பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குறிப்புகள்

சுக்கிரனுடைய நட்சத்திரம், ராட்சச குணம்.  மனுஷ கணம்.  அதிதேவதை துர்க்கை.  அக்னி மண்டலம்.  அசுப நட்சத்திர வரிசையில் அமையும்.  வானவெளியில் மூன்று நட்சத்திரங்களுடன் அடுப்பு போல் காட்சி தரும்.

                பரந்த ªற்றியும், சுருள்முடியும் கொண்டவர்கள்.  பிறர் உழைப்பில் சுகம் அனுபவிப்பார்கள்.  எந்தவித சிரமங்களையும் ஏற்படுத்திக் கொள்ளாதவர்கள்.  சுகத்திற்கு வேண்டி எதையும் செய்வார்கள்.  வேலை வாங்குவதில் வல்லவர்கள்.  இனிக்க, இனிக்க பேசுவார்கள்.  காரியம் முடிந்ததும் கழட்டி விடுவதில் சமர்த்தர்கள்,  இதையெல்லாம் மனதிலேயே வைத்துக் கொள்ளமாட்டார்கள்.  நன்றி உணர்ச்சி குறைந்தவர்கள். 

                பரணி முதல் பாதத்தில் பிறந்தவர்கள்  

    சூரியனுடைய தன்மை இவர்களிடம் சிறிது வெளிப்படும்.  அதிகாரம் மிக்கவர்கள்.  எதையும் சரியாக செய்ய பிரியப்படுவார்கள்.  தவறை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.  தனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல் இருக்காது.  பெண்களுக்கு வேண்டி எல்லாம் செய்யவார்கள்.  முன் கோபி.  கல்வி அறிவு, சுமாராகவே அமையும்.  அனுபவ அறிவு அதிகமாக கொண்டவர்கள்.  கணவன், மனைவிக்குள் எப்போதும் கருத்து வேறுபாடு அதிகமாக இருக்கும்.  இருதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட பாகங்களில் நோய் வர வாய்ப்பு உடையவர்கள்.  சுய தொழிலைவிட வேலைக்கு செல்வதுதான் இவர்களுக்கு சிறந்தது.  அரசு மருத்துவமனைகள், பங்கு வர்த்தக இடங்கள் சரக்குகள் செல்லும் இடம், போன்ற பிரிவுகளில் வேலைக்கு இருப்பது நன்மை தரும். 

                பரணி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்.  

புதனின் தன்மை இவர்களிடம் வெளிப்படும்.  எல்லோரிடம் இயல்பாகவும், கலகலப்பாகவும் பழகுவார்கள். யாருக்கும் எதற்கும் கட்டுப்படமாட்டார்கள்.  தான் எனும் மனோபாவம் எப்போதும் இருக்கும்.  வீடு, வாகன வசதிகள் இளமையிலேயே அமையும்.  அம்மான் வர்க்கத்தாரோடு மனக்கசப்பு உடையவர். அதனால் தாயிடமும் கருத்து வேறுபாடு அமையும்.  புத்திரர்களால் மேன்மையடைவர்.  கடன் கொடுத்தால் திரும்ப வராது.  வாழ்க்கையில் வழக்கை சந்திக்க வேண்டி வரும்.  நரம்பு சம்பந்தப்பட் நோய் உடையவர்.  இதிகாச புராணங்களில் ஆர்வமும், ஆசையும் இருக்கும்.  செய்தித்துறை, கால்நடைகள், சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் உண்டு.

                பரணி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள். 

சாந்தமாயும், சமாதானமாயும் இருப்பர்.  எதையும் பொறுமையாக கையாள்வார்.  பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் முன்கோபி.  கௌரவத்தையும், மரியாதையையும் அதிகமாக எதிர்ப்பார்ப்பர்.  இசைப்பிரியர்கள்.  மது பழக்கம் உடையவர்கள்.  நட்பால் கெடுவர்.  மந்திர தந்திரங்களில்ஆர்வம் உடையவர்.  பெண் தெய்வத்தை வணங்குவதில் பிரியமானவர்.  மனைவி சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் கருத்து வேறுபாடு கொண்டவர்கள்.

தீர்த்த யாத்திரை செய்வதில் ஆசை உடையவர்.  வாசனைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், பேக்கரி, சிற்றுண்டிசாலைகள் இவர்களுக்கு ஏற்றது.  குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பர். 

                பரணி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள். 

எப்போதும் தன்னைப் பற்றி உயர்வாக சிந்தித்து கொண்டிருப்பவர்கள்.  உணர்ச்சி வசப்பட்டவர்கள்.  பலருடைய வெறுப்புக்கு தன்னுடைய பேச்சினால் மிக விரைவில் ஆளாகி விடுவார்கள்.  குடும்ப பாசம் மிக்கவர்கள்.  பொருள் ஈட்டுவதில் சமர்த்தர்கள்.  வேகம் உடையவர்கள்.  ரகசியஸ்தானத்தில் குறையுடையவர்கள்.  உடல்கூறு மிக்கவர்கள்.  ஆடை, ஆபரணங்களில் விருப்பம் அதிகம் உடையவர்கள்.  ஆச்சார அனுஷ்டானம் உடையவர்கள்.  போலீஸ், இராணுவம், துப்பறியும் துறை, சினிமாத்துறை, இவர்களுக்க உகந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *