வாசித்ததில் நேசித்தது

1. மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.

நேரம்
 இறப்பு
வாடிக்கையளர்கள்

2. மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.

 நகை
 பணம்
 சொத்து

3. மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.

 புத்தி
 கல்வி
நற்பண்புகள்

4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்.

 உண்மை
 கடமை
இறப்பு

5. மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை.

வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்

6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.

 தாய்
தந்தை
இளமை

7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.

இறைவன்
தாய்
 தந்தை

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் :

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள் :

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் :

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள் :

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

மன முதிர்ச்சி – Maturity of Mind

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.

1.Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.

2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை
மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.

7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.

8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..

10. Trying to keep our peace in our mind
without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

11. Understanding the difference between the basic needs and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல
என்ற நிலையை அடைதல்.

12. Reaching the status that happiness is not connected. with material things.

அமருங்கள் சம்மணமிட்டு

சாப்பிடும் முறை…!

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க…

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்…

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது…

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்…

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்…

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்…

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்…

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்…

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்…

10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்… பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்…

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்…

12. சாப்பிட வேண்டிய நேரம்…காலை – 7 to 9 மணிக்குள் மதியம் – 1 to 3 மணிக்குள் இரவு – 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்கñ வேண்டும்…

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்…

மனம் ஒரு குரங்கு

ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம்.

எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ”சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று அறிவுரை சொன்னார்.

அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன. உடனே தலைவர் ”சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுவோம்” என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு ”தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்” என்று யோசனை சொல்லிற்று.

அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார். அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன். பழத்தின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது.

உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து தலைவரே ஒரு நாள் விரதம் இருக்கப் போகிறோம். தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதே ? எனவே பழங்களை அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம் என்றது. அவ்வளவுதான் பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன.

சற்று நேரம்தான் ஆகியிருந்தது. ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம் தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது.

இவ்வுலகில் பெரும்பாலானவர்களின் தியான மற்றும் விரத முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது.

உலக ஆசையை விட்டு விட வேண்டும் என்று எண்ணினாலோ, முயற்சித்தாலோ, அது நடக்கவே நடக்காது

ஏனெனில் அது எதிர்மறை சிந்தனையாகவும், முயற்சியாகவும் அமைந்து விடுகிறது.

மாறாக, பரம்பொருள் நாட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் அளவு உலக ஆசைகள் ஒவ்வொன்றாக விட்டு ஓடி விடுவதை உணரலாம்.

அதனால் தான் அன்றே சொன்னார்கள்

மனம் ஒரு குரங்கு என்று மிகச் சரியாக

பழத்தின் அருமை

16 வகையான நோய்களுக்கு அருமருந்து..

இன்றும் பலரும் தவிக்கும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் அல்லது சீராக வைக்கும் சர்வ ரோக நிவாரணி

மிகவும் முக்கியமானது புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்ட பழம் ..

கிராமங்களில் வீடுதோறும் என் பாட்டனும் பூட்டனும் விதைத்த அருமருந்து..

சென்ற தலைமுறையால் புறக்கணிக்கப்பட்ட பழம்..

தமிழ் மண்ணில் விளையக்கூடிய பராம்பரியமிக்க பழம்..

வெளிநாட்டுகாரன் இந்த பழத்தின் அருமை உணர்ந்து எப்போதே பயிரிட ஆரம்பித்து ஒவ்வொரு கடையிலும் விற்க ஆரம்பித்துவிட்டான்..
வெளிநாடுகளில் இதன் விலை என்ன தெரியுமா?

பக்கத்து மாநிலம் கேரளாவில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த மரம் இருக்க வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு செய்வது தான் நமக்கு தெரியுமா..?

இந்த பழத்தின் வெளி உருவம் பார்த்து குறைத்து மதிப்பிட்டு ஒதுக்கியதின் விளைவு இன்று வெளிநாடுகளில் வெளி மாநிலங்களில் அமோக விற்பனை
தாய் மண்ணில் இந்த பழத்திற்கு அவமரியாதை மட்டும் தான்..

பலரால் விரும்ப படாத புறகணிக்கப்பட்ட பலரால் முகம் சுழிக்கப்பட்ட பழம் இது..

ஆனால் காலம் இன்று அத்தனை பழ கடையிலும் இந்த பழம் இல்லாமல் இல்லை..
அன்று சும்மா கொடுத்தால் கூட வாங்கி சாப்பிடாத சாப்பிட விழிப்புணர்வு இல்லாத பழம் இன்று அத்தணை கடைகளிலும் அதிக காசுக்கு விற்கப்படுகிறது என்றால் மக்களிடையே அடுத்த தலைமுறையிடையே விழிப்புணர்வு வந்துள்ளது..

மருத்துவர்கள் இந்த பழத்தின் அருமை உணர்ந்து இந்த பழத்தை சாப்பிட சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்..

இந்த பழங்கள் விவசாயிகளால் பயிரிட பட்டு விற்பனைக்கு வருகிறது..

தமிழகத்தில் கிராமங்களில் வீடுதோறும் மிண்டு்ம் வளர்க்கப்பட்டு வருகிறது..
நகரங்களில் இல்லை நரகங்களில் தான் இன்னும் என்ன விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பழத்தின் அருமை உணரவில்லை..

காஷ்மீர் ஆப்பிள் சாப்பிட்டு வளர்ந்த நாமல்லவா ?
எங்கேயோ வளர்ந்து வரும் ஆப்பிள் வாங்கி சாப்பிட்டால் நமக்கு போலி கௌரம் அல்லவா?

ஆப்பிளில் உள்ள மருத்துவ குணங்களை விட இந்த பழத்திற்கு அதிக மருத்துவ குணம் உண்டு..

ஆனால் இந்த பழம் வாங்கினால் கௌரவ குறைச்சல் அல்லவா..
ஆப்பிள் போன்ற அழகான பழம் தான் நமக்கு தேவை..

பராம்பரியம் மிக்க மருத்துவத்தன்மை நிறைந்த இது போன்ற அத்துனை பழங்களையும் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டு அத்தனை நோய்களையும் நம் மண்ணில் பரப்பிய அன்னிய நாட்டின் சூழ்ச்சி அறியா நோய்களில் சிக்கினோம்..

இதன் விளைவு இன்று பிறந்த குழந்தைக்கு இரத்த அழுத்தம்
20 வயதில் இரத்த அழுத்தம்
40 வயதில் இரத்த அழுத்தம்
60 வயதில் இரத்த அழுத்தம் .. மாத்திரை இல்லாத மனிதர்களே இல்லாத கேவலமான சூழல் நம் தேசத்தில் உருவாக்கிவிட்டார்கள்..

இரத்த அழுத்தத்தை எளிதிலில் கட்டுபடுத்துவதால் அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிட சிறந்த மருந்துவ பழம்..

போலி கௌரவம் பார்க்காமல் இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்கள் அனைவரையும் சாப்பிட சொல்லுங்கள் தங்கள் வீடுகளிலேயே இந்த மரத்தை உருவாக்குங்கள்..
விருத்தினர் விட்டுக்கு சென்றால் ஆப்பிள் தேவையி்ல்லை ஆரஞ்சு தேவையில்லை போலி கௌரவம் தேவையில்லை இந்த பழத்தை வாங்கி சென்று கொடுங்கள்..
இந்தியாவில் அத்தனை வீடுகளிலும் எவரோ ஒருவர் இரத்த அழுத்தத்தில் தான் வாழ்கிறார் என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கை சொல்கிறது

இவ்வுளவு பெரிய பதிவு எதற்கு அப்படி என்ன ஞானப்பழமா என்று கேட்காதிர்கள்..

சத்தியமா இல்லைங்கோ

சாதாரண மருத்துவ பழம் தான்கோ அதன் பெயர் சீத்தா பழம் கிராமங்களில் ஆத்தாபழம் என்பார்கள்..

ஏழை சொல் மேடை ஏறாது என்பது உண்மை ஆனால் ஏழை சொல்லில் தான் நியாயம் இருக்கும்..
அதுபாேல
இந்த சீத்தாபழம் கடைக்கு வர ஒரு நூறாண்டு தேவைப்பட்டுள்ளது..
ஆனால் உண்மையான மருத்துவ குணம் கொண்டது..

லேட்ட வந்தாலும் லேட்டஸ்டா தான் வந்திருக்கிறது..சீத்தாபழம்.

குருவே

வயதில் சிறியவனான அந்தச் சீடன் கேட்டான்.

“குருவே, நேற்று நீங்கள் எங்களுக்கு போதித்தபோது, `ஆமைபோல் வேகம்கொள்’ என்றீர்கள். ஆனால், ஆமை பற்றி யாருக்கும் நல்ல அபிப்ராயம் இல்லை. ‘ஆமை புகுந்த வீடும் வழக்குமன்ற ஊழியன் புகுந்த வீடும் ஒன்று’ என்று எங்கள் பகுதியில் பழமொழியே இருக்கிறது. ஆமையை அமங்கலத்தின் சின்னமாகவே நாங்கள் புரிந்துவைத்திருக்கிறோம்.

ஆமை, வேகமாகச் செயல்படும் விலங்கும் அல்ல. அது மிக மெதுவாகவே நகரும். பிறகெப்படி ஆமையை நாங்கள் முன்னுதாரணமாகக்கொள்ள முடியும்? ஆமையிடம் நாங்கள் கற்றுக்கொள்ள அப்படியென்ன நல்ல குணம் இருக்கிறது..?’’

சீடனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார் குரு. “நல்லது சீடனே… நான் சொன்ன செய்தியை நன்கு உள்வாங்கியிருக்கிறாய். அதனால்தான் உனக்கு இவ்வளவு கேள்விகள் உதித்திருக்கின்றன. எல்லா விஷயங்களையுமே மேலோட்டமாகப் புரிந்துகொள்வதுதான் மனித குணம். எதையும் உடைத்து, பகுத்துப் பார்க்கப் பழக வேண்டும்.

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எதுவுமே காரணம் இல்லாமல், திறன் இல்லாமல் படைக்கப்படவில்லை. ஆமையும் அப்படித்தான். மனிதன் தனக்கு ஏற்புடையவாறு, தனக்குக் கீழான எல்லாவற்றையும் காழ்ப்புஉணர்வோடே புரிந்துவைத்திருக்கிறான் அல்லது போதித்திருக்கிறான். முதலில் எந்த ஒரு விஷயத்தையும் விறுப்பு, வெறுப்பற்று பகுத்தறிந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆமையைப் பற்றிக் கேட்டாயல்லவா..? ஆமை மாதிரி புத்திக்கூர்மையுள்ள, உணர் அறிவுள்ள, தேடலுள்ள உயிரினம் ஏதுமில்லை. தன் முதல் கருவுறுதல் நிகழ்ந்த பிறகு, ஆமை, தான் முட்டையிடுவதற்கான இடத்தைத் தீவிரமாகத் தேடும். பாதுகாப்பான, இடையூறு இல்லாத, தகுந்த தட்பவெப்பம் உள்ள இடத்தைத் தேர்வுசெய்ய அது நெடுந்தூரம் பயணிக்கும். ஓர் இடத்தைத் தேர்வு செய்துவிட்டால், அப்பகுதியைச் சில நாள்கள் நோட்டமிடும். ‘அதுதான் தனக்கான இடம்’ என்று தேர்வு செய்தபிறகு நிதானமாக முட்டையிடும்.

முதன்முறையாக எந்த இடத்தில் முட்டையிட்டதோ, அதே இடத்தில்தான் காலம் முழுவதும் முட்டையிடும்.
கடல் வாழ் உயிரிகளில் தன் வாழ்நாளுக்குள் அதிக தூரம் பயணம் செய்யக்கூடிய உயிரினம் ஆமைதான். ஆனால், பிற உயிரினங்களுக்கு இருப்பதைப்போல வசதியான துடுப்புகள் ஆமைக்கு இல்லை. உடல் வடிவமும் நீந்த ஏதுவாக இல்லை. ஆனால், அது பிற உயிரினங்களைவிட வேகமாகப் பயணம் செய்யும்.

முட்டையிடும் உணர்வு ஏற்படும்போது, பரந்து விரிந்த இந்தக் கடற்பரப்பில் எவ்வளவு தொலைவுக்கு அப்பால் இருந்தாலும், அதிவேகமாகப் பயணித்து தன் பழைய இடத்தைத் தேடி வந்துவிடும்…”
குரு சொல்வதை லயித்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் சீடர்கள்.

அந்தச் சிறுவயது சீடன்தான் இப்போதும் பேசினான்.
“வசதியான துடுப்புகள் இல்லாத ஆமை, அவ்வளவு வேகமாக எப்படிப் பயணிக்கிறது?”
அவனது ஆர்வத்தை ரசித்த குரு, மேலும் சொல்லத் தொடங்கினார்.

“இங்குதான் நீ ஆமையாக மாற வேண்டும். தனக்குத் துடுப்புகள் இல்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டு முடங்கிப்போகவில்லை ஆமை. அது இயற்கையைத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.

அது செல்ல திட்டமிட்டுள்ள திசையில், அதிவேக நீரோட்டம் தொடங்கும் நேரத்துக்காக அது அமைதியாகக் காத்திருக்கிறது. நீரோட்டம் தொடங்கிய விநாடியில் அதில் ஒன்றிவிடுகிறது. நீரின் தன்மைக்கேற்ப ஏறி, இறங்கி, வளைந்து, நெளிந்து தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. அந்த நீரோட்டமே ஆமையை அதன் இலக்கில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. துடுப்பை அசைக்காமல் நெடுந்தொலைவு பயணத்தை அது கடந்துவிடுகிறது…”

சீடர்களின் முகங்கள் பிரகாசமாகின. கனிவாக மேலும் தொடர்ந்தார் குரு.

“ ‘ஆமைபோல் வேகம் கொள்’ என்பதன் உள்ளீடு இப்போது உங்களுக்குப் புரிகிறதா? உங்களுக்கான இலக்கைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அது உங்கள் இயல்புக்கேற்ற இலக்குதானா என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். `மற்றவர்களுக்கு இருப்பது போன்ற வசதிகள் நமக்கு இல்லையே…’ என்று வருந்தி முடங்கிப் போகாமல், நம் இலக்கைத் தொட என்னவெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற தேடலோடு இருங்கள்.

உங்களுக்கான நீரோட்டத்தை அடையாளம் கண்டதும் களத்தில் இறங்குங்கள். நிச்சயம் அந்த நீரோட்டம், உங்களை உங்கள் இலக்கில் கொண்டு போய் நிறுத்தும். வெற்றி என்பது திறனின் அடிப்படையில் மட்டுமல்ல… அந்தத் திறனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஆமை நமக்குக் கற்றுத்தரும் பாடம் அதுதான்…” என்றார் குரு.

இயற்கை மருத்துவம்

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \”\”நெல்லிக்கனி.\”\”

2) இதயத்தை வலுப்படுத்த \”\”செம்பருத்திப் பூ\”\”.

3) மூட்டு வலியை போக்கும் \”\”முடக்கத்தான் கீரை.\”\”

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \”\”கற்பூரவல்லி\”\” (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் \”\”அரைக்கீரை.\”\”

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \”\”மணத்தக்காளி கீரை\”\”.
7) உடலை பொன்னிறமாக மாற்றும் \”\”பொன்னாங்கண்ணி கீரை.\”\”

8) மாரடைப்பு நீங்கும் \”\”மாதுளம் பழம்.\”\”
9) ரத்தத்தை சுத்தமாகும் \”\”அருகம்புல்.\”\”

10) கேன்சர் நோயை குணமாக்கும் \”\” சீதா பழம்.\”\”

11) மூளை வலிமைக்கு ஓர் \”\”பப்பாளி பழம்.\”\”

12) நீரிழிவு நோயை குணமாக்கும் \”\” முள்ளங்கி.\”\”

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \”\”வெந்தயக் கீரை.\”\”

14) நீரிழிவு நோயை குணமாக்க \”\” வில்வம்.\”\”

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \”\”துளசி.\”\”

16) மார்பு சளி நீங்கும் \”\”சுண்டைக்காய்.\”\”

17) சளி, ஆஸ்துமாவுக்கு \”\”ஆடாதொடை.\”\”

18) ஞாபகசக்தியை கொடுக்கும் \”\”வல்லாரை கீரை.\”\”

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \”\”பசலைக்கீரை.\”\”

20) ரத்த சோகையை நீக்கும் \”\” பீட்ரூட்.\”\”
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் \”\” அன்னாசி பழம்.\”\”

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)

23) கேரட் மல்லிகீரை தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \”\”தூதுவளை\”\”

25) முகம் அழகுபெற \”\”திராட்சை பழம்.\”\”
26) அஜீரணத்தை போக்கும் \”\” புதினா.\”\”

27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு 

 வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சிலபிரச்சனைகள் காரணமாக உங்கள்  மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

 நீங்கள் மிகவும்  படபடப்பாகவும்,  தொய்வாகவும் உள்ளீர்கள்.

திடீரென்று உங்கள்இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

 அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

 உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

 ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள்  மூளை உங்களுக்கு சொல்கிறது

இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்…??

 துரதிஷ்ட வசமாக  மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

 நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

“தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக  இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும்  மூச்சை இழுத்து விட வேண்டும்,

 இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,

 இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது  வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

 ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

 மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

 இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.

 இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்”..

 பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள  மருத்துவமனைக்கு செல்லலாம்..

 இந்த தகவலை  குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள். 

வள்ளலார்

இன்று அவரிடம் கேட்டு விட வேண்டியதுதான்”

என்ற முடிவோடு “சாமியைப் பார்க்க விரைந்தான் முத்து

இந்த “சாமி” யார்….???

எந்த ஊர்….???

என்ன பேர்…..???

என்று அந்த கிராமத்தில் யாருக்குமே தெரியாது.

பல வருடங்களுக்கு முன்னால், சின்னக்குப்பம் கிராமத்துக்கு வந்தவர்,

ஊருக்கு வெளியே குடிசை போட்டு தனியாக வசிக்கிறார்

ஊருக்குள் அவராக வரமாட்டார்

விவசாய வேலைகளுக்கு கிராம மக்கள் அவரை வேலைக்கு கூப்பிடுவர்.

ஆனால், செய்த வேலைக்காக பணமோ பொருளோ வாங்கிக் கொள்ளமாட்டார்.

உணவு கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்வார்

எனவே, பெயரில்லாத அவரை “சாமி’ என்று பெயரிட்டு அழைக்கவும் தொடங்கினர்

“இன்று அவரிடம் கேட்டு விட வேண்டியதுதான்” என்ற முடிவோடு அந்த “சாமியை’ப் பார்க்க வந்தான் முத்து.

அவன் குடிசையில் நுழைந்தபோது,

சாமி ஆனந்தமாய் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தார்.

அவருடைய மாற்று உடை ஒன்றைத்தவிர

குடிசையில் வேறு எந்தப்பொருளும் இல்லை

ஆள் நுழையும் சப்தம் கேட்டு,

“வா, முத்து வா” என்று அழைத்தார்

“சாமி, நேற்று நான் பட்டினம் போயிருந்தேன்.

அங்கே என் உறவினர் ஒருவர் இறக்கும் தருவாயில் பட்ட கஷ்டங்ளைப் பார்த்தேன்

அதிலிருந்து என் மனம் கலவரமடைந்திருக்கிறது.

நான் இறக்கும்போது அது போன்ற கஷ்டங்ளை அனுபவிக்க விரும்பவில்லை.

ஆனந்தமாக இறக்க வேண்டும்

அதற்கு வழி ஏதேனும் இருக்கிறதா…??? சொல்லுங்க சாமி,” என்றான்.

“அது மிகவும் எளிமையானது

ஆனால், சுலபமானதல்ல.”

“உன்னிடம் எத்தனை மேலாடைகள் உள்ளன”…???

“இருபதுக்கும் மேல் இருக்கும்.”

அதில் மிகப்பழைய,

விலை மிகக்குறைவான ஒன்றை எடுத்து இப்போது நான் செய்வது போல் செய்துவிட்டு நாளை வா என்றவர்,

தன் மேலாடையைக் கழற்றித் தூக்கியெறிந்தார்.

அதனை அவன் கண் எதிரே தீயிட்டுக் கொளுத்தினார்.

அதைப் பார்த்து சிரித்தார்.

இது என்ன பெரிய காரியம்” என்று நினைத்த முத்து

வீட்டுக்கு வந்ததும் தன்னிடம் இருந்த பத்து வருட பழைய சட்டை ஒன்றை எடுத்தான்.

அது பல இடங்களில் நைந்து கூட போயிருந்தது.

அதனை தூக்கி எறியலாம் என்று நினைத்தபோது,

அது அவன் பாட்டி அவனது பிறந்த நாளுக்குக் கொடுத்த பரிசு என்பது நினைவுக்கு வந்தது.

அதை வைத்து விட்டான்.

இவ்வாறாக ஒவ்வொரு ஆடையை எடுக்கும்போதும் ஒவ்வொரு ஞாபகம்

மறுநாள் சாமியின் கால்களில் விழுந்தான்.

“அய்யா…., ஒரு பழைய ஆடையைக்கூட என்னால் தூக்கி எறிய முடியவில்லை.

என்னை எவ்வாறேனும் காத்தருளுங்கள்.

இதற்காக என் குடும்பத்தைவிட்டு உங்களோடு வந்து விடவும் நான் சித்தமாயிருக்கிறேன்,” என்றான்.

“ஒரு பழைய ஆடையைக்கூட தூக்கி எறிய முடியாத உன்னால்,

நேரம் வரும்போது உடல் எனும் ஆடையை எவ்வாறு சுலபமாக கழற்றிவிட முடியும்”…???

“பசித்திரு,

தனித்திரு,

விழித்திரு”

இதுவே உனக்கான என் உபதேசம்.

பசித்திரு என்றால்

உன் ஆன்மிகப்பசியினை வளர்த்துக்கொள் என்று அர்த்தம்.

உன் குடும்பத்தைவிட்டு என்னோடு வருவதால் மட்டும் பெரிய பயன் விளைந்து விடாது.

அது தற்போது இயலாத காரியமும் கூட.

உலகியல் வாழ்க்கை அனைத்திலும் ஈடுபட்டபோதும்,

இந்த உலகிலேயே நீ மட்டும் தனி ஒருவனாக வாழ்வது போன்ற உணர்வு நிலையில் வாழ்.

அதுவே தனித்திரு என்பதன் பொருள்.

ஒரு பழைய ஆடையைக்கூட தூக்கி எறிய முடியாத நிலையில் நான் உள்ளேன்.

இது போன்று இன்னும் எத்தனை எத்தனை கர்மவினையின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறேனோ’ என்ற விழிப்புணர்வுடன் வாழ்.

இதுவே விழித்திரு என்பதன் பொருள்.

இந்த உபதேசத்தினை கடைபிடி. மற்றவை தானே நிகழும்,”

என்று ஆசிர்வதித்து அவனை அனுப்பி வைத்தார்.

அந்த சாமியார் தெரியுமா…???

வள்ளலார் என்ற பெருமகனார் தான்

உணவு

உணவில் கேழ்வரகை அடிக்கடி சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

தானியங்களில் ஒன்று தான் ராகி என்னும் கேழ்வரகு. அக்காலத்தில் மக்கள் பெரும்பாலும் காலை வேளையில் கேழ்வரகை கூழ் செய்து காலை உணவாக உட்கொண்டு வந்தார்கள்.

அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.

கேழ்வரகு மட்டுமின்றி, கம்பு, மக்காசோளம், கோதுமை போன்றவற்றை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தார்கள்.

ஆனால் மற்றவையோடு ஒப்பிடுகையில் கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

எடையை குறைக்கும் :-

கேழ்வரகில் மிகவும் ஸ்பெஷலான ட்ரிப்டோபேன் என்னும் பசியைக் கட்டுப்படுத்தும் அமினோ ஆசிட் உள்ளது.

மேலும் இதில் நார்ச்சத்து வளமாக இருப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். இதன் மூலம் கண்ட உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்து, அதை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் குறைந்து, உடல் எடை குறைய வழிவகுக்கும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் :-

ராகி இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ப்ளேக் உருவாவதைத் குறைப்பதோடு, இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படுவதைத் தடுத்து, அதன் மூலம் பக்க வாதம் மற்றும் இதர இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

இதற்கு கேழ்வரகில் உள்ள லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் என்னும் அமினோ அமிலங்கள் தான் காரணம்.

இந்த அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள கொழுப்புக்களை உடைத்து எளிதில் வெளியேற்றிவிடும்.

நீரிழிவு :-

கேழ்வரகை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால்கள் நீரிழிவு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

ராகில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவைக் குறைத்து, சீராக பராமரிக்கும்.

எலும்புகளுக்கு நல்லது :-

வளரும் குழந்தைகளுக்கு கேழ்வரகு கூழ் கொடுப்பது மிகவும் நல்லது. இதற்கு அதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி தான் காரணம்.

