மிருகசீரிடம் நட்சத்திரம் பற்றிய சில குறிப்புகள்

 

மூன்று நட்சத்திரங்கள் ஒன்று கூடி மான் தலை போல, அல்லது தேங்காய் கண் போல் வானவெளியில் காட்சி தரும்.   இதன் அதிபதி செவ்வாய்.  அஸ்வனி, மூலம் நட்சத்திரங்கள் பகை.  வர்ணமண்டலம் சுப நட்சத்திர வரிசையில் அமையும்.  அதிதேவதை சந்திரன், தாமஸ குணம்.  தேவகணம்.  இதன் 1, 2, பாதம் ரிஷப ராசியிலும், 3, 4 பாதம் மிதுன ராசியில் அமையும்.

                ராசி எதுவாக இருந்தாலும்,  இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள்.  நயவஞ்சக எண்ணம் கொண்டும் தன் காரியத்தை சாதிக்க முயல்பவர்கள்.  வலிமையான தேகம் உடையவர்கள்.  கோபகுணம் கொண்டவர்கள்.  ஆடல், பாடல்களில் விருப்பம் உள்ளவர்கள்.  தர்மம் செய்ய விருப்பம் உடையவர்கள்.

                மிருகசீரிடம் முதல் பாதம் :

சுறுசுறுப்பானவர்கள் எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். மரியாதையுடன் நடப்பவர்கள்.  தற்புகழ்ச்சி உடையவர்கள்.  பிறரை மட்டம் தட்ட ஆசைப்படுவார்கள்.  எல்லா காரியங்களையும் முன்னின்று செய்ய ஆசைபடுவார்கள்.  பிறரை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்க மாட்டார்கள்.  ஆசார குறை உடையவர்கள்.

                மிருகசீரிடம் இரண்டாம் பாதம் :  

தீர்த்த ஞானம் படைத்தவர்.  சாந்தகுணம் உடையவர்.  சத்யசீலர், சகோதர உறவுகளில் சச்சரவு உடையவர்.  வீடு, நில, வாகன வசதி உடையவர்.  கல்வியில் தடங்கல் உடையவர்.  மகிழ்ச்சியான இல்லறம் உடையவர்.  லேவா தேவி, அழகு சாதனம் அணிகலன்களால் ஏற்றம் காண்பவர்கள்.

                மிருகசீரிடம் மூன்றாம் பாதம்:

ஆசார அனுஷ்டானங்களை அனுசரிப்பவர் வருமானம் ஈட்டுவதில் வல்லவர், புத்திர, புத்திரிகளால் சந்தோஷம் அடைபவர், எதிரிகளை வெல்பவர். அரசால் ஆதாயம் அடைவர்.  தூது, ஜோதிடம் போக்குவரத்து, போதனை, துறைகள் இவர்களுக்கு ஏற்றது.   

                மிருகசீரிடம் நான்காம் பாதம்:

பிறருக்கு ஆலோசனை வழங்குபவர்.  காமம் அதிகம் உடையவர். பெண்களுக்கு வேண்டி செலவு செய்பவர்.  கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்.  அதில் சஞ்சலம் உடையவர்.  சகோதர, சகோதரிகளிடம் பாசம் உள்ளவர்.  வீடு, மனை, வாகனம் உடையவர்.  தந்தையால் பலன் அடையாதவர்.  எடுத்த காரியம் நிறைவேற எந்த வழிகளையும் கையாள்வர்.

                மக்கள் தொடர்பு, ஜவுளிக்கடை, உணவு பொருள், தரகு, போன்ற துறைகள் இவர்களுக்கு நன்மை தரும்.  மிகச்சிறந்த நிர்வாகி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *