images (32)

உறவு முறைகள் பற்றி

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா,
சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு,
அத்தை பையன்,
அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு,
மாமன் பையன்,

இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது,

யாரும் கூப்பிடவும் மாட்டார்கள்,

அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்

காரணம், . . .

ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!

அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?

பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!

திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை,

மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,

குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?

கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,

இனி யார் போவார்?

ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்

ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்.

அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,

அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால், . . .
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !

உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான், . . .

வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!

கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!

ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!

கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,

வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு, . . .

ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?

images100

What is a Corporate Life?

1. I learnt to operate 3 critical machines

* Scanner
* Printer
* Xerox Machine

2. I learnt to use 3 High End Software:

* Microsoft Word
* Microsoft Excel
* Microsoft PowerPoint

3. I learnt to use 3 great short cuts:-

* Ctrl+C
* Ctrl+V
* Ctrl+S

4. I learnt to say three very important words for professional life:-

* Yes sir
* Ok sir.
* I’ll Just Do That sir

5. When I really wanted to quit, I learnt to: -

* Wake Up early
* Sleep late
* Continue to Work

6. I learnt to: -

* Face Monday
* Fight For next 5 Days
* Wait For Sunday

7. I learnt to give reasons to family, friends and relatives for not making

* Phone Calls
* Messages
* Mails

8. I learnt to celebrate these things far away from loved ones:-

* Birthday
* New Year
* Festivals

9. At the end, People say:-

* You Learnt…
* You Earned…
* You Enjoyed…

10. But when I compare me with my self…

* I just Sustained…
* I just Tolerated…
* I just Survived… for bucks

11. I have survived:-

* For convenience of my Family…
* To avoid blame of Society…
* To get tag of Employment…

Dedicated to all employees

images (59)

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?

“நீ பிறந்த போது, நீ அழுதாய்…உலகம் சிரித்தது…
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்” என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்…

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்…

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
“ஆணவம் ஆயுளை குறைக்கும்…”

மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்

images (27)

Happiness

Once a group of 500 people were attending a seminar. Suddenly the speaker stopped and decided to do a group activity. He started giving each person a balloon. Each person was then asked to write their name on it using a marker pen. Then all the balloons were collected and put in another room.

The people were then let into that room and asked to find the balloon which had their name written on it within 5 minutes. Everyone was frantically searching for their name, colliding with each other, pushing around others and there was utter chaos.

At the end of 5 minutes no one could find their own balloon.
Then, the speaker asked each person to randomly collect a balloon and give it to the person whose name was written on it. Within minutes everyone had their own balloon.

The speaker then began, “This is happening in our lives. Everyone is frantically looking for happiness all around, not knowing where it is.

Our happiness lies in the happiness of other people. Give them their happiness; you will get your own happiness. And this is the purpose of human life…the pursuit of happiness.

images (39)

274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன்.

காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.

எண் – கோயில் – இருப்பிடம் – போன்

சென்னை மாவட்டம்

01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் – பாடி – 044 – 2654 0706.

02. மாசிலாமணீஸ்வரர் – வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., – 044 – 2637 6151.

03. கபாலீஸ்வரர் – மயிலாப்பூர் – 044 – 2464 1670.

04. மருந்தீஸ்வரர் – திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை – 044 – 2441 0477.

காஞ்சிபுரம் மாவட்டம்

05. ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., – 044 – 2722 2084.

06. திருமேற்றளீஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., – 98653 55572, 99945 85006.

07. ஓணகாந்தேஸ்வரர் – ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை – 98944 43108.

08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., – 044-2722 2084.

09. சத்யநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., – 044 – 2723 2327, 2722 1664.

10. திருமாகறலீஸ்வரர் – திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. – 94435 96619.

11. தெய்வநாயகேஸ்வரர் – எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., – 044 – 2769 2412, 94448 65714.

12. வேதபுரீஸ்வரர் – திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ – 044-2627 2430, 2627 2487.

13. கச்சபேஸ்வரர் – திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., – 044 – 2746 4325, 93811 86389.

14. ஞானபுரீஸ்வரர் – திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., – 044 – 2742 0485, 94445 23890.

15. வேதகிரீஸ்வரர் – திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., – 044 – 2744 7139, 94428 11149.

16. ஆட்சிபுரீஸ்வரர் – அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) – 044 – 2752 3019, 98423 09534.

திருவள்ளூர் மாவட்டம்

17. திரிபுராந்தகர் – கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., – 94432 53325.

18. வடாரண்யேஸ்வரர் – திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.

19. வாசீஸ்வரர் – திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., – 98944 86890.

20. ஊன்றீஸ்வரர் – பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., – 044 – 2763 9725,

21. சிவாநந்தீஸ்வரர் – திருக்கண்டலம். சென்னை – பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., – 044 – 2762 9144, 99412 22814.

22. ஆதிபுரீஸ்வரர் – திருவொற்றியூர். – 044 – 2573 3703.

வேலூர் மாவட்டம்

23. வில்வநாதேஸ்வரர் – திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., – 0416-223 6088.

24. மணிகண்டீஸ்வரர் – திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., – 04177 – 248 220, 93454 49339.

25. ஜலநாதீஸ்வரர் – தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., – 04177 – 246 427.

திருவண்ணாமலை மாவட்டம்

26. அண்ணாமலையார் – திருவண்ணாமலை. – 04175 – 252 438.

27. வாலீஸ்வரர் – குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., – 99432 95467.

28. வேதபுரீஸ்வரர் – செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., – 04182 – 224 387.

29. – தாளபுரீஸ்வரர் – திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., – 044 – 2431 2807, 98435 68742.

கடலூர் மாவட்டம்

30. திருமூலநாதர் – சிதம்பரம். (நடராஜர் கோயில்) – 94439 86996.

31. பாசுபதேஸ்வரர் – திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். – 98420 08291, 98433 88552.

32. உச்சிநாதர் – சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., – 98426 24580.

33. பால்வண்ணநாதர் – திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., – 98426 24580.

34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் – ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. – 04144 – 264 845.

35. பதஞ்சலீஸ்வரர் – கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., – 04144 – 208 508, 93457 78863.

36. சவுந்தர்யேஸ்வரர் – திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., – 94425 71039, 94439 06219.

37. அமிர்தகடேஸ்வரர் – மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., – 93456 56982.

38. தீர்த்தபுரீஸ்வரர் – திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., – 04143 – 246 467.

39. பிரளயகாலேஸ்வரர் – பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., – 04143 – 222 788, 98425 64768.

40. நர்த்தன வல்லபேஸ்வரர் – திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., – 04144 – 208 704.

41. திருக்குமாரசாமி – ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) – ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., – 04143 – 243 533, 93606 37784.

42. சிவக்கொழுந்தீஸ்வரர் – தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. – 94434 34024.

43. மங்களபுரீஸ்வரர் – திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., – 94425 85845.

44. வீரட்டானேஸ்வரர் – திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை – 98419 62089.

45. விருத்தகிரீஸ்வரர் – விருத்தாச்சலம். சென்னை – மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., – 04143 – 230 203.

46. சிஷ்டகுருநாதேஸ்வரர் – திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., – 04142 – 248 498, 94448 07393.

47. வாமனபுரீஸ்வரர் – திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., – 04142 – 224 328.

48. பாடலீஸ்வரர் – திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், – 04142 – 236 728.

விழுப்புரம் மாவட்டம்

49. பக்தஜனேஸ்வரர் – திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., – 94861 50804, 04149 – 224 391.

50. சொர்ணகடேஸ்வரர் – நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., – 04149 – 291 786, 94862 82952.

51. வீரட்டேஸ்வரர் – கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., – 93456 60711.

52. அதுல்யநாதேஸ்வரர் – அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., – 99651 44849.

53. மருந்தீசர் – டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., – 04146 – 216 045, 94424 23919.

54. கிருபாபுரீஸ்வரர் – திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., – 93456 60711.

55. சிவலோகநாதர் – கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. – 04146 – 206 700.

56. பனங்காட்டீஸ்வரர் – பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., – 99420 56781.

57. அபிராமேஸ்வரர் – திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., – 04146 – 223 379, 98430 66252.

58. சந்திரமவுலீஸ்வரர் – திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., – 0413 – 268 8949.

59. அரசலீஸ்வரர் – ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 – 235 472.

60. மகாகாளேஸ்வரர் – இரும்பை. புதுச்சேரி – திண்டிவனம் வழியில் 12 கி.மீ., – 0413 – 268 8943, 98435 26601.

நாமக்கல் மாவட்டம்

61. அர்த்தநாரீஸ்வரர் – திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., – 04288 – 255 925, 93642 29181.

ஈரோடு மாவட்டம்

62. சங்கமேஸ்வரர் – பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., – 04256 – 230 192, 98432 48588.

63. மகுடேஸ்வரர், – கொடுமுடி,ஈரோடு – கரூர் ரோட்டில் 47 கி.மீ., – 04204 – 222 375.

திருப்பூர் மாவட்டம்

64. அவிநாசி ஈஸ்வரர் – அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., – 04296 – 273 113, 94431 39503.

65. திருமுருகநாதர் – திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., – 04296 – 273 507.

திருச்சி மாவட்டம்

66. சத்தியவாகீஸ்வரர் – அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., – 0431 – 254 4927.

67. ஆம்ரவனேஸ்வரர் – மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., – 99427 40062, 94866 40260.

68. ஆதிமூலேஸ்வரர் – திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. – 0431 – 246 0455.

69. ஜம்புகேஸ்வரர் – திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., – 0431 – 223 0257.

70. ஞீலிவனேஸ்வரர் – திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., – 0431 – 256 0813.

71. மாற்றுரைவரதர் – திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., – 94436 – 92138.

72. மரகதாசலேஸ்வரர் – ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., – 04326 – 262 744, 94439 50031.

73. பராய்த்துறைநாதர் – திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. – 99408 43571.

74. உஜ்ஜீவநாதர் – உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி – வயலூர் வழியில் 7 கி.மீ., – 94431 50332, 94436 50493.

75. பஞ்சவர்ணேஸ்வரர் – உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் – 0431 – 276 8546, 94439 19091.

76. தாயுமானவர் – திருச்சி. மலைக்கோட்டை – 0431 – 270 4621, 271 0484.

77. எறும்பீஸ்வரர் – திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. – 98429 57568.

78. திருநெடுங்களநாதர் – திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. – 0431 – 252 0126.

அரியலூர் மாவட்டம்

79. வைத்தியநாதசுவாமி – திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., – 04329 -292 890, 97862 05278.

80. ஆலந்துறையார் – கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. – 99438 82368.

கரூர் மாவட்டம்

81. ரத்தினகிரீஸ்வரர் – அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., – 04323 – 245 522.

82. கடம்பவனேஸ்வரர் – குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., – 04323 – 225 228

83. கல்யாண விகிர்தீஸ்வரர் – வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., – 04324 – 262 010, 99435 27792.

84. பசுபதீஸ்வரர் – கரூர் – 04324 – 262 010.

புதுக்கோட்டை மாவட்டம்

85. விருத்தபுரீஸ்வரர் – அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., – 04371 – 239 212

தஞ்சாவூர் மாவட்டம்

86. பசுபதீஸ்வரர் – பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., – 98657 78045. 0435 – 2450 595.

87. அக்னீஸ்வரர் – கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை – 0435 – 247 3737.

88. கோடீஸ்வரர் – திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ., – 94866 70043.

89. பிராணநாதேஸ்வரர் – திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) – 0435 – 247 0480.

90. அருணஜடேஸ்வரர் – திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., – 94431 16322, 0435 – 245 6047.

91. பாலுகந்தநாதர் – திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., – 94421 67104.

92. சத்தியகிரீஸ்வரர் – சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) – 93459 82373, 0435 – 2457 459.

93. யோகநந்தீஸ்வரர் – திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. – 0435 – 200 0679, 94447 47142.

94. கற்கடேஸ்வரர் – திருந்துதேவன்குடி. கும்பகோணம் – சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., – 99940 15871, 0435 – 200 0240.

95. கோடீஸ்வரர் – கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., – 0435 – 245 4421.

96. எழுத்தறிநாதர் – இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., – 96558 64958, 0435 – 200 0157.

97. சாட்சி நாதேஸ்வரர் – திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) – 94446 26632, 0435 – 245 9519.

98. விஜயநாதேஸ்வரர் – திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) – 0435 – 294 1912, 94435 86453.

99. வில்வ வனேஸ்வரர் – திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., – 94435 86453, 96552 61510.

100. தயாநிதீஸ்வரர் – வடகுரங்காடுதுறை. கும்பகோணம் – திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. – 04374 – 240 491, 244 191.

101. ஆபத்சகாயர் – திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் – 04362 – 326 668.

102. ஐயாறப்பர் – திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., – 0436 – 2260 332.

103. நெய்யாடியப்பர் – தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., – 04362 – 260 553.

104. வியாக்ரபுரீஸ்வரர் – திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. – 94434 47826, 94427 29856.

105. செம்மேனிநாதர் – திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., – 04362 – 320 067, 93450 09344.

106. அக்னீஸ்வரர் – திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ., – 94423 47433.

107. ஆத்மநாதேஸ்வரர் – திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., – 04365 – 284 573.

108. புஷ்பவனேஸ்வரர் – தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., – 94865 76529.

109. பிரம்மசிரகண்டீசுவரர் – கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., – 04362 – 261 100, 262 222.

110. சோற்றுத்துறை நாதர் – தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., – 99438 84377.

111. வேதபுரீஸ்வரர் – திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., – 93451 04187, 04362 – 262 334.

112. பசுபதீஸ்வரர் – பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., – 97914 82102.

113. வசிஷ்டேஸ்வரர் – தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., – 04362 – 252 858.

114. கரவாகேஸ்வரர் – கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் – கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,

115. முல்லைவனநாதர் – திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., – 04374 – 273 502, 273 423.

116. பாலைவனேஸ்வரர் – பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., – 94435 24410.

117. கல்யாண சுந்தரேஸ்வரர் – நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., – 93631 41676.

118. பசுபதீஸ்வரர் – ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., – 94863 03484.

119. சிவக்கொழுந்தீசர் – திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., – 94436 78575, 04374 – 267 237.

120. பட்டீஸ்வரர் – பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., – 0435 – 241 6976.

121. சோமநாதர் – கீழபழையாறை வடதளி.கும்பகோணம் – ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் – 98945 69543.

122. திருவலஞ்சுழிநாதர் – திருவலஞ்சுழி.சுவாமிமலையில் இருந்து 1கி.மீ., – 0435 – 245 4421, 245 4026.

123. கும்பேஸ்வரர் – கும்பகோணம். – 0435 – 242 0276.

124. நாகேஸ்வரர் – கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே – 0435 – 243 0386.

125. சோமேஸ்வரர் – கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை – 0435 – 243 0349.

126. நாகநாதர் – திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., – 94434 89839, 0435 – 246 3354,

127. மகாலிங்க சுவாமி – திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 – 246 0660.

128. ஆபத்சகாயேஸ்வரர் – ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., – 94434 63119, 94424 25809.

129. நீலகண்டேஸ்வரர் – திருநீலக்குடி. கும்பகோணம் – காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., – 94428 61634. 0435 – 246 0660.

130. கோழம்பநாதர் – திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., – 04364 – 232 055, 232 005.

131. சிவானந்தேஸ்வரர் – திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., – 94436 50826, 0435 – 244 8138.

132. சித்தநாதேஸ்வரர் – திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., – 0435 – 246 7343, 246 7219.

133. படிக்காசுநாதர் – அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., – 99431 78294, 0435 – 246 6939.

134. அமிர்தகடேஸ்வரர் – சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., – 98653 06840, 0435 – 241 4453.

135. சிவகுருநாதசுவாமி – சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., – 98653 06840.

136. சற்குணலிங்கேஸ்வரர் – கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் – மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., – 99435 23852

137. சாரபரமேஸ்வரர் – திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,

138. ஞானபரமேஸ்வரர் – திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., – 94439 59839.

139. ஆபத்சகாயேஸ்வரர் – ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., – 04374 – 269 407.

140. பாஸ்கரேஸ்வரர் – பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) – 0437 – 256 910.

திருவாரூர் மாவட்டம்

141. தியாகராஜர் – திருவாரூர். – 04366 – 242 343.

142. அசலேஸ்வரர் – திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் – 04366 – 242 343.

143. தூவாய் நாதர் – திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி – 99425 40479, 04366 – 240 646.

144. பதஞ்சலி மனோகரர் – விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., – 98947 81778, 94894 79896.

145. கரவீரநாதர் – கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் – 04366 – 241 978.

146. வீரட்டானேஸ்வரர் – திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். – 94439 21146.

147. வர்த்தமானீஸ்வரர் – திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., – 94431 13025, 04366 – 292 300.

148. ராமநாதசுவாமி – திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) – 94431 13025, 04366 – 292 300.

149. கணபதீஸ்வரர் – திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) – 94431 13025, 04366 – 270 278.

150. கேடிலியப்பர் – கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. – 04366 – 276 733.

151. தேவபுரீஸ்வரர் – தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., – 94862 78810, 04366 – 276 113.

152. திருநேத்திரநாதர் – திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., – 98658 44677, 04366 – 244 714.

153. பசுபதீஸ்வரர் – திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., – 04366 – 228 033.

154. சவுந்தரேஸ்வரர் – திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., – 04366 – 237 007.

155. ஐராவதீஸ்வரர் – திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) – காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. – 04368 – 261 447.

156. பிரம்மபுரீஸ்வரர் – அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., – 04366 – 238 973.

157. மகாகாளநாதர் – திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. – 94427 66818, 04366 – 291 457.

158. மேகநாதசுவாமி – திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., – 94448 36526, 04366 – 239 170.

159. சகல புவனேஸ்வரர் – திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., – 94448 36526, 04366 – 239 170.

160. முக்தீஸ்வரர் – செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., – 04366 – 238 818, 239 700, 94427 14055.

161. வெண்ணிகரும்பேஸ்வரர் – கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., – 98422 94416.

162. சேஷபுரீஸ்வரர் – திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. – 94439 43665, 0435 – 246 9555.

163. சூஷ்மபுரீஸ்வரர் – செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. – 04366 – 291 646.

164. அபிமுக்தீஸ்வரர் – மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ.,

165. நர்த்தனபுரீஸ்வரர் – திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., – 94435 00235, 04366 – 269 235.

166. கோணேஸ்வரர் – குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., – 94439 59839.

167. சொர்ணபுரீஸ்வரர் – ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., – 04374 – 265 130.

168. பாதாளேஸ்வரர் – அரித்துவாரமங்கலம், கும்பகோணம் – அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., – 94421 75441, 04374 – 264 586

169. சாட்சிநாதர் – அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., – 04374 – 275 441.

170. வீழிநாதேஸ்வரர் – திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., – 04366 – 273 050, 94439 24825148.

171. சதுரங்க வல்லபநாதர் – பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். – 94423 99273.

172. நாகநாதர் – பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., – 93606 85073.

173. பாரிஜாதவனேஸ்வரர் – திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., – 04367 – 279 374.

174. பொன்வைத்த நாதர் – சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) – 94427 67565.

175. மந்திரபுரீஸ்வரர் – கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., – 99420 39494, 04369 – 262 014.

176. சற்குணநாதர் – இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) – 04369 – 240 349.

177. கற்பக நாதர் – கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) – 04369 – 240 632.

178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) – தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., – 98658 44677.

179. கொழுந்தீஸ்வரர் – கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., – 97861 51763, 04367 – 279 781.

180. வண்டுறைநாதர் – திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் – 04367 – 294 640.

181. வில்வாரண்யேஸ்வரர் – திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் – 04366 – 262 239.

182. ஜகதீஸ்வரர் – ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) – 04367 – 237 692.

183. அக்னீஸ்வரர் – திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., – 04369 – 237 454.

184. நெல்லிவனநாதர் – திருநெல்லிக்காவல்.திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., – 04369 – 237 507, 237 438.

185. வெள்ளிமலைநாதர் – திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., – 94443 54461, 04369 – 237 454.

186. கண்ணாயிரநாதர் – திருக்காரவாசல்.திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., – 94424 03391, 04366 – 247 824.

187. நடுதறியப்பர் – கண்ணாப்பூர், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., – 94424 59978, 04365 – 204 144.

188. கைச்சினநாதர் – கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., – 94865 33293

189. ரத்தினபுரீஸ்வரர் – திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) – 94438 06496, 04367 – 237 707.

190. அக்னிபுரீஸ்வரர் – வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., – 0435 – 244 9578

191. சற்குணேஸ்வரர் – கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் – 94429 32942, 04366 – 273 900

192. மதுவனேஸ்வரர் – நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ., – 94426 82346, 99432 09771

193. வாஞ்சிநாதேஸ்வரர் – ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் – 94424 03926, 04366 – 228 305

194. மனத்துணைநாதர் – திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) – 04366 – 205 636

195. கோளிலிநாதர் – திருக்குவளை. திருத்துறைபூண்டி – எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) – 04366 – 245 412

196. வாய்மூர்நாதர் – திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., – 97862 44876

நாகப்பட்டினம் மாவட்டம்

197. சிவலோகத்தியாகர் – ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., – 04364 – 278 272.

198. திருமேனியழகர் – மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., – 04364 – 292 309.

199. முல்லைவனநாதர் – திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., – 94865 24626.

200. சுந்தரேஸ்வரர் – அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., – 93605 77673, 97879 29799.

201. சாயாவனேஸ்வரர் – சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., – 04364 – 260 151

202. பல்லவனேஸ்வரர் – பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., – 94437 19193.

203. சுவேதாரண்யேஸ்வரர் – திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., – 04364 – 256 424

204. ஆரண்யேஸ்வரர் – திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., – 94439 85770, 04364 – 256 273.

205. வெள்ளடைநாதர் – திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., – 92456 12705.

206. சட்டைநாதர் – சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., – 04364 – 270 235.

207. சப்தபுரீஸ்வரர் – திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., – 04364 – 274 175.

208. வைத்தியநாதர் – வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ., – 04364 – 279 423.

209. கண்ணாயிரமுடையார் – குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. – 94422 58085

210. கடைமுடிநாதர் – கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., – 94427 79580, 04364 – 283 261,

211. மகாலட்சுமிபுரீஸ்வரர் – திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., – 94861 41430.

212. சிவலோகநாதர் – திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ., – 94867 17634.

213. சோமநாதர் – நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., – 99436 68084, 04364 – 250 424,

214. ஆபத்சகாயேஸ்வரர் – பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., – 04364 250 758.

215. கல்யாண சுந்தரேஸ்வரர் – திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., – 04364 – 235 462.

216. ஐராவதேஸ்வரர் – மேலத்திருமணஞ்சேரி.குத்தாலத்தில் இருந்து 6 கி.மீ., – 04364 – 235 487.

217. உத்வாகநாதர் – திருமணஞ்சேரி.கும்பகோணத்தில் இருந்து 27 கி.மீ., – 04364 – 235 002.

218. வீரட்டேஸ்வரர் – கொருக்கை.மயிலாடுதுறை- கொண்டல் ரோட்டில் 3 கி.மீ.

219. குற்றம் பொறுத்தநாதர் – தலைஞாயிறு.வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து மணல் மேடு வழியில் 8 கி.மீ. – 04364 – 258 833.

220. குந்தளேஸ்வரர் – திருக்குரக்கா.மயிலாடுதுறையில்இருந்து 13 கி.மீ., – 04364 – 258 785.

221. மாணிக்கவண்ணர் – திருவாளப்புத்தூர்.மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ.- 98425 38954, 04364 – 254 879.

222. திருநீலகண்டேஸ்வரர் – இலுப்பைபட்டு.மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ., (மணல்மேடு அருகில்) – 92456 19738.

223. வைகல்நாதர் – திருவைகல்.கும்பகோணம்-காரைக்கால்ரோட்டில் 18 கி.மீ. தூரத்திலுள்ள பழிஞ்சநல்லூர் அருகில் – 0435 – 246 5616.

224. உமாமகேஸ்வரர் – கோனேரிராஜபுரம்.கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள எஸ். புதூர் அருகில் – 0435 – 244 9830, 244 9800.

225. கோமுக்தீஸ்வரர் – திருவாவடுதுறை.மயிலாடுதுறை – கும்பகோணம் வழியில் 16 கி.மீ., – 04364 – 232 055.

226. உத்தவேதீஸ்வரர் – குத்தாலம். மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ., – 04364 – 235 225

227. வேதபுரீஸ்வரர் – தேரழுந்தூர். மயிலாடுதுறை- கும்பகோணம் வழியில் 10 கி.மீ., – 04364 – 237 650.

228. மாயூரநாதர் – மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., – 04364 – 222 345

229. உச்சிரவனேஸ்வரர் – திருவிளநகர்.மயிலாடுதுறை-செம்பொனார்கோவில் வழியில் 7 கி.மீ., – 04364 – 282 129.

230. வீரட்டேஸ்வரர் – கீழப்பரசலூர்(திருப்பறியலூர்). மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ., – 04364- 205 555.

231. சுவர்ணபுரீஸ்வரர்- செம்பொனார்கோவில்.மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரோட்டில் 8 கி.மீ., – 99437 97974.

232. நற்றுணையப்பர் – புஞ்சை.மயிலாடுதுறை-பூம்புகார் வழியில் 10 கி.மீ. – 04364 – 283 188

233. வலம்புர நாதர் – மேலப்பெரும்பள்ளம்.பூம்புகாரிலிருந்து 7 கி.மீ., – 04364 – 200 890, 200 685.

234. சங்காரண்யேஸ்வரர் – தலைச்சங்காடு. மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. – 04364 – 280 757.

235. தான்தோன்றியப்பர் – ஆக்கூர்.மயிலாடுதுறை- நாகப்பட்டினம் வழியில் 16 கி.மீ., – 98658 09768, 97877 09742.

236. அமிர்தகடேஸ்வரர் – (அபிராமியம்மன் கோயில்).திருக்கடையூர் மயிலாடுதுறை-நாகப்பட்டினம் ரோட்டில், 26 கி.மீ., – 04364 – 287 429.

237. பிரம்மபுரீஸ்வரர் – திருமயானம். திருக்கடையூர் அபிராமி கோயிலில் இருந்து 1 கி.மீ., – 94420 12133, 04364 – 287 429.

238. சரண்யபுரீஸ்வரர் – திருப்புகலூர். நாகப்பட்டினம் – திருவாரூர் ரோட்டில் 22 கி.மீ., – 94431 13025, 04366-237 198.

239. திருப்பயற்றுநாதர் – திருப்பயத்தங்குடி. திருவாரூர்- திருமருகல் வழியில் 10 கி.மீ., – 98658 44677, 04366- 272 423.

240. ரத்தினகிரீசுவரர் – திருமருகல். நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ., – 04366- 270 823.

241. அயவந்தீஸ்வரர் – சீயாத்தமங்கை. நாகப்பட்டினம்- திருமருகல் ரோடு(நாகூர் வழி) – 04366-270 073.

242. காயாரோகணேஸ்வரர் – நாகப்பட்டினம். பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., – 98945 01319, 04365- 242 844.

243. நவநீதேஸ்வரர் – சிக்கல். நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ., – 04365- 245 452, 245 350.

244. திருமறைக்காடர் – வேதாரண்யம். நாகபட்டினத்திலிருந்து 63 கி.மீ., – 04369- 250 238

245. அகஸ்தீஸ்வரர் – அகஸ்தியன்பள்ளி.வேதாரண்யம்- கோடியக்கரை வழியில் 2 கி.மீ., – 04369- 250 012

246. கோடிக்குழகர் – கோடியக்கரை.வேதாரண்யத்திலிருந்து 9 கி.மீ., – 04369- 272 470

மதுரை மாவட்டம்

247. மீனாட்சி சுந்தரேஸ்வரர் – மதுரை – 0452-234 9868.

248. திருவாப்புடையார் – செல்லூர். மதுரை கோரிப்பாளையம் அருகில் – 0452- 234 9868.

249. சத்தியகிரீஸ்வரர் – திருப்பரங்குன்றம்(முருகன் கோயில்)மதுரையில் இருந்து 7 கி.மீ., – 0452- 248 2248.

250. ஏடகநாதேஸ்வரர் – திருவேடகம். மதுரை- சோழவந்தான் ரோட்டில் 17 கி.மீ. – 04543-259 311.

ராமநாதபுரம் மாவட்டம்

251. ராமநாதசுவாமி – ராமேஸ்வரம். மதுரையில் இருந்து 200 கி.மீ., – 04573 – 221 223.

252. ஆதிரத்தினேஸ்வரர் – திருவாடானை. மதுரை- தொண்டி வழியில் 100 கி.மீ., – 04561 – 254 533.

சிவகங்கை மாவட்டம்

253. கொடுங்குன்றநாதர் – பிரான்மலை.மதுரை- பொன்னமராவதி வழியில் 65 கி.மீ., – 94431 91300, 04577- 246 170.

254. திருத்தளி நாதர் – திருப்புத்தூர். மதுரை-தஞ்சாவூர் வழியில் 70 கி.மீ. – 94420 47593.

255. சொர்ணகாளீஸ்வரர் – காளையார் கோவில்.மதுரை- தொண்டி வழியில் 70 கி.மீ., – 94862 12371, 04575- 232 516.

256. புஷ்பவனேஸ்வரர் – திருப்புவனம். மதுரை-ராமேஸ்வரம் ரோட்டில் 18 கி.மீ., – 04575- 265 082, 265 084.

விருதுநகர் மாவட்டம்

257. திருமேனிநாதர் – திருச்சுழி. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழி 35 கி.மீ., – 04566 – 282 644.

திருநெல்வேலி மாவட்டம்

258. நெல்லையப்பர் – திருநெல்வேலி. மதுரையிலிருந்து 152 கி.மீ., – 0462 – 233 9910.

259. குற்றாலநாதர் – குற்றாலம். மதுரையிலிருந்து 155 கி.மீ., 04633 – 283 138, 210 138.

புதுச்சேரி

260. தர்ப்பாரண்யேஸ்வரர் – திருநள்ளாறு. மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ., – 04368 – 236 530, 236 504.

261. சுந்தரேஸ்வரர் – திருவேட்டக்குடி.காரைக்கால் – பொறையார் வழியில் 6 கி.மீ. – 98940 51753, 04368 – 265 693.

262. பார்வதீஸ்வரர் – திருத்தெளிச்சேரி. காரைக்கால் பஸ்ஸ்டாண்ட் பின்புறம் – 04368 – 221 009.

263. யாழ்மூரிநாதர் – தருமபுரம்.காரைக்காலில் இருந்து 4 கி.மீ. – 04368 – 226 616.

264. வடுகீஸ்வரர் – திருவண்டார்கோயில். புதுச்சேரியிலிருந்து 20 கி.மீ., – 99941 90417.

கேரளா

265. மகாதேவர் – திருவஞ்சிக்குளம்.திருச்சூரிலிருந்து 38 கி.மீ., – 0480 – 281 2061

கர்நாடகா

266. மல்லிகார்ஜுனர் – ஸ்ரீசைலம்.சென்னையில் இருந்து ஓங்கோல், ஓங்கோலில் இருந்து 80 கி.மீ., – 08524 – 288 881.

ஆந்திரா

267. மகாபலேஸ்வரர் – திருக்கோகர்ணம்.மங்களூருவிலிருந்து உடுப்பி வழி 230 கி.மீ., – 08386 – 256 167, 257 167

268. காளத்தியப்பர் – காளஹஸ்தி, திருப்பதியில் இருந்து 30 கி.மீ., – 08578 – 222 240.

உத்தரகண்ட்

269. அருள்மன்ன நாயகர் – கவுரிகுண்ட் (அநேகதங்காவதம்) ரிஷிகேஷிலிருந்து 84 கி.மீ.,

270. கேதாரநாதர் – கேதர்நாத். ஹரித்துவாரிலிருந்து 253 கி.மீ.,

நேபாளம்

271. நீலாச்சல நாதர் – இந்திரநீல பருப்பதம். காட்மாண்டு

திபெத்

272. கைலாயநாதர் – கைலாஷ்(இமயமலை)

இலங்கை

273. திருக்கேதீச்வரர் – மாதோட்ட நகரம், தலைமன்னார்.
274. கோணேஸ்வரர் – திரிகோணமலை.

பிறசேர்க்கை கோயில்கள் தேவார பாடல் பெற்ற தலங்கள் 274 ஆக இருந்தது.

சமீபத்திய ஆய்வின்படி, மேலும் இரண்டு கோயில்கள் பாடல் பெற்ற தலங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

275. அகஸ்தீஸ்வரர் – கிளியனூர். திண்டிவனம்- புதுச்சேரி வழியில் 18 கி.மீ., – 94427 86709.

276. புண்ணியகோடியப்பர் – திருவிடைவாசல். தஞ்சாவூர்-திருவாரூர் ரோட்டில் (கொரடாச்சேரி வழி) 45 கி.மீ., – 94433 32853, 04366-232 853.

images (82)

10 TYPES OF PURIFICATION :

1. Body gets purified…
by WATER & YOGA

2. Breath gets purified…
by PRANAYAAM

3. Mind gets purified…
by MEDITATION

4. Intellect gets purified…
by Spiritual KNOWLEDGE

5. Memory gets purified…
by MANAN & CHINTAN

6. Ego gets purified…
by SEVA (SERVICE)

7. Self gets purified…
by SILENCE (MAUN)

8. Food gets purified…
by POSITIVE THOUGHTS
(While cooking & eating)

9. Wealth gets purified…
by GIVING/ DONATING

10.Feelings gets purified…
by LOVE N SURRENDER⁠⁠⁠⁠

images (52)

நீயே எடுத்துக்கோ!

ஸுமார் 50 வர்ஷங்களுக்கு முன் நடந்த அருமையான ஸம்பவம்.

ஒரு ஐப்பஸி மாஸத்தில், ஸ்ரீமடத்தில் பெரியவா பக்தர்களுடன் ஏதோ பேசிக்கொண்டும், விஜாரித்துக் கொண்டும் தர்ஶனம் குடுத்துக் கொண்டிருந்தார். பெரியவாளுக்கு முன் மூங்கில் தட்டுகளிலும், தாம்பாளங்களிலும் அநேகவிதமான பழங்கள் கொட்டிக் கிடந்தன.

அந்தக் கூட்டத்தில், ஒரு மூன்று வயஸுப் பெண்குழந்தை ஸந்தோஷமாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. பெண் குழந்தைகளுக்கு எத்தனைதான் விதவிதமாக குட்டையான கவுன், ஸ்கர்ட் என்று போட்டாலும், தழைய தழைய பாவாடை கட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடம், ஏனோ ஒருவித தெய்வீகக்களை, தானாகவே வந்துவிடும். அன்று அந்தக் குழந்தையும், பட்டுப் பாவாடை கட்டிக் கொண்டு பார்க்க அழகாக இருந்தது.

பெரியவா அந்தக் குழந்தையை அருகில் அழைத்தார். பெரியவாளிடம் ஓடியது….

“என்ன உம்மாச்சி தாத்தா?…”

மழலையில் கேட்டது.

தன் முன்னால் இருந்த தட்டுக்களை அதனிடம் காட்டி, அதுக்கு choice வேற குடுத்தார்….

“இந்தா….இதுலேந்து ஒனக்கு என்ன பழம் வேணுமோ, அதை நீயே, ஒன்னோட குஞ்சுக்கையால எடுத்துக்கோ”

அந்தக் குட்டிக்கு படு குஷியாகி விட்டது!

ஒவ்வொரு தட்டாக inspect பண்ண ஆரம்பித்தது…..

அன்னாஸி, ஆப்பிள், ஆரஞ்சு, த்ராக்ஷை, வாழைப்பழம் எல்லாம் கொட்டிக் கிடந்தது.

குழந்தை இல்லையா? குழந்தை மாதிரிதானே கேட்கும்?

இதுவும் கேட்டது………

அங்கே இல்லாத ஒரு பழத்தை!

“உம்மாச்சி தாத்தா…! எனக்கு மாம்பழம் வேணும்… காணுமே!…”

மாம்பழம் எங்கிருந்து வரும்? மாவடு ஸீஸன் கூட ஆரம்பிக்கவில்லை!

“மாம்பழம் அதுல இல்லியா?….”

கொஞ்சநேரம் மௌனமாக இருந்தார். பிறகு வேதபுரி மாமாவைக் கூப்பிட்டார்….

“வேதபுரி! உள்ள போய், மேட்டூர் ஸ்வாமிகிட்ட எதாவுது மாம்பழ வத்தல் மாதிரி இருக்கா பாரு!….”

வேதபுரி மாமா சென்றதும், கண்ணை மூடிக்கொண்டு த்யானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

ஸரியாக அந்த ஸமயத்தில், கூட்டத்தை விலக்கிக் கொண்டு, ஆந்த்ராவிலிருந்து ரெண்டு பேர், ஆளுக்கொரு பழத்தட்டுடன் வந்தார்கள்.

பெரியவா முன் பழத்தட்டை கீழே வைத்துவிட்டு, நமஸ்காரம் பண்ணினார்கள்.

குழந்தை அவர்கள் வைத்த தட்டைப் பார்த்தது.

“உம்மாச்சி தாத்தா..! மாம்பழம்!…”

அழகாக குண்டு குண்டு மாம்பழங்கள் மேலாக இருந்தது. பெரியவா கண்களைத் திறந்தார்.

அந்தக் குழந்தையிடம் மாம்பழத்தைக் காட்டி, “எடுத்துக்கோ!…” என்றதும், அழகாக ஒரே ஒரு மாம்பழத்தை இரண்டு கைகளிலும் தூக்க முடியாமல் தூக்கி எடுத்துக் கொண்டது.

முகமெல்லாம் ஒரே ஸந்தோஷம்!

வேதபுரி மாமா திரும்பி வந்து பெரியவாளிடம் ” அங்க ஒண்ணுமே இல்ல….” என்று சொல்லிவிட்டு குழந்தையின் பக்கம் திரும்பியவர், அதன் கைகளில் உள்ள குண்டு மாம்பழத்தைப் பார்த்ததும் திகைத்துப் போனார்!

“ஏண்டா ! மாம்பழம் எப்டி வந்துது?…”

தெரியாதவர் போல் பெரியவா அதிஸயமாகக் கேட்டதும், தெரிந்தே, மிக அழகான பதிலை வேதபுரி மாமா கண்களில் கண்ணீரோடு சொன்னார்…….

“பெரியவா நெனச்சேள்! பழம் வந்துது!…”

மாம்பழம் கொண்டு வந்த ஆந்த்ராக்காரர்கள் அதன்பின் அங்கே காணப்படவில்லை!

ஒண்ணுமே தெரியாத சின்னக் குழந்தை மாம்பழம் கேட்பது, அழகாக இருக்கும்.ஆனால் எல்லாம் தெரிந்த பெரிய குழந்தைகளான நாமும், மாம்பழத்தைத்தான் கேட்போம்! அதில் தவறேதும் இல்லை!

அதன் அர்த்தம் அறிந்து இப்படிக் கேட்போமே!

[மா+பழம்] மாமஹாப் பழமான பெரியவாளிடம், ‘மாம்பழ’மான பெரியவாளையே கேட்போம்!

அல்லது….

[மாம்-என்னை, பழம்-பழமை ] “பழமையான, அனாதியான, என்னையே எனக்கு குடு” என்று கேட்டுக் கொண்டே இருப்போம்!

தராமலா போவார்? கட்டாயம் தருவார்.

images (57)

அச்சமின்மையே ஆரோக்கியம்!

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.

பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

அச்சமின்மையே ஆரோக்கியம்!

10

மறுபிறப்பு அறுக்கும் சம்பந்தரின் மணக்கோலத் தலம்

திருஞான சம்பந்தருக்கு உமையின் முலைப்பால் அருந்தியவரென்ற பெருமை உண்டு. அவருக்கு ஆச்சாள்புரத்தில் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தன்று திருமணம் நடை பெற்றது. இத்திருக்கோவில் அமைந்துள்ள தலத்துக்கு சிவலோகம், முக்திபுரம், அணவைநல்லூர், திருநல்லூர் பெருமணம், ஆச்சாள்புரம், ஆச்சாரியாள்புரம், ஆயாள்புரம் என்ற பெயர்களும் உண்டு.

அங்கு எழுந்தருளியுள்ள இறைவன் சிவலோக தியாகேசர், சிவலோக தியாகராசர், திருப்பெருமணமுடைய மகாதேவர் என்ற பெயர்களில் வழங்கப்படுகிறார். அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை, நங்கை உமைநாயகி, விபூதி கல்யாணி, சுவேத விபூதி நாயகி என்ற பெயர்கள் உண்டு.

திருஞான சம்பந்தர் சைவம் தழைக்கவும் உலகம் உய்யவும் கந்தனின் அவதாரமாக சீர்காழித் திருத்தலத்தில் அவதரித்தார். அங்கு அம்பிகையால் ஞானப்பால் ஊட்டப்பட்டு சிவஞானம் பெற்றார். இறைவனின் அருளால் அடியார்களுடன் பல்வேறு சிவத்தலங்கள் சென்று பதிகம் பாடினார். சிவபெருமான் கையாலேயே பொற்கிழியும் படிக்காசும் பெற்றார்.

நஞ்சினால் இறந்த வணிகனை பதிகம் பாடி உயிர்ப்பித்தார். திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யத்தில் அப்பர் பெருமானுடன் சேர்ந்து, அத்தலத்தின் கோவில் கதவை திறக்கவும் அடைக்கவும் செய்தார். பாண்டிய நாட்டில் சமணர்களை வாதத்தில் வென்றார். திருமயிலையில் குடத்தில் உள்ள எலும்பை பூம்பாவையாக உயிர்ப்பித்தார். இப்படியாக பல அற்புதங்களை நிகழ்த்தியவர் திருஞான சம்பந்தர்.

தந்தை சிவபாத இருதயர் தன் மகன் திருமண வயதை எட்டிவிட்டதை உணர்ந்தார். சீர்காழியிலிருந்து எட்டு மைல் தொலைவிலுள்ள ஆச்சாள்புரத்தில் வசித்த நம்பியாண்டார் நம்பியின் பெண் தோத்திரப் பூர்ணாம்பிகை சம்பந்தருக்கு பொருத்தமானவளாக இருப்பாள் என அறிந்து, நம்பியிடம் பேசி திருமணத்துக்கு நிச்சயித்தார். வைகாசி மாதம் மூல நட்சத்திரத் தன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஈசனிடமும் இறைப்பணியிலும் நாட்டங்கொண்ட சம்பந்தருக்கு இல்லற வாழ்வை ஏற்பது உவப்பானதாக இல்லை. எனினும் தந்தைக்காக உடன்பட்டார்.

திருமண நாளும் வந்தது. உற்றார் – உறவினரோடு விண்ணுலகின் தேவர்களும் சம்பந்தரின் திருமணக் கோலம் காண வந்தனர். மணமகள் வீட்டருகே இருந்த சிவலோக தியாகேசர் ஆலயத்தில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தோத்திரப் பூர்ணாம்பிகையின் கரம்பிடித்தார் சம்பந்தர். திருமணத்திற்குப் பின்னுள்ள சடங்குகள் நடந்தேறிக் கொண்டிருக்கும்போது சம்பந்தர் மூலவரைப் பார்த்தார்.

“இறைவா! உன் பணியாற்றவே பிறந்த என்னை இப்படி இல்லற பந்தத்தில் இழுத்து விட்டுவிட்டாயே” எனப் புலம்பினார். “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்ற திருப்பதிகம் பாடி உருகினார். அப்போது சிவபிரான் உமையுடன் ரிஷப வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி கொடுத்தார். “கலங்காதே சம்பந்தா, உனக்கு என்ன வேண்டும்?” என ஈசன் கேட்டார்.

அதற்கு சம்பந்தர், “இறைவா, என் உற்றார் – உறவினர்கள், என் திருமணம் காணவந்தோர், என் மனைவி உட்பட அனைவருக்கும் வீடுபேறு அருளவேண்டும்” என வேண்டினார். “அப்படியே ஆகட்டும்” என்று அருள்புரிந்தார் ஈசன்.

சம்பந்தரின் திருமணத்தைக் காண்பதே பெரும் புண்ணியம்! அத்துடன் ஈசனைக் கண்ட புண்ணியமும் கிடைத்ததை எண்ணி அனைவரும் நெக்குருகி நின்றபோது, இறைவன் ஜோதி ரூபமாக மாறி அனைவரையும் தமக்குள் ஆட்கொண்டார். இறைவனே நேரில் தோன்றி வரமளிக்கும்போது தனக்கென வரம் கேளாமல் “எல்லாருக்கும் பொதுவாய்” வரம் கேட்கும் உயர்ந்த பண்பு சம்பந்தரைப் போன்ற பெரியோர்க்கன்றி வேறு யாருக்கு வரும்!

பொதுவாக எந்த ஆலயத்திலும் உற்சவரை கருவறைக்குள் எடுத்துச் செல்ல மாட்டார்கள். ஆனால் இங்கு திருஞான சம்பந்தரின் திருமணம் முடிந்தபின், சம்பந்தரின் உற்சவ மூர்த்தியை கருவறைக்குள் கொண்டு சென்று மூலவர் காலடியில் வைப்பர். பின் மிகப்பெரிய கற்பூரக் கட்டியை ஏற்றி தீபாராதனை செய்வர். அப்போது சம்பந்தர் ஜோதியில் கலப்பதாக ஐதீகம். இக்காட்சியைக் காண கண்கோடி வேண்டும். இதைக் காண்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்பது ஐதீகம்.

இத்திருக்கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தில் சம்பந்தர் தோத்திரப் பூர்ணாம்பிகையுடன் மணக்கோலத்தில் காட்சிதரும் சிலைகள் உள்ளன. இங்கு அம்பிகை சந்நிதியில் குங்குமத்துக்கு பதில் திருநீறு பிரசாதமாகத் தரப்படும். அம்மன் சந்நிதியில் திருநீறு தரப்படுவது இந்தக் கோவிலில் மட்டும் தான். இங்கு எழுந்தருளியுள்ள அம்மன் பெயர் திருவெண்ணீற்று உமையம்மை என்று அழைக்கப்படுவது இதன் பொருட்டே.

ஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம், நமச்சிவாய திருப்பதிகம், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் தலபுராணம், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் திருவெண்ணீற்று உமை பிள்ளைத் தமிழ், தருமபுர ஆதீன தலவரலாறு ஆகிய நூல்களில் ஆச்சாள்புரமும் அதன் சிறப்பும் இடம் பெற்றுள்ளன. சம்பந்தர் திருமணமும், சிவஜோதி தரிசனமும் கண்டு பிறவிப் பிணி நீங்கி பேரின்பம் பெறுவோம்!

சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 5 கி. மி. சென்று இந்த சிவஸ்தலம் அடையலாம். இதே சாலையில் மேலும் 6 கி.மீ. செல்ல மயேந்திரப்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. சிதம்பரம், சீர்காழியில் இருந்து மயேந்திரப்பள்ளி செல்லும் நகரப் பேருந்துகள் ஆச்சாள்புரம் வழியாகச் செல்கின்றன.

blogger-image--1068482016

தாய்மையை போற்றுவோம்

பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.

உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது,

அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது,

வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.

குழந்தை :
இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

கடவுள் :
குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்

குழந்தை :
நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்

கடவுள் :
இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா

குழந்தை :
என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.

கடவுள் :
கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.

குழந்தை :
மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.

கடவுள் :
அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத்ப் தேவையில்லை.

குழந்தை :
(அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.

கடவுள் :
(மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

குழந்தை :
உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.

கடவுள் :
வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.

குழந்தை:
(மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.

கடவுள் :
(குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.
உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின

குழந்தை :
(மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்

கடவுள் :
குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை
நீ
அம்மா
என்று
அழைப்பாய்.

கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.

குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது….