A2

நட்சத்திரத்தின் சிறப்பு

 

ஜோதிட சாஸ்திரத்தின் துணைகொண்டு சுப காரியங்கள் செய்வதற்கு உரிய நல்ல வேளையை தேர்ந்தெடுக்கும் போது யோகத்தை கருத்தில் கொண்டே அநேக முகூர்த்தங்கள் அமைக்கப்படுகின்றன. அதாவது நாளுக்கும் நட்சத்திரத்திக்கும் உண்டான உறவின் நிலை கொண்டு உண்டாகும் யோகங்ஙள் நான்கு. அவை அமிர்தயோகம், சித்த யோகம், மரண யோகம், பிரபாலாரிஷ்ட யோகம். இந்த நான்கு யோகங்களில் அமிர்த, சித்த, யோகங்கள் சிறப்பானது.

பிரபாலாரிஷ்ட, மரண யோகங்கள் சிறப்பில்லாதது.

 இன்றைய சூழ்நிலையில் ஜோதிட சாஸ்திரம் அறியாத பலர் கூட இன்று சித்த யோகம் சுப காரியம் செய்யலாம், மரண யோகம் இன்று சுப காரியங்கள் வேண்டாம் என்று சொல்வதை நாம் காண்கிறோம். இது சரியா? சரி என்றால் எந்த விதத்தில் சரி என்பதை அறிவதே இக்கட்டுரையின் நோக்கம்.

 சித்த, அமிர்த யோகங்களில் செய்த காரியங்கள் அனைத்தும் அனைவருக்கும் வெற்றி பெற்று இருக்கிறதா? அல்லது பிரபாலாரிஷ்ட, மரண யோகங்களில் செய்த காரியங்கள் அனைத்தும் தோல்வி பெற்று விட்டதா? என்பதை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

 சித்த, அமிர்த யோகங்கள் பொதுவாகத்தான் சொல்லி இருக்கிறார்களே தவிர இந்த நட்சத்திர ராசி லக்னத்தார்க்கு என்று சொல்லவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல அதை நாம் தான் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். அதுதான் சூட்சுமம். சித்த யோகம் நல்லது. எந்தெந்த விஷயங்களுக்கு நல்லது என்கின்ற விவரம் நமக்கு தெரிய வேண்டும்.

ஏனென்றால் ஞாயிறுடன் கூடிய அஸ்வினி சித்த யோகம். அதன்பின் ஞாயிறுடன் கூடிய பூரம், ஆயில்யம், திருவாதிரை, ரோகினி, மிருகசீரிடம் போன்ற இவையும் சித்த யோகம்.

 இவை அனைத்தும் சித்த யோகம் என்கிற பெயரில் தான் ஒன்றே தவிர அதனுடைய இயக்கங்கள் வேறு வேறு ஆகும். எப்படியென்றால் ஞாயிறு-அஸ்வினி, ஞாயிறு-திருவாதிரை இரண்டும் சித்த யோகமே. ஆனால் இவை வேறு வேறு இயல்பில் இயங்கும். அந்த இயக்கம் ஒவ்வொரு நட்சத்திரதாருக்கும், லக்னத்தாருக்கும் மாறுபடும். அது மட்டுமல்ல முகூர்த்த லக்னம் குறிக்கும்

போது இதன் நிலையை சரியாய் அறிந்து வைக்காவிட்டால் முகூர்த்த பலனில் முழுமையாய் இருக்கும் விஷயம் நம்மால் அனுபவிக்க முடியாது.

 நாள் முழுவதும் சித்த யோகம்-அமிர்த யோகம் உண்டென்று நம்பி காரியம் செய்வதால் பலனேதும் இல்லை. பலன் கிடைக்க வேண்டுமென்றால் கீழ்கண்ட அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொண்டு, எந்த காரியத்திற்கு வேண்டி முகூர்த்தம் அமைக்கின்றோம் என்பதையும் கருத்தில் கொண்டு முகூர்த்த லக்னம் குறித்தால் அந்த நேரத்தில் செய்த காரியம் நிச்சயமாக சித்தி அடைந்து ஜெயிக்கும் அதில் சந்தேகம் இல்லை.

 இனி சில அடிப்படை விஷயங்களை காண்போம்:

                கிழமைகள் – பிருதிவி

                நட்சத்திரங்கள் – தேயு

இந்த அடிப்படையை முதலில் சிந்திப்போம்

                ஞாயிறு – பிருதிவியில் தேயு

                திங்கள் – பிருதிவியில் அப்பு

                செவ்வாய் – பிருதிவியில் தேயு

                புதன் – பிருதிவியில் வாயு

                குரு – பிருதிவியில் பிருதிவி

                சுக்கிரன் – பிருதிவியில் அப்பு

                சனி – பிருதிவியில் ஆகாயம்

இதில் பிருதிவியில் பிருதிவி, பிருதிவியில்-அப்பு மிக நல்லது. மற்ற பிருதிவியில் தேயு, ஆகாயம் ஆன்மிக சாதனைக்கு மிக நல்லது. பிருதிவியில் வாயு-நாம் எதற்கு வேண்டுமானாலும் உபயோகபடுத்தி சித்தி அடையலாம். லௌகீகம்-ஆன்மிகம் இரண்டிற்கும் உபயோகப்படுத்தலாம்.

 இந்த வாரத்தில் இன்னும் அதி சூட்சும நிலைகள் உள்ளது. அது காலம் அனுமதிக்கும் போது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முகூர்த்த லக்னம் கணிக்கும் இந்த விபரம் போதுமானது.

 அடுத்தது நட்சத்திரம்-நட்சத்திரங்கள் அனைத்தும் தேயு என்று முன்பே கண்டோம்.

 அதன் பகுப்புகளை இப்போது காண்போம்.

 அஸ்-தேயு-ஆகாயம்          மகம்-தேயு-அப்பு    மூலம்-தேயு-ஆகாயம்

பர  -தேயு-அப்பு         பூரம்-தேயு-அப்பு     பூரா  -தேயு-அப்பு

கார்-தேயு-தேயு       உத்தி-தேயு-தேயு  உத்திர-தேயு-தேயு

ரோ-தேயு-அப்பு        அஸ் -தேயு-அப்பு    திருவோ-தேயு-அப்பு

மிரு-தேயு-அப்பு      சித்தி-தேயு-தேயு   அவி  -தேயு-தேயு

திரு -தேயு-ஆகாயம்           சுவா-தேயு-ஆகாயம்           சதயம்-தேயு-ஆகாயம்

புன-தேயு-பிருதிவி              விசா-தேயு-பிருதிவி          பூரட்  -தேயு-பிருதிவி

பூசம்-தேயு-அப்பு     அனு-தேயு-ஆகாயம்          உத்திட்-தேயு-ஆகாயம்

ஆயில்-தேயு-அப்பு               கேட் -தேயு-வாயு   ரேவதி-தேயு-வாயு

 நட்சத்திரங்களின் தன்மையை இந்த விதத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து முகூர்த்தம் தேவைப்படும் நபரின் பிறந்த கிழமை, நட்சத்திரம் போன்றவற்றை அறிந்து கொண்டு அவர் எந்த கூறின் தன்மையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

 அதன் பின் எந்த காரியத்திற்கு முகூர்த்தம் என்பதை அறிந்து அதன்படி நட்சத்திரத்தை அமைத்து லக்னம் குறிக்க வேண்டும்.

இந்த முறையில் 1|2, 3|4, 1|4 போன்ற நட்சத்திர பகுப்பு இல்லை. அது போல் இராசிக்கு இல்லை. அது போல் இராசிக்கும் அதிக முக்கியத்துவம் இல்லை. லக்னம் குறிப்பிடும் போது இராசியின் பெயரை குறிப்பிடாமல் நட்சத்திரத்தின் பெயரைக் கொண்டே குறிப்பிடப்படுகிறது.

 இந்த முறையில் உள்ள மிக முக்கியமான விதி நாம் அமைக்கும் லக்னத்தின் அதிபதி. லக்னம் அமைந்துள்ள நட்சத்திர கூறுக்கு ஒத்த இசையில் அமைய வேண்டும். அப்படி அமையாவிட்டால் எத்தனை யோகங்கள் அந்த முகூர்த்த வேளையில் அமைந்திருந்தாலும் அந்த யோகங்கள் வேலை செய்யாது.

 உதாரணமாக: திங்கட்கிழமை அஸ்வினி நட்சத்திரத்தில் லக்னம் அமையும் நேரத்தில் முகூர்த்தம் வைக்கும் போது கேது பகவான் அஸ்தம், பூரம், பூராடம், திருவோணம், ரோகிணி, மகம், மூலம், அஸ்வினி போன்றவற்றில் அமைதல் வேண்டும். அப்படி அமையும் போது மட்டுமே முழு பலனை அடைய முடியும்.

 இதில் கிரகங்களின் தன்மைகளையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதன் தன்மைகள் கிழமையை ஒட்டியே வரும். ராகு, கேதுக்கள் எந்த நட்சத்திரத்தில் உள்ளாரோ அதனுடன் சுய தன்மையான ஆகாய நிலையை வெளிப்படுத்தும்-மற்ற கிரகங்கள் கிழமைகளின் தன்மையே பிரதிபலிக்கும்.

 இந்த முறையை கையாளும் போது எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டிய மற்றொரு விதி நிலம்-நீரில் ஒடுங்கும், நிலம்-நீர்,நெருப்பில் ஒடுங்கும், நிலம்-நீர், நெருப்பு,காற்றில் ஒடுங்கும், நிலம்-நீர்,நெருப்பு,காற்று,ஆகாயத்தில் ஒடுங்கும்.

 அடுத்தது,

கிழமை பிருதிவி, திதி அப்பு நட்சத்திரம் தேயு யோகம் வாயு கரணம் ஆகாயம்.

 இந்த கட்டுரையில் பஞ்ச அங்கங்களில் இரண்டை மட்டுமே சொன்னேன். மற்ற மூன்றை அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.

 பஞ்ச அங்கங்களை கொண்டு உகந்த நேரம் எடுக்கும் முறையை உங்களுடன் வரும் கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

 இந்த முறையாவது ஜோதிட சாஸ்திரத்திற்கு புறம்பானதோ புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட முறையோ அல்ல. காலம் காலமாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்த முறைதான் என்பதையும் கூறி இதன் தொடர்ச்சியில் சந்திப்போம் என்று கூறி விடை பெறுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>