images (95)

ஊஞ்சல் ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.
வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.
பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.
இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.
ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
* ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.
மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.
திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.
* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.
நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
* கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
* தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது.
மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது.
சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.
வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள்,
ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.
சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.
இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.
வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.

images (93)

நம் மக்கள் ஏன் இப்படி ஆனார்கள் ?

இன்றில் இருந்து சராசரியாக 182 வருடங்களுக்கு முன் பிரிட்டீஷ் நாட்டைச் சேர்ந்த Lord Macaulay லார்டு மெக்காலேயின் தலைமையிலான ஒரு குழு நம் நாட்டை சுற்றிப் பார்த்தது…
5 வருடங்கள் குமரி முதல் இமயம் வரை சுற்றிப் பார்த்து விட்டு, பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்பித்தது.

இதோ அந்த அறிக்கை…
இந்திய நாட்டின் நீள அகலங்களை சுற்றிப் பார்தோம்.
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லை..!!
ஒரு திருடன் இல்லை..!!
அந்த அளவிற்கு செல்வச் செழிப்புடன் மதிப்புமிக்க நாடாக திகழ்கிறது..!!


இந்த நாட்டின் முதுகெலும்பாக திகழும் இவர்களின் ஆன்மீகம் மற்றும் தொன்மையான பாரம்பரியத்தை உடைத்து எறிந்தால் ஒழிய நாம் இவர்களை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை.
ஆதலால் நான் தெரிவிப்பது என்னவென்றால், இவர்களின் தொன்மையான, பண்டைய குருகுல கல்வி முறையை மாற்றி, அவர்களை சொந்தநாடு, மொழி, கலாச்சாரத்தை விட, வெளிநாடு தான் சிறந்தது, ஆங்கில மொழி தான் நல்லது… உயர்ந்தது என்று அவர்களாகவே நினைக்கும் அளவிற்கு நாம் மாற்றினால்தான் இவர்கள் தங்கள் சுய மரியாதையை மற்றும் சொந்த கலாச்சாரத்தை இழப்பார்கள்.


பின் நமக்கு எப்படி தேவைப் படுவார்களோ அது போல் மாறுவார்கள்.
நம் ஆதிக்கம் நிறைந்த உண்மையான அடிமை நாடாக திகழும்.


இதுவே அந்த அறிக்கை:-
பின் இவர்கள் திட்டத்தின் படி ஆங்கிலக் கல்வி முறை அரங்கேறியது.


“காலத்தே பயிர் செய்” என்பது இவனுக்கு தெரிந்திருக்கிறது போல. வெறும் அடிமை வேலை மட்டுமே செய்யக்கூடிய வகையிலும், சுய சிந்தனையை அறவே உதயமாகாத வகையிலும் இந்த கல்வி முறை வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக இந்த நொடி வரை சுயமாக சிந்திக்க தெரியாத,
சுய அறிவில்லாத அடிமைகளை இந்த தொழிற்ச்சாலை உருவாக்கி வருகிறது.
சரி இதனால் நாம் இழந்ததுதான் என்ன?…
*நம் சுயமரியாதையை இழந்தோம்.*
*நம் பாரம்பரிய விவசாய முறையை இழந்தோம்.*
*நம் மரபு வழி வந்த மருத்துவத்தை இழந்தோம்.*
*நம் உதவும் நல்லுணவை இழந்தோம்.*
*நம் பாரம்பரிய கலைகளை இழந்தோம்.*
*நம் பாரம்பரிய விளையாட்டுகளை இழந்தோம்.*
*நம் சொந்த நிலங்களை இழந்தோம்.*
*நம் ஆரோக்கியங்களை இழந்து நோயாளி ஆனோம்.*
*நம் அருமையான சுற்றுச்சூழல் தொலைந்து போகிறது.*

 

images (92)

வாழுங்கள் ஆரோக்கியமாக!.

“சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்…”

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்…

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில் b, நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது…

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது…

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்.
யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,
அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்…

எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்…

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்…

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்…

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்…

சாப்பிடும் முறை…!

1. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க…

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்…

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது…

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்…

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்…

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்…

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்…

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்…

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்…

10. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்… பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்…

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்…

12. சாப்பிட வேண்டிய நேரம்…
காலை – 7 to 9 மணிக்குள்
மதியம் – 1 to 3 மணிக்குள்
இரவு – 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்…

14. சாப்பிடும் முன்பும் பின்பும் இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்…

அமருங்கள் சம்மணமிட்டு…
சாப்பிடுங்கள் முறையாக..

images (48)

கர்த்தர் யார் ?-காஞ்சி மஹான்

கர்த்தர் யார் ?-காஞ்சி மஹான்

ஒரு பாதிரியார் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை சமர்ப்பித்து விட்டு,
தங்கள் மத வழக்கப்படி தலை, மார்பு, தோள்கள் இவற்றை விரல்களால் தொட்டு, ஒரு கிராஸ் போட்டுவிட்டு தன்
வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். அவர் நிறைய படித்தவர்; அபரிமிதமான பேச்சாற்றலால், மதக் கொள்கைகளை
அடுக்கிக் கொண்டே போனார். தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இப்பேர்ப்பட்ட அருமையான கொள்கைகள்
இல்லவேயில்லை என்று நிலை நாட்ட விரும்பிய வேகம், வெறி அவர் பேச்சில் தொனித்தது……யாரிடம்?
“அன்புதான் எங்க கொள்கையில ரொம்ப முக்கியமானது; எல்லோரிடமும் வேற்றுமை பாராட்டாமல், அன்பு செலுத்தியவர்
எங்கள் பிதா..” மேற்கொண்டு அவரை பேசவிடாமல் அவருடைய மனசாக்ஷியே தடுத்தது போல், பேச்சை நிறுத்திக் கொண்டார்.
காரணம், எங்கள் பிதா…என்று அவர் சொல்லி முடித்ததும் பெரியவா லேஸாக புன்னகைத்ததும், பாதிரியாரின் பேச்சு நின்றது.
“ஹிந்து மதத்லேயும் அன்புக்கு ரொம்ப முக்யத்வம் உண்டு! “அன்பே சிவம்”…ங்கறது பெரியவால்லாம் சொன்ன வாக்கு!
திருமூலர்ன்னு ஒரு பெரியவர் திருமந்திரம்ன்னு ரொம்ப ஒசத்தியான புஸ்தகம் எழுதியிருக்கார். அதுல அன்பைப்பத்தி,
மனித நேயத்தைப் பத்தி ரொம்ப அழுத்தமா சொல்லியிருக்கார்.
விஷ்ணு சஹஸ்ரநாமம்…ன்னு மஹாபாரதத்ல வருது. அதுல, “கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா”ன்னு பகவானுக்கு பேர்
சொல்லப்பட்டிருக்கு. நீங்களும் ஜீஸஸ்ஸை கர்த்தர்..ன்னு சொல்லறேள். உங்க மதத்துக்கு எத்தனையோ காலத்துக்கு
முன்னாடியிலிருந்தே….நாங்க பகவானை “கர்த்தர்”ன்னு சொல்லிண்டிருக்கோம்!
ஒங்களோட மதப்ரசாரங்கள் எல்லாத்துலயும், எங்களோட மதம், இதிஹாஸ புராணங்கள்,கடவுள்கள் எல்லாத்தையும் நிந்தை
பண்றேள்! ஆனா, நாங்க எந்த மதத்தையோ, மதத் தலைவர்களையோ, தெய்வத்தையோ நிந்தனையாவோ, கொறையாவோ
பேசறதில்லை! ஏன்னா ஹிந்து மதம்தான் மிச்ச எல்லா மதங்களுக்கும் தாயார் மாதிரி ! ஒரு தாயார், தன்னோட கொழந்தை
துஷ்டனா இருந்தாக் கூட திட்ட மாட்டா!…..
நீங்கள்ளாம் ஹிந்து சமயப் பண்டிதாளை மீட் பண்ணறதுக்கு விரும்பாம, எதுவுமே தெரியாத பாமர ஜனங்கள் கிட்டப் போய்
வாசாலகமா [வாய் ஜாலமாக] பேசறேள் ! எங்களுக்கு அனுஷ்டானம் முக்யம் ; ஒங்களுக்கு ப்ரசாரம் முக்யம்; அதோட பாமர
ஜனங்கள் ..ட்ட போனதுமே ஒங்களோட மதத் தத்துவத்தை சொல்றதில்லை; பால் பவுடர், ரொட்டி, துணிமணி…ன்னு குடுத்து
ஆசை காட்டி இழுத்துக்கறேள்! மொதல்ல அவாளுக்கு காப்பு மாதிரி பணம் குடுக்கறேள்… அப்றமா மதத்தைப் பத்தி பேசறேள்….”
பாதிரியார் சங்கடமாக நெளிந்தார்! உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் பெரியவாளுடைய ஒவ்வொரு
சொல்லும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டது!
“எங்கள் கர்த்தர்….தன் ரத்தத்தாலே பாவிகளின் பாவங்களைக் கழுவுகிறார்” கட்டக்கடைசியாக எதையோ சொல்ல வேண்டும்
என்று சொன்னார்.
பெரியவா மறுபடியும் புன்னகைத்தார்….”கர்த்தர்…ரொம்ப கருணையானவர்…ங்கற ஸ்துதி ஞாயந்தான்! ஆனா மத்தவாளை
நிந்திக்கக் கூடாதுங்கறதும் ஞாயந்தானே ?….”
பாதிரியார், “நிந்தனை பத்தி என்னை சிந்தனை செய்ய வெச்சிட்டீங்க!..” என்று முக மலர்ச்சியோடு கூறவும், ஒரு பழத்தை
ப்ரசாதமாக குடுத்தார் பெரியவா. அவருக்கும் திருக்கரத்தை உயர்த்தி ஆசி வழங்கினார்.
நம்முடைய மதத்தைப் பற்றி நாம் யாரிடமும் ப்ரசாரம் பண்ணி எதையும் ஸ்தாபிக்க அவச்யமேயில்லை! ப்ரசாரம்
பண்ணுவதற்கு “இவ்வளவுதான் இதில் இருக்கிறது” என்ற full stop ப்பை நம்முடைய மத நூல்களுக்கு [இதிஹாஸ,புராணங்கள்,
சாஸ்த்ரங்கள் என்று நீண்டு கொண்டே போகும்] நம்மால் வைக்க முடியாது. சங்கரர், மத்வர், ராமானுஜர், ஆழ்வார்கள்,
நாயன்மார்கள் இன்னும் ஏகப்பட்ட பக்த சிரோன்மணிகள் கூட ப்ரசாரம் பண்ணாமல், சாஸ்த்ர சம்மதமான தங்கள்
அனுஷ்டானத்தில் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
எனவே அவரவர் எந்தக் கடமையை செய்ய வேண்டுமோ, அதை ஒழுங்காக பண்ணிக் கொண்டிருந்தாலே, நம் மதத்துக்கு
எந்த ஹானியும் வராது என்பதே மஹான்களின் வாக்கு!
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர!

download (12)

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -39

வாழ்த்த வல்லார் மனத்து உள் உறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம் பெருமான் என்று இறைஞ்சியும்
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே

சிவபெருமான் தன்னைத் திருவைந்தெழுத்தால் வாழ்த்தவல்ல நற்றவத்தாரின் தூய திருவுள்ளத்து மிக்க அறிவுப் பேரொளியாய்த் தோன்றுவன். அத்தகைய இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய தீர்த்தனை, மேலும் செவ்வி வாய்ந்த உயிர்கள்மாட்டு மகிழ்ந்து திளைக்கும் முழுமுதல் தெய்வத்தினைப் பலவாறாகப் பரவியும், எம் தலைவனே என்று வணங்கியும், அவனுக்கு முற்றும் உரிமையாய்த் தன்னை அறக்கொடுத்தவன் ஆப்தன் – நண்பன் எனப்படுவன். அந்நிலை எய்தியவர் அவன் திருவருள் பெறுவது எளிதாம். ஈசன் – ஆண்டவன்.

Thiru

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 39

குறள் 39:
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
 
பரிமேலழகர் உரை:
அறத்தான் வருவதே இன்பம் – இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த – அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல – அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. (‘ஆன்’ உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, ‘தூங்கு கையான் ஓங்கு நடைய’ (புறநா.22) என்புழிப்போல. இன்பம் – காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் ‘பிறனில் விழைவு’ முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் ‘புறத்த’ என்றார். அறத்தோடு வாராதன ‘புகழும் இல’ எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம். இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.
Translation:
What from virtue floweth, yieldeth dear delight; All else extern, is void of glory’s light.
Explanation:
Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.
images (47)

கர்மா என்பது என்ன?

ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத் தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை.ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான்.
மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!
அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்!
அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்! நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.
அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்! அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்! அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது! இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!
மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்!
தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்! அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்!
அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்! அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்! அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்! அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்!
அந்தப் பொற்காசுகளால்அவனது வறுமை தீர்ந்தது! இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்! அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!
குரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்! பல சீடர்கள் அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்!!
குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் “இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே “
நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்!
மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் !

Thiru

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல் – 38

குறள் 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
 
பரிமேலழகர் உரை:
வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் – செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் – அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம். (ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் ‘பஞ்சக்கிலேசம்’ என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.
 
Translation:
If no day passing idly, good to do each day you toil, A stone it will be to block the way of future days of moil.
Explanation:
If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.
images (41)

ஆடி மாதத்தின் சிறப்புகள்

ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர். ஆடியை கற்கடக மாதம் என்றும் அழைக்கிறார்கள்.
மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாவன இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.
தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.

images (40)

கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.

இரகசியம்.ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு.உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது கருங்கல்.
இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.
நீர்: கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம்.
நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.
நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.
காற்று: கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.
ஆகாயம்: ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.
இக்காரணங்களினால், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்)வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.
அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன.அக்கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன