‘அமைதி’

நாட்ல அப்பப்போ ஏதாவது போட்டிகள் நடத்தி; வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒருமுறை ‘அமைதி’ ன்னா என்ன? அப்படிங்கறத தத்ரூபமான ஓவியமா வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும்னு அறிவிச்சாரு.
இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தாங்க.!

மன்னன் ஒவ்வொரு ஓவியமா பார்வையிட்டுட்டே வந்தான். ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தாங்க.!!

ஒருத்தர் அழகான ஏரியை ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் இருக்கற மாதிரி வரைஞ்சிருந்தாரு. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமா இருந்தது.!!

மற்றொருத்தர் பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களை தத்ரூபமாக வரைஞ்சிருந்தாரு. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றினபடி ஓவியத்தில் பிரதிபலிச்சிருந்தாங்க.!

ஆனா, ஒரே ஒரு ஓவியத்தில் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமா கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்துச்சு. அதுமட்டுமா இடியோட மழை வேற கொட்டிட்டிருந்தது.

சற்று உற்று பார்த்தப்ப நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளோட காணப்பட்டது.!!
“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?” சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்பட்டாரு.!

மன்னர்., ” இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை. கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?” ன்னாரு.

அதுக்கு ஓவியர், ” மன்னா சப்தமும், பிரச்சனையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல …!
இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி.!

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது.!”

“சபாஷ் .. அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்” னு கைதட்டின மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்!!.

ஆக நண்பர்களே., அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித பிரச்சனையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.

ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, ” நிச்சயம் ஒருநாள் விடியும் ” என்று விடாமுயற்சியோட தினசரி உழைச்சிட்டிருக்காங்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி…!

மனைவியை மதிப்போம்! மகிழ்வுடன் வாழ்வோம்!!

மரணம் வரை மனைவி

●ஓர் நாள் இரவு நேரத்தில்
ஒரு ஏழை விவசாயி
தன் வேலைகளை எல்லாம்
முடித்து விட்டு
உறங்கிக் கொண்டிருந்தான்..

●அப்போது அவன் கனவில்
கையில் கரும்பலகையுடன்
கடவுள் வந்தார்..

●”இந்த கரும்பலகையில்,
உனக்கு தெரிந்த முப்பது
உறவுமுறைகளின்
பெயர்களை எழுது” என்றார்..

●அந்த விவசாயும்,
“அப்பா, அம்மா ,
தாத்தா , பாட்டி ,
மனைவி , மகன் , மகள் ,
அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி ,
சித்தப்பா , சித்தி , மாமா , அத்தை ,
காதலி , நண்பன்” என
முப்பது பேர் பெயரை எழுதினான்..

●அப்பொழுது கடவுள்,
“கண்டிப்பாக இதில் நீ
இரண்டு பேர் பெயரை
அழிக்க வேண்டும்.,
நீ யாரை இழக்க முடியும்
என்று நினைக்கிறாயோ,
அந்தப் பெயரை அழி” என்றார்..

●சற்று யோசித்த விவசாயி,
காதலி , நண்பன் என
இரண்டு பேர் பெயரை அழித்தான்..

●கடவுள் மறுபடியும்,
“இன்னும் இரண்டு பேர்
பெயரை அழி” என்றார்..

●விவசாயும்
கொஞ்ச நேரத்தில்,
“மாமா , அத்தை” என
இரண்டு பேர் பெயரை அழித்தான்..

●விவசாயி இப்படியே,
இரண்டு இரண்டு பேர்
பெயராக அழித்தான்..

●கடைசியாக
அப்பா , அம்மா ,
மனைவி , மகன் , மகள் என
இவர்கள் பெயர் மட்டுமே இருந்தது..

●கடவுள்,
“இதிலிருந்தும் இரண்டு பேர் பெயரை
நீக்க வேண்டும்.,
நீ யார் பெயரை நீக்குவாய்?” என்றார்..

●விவசாயி வருத்தத்துடன்
சிறிது நேரம் கழித்து,
அப்பா , அம்மா
பெயரை அழித்தான்..

●கடவுள் மீண்டும்,
“இன்னும் இரண்டு பேர் பெயரை
அழிக்க வேண்டும்” என்றார்..

●கடவுளுக்கு சற்று
எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது..
“அடுத்ததாக இவன் யார் பெயரை
அழிக்கப்போகிறான்?” என்று..

●அப்போது விவசாயி,
மிகுந்த சோகத்துடனும்
மன வேதனையுடனும்
மகன் , மகள் பெயரை அழித்தான்..

●கடைசியாக கரும்பலகையில்,
“மனைவி” பெயர் மட்டும் இருந்தது..

●கடவுள் ஆச்சரியமுடனும்
ஆவலுடனும் கேட்டார்..

●”மகன், மகள் பெயரை அழித்து விட்டு
எதற்காக மனைவி பெயரை
அழிக்கவில்லை?” என்று..

●அதற்கு விவசாயி,
“மகள் எப்படியும்
இன்னொரு வீட்டுக்கு
வாழப் போய் விடுவாள்..

●மகன்,
அவனும் அவனுடைய
மனைவி குழந்தை என வாழ்வான்..

●கடைசி காலம் வரை
என்னோடு வாழக் கூடியவள்
#என்_மனைவி மட்டும் தான்” என்றான்..

●விவசாயின் பதிலைக் கேட்டு
வியந்து போன கடவுள்,
அவன் வேண்டிய வரத்தையெல்லாம்
கொடுத்துவிட்டு சென்றாராம்..

JUST A MINUTE

Self-Surrender:

Self-surrender is nothing but a state of complete resignation to the will of the Master, with total disregard of self. A permanent stay in this condition leads to the beginning of the state of negation. When we surrender ourselves to the great Master, we begin to attract a constant flow of highest divine force from Him. In this state, a man thinks or does only that which his Master’s will ordains.

The Seed:

In our sanstha [system], reality is infused at the first stroke of will, which serves as the seed in the long run. The process is generally set in by one’s Master so that the seed may grow easily and scorching winds may not burn it up. The disciple waters it by constant remembrance, which is the only thing needed on the path of realisation.

Thoughts:

We do not properly understand what effect our activities in the world produce upon the atmosphere of the Godly region. When joined with the inner feelings of the heart, our activities create impressions in the cosmos and they affect the human mind. They grow more and more powerful by the action of the cosmic energy, and the hearts of the people, when hit by them, take in their effect and begin to produce thoughts and more thoughts. In this way we have been spoiling the cosmos ever since our birth. That is the reason why we are never without a thought, even for a moment

Divine Light:

You know, in the olden days, there used to be a custom that when some members of the family were out of the house, they used to leave a candle burning in one of the windows so that should the boy or the girl return late at night, the light would be available to show them the way and beckon them on with love.

Guru as Mother

The conception of a guru as mother is, in my opinion, by far the most appropriate and advantageous to a disciple. A mother is the very embodiment of love and affection. Only a mother’s heart can bear with patience all troubles and miseries caused to her by her son, thinking all the while of trying to provide for her son’s comfort and happiness. The same is the position of the real Master or guru, who is the spiritual mother of the disciple. As such, the guru is always on the lookout for the spiritual welfare of the child, the disciple

Worlds 8 superb sentences

Shakespeare.
Never play with the feelings of others because you may win the game but the risk is that you will surely lose the person for a life time.

Napoleon.
The world suffers a lot. Not because of the violence of bad people, But because of the silence of good people!

Einstein.
I am thankful to all those who said NO to me It’s because of them I did it myself.

Abraham Lincoln.
If friendship is your weakest point then you are the strongest person in the world.

Shakespeare.
Laughing faces do not mean that there is absence of sorrow! But it means that they have the ability to deal with it.

William arthur.
Opportunities are like sunrises, if you wait too long you can miss them.

Hitler.
When you are in the light,
Everything follows you, But when you enter unto the dark, Even your own shadow doesn’t follow you.

Shakespeare.
Coin always makes sound but the currency notes are always silent. So when your value increases keep quiet.

வாசித்ததில் நேசித்தது

A not so well dressed old lady barely above the height of the teller’s counter, handed her bank card to a bank teller and said, “I would like to withdraw $500..”
A quick glance and the bank teller informed her, “For withdrawals less than $5,000, please use the ATM”.
The old lady then asked, “Why?”
The teller irritably told her, “These are rules. Please leave if there is no other matter. There is a queue behind you.”
She then returned the card to the old lady.
The old lady remained silent. But she returned the card to the teller and said, “Please help me withdraw all the money I have.”
The teller was astonished when she checked the account balance.
She nodded her head, leaned down and now directly looking at the old lady said, “My apologies, you have $3.5 billion in your account and our bank does not have so much cash currently. Could you make an appointment and come again tomorrow?”
The old lady then asked, “How much am I able to withdraw now?”
The teller told her, “Any amount up to $300,000.”
The old lady then told the teller that she wanted to withdraw $300,000 from her account.
The teller did so quickly and handed it to the old lady respectfully.
The old lady kept $500 in her bag and asked the teller to deposit the balance of $299,500 back into her account.
The teller was dumbfounded.
Keep in mind rules are as inflexible as we people make it to be.
We can be flexible & thoughtful when the situation requires us to be instead of following the rule book to the last letter ! We are humans with some intelligence after all !!
Keep aside presumptions and prejudices – treat everyone with respect.
Do whats required to be done to the extent possible irrespective of who is on the other side.
Never ever underestimate others esp based on their apearance
… Dont be too quick to judge a book by its cover.

திருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -55

பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்று உடை நந்தி தமர் ஆம்
வயனம் பெறுவீர் அவ் வானவராலே

மேலோதிய முறையின் உண்மைப் பயனை அறிந்து எண்ணுமிடத்து, அயனுடன் மாலும் நாம் தொழும் தன்மையரேயன்றி நமக்கு வேறானவராகார். ஆனால் இவ்வயனும் மாலும் முதற்கண் சிவனே. பின்பு அவனருள் பெற்று முப்பத்திரண்டாம் நிலையாகிய ஆசான் (சுத்த வித்தை) மெய்க்கண் உறையும் வழிப்பேற்றுயிரினத்தவரேயாவர். இவர்களே இருபத்து நான்காம் தத்துவத்தில் உறைகின்ற கட்டுயிராகிய மும்மலத்தயன் மால் இருவரையுந் தொழிற்படுத்தும் முதன்மையினை அருள் ஆணையால் பெற்றவர். கீழுள்ள. அயனும் மாலும் ஆகிய இருவருமே அவர்தம் பேதைமை காரணமாகச் செந்நெறி முதல்வர்களால் புறக்கணிக்கப்பட்டவர்.

மூன்று திருக்கண்களையுடைய சிவபெருமான் தூமாயைக்கண் வைகும் அயன்மாலிருவரையும் தமரெனக் கொள்வர். இம் முறைமை அறிந்து அவரையும் தொழுக. அவரால் ஆம் நன்மையினையும் பெறுக.

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் -55

குறள் 55:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
 
பரிமேலழகர் உரை:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என – பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் ‘பெய்’ என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், ‘தொழுது எழுவாள்’ என்றார். ‘தொழாநின்று’ என்பது, ‘தொழுது’ எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.).
 
Translation:
No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word!.
Explanation:
If she, who does not worship God, but who rising worships her husband, say, “let it rain,” it will rain.