மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

அருகம்புல் பொடி
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பொடி
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

கடுக்காய் பொடி
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கரா பொடி
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

ஜாதிக்காய் பொடி
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பொடி
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

வேப்பிலை பொடி
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியா நங்கை பொடி
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி,
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

கோரைகிழங்கு பொடி
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருஙகைவிதை பொடி
ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர் குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலை பொடி
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை

சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு ச

ேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.நன்றி வணக்கம்

4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்

படிக்கும் போது பாருங்கள், உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் …

சம்பவம்-1 

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்.”அப்பா இங்கே பாருங்கள்,”..

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!”

அவனருகில் இருந்த அவனது அப்பா

சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்….

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

“அப்பா மேலே பாருங்கள், ‘ மேகங்கள்

நம்மோடு வருகின்றன..; என்றான்…

இதைக்கேட்டு தாங்க முடியாத

தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

“நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்”

அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்

கொண்டே சொன்னார்…

“நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்…

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு

தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்.”

அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை

இழந்துவிடலாம்.

சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

‘உருவத்தை பார்த்து யாரும் யாரையும்

எடை போடவேண்டாம்.

சம்பவம்-2 

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..

அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்….

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,…

பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்…

உடனே அந்த சிறுமி, தாயிடம்

சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்….

நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..

அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு

இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.

சம்பவம்-3

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை

விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்.”

ஒரு கட்டு கீரை என்ன விலை….?””

“ஐந்து ரூபாய்”

ஐந்து ரூபாயா ….??? மூன்று ரூபாய் தான் தருவேன்.

மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ”

“இல்லம்மா வராதும்மா”

அதெல்லாம் முடியாது.

மூன்று ரூபாய் தான்

பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு

“மேல ஒரு ரூபாய் போட்டு

கொடுங்கம்மா” என்கிறாள்”

முடியவே முடியாது. கட்டுக்கு மூன்று ரூபாய்தான். தருவேன்”… என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு

“சரிம்மா உன் விருப்பம்” என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு பன்னிரண்டு ரூபாயை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

“என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல…?” என்று அந்த தாய் கேட்க”

இல்லம்மா போய்தான் கஞ்சி

காய்ச்சிணும்”

“சரி. இரு இதோ வர்றேன்.” என்று

கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..

திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். ” இந்தா சாப்ட்டு போ”

என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..

“ஏம்மா ஐந்து ரூபாய்க்கு

பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு

வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு

முப்பது ரூபாய் வருதும்மா…..?

என்று கேட்கஅதற்கு அந்த தாய்,

“வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா” என்று கூறினாள்.

இது தான் உண்மையில் மனித நேயம் ……

சம்பவம் 4

மாலையில் நடைப் பயிற்சியை

முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்

வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழியில் ஒரு

கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்

வேகமாக நடக்கத் தொடங்கினர்…

திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்

ஓடத்தொடங்கினர்.

கணவர் வேகமாக ஓடினார்.

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து

முடிக்கும் போது தான் மனைவி

பாலத்தினை வந்தடைந்தார்.

மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து

வந்ததால் மனைவி பாலத்தை கடக்க

பயப்பட்டாள்.

அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்…

இருட்டில் எதுவும் தெரியவில்லை.

மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது…

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு

கணவனை அழைத்தாள்.

கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.

அவளுக்கு அழுகையாய் வந்தது.

இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு

இக்கட்டான நிலமையில் கூட உதவி

செய்யாத கணவனை நினைத்து

வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்…

கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்

கொண்டிருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு

எதுவும் செய்யாமல் மௌனமாக

இருப்பதாக தோன்றும்…

ஆனால்

உண்மையிலேயே அவர் தன்

குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்

கொண்டுதான் இருப்பார்.

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.

தூரத்தில் இருப்பது தெளிவாக

தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?

நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.

அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.

வாழ்க்கை பாடத்தில் நிறைய கற்று கொள்ளலாம்.

எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

” Be Positive Always”படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

The Ten

 1. Rise before dawn and offer your prayer and meditation at a fixed hour, preferably completing them before sunrise. Have a separate place and seat for meditation. As far as possible, develop the habit of sitting in one and the same pose. Give special attention to purity of body and mind.

 2. Begin your meditation with a prayer for spiritual elevation. Offer your prayer in such a way that the heart is filled with love.
 3. Fix your Goal, which should be complete oneness with God. Rest not till the ideal is achieved.
 4. Simplify your life so as to be identical with Nature.
 5. Always be truthful, accept miseries as coming from God for your own good and be thankful.
 6. Know all people as thy brethren and treat them as such.
 7. If you are feeling wronged by anyone, do not wish for revenge. Instead, think this comes from God and be grateful.
 8. Be happy to eat in constant Divine thought whatever you get, with due regard to honest and pious earnings.
 9. Mould your behaviour and way of living to such a high order as to rouse a feeling of love and piety in others.
 10. At bedtime, feeling the presence of God, repent for any wrongs committed. Beg forgiveness in a supplicant mood and prayerfully resolve not to allow repetition of the same

இன்றைய மருத்துவத்தின் நிலை..

ஒரு நாள் திடீரென்று

குப்புசாமியின் இடது கால் நீல
நிறத்தில் மாறி விட்டது.

பயந்து போய் ஊரில்
உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு
சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை
கேட்டார்.

பரிசோதனை செய்து விட்டு
காலில் #விஷம் ஏறி விட்டது என்றும் காலை
அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி
அடைந்த குப்புசாமி தயக்கத்துடன் வேறு
வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக்
கொண்டார்.

சில நாட்களுக்குப் பிறகு வலது
காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே
மருத்துவமனைக்கு சென்றார். வலது
காலிலும் விஷம் ஏறி விட்டது என்று
சொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும் என மருத்துவர் சொல்லி விட, நொந்து போன குப்புசாமி அதற்கும் ஒத்துக் கொண்டார்.

இரு கால்களையும் இழந்து, கட்டை கால்களுடன் நடமாட ஆரம்பித்த
குப்புசாமி க்கு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.

கட்டைக்_கால்களும் நீல நிறத்தில் மாறி விட, பதற்றத்துடன் மருத்துவரை அணுக, மருத்துவருக்கு கட்டைக் கால்களில் விஷம் எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து அனைத்து வகையான உடல் பரிசோதனைகளையும் முடித்த பின் மருத்துவர் சொன்னார்,

“குப்புசாமி, உங்கள்

#லுங்கிசாயம்போகிறது, மன்னித்து விடுங்கள்”..!!

Chitra Pournami

The full moon in Chitra: A full moon is considered auspicious in many religions because of its effects on the attitude of people. Full moon is said to promote creativity and positive sentiments. Sentiments are said to ride on higher waves of consciousness leading to abundance of positive energy and higher consciousness.

An exalted Sun in Aries: The solar calendar begins with an exalted Sun in Aries, a favorable position in the sky that can provide the most benefic results to Earth. So it is a mighty Sun, fully empowered to bring about its good effects.

The Day of Chitragupta: In Hinduism, Chitragupta is the assistant of lord Yama. He is the record keeper of good and bad deeds or karmas of human beings on earth. It is believed that when a person dies, Chitragupta immediately makes a thorough check of the list of bad and good karmas of the person and passes the message to Lord Yama for final decision on the soul of the person.

The name Chitra gupta also signifies the hidden (gupta) pictures (Chitra) of deeds of every human on earth. On this day, when the Sun and Moon create powerful energy around earth plane, the effect on humans are said to be profound. The concept of Chitragupta being vigil on the activities of humans on Earth is to tell humans on Earth not to commit any sin, especially on such an auspicious day. This will help in preserving goodness of mind and good will in the hearts of people by urging them to commit to good actions only.

Legend of Chitragupta: Once lord Indra and his teacher Brihaspati had an argument and Indra ignored his teacher’s advice. Thereafter, Brihaspati became reticent and refrained from advising Indra. Indra began to commit many mistakes. After his long absence, Brihaspati returned and asked Indra to make a pilgrimage to Earth to lessen the burden of his sins. After coming to Earth, he realized that he had been redeemed of his sins and thought Lord Shiva to have absolved him of bad karmas. Indra found a Shiva linga and began to pray with a golden lotus on the day of Chitra Pournami.

Worshipping Chitragupta: Special puja is arranged in temples on this day such as the Chitragupta temple in Kanchipuram, Airavateshwarar temple in Darasuram, Chandra Mouliswar temple in Thiruvakkarai and others.

When you pray to God for the purpose of dissolving your past sins with sincerity and devotion, your prayers will be answered. With your prayer to the higher energy, you also resolve not to commit acts which are considered as sins in our society. Thus your urge and willingness to cleanse your Karmas which stand as obstruction in your way for fulfillment of your desires take you closer to God, to seek blessings for being forgiven.

Therefore, people usually enjoy a highly positive mental energy during this time. This day is dedicated to Chitra Gupta, the official book keeper of Yama (the god of death). Prayers and customary worship are offered to Chitra Gupta in a way propitiating him to be benign.

 

It is believed that Chitra Gupta closely keeps track of the actions performed by everyone born on this earth and duly records them. Upon the death or the completion of the earthly sojourn of an individual’s, Chitra Gupta consolidates the accounts of a person and reports to Lord Yama for pronouncing the final judgment and deciding on the fate of the individual.

 

The name Chitra Gupta (Chitra – picture; Gupta – hidden) is highly significant meaning hidden picture. This meaning is suggestive of the important role performed by Chitra Gupta in the life of every individual. The event of Chitra Pournami reminds people that good and bad deeds will certainly fetch the corresponding consequences on people life after life. Therefore, people must always resort to doing good actions desisting from bad deeds. Also, the process of expiation and prayers shall relieve people of their sins and reduce the adverse impact of the bad deeds. 

 

Puranas or the story books of Hinduism narrate an incident when Indra or the head of gods grew egoistic once neglecting the words of his Guru or preceptor Brihaspati. Due to this he fell on evil ways and invited a lot of bad karma. Once he realized his mistakes, he took the advice of Brihaspati and performed a special worship to Lord Shiva on the Chitra Pournami day to get relieved of his sins.

 

Some famous shrines in India have dedicated shrines for Chitra Gupta. In all those temples, special pujas are offered on the Chitra Pournami day. Across the country, Chitra Pournami is celebrated in diverse ways and people worship their favorite deity either with a special puja at their home or by visiting the temple

Ways to dissolve your karma: The essence of worship on this day is the sincere effort to liberate yourself from the clutches of negative energies.

Various ways to dissolve karma:

 • On this day, you can meditate on the story of Indra and his Guru Brihaspati.
 • Worship Shiva or Chitragupta with incense, camphor, flowers.
 • Feed the poor and the needy.

திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்

வரலாறு

 

இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காளஹஸ்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும்.மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று.

சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக் கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இக்கோயிலில் உள்ளன. சோழர்களும், விஜய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோயிலுக்கு அளித்துள்ளனர்.

பல்லவர் காலத்தில் இருந்த இக் கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோயில்களை இங்கு எடுப்பித்துள்ளான்.

12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும்கட்டுவித்தார். கிபி 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவர் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.

திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில்

திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் பாடல் பெற்ற துளுவ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் கைலையிலிருந்து இராவணன் கொண்டுவந்தது என்பது தொன்நம்பிக்கை. இராவணன் எடுக்க முயலும் போது அந்த சிவலிங்கம் பசுவின் காது போல குழைந்ததால் கோகர்ணம் என்ற பெயர் பெற்றது. (“கோ” = பசு, “கர்ணம்” = காது).

பிரம்பானான் கோயில்

வரலாறு

 

சாவகத்தின் ஒன்பதாம் நூற்றாண்டு பௌத்த வம்சமான சைலேந்திர வம்சத்துக்குப் போட்டியாக, இந்து வம்சமான சஞ்சய வம்சத்தால் அமைக்கப்பட்டதே இப்பிரமாண்டமான இந்துக் கோயில் ஆகும்.

இக்கோயிலின் பிரமாண்டக் கட்டமைப்பானது, மத்திய ஜாவாவின் மாதாராம் அரசில்மகாயான பௌத்தத்தின் வரவால் வீழ்ச்சியடைந்திருந்த இந்து அல்லது சைவ சமயம், பழையபடிக்கு முன்னிலைக்கு வர ஆரம்பித்ததைச் சுட்டுவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இதை அமைத்தவர், சஞ்சய வம்ச மன்னன் “ராகாய் பிகாதன்” என்று நம்பப்படுகின்றார்.பிகாதனால் பொ.பி 850 அளவில் ஆரம்பமான இதன் கட்டுமானம், மன்னன் லோகபாலனாலும், பாலிதுங் மகாசம்பு மன்னனாலும் கட்டிமுடிக்கப்பட்டது. அதன் பின்னும், இக்கோயில், தட்சன், துலோதுங் முதலான பிற்கால மன்னர்களால் விரிவாக்கம் பெற்றிருக்கின்றது.

930களில், ஈசியான வம்சத்து இம்பு சிந்தோக் மன்னனால் மாதாராம் அரசு, கிழக்கு சாவகத்துக்கு இடமாற்றப்பட்டதை அடுத்து, பிரம்பானான் வளாகம் பொலிவிழக்கத் தொடங்கியது. பின்பு முற்றாகக் கைவிடப்பட்ட பிரம்பானான், பதினாறாம் நூற்றாண்டில் இடம்பெற்ற பாரிய பூமியதிர்வு ஒன்றால் பெருத்த சேதமடைந்ததுடன், சிதைந்த அப்பிரமாண்டக் கோயில் இடிபாடுகள் உள்ளூர்வாசிகளை அச்சுறுத்தியதுடன், அதைச் சுற்றி சுவாரசியமான மீமாந்தக் கதைகளையும் கட்டச் செய்தது.

சிதைந்துபோய் காட்டுக்குள் உடைந்தொழிந்து கிடந்த பெருங்கோயில் பற்றி உள்ளூர்வாசிகள் அறிந்திருந்தாலும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்திருக்கவில்லை. இப்பகுதியில் கிடைத்த சிற்பங்களையும் கற்களையும் எடுத்துச் சென்று, அலங்காரப் பொருட்களாகவும் கட்டுமானங்கள் அமைக்கவும் பயன்படுத்துவதே தொடர்ந்தது. 1918 ஆம் ஆண்டு, எஞ்சிய சிதைவுகளைப் பாதுகாத்து சீரமைக்கும் பணியை, அப்போது சாவகத்தை ஆண்ட இடச்சு அரசு ஆரம்பித்தது. 1953 இல், பிரதான ஆலயமான சிவன் கோயில் முற்றாக மீளமைக்கப்பட்டு, சுகர்ணோவால் திறந்துவைக்கப்பட்டது.

பசுபதிநாத் கோவில்

தல புராணம்

 

இக்கோவில் எப்போது நிறுவப்பட்டது என்பது உறுதியாக அறியப்படவில்லை. நேபாள புராணங்களான மகாத்மயா மற்றும் ஹிம்வத்கந்தா என்பனவற்றின் கூற்றுப்படி.

ஒரு கதை நம்பப்படுகிறது. அஃது, கைலாய மலையில் வாழ்வது சிவனுக்கு மிகவும் அலுத்து விட்டதால் அதிலிருந்து விடுபடும் பொருட்டு ஒரு நாள் புதிய இடமொன்றைத் தேடினார். இறுதியில் காத்மாண்டுப் பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தார். யாரிடமும் கூறாமல் தன்னிடத்தை விட்டுப் பிரிந்துப் பள்ளத்தாக்கில் வசிக்கலானார்.

பிற கடவுளர் அவரது மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்குள், அவர் அங்கு பசுபதி என்ற பெயரில் விலங்குகளின் கடவுளாகப் புகழ் பெற்றுப் போற்றப்பட்டார். பிற கடவுளர் அவரைத் தேடி அங்கு வந்த போது அவர் ஒரு பெரிய மான் வடிவில் மாறுவேடம் பூண்டார்.

அவர்கள் அவரிடத்து உதவி கேட்டபோதும் அவர் உதவாமல் அம்மான் வேடத்திலேயே சுற்றித் திரிந்தார். மேலும் சிவன் பிற கடவுளரது கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவர்கள் தங்களது ஆற்றலைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர். திருமால் அவரது கொம்புகளை திடீரெனப் பிடித்ததில் அவை துண்டுகளாக உடைந்து சிதறின.

பின்னர் திருமால் பாக்மதி ஆற்றங்கரையில் ஒரு கோவிலை நிறுவி அங்கு உடைந்த மான் கொம்புகளைக் கொண்டு லிங்கச் சிலையை உருவாக்கினார். காலப்போக்கில் அக்கோவிலானது சிதைவடைந்தது. மேலும் அது யாராலும் கண்டுகொள்ளப்படவும் இல்லை. பின்னர் ஒரு நாள் ஓர் ஆடு அம்மண்மேட்டின் மீது பாலைச் சுரந்தது. அவ்விடத்தைச் சுற்றி அந்த ஆடு தன் கால்களால் தோண்டப் புதையுண்ட கோவில் வெளிப்பட்டது. பின்னர் அந்த லிங்கச் சிலை கண்டறியப்பட்டு மீண்டும் கோவில் நிறுவப்பட்டது.

பசுபதிநாத் கோவிலைப் பற்றி விவரிக்கும் பிற கதைகள்

 

இடையன் கதை

 

சிவன் முறை ஒரு மான் வடிவம் எடுத்துக் பாக்மதி ஆற்றின் காடுகளில் அலைந்து திரிந்த போது கடவுளர் அந்த மானைப் பிடிக்க அதன் கொம்புகளைப் பற்றினர். அப்போது அக்கொம்பு உடைந்து சிவனின் உரு வெளிப்பட்டது. அது முதல் அம்மானின் உடைந்த கொம்பு ஒரு லிங்கமாக வழிபடப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அது புதையுண்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஓர் இடையன் தான் மேய்த்து வந்த மாடு அங்கு தானே பால் பொழிந்ததைக் கண்டு, அங்கே லிங்க உருவத்தைக் கண்டறிந்தான் எனக் கூறப்படுகிறது.

லிச்சாவி வம்சம்

 

நேபாளத்தின் லிச்சாவி வம்சாவளியைச் சேர்ந்த கோபால்ராஜ் என்ற அரசன் காலத்தில் கிடைத்த, கி.பி. 753 -ஐச் சேர்ந்த, ‘இரண்டாம் ஜெயதேவர்’ என்பவரால் அமைக்கப்பட்டு, இக்கோயிலின் வெளிச்சுற்றில் கிடைத்த கல்வெட்டுச் சான்றின்படி இக்கோவில் ‘சுபஸ்பதேவர்’ என்பவரால் கட்டப்பட்டது. அவரது காலம் தொடங்கி அதாவது கி.பி. 464-505 வரை 39 தலைமுறைகளாக ‘மானதேவர்’ என்பவரின் காலம் வரை அக்கோயிலில் வழிபாடு நடந்தமைத் தெரியவருகிறது.

கோவில் சான்றுகள்

 

சுபஸ்பதேவர் இங்கு ஐந்து நிலை மாடங்கள் கொண்ட கோவில் அமைப்பதற்கு முன்பே அங்கு லிங்க வடிவத்தில் இறைவனை வழிபாடு செய்யும் கோவில் ஒன்று இருந்தது. காலப்போக்கில் இந்தக் கோவிலை பழுதுபார்த்து புணரமைக்கும் தேவை எழுந்தது. எனவே இங்கு சுபஸ்பதேவரால் கோவில் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. பின்னர் இடைக்காலத்தில் இந்த கோவில் ‘சிவதேவர்’ (கி.பி.1099-1126 ) என்ற மன்னரால் மறுகட்டுமானம் செய்யப்பட்டதாகவும் அதன் பின் ஆனந்த மல்லர் என்ற அரசன் இக்கோவிலுக்கு ஒரு கூரை அமைத்து அதனைப் புதுப்பித்தார் எனவும் கோவில்சான்றுகள் கூறுகின்றன.