முக்தி என்றால் என்ன?

?

பிறப்பு -இறப்பு, மீண்டும் பிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு பரம பதத்தை அடைவதே முக்தி எனப்படும். எண்ணிலடங்கா முற்பிறவிகளில் செயல் செய்து சேர்த்துவைத்திருக்கும் மிக அதிக அளவிலான சஞ்சித கர்மங்கள் தீருவதற்குள் ஒவ்வொரு பிறவியிலும் அதன் அளவை எஞ்சியுள்ள ஆகாமி கர்மங்கள் மூலம் அதிகரித்து வருகிறோம். எனவே கர்ம பலன்கள் தீர்ந்து நாம் முக்தி அடைவது என்பது நமது முயற்சியில்லாமல் தானாக நடை பெறாது.

பரமனை தெரிந்து கொள்வதால் மட்டுமே நாம் முக்தியடைய முடியும்.எப்பொழுது ஞானம் அடைகிறோமோ அப்பொழுது நாம் சேர்த்து வைத்துள்ள மொத்த சஞ்சிதகர்மமும் ஆகாமி கர்மமும் அழிந்து விடும் என்று வேதம் கூறுகிறது. மேலும் பரமனை பற்றிய ஞானத்தை அடைந்தவுடன் புதிதாக ஆகாமி கர்மம் சேராது. எஞ்சியிருப்பது ப்ராரப்த கர்மம் மட்டுமே. எனவே பரமன் யார் என்ற ஞானம் அடைந்தபின் நம் வாழ்வு ப்ராரப்த கர்மத்தின் கட்டுப்பாட்டின்படி நடந்து அது தீர்ந்தவுடன் மீண்டும் பிறவா நிலையை அடைந்து விடுவோம்

பிறப்பதற்கு காரணம் கர்மா (பிரம்ம சூத்திரம் 3.1.8-11)

செய்த பாவ புண்ணியங்களின் பலன்களை அனுபவிப்பதற்காகவே நாம் பிறவி எடுக்கிறோம் என்பதால் செயல்களை பற்றியும் அவற்றால் விளையும் பலன்களின் வகைகள் பற்றியும் அறிந்து கொண்டு அதர்மமான செயல்களை தவிர்த்து தர்மமான செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் அவசியத்தை இந்த பாடம் விளக்குகிறது.

ஒரு செயல் தன் ஜீவனுக்கு நன்மை செய்கிறதா அல்லது தீமையை தருகிறதா என்பதை பொறுத்து அதன் பலனை நாம் அனுபவிப்போம். நன்மையாக இருந்தால் நமக்கு புண்ணியமும் தீமையாக இருந்தால் நமக்கு பாவமும் ஏற்படும்.

பாவமும் புண்ணியமும் ஒன்றை ஒன்று நீக்கிவிடாது.

நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் பாவ புண்ணியங்கள் கலந்தே இருக்கும். பாவ காரியங்கள் மட்டுமே செய்து நல்ல செயல்கள் எதுவும் செய்யாத மனிதனோ அல்லது பாவத்தை முழுதாக தவிர்த்து புண்ணியகாரியங்கள் மட்டுமே செய்யும் மனிதனோ உலகில் கிடையாது. எனவே ஒரு அயோக்கியன் சுகமாக இருக்கிறானே என்று கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. அவன் சுகமாக இருப்பதற்கு காரணம் அவன் செய்த புண்ணியம். அவன் செய்யும் கெட்ட காரியங்களுக்கு நிச்சயம் அவன் தண்டனை அனுபவிப்பான். அதே போல் நான் எப்பொழுதும் எல்லோருக்கும் நன்மை மட்டும் தான் செய்கிறேன், கடவுள் ஏன் என்னை இப்படி தண்டிக்கிறார் என்ற கேள்வியும் தவறு. பாவ புண்ணியங்களின் பலனை தனித்தனியாக அவரவருக்கு சேரவைப்பதில் இறைவன் எந்த தவறும் செய்வதில்லை.

அதிர்ஷ்டம், நம் வாழ்வில் ஏற்படும் வெற்றி-தோல்விகள், சுக-துக்கங்கள், நோய்-ஆரோக்கியம், வளமை-வறுமை, ஏற்ற-தாழ்வு போன்ற அனைத்துக்கும் காரணமாக அமைவது நமது பாவ-புண்ணியங்கள் மட்டுமே. வாழ்வில் நிகழும் பெரும்பான்மையான நிகழ்வுகளுக்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம். அதிர்ஷ்டம் என்பதன் பொருள் நாம் ஏற்கனவே செய்த நற்செயல்கள் அல்லது தீயசெயல்களின் பலன் என்பது. எந்த செயலின் பயன் எப்பொழுது எந்த வகையில் நமக்கு பலனைத்தரும் என்பது மனித அறிவுக்கு எப்பொழுதுமே எட்டாது என்பதால் அதை கண்ணுக்கு தெரியாத அதிர்ஷ்டம் என்ற பெயரில் அழைக்கிறோம்.
நாம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம்.அதிர்ஷ்டம் என்பது நமக்கு சம்பந்தம் இல்லாமல் தானாக ஏற்படுவதன்று. நமது அதிர்ஷ்டத்தையும் துரதிர்ஷ்டத்தையும் தீர்மானிப்பது நாம் மட்டுமே. எனவே முடிந்தவரை நல்ல செயல்களை செய்து எதிர்காலத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை நமக்கு ஏற்படுத்திக்கொள்வது நம் கையில் மட்டுமே இருக்கிறது.

எஞ்சியிருக்கும் கர்மபலன்

நாம் செய்யும் செயல்களின் அனைத்து பலன்களையும் நம்மால் அனுபவித்து தீர்த்து விட முடியாது. எஞ்சியுள்ள பலன்கள் எவ்வாறு நம்முடன் தொடர்ந்து வருகின்றன என்பதை புரிந்து கொள்ள கர்ம பலன்களை மூன்றுவிதமாக பிரித்து வேதம் நமக்கு விளக்கம் அளிக்கிறது.

மூன்று வகை கர்ம பலன்கள் –
1.சஞ்சித கர்மம்
2.ப்ராரப்த கர்மம்
3.ஆகாமி கர்மம்

1.சஞ்சித கர்மம் – சஞ்சித கர்மத்தை நெடுங்கால வைப்பு நிதியுடன் (Fixed Deposit) ஒப்பிடலாம். பலனளிக்கும் காலம் (period of maturity) ஒவ்வொரு செயலுக்கும் வேறுபடும்.

2.ப்ராரப்த கர்மம் – சஞ்சித கர்மங்களில் ஒரு பகுதி பருவமடையும் பொழுது அவை ப்ராரப்த கர்மமாக மாறும். இது சேமிப்பு கணக்குடன் (Savings Account) ஒப்பிடலாம்.

3.ஆகாமி கர்மம் – நாம் ஏதாவது ஒரு செயலில் எப்பொழுதும் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் பாவ புண்ணியங்களை தொடர்ந்து சம்பாதித்துக்கொண்டிருக்கிறோம். இவை ஆகாமி கர்மம் எனப்படும்.இவற்றை வங்கியில் வைத்திருக்கும் நடப்பு கணக்குடன் (Current Account) ஒப்பிடலாம். இவற்றின் பலனை பெரும்பாலும் நாம் அவ்வப்போது அனுபவித்துவிடுவோம். ஆயினும் ஒரு சிறுபகுதி நிச்சயம் எஞ்சி இருக்கும்.

இறக்கும்பொழுது எஞ்சியுள்ள ஆகாமி கர்ம பலன்கள், நாம் பலமுன் பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள சஞ்சித கர்மத்துடன் சேர்ந்து விடும்.
பிறக்கும்பொழுது ஒருகுறிப்பிட்ட அளவு ப்ராரப்த கர்மத்துடன் பிறக்கிறோம். பிறந்தது முதல் இறக்கும் வரை நம் வாழ்வில் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவத்திற்கும் பருவமடையும் ப்ராரப்த கர்மமும் ஆகாமி கர்மமும் மட்டுமே காரணமாகும்

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 34

குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
 
பரிமேலழகர் உரை:
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் – அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன் – அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர – அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய; (குற்றம் – தீயன சிந்தித்தல். பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், ‘ஆகுல நீர’ என்றார். மனத்து மாசுடையான் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.).
 
Translation:
Spotless be thou in mind! This only merits virtue’s name; All else, mere pomp of idle sound, no real worth can claim.
Explanation:
Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -34

சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந் நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிரம் நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின்றேனே

கலவை மணக் கூட்டுப் பூசப்பெற்ற தலையினிடமாக இருந்துவரும் நறுமணம் போன்று வேந்தனாகிய சிவபெருமான், தூய விண்ணவர்க்கருளிய மெய்ந்நெறி ஒன்றுண்டு. அச் சிவபெருமான்றன் நிறைந்த அறிவொளிப் பொருண்மறையான திருவைந்தெழுத்தை அளவின்றித் திருக்கோவில் முதலிய புறம்போந்தும், திருமடம் முதலிய அகமிருந்தும் போற்றிப் புகழ்ந்து புகல்கின்றேன். தூயவிண் – சிவவுலகம்.

இந்து மதம் எங்கிருந்து வந்தது?

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகி றதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள்.

வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பய முறுத்தியது பூமி.

இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழி றங்குகிறாள் சிந்து.

அது அந்தக்கால ஆப் கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம்போய் வெளியே வருவார்கள்.

பூமியே புதிராக தெரிந்தது. அவர்களுக்கு நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது யார்? நடுங்கினர்.

இந்தப் பயத்தாங் கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள்.

அவர்களின் மூளைக் குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர்.

விளைவு…!

கண்டுபிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான் உற் றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் அய்ரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங் கப்படுகிறது. ஆரியர்களில் ஒரு பகுதிதான் அய்ரோப்பாவுக்கு நகர்ந் தது).இயற்கைதான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான்.

நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்குநாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள் உண்டாயிற்று வேதம்.

உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத்

பிரம்ம முகூர்த்தம் சிறப்பு

சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது. படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.
காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இதஎப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து
நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்
பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்
உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.
மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.
அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்.
எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது.

கந்தசஷ்டி கவசம் உருவான கதை

கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும், நோய் நொடிகளிலிருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.

இந்த கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். தேவராய சுவாமிகள் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா?தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும்அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.

வாழ்க்கையே வெறுப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும்முடிவோடு திருச்செந்தூர் சென்றார்.அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.

தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளக்கும்தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பதுஎன்று முடிவு செய்தார்.

அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும்.

தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே ‘கந்த சஷ்டி கவசம்’ என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.அவர் முதன் முதலில் இயற்றிய ‘திருச்செந்தூர் கவசம்’ தான் பொதுவாக எல்லோரும் அறிந்த,’சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்’என்று தொடங்கும் கவசம்.

இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும்.

முருகனுக்கு உகந்தநாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு. முருகனுக்கு முகங்கள் ஆறு. முருகனின் படை வீடுகள் ஆறு. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு, ‘சரவணபவ’ என்ற முருகனின் மந்திரம் ஆறெழுத்து

ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு பேன்றவற்றை குறிக்கும்.இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே.கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே.

இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?இத்த்னை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும்

திருச்சிற்றம்பலம்

தேவர்கோ அறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவர்கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத்து எந்தையாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான்யா மார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம் மேவினோம் அவனடியால் அடியாரோடும் மேன்மேலும் குடைந்தாடி ஆடு வோமே.
-திருவாசகம்

தெளிவுரை :

மகாதேவனைத் தேவேந்திரன் அறியமாட்டான். மும்மூர்த்திளுக்கும் அவனே தலைவன். தோன்றியுள்ள அனைவர்க்கும் அனைத்துக்கும் அவனே முதற்பொருள். உமாதேவியாரை ஒரு பாகத்தில் வைத்துள்ள தந்தை என்னை வலிய வந்து ஆட்கொண்டான். அவனைத் தவிர வேறுயாருக்கும் நாங்கள் குடியல்லோம். இனி அஞ்சுவதற்கு யாண்டு ஒன்றும் இல்லை. அவன் அடியார் அனைவரும் கூடி ஆனந்த சாகரத்தில் திளைத்திருப்போம்.

கட்டறுத்தலில் அல்லது பூரண வைராக்கியத்தில் நிலைத்திருப்பவர்க்குச் சிவஞானம் வாய்க்கிறது. அதை அடையப் பெற்றவர்க்கு அபயம் அல்லது அஞ்சாமை வாய்க்கிறது.

The Law of Karma

After Kurukshetra war, Dhritrarashtra asked Krishna, “I had 100 sons. All of them were killed. Why?
Krishna replied, “50 lifetimes ago, you were a hunter. While hunting, you tried to shoot a male bird. It flew away. In anger, you ruthlessly slaughtered the 100 baby birds in the nest. Father-bird had to watch in helpless agony.
Because you caused that father-bird the pain of seeing the death of his 100 sons, you too had to bear the pain of your 100 sons dying.
Dhritarastra said, “Ok, but why did I have to wait for fifty lifetimes?”
Krishna answered, “You were accumulating punya (pious credits) during the last fifty lifetimes to get 100 sons – because that requires a lot of punya. Then you got the reaction for the papa (sin) that you have done fifty lifetimes ago.”
Krishna says in the Bhagavad-gita (4.17) “gahana karmano gatih”. The way in which action and reaction works is very complex. God knows best which reaction has to be given at what time in what condition. Therefore, some reaction may come in this lifetime, some in the next and some in a distant future lifetime.
There is a saying, “The mills of God grind slow; but, they grind exceedingly fine.” So, every single action will be accounted for, sooner or later.
Srimad Bhagavatam gives example: if we have a cowshed with 1000 calves and if we leave a mother cow there, she will easily find out where her calf is among those thousands. She has this mystical ability.
Similarly, our karma will find us among the millions on this planet. There may be thousands going on the road but only one meets with an accident. It is not by chance, it’s by karma.
Thus, the law of karma works exceedingly fine; it may be slow to act, but no one can escape

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 33

குறள் 33:

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

பரிமேலழகர் உரை:
ஒல்லும் வகையான் – தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் – அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க. (இயலுந்திறம் ஆவது – இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.).

Translation:
To finish virtue’s work with ceaseless effort strive, What way thou may’st, where’er thou see’st the work may thrive.
Explanation:
As much as possible, in every way, incessantly practise virtue.