நம்மள நாமே பார்ப்போமே 19

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா உடன் நடந்த உரையாடல்கள்
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 19
   
.முதலில் விநாயகர், குரு, குலதெய்வம், இஷ்ட தெய்வம், பிறகு நம் இடத்தின் காவல் தெய்வம் இந்த 5 தெய்வங்களைப்பற்றி சிந்திக்கனும் எந்த வேலை செய்தாலும் நாம் சிந்தித்து 5 தெய்வங்களையும் ஒரு தடவை மனதுக்குள் ஒட்டிட்டு, ஆகாயத்தை தொடமுடியாது. நாம் அசுத்தப்படுத்தறதில்லை, ‘ஓம்’ அடிப்படையாக இருப்பது  “அ உ ம”, அ- பிருதிவி, உ- நெருப்பு , ம- அப்பு என்கிறது நெருப்பு, தேயு தான் அதனாலதான் அந்த விளக்கத்தையே கொடுத்தேன். இந்த இரண்டு இருந்து ஞானியர்களுக்கும், ஞானநிலையிருக்கிறவங்களுக்கும் நான் என்ன சொல்றேன் புரிஞ்சிருச்சா அதனாலேதான் கேட்டீங்க, வேண்டித்தான் அப்படியே சொன்னேன். ‘அ, பிருதிவி,’ ‘ம அப்பு,’ ‘உ ‘, தேயு, நெருப்பு .இந்த மூன்றில்  இருந்துதான் ஓம்காரம் வந்திருக்கு. அப்ப உலகத்தை உற்பவித்ததும், இந்த உற்பவித்த உலகை  இருந்து அழித்தவனும் இருக்கான். அப்ப இது இந்த மூனும் போதும். ஆரம்ப நிலையில் இது குறிப்பு இல்லை அனுபவத்தை நமக்குள் உருவாக்குவதற்கு உண்டான வகுப்பு, அதனாலே  கொஞ்சமா நீங்க இருந்து தெரிஞ்சுகிட்டா போதும் ஆனா அத அத்தனையுமே உடல் ரீதியா உணர்வதற்கு உண்டான முயற்சியிலே நீங்க அதிக அளவு ஈடுபட்டால் மட்டுமே ஜெயிக்கமுடியும்.

 இதுலே இந்த சித்தர்களின் பாடல்கள் அப்படின்னு நாம சொன்ன நிலையிலே ஒரு குருநாதர் நிலையில் இருக்கக்கூடிய அமிர்தானந்தமயி, சாய்பாபா, அரவிந்தர், ரமண மகரிஷி இன்னம் யாரெல்லாம் இருக்காங்களோ அவங்களுடைய ஏதாவது ஒரு புத்தகத்தை இங்கு நாம் வைத்து ஒரு அத்தியாயம், இல்லையென்றால் ஒருபக்கம் இப்படி படிக்கற தன்மையை நமக்குள்ளே நாம் வளர்த்திக்கிட்டோம்னா, நாம் எந்த வேலையிருந்தாலும், இல்லாவிட்டாலும், எதாவது ஒரு புத்தகத்தைப் படித்து, படித்ததை கருத்தான விஷயங்களை எடுத்து எழுதிப்பழக்கனும், அந்த பழக்கம் நமக்கு ஒரு ஒழுக்கத்தை வளர்த்தும், பிறகு நாம் பார்த்து எழுதுவதை விட்விட்டு, பார்க்காமல் எழுதனும் ஆரம்பத்தில் எழுத்து ஏன்னா, ஒரு செயலுக்குண்டான பழக்கத்தை நமக்குள்ளேயே ஒழுங்குபடுத்தக்கூடிய வித்தை இது. 

From
http://divinepowerathma.com/blog/