இச்சத்துக்களால், எலும்புகள் வலிமையடைவதோடு, அதன் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இளம் தலைமுறையினரும் கேழ்வரகு கூழ் குடித்தால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

இரத்த சோகை :-

ராகியில் இரும்புச்சத்து வளமாக இருக்கிறது. இதனால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவது தடுக்கப்படும். மேலும் இதில் வைட்டமின் சி இருப்பதால், எளிதில் உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சும்.

பற்களை வலிமையாக்கும்:-

பற்கள் வலிமையிழந்து மஞ்சளாகவோ அல்லது வாய் துர்நாற்றமோ இருந்தால், வாரம் ஒருமுறை ராகி கூழ் குடித்து வாருங்கள். இதனால் அதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்களை வலிமையாக்கும். மேலும் வாய் துர்நாற்றம் வீசுவதும் நீங்கும்.

செரிமானத்திற்கு உதவும் :-

கேழ்வரகில் உள்ள அளவுக்கு அதிகமான நார்ச்சத்தால், செரிமானம் மற்றும் குடலியக்கம் சீராக நடைபெறுவதோடு, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். அதிலும் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து வளமாக இருப்பதால், குடலில் எவ்வித இடையூறுமின்றி உணவுகளான செல்ல வழிவகுத்து, எளிதில் கழிவுகளை வெளியேற்றும். எனவே முடிந்தால் தினமும் ஒரு டம்ளர் ராகி கூழ் குடியுங்கள்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ராகி இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ப்ளேக் உருவாவதைத் குறைப்பதோடு, இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படுவதைத் தடுத்து, அதன் மூலம் பக்க வாதம் மற்றும் இதர இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

இதற்கு கேழ்வரகில் உள்ள லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் என்னும் அமினோ அமிலங்கள் தான் காரணம். இந்த அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள கொழுப்புக்களை உடைத்து எளிதில் வெளியேற்றிவிடும்.

நீரிழிவு கேழ்வரகை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால்கள் நீரிழிவு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். ராகில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவைக் குறைத்து, சீராக பராமரிக்கும்.

எலும்புகளுக்கு நல்லது வளரும் குழந்தைகளுக்கு கேழ்வரகு கூழ் கொடுப்பது மிகவும் நல்லது. இதற்கு அதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி தான் காரணம்.

இச்சத்துக்களால், எலும்புகள் வலிமையடைவதோடு, அதன் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இளம் தலைமுறையினரும் கேழ்வரகு கூழ் குடித்தால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

இரத்த சோகை ராகியில் இரும்புச்சத்து வளமாக இருக்கிறது. இதனால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவது தடுக்கப்படும்.

மேலும் இதில் வைட்டமின் சி இருப்பதால், எளிதில் உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சும்.
பற்களை வலிமையாக்கும் பற்கள் வலிமையிழந்து மஞ்சளாகவோ அல்லது வாய் துர்நாற்றமோ இருந்தால், வாரம் ஒருமுறை ராகி கூழ் குடித்து வாருங்கள்.

இதனால் அதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்களை வலிமையாக்கும். மேலும் வாய் துர்நாற்றம் வீசுவதும் நீங்கும்.

செரிமானத்திற்கு உதவும் கேழ்வரகில் உள்ள அளவுக்கு அதிகமான நார்ச்சத்தால், செரிமானம் மற்றும் குடலியக்கம் சீராக நடைபெறுவதோடு, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

அதிலும் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து வளமாக இருப்பதால், குடலில் எவ்வித இடையூறுமின்றி உணவுகளான செல்ல வழிவகுத்து, எளிதில் கழிவுகளை வெளியேற்றும்.

எனவே முடிந்தால் தினமும் ஒரு டம்ளர் ராகி கூழ் குடியுங்கள்.

மகிழ்ச்சி

இன்று நம்மில் பலரது நிலைமையை  இது.

“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று
அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

குடும்பத்துடன் வெளியே செல்வது,

பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,

பிடித்த புத்தகம் படிப்பது,

பிடித்த படம் பார்ப்பது,

பிடித்த கோவிலுக்கு போவது,

பிடித்த உடை உடுத்துவது,

பிடித்த உணவு உண்பது

என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது.

எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்…!