சித்திரை நட்சத்திர சிறப்புகள் பற்றி சில குறிப்புகள்.

புலி கண் போல் தோற்றம் உடையவர்கள். இதன் அதிபதி செவ்வாய். வாயு மண்டலம் அதிதேவதை விஸ்வகர்மா. தாமஸ குணம்.ராட்சச கணம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடக்கி ஆளும் குணமுடையவர்கள். எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் சுபாவம் உடையவர்கள். தாராள மனது இல்லாதவர்கள். எப்பொழுதும் கவலை குடிகொண்டிருப்பவர்கள். மற்றவர்கள் விரும்பும் வண்ணம் கவர்ச்சியாக இருப்பார்கள். திருமணத்திற்கு முன்போ, அல்லது பின்போ நிச்சயமாய் அதிகபட்சமாய் பிறன் மனைநோக்கல் அமைந்துவிடுகிறது.

முதல் பாதத்தில் பிறந்தவர்கள்

 குடும்பத்தில் பற்றுடையவர்கள். பொருள் ஈட்டுவதில் சாமர்த்தியம் உடையவர்கள். சகோதர சகோதரிகள் அதிக அளவு உடையவர்கள். வீடு, நிலம், வாகனம் சுகபோகத்தை அடைபவர்கள். நாட்டுக்காக பாடுபடும் எண்ணம் உடையவர்கள். சமூக அறக்கட்டளைகளை நிறுவி அதை பராமரிக்கும் ஆசையுடையவர்கள். சத்திரிய குணமிக்கவர்கள். நம்பியவர்களுக்கு உயிரைக் கொடுப்பவர்கள்.

இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

 தேகவன்மை இல்லாதவர்கள். தேகவனப்பும் குறைந்தவர்கள். சுயபுத்தி அதிகம் உடையவர்கள். அதனால் தான் என்ற கர்வம் எப்போதும் இவர்களிடம் குடிகொண்டிருக்கும். குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவர்களிடம் அமையும். ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும் காம உணர்வு மிக்கவர்கள்.

மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

 பிறருக்கு பிடித்தமாதிரி பேசக் கூடியவர்கள். நண்பர்கள் வட்டம் அதிகம் கொண்டவர்கள். அதன் மூலம் ஆதாயம் கொண்டவர்கள், புத்திசாலிகள் எதிரிகளை வெல்லும் திறன் மிக்கவர்கள். குடும்ப பாசம் அதிகம் கொண்டவர்கள். பக்கவமான வயதில் திருமணவாழ்க்கை அமையும்.

நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

 கலைத்துறையில் பிரகாசிப்பவர்கள். நுண்கலைப்பற்றிய அறிவு இவர்களுக்கு இயற்கையிலேயே அமையும். பல துறைகளிலும் ஆர்வம் இருப்பவர்கள். பத்திரிக்கை துறையிலே ஈடுபாடு கொண்டிருப்பவர்கள். எந்த வேலையையும் நிதானமாக செய்வார்கள். அவசரப்பட்டு இவர்களால் எந்த வேலையும் செய்யமுடியாது. சாப்பிடுவது உட்பட. இரண்டு வருமானம் உடையவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *