கள் அதிதியா வந்தாலும் அவாளுக்கெல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்துலு ஒக்காத்தி வெச்சு போஜனம் பண்ணி வெப்பா. சிவனடியார்களை வாசல் திண்ணயில ஒக்காத்தி வெச்சு ரண்டு பேருமா சேர்ந்து கால் அலம்பிவிட்டு, வஸ்திரத்தால தொடச்சுவிட்டு… சந்தனம்- குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சிண்டு போய் ஒக்காத்துவா.

அவா கிருஹத்ல சமயக்காரா ஒத்தரையும் வெச்சுக்கல்லே! எத்தன அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையால சமச்சுப் போடுவா! அதுலுயும் இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னன்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அத அவாள்ட்டயே கேட்டுண்டு போய், வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா! அப்டி ஒரு ஒசந்த மனசு! இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்டி தெரியும்னு யோசிக்றேளா… அது வேற ஒரு ரகஸ்யமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகள பாத்துண்டுருந்தார். அவர்தான் சாவகாசமா இருக்கச்சே இதயெல்லாம் வந்து சொல்லுவார்! இப்ப புரிஞ்சுதா?”

சற்று நிறுத்திக் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். ஆச்சார்யாள். அமர்ந்திருந்த ஒருவரும் இப்படி அப்படி அசையவில்லை. மகா ஸ்வாமிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நடமாடும் தெய்வம் தொடர்ந்தது: ”ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்தது. உச்சி வேளை. வாசல்ல வந்து பார்த்தார் குமரேசன் செட்டியார். ஒரு அதிதியக்கூட காணும்! கொடய புடிச்சிண்டு மகாமகக் கொளத்துப் படிகள்ள எறங்கிப் பாத்தார். அங்க ஒரு சின்ன மண்டபத்ல சிவனடியார் ஒத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதியெல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார். அவர பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலருக்கு. தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். கால் அலம்பிவிட்டுக் கூடத்துக்கு அவர அழச்சிண்டு போய் ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி. செட்டியாரின் தர்மபத்னி சிவனடியார் கிட்ட போய், ‘ஸ்வாமிக்கு என்ன காய்கறி புடிக்கும்? சொல்லுங்கோ. கடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமச்சுப் போட்டுடறேன்’ என்று கேட்டா.

சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் ஏந்திருந்து கொல்லப் பக்கம் போய் பார்த்தார். கொல்லயிலே நெறய முளைக்கீரை மொளச்சிருந்தததைப் பாத்தார். உள்ள வந்தார். அந்த அம்மாவ கூப்ட்டு தனக்கு ‘வேற ஒண்ணும் வாண்டாம். மொளக்கீர கூட்டும், கீரத்தண்டு சாம்பாரும் பண்ணா போறும்’னார். கைல ஒரு மூங்கில் தட்டோடு கீர பறிக்கப் போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆயிண்டே போச்சு. சிவனடியார்க்கோ நல்ல பசி. கீரய நாமும் போய் சேர்ந்து பறிச்சா சீக்ரமா முடியுமேங்கற எண்ணத்ல, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீர பறிக்கப் போனார் சிவனடியார்.

இவா ரண்டு பேரும் கீர பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படிலே நின்னு பாத்துண்ருந்தா. பறிச்சப்றம் ரண்டு பேரும் கீரத்தட்டைக் கொண்டு வந்து உள்ள வெச்சா! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா? ரண்டு தட்டு கீரயயும் தனித்தனியா அலம்பினா. ரண்டு அடுப்ப தனித்தனியா மூட்னா. ரண்டு தனித்தனி வாணலியிலே கீரய போட்டு…. அடுப்ல ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. அத பாத்துண்ருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம்! ‘என்னடா இது… ரண்டும் ஒரே மொளக் கீரைதானே. ஒரே பாத்ரத்ல போட்டு சமைக்காம இப்டி தனித்தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளே’னு கொழம்பினார்.

சித்த நாழி கழிச்சி, கீர வாணலி ரண்டையும் கீழ எறக்கி வெச்ச அந்தம்மா, சிவனடியாரோட கீரய மாத்ரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை ‘ரூம்’ல ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா. இத பாத்துண்ருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே! அவர் என்ன நெனச்சுண்டுட்டார் தெரியுமா? ‘நாம ஒரு பெரிய சிவபக்தன்… சன்யாசி. அதனால நாம பறிச்ச கீரயத்தான் சிவபெருமான் ஏத்துப்பார்’ங்கறத இந்தம்மா புரிஞ்சுண்டு, நிவேதனம் பண்றா’னு தீர்மானிச்சுண்டுட்டார். இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்த அந்தம்மாகிட்டவே கேட்டுடணும்னு தீர்மானம் பண்ணிண்டார்.”

இங்கு சற்று நிறுத்தி எதிரில் இருந்த பக்தர்களை பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார்: ”போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந்த சிவனடியார் தன் சந்தேகத்த அந்த ஆச்சிகிட்ட கேட்டுட்டார். ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா? ‘ஐயா, கொல்லைல கீர பறிக்கறச்சே நா பாத்துருண்டே இருந்தேன். என் பர்த்தா ‘சிவ… சிவ’னு சிவ நாமத்த சொல்லிண்டே கீரய பறிச்சார். அது, அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து. திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியம் இல்லே. நீங்க ஒண்ணுமே சொல்லாமப் பறிச்சேள். அதனாலதான் தனியா அடுப்பு மூட்டி சமச்சு ஒங்க கீரய மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்’னு சொன்னா. இதக் கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரொம்ப சங்கோஜப் பட்டுண்டார். தம்பதி ரண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித்தனத்தயும் பாராட்டி, புறப்பட்டார்! அப்டி அன்னம் (சாதம்) போட்ட ஒரு தம்பதி அவா….”

நிறுத்தினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஸ்வாமிகள் தொடர்ந்தார்: ”இப்டி விடாம அதிதி போஜனத்த பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச ‘பல ப்ராப்தி’ (பிரயோஜனம்) என்ன தெரியுமா? சில வருஷங்கள் கழிச்சு ‘சஷ்டியப்த பூர்த்தி’ (60 வயது பூர்த்தி) எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மகா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்ல நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணா. வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு ‘ஓச்சலாருக்கு’னு சொல்லிப்டு பூஜை ரூம்ல ஒக்காந்தவ அப்டியே கீழ சாஞ்சுட்டா. பதறிப் போய்… சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்லயே சாஞ்சுட்டார். அவ்வளவுதான். அந்த மகா சிவராத்ரி அன்னிக்கே ரண்டு பேரும் ஜோடியா ‘சிவ சாயுஜ்ய’த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த நல்ல தம்பதிக்குக் கெடச்ச ‘பதவி’ய பாத்தேளா? இப்பவும் ஒவ்வொரு மகா சிவராத்ரி அன்னிக்கும் அந்தத் தம்பதிய நெனச்சுப்பேன். அப்டி அன்னம் போட்ட தம்பதி அவா….”

முடித்தார் ஆச்சார்யாள்!

கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது. இடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், ”மணி கிட்டத்தட்ட ரண்டு ஆயிடுத்து போலருக்கு. எல்லாருக்கும் பசிக்கும். போங்கோ… உள்ளே போய் நன்னா சாப்டுங்கோ” எனக் கருணையுடன் அனுப்பி வைத்தது!