ரோகிணி நட்சத்திரம் பற்றிய குறிப்புகள்

ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன்.  கல்வி அறிவு மிக்கவர்கள்.  திடமனது கொண்டவர்கள்.  வாக்கை காப்பாற்ற அதிக பிரயாசை எடுத்துக் கொள்வார்கள்.  உடல் நலம் மிக்கவர்.  வானில் ஐந்து நட்சத்திரங்கள் ஒன்று கூடி சகடம் போல காணப்படும்.  மகேந்திர மண்டலம் சுப நட்சத்திர வரிசை திருமால் அதிதெய்வம், ராட்சச குணம், மனுஷ கணம்.  தத்துவ ஞானி, செல்வந்தர், அரசனின் நட்புக்குரியவர், பிற ஆண்களால் விரும்பப்படுவர்.  பிற பெண்களால் விரும்பப்படுவர். 

                ரோகிணி முதல் பாதம்:

 அழகிய தேகம், கவர்ச்சியான கண்கள், பொறுமை குறைந்தவர், கற்றோரின் கூட்டத்தில் இருப்பவர்.  காம உணர்வு மிக்கவர்.  உயர்ந்த பதவி இவர்களை வந்தடையும். உயர்ந்த பதவியில் இருப்போரால் விரும்பப்படுவர்.  பிறருக்கு துன்பம் செய்ய தயங்காதவர்.  ரகசியத்தை காப்பாற்றமாட்டார்.  ஆள்பலம்  மிக்கவர்.  பால் வளத்தறையில் இவர்களுக்கு லாபம் உண்டு.  மருத்துவத்துறை , பொது நிர்வாகம் போன்றவையும் இவர்களுக்கு ஏற்றதே. 

                ரோகிணி        இரண்டாம் பாதம் :

ஆசாரம், உண்மை உடையவன்.  ஏகதாரம் உடையவன், வாய்ச்சாலம் மிக்கவன்.  அவசரப்படுவோன், தான் அன்பு செலுத்துவோருக்கு எதையும் செய்பவர்.  மனபயம் கொண்டவர்.  தைரியசாலிப் போல் வெளியில் காட்டிக்கொள்பவர்.  மனஅமைதி குறைவாக இருக்கும்.  பேச்சால் மிக்கவர்.  இவருடைய பேச்சு எல்லோரையும் கவரும்.

                ரோகிணி மூன்றாம் பாதம் :  

கணிதத்துறையில் பாண்டித்தியம் பெற்றவர்.  இசையில் ஈடுபாடு உடையவர்.  மந்திர, தந்திரங்களில் ஆர்வம் உடையவர். உயர் கல்வி உடையவர்.  ஆடை, ஆபரணங்களில் ஆசை உடையவர்.  எதிரிகளை வெல்லும் ஆற்றலை உடையர், தாய், தந்தையரால் அனுகூலம் உடையவர். 

                ரோகிணி நான்காம் பாதம் :  

பிறர் பொருளுக்கு ஆசை உடையவர், பெண்களுக்கு பிரியமானவர், மனம் எப்போதும்  உல்லாசத்தில் இருந்து கொண்டே இருக்கும்.  சாஸ்திர ஞானம் உடையவர்.  மற்றோரால் போற்றப்படுவர்.  காமத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்.  வசதி மிகுந்தவர்.  ஜோதிடம், மனோதத்துவத்துறை, ஜவுளித்துறை இவர்களுக்கு உகந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *