D1

நவராத்திரி நோன்பு

தொன்ம நம்பிக்கை:-

மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பினபோது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின; பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)

 • நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
 • நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்
 • இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.

விரதகாலம்:

நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமைதிதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது[மேற்கோள் தேவை]. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.

விரதகாலங்களில் ஓதத்தக்க தோத்திரப்பாடல்கள்:

 1. தேவி மகாத்மியம்
 2. அபிராமி அந்தாதி
 3. துர்க்கா அஷ்டகம்
 4. இலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)
 5. சகலகலாவல்லி மாலை
 6. சரஸ்வதி அந்தாதி
 7. மஹிஷசுரமர்த்தினி தோத்திரம்
 8. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
v1

கிராம வழக்கு மொழிகளில் உள்ள உண்மைகள்!

1. ‘தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா… வீட்டுல சண்டை வரும்.’

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.

2. ‘வீட்டுக்குள்ள நகம் வெட்டினா… வீடு விளங்காது.’

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி… வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

3. ‘நகத்தைக் கடித்தால் தரித்திரம்.’

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

4. ‘உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.’

கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

5. ‘இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.’

வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.

6. வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.’

புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.
7. ‘இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்… எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!’

கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

8. ‘புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.’

புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.
9. முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.’

மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்

10. தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது…’

சமைக்கும்போதும்… பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!

11. . ‘வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.’

பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

12. . ‘வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.’இந்த இலையில் ‘பினாலிக்ஸ்’ எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.

10

Self-Identity

I sat in my chair quietly next to my mom and dad as my grade 4 teacher Mrs. Shastri gave them an update on my progress at school.

“Nitin is a slow learner” said Mrs. Shastri quietly.

I held my breath and sank a little lower into my chair. I looked up at my dad to see if he was in trouble. My father glanced down, smiled and gave me a quick wink.

On the way home from the Parent-Teacher meeting, I thought about what Mrs. Shastri had called me – ‘Slow Learner’. Deep down I knew that what she really meant was that I was dumb.

Later that evening, my mom and dad came into my room carrying a piece of paper and a pen.

They sat down on the side of the bed and said, “Want to talk to you about what Mrs. Shastri said today.”

“A Slow Learner” I replied.
I had already taken the words to heart.

“That’s right” said my dad as my mother wrote the words ‘Slow Learner’ on the piece of paper.

My parents then held up the piece of paper in front me and purposefully tore it into two.

My eyes widened in surprise.

“Mrs. Shastri was wrong” said my parents as they continued to tear the paper into smaller and smaller pieces.

“You’re not a slow learner.”

“I’m not?”

“No, and starting tomorrow, you and we are going to show that Mrs. Shastri was wrong, OK?”

“OK” I hugged my mom, snuggled down into my pillow and fell asleep with a smile on my face and a warm glow in my heart.

From that day on, my parents spent one hour per day helping me with my reading and writing. By the end of the year, I was doing much better at school and interestingly no one ever labeled me a ‘Slow Learner’ again.

My parents knew that when a child receives a label from a person in authority such as a teacher or parent, they often take that label to heart and it becomes a part of their self-identity for the rest of their lives.

To avoid this from happening to their son, my parents created a tangible representation of the ‘Slow Learner’ label and tore it up it in front of me so that the label would not become a part of child’s self-concept.

Today I would like to thank my mom and dad.

Think about the labels that people have given to you, your kids in the past and at present.

Perhaps you were given a label by one of your parents, your teacher, your spouse or your boss. What is the label that resonates in your mind?

Is there a label that has become part of yourself identity because a person in a position of authority gave it to you?

If so, write this label down on a blank sheet of paper and hold it up to see it for what it really is – A Label.

It is a label – nothing more. It is not part of you and you do not have to accept it as part of yourself identity any longer.

As you begin to see the label for what it really is – Rip it in half and enjoy the feeling of destroying the label once and for all.

When you do this exercise, you will feel a surge of motivation to take action to ensure that no one attempts to give you this label again in the future.

Just as my parents took action and helped me with my school work, make sure you follow through and do whatever you need to do to eliminate the remnants of the label from your life forever.

REMEMBER SOMEBODY’S OPINION ABOUT YOU DOESN’T HAVE TO BECOME YOUR REALITY.

download (12)

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -46

அந்தி வண்ணா அரனே சிவனே என்று
சிந்தை செய் வண்ணம் திருந்து அடியார் தொழ
முந்தி வண்ணா முதல்வா பரனே என்று
வந்து இவ்வண்ணன் எம் மனம் புகுந்தானே

படைத்தற்பொருட்டு அந்திவண்ணனாய்ப் பொன்நிறங் கொண்டருள்பவனே, துடைத்தற்பொருட்டு அரனாய் நீலநிறங் கொண்டருள்பவனே, அருளுதற் பொருட்டுச் சிவனாய் வெண்ணிறங் கொண்டருள்பவனே என்று திருந்திய மெய்யடியார்கள் தொழுவர். உலகந்தோன்ற வேண்டும் எனச் சிவன் திருவுள்ளங் கொண்டதும் அதன் பொருட்டுத் திருவருளின்கண் முதற்கண் தோன்றிய நிறம் ஐந்து. இவ்வைந்தும் ஒருங்கு கூடியவனே முந்திவண்ணன். அவனே முழுமுதல்வன். இங்ஙனம் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அடியேனும் வாழ்த்த, அந்திவண்ணனும் அருளால் வந்து அடியேன் அகம் புகுந்தருளினன்.

முதல்வன்- வினைமுதற் காரணன். பரன் – யாவர்க்கும் மேலானோன்.

Thiru

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை – 46

குறள் 46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.
 
பரிமேலழகர் உரை:
இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் – ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் – அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? (‘அறத்தாறு’ என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. ‘புறத்தாறு’ இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.).
 
Translation: If man in active household life a virtuous soul retain, What fruit from other modes of virtue can he gain? Explanation: What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?
images (31)

Talent and Time

In Delhi, there was a samosa vendor. His shop was in front of a big company. His samosa was so tasty.! Most of the employees use to eat that samosa at lunch time.

one day, a manager came to that samosa wala. while he was eating samosa he comes in the fun mood.

he asks a question – yaar Raju, you have maintained your shop so nicely.
you have good management skills. don’t you think that you are wasting
your talent and time by selling just samosas?

Think, if you were working like me in any big company. you would have been a manager like me isn’t ?

poor samosa wala… he smiled at the manager and said awesome lines.

sir, I thought my work is better that your work. do u know why?
10 year back I used to sell samosa in tokari (Leaf basket). the same time you got this job. That time I was earning Rs. 1000 in a month and your salary was 10K.
In this 10 years journey, we did progress a lot.
I owned a show shop and become famous samosa-wala in this area and you become a manager.
Now you are earning Rs. 1 lakh while I am earning same and sometimes more than you. so surely, I can say that my work is better than yours.
it’s because of my kids future.

Let me explain –
Please pay close attention to my word. I started my career at lowest income. my son doesn’t have to suffer the same. one day my son will take over my business. he doesn’t have to start from 0. he will get full flashed established business but in your case, the benefits will take by your boss kids, not by your kids.
you can not offer your same post to your son/daughter. they have to start from 0. Whatever you had suffered 10 years ago, your kids have to suffer the same.

my son will extend my business from now and when your kid will be manager my son will be far away.

Now tell me who is wasting the talent and time.

manager give 50 rs for two samosa’s and he didn’t speak any word and left.

images (57)

சிறுதுளி பெருவெள்ளம்

வீட்டில் நாம் கொசு விரட்டி திரவத்தை கடையில் வாங்கி மின்சாரத்தில் சொருகி வைத்து கொசுக்களை விரட்டுகிறோம்.

ஒருமுறை தீர்ந்தால் அந்த பாட்டிலை தூக்கி எறியாதீர்கள்.

அந்த பாட்டிலில் சிறிதளவு ஆரத்தி கற்பூரத் துண்டுகளையும், வேப்ப எண்ணையையும் கலந்து மீண்டும் உபயோகப் படுத்தலாம்.

அதை விட கூடுதல் பயன்கள் ஏராளம். 50 மில்லி வேப்ப எண்ணை விலை சுமார் ரூ10 மட்டுமே (பதஞ்சலியில் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது).
மொத்த செலவே ரூ 11 மட்டும், ஒரு மாதத்திற்கு.

இரண்டாவது மிகப் பெரிய விஷயம், இது உடல் நலத்திற்கோ, சுவாசத்திற்கோ தீங்கு விளைவிக்காத இயற்கை எண்ணெய். கடையில் வாங்கும் கொசு விரட்டியில் அல்லோத்ரின் எனும் வேதிப் பொருள் கெடுதி விளைவிப்பதாகும்.

இதை விற்பவர்கள் இந்தியாவில் மொத்தம் நாலே நாலு உற்பத்தியாளர்கள். யோசியுங்கள், ரூ 65 பெறுமானமுள்ள இந்த வேதிப் பொருளை சுமார் 10 கோடி மக்கள் இந்தியாவில் மாதம் தோறும் வாங்குகிறார்கள். ஆக, மொத்த வியாபாரப் பரிவர்த்தனை வருடத்திற்கு ரூ 7800 கோடிகள். நான்கு கம்பெனிகளில் ஒரு கம்பெனி ஜப்பான் கூட்டுறவு. அந்நிய செலாவணியாக நம் பணம் அங்கே போகிறது.

இந்த வேதிப் பொருளை விற்று வரும் லாபப் பணத்தில் சினிமா எடுக்கிறார்கள். மக்களை மயக்க விளம்பரம் எடுத்து கோடி கோடியாக கொட்டுகிறார்கள்.

ரூ 65 விற்பனை விலையில் லாபம் 250%.

நீங்களே உங்கள் வீட்டில் செய்து கொண்டால் குறு நிறுவனங்களாகிய வேப்ப எண்ணெய் உற்பத்தி உயர்ந்து நமது விவசாயி பயனடைவான்.

இந்த விஷயத்தை நமக்குத் தெரிவித்த இந்தப் பெண்மணியைப் பாராட்டுகிறேன்.

நாம் அனைவரும் பயன் பெறவும், நாடு பயனடையவும் உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்.

இந்த தகவலை பகிருங்கள். ஒரு பத்தாயிரம் பகிர்வுகள் நடந்தால் ஒரு நல்ல விஷயத்தை பகிர்ந்தது குறித்து இந்தியனாகிய நான் பெருமை அடைவேன்.

“சிறுதுளி பெருவெள்ளம்’

images (33)

கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது : கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது!

ஒரு வைத்தியரும் அவருடைய உதவியாளரும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர். குரு என்ன தேடுகிறார் என்று சீடனுக்கு தெரியாது! குருவும் சொன்னதில்லை! சீடனின் வேலை அலைந்து திரிந்து வரும் குருவுக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை!
ஒருநாள் குரு வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே சீடனை காணவில்லை. மாறாக இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். குருவை பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து சேவித்தான். குருவுக்கு ஒன்றும் புரியவில்லை. யாரப்பா நீ என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன் குருவே நான்தான் உங்கள் சீடன். என்றான். குருவுக்கு மிகவும் குழப்பம்.
என்ன நடந்தது என்று கேட்க சீடன் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்
” குருவே! உங்களுக்காக கூழ் காய்த்து கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது. அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன் குருவே. நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன். குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளைஞனாகிவிட்டேன்” என்றான்.
குரு பதறி அடித்துபோய் ” எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் ” என்று கேட்க அதற்கு அந்த சீடன் “அதை தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? ” என்றான். குரு நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்!
நீதி 1. (corporate moral): inform your team mates what you really looking far!

நீதி 2. (யதார்த்தம்) பெரும்பாலும் பயன் தெரியாதவர்களிடம் தான் சில விஷயங்கள் அகப்பட்டுக்கொள்கின்றன! அவர்கள் பலனடைந்தாலும் அடுத்தவர்கள் பலனடைய விடாமல் செய்து விடுகிறார்கள்!

night

“அன்பே சிவம்…” என உணர்வதே தவம்…

“பக்தியில் முதன்மை…”

‘தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு?’ன்னு கேட்டா….

எல்லோரும் யோசிக்காமல் “ராஜா ராஜா சோழனு…” பதில் சொல்லிடுவாங்க.

ஆனா, ராஜா ராஜா சோழனோ, ‘அந்த கோயில கட்டினது நான் இல்லை…’ன்னு சொல்றாரே!

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது…

கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜா ராஜா சோழன் நிம்மதியா தூங்கும் போது… கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.

‘ராஜா ராஜா!’ என்றழைக்க…

ராஜா ராஜா சோழன், “இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது… தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்…
தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?… இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்… அதற்க்கு ‘தஞ்சை பெரிய கோயில்’ என்று பெயர் சூட்ட போகிறேன்… மகிழ்ச்சி தானே தங்களுக்கு?” என்று கேட்டான் ஆனந்தமாக.

இறைவன் சிரித்து கொண்டே, “ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்… ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்…” என்று கூறி மறைந்தார்.

ராஜா ராஜனின் கனவும் கலைந்தது.

விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான்.

யாருக்கும் பதில் தெரியவில்லை.

பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான்.

கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான்.

சிற்பி தயங்கியவாறே, “அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்… ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்… நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார்.

எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.

இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை… நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.

எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்…

அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, ‘ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?’ என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம்.

அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது… நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்…

என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது.

அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்… என்றான் சிற்பி.

இதை கேட்டதும் ராஜா ராஜனுக்கு எல்லாம் புரிந்தது…

எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான்.

ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே…”
என்று கண்ணீர் மல்கி…

பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, “அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்… நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்…

இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான்… நான் அல்ல…
இதற்கு இறைவனே சாட்சி என்றான்…”