சந்திரனைப் பற்றிய விஷயங்கள்

                சந்திரன் மனோகாரகன், மாதுர்காரகன், முத்து, நீர் சம்பந்தப்பட்ட நிலைகள் நோய்கள், மன நிம்மதி, மன உளைச்சல், உடல் புதிய வஸ்திரம், இவற்றுக்கெல்லாம் காரகத்துவம் பெறுகிறார். 

                சந்திரபகவானின் பூர்வத்தைப் பார்க்கும்போது இவர் அத்திரைக்கு சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார் என புராணங்கள் கூறுகிறது.  அமாவசை, பௌர்ணமி இன்னும் மற்ற திதிகள் உருவாக காரணமாக இருப்பது சந்திரன்.  சந்திரன் பயணிக்கும் ரதம் மூன்று சக்கரங்களை உடையது.  இவற்றுக்கு அமைந்துள்ள குதிரைகள் முல்லைப்பூ வர்ணத்தில் இருக்கும்.  துருவனை ஆதாரமாக கொண்டு நாகவீதி வழியே நட்சத்திரங்களை பவனி வருகிறார்.

                சந்திர திசை ஒரு மனிதனுக்கு வரும்போது மனோ சம்பந்தப்பட்ட சக்திகள் கூடும்.  அல்லது குறையும்.  உடல் நலனும் அப்படியே, மாதுர் சம்பந்தப்பட்ட வகையில் மன சந்தோஷமும் அல்லது மனோ துக்கமும் உண்டாகும்.

                சந்திரன் தனது அமிர்த கலையை அமாவாசை அன்று முழுவதுமாக இழக்கிறார். பின் ஒவ்வொரு நாளும் தனது கலையை வளர்த்துகிறார். அமாவாசைக்கு முன்நாளில் நீரில் இருக்கிறார்.  பிறகு சூரியனிலும் செடி கொடிகளிலும் வளர்கிறார்.  சோமலதை என்பது சீந்தில் கொடி என்கிற மூலிகையின் பெயராகும்.  இதில் சோமன் வசிப்பதால் மிருத்துஞ்சய ஹோமத்தில் இந்த மூலிகையை பிரயோகம் செய்கின்றனர்.

                சதுர்தசி, பிரதமை திதிகளில் செடி, கொடிகளை பிடுங்கினால் அவன் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளாவான் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

அமாவாசை யன்று பிதுர்கள், சந்திரனுடைய கலையால் திருப்தி அடைகின்றனர்.

                பெண்களுக்கு ஜென்ம நட்சத்திர நட்சத்திரத்திற்கு ஏழாவது எட்டாவது நட்சத்திரத்தையோ, ராசியையோ கடக்கும் போது பெண்களுக்கு ரஜஸ்வலை உண்டாகிறது. 

     ஜென்ம ராசிக்கு அஷ்டமத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டம காலம்.  அந்த காலத்தில் மனம் ஒரு நிலையில் இல்லாது குழப்பமும், சங்கடங்களும் காரிய விக்னங்களும், உண்டாகும். அதனால் அந்த நாட்களில் கவனத்தோடு இருக்க வேண்டும்.    

                லக்னத்திற்கு 12ல் சந்திரன் அமையும் போது இடது கண் சம்பந்தப்பட்ட நோய் ஒருவருக்கு உண்டாகிறது.  மன சஞ்சலங்களையும்

 எந்த ஒரு விஷயத்திலும் சந்தேகத்தையும் பயத்தையும் ஜாதகத்தில் அமைந்த பலவீன சந்திரன் அதனுடைய தசாபுத்தி காலங்களில் செய்யும்.

                 குருவால் பார்க்கப்பட்ட சந்திரன் குருவுடன் இணைந்த சந்திரன் நல்ல பலனை ஜாதகத்தில் செய்யும்.  சனி சந்திரனுடன் இணையும் போது சந்திரனுக்கு முன் பின் இருக்கும்போது ஏழரை சனி காலமாகும்.  அந்த கால கட்டம் சனி அவர்கள் ஜாதகத்தில் அமைந்த நிலையைக் கொண்டு பலன்கள் ஜாதகருக்கு வந்து சேரும்.   

                லக்னத்தை சந்திரன் பார்த்தால் பல தோஷங்கள் ஜாதகத்தில் நிவர்த்தியாகும்.  பலம் பெற்ற சந்திரன் அதாவது உச்ச நிலை சொந்த வீட்டில் இருப்பது சுபர் உடன் இணைந்து இருப்பது போன்ற நிலைகளில் இருந்து லக்னத்தைப் பார்த்தால் தோஷ நிவர்த்தி அந்த ஜாதகத்திற்கு உண்டாகும்.

                     ஓம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *