திருவாதிரை நட்சத்திரம் பற்றிய சில குறிப்புகள்

 

 

                ஒரே நட்சத்திரம் வைரம் போல் ஜொலிக்கும்.  வர்ண மண்டலம் அசுப நட்சத்திர வரிசையில் அடங்கும்.  அதிபதி சிவன். தாமஸ குணம்.  மனுஷ கணம்.  ஆசார சீடர்கள்.  சிறந்த வியாபாரிகள்.  பாப காரியங்களை செய்ய தயங்கமாட்டார்கள்.  தீர்க்காயுள் உடையவர்கள்.  செய் நன்றி மறந்தவர்கள். 

திருவாதிரை முதல் பாதம்:-

தயாள சிந்தனை உடையவர்கள்.  அறிவுடையவர்கள்.  அவருடைய செயல்கள் மேதை தன்மை படைத்தவர்கள்.  இனிக்க, இனிக்க பேசுவார்கள்.  இளவயதிலேயே திருமணம் நடக்கும்.  பெற்றோரை விட்டு பிரிந்து இருப்பர்.   சகோதர வகையில் அனுகூலம் உடையவர்.  அமாவாசையன்றோ, கிரகணத்தன்றோ பிறந்தவர்கள் கடுமையான காரியங்களையும் இயலபாக செய்பவர்.

திருவாதிரை இரண்டாம் பாதம் :-

கடின மனதுடையவர், அனுபவ அறிவு மிக்கவர், இரகசியங்களை அறிபவர். துப்பறியும் துறைக்கு ஏற்றவர். தனம் வசதி உடையவர்.  பெண்களால் விரும்பபப்படுபவர்.  அதிபோகி. ஆசார அனுஷ்டாங்களில் விருப்பம் உடையவர்.  மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவர்.  மேஜிக் தொழில் இவர்களுக்கு மேன்மையைத் தரும். 

திருவாதிரை மூன்றாம் பாதம்:

தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுடன் சகவாசம் உடையவர் தரம் தாழ்ந்து நடப்பவர். சித்த மருத்துவம்  ரசவாதம்  போன்றவற்றில் சித்தி உடையவர்.  சமூக சட்டதிட்டங்களுக்கு எதிராக நடப்பவர்.  நாற்கால் பிராணிகளில் விருப்பம் உடையவர்.  மனைவியை ஆராதிப்பவர்   பிடிவாத குணம் மிக்கவர்.  உத்தம பெண் சேர்க்கை உடையவர்.

திருவாதிரை நான்காம் பாதம் :-

 ஈனத் தொழில் புரிபவர்.  அரசு ஆதரவு உடையவர்.  குடும்பத்திற்கு மூத்தவர்.  பணம் இருந்தாலும் தேவைக்கு பயன் படாது.  முரட்டு சுபாவத்தினால் பகைவர்களை உருவாக்கி கொள்வார்கள். தனக்கென்று ஒரு பாதையை வகுத்து அதில் தீவிரமாக இருப்பவர்கள். இவர்கள் பாவ புண்ணியத்திற்க்கு அஞ்சாதவர்கள், மனோபலமும், உடல்பலமும் மிக்கவர்கள்.  சஞ்சாரி . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *