புனர்பூசம் நட்சத்திரத்தைப் பற்றிய குறிப்புகள்

ஐந்து நட்சத்திரங்கள் கொண்டது. சக்கரத்தில் ஆரம் போல் அமைந்திருக்கும்.  இதன் அதிபதி குரு.  மகேந்திர மண்டலம்.  அசுப நட்சத்திர வரிசையில் அமைந்தது.  சாத்வீக குணம், தேவ கணம்.  நல்ல குணங்கள் இருக்கும்.  சிற்றுண்டி பிரியர், வம்பு தும்புகளுக்கு போக மாட்டார்.  பெரியோர்களுக்கு அடங்கி நடப்பர்.   பலரிடத்தும் அன்பு உடையவர்.  சாதுர்யமிக்க பேச்சாளி,  புகழ் பெற்ற வித்வம் தன்மையுடையவர்.  தர்ம சிந்தனை உடையவர், டாம்பீக நடையுடையவர்.

                புனர் பூசம் நட்சத்திர முதல் பாதம் :

அனுபோகம் உள்ளவன்.  பெண்களிடம் நாட்டம் உடையவன்.  பெரியோரிடம் மரியாதை கொண்டிருப்பர்.  பெற்றோர்களிடம் நல்லுறவு வைத்திருப்பர்.  கனவு காணும் மனோபாவம் உடையவர்.  கௌரவத்தை விட்டுக்கொடுக்காதவர். தேவைக்கேற்ப சண்டையிடுபவர்.  

                புனர்பூசம் இரண்டாம் பாதம் :

சுகபோகி, அலங்காரப்பிரியர், பால்  சம்பந்தப்பட்ட இனிப்பு வகைகளை விரும்பி சாப்பிடுபவர்.  ஆசார குறையுடையவர், சூடான தேகம் உடையவர்,

                புனர்பூசம் மூன்றாம் பாதம் :

காவியங்கள் சாஸ்திரங்களில் ஈடுபாடு உடையவர்.  குட்ட  நோயுடையவர்,  படிப்பில் கெட்டிக்காரத்தனமும், மேச்சில் மேதாவித்தனமும் வெளிப்படும், பார்க்க அழகாகத் தோன்றுவர்.  காம சேஷ்டைகளில் அதிக கவனம் செலுத்துவர்.  மனைவியிடம் ஆசையும் அன்பும் கொண்டிருப்பர். 

                புனர் பூசம் நான்காம் பாதம் :

 இனிக்க, இனிக்க பேசுவர்.  பேச்சில் உவமைகள் இருந்து கொண்டே இருக்கும். ரகசியங்கள் காப்போர்.  இந்த நட்சத்திரத்தில் ருதுவானால், சாந்தி செய்து கொள்ள வேண்டும்.  இல்லாவிடில் தோஷங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.  ஒரளவு சுகமான வாழ்க்கை அமையும்.  கால் நடைகள் இவர்களுக்க கை கொடுக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *