அஸ்தம் நட்சத்திர சிறப்புகள் பற்றி சில குறிப்புகள்.

 ஐந்து நட்சத்திரங்கள் கொண்டது, கைபோல தோற்றம் தரக்கூடியது. முழு நட்சத்திரம் அதிபதி சந்திரன், வாயு மண்டலம் சுப நட்சத்திரத்தில் அமையும், சாஸ்தா அதிதேவதை, ராட்சச குணம், தேவகணம், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொஞ்சம் தயாள குணம் கொண்டவர்கள். வெட்கமில்லாதவர்கள், குருத்துரோகம் செய்பவர்கள், சூழ்நிலை அப்படி அவர்களுக்கு அமையும். காரியத்தில் இறங்கிவிட்டார்கள் என்றால் பசி தாகத்தை மறந்தவர்கள், தன்னை உயர்வாக வெளியில் காண்பித்துக் கொள்வார்கள் அதற்கு வேண்டி அடுத்தவர்களை எப்போதும் மட்டம் தட்டிக் கொண்டிருப்பார்கள். தந்தையின் ஆதரவு குறைவாக கொண்டவர்கள்.

முதல் பாதத்தில் பிறந்தவர்கள்

  அடிக்கடி பசியுடையவர்கள், இரண்டு பசியும், பலாத்காரத்தில் இறங்கவும் தயங்காதவர்கள், எல்லாம் அறிய ஆசைப்படுவார்கள், எப்போதும் உற்சாகமாகயிருப்பவர்கள். எந்த விஷயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். தான் சுகமாய் இருக்க எண்ணவேண்டுமானாலும் செய்வார்கள். வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள், அதன்படி நடக்கமாட்டார்கள்.

இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

 பிறரை கஷ்டப்படுத்துவதில் பிரியமுள்ளவர்கள், தன்காரியத்திலேயே குறியாய்யிருப்பவர்கள். சமயம் சந்தர்ப்பத்திற்கேற்ப மாறி மாறி செயல்களை செய்பவர்கள், வாக்கு சுத்தம் இல்லாதவர்கள், பிறரைப்பற்றி சிறிதுகூட நினைத்துப் பார்க்கமாட்டார்கள் வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவிக்க ஆசை கொண்டவர்கள்.

மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

 தன் காரியத்திலேயே கண்ணாய் இருப்பவர்கள், அடுத்தவர்களுக்கு ஆலோசனையை அள்ளி வீசுவார்கள். தன் காரியம் என்று வரும்போது ஒருமுறைக்கு நூறு முறை யோசித்துத் தான் செய்வார்கள், இதில் சிலபேர் லட்சியவாதிகளாகவும் இருப்பர்.

நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

 பேச்சைவிட செயலில் கவனம் செலுத்துபவர்கள், அடுத்தவர்களின் குற்றம் குறைகளை நேருக்கு நேர் சொல்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வட்டம் சிறிதாக இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற கடும் முயற்சி எடுப்பார்கள். எல்லோரும் சரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். இவர்களுக்கு பலன் தரும் தொழில் அமைப்புகள். இன்சூரன்ஸ் தொழில்கள், சாஸ்திர போதனை, நீதி, நிதி, நிர்வாகத்துறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *