தியானம் செய்ய பல வழிகள் உண்டு

 

            தியானம் செய்ய பல வழிகள் உண்டு.  அதில் எளிமையானது நாம் நம் உள் சென்றுவரும் காற்றைச் சிந்தித்தல் அதன் வரவையும், போக்கையும், கவனித்துக்கொண்டிருத்தலும், தியானத்தின் ஒரு வகையே ஆகும்.  இது நமக்கு எண்ணிறைந்த பலன்களைத் தரும்.  நமது முன்னோர்கள் இதற்கு வைத்தப்பெயர் வாசியோகம். 

            போக்கும் வரவையும் அறியவேண்டும்.   மண்டல வீடுகள் கட்ட வேண்டும்.  ( சித்தர் பாடல்கள் ).  எப்போது நாம் நமக்குள் வந்து போகும் காற்றை சிந்திக்க தொடங்குகின்றோமோ, அப்போதிலிருந்து நமது உடல் 

செயல்,  சிந்தனை, முதலியவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதை அனுபவ ரீதியாய் உணரலாம்.  அதில் படிப்படியாக நிலைத்து நிற்கும்போது நமது வினைகளும், நமது கட்டுக்குள் வருவதையறிலாம்.  அது மட்டுமல்லாமல் தன்னைத்தான் அறியும் நிலையும் சித்திக்கும்.

            நாம் காற்றை சிந்திக்கும் போது தீய எண்ணங்கள் நம்மை அணுகாது. அகத்திலிருந்தும் சரி, புறத்திலிருந்தும் சரி நம்மை தீய எண்ணங்கள் தொல்லைப் படுத்தாது.

            காலை எழுந்தவுடன், நம்முள் சென்று வரும் காற்றைச் சிந்தித்து அதற்கு நமஸ்காரம் சொல்லும் பழக்கத்தை முதலில் கொண்டு வர முயற்ச்சி செய்யவும்.   இதை பயிற்ச்சியின் மூலம் எளிதில் அடையலாம்.

            காற்றாகி –  கனலாகி  என்னுள் இயங்கும் மாபெரும் சக்தியே என்று வணங்கி, நமது தேவைகளை முன்வைக்கவும்.  அது இயல்பாக நடைமுறைக்கு வருவதை அனுபவத்தில் காணலாம்.

            காற்று –  ஐந்து பேர் விளையாடும் மைதானம், யாரந்த ஐந்து பேர் என்றால், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களே, அந்த ஐவர். 

            இந்த ஐவரை நாம் மதிக்க, மதிக்க நம் நிலை உயர்ந்து எல்லோரும் நம்மை மதிப்பர்.  கிரகங்களால் உண்டாகும் தாக்கங்களைத் தாங்கும், வலிவு நமக்கு உண்டாகும்.  பல சமயங்களில் கிரகங்களின் தாக்குதலே நமக்கு இருக்காது.  ஏனென்றால்,  நாம் ஐவருடன் ஆழ்ந்த நட்பையும், மரியாதையையும் கொண்டிருப்பதால்.

            காற்றை கவனிக்கும் போது ஆகார வகைகளில் சில மாறுதல்களை செய்தோமானால் அதனுடன் உறவாட மேலும் சௌகரியமாய் இருக்கும். எப்படியென்றால், அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், மீதமுள்ள கால் பாகம் காற்று.  பயிற்சி கைவல்யம், ஆகும் போது கால் வயிறு ஆகாரம், கால் வயிறு நீர், அரைவயிறு காற்று என ஆகார நிலை மாறும்.  புலால் உணவை நீக்கவும்,  ( தாமஸ குணம் நம்மை அனுகாது ).

            இந்த வழிகளில் காற்றை சிந்தித்து பழகிய பின் ஓம் ஜெபத்தை ஆரம்பிக்கவும், அதன் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தி 1008 – ல் கொண்டுவந்து நிறுத்தவும்.  அதன் பயனை அனுபவத்தில் பார்க்கவும். 

            காற்றின் ஒட்டத்தைக் கொண்டு அதை மூன்று நிலைகளாக நாம் பகுக்கலாம்.

  1.  வருவதும் போவதும் தெரியாத நிலை ( உத்தமம் ).
  2. வருவதும் போவதும் தெரியும் நிலை. ( மத்திமம் ).
  3. வேகமாகவும், தடித்தும், கனத்தும் வந்து செல்லும் நிலை. ( அதமம் ).  அதமத்தில் காற்று போய் வருவது,  நம் வினைகளின் கனத்தை – அளவை, குறிப்பிடுவது, பயிற்சியின் மூலமும், முயற்சியின் மூலமும்  அதன் தன்மையை பஞ்சில் பட்ட நெருப்பு போல இல்லாததாக்கி விடலாம்.    

  இதை நீக்க என்ன வழிமுறை, தீர்வைக் கூறுகிறார்  சுத முனிவர்
சுத முனிவர், புனித நீரைக் கொண்டு வாசி மூலம்,  நம் வினைகளின் கனத்தை – அளவை தீர்க்கலாம் என்கிறார். 
1. கங்கா நதியை நாடி அதன் கரை ஓரம் நின்று, ‘‘இந்த உடல் பெரியோர்கள் வழியிலே எக் குற்றத்தை ஏற்று வந்திருந்தாலும் அக்குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும். எப்புண்ணியத்தை தேடி வந்திருந்தாலும் அப்புண்ணிய பலன் மேலோங்க வேண்டும்.’’ என சந்திர கலையில் சூரியன் உதிக்கும் திசையை நோக்கி நின்று பிரார்த்தித்து நதியில் மூழ்கவேண்டும். குளித்து முடித்து நீரில் நின்று அதே சூரியனைப் பார்த்து, 3 கவளம் நீர் எடுத்து அருந்தவும்.
பலன். பித்தத்தால் தேகத்தில் ஏற்பட்ட எரிச்சல் (மந்தாகினி) கர்ம வினையால் ஏற்பட்டது தீரும்.
பின்பு வைத்தியம் செய்ய பூரண குணமாகும். (இது போலத்தான் எல்லா புண்ணிய நதிகளுக்கும். 

2, எமனை விரட்டும் யமுனை நதி, கட்டுப்படாத காய்ச்சல், வெண் குஷ்டம், வெண்பாண்டு (புள்ளி) விந்து நஷ்டம். குணமாகும். 

3, காமதேனுவைப் போன்ற கோதவரி. 3 வித தோல் வியாதி (வாத, பித்தம், அரிப்பு ஆகியவை தீரும். 

4, துன்பத்தைப் போக்கும் துங்கபத்ரா.சய ரோகம் (டி.பி) எலும்புருக்கிநோய், வெப்ப நோய், விந்து நஷ்டம், கண் கோளாறு, இருமல், மூத்திர ரோகம், நுரையீரல் கோளாறு குணமாகும்.

5. நற்பணிக்கு நர்மதா. வாந்தி, விக்கல், காமாலை, வாதம் குணமாகும்.

6. சிறக்புமிக்க சிந்து. சித்தபிரமை, மயக்கம், புண், (தீராத ரணம்) வியர்வை, தாது நஷ்டம்,
குணம் ஆகும்.

7. வைகை.உடலில் ஏற்படும் வலிகள், சூலை குன்மம் உடல் குத்தல், வீக்கம் ஆகியவை தீரும். 

8. காவேரி.சகல தோஷங்களும் தீரும்.

9. தாமிரபரணி. சகல வித காய்ச்சல், பித்த தோஷம், சயம், சுவாசரோகம், சாதாரண டி.பி.தீரும்.

10. நதிகளின் சேர்க்கை.அகால மரணம், போன்ற இறப்புக் குற்றங்கள், விபத்து, மருத்துவத்தால் தீராத வியாதிகள் தீரும்.

தாமரை, அல்லிகுளம், அதிக குளிர்ச்சியான குளம் நீர் நிலையில் குளிப்பதால் சுவாச பேதம், எதிர்பாராத உடல் உபாதை, கடின தோல், முரட்டுத்தன்மை, இறைசக்திபலம் இல்லாத நிலை ஏற்படும்.

சந்திரன் தன் தோஷத்தை நிவர்த்திசெய்வது திங்களுரில் அருள்பாலிப்பது திருப்பதியில்.

குரு சாபம் தீர்த்தது ஆலங்குடியில் அருள்பாலிப்பது திருச்செந்தூரில்.

எல்லா கோவில்களிலும் ஞானம் உண்டு. அதற்குத்தான் உண்டாக்கப்பட்டது. நாம் தான் கோயில். 32 மூடிச்சு கொடி மரம். முதுகு முதலில் கொடி மரம் நமஸ்கரித்து பின்புதான் உள்ளே செல்ல வேண்டும். மூலஸ்தானம் ஞானம் மூலாக்கினி, ஞானத்தை அள்ளித் தருபவள் கோவை கோணியம்மன், மயிலையில் கர்ப்பகாம்பாள், காஞ்சியில் காமாட்சி. 

தந்தை — தந்தை வழிக்குற்றம், குழந்தை, குழந்தை வர்க்கக்குற்றம் சூரிய கலையில் சிந்தனை செய்ய வேண்டும். 

குழந்தை ஆரோக்கியமாக — புஷ்டியாக சந்திரகலையில் ஆகாரம் கொடுக்கவும். குழந்தை பெற்ற தாய் முதலில் சூரிய கலை பக்கம் பால் ஊட்டியிருந்தால் அக்குழந்தைக்கு ஞானம் விருத்தியாகும். சந்திரகலை சோற்றுப்பட்டாளம். காம இச்சை அதிகமாகும்.

நல்ல வாசி யோகி ஒருவன் தேகத்தைத் தொட்டாலே தேகம் புனிதமாகும்.

மருத்துவம்: . ஈனாத வாழைத்தண்டுச் சாறு எடுத்து சூரியகலையில் சிந்தனை பண்ணிகொடுக்க
சிறுநீரில் கல்லும் கரையும்.

பயிற்சி:  . நாக்கு நமக்கு வாகனம். நாக்கை குழாய்போல் மடித்து இழுத்து மூக்கு வழியாக வெளியேற்ற குளுமை தரும். 

சுவாசம் : நமக்குள் இயங்கக் கூடிய சவாசம் தாய், தந்தை, முன்னோர் பலத்தின் மூலம் செயல்படுகிறதா.,     இல்லை நம் பலத்தில் செயல்படுகிறதா
நமக்குத் தெரியாது. ஆனால் சுவாசத்துக்கு தெரியும். நாம் தெரிந்த கொள்ள 12 வருடம் யோகப் பயிற்சிக்குப் பின்புதான் உணர முடியும். கோள்களை வைத்து கர்மாவை வியாக்யானம் செய்ய முடியுமே தவிர அது பேசுமா., ‘‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்.’’ இதுதான் வாசி. 2 பேர் இணைவு இருக்க வேண்டும் சுவாசத்துக்கு தலை வணங்க வேண்டும். 

நமக்கு சந்திரகலை நடக்கும் போது ஒருவர் வந்து அமர்கிறார். நாம் காற்றை சிந்திக்க காற்று தடுமாறினால்….வந்தவர் மனக் குழப்பத்துடன் வந்துள்ளார் , தாய் வழி கர்மா–, 
நமக்கு சூரிய கலையில்….தந்தை வழி கர்மா, குழப்பம் சூரியகலை தந்தை வழி கர்மாவைக் காட்டும்.
காற்றை சிந்திப்பவனுக்கு செய்வினை, கண் திருஷ்டி வராது. நம்பிக்கை முக்கியம்.,
சூரிய கலை 2 மணி நேரம் 5 பங்கு, குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சனி.
குரு. தெய்வ குற்றம், குருசாபம், சிசு சாபம், அபார்ஷன், பிறர் பணம், சொத்தை களவாடியகுற்றம்.
சுக்கிரன். பெண்கள், காமம், ஏமாற்றியது, ஆடம்பரம், உல்லாசம்.
செவ்வாய். அடிதடி சண்டை, ரத்தம் பார்க்கும் அளவு.
புதன் . காற்றை சுவாச பந்தனம் செய்தல்.
சனி . வயது முதிர்ந்த நோயாளிகள் இறக்கும் நேரம். சரியான உதவி செய்தாதது, பலாத் காரம், கடத்தல் மிரட்டல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *