கோள்களின் கோலாட்டம் – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள்

86

சோதிடம் எங்கு எப்படி தோன்றியது என்பது பற்றி எவருக்கும் தெரியாது ஆனால், சீனர்கள், இந்துக்கள், சால்தியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர், ரோமானியர், அரேபியர் ஒவ்வொருவரும் தனித்த்னியா ஒவ்வொரு முறைகளை கையாண்டு வந்தனர் என்பது அறிந்த உண்மை.

                இக்கலை ஒரு பழங்கால கலை அது விதியையும் எதிர் காலத்தையும் வானத்தில் உள்ள கோள்களின் இருப்பின்படி முன் கூட்டித் தெரிவிக்கும் ஒரு விஞ்ஞானக்கலை. 

” வேதயஸ்யசஷ ¨ ஜ்யோதிஷம்

                                ஜயோதிஷம் ஜகதாய சக்ஷ ¨ ”

இத்தகைய சிறப்புடைய ஜோதிஸ சாஸ்திரம் கி.மு.4000 – க்கு முன்னதாக ரிக்வேதத்திலேயே மிக சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.  இதையே யஜ ¨ ர் வேதம் சற்று தெளிவாக்குகிறது.  காடகம் முதல் ப்ரஸனமே, திதி நிர்ணயம் முகூர்த்தம் பற்றி கூறுகிறது. 

                ஒரு செயலுக்குரிய நாயகர்கள் அவர்கள் தேவராயினும், அசுரராயினும், மனிதர்கள் அயனும் அவர்களின் தவம், செயல், பிறப்பிற்கு காரணம் அவற்றிற்குரிய மூலாதாரம் என்ன என்பதைத் தரம் பிரித்து காட்டுவது சோதிட சாஸ்திரம்.

                கி.மு. 493 – ல் ஆரியபட்டர் எழுதியது ஆர்ய விருத்தம், இவர் பூமியின் உருவம் பற்றிய ஆகர்ஸன சக்தி நுட்பமான 14 விசயங்களை எழுதினார்.  கி.மு. 505 – ல் லவதேவர், கி.மு. 550 – ல் வாராஹமிகிரர்.

84

                கி.பி. 500 – 628 இடைப்பட்ட காலம் மகாபாஸ்கரீயம் எழுதியவர், பாஸ்கராசாரியார்.  628 பிரம்மகுப்தா, 748 முதல் பாஸ்கரா லாலா, 502 -வது, ஆர்ய பட்டர் 1039 – ல் ஸ்ரீபதி.  1114 – ல் 2 – வது பாஸ்கரர், 1430 – ல், திருக்கணிதம் நடைமுறைக்கு வந்தது.  லீலாவதி வியாக்னாம்.

                கி.மு. 4000 – க்கு முன்பாகவே பல முனிவர்கள், சித்தர்கள், மகரிஷிகள் கையாண்டு வந்த ஜோதிஸ சாஸ்திரம் பெருகி வந்தது என பெரியோர்கள் மூலம் அறிகிறோம்.

ஜோதிட சாஸ்திரம் வகை :-

  • கணித ஸ்கந்தம்.
  • ஜாதக ஸ்கந்தம்.
  • சங்கீதா ஸ்கந்தம்.

இதில் கணித ஸ்கந்தம், 2 விதம், 1.  பங்சாங்க கணணம், அல்லது சார கணணம்.  2. ஜாதக கணணம் அல்லது ஸ்புட கணணம்.

                ஜாகஸ்கந்தம் : கிரகங்களைப் பற்றிய பலா பலன்களையும் அவற்றை கணிக்கும் முறையையும் பிறவற்றை கூறும்.

                சங்கீதா ஸ்கந்தம் : கிரகங்களின் தன்மை அதன் பலா பலன் நிர்ணய பாடல்களைக் கூறும்.

கோள்களின் நான்கு வகை :-

  • மண்டல கிரகங்கள்:      சூரியன் — சந்திரன்.
  • தாராக்கிரகங்கள் :      செவ்வாய் — புதன் — சுக் — குரு — சனி.
  • சாயா கிரகங்கள் : ராகு —  கேது.
  • உப கிரகங்கள் : நவக்கிரகங்களின் புத்திரர்.

images (17)

சூரியன்:-

                இது தானாக ஒளிரும் கோளம்.  இதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர்.  இது தன்னைத்தானே சுற்றி வருகிறது.  ஒரு முறை சுற்றுவதற்கு 25.38 நாள் ஆகும்.  வினாடிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் எங்கோ செல்கிறது.  இந்த பணத்தில் தன்னுடன் விண்மீன்களையும் பூமி முதலிய கோள்களையும் கூடவே இழுத்துச் செல்கிறது. 

பூமி :-

                இது சூரியனை சுற்றி வருகிறது.  சூரியனை சுற்றி வரும் 9 கோள்களுள் பூமியும் ஒன்று.  பூமி தன் அச்சில் சுழன்று கொண்டே இருக்கிறது.  அதனால்தான் இரவும் பகலும் மாறிமாறி வருகிறது.  பூமி ஒரு முறை சுழலுவதற்கு 23.56 நிமிடம் ஆகின்றது.  பூமி சூரியனைச் சுற்றி வர ஓராண்டு அதாவது 356 நாள் 48 நிமிடம் 46 வினாடி ஆகிறது.

சந்திரன்:-

                இது பூமியின் துணைக்கோள்.  இது பூமிக்கு அருகாமையில் உள்ளது. பூமியிலிருந்து சந்திரன் 3.8400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  சந்திரனுக்கு இருவகை இயக்கம் உண்டு.  தானாக சுழல்வதோடு பூமியையும் சுற்றுகிறது.  இது ஒரு முறை சுழல 27 நாள் 7 மணி 43 கால் நிமிடம் ஆகிறது.  சந்திரன், சூரியனின் ஒளிபெற்றே பிரகாசிக்கிறது.  சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருந்தால் கிரகணங்கள் உண்டாகும்.

செவ்வாய் :-

                செந்நிறமானது, புதனைவிட சற்று பெரியது சூரியனில் இருந்து 22.7 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இது சூரியனை சுற்றி வர 687 நாள் தன்னைத்தானே 24.87 நிமிடங்களில் சுற்றுகிறது.  இங்கே பல எரிமலைகள் உள்ளன.

புதன் :-

                சூரியனக்கு மிக அருகில் உள்ளது.  இது சூரியனுக்கு 5 கோடி 80 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  சூரிய உதயத்திற்கு முன்னரோ அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு சற்று பின்னரோ புதனை வானத்தில் பார்க்கலாம்.  இது சூரியனை சற்றிவர 88 நாள் – தன்னைத் தானே சுற்றி வரும்.

வியாழன் ( குரு ) :-

                சூரிய குடும்பத்திலேயே மிக பெரியது வியாழன்.  சூரியனுக்கு 77.3 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  சூரியனை ஒரு முறை சுற்றி வர 12 ஆண்டுகள்.  இது தன்னைத்தானே 9 மணி 50 நிமிடத்தில் சுற்றுகிறது.

சுக்கிரன் :-

                கோள்கள் எல்லாவற்றிலும் ஒளி மிகுந்தது சுக்கிரன்தான்.  சூரியன் மறைந்ததும் மேற்கு வானில் தோன்றும்.  அல்லது சூரிய உதயத்திலும் முன் கிழக்கு அடிவானில் தோன்றும்.  இத பூமியுடன் சேர்ந்த இரட்டை பிறவி என்றே சொல்லலாம்.  சூரியனிலிருந்து 10.7 கோடி கிலோமீட்டர் சூரியனை ஒரு முறை சுற்றிவர 225 நாள் – தன்னைத்தானே 30 நாளில் சுற்றுகிறது.

சனி :-

                நம் முன்னோர்களுக்கு கடைசியாகத் தெரிந்த கோள்தான் சனி – சூரியனுக்கு 141.8 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இது சூரியனை சுற்றிவர 29 அரை ஆண்டு ஆகிறது.  தன்னைத்தானே 10 மணி 14 நிமிடத்தில் சுற்றுகிறது.

யுரேனஸ் :-

                31 . 3 . 1781 – ல் நாள் கண்டு பிடிக்கப்பட்டது — சர்வில்லியம்  ஹெர்ஷல் கண்டுபிடித்தார்.  சூரியனில் இருந்து 285 – 3 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இது சூரியனை சுற்றி வர 84  ஆண்டுகள் ஆகும்.  தன்னைத்தானே சுற்ற 10 மணி 48 நிமிடம் ஆகிறது.  இதற்கு சொந்தராசி நட்சத்திரம் இல்லை.

நெப்டியூன் :-

                யுரேனஸ்க்கு அப்பால் உள்ளது.  இதற்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 446.6 கோடி கிலோ மீட்டர்.  இது சூரியனை சுற்றி வர 165 ஆண்டு ஆகும்.   தன்னைத்தானே சுற்ற 15 மணி 48 நிமிடம் ஆகும்.  இதற்கும் சொந்த ராசி நட்சத்திரம் இல்லை.

புளூட்டோ :-

                1930    ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது.  இது சூரியனிலிருந்து 587.4 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இது சூரியனை சுற்றிவர 248 ஆண்டு ஆகும்.  இது தன்னைத்தானே 6 அரை நாள் சுற்றுகிறது.  இதற்கும் சொந்த ராசி நட்சத்திரம் இல்லை.

ராசிகளின் அமைப்பு :-

                வானத்தில் பூமியானது சூரியனை சுற்றி வரும் பாதை ” எக்லிப்டிக்” எனப்படும்.  இதற்க இருபுறமும் இருபுறமும் 5 பாகை சுற்று வளைய பட்டைப்பகுதி இராசி சக்கரம் எனப்படும்.  இதற்கு இருபுறமும் 5 பாகை சுற்று வளைய பட்டைப்பகுதி இராசி சக்கரம் எனப்படும்.  இந்த சுற்று வளைய பகுதிக்குத்தான் கோள்களும் சந்திரனும் சற்றி வருகின்றன.  இது 12 பாகமாக பிரிக்கப்பட்டு 12 ராசியாக கொண்டு உள்ளது.

இராசி பாகை தன்மைகள் பலம்
மேசம் 0 முதல் 30 வரை நியாயம் – தர்மம் – புண்ணியம் சரராசி இரவில்
ரிசபம் 30 முதல் 60 வரை ஆணவம் – மாயை – காமம் ஸ்திர ராசி இரவில்
மிதுனம் 60 முதல் 90 வரை காமம் – வெகுளி – மயக்கம் உபயராசி இரவில்
கடகம் 90 முதல் 120 வரை அறம் – பொருள் – இன்பம் சரராசி இரவில்
சிம்மம் 120 முதல் 150 வரை நியாயம் – தர்மம் – புண்ணியம் ஸ்திர ராசி இரவில்
கன்னி 150 முதல் 180 வரை ஆணவம் – மாயை – காமம் உபயராசி இரவில்
துலாம் 180 முதல் 210 வரை காமம் – வெகுளி – மயக்கம் சரராசி இரவில்
விருச்சிகம் 210 முதல் 240 வரை அறம் – பொருள் – இன்பம் ஸ்திர ராசி இரவில்
தனுசு 240 முதல் 270 வரை நியாயம் – தர்மம் – புண்ணியம் உபயராசி இரவில்
மகரம் 270 முதல் 300 வரை ஆணவம் – மாயை – காமம் சரராசி இரவில்
கும்பம் 300 முதல் 330 வரை காமம் – வெகுளி – மயக்கம் ஸ்திர ராசி இரவில்
மீனம் 330 முதல் 360 வரை அறம் – பொருள் – இன்பம் உபயராசி இரவில்

மேசவீதி : வைகாசி-ஆனி-ஆடி- ஆவணி உத்திராயணம்.

ரிசபவீதி: சித்திரை-புரட்டாசி-ஐப்பசி-பங்குனி பூர்ணாயணம்.

மிதுனவீதி: கார்த்திகை-மார்கழி-தை-மாசி தட்சணாயணம்.

சந்திரமானம் என்பது பௌர்ணமி லிருந்து பௌர்ணமி (நமதுவழக்கம்).

சௌரமானம் என்பது அமாவாசை லிருந்து அமாவாசை (வடநாட்டினர் வழக்கம்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *