எலுமிச்சைப்பழம் பற்றிய சில குறிப்புகள்

எலுமிச்சைப் பழத்தில் பல சத்துப் பொருட்கள் உள்ளது.

லெமன் மெரிங்கு, பயோ ஃபளோவன், லெமன் பெக் டேட், ஸ்ட்ரிக் ஆஸிட், லெமன்பெக்ஷன்.   இத்துடன் வைட்டமின் சி சத்தும் அதிகமாக உள்ளது.  மிகச் சிறந்த மருத்துவம் கொண்டது எலுமிச்சைப் பழம்.

                எலுமிச்சைபழத்தினால் மருத்துவ குணம் மட்டுமல்லாது தெய்வீக காரியங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலுமிச்சை பழத்தை கையில்இருக்கும். 

                எலுமிச்சையில் உள்ள லெமன் பெக்ஷன் இரத்தம் உறையாத குறை உள்ளவர்களின் நோய் நீங்கப் பயன்படுகின்றது.  உடல் உஷ்ண வியாதிகள், உடல் முழுவதும் கட்டி போன்ற வியாதிகளுக்கு எலுமிச்சை சாறு நன்றாக பயன்படுகிறது.    பித்தத்திற்கு இது அருமையான மருந்து, பயோரியா வியாதிக்கும் சிறந்த மருந்து.  கல்லீரல், மண்ணீரலில் உள்ள வீக்கம் போகும்.  தலையில் பொடுகு இருந்தால் தேய்த்துக் குளித்தால் நல்லது.   மூளை அதிர்ச்சி, பைத்தியம் இவர்களும் இதை அதிகமாக உபயோகப்படுத்தலாம்.

                உடல் பருமன் உள்ளவர்கள் சிறிது சூடு நீரில் எலுமிச்சை சாறும், சிறிது தேனும் கலந்து குடித்தால் உடல் இளைக்கும்.   வாய் துர்நாற்றம், பல்லில் இரத்தம் வருபவர்கள் எலுமிச்சைபழத்தை நன்றாக மென்று சாப்பிட்டால் குணமாகும்.

                எலுமிச்சைப்பழத்தை தினமும் உணவாகவோ, சர்பத்தாகவோ, ஊறுகாயாவோ எடுத்துக் கொள்வது நல்லது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *