சுவாதி நட்சத்திர சிறப்புகள் பற்றிய குறிப்புகள்.

ஒரே நட்சத்திரம் பவளம் போல் மின்னக்கூடியது. இதன் அதிபதி ராகு. இதன்பகை நட்சத்திரம் மிருகசீரிஷம். வாயு மண்டலம் சுப நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றது. தாமஸ குணம். தேவ கணம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரமாய் இருப்பார்கள் பேச்சு வன்மை மிக்கவர்கள், பெற்றவர்களுக்கு மிகுந்த விருப்பம் உடையவர்களாய் இருப்பர். இளகிய மனம் கொண்டவர்கள். ஈவு இரக்கம் உடையவர்கள். அடுத்தவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்கள் வியாபாரத்திறமை மிக்கவர்கள், நல்ல உடல் கட்டுக் கொண்டவர்கள். குறைந்த புணர்ச்சி உடையவர்கள். 

முதல் பாதத்தில் பிறந்தவர்கள்

 பெரியவர்களின் ஆசிர்வாதம் பெற்றவர்கள். நடுவயதில் பிறரால் வஞ்சிக்கப்படுபவர்கள். பாசமே இவர்களுக்கு எதிரி. மாதா, பிதா இவர்களின் ஆசிர்வாதம் பெற்றவர்கள். தாம்பத்திய வாழ்வில் குறைபாடு உடையவர்கள்.

இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

 தைரியசாலி, எதையும் தீரத்தோடும் முன்யோசனையோடும் அணுகுபவர்கள். ரகசியம் காப்பவர்கள். தன் அந்தரங்க விஷயங்களை முன்யோசனையோடு எவரிடமும் பகிராதவர்கள். காமத்தில் சலனமுடையவர்கள், உண்மையின் மேல் தீராத நம்பிக்கையுடையவர்கள். சத்தியத்தை கடைபிடிக்க முயற்சி செய்பவர்கள்.

மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

 மனதில் பயம் உடையவர்கள். ஆடம்பரப்பிரியர், ஙிஷீக்ஷீஸீ மிஸீ ஷிவீறீஸ்மீக்ஷீ ஷிஜீஷீஷீஸீ என்ற வகையைச் சேர்ந்தவர்கள். அலங்காரப்பிரியர். பலவகையான பதார்த்தங்களை உண்ணும் பிரியமுடையவர்கள். பெரிய குடும்பத்தில் ஜனனமானவர்கள். தகப்பானருடன் உறவு நிலை மத்தியமாகயிருக்கும். திருமணமான பின்பும் தாயாரின் அன்பும் நல்ல உறவும் நீடித்திருக்கும்.

நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்  

முரட்டுச் சுபாவி. குடும்பத்தின் மேல் அக்கரை கொள்ளாதவர்கள், சகோதர, சகோதரிகளை அரவணைக்காதவர்கள். கல்வியறிவைவிட அனுபவ அறிவுமிக்கவர்கள். பிறன் மனை மேல் ஆசை கொண்டவர்கள். பெற்றோரின் வருத்தத்திற்கு ஆளாகுபவர்கள். தாம்பத்திய வாழ்வின் பிரச்சனையை உண்டுபண்ணுபவர்கள். உள்ளன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள். தன் வாயால் கெடுபவர்கள். தெய்வ பக்தி குறைந்தவர்கள். இவர்களுக்கு ஏற்ற துறை மதுபானக் கடைகள், ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரங்கள், கவரிங் சம்பந்தப்பட்ட பொருள்கள் சினிமா, கம்ப்யூட்டர் துறை, போன்றவைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *