கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குறிப்புகள்

கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன்.  அக்னி மண்டலம் அசுப நட்சத்திரத்தில் அமையும்.   அதிதேவதை அக்னி.  ராட்சசகுணம், ராட்சச கணம்.  இது மிஸ்ர நட்சத்திரம். தாதுப் பொருள்களான தாமிரம், பொன், வெள்ளி முதலியவற்றை உருக்குவதற்கு இந்த நட்சத்திரம் நல்லது.  கடன் வசூலிக்கவும், ஆயுதங்கள் செய்யவும், சண்டையிடவும் நல்லது.  பெண்கள் ருதுவானால் நல்லது அல்ல.  கண்டிப்பாக சாந்தி செய்வது அவசியம்.  முதல் முதலாக செல்லும் யாத்திரைக்கும் நல்லதல்ல.  கத்தி போன்ற வடிவத்தில் ஆறு நட்சத்திர கூட்டத்தோடு இருக்கும். 

                சுற்றத்தாரோடு இணைந்து போதல், சிற்றுண்டி பிரியர்.  கழுத்து பாகத்தில் மச்சம் இருக்கும்.  படிப்பு, குறைவு. 

                குருவின் தன்மை இவர்களிடம் வெளிப்படும்.  தனத்திற்கு குறை இருக்காது. 

                கார்த்திகை முதல் பாதம் :

 பொய் பேசாதவன், வாயாடி, ரசவாதம் செய்வோர்.   பிறர் பொருளுக்கு ஆசைப்படுவர்.  பொறுமை குறைந்வர்

                கார்த்திகை இரண்டாம் பாதம் :

வித்வ தன்மை உடையவர்.  வியாபாரி, பிரபு தன்மை உடையவர்.  நோயாளி, ஆசாரக்குறைவு உடையவர்.  அன்னியர் நட்புடையவர். 

                கார்த்திகை மூன்றாம் பாதம் :

சோம்பல் குணம் உடையவர், விவேகி, துஷ்ட பெண்களின் சேர்க்கை உடையவர், பெண்களால் நஷ்டம் அடைவர். 

                கார்த்திகை நான்காம் பாதம் :  

மனதுக்கம் உடையவர்.  உடல் பலம் குறைந்தவர். குடும்ப வாழ்க்கை சோபிக்காது.  மனைவியால் மனவருத்தம் உண்டு.

                கல்வி, கேள்விகளில் சிறந்து காணப்படுவர்.  அடக்கமும், விநயமும்  பேச்சில் நிறைந்திருக்கும்.  தர்ம சிந்தனையும் இருக்கும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *