இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை!

ஒரு முறை நாரதர் காட்டு வழியே பயணம் செய்யும்போது, ஒருவன் ஆழ்ந்த தவத்தில் இருப்பதைக் கண்டார்.
நாரதரிடம், தேவரிஷியே… எங்கு செல் கிறீர்கள்? என்று கேட்டான் அந்த தவ சீலன்.

பூமியை சுற்றிப் பார்த்துவிட்டு, சொர்க்கத்துக்கு செல்வேன்! என்றார் நாரதர்.

அப்படியானால், கடவுள் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று மறக்காமல் கேட்டு வாருங்கள் என வேண்டினான். நாரதர் அதை ஏற்றுக் கொண்டார்.

மற்றோரிடத்தில் ஒருவன் ஆடிப்பாடிக் கொண்டிருந்தான். நாரதரைக் கண்டதும், நாரதரே, எங்கே போகிறீர் கள்? என்றான். அவனது பேச்சில் ஒருவித அதிகாரமும் இறுமாப்பும் தொனித்தன.

நாரதர், சொர்க்கத்துக்கு! என்றார்.

அப்படியானால், நான் எப் போது முக்தி அடைவேன் என்று கடவு ளிடம் கேட்டு வாருங்கள்! என்றான்.

சரி! என்ற நாரதர், சொர்க்கம் சென்றார்.

மறுபடியும் பூவுலகத்துக்கு வந்த நாரதர். கடந்த முறை, பார்த்த தவசீலரை சந்தித்தார். நாரதரின் வரு கையை உணர்ந்த அந்த தவசீலர் கண் விழித்தார். சந்தோஷப்பட்டார். சுவாமி… என்னைப் பற்றி கட வுளிடம் கேட்டு வந்தீர்களா? என்றார்.

நாரதர் புன்சிரிப்புடன், ஆமாம், தவசியே… நீ இன்னும் நான்கு தடவை பூமியில் பிறந்த பிறகுதான் உனக்கு முக்தி என்று கடவுள் கூறிவிட்டார்! என் றார். உடனே, தவசீலர் அழத் துவங்கினார்.

இதற்காக ஏன் அழுகிறாய்? என்றார் நாரதர்.

சுவாமி… நான் இவ்வளவு கடுமையாக விடா முயற்சியுடன் கடுந்தவம் செய்தும் கடவுள் இன்னும் மனம் இரங்கவில்லை. இந்த நிலையில் நான் மேலும் நான்கு பிறவிகள் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டாரே! அப்படியானால், நான் பெரும் பாவியல்லவா? அதை நினைத்துதான் அழுதேன்! என்றான்.

நாரதர் அங்கிருந்து நகர்ந்தார். ஆட்டமும் பாட்டமுமாக முன்னர் சந்தித்த மனிதனிடம் வந்தார். அவன் நாரதரிடம், என்ன நாரதரே! என் விஷயத்தைக் கடவுளிடம் கேட்டீர்களா? என்றான்.

நாரதரும் கேட்டேன்… கேட்டேன் என்றார்.

என்ன சொன்னார்?

நாரதர் அமைதியாக, அதோ! அந்த புளிய மரத்தைப் பார். அதில் எத்தனை இலைகள் இருக்கின்றனவோ, அத்தனை பிறவிகள் உனக்கு இன்னும் உள்ளன. எனவே, அதன் பிறகுதான் முக்தி என்று கடவுள் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் என்றார் நாரதர்.

ஆஹா, இது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். எனக்கு இவ்வளவு விரைவில் முக் தியா? என்னால் நம்ப முடியவில்லையே என்றபடி ஆடிப் பாடினான் அவன். இதைக் கண்ட நாரதர் திகைத்தார். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது.

அன்பு மகனே, நான் உனக்கு இக்கணமே முக்தி தந்தேன்!அவன் முக்தியடைந்தான்.

நாரதர் அசரீரியிடம் கேட்டார்.

உங்கள் செயலின் அர்த்தம் எனக்கு விளங்க வில்லையே?

விருப்பு வெறுப்பு அற்றவன்தான் உண்மை யான ஞானி. அவனை கவலை, மகிழ்ச்சி, பயம், துக்கம், பாவபுண்ணியம் எதுவும் பாதிக்காது. அவன் இறைவனுக்குச் சமமானவன். இந்த மனிதன் தன்னுடைய ஆட்டம் பாட்டம் கூத்து போன்றவற்றை விடாப்பிடியாகச் செயல்படுத்தினான். நீர் அவனுக்கு புளிய மரத்தின் இலைகள் அளவுக்குப் பிறவி எடுத்த பின்தான் முக்தி என்றீர். அதற்காகவும் அவன் கலங்கவில்லை. ஆனால், தவசியோ நான்கு பிறவிகள் எடுப்பதையே கடினம் என்றான். ஆகவே, அழுது, கடவுளே இல்லையென்றும் எண்ணினான். ஆனால், இரண்டாவது மனிதனுக்கோ சகிப்புத் தன்மையுடன், பொறுமையும் இருந்தது. அதற் காகவே அவனுக்கு உடனடியாக முக்தி வழங்கி னேன். என்றது அசரீரி. இந்த பதிலைக் கேட்ட நாரதர் மௌனமானார்.

ஆத்மா

ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர்.

இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான்.

அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா .

விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்.”

அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மைல் தூரம் கொண்டு செல்ல வேண்டும்.

கூடவே உருவிய பட்டையத்தோடு எனது வீரர்கள் வந்துக்கொண்டு இருப்பார்கள்.

ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் உன் தலையைச் சீவிவிடும்.

வெற்றியோடு முடித்துவிட்டால் விடுதலை”

என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.

குறிப்பிட்ட நேரம் வந்தது.

இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர்.

போர் வீரர்கள் சாலையை ஒழுங்கு செய்து கொடுத்தனர்.

பேரரசர் முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின் கைகளில் கொடுக்கப்பட்டது.

ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து உற்சாகப் படுத்தினர்.

மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர்.

இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாளோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக்கொண்டிருந்தனர்.

பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டான் இளவரசன் நடக்க சுற்றுப்புறத்திலிருந்து கூச்சலும், பரிகாசமும், ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.

எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடித்தான் இளவரசன் .

இளவரசனை பாராட்டிய பேரரசர்

இளவரசனே உன்னை கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம்.

உன்னை உற்சாக படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம்.

அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா என்று கேட்டார்.?

என்னை போற்றுபவர்களை நான் கவனிக்கவில்லை,

தூற்றுபவர்களையும் நான் பார்க்கவில்லை.

“எனது கவனமெல்லாம் தண்ணீரில் அல்லவா இருந்தது.”

விடுதலையோடு கூட அரசர் ஒரு ஆலோசனை தந்தார்.

இளவரசனே

பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தான் உன் சரீரத்தில் உள்ள *ஆன்மா

வாழும் நாட்களிலே உன் ஆத்மாவில் கண்ணும் கருத்துமாக இருந்து கடைசியில் அதை *சிருஷ்டிகர்த்தாவிடம்
ஒப்படைக்க வேண்டும்.

போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே.*

தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாதே. ஆத்மாவில் கவனம் வை என்றார்.

வேர்கடலை கொழுப்பு அல்ல…! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை…!!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் (osteoporosis) வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்:

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது

கொழுப்பை குறைக்கும்

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடி இருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

சுஜாதா

அந்த காலம் தான்
நன்றாக இருந்தது….!
******
ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே
சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு
*******
பேருந்துக்குள் கொண்டுவந்து
மாலைமுரசு விற்பார்கள் .,
*******
மிதி வண்டி வைத்திருந்தோம்.,
*********
எம் ஜி ஆர் உயிரோடு
இருந்தார்.
********
ரஜினி, கமல் படம் ரிலிஸ்.

KB படங்கள் என்றால்
ஒரு மாதம்அலசுவோம்
*****
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.
********
கல்யாண வீடுகளில்
பாய் போட்டு சாப்பாடு
*******
கபில் தேவின்
கிரிக்கெட். FANTASTIC
5 நாள் MATCH
********
குமுதம், விகடன்
நேர்மையாக இருந்தது.
*******
எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும்,
கேசட்டிலும் பாடல் கேட்பது
சுகமானது
********
வீடுகளின் முன் பெண்கள்
காலையில் கோலமிட்டார்கள்,
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன்
அரட்டை அடிப்பார்கள்
*******
சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு
முன்பே திட்டமிடுவோம்
**********
தீபாவளி பண்டிகையை கொண்டாட
ஒரு மாதத்துக்கு முன்பே தயாராவோம்
*******
புது SCHOOL UNIFORM தான்
சிலருக்கு DEEPAWALI DRESS
*****
டான்ஸில் ஆபரேஷன்தான்
பெரிய ஆபரேஷன்
நிறைய பேர்
பண்ணி கொண்டார்கள்
*******
வானொலி நாடகங்களை
ரசித்து கேட்டோம்.,
********
/எல்லோரும் அரசு பள்ளிகளில்
படித்தோம்.,
*******
சாலையில் எப்போதாவது
வண்டி வரும்.,
*******
மழை நின்று
நிதானமாக பொழியும்
*******
தமிழ் ஆசிரியர்கள்
தன்நிகரற்று விளங்கினர்.,
*********
வேலைக்கு போகாதவன்
எந்த குடும்பத்திற்க்கும்
பாரமாயில்லை.,
*********
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,
*******
வெஸ்ட் இன்டீசை
வெல்லவே முடியாது.,
*********
சந்தைக்கு போக
பத்து ரூபாய் போதும்.,
*******
அம்மா பக்கத்தில் உறங்கினோம்
*********
கொளுத்தும் வெயிலில்
செருப்பு இல்லாமல் நடந்தோம்
********
முடி வெட்ட
இரண்டு ரூபாய்தான்.,
Shaving 50 பைசா
——————-
பருவ பெண்கள் பாவாடை
தாவணி உடுத்தினர்………
,சிலிண்டர் மூடுதுணி போல்
யாரும் நைட்டி அணிய வில்லை.,
******
சுவாசிக்க காற்று இருந்தது.,
குடிதண்ணீரை யாரும்
விலைக்கு வாங்க வில்லை.,
********
தெருவில் சிறுமிகள்
பல்லாங்குழி ஆடுவார்கள்.
அவர்களை கலாய்த்துகொண்டே
நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
*******
டாக்டர் வீட்டுக்கே வருவார்
********
காதலிப்பது த்ரில்லிங்கா இருந்தது
*******
சினிமா பாட்டு புத்தகம் கிடைக்கும்

*******
மயில் இறகுகள்
குட்டி போட்டன…புத்தகத்தில்.,
******
ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு
அப்பாவிடம் அடி வாங்கி்னோம்..,
*******
மூன்றாம் வகுப்பிலிருந்து
மட்டுமே,ஆங்கிலம்.,
******
ஐந்தாம் வகுப்பு வரை
அரைக்கால் டவுசர்.,
******
மொத்தத்தில் மரியாதை இருந்தது..
*******
தொலைந்து போனவை
நம் நாட்கள் மட்டுமல்ல.,
நம் சுகங்களும்தான்..,

ஒரு சிந்தனை

நான் என் அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டே ஒரு சிந்தனை.

வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

கல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம். என் அறையில் இருந்த பொருட்களெல்லாம்விழுந்து விழுந்து சிரித்தன.
நாங்கள் சொல்லட்டுமா?
எனக்கு ஒரே வியப்பு. “எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றேன்.

மின் விசிறி சொன்னது           “Be cool”
கூரை சொன்னது            “Aim high “
ஜன்னல் சொன்னது           “See the world
கடிகாரம் சொன்னது           “Every minute is precious “
கண்ணாடி சொன்னது           “Reflect before you act”
காலண்டர் சொன்னது             “Be up to date “
கதவு சொன்னது              “Push hard for your goals “
கீழ் விரிப்பு சொன்னது          “Kneel down and pray “
கழிப்பறை சொன்னது             “Flush out bad habits”
மேஜைமேல் இருந்த பகவத் கீதை சொன்னது “Read me for direction”

வியப்பில் ஆழ்ந்தேன். நம்மை சுற்றி நமக்கு வாழ்வில் வேண்டியவை கொட்டிக் கிடக்கிறது.

நாம்தான் புரியாமல் குருடர்களாக உலா வந்து கொண்டிருக்கிறோம்

வாசித்ததில் நேசித்தது

What is GENERATION GAP

Father used to walk 20 mins to save Rs 20.
Son spends Rs 20 to save 20 mins.
(Surprisingly both r correct !)

Cultural Gap

If electricity goes in America they call the power house.
In Japan, they test the fuse,
But In India, they check neighbor’s house, “power gone there too, then ok !” 

Sense of Responsibility

A man goes to library n asks for a book on Suicide. Librarian looks at him & says: “hello who will return the book ?”

Grandfather to Grandson:

Go hide! Your teacher is coming as u bunked school today!
Grandson: U go hide I told her you passed away! 

Sister to brother:

What r u going to gift grandma on her b’day?
Brother: A football
Sister: But grandma does not play!
Brother: On my B’day she gave me Bhagavat Gita. 

நீதிக்கதை

ஒரு வைத்தியரும் அவருடைய உதவியாளரும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர். குரு என்ன தேடுகிறார் என்று சீடனுக்கு தெரியாது! குருவும் சொன்னதில்லை! சீடனின் வேலை அலைந்து திரிந்து வரும் குருவுக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை!

ஒருநாள் குரு வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே சீடனை காணவில்லை. மாறாக இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். குருவை பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து சேவித்தான். குருவுக்கு ஒன்றும் புரியவில்லை. யாரப்பா நீ என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன் குருவே நான்தான் உங்கள் சீடன். என்றான். குருவுக்கு மிகவும் குழப்பம். என்ன நடந்தது என்று கேட்க சீடன் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்

” குருவே! உங்களுக்காக கூழ் காய்த்து கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது. அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன் குருவே. நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன். குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளைஞனாகிவிட்டேன்” என்றான்.
குரு பதறி அடித்துபோய் ” எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் ” என்று கேட்க அதற்கு அந்த சீடன் “அதை தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? ” என்றான். குரு நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்!

(தத்துவம்)
கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது : கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது!

(யதார்த்தம்)
பெரும்பாலும் பயன் தெரியாதவர்களிடம் தான் சில விஷயங்கள் அகப்பட்டுக்கொள்கின்றன! அவர்கள் பலனடைந்தாலும் அடுத்தவர்கள் பலனடைய விடாமல் செய்து விடுகிறார்கள்!

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்

முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்

மோதகத்தை மகிழ்ச்சியோடு கரத்தி லேந்தும் நாதனே!
முக்தியினை பக்தருக்கு அருளும் டுண்டி ராஜனே!

பிறைமதியை முடியில் சூடிக் காட்சி தரும் காந்தனே!

போற்றித் துதிக்கும் அடியவரைக் காத்தருளும் வேந்தனே!

தன்னையாளும் தலைவனில்லா தலைவனேவி நாயகா!

தாரணியைக் காக்கவென்று தானவனைக் கொன்றவா!

பக்தர்களின் பாவங்களை நாசம் செய்யும் நாயகா!

பணிந்து உன்னை வணங்குகின்றேன் காப்பாய் விநாயகா!

நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

உன்னை வணங்கித் தொடங்கி விட்டால் விக்னம் தீர்த்து அருளுவாய்!

உதய காலக் கதிரவன் போல் ஒளி மிகுந்து விளங்குவாய்!

தேவர்களைக் காத்திடவே அசுரர்களைச் சிட்சிப்பாய்!

ஆபத்துகள் எதுவந்தாலும் அடியவரை இரட்சிப்பாய்!

உம்பருக்கு அரசனே நவநிதிக்கும் நாதனே!

யானைகளின் ராஜனே கணங்களுக்குத் தலைவனே!

தேவருக்கு தேவனாகி மஹா தேவன் ஆனவா!

தெண்டனிட்டு வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!

ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

அகிலமெல்லாம் சுகம்பெறவே வரமளிக்கும் கணபதி!

அசுரயானை கஜாசுரனைக் கொன்றழித்த கணபதி!

பானை வயிற்றில் புவனமெல்லாம் பொத்திக் காக்கும் கணபதி!

யானை முகத்து ஐங்கரனே அழிவில்லாத கணபதி!

பிள்ளைகளின் பிழைகள் தம்மை மன்னித்தருளும் கணபதி!

பிழைகள் தம்மைப் பொறுத்து நல்ல வழியில் செலுத்தும் கணபதி!

பக்தருக்கு மகிழ்ச்சி, கீர்த்தி, மேன்மை நல்கும் கணபதி!

பணிந்து உன்னை வணங்குகின்றேன் காத்திடுவாய் கணபதி!

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்

ஏழை பங் காளனாகி காக்கும் ஏக தந்தனே!

அநாதியான வேதங்களும் வணங்கும் வக்ர துண்டனே!

திரிபுரத்தை ஒரு சிரிப்பால் எரித்த ஈசன் மைந்தனே!

தானவரின் கர்வந் தன்னை ஒடுக்கும் ஐந்து கரத்தனே!

காலனையும் கலங்கச் செய்யும் காலனே கஜானனே!

விஜயன் போன்ற வீரர்களும் பணியும் விகட ராஜனே!

முதற் பொருளாய்த் தோன்றி உலகை வழி நடத்தும் ஜேஷ்டனே!

மாசில்லாத அன்பினாலே வணங்குகின்றோம் நேசனே!

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

வெண்மையான தந்தம் மின்னத் திகழும் விக்ன ராஜனே!

இடது காலால் காலன் தன்னை உதைத்த சிவனின் பாலனே!

கற்பனைக்கும் எட்டாத வடிவம் கொண்ட கஜமுகா!

துக்கம் தீர்த்து விக்னங்களைக் களைந்து விடும் ஹேரம்பா!

தவ முனிவர் தேவர் மூவர் யாவருடைய மனதிலும்
நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நிகரில்லாத நாயகா!

ஒற்றைத் தந்தத்தோடு திகழும் ஒப்பில்லாத உன்னையே ஒரு மனதாய் உள்ளத்திலே சிந்திக்கின்றேன் உண்மையே!

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்

காலையிலே எழுந்ததுமே கணபதியை நெஞ்சிலே
கருத்துடனே நினைத்தபடி சிரத்தையுடன் வணங்கியே
மஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த நூலையே
மந்திரமாய் மனதில் வைத்து ஜெபித்து வரும் போதிலே
பிணிகளெல்லாம் நொடியினிலே விட்டு விலகி ஓடுமே!

பிறவிப்பிணி என்னும் பெரிய பிணியும் தீர்ந்து போகுமே!

உலகிலேயே மிகச் சிறந்த மணி

கோயில் என்று சிறப்புப் பெயர் பெற்ற சிதம்பரத்தில் உள்ள ஆலயமணியே உலகில் உள்ள மிகச் சிறந்த மணியாகும்.

சிகண்டி பூரணம் என்று சித்தர்களால் அழைக்கப்படும் இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி எளிதில் நம்மை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்தி விடும் தன்மை உடையது.

தியானத்தில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் இந்த சிகண்டி பூரண மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருத்தல் நலம்

வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி அனுகிரகம் அளித்த மணியே தில்லை சிதம்பர தலத்தில் விளங்கும் சிகண்டி பூர்ணம் என்ற ஆலய மணியாகும்.

உலகிலேயே சிறந்த ஆலய மணி, இதற்கு இணையான மணி உலகத்தில் வேறெங்கும் கிடையாது.

சீவனைச் சிவமாக்கும் ஒப்பற்ற இறைச் சக்தியுடன் பூரிக்கும் மணியே சிகண்டி பூர்ணமாகும்.

இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவரவர் ஆன்ம அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.