இந்த கதை சிரிக்க மட்டுமல்ல….

ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.
ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது.

நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.

பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.

அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.

கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..?
என்ற குழப்பம் உண்டாகியது..

எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று..
விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான்.

மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.

கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்நன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்..

நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு..
பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து
அனுப்பினார்.

தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது.
தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..
மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.

கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.
கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே..

கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.

கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்..
நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.

அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..

ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்..
அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.

கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.
அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்..
என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..
ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று..
மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..
மாநில அமைச்சரிடம் இருந்து
மாவட்ட கலெக்டருக்கு வந்து..
மாவட்ட கலெக்டரிடமிருந்து
தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து
விஏஓக்கு வந்து..
விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது

ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது

உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம் அமெரிக்கா நாட்டில் உள்ள சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை

ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஆனால் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்

பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார் ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.

இளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும் சரியான திரைப்படங்கள் அமையாமலும் தடுமாறிய விக்ரமிற்கு 34 வது வயதில் தான் சேது படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது

24 வயதில் திருமணம் செய்த ஒருவர் தனது 30 வது வயதில் இறந்தார், தனது 40 வயதில் திருமணம் செய்த அவர் தற்போது 62 வயதில் உடல் நலத்துடன் உள்ளார், தனது மகளுக்கு தெம்பாக வரன் பார்த்து வருகிறார்

எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள். உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்.

யார் கண்டது, அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று, இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். எனவே எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம். இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.
தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது

Continue Praying

This is a testimony written by a doctor who worked in Africa.

One night I had worked hard to help a mother in the labor ward; but in spite of all we could do, she died, leaving us with a tiny, premature baby and a crying two-year-old daughter. We would have difficulty keeping the baby alive; as we had no incubator (we had no electricity to run an incubator). We also had no special feeding facilities.

Although we lived on the equator, nights were often chilly with treacherous drafts. One student midwife went for the box we had for such babies and the cotton wool that the baby would be wrapped in.

Another went to stoke up the fire and fill a hot water bottle. She came back shortly in distress to tell me that in filling the bottle, it had burst (rubber perishes easily in tropical climates). “And it is our last hot water bottle!” she exclaimed. As in the West, it is no good crying over spilled milk, so in Central Africa it might be considered no good crying over burst water bottles. They do not grow on trees, and there are no drugstores down forest pathways.

“All right,” I said, “put the baby as near the fire as you safely can, and sleep between the baby and the door to keep it free from drafts. Your job is to keep the baby warm.”

The following noon, as I did most days, I went to have prayers with any of the orphanage children who chose to gather with me. I gave the youngsters various suggestions of things to pray about and told them about the tiny baby. I explained our problem about keeping the baby warm enough, mentioning the hot water bottle, and that the baby could so easily die if it got chills. I also told them of the two-year-old sister, crying because her mother had died.

During prayer time, one ten -year-old girl, Ruth, prayed with the usual blunt conciseness of our African children. “Please, God” she prayed, “Send us a hot water bottle today. It’ll be no good tomorrow, God, as the baby will be dead, so please send it this afternoon.”

While I gasped inwardly at the audacity of the prayer, she added, “And while You are about it, would You please send a dolly for the little girl so she’ll know You really love her?”

As often with children’s prayers, I was put on the spot. Could I honestly say “Amen?” I just did not believe that God could do this.

Oh, yes, I know that He can do everything; the Bible says so. But there are limits, aren’t there? The only way God could answer this particular prayer would be by sending me a parcel from the homeland. I had been in Africa for almost four years at that time, and I had never, ever, received a parcel from home. Anyway, if anyone did send me a parcel, who would put in a hot water bottle? I lived on the equator!

Halfway through the afternoon, while I was teaching in the nurses’ training school, a message was sent that there was a car at my front door. By the time I reached home, the car had gone, but there on the verandah was a large 22-pound parcel. I felt tears pricking my eyes. I could not open the parcel alone, so I sent for the orphanage children. Together we pulled off the string, carefully undoing each knot. We folded the paper, taking care not to tear it unduly. Excitement was mounting. Some thirty or forty pairs of eyes were focused on the large cardboard box. From the top, I lifted out brightly-colored, knitted jerseys. Eyes sparkled as I gave them out. Then there were the knitted bandages for the leprosy patients, and the children looked a little bored. Then came a box of mixed raisins and sultanas – that would make a batch of buns for the weekend.

Then, as I put my hand in again, I felt the…..could it really be?

I grasped it and pulled it out. Yes, a brand new, rubber hot water bottle. I cried. I had not asked God to send it; I had not truly believed that He could.

Ruth was in the front row of the children. She rushed forward, crying out, “If God has sent the bottle, He must have sent the dolly, too!”

Rummaging down to the bottom of the box, she pulled out the small, beautifully-dressed dolly. Her eyes shone! She had never doubted! Looking up at me, she asked, “Can I go over with you and give this dolly to that little girl, so she’ll know that Jesus really loves her?”

“Of course,” I replied!

That parcel had been on the way for five whole months, packed up by my former Sunday school class, whose leader had heard and obeyed God’s prompting to send a hot water bottle, even to the equator.

And one of the girls had put in a dolly for an African child – five months before, in answer to the believing prayer of a ten-year-old to bring it “that afternoon.”

“Before they call, I will answer.” (Isaiah 65:24)

When you receive this, say a prayer. That’s all I ask. No strings attached. Then just send it on to whomever you want to – but do send it on.
Prayer is one of the best free gifts we receive. There is no cost, but a lot of rewards. Let’s continue praying for one another

பே ரா சை

ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)

கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது.

அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான். இந்த நோட்டைக் கண்டு, ‘,இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல’ என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான். அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி – ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். சந்தோஷமாக வீடு திரும்பினான்.

மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான்.

பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள்.
மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான்.
99 நோட்டுகள்தான்.
வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே….
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இங்கே பக்கத்தில் எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்……………

அந்த ஒற்றை பத்துரூபாயைத்
தேடினான்…. தேடினான்…. தேடினான்….
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான் ——–

–என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் பூஜ்ய குருதேவ் அவர்கள்.

பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான்.

990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்.

கருத்து : நம்மில் பலர் இப்படித்தான்
கிடைத்தவைகளை அனுபவிக்கத்
தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி
அலைந்து உடலும் மனமும் சோர்ந்து
அல்லலுறுகிறோம் ! ? !

சிந்திக்க சிறகடிக்க

ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ….

ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்

செல்போன்ல பட்டன் பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம தான்…!

கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளா தான் இருக்கும்.

மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்ம தான் .

கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாத்தான் இருக்கும்.

காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.

நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

10th 12th ரிசல்ட் பேப்பர்ல பார்த்த கடைசி தலைமுறை நாம தான்

கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுறை நாம தான்

ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.

சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.

போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்

ஜவ்வு மிட்டாயில் வாட்ச் கட்டினது நாம தான்

நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,

கோனார் தமிழ் உரை, வெற்றி அறிவியல் உரை
இதெல்லாம் போச்சு.

நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி cfc பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்…

5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,

மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாம தான்

இதையெல்லாம் படிக்கும் போது சிறுதுளி கண்ணில் எட்டிப் பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.

அற்புதமான வாழ்க்கை போதனை…..

இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,

வாழ்வென்பது உயிர் உள்ளவரை………!!!

தேவைக்கு செலவிடு……..

அனுபவிக்க தகுந்தன அனுபவி……

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்……

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை……

போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை……

ஆகவே…….அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே…

உயிர் பிரிய தான் வாழ்வு…… ஒரு நாள் பிரியும்…..

சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு……

உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே…..

உன் குழந்தைகளை பேணு……

அவர்களிடம் அன்பாய் இரு…….

அவ்வப்போது பரிசுகள் அளி……

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே……..

அடிமையாகவும் ஆகாதே………

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்…….!!!

அதைப்போல

பெற்றோரை மதிக்காத குழந்தைகள்

உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்……

உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக் கொள்ளலாம்-
பொறுத்து கொள்.

அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,
கடமை ,அன்பை அறியார்

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.

இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,

ஆனால்……
நிலைமையை அறிந்து
அளவோடு கொடு

எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின்
கை ஏந்தாதே,

எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
வைத்திராதே

நீ
எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து
காத்திருப்பர்.

எனவே கொடுப்பதை கொடுத்து விடு,
தரவேண்டியதை பிறகு கொடு.

மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே…..!!!

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு…….

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..

நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு…..

நடை பயிற்சி செய்து…..

உடல் நலம் பேணி……

இறை பக்தி கொண்டு……

குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்……

இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்…!!

வாழ்வை கண்டு களி…!!
ரசனையோடு வாழ்…..!!

வாழ்க்கை வாழ்வதற்கே,….!!

மனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல்: ‘பத்மஸ்ரீ ‘வென்று பதிலடி தந்த முதியவர்!

மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மக்களால் கிண்டல் செய்யப்பட்டவர் ‘பத்மஸ்ரீ’ விருதை வென்று அசத்த, இப்போது அவரைக் கிண்டலடித்தவர்கள் மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தில் வசிப்பவர் தாரிப்பள்ளி ராமையா (வயது 70). காலையில் எழுந்ததும் சைக்கிளை எடுத்துக் கொள்வார் ராமையா. சைக்கிள் முழுவதும் விதைகளும், மரக்கன்றுகளும் நிறைந்து காணப்படும். சைக்கிள் போய்கொண்டே இருக்கும். மரங்கள் இல்லாத தரிசு நிலத்தைக் கண்டால் மட்டுமே சைக்கிள் நின்று விடும்.

பின்னர் ராமையா அங்கே சில நாட்கள் முகாமிடுவார். கிராமத்தை, தனது மனைவியைக் கூட மறந்து விடுவார். கையோடு கொண்டு வந்த, மரக்கன்றுகளை குழி தோண்டி நடுவார். பல கிலோ மீட்டர் தொலைவு சைக்கிளிலேயே சென்று அந்த மரக்கன்றுகளுக்காக தண்ணீர் கொண்டு வருவார். அந்த மரக்கன்றுகள் தானாக வளரத் தொடங்கிய பின்னரே அந்த இடத்தை விட்டு ராமையா நகர்வார்.

இப்படி தெலுங்கானா மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடி மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார் ராமையா. அதாவது தெலுங்கானாவில் மூன்றில் ஒருவருக்காக ராமையா மரக்கன்றுகளை நட்டுள்ளார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பல நாட்கள் தனது வீட்டுக்கும் கிராமத்துக்கும் போகாமல் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் ராமையாவுக்கு, அந்த கிராம மக்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா…’ மனநிலை பாதிக்கப்பட்டவர்’.

சதா… மரமும் மரக்கன்றுகளுடனும் திரிந்ததால், கிராம மக்கள் ராமையாவை இப்படித்தான் கருதினர். எப்போதாவது விருதுகள் அதற்கு தகுதியானவர்களைத் தேடி வரும். இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்குரியவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட போது, அதில் தாரிப்பள்ளி ராமையாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இப்போது கிராம மக்கள் ராமையாவை மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர். தன்னலம் கருதாமல் மரக்கன்றுகள் நட்டதற்காக இப்போது ராமையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

ரெட்டிப்பள்ளியில் ஒரு சிறிய வீட்டில்தான் ராமையா வசிக்கின்றார். வீடு முழுவதும் மரக்கன்றுகள் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன. சுற்றுச்சூழலை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பேனர்கள் சுற்றி காணப்படுகிறது. அவரது சைக்கிளும் கூட மரங்கள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளைத் தாங்கிக் கொண்டுதான் அவருடன் பயணிக்கிறது. ராமையா, சைக்கிளில் பயணிக்கும் போது, இவரது கழுத்தைச் சுற்றி, ஸ்கார்ப் போல பேனர் சுற்றப்பட்டிருக்கும். அதில், ‘மரக்கன்றுகளை காப்பாற்றுங்கள்.. உங்களை அது காப்பாற்றும்’ என்றும் எழுதப்பட்டிருக்கும். திருமண வீடு, புதுமனை புது விழா என எந்த விழா நடந்தாலும் ராமையா சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்படுவதும் வழக்கமாக இருக்கும்.

தெலுங்கானா மாநிலத்தையே பசுமையாக மாற்றிக் கொண்டிருக்கும் ராமையா படித்ததோ 10ம் வகுப்பு வரைதான். ஆனாலும் சுற்றுச்சூழல் குறித்து பத்திரிகைகளில் எந்த கட்டுரை வந்தாலும் அதனை சேகரிப்பதும் ராமையாவின் வழக்கம். விருது வென்றது குறித்து ராமையா இவ்வாறு கூறுகிறார்,” பத்மஸ்ரீ விருது வென்றிருப்பது எனது பொறுப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது. இவருக்கு விருதா…? என்று இப்போது பலரும் புருவத்தை உயர்த்துகின்றனர். அப்படியாவது மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொண்டால் நல்லதுதான். என்னைப் பார்த்தாவது மரக்கன்றுகளை நடத் தொடங்குவார்கள். என்னைப் பொறுத்த வரை பூமியில் மரங்கள் இல்லாத பகுதியே இருக்கக் கூடாது. ஒவ்வொரு மரமும் பூமியை காப்பாற்றுவதற்கான அச்சாரம்.. நான் வைத்த, எந்த மரக்கன்றுகளும் வளராமல் போனதில்லை. அப்படி மரக்கன்றுகள் வளராமல் போனால், நான் எனது வாழ்க்கையை இழந்ததற்கு சமம்” என்கிறார்

திருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -53

ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெரும் தெய்வம் ஆனது
ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார்
தூசு பிடித்தவர் தூர் அறிந்தார் களே

இருவினைகட்கு இருப்பிடமாகிய மாயைக்கு அப்புறம் இருப்பவன் வாராத்திருவும் பேராமுதன்மையும் ஒருங்கமைந்த சிவன். அவனே ஈசன் எனப்படுவன். உலகில் பெருந்தெய்வமாவது உருவின் நினைப்பிற்கும் அருவின் நினைப்பிற்கும் காரணமாயுள்ள அருவுருவமேயாகும். அதுவே அருளோன்; அதுவே சதாசிவன்; அதுவே சிவக்கொழுந்து. இவ்வுண்மை யுணர்ந்தவர் அது, இது என்று வேற்றுமைப்படக் கூறார். அங்ஙனமன்றி வேற்றுமைப்படக் கூறுவோர் உண்மை உணரும் நினைப்பிலராவர். அருளால் அகம் புறம் தூய்மை யானோர் உண்மையான முதன்மை மூலத்தை யுணர்ந்தவராவர். அகந்தூய்மை திருவைந்தெழுத்தாலும் புறந்தூய்மை திருவெண்ணீற்றாலும் அமைவன. அது இது: அதுவும் இதுவும் என வேறுபாடும், அதுவே இது என ஒற்றுமையும், அதுவாகிய இது என ஒற்றுமை வேற்றுமை ஆகிய இருமையும் குறியாமல் விளங்கும் பொதுமைப் புணர்ப்பு.

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -53

குறள் 53:
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.
 
பரிமேலழகர் உரை:
இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் – ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் – அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது? (‘மாண்பு’ எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.).
 
Translation:
There is no lack within the house, where wife in worth excels, There is no luck within the house, where wife dishonoured dwells.
Explanation:
If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?.