கோள்களின் கோலாட்டம் – 1.1- ஜோதிட ஞானம்.

62

தெய்வீக கலையான இந்த சோதிட கலையை ஒருவர்அறிந்து கொள்ளவோ அல்லது அதை தொழிலாக கொண்டு செயல்படவோ வேண்டுமானால் கண்டிப்பாக அந்த நபருக்கு தெய்வ பலம் தேவை.  தெய்வபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே இக்கலை வசப்டும்.  நவக்கிரகங்கள் தன் செயல்களையும் இயக்கத்தையும் உணர்த்துவார்கள்.  அப்படி அல்லாமல் ஒருவர் எத்தனை நூல்கள் கிரந்தங்கள் படித்தாலும், கணிதங்கள் ஆராய்ச்சிகள் செய்தாலும் இக்கலையைப் பற்றியும் அருமை பெருமைகளையும் தெரியமுடியாது.  இவர்கள் சொல்லும் பலாபலன்கள் சரிவர நடக்காது.

                இக்கலையை கையாள்பவர்கள் கண்டிப்பாக ஆச்சார அனுஷ்டானத்தை அனுசரிப்பவர்களாக இருக்கவேண்டும்.  இல்லையேல் அனுதினமும் ஜபதபங்களை செய்பவராக இருத்தல் அவசியம்.  வாசியோக பயிற்சியில் தேர்ந்தவர்களுக்கு இக்கலையானது நன்கு செயல்படும் நவக்கிரகங்களின் செயல்பாடு இயக்கத்தை தனது வாசி நிலையில் இருந்து உணர்ந்து அதனுடைய செயல்களை நன்கு கூறும் வாய்ப்பை தருகிறது.  எவ்வகையிலும் தெய்வீக தொடர்பு இல்லாதவர் இக்கலையை கையாண்டால் அவர்களை படுகுழியில் தள்ளிவிடும்.  தரித்திர நிலையை தந்து பலர் இழிவாக பேசும் நிலைக்கு உருவாக்கிவிடும்.

17

                தனது உபாசனா பலத்தாலோ அல்லது பிறர் தந்த பலத்தின் மூலமோ தேவதைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சோதிட கலையை முன் வைத்து செயல்படுபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கெடுத்துவிடும் தன்னிடம் உள்ள தேவதைகள் மூலம் வருபவர்களின் குற்றம் குறைகளைக் கண்டு அவர்களைத் தன் இஷ்டம் போல் செயல்படுத்த விரும்புபவர்களின் குடும்பம் ஓர் நிலையில் செயல்படாது, குடும்பத்தில் அமைதி இராது.  தான் வைத்து விளையாடும் தேவதையே தனக்கு சத்துருவாகி செயல்பட்டு பாதிப்பிற்குள்ளாகிவிடும் உடலை கெடுத்துவிடும்.

85

                மன ஒருநிலையோடு இறை உணர்வோடு பயபக்தியுடன் இக்கலையை கையாண்டு வந்தால் அவர்களை நவக்கிரகங்களே பாதுகாத்து பல நன்மைகளை செய்கிறார்கள்.  அவர்களின் தாக்குதல்கள் பாதிப்பிற்குள்ளாக்குவதில்லை.  நவக்கிரகங்களுக்கு ஓர் மரியாதை அளித்து ஓர் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் இக்கலை மூலம் பிறருக்கு பலன்களை சொல்லி வந்தால் அவர்களை சிறப்பான முறையில் நவக்கிரகங்கள் வைத்துள்ளனர்.  ” காஞ்சனம் கர்ம விமோசனம் ”  என்ற வகையில் இக்கலையை தொழிலாக கொண்டு உள்ளவர்கள் தன்னை நாடி வருபவர்களிடமிருந்து பெரும் தொகைகளை எதிர்பார்க்காமல் நமக்கு என்ன கிடைக்குமோ அதுதான் கிடைக்கும் என்ற நிலையில் இருந்து செயல்பட்டால் அது ” காமதேனு” விற்கு சமானம் என்ற பெரியோர் வாக்கின்படி நடந்தால் அது செயல்படும் விதமே தனியாக தெரியும்.

                இக்கலையை ஒருவன் அதற்கொரு வரையரை வகுத்து கட்டுப்பாடுடன் பிறருக்கு சொல்லி வந்தால் நவக்கிரகங்கள் இவன் நாவிற்கு கட்டுப்படும் என்ற சித்தர்கள் வாக்குப் பொய்க்காது.  ஒரு சோதிடன் காலையில் தன் கடன்களை முடித்துக் கொண்டு தனது இஷ்ட உபாசனா தெய்வத்தை வணங்கி ஜபதபங்கள் செய்து பின் சோதிடம் சொல்ல தொடங்க வேண்டும்.  இக்கலையைப் பற்றி விசயங்களை பிறருக்கு எடுத்து அதன் நன்மை தீமைகளை சொல்லும் நேரம் சூரியன் அஸ்தமனநேரம் வரையாகும்.  சூரிய அஸ்தமன நேரத்திற்குபின் ஜோதிடம் சொல்லக்கூடாது.  நவக்கிரகங்களின் செயல்பாடு இயக்கத்தைப் பற்றி பேசக்கூடாது.  இது கண்டிப்பாக செயல்படுத்தவேண்டும்.  அஷ்டமி, நவமி காலத்திலும் சோதிடம் சொல்லக்கூடாது.  சோதிடம் பார்க்கும் இல்லத்தின் அல்லது இடத்தின் அருகாமையில் யாராவதுஇறந்து விட்டால் அந்த நாள் முழுவதும் சோதிடம் சொல்லக்கூடாது.  காசுக்காக வித்தையின் தரத்தை குறைக்கக்கூடாது.  சோதிடம் கேட்க வருபவரின் மனம் பீதியும் புண்படும்படியான பலன்களை வார்த்தைகளை சொல்லக்கூடாது.

 ஜோதிடர் அமரும் திசை:-
 தெற்கு, மேற்கு பார்த்து அமருவது நல்லது.

ஜோதிடம் கேட்பவர்  :- கிழக்கு, வடக்கு, வடகிழக்கு பார்த்து அமருவது நல்லது.

                 ஜோதிடம் கேட்பவர் கிழக்கு முகமாய் இருந்தால் அனுகூல பலன்கள் ஏற்படும்.  மேற்கு முகமாய் இருப்பது கூடாது.  வடக்கு, தெற்கு முகமாய் இருந்தால் நல்லது நடக்கும்.  தென்மேற்கு முகமாய் இருந்தால் காரியங்கள் நடக்க கால தாமதமாகும்.  வடகிழக்கு முகமாய் இருந்தால் பல தடைகள் ஏற்படும்.  வடமேற்கு தென்கிழக்கு முகமாய் இருந்தால் தோல்வி, ஏமாற்றம், தடுமாற்றம் ஏற்படும்.

74

                பிருகத் பராசர ஹோராவில் உலக சிருஷ்டி காலத்தில் எல்லாம் வல்ல இறைவனருளிய வேதத்தில் கூறப்பெற்றுள்ள கர்மங்களைச் செய்வதற்குரிய கால நிர்ணயத்தை அறியும் பொருட்டு இச்சோதிட சாஸ்திரத்தை கர்கமுனிவருக்கு பிரம்ம தேவன் உபதேசித்தார் என்று இந்த சாஸ்திரத்தை சிரத்தையோடும் விநயத்தோடும் குருமுகமாக கேட்டுணர்ந்த புத்திமான் குரு ஆசீர்வாதத்தினாலும் சாஸ்திர ஞானத்தினாலும் சர்வ பாபங்களினின்றும் நீங்கிமுக்தானாவான் என்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *