சாதிக்க வழி தேடி

1. கேட்டால் தவிர யாருக்கும் #அறிவுரை சொல்லாதீர்கள்.
– நேற்றுவரை சொல்லிக் கொண்டிருந்தேன் !!

2. மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை யோசிப்பதை நிறுத்திவிட்டு,

உங்களை மேம்படுத்துவதில் #கவனம் செலுத்துங்கள்.
– பயிற்சி ஆரம்பம் !!

3. கோபம் வந்தால், அவ்விடத்தை விட்டு வெளியேறுங்கள்.

-பொதுவாக எனக்கு கோபம் உடனே வந்ததில்லை, வந்தால் ருத்ரதாண்டவம் தான் !

4. யாராவது நல்லவிஷயம் செய்தால், அவரை பாராட்டுங்கள்.
-நான் பலபேர் மத்தியில் பாராட்டினேன் !!

5. பிறரது பொறுப்புகள் குறித்து, சதா #பேசிக் கொண்டிருக்காதீர்கள்.

-அதை மட்டும்தான் செய்துள்ளேன் !!

6. கேட்டால் மட்டும் #உதவுங்கள்.

-உணர்ந்து உதவினேன் !!

7. மற்றவர்களின் #நடத்தைகளில் கவனம் செலுத்தாதீர்கள்.

-மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறேன் !!

8. எந்த #ஆபத்தும் வளர்ந்து, உங்கள் கழுத்தை #நெரிக்கும் அளவிற்கு விடாதீர்கள்.

-பல ஆபத்துக்களில் என் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது !!

9. #நீங்களாகப் போய், எல்லா கொக்கிகளிலும் #சிக்க வேண்டாம்.

எல்லாமே உங்கள் பிரச்சனைகள் அல்ல.
-எல்லாப் பிரச்சனைகளிலும் எனக்கும் பங்குள்ளதே என்று கையாண்டுள்ளேன் !!

10. உங்களுடைய #அன்பு, எவர் #உரிமையையும் பரிக்க வேண்டாம்.

-பலபேரின் உரிமையை என் உண்மையான அன்பால், பலபேரிடமிருந்து மறைமுகமாக பரிக்கப்பட்டுள்ளதை உணர்ந்திருக்கிறேன் !!

11. உங்களுடைய #வாழ்க்கையை, நீங்கள் அனுபவியுங்கள். அதுபோல மற்றவர்களையும் வாழவிடுங்கள்.

– நான் என் வாழ்க்கையை சமீபகாலத்தில்தான் வாழவே ஆரம்பித்து இருக்கிறேன் !!

12. #எல்லோரையும் மதியுங்கள், #மதிப்பைக் கொடுக்கக் கொடுக்கதான் அது திரும்ப கிடைக்கும்.

-நான் தராதரம் புரிந்துதான் சிலரை மதித்து வந்தேன் !

13. நீங்கள் யாரைவிடவும் மேலானவர் இல்லை. அதேபோல் கீழானவரும் இல்லை என்ற கருத்தியில் உறுதி காட்டுங்கள்.

-உறுதி காட்டியதில்லை.

14. அவரவர்க்கென தனிப்பட்ட விருப்பங்களும், தேர்வுகளும் இருக்கும். அதில் தலையிடாதீர்கள்.

-நான் தலையிட்டுள்ளேன் !!

15. உங்கள் #பேச்சை எல்லா நேரங்களிலும், எல்லோரும் கேட்டு நடக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.

-எதிர்பார்த்திருக்கிறேன் !!

மேற்சொன்ன 15 கருத்துக்களும் மனிதர்களுடன் நல்லுறவில் இருக்க முக்கியமானத் தேவைகள்.

மனிதர்களிடத்தில் நல்லுறவில் இருந்தால் மட்டுமே சாதிக்க வழி கிடைக்குமாம்.

 

ஆண் மகனின் வாழ்வியல்

ஆணின் ஆட்டம்
பதினாறு வரைதான்

பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு

வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் ஆண்மகன்.

பத்து வயது வரை பறந்து திரியும்
பறவைபோல இருப்பவன்…

பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது… சோதனை

டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது ஐடிஐ தான்…. தெரிதா?”

ப்ளஸ்1 போகும்போது….
“ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா… இன்ஜினீயரிங்.

இல்லேன்னா ஏதாவது ஒர்க்‌ஷாப்பு தான்..”

உயிரைவிட்டு படித்து ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபின்…

” ஒங்க பாட்டன் பூட்டன் எவனும் சொத்து சேத்து வச்சிட்டுப் போகல..

2 லட்சம் பேங்கு லோன்லதான் படிக்கிறங்கற நெனப்பு இருக்கட்டும்…

சும்மா மைனர்களின் வேஷம் போட்டீன்னா குடும்பம் நடுத்தெருவுலதான்..”

நான்கு வருஷம் படிப்பு படிப்பு என உயிரை விட்டால்…
ஏழாவது செம்மில் ‘கிலி’ பிடிக்கும். Placement ல புடிங்கிடுச்சுன்னா.. எல்லாமே போச்சு.

உசிரோட இருந்து பிரயோஜனமில்ல.(

அப்பா, அம்மா இருவரின் வசனம் அவ்வப்போது மிரட்டும்.

பொட்டை புள்ளைன்னா பரவால்ல.

கடனை ஒடனை வாங்கி 10 ங்கறது 20 பவுனா போட்டா எவன் கையிலயாவது புடிச்சுக் குடுத்துட்டு வெடுக்குன்னு இருக்கலாம்.

நீ ஆம்பளை! நாளைக்கு ஒரு நல்ல வேலையிருந்தாத்தான் ஒரு மனுசனா ஊருக்குள்ள தலைநிமிந்து நடக்கமுடியும்.

வாங்குன கடனைக் கட்டனும் உங்க அக்காளை ஒரு நல்ல எடத்துல புடிச்சுக் குடுக்கனும்.

எல்லாம் உங்கையுலதான் இருக்குது…”

ஒரு வழியாக வேலைக்கு சேர்ந்தால்….

பெருநகரத்தில் அகப்பட்ட சிறுமீனாக மிரண்டு அந்த ஆடம்பரங்களில் கரைந்து போகாமல் குடும்பத்தின் கனவுகளை கலைத்துப் போடாமல்..

எந்த ஓட்டலில் குறைந்த விலையில் சோறுகிடைக்கும் என்று அலைந்து..

இரண்டு நாள் விடுமுறைக்கு பஸ்கட்டணத்தை பயத்துடன் கணக் கிட்டு மலிவு கட்டண பஸ்சில் இடுப்பொடிய பயணம் செய்து

கவலையோட விசாரிக்கும் பெற்றோரிடம் மகிழ்ச்சியாக இருப்பதாக நடித்துக் கொண்டு…

உள்ளுக்குள் தனியாக எல்லாவற்றையும்
சமாளித்து….

கல்விக்கடன், குடும்பக்கடன் அனைத்தையும் சமாளித்து மீள்வதற்குள்

“எத்தனை நாளைக்கு இப்படி ஓட்டல்ல சாப்பிட்டு ஒடம்பைக் கெடுத்துக்கவ..

சீக்கிரம்
ஒரு கல்யாணத்தைப் பண்ணீட்டா.. எங்க கடமை முடிஞ்சுறும்…”
இங்கேதான் தொடங்குகிறது..

ஒரு ஆணின் இரண்டாம் கட்டம் …

திருமணம் நடந்து
மனைவியிடம் அன்பாக நடந்து
கொண்டால்!!!!

“அய்யோ சாமி காணாதக் கண்டவன் மாதிரி இந்தத் தாங்கு தாங்கறான்”
என்று குடும்பத்தினரிடமும்

அதே நேரத்தில் குடும்பத்தில் கொஞ்சம் அக்கறை காட்டினாலும்….

” ஒங்களுக்குன்னு ஒரு குடும்பமாயிருச்சு…

இத்தனை காலம் சம்பாதிச்சதைப் பூராம்
தொடைச்சிப் புடுங்கியாச்சு.. இனிபோதும்”
என்று பெண்டாட்டியிடமிருந்து புறப்படும்
ஒரு உத்தரவு….

வேலை செய்யும் இடத்தில் இருக்கும் நெருக்கடியை வீட்டில் சொல்லக்கூடாது.

வீட்டில் கிளம்பும் புகைச்சலை வெளியில் சொல்லக்கூடாது.

ஆசை 60 நாள் மோகம்30 நாள்…

திருமண வாழ்வில் சிறு சிறு ஊடல்கள் சண்டையாகும் .

பெண்ணின் குரல் ஓங்கும்போது ஆணின் கவுரவம் குன்றிப்போகும்

என்கிற அச்சத்தில் வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்து முதுகெலும்பு காணாமல் போகும்

பெற்றவர்களையும் விட்டுக் கொடுக்காமல்,

மனைவி பேச்சையும் தட்ட முடியாமல்

இரண்டு பக்கமும் ஆதரவு கொடுத்து

இரண்டுபக்கமும் கெட்ட பெயர் வாங்கி..

பிள்ளைகள் பெற்று வம்சத்தை விருத்திசெய்து,

அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்களது ஆசைகளை தேவைகளைப் பூர்த்தி செய்ய அல்லாடும்போது

மனைவியே ‘கஞ்சன் ‘ என்று சொன்னாலும் அதையும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளவில்லை யெனில்

‘சிடுமூஞ்சி’*யைக் கட்டிகிட்டு சீரழிகிறேன் என்னும் புலம்பலையும் சகித்துக் கொள்ளவேண்டும்.

குடும்பத்தில் விசேஷம் என்றால்

மனைவி மக்களுக்கு நல்லதாய் தேடி தேடி துணிமணி வாங்கிக் கொடுக்கும் ஆண்பிள்ளை

தனக்கு துணி எடுக்க தள்ளுபடிக்காக அலைவான்.

தீபாவளி திருநாள் என்றால் எல்லாருக்கும்
நல்லபடியாக செய்து.. ஆண் உறவு & நட்பில் வரும்….

கல்யாணம் கருமாதிக்கு மொய் எழுத பொய்சொல்லி கடன் வாங்கி,,

வட்டி கனவில் வந்து மிரட்ட கனவில் கூட பயந்து ஒடுங்க…

இந்த ஆம்பளைக்கு..,” என்கிற மாபெரும் பழிவரும்.

உறவில் யாராவது சொந்தமாக

ஒரு வீடு வாங்கினாலோ?

கார் வாங்கினாலோ?

அந்த நிமிஷம் புறப்படும் விமரிசனக் கனைகள்…

“ஊரு ஒலகத்துல ஒவ்வொரு ஆம்பளைக எப்படியெல்லாம் சாமர்த்தியமா பொளைச்சு குடும்பத்த மேலுக்குக் கொண்டு வராங்க..

எனக்கும் வாச்சுதே ஒன்னு…

அரைக்காசுக்கு பொறாத மனுசன்…

எல்லாம் நான் வாங்கி வந்த வரம்..

“என்கிற தலைக்கணம் தொடங்கும்.

குடும்பத்தில் குழந்தைகளிடம் கரிசனையாக நடந்து கொண்டால்… ‘

பிள்ளைகளை செல்லம் கொடுத்து கெடுக்கிறாய்’

கண்டிப்பாக நடந்து கொண்டாலோ?… ‘

பெத்த புள்ளைங்கன்னு துளியாவது பாசம் இருக்கா???

எப்பப் பாரு கரிச்சுக் கொட்டறது’

அப்பா.. அம்மாவுக்கு வயதாகி அவர்கள் படுக்கையில் விழுந்து

அதை பார்க்கும் நிலை வந்தால்

பெண்களுக்கு
அப்போது வரும் ஒரு தர்ம ஆவேசம்.

‘ஒங்க அப்பா அம்மா காடு தோட்டம் காரு பங்களான்னு வாங்கி வெச்சிருக்காங்களா?
என்னால முடியாது ..
வழிக்க..

உங்க தம்பிய பாக்கச் சொல்லுங்க..

அமைதியான ஒரு ஆண்மகனுக்கு வாழ்நாளெல்லாம் வசவுதான்,

பழியும், தூசனமும், நிந்தனையும் நிழல் போல அவனைத் தொடர்ந்து வரும்.

ஒருபெண் தன்பிள்ளையை பத்து மாதம் சுமந்து பெற்றுத்தருகிறாள்

அதன் பெருமையையும் உரிமையையும் காலமெல்லாம் அவள் அனுபவிப்பாள்.

ஆனால் வாழ்நாள் முழுவதும்

ஒரு குடும்பத்தையே தன் நெஞ்சில் சுமக்கும்
ஒரு ஆணுக்கு

எந்தக் பெருமையும் இல்லை .

எந்தப்புகழும் இல்லை.

புகழ் வேண்டாம், பழிவராமல் இருந்தால் போதாதா?

இத்தனை சோதனைகளையும் தாண்டி ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றால் அப்போதும்

நான் மட்டும் இந்த ஆளை கட்லேன்னா.. இந்த மனுசன் ரோடு ரோடா பொறுப்பில்லாம சுத்திகிட்டிருந்திருப்பாரு

இன்னிக்கு இந்த வீடு காரு சொத்து சொகம் எல்லாம் என்னோட ராசி..

என் சாமர்த்தயத்தில நான் கொண்டு வந்தேன் என்பர்!!!!

ஆணாய்ப் பிறந்தவனின் ஆட்டமெல்லாம் *
25 வயது வரைதான்

அதன்பிறகு அவன் சாகும்வரையிலும்

“கண்ணுக்குத் தெரியாத ஒரு நுகத்தடி

அவன் கழுத்தின்மீது ஏறி அமர்ந்து அவனை அழுத்திக் கொண்டேயிருக்கும்.

அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்..

உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மரியாதை

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.

ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.

அப்போது
செருப்பு பிஞ்சுபோச்சு..
அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.

அந்த வீட்டுக்காரரை அழைத்து…

ஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு.
புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்…

காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.

அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.

அதற்கு அந்த வீட்டுக்காரர்
அந்த செல்வந்தரைப் பார்த்து…

ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.
நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.

அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்

சில ஆண்டுகள் கடந்தன…

ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார்.

அவரின் இறுதி ஊர்வலம் செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.

அப்போது நல்ல மழை.⛈

பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று…

ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை.

அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு.
பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.

அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..

ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? “மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..

[ அவ்வளவுதாங்க வாழ்க்கை ]___________

ஒரு பிஞ்சு போன செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது

வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்…

தண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு…

 

சமீபத்தில் ஒரு நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

பேச்சு பல திசைகளுக்குச் சென்று ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வந்து நின்றது.

ஆற்றுத் தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, மணல் திருட்டு, தண்ணீரை வீணாக்குவது என்று பேசிக் கொண்டிருந்த போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தாமிரபரணி உருவாகும் இடம் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன்.

அதைக் கேட்ட நண்பர், “ஏங்க அப்ப அங்க பெரிய பெரிய முனிவர்கள்ல்லாம் தவம் பண்ணிருப்பாங்களே” என்று பரபரக்க கேட்டார். “இருக்கலாம்ங்க..ஏன் கேக்குறீங்க” என்றதும், “டாக்டர் மசாரு இமோடோ பற்றி தெரியுமா? கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்று கேட்டுவிட்டு சில யூடியூப் வீடியோ லிங்க்குகளை வாட்சப்பில் அனுப்பி வைத்தார்.

டாக்டர் மசாரு இமோட்டோ (Dr.Masaru Emoto). ஜப்பானைச் சேர்ந்த மிகப் பெரிய ஆராய்ச்சியாளர். தண்ணீர் பற்றிய இவரது ஆராய்ச்சிகள் உலகளவில் மிகவும் பிரசித்தம். இவர் தண்ணீரைப் பல வகைகளில் ஆராய்ந்து தண்ணீருக்கு இருக்கும் அசாத்திய ஞாபகத்திறன் பற்றி பல ஆராய்ச்சிகட்டுரைகளை, புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

தண்ணீர் தனக்கு தரப்படும், தான் கடந்து செல்லும் பாதையில் தன் மேல் விழும் தகவல்களை அப்படியே தேக்கி தனக்குள் வைத்துக் கொள்ளும். அதை வெளிப்படுத்தவும் செய்யும். .

ஒரு ஜாடி நிறைய தண்ணீரை நிரப்பி அதற்கு முன் அமர்ந்து கொண்டு தியானம் செய்கையில், அந்த தியானத்தை தண்ணீர் அப்படியே தனக்குள் வாங்கிக் கொண்டது. அந்த தண்ணீரை எடுத்து அதனை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலமாக ஆராய்ந்ததில் தண்ணீர் மூலக்கூறுகளின் வடிவங்கள் மிக அழகாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.

அதே ஜாடி தண்ணீரை எடுத்து- எனக்கு நோய்கள் வர நீ தான் காரணம் என்று பழித்து, கோபத்தையும், கொடூரத்தையும் வெளிப்படுத்திய போது, அதன் மூலக்கூறுகளின் வடிவங்கள் மிகப் பயங்கரமானதாக இருந்தது.

இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் தண்ணீர் தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்தியதை டாக்டர் மசாரு இமோடோ வின் ஆராய்ச்சிகளில் நிருபணமாகியுள்ளது.

உலகளவில் எல்லா மதங்களிலும் தண்ணீருக்கு என்று தனி இடம் உள்ளது. யோர்டான் நதிக்கரையில் இயேசுவிற்கு ஞானஸ்னானம் தரப்பட்டதும் தண்ணீரால் தான்.

பள்ளிவாசல்களில் ஓதிவிட்டு பின் தெளிப்பதுத் தண்ணீரால் தான்.

இந்து மதத்தில் தண்ணீர் இன்றி எந்த சடங்கும் இல்லை. யாகம் முடிந்து, ஹோமங்கள் முடிந்து தண்ணீரைத் தான் அனைத்து இடங்களிலும் தெளிப்பார்கள்.

பெரிய ஞானிகள், முனிவர்கள் தவம் செய்தது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் கரைகளில் தான்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்று நம் முன்னோர் சொல்லி வைத்ததும் இதனால் தான்.

தண்ணீருக்கு ஞாபகத்திறன் உள்ளது. அது தனக்குள் தரப்படும் நன்மைகளை அப்படியே மற்றவர்களுக்கு தந்துவிடும். பெரிய பெரிய முனிவர்கள் ஆற்றங்கரை ஓரத்தில் தவங்களைச் செய்து தங்களது ஆற்றலை அந்த தண்ணீரில் விட்டனர். அந்த தண்ணீர் அது ஓடும் இடங்களில் எல்லாம் அந்த ஆற்றலைத் தந்தது.

ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும் என்கிறது விஞ்ஞானம். அதாவது energy conversion law.

மழையும் கூட ஆற்றலின் வடிவம் தான். அது தனக்குள் இயற்கை தரும் தகவல்களைக் கொண்டு வந்து பூமியில் தெளிக்கிறது. அதனால் தான் பயிர்கள் செழிக்கின்றன. உயிர்கள் செழிக்கின்றன.

அதே மழை அளவுக்கதிகமாக பெய்யும் போது வெள்ளம் வருகிறது. எது அளவு, எது அளவுக்கு அதிகம் என்று தீர்மானிப்பது இயற்கை தான். அந்த தீர்மானத்தை ஒரு தகவலாக மழையின் துளிகளில் பதிய வைத்து பூமிக்கு அனுப்பி வைக்கிறது இயற்கை.

கெடுப்பதும் கெட்டாருக்கு சார்வாய் மற்றாங்கே, எடுப்பதும் எல்லாம் மழை–என்கிறார் வள்ளுவர். கொடுப்பதும் மழை, கெடுப்பதும் மழை என்கிறார்.
இப்பேற்பட்ட சக்திகளைக் கொண்ட ஆற்றை அதன் தண்ணீரைத் தான் நாம் பல வழிகளில் பாழ்படுத்துகிறோம். எப்படியெல்லாம் கெடுத்து நாசமாக்குகின்றோம் என்பதை உங்களது முடிவுகளுக்கே விட்டு விடுகிறேன்.

இறுதியாக,உறுதியாக ஒன்று,

மனித உடலும் 75% தண்ணீரால் ஆனது. மனித மூளை 90% தண்ணீரால் ஆனது. தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. அது தனக்குத் தரப்படும் தகவல்களை வைத்தே தன் குணத்தை அமைத்துக் கொள்ளும்.

எனில் நமது உடலின் சக்தியை சற்று நினைத்துப் பாருங்கள்…..

(The Magic of Water,Doctor Masaru Emoto என்று இணையதளத்தில் தேடிப்பாருங்கள்.

வாசித்ததில் நேசித்தது

ஒருவர் காபி shop விட்டு வெளியே வரும்
போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம் செல்வதை பார்த்தார்

ஒரு சவப்பெட்டி முதலில் எடுத்து செல்கிறார்கள்

அதை தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது .

அதற்க்கு பின்னால் ஒரு மனிதன்
கருப்பு நாயை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்..🐕

அவருக்கு பின்னால் ஒரே வரிசையாக 200
ஆண்கள் நடந்து செல்கிறார்கள் .🚶​​🚶​​🚶​​

இதை பார்த்த காபி ஷாப் மனிதருக்கு ஒரே ஆர்வம்

அடக்க முடியவில்லை .

அவர் கருப்பு நாயுடன்
நடந்து கொண்டிருந்தவரிடம்
சென்று,

என்னை மன்னிக்கவும்

உங்களை தொந்தரவு
செய்வதற்கு

ஆனால் இந்த
மாதிரி ஒரு இறுதி ஊர்வலத்தை நான் என்
வாழ்கையில் பார்த்தது இல்லை

எல்லோரும்
ஒரே வரிசையில் உங்கள் பின்னால்
வருகிறார்கள்

இது யாருடைய
இறுதி ஊர்வலம் என்று கேட்டார்

🚶முதல் சவப்பெட்டி என் மனைவி உடையது

🍵என்ன ஆயிற்று உங்கள் மனைவிக்கு ??

🚶என்னுடைய நாய்
அவளை கடித்து கொன்று விட்டது

இரண்டாவது சவப்பெட்டி ??
என்னுடைய மாமியாருடையது !!

அவர்கள் என் மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் கொன்று விட்டது …

ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு முதல் மனிதர் அவரிடம் கேட்டார்

“இந்த நாயை எனக்கு சிறிது நாட்கள் தர
முடியுமா “

(அதற்க்கு அவர் சொன்ன பதில்)
.
.
.
.
.
.
.
பின்னால் வரும் வரிசையில் போய்
நில்லுங்கள் !

அந்த முதியவர் பணி ஓய்வு பெற்றவர்.

அந்த முதியவர் பணி ஓய்வு பெற்றவர்.
வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர், மனைவி பிள்ளைகள் இல்லை.

ஆனால்,
“கொஞ்சம் துடுக்குத்தனம் நிறைந்தவர்”…..!!

“மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர்”…..!!

அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான்.

அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை.

யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான்.

மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான்.

“இவருக்கு அவன் மேல் சந்தேகம்”…..!!

“திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்”…….!!

“காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான்”……!!

“சில நாள்களில் மாலையில் போகிறான்”…….!!

“இரவில் வீடு திரும்புகிறான்”……!!

“ஒருவேளை அவன் திருடனாக இருப்பானோ”…..!!

என நினைத்தார்….!!

“இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது”…….!!

“தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார்”…….!!

காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார்.

`அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது.

ஒருகட்டத்தில்,
“போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்”……!!

ஆனால்,

‘அவன் அப்பாவி’……,
“அவன் ஒரு டிரைவர்தான் என்பது நிருபணம் ஆனதும்”…..,

“அவனை விடுவித்து விட்டார்கள்”…..!!

ஆனால்,
“அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது”……!!

‘நான் என்ன திருடனா’….? “என்னைப் போய் கைது செய்து விட்டார்களே”…..!!

எல்லாம் ‘இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால் தானே நடந்தது’ என்கிற…..

” கோபமும் ஆற்றாமையும் எழுந்தது”……!!

அவன்,
“முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான்”……!!

வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதியிடம் முதியவர் சொன்னார்…

“நான் யாரையும் காயப்படுத்தவில்லை”…..!

“வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன்”……!!
” அவ்வளவு தான் “…..!!

டிரைவரோ,
“போலீஸால் தான் அலைக்கழிக்கப்பட்டதை” …..,

அந்த அவமானத்தால் மனது பாதித்ததை…..,

“பெரியவர் பரப்பிய வதந்தியால் தான் ” என்பதை எடுத்துச் சொன்னான்.

“நீதிபதிக்கு டிரைவரின் நிலையும்”…….,

“பெரியவரின் வீம்பும் புரிந்தது”…….!!

முதியவரை அழைத்து …,

” நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள்”……!!

உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும்

ஒரு காகிதத்தில் எழுதி….,

அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து….,

போகிற வழியெல்லாம்…..,

” ஒவ்வொரு துண்டாகப் போட்டுக் கொண்டே செல்லுங்கள்”……!!

“நாளை காலையில் வாருங்கள்’’ என்றார்…..!!

அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

நீதிபதி…,

முதியவரை அழைத்தார். “நான் சொன்னதுபோலச் செய்தீர்களா”…….?

ஆமாம் ஐயா.’’

நேற்று “நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வாருங்கள்”……!!

“அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன் ’’…..!!

“அது எப்படி ஐயா முடியும்”….?

“அந்தக் காகிதத் துண்டுகள் காற்றில் பறந்து சிதறி இருக்கும்”……!!

“அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது”….?

“முடியாதில்லையா”…..!!

அப்படித் தான்…
” நீங்கள் சொன்ன வார்த்தைகளும் திரும்பப் பெறவே முடியாதவை”……!!

“ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும் ஆற்றல் கொண்டவை”…..!!

“நம் வாய்க்கு நாம்தான் எஜமானனாக இருக்க வேண்டும்”….!!

அப்போது தான் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு….,

” நாம் அடிமைகளாக மாறாமல் இருப்போம்”……!!

உண்மையில்,

“வதந்தி என்பது ஒரு திருடனை விட மோசமானது”……!!

ஏனென்றால்,

அது ஒரு மனிதனின் மதிப்பு,
மரியாதை,
கண்ணியம்,
நல்ல குணம்
அனைத்தையும்
களவாடிவிடுகிறது.

“அவற்றை அந்த மனிதருக்கு யாராலும் திரும்பத் தர முடியாது”…….!!

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படியும் இருக்கட்டும்…..!!

நீதிபதி முதியவருக்குச் சொன்ன அறிவுரை….

இன்றைய சூழலில் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடம்.

மனதை தொட்ட பதிவு

ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,

“இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்”……!!

அவனுக்கு..,
” அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்”….!!

அவன் வாழ்க்கை…
உழைப்பும்,
காதலும்,
ஊடலுமாக
மகிழ்ச்சி
வெள்ளமாய்
ஒடிக் கொண்டிருந்தது…….!!

கொல்லப் பட்டறை தொழில்…,
” ஒரு சமயம் நலிவுற்றது”……!!

“அன்றாட உணவுக்கே வறுமை “…..,
என்ற நிலை வந்துவிட்டது…..!!

“கொல்லன் சோகமே உருவாகி விட்டான்”…….!!

அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள்,

“எதுக்கு கலங்குறீங்க”……!!

“இந்த தொழில் இல்லைன்னா என்ன”……,

“பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி”…..,

“அதை அக்கம் பக்கத்து கிராமத்துல”…..,
” வித்தா நாலு காசு கிடைக்குமே”…….!!

“அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே” என்றாள்,,,..!

“புது நம்பிக்கை
புது உற்சாகம்
உள்ளத்தில்” கொல்லன்…….,

“இப்போது விறகுவெட்டி ஆனான்”…….!!

“அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது”…….!!

வீட்டில் தினமும்..,
சோளக்கஞ்சி,
கொள்ளுத் துவையல்….

கூடவே …..,
மனைவியின் சிரித்த முகமும்…… ,

கனிவான கொஞ்சலும் …..,

“அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும்”…..,

சற்றே சோகமும் இழையோடி இருந்தது,

ஒருநாள்…,
” ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்”……..,

“மாமோய்,,,
“இன்னும் உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே”……..!!

விறகு வெட்டியான…..
நம்ம கொல்லன் சொன்னான்…

“பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில்,

“நம்ம வீட்டில்…
தினந்தினம்
நெல்லுச்சோறும்..,
கறிக் கொழம்புமாய் இருக்கும்”……!!

இப்போ….,
” இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே”…….!!

அதுதான்டி குட்டிம்மா…., “மனசுக்கு என்னவோ போல இருக்கு”..,….!!!

“கண்ணு கலங்காதீங்க”……!!

“என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே”…..,

அதை மூலதனமா போட்டு “நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்”…….!!

காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு……..,

” கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்”……!!

கடைன்னு ஆயிட்டா…..,

” எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க”…..!!

“நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்”…. என்றாள்.

“மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில்”……!!

விறகு வெட்டியானவன்….,
“இப்போது விறகுக்கடை முதலாளியானான்”……..!!

“வருமானம் பெருகியது”……!!

அப்புறமென்ன….
” வீட்டில் கறிசோறு தான்”…..!!

ஆனால்…,

வாழ்க்கை
அடுத்தடுத்த
சோதனைகளை
ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன…….!!

“வந்தது கெட்ட நேரம்”……..,

“விறகு கடையில் தீ விபத்து”………!!

“அத்தனை முலதனமும் கரிக் கட்டையாகி விட்டது”…,,,!!

“தலையில் அடித்துக் கொண்டு அழுதான்” …..

விறகு கடை முதலாளி.

நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்,

“கலங்காதே நண்பா”….. ,

“மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து”……!!

எதிர்காலத்தில்…….,

” எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்”….!!

மனைவி வந்தாள்…..!!

“கண்ணீரை துடைத்தாள்”….!!

“அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள்”…..!!

“கண்ணீர் மல்க சொன்னாள்”…..,

“இப்போ என்ன ஆயிடுச்சுனு அழறீங்க”…..!!

“விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு”…….!!

“கரியாத்தானே ஆகியிருக்கு”……!!

நாளைலயிருந்து….,
” கரி வியாபாரம் பண்ணுவோம்”…….!!

தன் தலை நிமிர்த்தி…..,
” அவளின் முகம் பார்த்தவனுக்கு”……. ,

“மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது”……..!!

‘ஊக்குவிக்கவும்’……. ,
‘உற்சாகப் படுத்தவும்’……..,
“அன்பு செலுத்தவும்”…,

“அன்பான மனைவி அமைந்தால்”………. ,

“முடங்கி கிடக்கும் முடவனும் கூட “…….,

“எவரஸ்ட் சிகரம் தொடுவான்”……!!

வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்…!

ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்…!
அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள்
அவன் அருகில் வந்தார்…!

கடவுள் :
” வா மகனே…!
நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது…! “

மனிதன் :
” இப்பவேவா ?
இவ்வளவு சீக்கிரமாகவா ?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது ? “

கடவுள் :
” மன்னித்துவிடு மகனே…!
உன்னை கொண்டு
செல்வதற்கான நேரம் இது…! “

மனிதன் :
” அந்தப் பெட்டியில் என்ன உள்ளது ? “

கடவுள் :
” உன்னுடைய உடைமைகள்…! “

மனிதன் :
” என்னுடைய உடைமைகளா…!
என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்
எல்லாமே இதில்தான்
இருக்கின்றனவா ? “

கடவுள் :
” நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு தேவையானது…! “

மனிதன் :
” அப்படியானால்
என்னுடைய
நினைவுகளா ? “

கடவுள் :
” அவை காலத்தின் கோலம்…! “

மனிதன் :
” என்னுடைய
திறமைகளா ? “

கடவுள் :
” அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்பந்தப்பட்டது…! “

மனிதன் :
” அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா ? “

கடவுள் :
” மன்னிக்கவும் !
குடும்பமும் நண்பர்களும்
நீ வாழ்வதற்கான வழிகள்…!”

மனிதன் :
” அப்படி என்றால்
என் மனைவி மற்றும் மக்களா ? “

கடவுள் :
” உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல…! அவர்கள்
உன் இதயத்துடன்
சம்பந்தப்பட்டவர்கள்.! “

மனிதன் :
” என் உடலா ? “

கடவுள் :
“அதுவும் உனக்கு
சொந்தமானதல்ல…!
உடலும் குப்பையும் ஒன்று…! “

மனிதன் :
” என் ஆன்மா ? “

கடவுள் :
“அதுவும் உன்னுடையது அல்ல…! அது என்னுடையது…! “

மிகுந்த பயத்துடன்
கடவுளிடமிருந்து
அந்தப் பெட்டியை
வாங்கி திறந்தவன்
காலி பெட்டியை கண்டு
அதிர்ச்சியடைகிறான்…!

கண்ணில் நீர்
வழிய கடவுளிடம்
” என்னுடையது என்று
எதுவும் இல்லையா ? “
என கேட்க…!

கடவுள் சொல்கிறார் :

அதுதான் உண்மை !
நீ வாழும் ஒவ்வொரு
நொடி மட்டுமே
உன்னுடையது…!
வாழ்க்கை என்பது
நீ கடக்கும் ஒரு நொடிதான்…!

ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்…!
எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே…!

ஒவ்வொரு நொடியும் வாழ்…! உன்னுடைய வாழ்க்கையை வாழ்…!

மகிழ்ச்சியாக வாழ்…! அது மட்டுமே நிரந்தரம்…!

🍂 உன் இறுதி காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது…!

SPILLING CUP OF COFFEE

You are holding a cup of coffee when someone comes along and bumps into you or shakes your arm, making you spill your coffee everywhere.

Why did you spill the coffee?

“Well because someone bumped into me, of course!”

Wrong Answer.

You spilled the coffee because there was coffee in your cup.

Had there been tea in the cup, you would have spilled tea.

Whatever is inside the cup, is what will spill out.

Therefore, when life comes along and shakes you (which WILL happen), whatever is inside you will come out. It’s easy to fake it, until you get rattled.

So we have to ask ourselves… “what’s in my cup?” When life gets tough, what spills over?

Joy, gratefulness, peace and humility?

Or anger, bitterness, harsh words and reactions?

You choose!

Today let’s work towards filling our cups with gratitude, forgiveness, joy, words of affirmation for ourselves; and kindness, gentleness and love for others.

Wishing you MORE POSITIVITY IN YOUR CUP…

இதான் இந்த உலகம்

விருந்தாளி :- என்ன பண்ற

பையன் :- படிக்கிறேன்

விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ?

பையன் :- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்

விருந்தாளி :- என்னன்னு ?

பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு

விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ?

பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம்

விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி

பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சம்

விருந்தாளி :- அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி

பையன் :- டாக்டர் தொழில்ல பத்துவருட வருமானம் 500 லட்சம்

விருந்தாளி :-அடேயப்பா அப்ப டாக்டருக்கு படி

பையன் :- ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் பத்து வருட வருமானம் 700 லட்சம்

விருந்தாளி :- பார்ரா … நீ நல்லா படிச்சு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா வர முயற்சி பண்ணு

பையன் :- எதுவுமே படிக்காத ஒரு அரசியல்வாதியின் பத்து வருட வருமானம் 1117கோடியிலேர்ந்து 40000கோடி வரை

விருந்தாளி :-…..!!! மயங்கி விழுகிறார்

பையன் :- -நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு..

இதான் இந்த உலகம்..
இது சிரிக்க வேண்டிய விஷயம் மட்டும் இல்ல..
சிந்திக்க வேண்டிய விஷயம்…