பூசம் நட்சத்திரத்தைப் பற்றிய சில குறிப்புகள்

                மூன்று நட்சத்திரங்கள் இணைந்து புடலை பூ போன்று வானவெளியில் தோன்றும் இதன் அதிபதி சனி,  உத்திராடத்திற்கு பூசம் பகை நட்சத்திரம். அக்னி மண்டலம்.  அசுப வரிசையில் நிற்கும்.  அதிதேவதை குரு. தாமஸ குணம்,  தேவகணம்.  ஆண் நட்சத்திரம்,

                யூகித்தறியும் திறமையும், புத்திசாலித்தனமும் சிறிது காணப்படும்.  கொஞ்சம் முன் கோபி.  தாய், தந்தையர் பிரியர்.  சண்டைக்காரர்.  செல்வந்தன், பிரபுத்தன்மையுடையவர், அன்னியர் நட்புடையவர்.  கௌரவத்தை விட்டுக் கொடுக்காதவர், சாமர்த்தியயுடையவர், மத்திம வயது கடந்ததும் தனித்து வாழ பிரியப்படுவர். 

                பூசம் முதல் பாதம் :

  முன் கோபி,  காமவயப்பட்டவன், பெண்களுக்கு வேண்டி எது வேண்டுமானாலும் செய்பவர்.  மன உறுதி உடையவர், செல்வம் உடையவர்,  சுற்றத்தாரின் பகையுடைவர், எதையும் வேகமாக செய்பவர், தனித்துயியங்குபவர், 

                பூசம் இரண்டாம் பாதம் :

உறவினர்களின் நட்புடையவர், அன்னியர்களை அரவணைப்பர், செல்வம் இழப்பவர், சுயசுகம் இல்லாதவர்.  நம்பி ஏமாறுபவர், கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி உடையவர்.  தர்ம குணம் உடையவர், தெய்வசிந்தனை உடையவர்,

                பூசம் மூன்றாம் பாதம் :

எல்லோருக்கும் இனியவர்.  சகோதர, சகோதரிகளுக்கு லாபயுடையவர், பிறரின்துயரம் கண்டு வருந்துவர், ஏமாளி, படிப்புடையவர், அனுபவ அறிவு மிக்கவர்.  எவரையும் பேச்சால் தன்வசம் ஈர்ப்பவர், இசையில் ஆர்வம் உடையவர்.

                பூசம் நான்காம் பாதம் :

உறுதியான தேகமுடையவர், மனைவியினால் அனுகூலம் அற்றவர், அன்னிய தேசத்தில் வாழ்பவர், நம்பி ஏமாறுபவர், எப்போதும் கற்பனைகளில் மிதந்து கொண்டிருப்பவர், ஆள், அடிமையுடையவர், அகங்காரம் மிக்கவர், பண்டைய கருத்துக்களில் நம்பிக்கையுடையவர், எதற்கும் அடங்காதவர், தெய்வசிந்தனையுடையவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *