சனிபகவானைப் பற்றி சில குறிப்புகள்

சனி பகவான் நவக்கிரகங்களின் ஈஸ்வரபட்டம் பெற்றவர்.  ஆயுளுக்கு அதிபதி தர்மத்திற்கு அதிபதி அனுபவத்தின் மூலம் மனிதனை முழுமையாக்குவதில் முதன்மையானவர்.  அறிவுக்கும், புத்திக்கும் உண்டான முழுமையை அனுபவமே தரும்.  அந்த அனுபவத்தின் அதிகாரி சனி பகவானேஆவார்.  கடுமையான உழைப்பிற்கும், தன்னைப்பற்றி சிந்தனைக்கும், மூலமாய் இருப்பவர் அவரே.  ஒரு ஜாதகத்தில் இவர் நல்லபடியாய் அமர்ந்திருந்தால் உழைப்பின் மூலம் உன்னத நிலைக்கு அந்த ஜாதகம் வருவது கண்கூடு.  தானும் வளர்ந்து தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும், அவர்கள் வளர்த்துவார்கள்.  மிகச் சிறந்த ஆசான் சனிபகவான் ஆவார்,

                 ஏனென்றால், அனுபவத்தைவிட சிறந்த ஆசான் வேறு எதுவும் இல்லை.

                இயற்கையில் இவர் பாவ கிரகம்.  ஆனால் ஆதிபத்திய ரீதியாக சுப பலன் செய்வதற்குரிய அதிகாரம் இவருக்கு உள்ளது.  மகர, கும்ப ராசி லக்னங்கள் ரிஷப, துலா லக்ன ராசிகளுக்கு சுப பலன்கள் பெறுவதில் இவருக்கு மிக முக்கிய பங்கு உண்டு.  ரிஷப லக்னத்திற்கு 9, 10 ஆதிபத்தியம் துலா லக்னத்திற்கு 4, 5, ஆதிபத்தியம்.  ஒரு கிரகம் கேந்திர திரிகோணத்திற்கு ஆதிபத்தியம் பெறும் போது நிச்சயமாக சுப பலன் தரும். அந்த விதிப்படி சனி பகவான் இந்த ராசி லக்னத்தாருக்கு முழு சுப பலனை தர அதிகாரம் தருகிறார். 

                சனியின் பார்வை மூன்று, ஏழு, பத்து இந்த பாவங்களின் தான் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்கும்.  சனியின் பார்வைப் பெற்ற பாவங்கள் க்ஷீணமடையும், என்பது சாஸ்திரம்.  ஆனால் அனுபவத்தில் திசையை நடத்தும் கிரகத்தை சனி பார்த்தால் அந்த திசை நன்றாக இருக்கிறது.  குரு திசையை நடத்தும் கிரகத்தை பார்த்தால் அந்த கிரக திசை சோபிப்பதில்லை.

                தர்ம கர்மாதி யோகத்திற்கு ரிஷப ராசி, ரிஷப லக்னதாருக்கு சனிபகவானே காரணம்.  அந்த யோகத்தின் மூலம் சனிபகவான் அவர்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல பதவி, சத்விஷயங்களில் சிந்தனை, கௌரவம், சமூகப்பணி போன்றவற்றை தருகிறார்.  செல்வத்திற்கும் குறைவில்லாமல் பார்த்துக் கொள்கிறார். 

                கர்மாதிபதியாகிய சனி தர்மகர்மாதிபதி யோகத்திற்கு முழுகாரண கர்த்தாவாக விளங்குகிறார்.  மகர, கும்ப லக்னத்திற்கு ஆதிபத்தியம் வகிக்கும் சனி பகவான் எங்கிருந்தாலும் இந்த லக்ன ராசிக்காரருக்கு கெடுதல் அதிகம் செய்வதில்லை.  ஏழரை சனி அஷ்டம கண்டக சனிகள் இந்த ராசி லக்னத்தாரர்களுக்கு அதிக அளவு பாதிப்புகளை வழங்குவதில்லை.

                சனி திசையின் காலம் 19 வருடம், இந்த காலகட்டத்தில் சனி பகவானுக்கு ப்ரீதி செய்ய சுப பலன் மேலோங்கும்.  அசுப பலம் குறையும். ஐயப்பன், அனுமன் வழிபாடுகளும், உடல் ஊனமுற்றோருகளுக்கு உதவுவதும் சனி பகவானுக்கு ப்ரீதி செய்ய பயன் படும். 

                துலா ராசியில் உச்சமடையும் சனி அதிக அளவு நற்பலனைத் தர அதிகாரம் உள்ளவராகிறார்.  ஜாதகத்தில் சனி பகவான் உச்சமடையும் போது தீர்க்காயுள் சாஸ்த்திர விசாரணை சமூக மாறுதலுக்கு போராடும் எண்ணம் போன்றவை உண்டாகும். 

                கோச்சார ரீதியாய் ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கும் ராசிக்காரர்களுக்கு சனிபகவானுக்கு  அல்லது ராசிக்கு குரு பார்வை கிடைக்கும் காலம் சனி பகவான் சில நன்மைகளை செய்வார்.  இதை அனுபவத்தில் நாம் பார்க்கலாம்.  மித்திர கிரகமான சுக்கிரனுடன் இணைவதை காட்டிலும் சுக்கிரனுடைய பார்வையை பெறுவது சனிபகவானின் சுபபலன் பெறுவதற்கு உகந்ததாகும்.

 

                அடிப்படையில் பலம் பெற்ற நிலையில் சனிபகவானைப் பெற்ற ஜாதகர்கள் கடுமையான உழைப்பாளிகள் வாழ்வின் பிற்பகுதி அதிர்ஷ்டம் உடையவர்கள்.  கல்வி அறிவைவிட அனுபவ அறிவு இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.  பெரிய பதவிகளில் உண்மையோடும், நியாயத்திற்கு உட்பட்டும் பணி செய்வர்.  இந்த சனிபகவானோடு செவ்வாய், சுக்கிரன் இணைந்திருந்தால் பதவி இவர்களுக் மிகப்பெரிய அந்தஸ்தையும், கௌரவத்தையும் தரும்.  செவ்வாய், புதன் இணைந்திருந்தால் பூர்வீக சொத்து கிட்டும்.  குறிப்பு …  சூரியன் கெட்டு இருக்கக்கூடாது. 

                இன்னும்  சனி பகவான் பற்றிய விஷயங்களை எதிர்வரும் காலங்களில் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *