images (52)

கணவன்- மனைவி

ஆசிரியர் வந்து, “இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் …” என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, “இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்…” என்று பணித்தார்.

அந்த பெண்ணும் எழுதினார். பெயர்களை கவனித்த அவர், “இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்” என்றார்… அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.. அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்…

இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்… அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்….

இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்… இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்…

வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்…

மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர்… அந்த பெண் அழுது கொண்டே… நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்… ஆசிரியர் அவரை அவரது இருக்கைக்கு போகச்சொல்லிவிட்டு, “ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்… உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர். உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான். .. பின் ஏன் ..?” என்று கேட்டார்.. முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது…

அதற்கு அந்த பெண்….”இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது… என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்…. ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக அர்ப்பணிப்பவர் என் கணவர் மட்டுமே.. அதனால் தான்….” என்றார்…..

அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்…. இது தானே உண்மை …. உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்…… அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறான் என்பதை உணருங்கள்…தோழமைகளே…

images (34)

அன்பும் காதலும்

கணவன் – மன்மதன்

மனைவி : – ரதி

ஒரு பெரிய அரங்கம் -

25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து

ஒரு கார் பரிசு வழங்குவது

என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.

நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள்.

அதில் ஒரு மனைவி

”அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க ” என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்!

கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது,

கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள்

கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள்

அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும் விட்டுகொடுத்தலும் எல்லாமே நிறைந்திருந்தது அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண்
100/100!

எல்லோருக்குமே தெரிந்துவிட்டது அவர்கள் தான் ஜெயிக்கப்போகிறார்கள் என்று,

எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்தபின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய

அந்த சிறந்த தம்பதியையும்
மிகக்குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய
ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்!

பூஜ்ஜியம் வாங்கியது வேறுயாரும் இல்லை, வரும்போதே சண்டை
போட்டுக்கொண்டு வந்தார்களே
அவர்கள் தான்.

இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள்,

ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க,
இல்லை arranged marriage என்றார்கள்.
எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள்,

திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு
35 வருடங்கள் என்று சொல்ல,

எல்லோரும் சிரித்துவிட்டார்கள்!
35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள்,

அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்கள்

ஆனால் போட்டியின் நடுவர்
இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில்

மிகச்சிறந்த தம்பதி இவர்கள்தான் என்று அறிவித்து

ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்!

காரணம்…

எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரியவிஷயம் கிடையாது,

எந்த ஒரு மனஒற்றுமையும் புரிதலும் இல்லாவிட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே

இதுதான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்!

இருவரும் ஆனந்தக்கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக்கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்!

சிறிது நேரத்தில் எல்லோரும் கலைந்து செல்ல,
தூரத்தில் யாரோ சண்டை போடுவது போல் சத்தம் கேட்டது,

எல்லோரும் திரும்பி பார்க்க காரை சுற்றி சுற்றி வந்தபடி அந்த

மனைவி:

நானும் எத்தனையோ நாள் தலைபாடா அடிச்சிகிட்டேன் :

சும்மா இருக்கிற நேரத்துல எதாவது உருப்படியா பண்ணுங்கன்னு,

டிரைவிங் கத்திருந்தாலாவது இந்நேரம் உபயோகமா இருந்திருக்கும்…

உங்கள கட்டிகிட்டு என்ன சுகத்தை கண்டேன்…

கணவனும் பின்னாலேயே சுற்றிவர…

எதுக்கு இப்படி குட்டிபோட்ட பூனை மாதிரி பின்னாடியே
சுத்தறீங்க ?!

உங்களுக்கு தான் மூட்டுவலி இருக்கு இல்ல..

பேசாம ஒரு இடத்துல உட்காருங்க..

அப்புறம் ராத்திரிபூரா லட்சுமி லட்சுமின்னு பொலம்புவீங்க நான்தான் என்னவோ ஏதோன்னு எண்ணை தேச்சி விடனும்…

எனக்குன்னு பாத்து கட்டிவச்சான் பாரு எங்கப்பன்…

சீமையில இல்லாத மாப்பிள்ளைய அவர சொல்லனும்…

என்றபடி காரை சுற்றி சுற்றி வர…

வேடிக்கை பார்த்த தம்பதிகள் புன்னகையோடு விரல் கோர்த்து நடந்தார்கள்!
………………………………………….
அன்பையும் காதலையும் வெளிப்படுத்த அழகான வார்த்தைகள் தான்
வேண்டும் என்று யார் சொன்னது?கண்டபடி திட்டுவாங்கினாலும் மனைவியே மணாலனின் பாக்கியம்னு இருக்கற ஆண்பிள்ளைகள் இருக்கும் வரை குடும்ப.ஒற்றுமை?.! சூப்பரா இருக்குமுங்கோ….

55210072-implant-technology-or-transplants-and-implants-concept

மனித உடல்

மனித மூளையின் நிறம் சாம்பல் நிறம்.

 ரத்தவகை ஆயுள் முழுவதும் மாறாது.

யோகாசனம் என்னும் பயிற்சி 21 வகைப்படும்

1. பத்மாசனம், 2. சித்தாசனம், 3. வஜ்ராசனம், 4. உட்கடாசனம், 5. பட்சி மோத்தாசனம், 6. வக்ராசனம், 7. உஷ்டிராசனம், 8. அர்த்த சிரசாசனம், 9. பாதஹஸ்தாசனம், 10. திரிகோணாசனம், 11. தனுராசனம், 12. விருட்சாசனம், 13. ஹனுமானாசனம், 14. தாடாசனம், 15. அர்த்த சக்கராசனம், 16. சோணாசனம், 17. புஜங்காசனம், 18. வீரபத்ராசனம், 19. சக்கராசனம், 20. அதோமுக சவாணாசனம் 21. நாற்காலி ஆசனம்.

 மனித உடலில் வினாடிக்கு 15 மில்லியன் ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன. அதேசமயம் அழியவும் செய்கின்றன.

மனித உடலில் உள்ள ஐம்புலன்களின் உறுப்புகளில் கடைசியாகச் செயலிழப்பது காது.

இடது நுரையீரலை விட அதிகமான காற்றை வலது நுரையீரல் உள் வாங்குகின்றது.

 மனித மூளையின் நினைவுத்திறன் நான்கு டெராபைட் அளவை விட அதிகமானது.

 நமது நாக்கின் நீளம் 10 செ.மீ. எடை 56 கிராம். சுவை அறியும் சுவை மொட்டுகள் நாக்கில் உள்ளன. அதன் மூலம் சுவை அறிய முடிகிறது. பேசும் சாதனம். உமிழ்நீர் சுரக்கும் இடம். நுனி நாக்கில் உப்பு சுவை மொட்டுகள், நடுவில் இனிப்பு சுவை அறியும் மொட்டுகள், உள் நாக்கில் கசப்பு சுவை மொட்டுகள், நாக்கின் ஓரத்தில் காரச்சுவை உணரும் மொட்டுகள் உள்ளன.

 நமது தலையின் எடை அளவு 3,175 கிலோ கிராம்.

* நமது உடலில் 600 தசைகள் உள்ளன.

நமது உடலில் இருக்கும் கொழுப்பைக் கொண்டு 7 சோப்புகள் செய்யலாம்.

மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.

மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும் தன்மையுடையது.

 மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் சத்துப்பொருட்கள் புரதச்சத்து ஆகும்.

தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர்.

‘மெலனின்’ என்று ஒரு ரசாயனப் பொருள்தான் நமது உடம்பின் தோலுக்கு நிறம் கொடுக்கிறது.

 ஒரு நாளில் நமது இரத்தம் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல்கள் 23 ஆயிரத்து 40 தடவைகள் சுவாசிக்கின்றன.

இதயம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 689 தடவைகள் துடிக்கிறது.

குழந்தை பிறந்த போது 270 எலும்புகள் இருக்கும். பிறகு சேர்ந்து 206 எலும்புகள் நிலைக்கும்.

கைரேகையைப் போலவே நாக்கிலுள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

* மனித உடலில் சதை அழுத்தமாக உள்ள பகுதி நாக்கு.

 மனிதர்களின் இரண்டு பக்க மூக்குத் துவாரங்களும் நுகர்வதர்கு வெவ்வேறாக செயல்படுகின்றன மனதுக்கு பிடித்த வாசனைகளை இடது பக்கத்தைக் காட்டிலும், வலது பக்கத் துவாரங்களே அதிகம் உணருகின்றன. எனினும், சரியான வாசனைகளைத் துல்லியமாக உணர இடது பக்கமே உதவுகிறது.

மூக்கை அடைத்துக்கொண்டு ஆப்பிளையோ உருளைக்கிழங்கையோ வெங்காயத்தையோ சாப்பிட்டால் எல்லாம் ஒரே ருசியாகத்தான் தெரியும்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, நமக்கு வாசனை உணர்வுகள் ஏற்படாது.

கோபம் மிகும்பொது முகத்திலுள்ள சிறு நாளங்கள் விரிந்து அதிக இரத்தம் பாய்கிறது. அதனால் முகம் சிகப்பாகிறது.

 நம் உடலில் அதிகம் உள்ள சுரப்பி வியர்வைச் சுரப்பிகளே. ஏறத்தாழ 20 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.

 ‘ஆக்சிஜன் படகு’ எனப்படுவது ஹீமோகுளோபின்.

மனித உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன.

 நம் உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை 830.

 நமக்கு களைப்பு ஏற்படும்போதும், மூளை சோர்வு அடையும்போதும், இதனை நமக்கு அறிவிக்கும் செயலே கொட்டாவி ஆகும்.

 நாம் உண்ணும் உணவில் அதிகப்படியாக புரதப் பொருள் இருந்தாலும், புளிப்பு பொருள்கள் இருந்தாலும் இவற்றை சிதைக்கும்பொழுது ஏற்படும் வாயு ஏப்பமாக வெளிவருகிறது.

உதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து செயல்பட முடியாத போது ஏற்படும் சுவாச சிக்கலே விக்கலாக மாறுகிறது.

 உணவுப் பாதையில் செல்லவேண்டிய உணவுத் துணுக்குகள் சுவாசப் பாதையில் பாதை மாறி நுழையும் பொது பொரை ஏறுதல் நிகழ்கிறது.

சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் ஒவ்வொரு நிமிடமும் நம் மூளைக்குள் பாய்கிறது.

 நம் கையின் கட்டை விரல் நகம்தான் மிகவும் மெதுவாக வளர்கிறதாம். வேகமாக வளர்வது நடு விரல் நகம்.

 உடல் உறுப்புகளில் தானாகவே இயங்கும் உறுப்பு இதயம் ஆகும்.

 மனித உடலில் இரத்தம் பாயாத இடம் விழி வெண் படலம். அதற்கு இரத்தமே செல்வதில்லை. தனக்குத் தேவையான ஆக்ஸிஜெனை அது காற்றிலிருந்து எடுத்துக் கொள்கிறது.

 மனித உடலில் வியர்வைச் சுரப்பிகள் உண்டு. ஆனால் பறவைகளுக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது அதனால் அதற்கு வியர்ப்பது இல்லை.

மனிதக் கண்களின் எடை 1.5 அவுன்சுகள் மட்டுமே ஆகும்.

 நமது உடலிலிருந்து தினமும் 0.8 லிட்டர் வியர்வை வெளியேறுகிறது.

நமது உரோமம் 0.004285 சென்டி மீட்டர் வளர்கிறது.

 பெண்களைக்காட்டிலும் 40 சதவீதம் அதிகமாக ஆண்களுக்கு வியர்க்கிறது.

நமது உடலில் வியர்க்காத பகுதி உதடு.

கை விரல்களில் சுட்டு விரலுக்கு உணர்வு அதிகம்.

 சுவாசித்தல் சிதை மாற்றம் எனும் வழியின் கீழ் அடங்கும்.

நமது உடல் 866 டிகிரி வெப்பத்தை வெளியேற்றுகிறது.

 நமது உரோமம் 0.04285 செ.மீ. வளர்கிறது.

நமது விரல் நகம் 0.00115 செ.மீ. வளர்கிறது.

 நமது இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.

 நாம் 76,09,000 மூளை அணுக்களுக்கு வேலை தருகிறோம்.

 உடலில் மிகத் துரிதமாக செய்தியைக் கடத்துவது நரம்பு மண்டலம்தான். இது ஒரு மணி நேரத்தில் 283 கி.மீ. வேகத்தில் செய்தியைக் கடத்துகிறது.

நாம் தூங்கும்போது எல்லா உறுப்புகளும் ஒரே நேரத்தில் ஓய்வெடுப்பதில்லை. முதலில் கண்கள், பின்பு காது, தோல் என ஒவ்வொன்றாக ஓய்வெடுக்கத் துவங்கும்.

when-will-I-meet-my-guru

படிப்பினை

1×9=7
2×9=18
3×9=27
4×9=36
5×9=45
6×9=54
7×9=63
8×9=72
9×9=81
10×9=90

மேலே உள்ள சமன்பாடு ஆசிரியை ஒருவரால் கரும்பலகையில் எழுதப்பட்டது. இந்த சமன்பாடு எழுத ஆரம்பிதது முதல் வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்து கொண்டிருந்தது. முதலாவது சமன்பாடு பிழையாக எழுதப்பட்டிருநத்து மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது. சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்..

நான் முதல் சமன்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன. இவ்வாறு எழுதியமைக்கு ஒரு காரணமுண்டு. இதன் ஊடாக உங்களுக்கொரு படிப்பினையைக் கற்றுத் தருவதே அதன் நோக்கம். இந்த உலகம் உங்களை எவ்வாறு மதிப்பிடுகின்றது என்பதை நீங்கள் இதன் ஊடாகப் புரிந்து கொள்வீர்கள். நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியான விடயங்களை எழுதியிருக்கின்றேன். அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்ட முன்வரவில்லை. ஆனால் நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விடயத்தைக் காரணங்காட்டி அனைவரும் சிரித்து கேலி செய்து விட்டீர்கள்.

படிப்பினை

நீங்கள் இலட்சம் தடவைகள் விடயங்களச் சரியாக செய்த போதிலும் இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒருமித்து நின்று மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்.. இவைகளைக்கண்டு ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள். உங்களைப் பார்த்து சிரித்தவர்கள், உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்.

D1

நவராத்திரி கொலு

ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார்.

குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான்.

அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான்.

“ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன்.”
என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான்.

எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கமாக இடம் பெறுகிறது.

பொம்மையின் தத்துவம்!

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.

1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)

2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)

3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)

4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)

5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)

6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)

7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.

8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.

9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.

இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.

கொலுப் படிகளின் தத்துவம்

கொலுவில் கீழேயுள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும்;

அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும்;

மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்வ குணத்தை அடையும் வழியை நமக்குக் காட்டுகின்றன.

தேவி வழிபாட்டின் பலன்

வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் தேவியானவள் யாகத்தைக் காப்பவள்.

அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள்.

இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள்.

நலம் தரும் நவராத்திரி **

நான்கு விதமான நவராத்திரிகள் பாரத தேசத்தில் பந்நெடுங் காலமாய் கொண்டாடப் பெற்று வருகிறது.

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வஸந்த நவராத்திரி).(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

நவராத்திரியில் தேவியைக் கொண்டாடுவது எல்லாருக்கும் சிறப்பு தரும்.

நவராத்திரி வழிபாட்டால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர்.

சுமங்கலி பெண்கள் பெறுவது மாங்கல்ய அனுகூலம்.

வயதுமூத்த சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி பெறுவர்.

புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி, விஜயதசமியில் முடிகிறது.

பத்து நாட்கள் கொண்டாடப் படுவதால், “தசரா’ என்றும் வடமாநிலம் களில் அழைக்கின்றனர்.

நவதுர்க்கைகள் :-

வன துர்க்கை,
சூலினி துர்க்கை,
ஜாதவேதோ துர்க்கை,
ஜூவாலா துர்க்கை,
சாந்தி துர்க்கை,
சபரி துர்க்கை,
தீப துர்க்கை,
ஆகரி துர்க்கை,
லவண துர்க்கை.
இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

அஷ்டலட்சுமி:-

ஆதிலட்சுமி,
மகாலட்சுமி,
தனலட்சுமி,
தானிய லட்சுமி,
சந்தானலட்சுமி,
வீரலட்சுமி,
விஜயலட்சுமி,
கஜலட்சுமி.
இவை லட்சுமியின் அம்சங்கள்.

அஷ்ட சரஸ்வதி :-

வாகீஸ்வரி,
சித்ரேஸ்வரி,
துளஜா,
கீத்தீஸ்வரி,
அந்தரிட்ச சரஸ்வதி,
கட சரஸ்வதி,
நீல சரஸ்வதி,
கிளி சரஸ்வதி.
இவர்கள் சரஸ்வதியின் அம்சங்கள்.

உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத தத்துவம்.

அனைத்து உருவங்களிலும், எல்லா இடங்களிலும் தேவி வியாபித்து இருக்கிறாள் என்பதை குறிக்கும் விதமாகவே கொலு வைத்து வணங்குகிறோம்.

download (15)

கடி கடி கடி

ஓடுற எலி வால புடிச்சா
“கிங்கு”
தூங்குற புலி வால புடிச்சா
“சங்கு”

மேல இருந்து கீழ விழுந்தா
அது “அருவி”
கீழ இருந்து மேல போனா
அது “குருவி”

மின்னல பார்த்தா…
கண்ணு போய்டும்.

பார்க்கலேன்னா…
மின்னல் போய்டும்

‘சிற்பி’ உளிய அடிச்சா
அது “கலை”
சிற்பிய உளியால அடிச்சா
அது “கொலை”

இருமல் வந்தா
இருமமுடியும்..
ஆனால் காய்ச்சல் வந்தா
காய்ச்ச முடியுமா?

டிக்கெட் வாங்கிட்டு உள்ள
போனால் அது சினிமா
தியேட்டர்
உள்ள போயிட்டு
டிக்கெட் வாங்குனா
அது ஆப்பரேஷன் தியேட்டர்

விஸ்கி குடிச்சா நாம நாலு
பேருக்கு முன்னாடி ஆடலாம்..

அதுவே அதிகமா குடிச்சா நம்ம முன்னாடி
நாலு பேரு ஆடுவாங்க..

வாழ்கையில ஒண்ணுமே இல்லைனா போரடிக்கும்
மண்டமேல ஒண்ணுமே இல்லைனா க்கிளாறடிக்கும்

நீங்க எவ்வளவுதான் பெரிய பருப்பா இருந்தாலும்..
உங்கள வெச்சு சாம்பார்
செய்ய முடியாது

டீ மாஸ்டர் எவ்வளவு தான் ‘லைட்’ டீ போட்டாலும்
அதுல இருந்து கொஞ்சம் கூட வெளிச்சம் வராது

எட்டு செக்கண்டுல 1140 பெயர் சொல்ல முடியுமா?
நான் சொல்லுவேன்..
கண் 1000
100 ஜஹான்
10 டுல்கர்
9 தாரா
7 மலை
6 முகம்
5 சலி
3 ஷா

முட்டையிடாத பறவை? ஆண் பறவை!

கோழி ஏன் முட்டை போடுது? ஏன்னா அதுக்கு
1 2 3 போடத்தெரியாது.

ஊசி குத்தினா ஏன் ரத்தம் வருது? தன்னை குத்தினது யாருன்னு பாக்கவருது

Finally….

*என்னதான் ஊருக்கே கேக்குறமாதிரி
குறட்டை விட்டாலும்
அத நம்ம காதால கேட்க முடியாது!

DSCN0672

பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது !

ஒவ்வொரு நாளும்
காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது !

பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக
விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில்
புலம்பாமல் வாழ்கின்றன !

மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன !

ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும்
மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன !

சிறியதான உடலையும்,
பல கஷ்டங்களையும் சமாளிக்க
வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல்
வாழ்ந்து காட்டுகின்றன !

தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்
உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன !

ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை
என்ற நிலையிலிருக்கும் பலவகை
பூச்சிகளும், அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன !

இப்படி பலகோடி உயிரினங்கள்
உலகில் வாழ முடியுமென்றால்
உன்னால்
வாழ முடியாதோ ? ! ?

எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய
வாழ்க்கை . . .

அதை ஏன் புலம்பிக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் நொந்துபோய்
வாழ்கின்றாய் !
அதை ஏன் வெறுத்துக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய் !
அதை ஏன் அழுதுகொண்டு
வாழ்கின்றாய் !

சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் !

எனது அஹம்பாவங்களை
தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத்
தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி !

என்னை அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம் வரக்காரணமான
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
மனதார நன்றி !

எனக்கு வலியைத்தந்து
அடுத்தவரின் வலியை எனக்குப்
புரியவைத்த புரியாத நோய்களுக்கு
மனதார நன்றி !

எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை
உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த,
என் பலவீனத்திற்கும்,உடலுக்கும்
மனதார நன்றி !

என்னை ஆழமாக சிந்திக்கவைக்க
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி !

என் பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான
என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
மனதார நன்றி !

என் உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த
உடல் ஊனமுற்றோருக்கு
என் மனதார நன்றி !

மனித வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரியவைத்த மரணத்திற்கு
மனதார நன்றி !

என் பெற்றோரின் பெருமையை,
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு
மனதார நன்றி !

ஒரு சிரிப்பினால் உலகையே
வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு
மனதார நன்றி !

பணத்தினால் மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்துவிடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி !

பக்தி என்பது வெளிவேஷமல்ல
என்பதை எனக்குப் பயங்கரமாய்
புரியவைத்த வெளிவேஷதாரிகளுக்கு
எப்பொழுதும் மனதார நன்றி !

நாமஜபத்தின் அற்புத மஹிமையை
எனக்குச் சரியாகப் புரியவைத்த
என்னுடைய பாபங்களுக்கு
என்றுமே மனதார நன்றி !

ஒவ்வொரு முறையும் மனிதரிடம்
ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய
என் இறைவனுக்கு மனதார நன்றி !

இன்னும் பலருக்குச் சொல்லவேண்டும் !
இந்த வாழ்நாள் போதாது !

images (6)

வாழ்க்கை…

நேரா போய் ரைட் எடுத்தா,
ஒரு தோல்வி வரும் ..

அங்கருந்து லெப்ட் போனா
பெருசா ஒரு துரோகம் இருக்கும்..

கொஞ்ச தூரம் போயி ஒரு யு டேன் அடுச்சா, அங்க கடன் என்கிற ஒரு பெரிய பள்ளம் இருக்கும்..

அந்த பள்ளத்துல விழுந்து மூஞ்சி மொகர எல்லாம் பேந்து எந்திருச்சு நேரா போனா,

ஏமாற்றங்கர ஒரு சிக்னல் இருக்கும், அதையும் தாண்டி போனா,

போட்டி, பொறாமைங்கர
ஸ்பீடு பிரேக்கர் வரும்,

அதையும் தாண்டி டாப் கியர் போட்டு போயிகிட்டே இருந்தால்

அதுக்கடுத்த வீடு தான் நீங்க கேட்ட வெற்றியோட வீடு வரும்..

வெற்றிய தொட்ட அடுத்த கனமே திரும்பி பார்த்தால் எமன் எருமையில நம்மள விட வேகமா வருவான்.

இது தானுங்க வாழ்க்கை…

images (89)

சந்தோஷமாக வாழ்வோம்

ஒரு கிராமத்தில் வசித்து வந்த
ஒரு மனிதன்
திடீரென இறந்து போனான்.,
அவன் அதை உணரும் போது,
கையில் ஒரு பெட்டியுடன்
கடவுள் அவன் அருகில் வந்தார்.. ]

#கடவுள் :
“வா மகனே….
நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது..”

#மனிதன் :
“இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது?”

#கடவுள் :
“மன்னித்துவிடு மகனே….
உன்னைக் கொண்டு
செல்வதற்கான நேரம் இது..”

#மனிதன் :
“அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?”

#கடவுள் :
“உன்னுடைய உடைமைகள்…..”

#மனிதன் :
“என்னுடைய உடைமைகளா!!!
என்னுடைய பொருட்கள்,
உடைகள், பணம்,….
எல்லாமே இதில் தான்
இருக்கின்றனவா?”

#கடவுள் :
“நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு தேவையானது..”

#மனிதன் :
அப்படியானால்,
“என்னுடைய நினைவுகளா?”

#கடவுள் :
“அவை காலத்தின் கோலம்….”

#மனிதன் :
“என்னுடைய திறமைகளா?”

#கடவுள் :
“அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்பந்தப்பட்டது….”

#மனிதன் :
“அப்படியென்றால் என்னுடைய
குடும்பமும் நண்பர்களுமா?”

#கடவுள் :
“மன்னிக்கவும்…….
குடும்பமும் நண்பர்களும்
நீ வாழ்வதற்கான வழிகள்….”

#மனிதன் :
“அப்படி என்றால்
என் மனைவி மற்றும் மக்களா?”

#கடவுள் :
“உன் மனைவியும் மக்களும்
உனக்கு சொந்தமானவர்கள் அல்ல,
அவர்கள் உன் இதயத்துடன்
சம்பந்தப்பட்டவர்கள்….”

#மனிதன் :
“என் உடலா?”

#கடவுள் :
“அதுவும் உனக்கு
சொந்தமானதல்ல….
உடலும் குப்பையும் ஒன்று….”

#மனிதன் :
“என் ஆன்மா?”

#கடவுள் :
“அதுவும் உன்னுடையது அல்ல…,
அது என்னுடையது…….”

●மிகுந்த பயத்துடன்
கடவுளிடமிருந்து
அந்தப் பெட்டியை வாங்கி
திறந்தவன்,
காலி பெட்டியைக் கண்டு
அதிர்ச்சியடைகிறான்..

கண்ணில் நீர் வழிய
கடவுளிடம்,
“என்னுடையது என்று
எதுவும் இல்லையா?”
எனக் கேட்க,

#கடவுள் சொல்கிறார்,

“அதுதான் உண்மை..
நீ வாழும்
ஒவ்வொரு நொடி மட்டுமே
உன்னுடையது..

வாழ்க்கை என்பது
நீ கடக்கும் ஒரு நொடிதான்..

ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்

எல்லாமே உன்னுடையது என்று
நினைக்காதே……..”

ஒவ்வொரு நொடியும் வாழ்

உன்னுடைய வாழ்க்கையை வாழ்

 மகிழ்ச்சியாக வாழ்

அது மட்டுமே நிரந்தரம்..

உன் இறுதிக் காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது
வாழுகின்ற

images (25)

ஒரு நாத்திகருக்கும் ஆன்மீகவாதிக்கும் நடந்த சுவையான உரையாடல்:

நாத்திகர்: கடவுள் யார்? சரியான விளக்கத்தைக் கொடுங்கள்.

ஆன்மீகவாதி: “ஆதியுமில்லா அந்தமுமில்லா அருட்பெருஞ்ஜோதி தான் கடவுள் “

நாத்திகர்: இதுதான் பிரச்சினை. அதெப்படி துவக்கமுமில்லாத முடிவுமில்லாத என்ற ஒன்று எப்படி இருக்க முடியும். திட்டமிட்டு உறுதியாக இவன்தான் கடவுள் என்றுகூடச் சொல்லமுடியவில்லை. ஆனால் அறிவியல் திட்டவட்டமாக ஒவ்வொரு விஷயத்தையும் வரையறுத்துச் சொல்கிறது. அதனால் தான் அறிவியலை நம்புகிறேன். உங்கள் விளக்கங்கள் கடவுளை நம்பத்தகுந்ததாக இல்லை. கடவுள் பற்றிய அடிப்படைக் கேள்வியிலேயே உங்களால் கடவுள் பற்றி திட்டவட்டமாக சொல்லமுடியவில்லை. அதெப்படி தொடக்கமும் முடிவுமில்லா ஒன்று இருக்க முடியும். அறிவியலைப் பாருங்கள். கதிரவனுக்கும் பூமிக்குமான தொலைவைத் துல்லியமாக சொல்கிறது. உறுதியாக வரையறுத்துச் சொல்ல முடியாத ஒரு விளக்கத்தையல்லவா நீங்கள் தருகிறீர்கள்.

ஆன்மீகவாதி: அப்படியா நல்லது. அறிவியலுக்கான அடிப்படை என்ன?

நாத்திகர்: கணிதம்

ஆன்மீகவாதி: கணிதத்திற்கான அடிப்படை என்ன?

நாத்திகர் : எண்கள்

ஆன்மீகவாதி: நல்லது. ஒரேயொரு கேள்விக்கான பதிலை மட்டும் சொல்லுங்கள் போதும். ஆகப்பெரிய எண் எது என்று சொல்லுங்கள்.

நாத்திகர் : (திகைக்கிறார்).
[ ஆன்மீகவாதியோ அவர் எந்த எண்ணைச் சொன்னாலும் கூடுதலாக ஒன்றைப் போட்டு சொல்கிறார். பகுத்தறிவுவாதியால் ஆகப்பெரிய எண்ணைச் சொல்லமுடியவில்லை.]

ஆன்மீகவாதி: விடுங்கள் . ஆகச் சிறிய எண்ணையாவது திட்டமிட்டு, வரையறுத்து சொல்லுங்கள்.

நாத்திகர் மீண்டும் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். இறுதியாக வரையறுத்துச் சொல்வதாக நினைத்துக் கொண்டு ” ∞ “(infinity) என்று சொல்கிறார்.

ஆன்மீகவாதி: அது குறியீடுதானேயப்பா. அது எண் இல்லையே என்கிறார். ஏனப்பா, நாங்கள் கல்லை குறியீட்டாக்கி அதற்கு உருவம் கொடுத்து பெயர் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறாய். இப்போது infinity க்குக் கொடுத்த குறியீட்டை எப்படி எண் என்று சொல்ல முடியும். infinity யை தமிழில் எப்படி சொல்வீர்கள் என்கிறார்.

நாத்திகர் : முடிவிலி என்போம்.

ஆன்மிகவாதி : பெரிய எண்ணுக்கும் சின்ன எண்ணுக்கும் முடிவிலிதானே குறியீடு.

நாத்திகர்: ஆமாம்.

ஆன்மீகவாதி: அறிவியல் திட்டவட்டமாக, வரையறுத்து சொல்கிறது என்றாயே. எண்களின் மிகப்பெரிய எண்ணையோ சிறிய எண்ணையோ ஏன் சொல்ல முடியவில்லை? அடிப்படையிலேயே வரையறுத்து இந்த எண் தான் இறுதி எண் என்று ஏன் சொல்ல முடியவில்லை என்கிறார். நான், ஆதியுமில்லா அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதி என்று சொல்வது சரிதானே என்கிறார்.