கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு

  48

                யௌவன காவியம் – தாண்டவமாலை – கார்க்ய நாடி – ஜோதிட சாகரம் – சந்திர கலா நாடி – சாந்திர காவியம் – குமாரசுவாமியம் போன்ற பல சிறப்பான நூல்களில் சொல்லியுள்ளவிஷயங்களைத் தொகுத்து அனுபவ ஆராய்ச்சி மூலம் நடைமுறையில் கண்ட எனது 20 ஆண்டு கால ஜோதிட ஆராய்ச்சியின் வாயிலாக இதனை உங்கள் முன் படைக்கிறேன்.

 

மேச லக்னத்தில் பிறந்தவர்களுக்கு

 

மேச லக்னத்தக்கிரவி பொன்னல்லர் மிக்கவும் யோககாராங்

கூடியேயிரக்கிற்..பிரபல யோகங்

கொடப்பர்மால் கவிசனி தீயோர்

மாடுறுகவியோடு கொன்றிடான் சனி மால்

மாரகத் தானமாமிரண்டு

பாடுறு மூன்றே ழெட்டிறுதியினும்

பரிவுறிறகண்ட மென்றுரையே                    

                                                    ( யவன காவியம் )

 

” மந்தனொடு மால்கங்கன் மாபாவி நல்லவர்கள்

கொந்தலர் பூங்கோதாய் குருவிரவி – சந்ததமும்

தீயபலன் காரியடுதேவபிரான் சேர்ந்தக்கால்

ஈயுமவனோடொற்றதே.”

” மாரகத்தானப் பதியா மண்ணுகின்ற பார்க்க வனும்

மாரகத்தைச் செய்யானெம் மானவர்க்கும் – மாரகத்தை

செய்வார் சனி முன்னோர் செவ்விய மேடம் பிறந்தோர்க்

கிவ்வாறுரைப்பீரிருந்து ”

                                                       ( தாண்டவ மாலை )

 

” தானுறு மேடத்தார்க்குச் சனிபுகர் புந்திபாவர்

வானுறும் பரிதிதேவ வான்குரு சுபனாம் என்றே

கானுறு மிவர்கள் கூடி கடினமாம் பலன்களற்பம்

தேனுறுஞ் சுக்கிரயன்றன் திசையிற்றான் மாரங்கள் ”

                                                           ( ஜாதக அலங்காரம் )

” மேன் மேட லக்கினத்தைமேவிப் பிறக்கிலிருந்து

பண்புகர் மாலும் சனியும் பாவி ”

                                                 ( சந்திர காவியம் )

” சூடப்பா சரராசி ஜெனித்த பேர்க்கு

சுகமில்லை லாபாதிபதியினாலே

ஆடப்பா அகம் பொருளும் நிலமும் சேதம்

அப்பனே அரசரிட தோஷமுண்டாம்

தேடப்பாதிர வியமு மளித்தர தேடமாட்டான்

வீடப்பா தோனித்திலிருக்க நன்று

விளம்பினேன் புலிப்பாணி வினைவைப்பாரே ”

                                                            ( புலிப்பாணி )

 

                இப்படி பல நூல்களில் பல வகையான கருத்துக்களை சொல்லுகிறார்கள்.  நடைமுறையில் பார்க்கும் போது மேலே சொல்லப் பட்ட, பாடல்களுக்க ஒப்ப 75 %  நடைமுறைக்கு வருகிறது.  ஒரு சில விஷயங்களில் மாறுபாடு தெரிகிறது.  இது நமது நடைமுறை அனுபவ – ஆராய்ச்சிக்கு ஒப்ப நாம் தெளிவு படுத்திக் கொண்டோமானால் மிகவும் சிறப்புடையதாக இருக்கும்.

மேச லக்னம் :-

                பஞ்சமாபதி சூரியனும், பாக்கியாதிபதி குருவும் சுபத்தன்மை பெற்றவர்கள்.  இவர்கள் இருவரும் எங்கு கூடியிருப்பினும், அத்தன்மைகளுக்கேற்ப யோக பலன்களை விருத்தி செய்கின்றனர்.  எவ்வளவு கஷ்டங்கள் வந்த போதிலும் வீழ்ச்சி பெற வைக்காது.  காப்பாற்றி விடுகின்றனர்.  சூரியன் – குருவானவர் சுப வர்க்கத்தன்மை பெற்ற இருப்பின், அவர்கள் தசா – புத்தி – அந்த காலங்களில் யோக பலன்களைத் தந்து விடுகின்றனர்.

                புதன், சுக்கிரன், சனி கொடி தன்மை பெற்றவர்கள் ஆவர்.  இவர்கள் 2, 7, 8, 12 – ல் இருப்பின் இவர்கள் தசாபுத்தி, அந்திர காலங்களில் நோய், சத்துரு, தொல்லை, வழக்கு வியாஜ்ஜியம், கண்டாதி, கருமாதி தோஷங்கள் தொழில், முடக்கம், திடீர் இழப்பு ஆகியவற்றைத் தருகின்றனர்.  இதில் சனி, புதன் அதிக பாதிப்பை தருவதாக உள்ளது.  சுக்கிரன் பல கொடுமைகளைச் செய்தாலும், நன்மைகளையும் செய்யாமல் இல்லை.  சந்திரன், நன்மை தீமையின்றி சமமான பலன்களைத் தந்து வருகிறார்.

                செவ்வாய் – ஜாதகரை சில தவறான காரியங்களில் ஈடுபடுத்தி, பல பாதிப்புகளைத் தந்து திருத்துபவராக உள்ளார்.  ராகு, கேதுக்கள் இந்த மேச லக்கினத்திற்க உப – ஜெயஸ்தானங்களான 3, 6, 11 ஆகிய இடங்களில் இருந்து சுபத்தன்மை பெற்று இருப்பின் நல்ல பலன்களைத் தருகிறார்கள்.

                ராகு, கேதுக்களுடன் சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் சேர்ந்து எங்கு இருப்பினம் எதிர்பாராத பாதிப்பான பலன்களை தருகிறார்கள்.  ஆயுதம், நெருப்பு விஷ ஜந்துக்களால் பயம் போன்றவற்றையும் பெண்கள் வகை, விதவா, நீச்ச ஸ்திரி தொடர்புகள் தந்து அபகீர்த்தியையும் தருகிறார்கள்.  ராகு, கேதுக்கள், குருவுடன் சேர்ந்து இருப்பின் ஆஸ்தீகத் தன்மை, ஆன்மீக விஷயங்களில் நாட்டம், கௌரவ பதவி, செல்வாக்கு, புண்ணிய தீர்த்த ஸ்தலங்கள், தரிசனம் ஆகிய பலன்கள் உண்டு.  ராகு, கேதுக்கள் சூரியன், சந்திரன் சேர்க்கை பெற்றால் மாதா, பிதாவுக்கு தோஷம்.

                ஒன்றொட்டுக் குடையோனைப் பாரு – அவர்

                உச்ச திரிகோணம் ஆட்சியாய் நிற்க

                பண்டு பொருள் விதியுண்டு – சென்மன்

                பார் மன்னர் தோஷம் பகர்ந்தாண்டி தோழி.

       இந்த மேச லக்கினத்திற்கு செவ்வாய் 1 – 8 க்குரியவராகிறார்.  இவர் 1, 5, 8, 9, 10 – ல் இருந்தால் ஆயுள் பலம் ஏற்படுகிறது.  சொத்துக்கள் சேரும்.  ஆனால் அரசாங்க வகையில் பயம் ஏற்படும்.  காவல் துறையினால் தண்டனைகள் ஏற்படலாம் என்ற விதி சொல்லப்படுகிறது.

                செவ்வாய் மேற்படி இடங்களில் சுபத்தன்மை இழந்து இருப்பின் வசதி வாய்ப்பை தருவதில்லை.நல்லநிலையில் இருப்பின்யோகம் தருகிறது.

 

    ரிசப லக்கினம்.

 

” விடைதனிலுதித் தோற்கிரவியுஞ்சனியு

மிக்க வர்சனி யிறையோகன்

படிமிசை மதிபொன் சுக்கிரன்பாவர்

பனிமதி பொன் குசனிவர்கள்

மடியுமாரக ராகம் புந்தியோ கொல்லான்

மாடிகருட னெவரேனும்

அடையினுங்கண்ட காலமேன்றாய்ந்திங்

கறைகுவர் சோதிட முணர்ந்தோர்”

                                                      ( யவன காவியம் )

குரு வெள்ளியிந்து கொண்டாடக் கொடியவர்

மருவு சுபக்கோண் மந்தனென்றூழ்  திருவுமா

யோகங்கொடுப்பான் சனி யருவனாமெனவே

ஆகுமெனப்பாவாயறி.

குரு மதலாய்க் கூறுகின்றகோட்களே கொல்லும்

மருவினைய ராராயினென்றுந் – தெரியும்

படியிடப் வோரையினிற் பார்மிசையிற்றோன்றும்

முடியுடையார் கட்குமொழி.

                                                         ( தாண்டவ மாலை )

” களமே ரிசபஞ் சென்மித்தோர் கரசன்புகர் சூரியன்மூவர்

உளவாம்பாவி கதிர்தனியு முயர்ந்தசுபனாம் யோகங்கள்

வளமார் புகுருந்தான் குடும்பமாரகத் தோணாம்பாவி

புளகார்குததலையுறுங் கொங்கைபூவைக் குரலாரும் மானே”

                                                          ( ஜாதக அலங்காரம் )

” தன்னிடப் லக்கினத்தைச் சாரச் சனித்தவர்க்குப்

பன்னுமதி பொன்புகரும் பாவியாம் – மன்னிரவி

காரியந்தானல்லவர்கள் காண் சனியன் மாத்திரந்தான்

சாரரசர் யோகம் தரும் ”

தருகுருவும் செவ்வாயும் சார்ந்தமதியும்

வருமாரகனாக வாட்டி வெருவியிடக்

கொன்றிடுவர் புந்திகொல்லோன் கூறுதிசை தன்னிலுந்தன்

நன்றறிவாய் சொன்னே நயந்து ”

                                                              ( சந்திர காவயிம் )

                ரிசப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, குரு 8, 11 – க்குடைய ஆதிபத்தியம் பெறுகிறார்.  சந்திரன் 3 – ஆம் அதிபத்தியமும், சுக்கிரன் 6 – ஆம் ஆதிபத்தியமும் பெறுகிறார்கள்.  இதில் குருவுக்கு மட்டும் இரண்டு மாரகாதிபத்தியம் ஏற்படுவதால் அவர் கொல்லத்தகுதி உடையவராகிறார். இதில் குருவும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றோ – பார்வை பெற்றோ ( அ ) வேறு வகை தொடர்புகைளப் பெற்றாலும், சுக்கிரனும் ஒரு மாரகரே.

                சந்திரன் மாரகத்தன்மை வலுப்பெற்றவர் அல்ல.  புதன் பஞ்சாமாதி- யத்தினால் சுபராயினும், இரண்டுக்குடைய ஆதிபத்தியமுமூ பெறுவதால் அசுபராகிறார்.  பெரும்பாலும் புதன் ரிசப லக்கினத்திற்கு யோகப் பலன்களைத் தருவதில்லை.  குருவின் தொடர்பை பெறாத சனி, ரிசப லக்கினத்திற்கு பாதகாதிபதி என்ற தன்மையை இழந்து, யோகர் அகி சுபபலன்களை அள்ளித் தருவார்.

                சூரியன்-செவ்வாய் ரிசப லக்கினத்திற்கு அதிக பாதிப்பைத் தருவதில்லை.  ஜாதகரை வீழ்ச்சி பெறவும் வைப்பதில்லை.  ராகு-கேது ஆகியோர் சனி-புதன்-சுக்கிரன்-சூரியன் ஆகிய கிரகங்களின் தொடர்பை பெற்றால் பாதிப்பைத் தருகிறார்கள்.

                சூரியன்-சனி போன்றோர் யோகத்தன்மையும், சந்திரன், குரு-சுக்கிரன் போன்றோர் அசுபத்தன்மையும், சந்திரன் குரு, செவ்வாய் மாரகத்தன்மையும் புதன் அசுபனாயினும் மாரகர் ஆகிறார்.  சந்திரன்-குரு, செவ்வாய் போன்றவர்களோடு சேர்ந்த எந்த கிரகமும் தீமைகளைத் தருவதோடு ஆயுள் தோஷத்தையும் தர காரணமாகிறார்கள் என்று ” யௌவன காவியம்” கூறுகிறது.

                ரிசப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 4 – ல் சந்திரனிருந்து புதன்-குருவின் தொடர்பை பெற்றால் ( அ ) பார்க்கப்பட்டால், யோக பலன்கள் விருத்தியாகும்.  சனி, ரிசப லக்கினத்திற்கு சூரியன் – புதன் ஆகியோரின் தொடர்பை பெற்றால், நிச்சம் யோக பலன்களைத் தருகிறார்.

                இந்த லக்கினத்திற்கு குரு-செவ்வாய் சேர்க்கை, ராகு, கேதுக்களுடைய தொடர்பை பெற்று இருப்பின் இல்லற வாழ்க்கை பாதிக்கிறது.  பிரிவினை, தாரதோஷம், வம்தோஷம் மனைவிக்கு அகால மரணதோஷம், ஆகிய பலன்களைத் தருகிறது.  புதன், குருவுடன் கூடுவது, சம்பந்தப்படுவது, யோகத்தை கெடுத்து விடுவதோடு நல்ல பலன்களையும் விருத்தி செய்வதில்லை.  இதே புதன் செவ்வாயுடன் சம்பந்தப்பட்டால் நன்மையான பலன் நிச்சயம் தருகிறார்.  அவரவர் தசாபுத்திகளின் போது கை கொடுத்து உதவுகிறார்கள்.  சனி உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டு இருந்தால் மட்டும் இராஜயோகத்தை தர காரணமாகிறார். 3-ல் செவ்வாய், யோக பலன்களைத் தருகிறார்கள்.  கொடிய மாரகன் சொல்லப்பட்ட குரு, 3, 5, 12 ஆகிய இடங்களில் அமர்ந்து ராகு-கேது புதன்-சனி ஆகியோரின் தொடர்களைப் பெற்றிருப்பின், குரு தனது தசையில் பிற்பகுதியில் யோகப் பலன்களைத் தருகிறார்.

                அணியேழுக்குடைய«£னப் பாரு – அவர்

                அங்காரகனாக வாட்சியாய் நிற்க

                குனிதம் விதி பிசகாது – சென்மன்

                குமரிக்கு விதியுண்டு சுமங்கலி – தோழி

                ரிசப லக்கினத்திற்கு 7 – ல் 12 – ல் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை என இக்கவி மூலம் அறிகிறோம்.

 

 

 

                                                                   மிதுன லக்கினம்.

”மைதுனவோரை வந்தவற்கிரவி

மண்மகன் பீத்கன் கொடுமை

செய்குவர் பொன்னுஞ்சனியுமே கூடிற்

செகமிமை யோககாரகராம்

ஐயவெண் பிறையு மாரகனல்ல

வந்றியுங் குசனு மாரகனாம்

பைரவதனைக் கவர்ந்த ரசிலையைப்

பழித்திடுங்கடி தடத்தணங்கே”

                                              ( யவன காவியம் )

”சேய்சீவனோடிரவி சேராக் கடுங்கோடியர்

ஆயபுகரோ னொருவனான கோள் – சேயிழையாய்

மந்தனொடு மந்திரியும் வன்மையுடன் கூடுமெனல்

நந்துமேடப்படியே நாடு”

                                                      ( தாண்டவ மாலை )

”மானேமிதுனல லக்கினத்திற் கரசன் செவ்வாய் கதிர்பாவி

தனேசுக்கிரன் சுபனாகு மதியுஞ் சனியுமற்றபலன் ”

                                                       ( ஜாதக அலங்காரம் )

”சொல்மிதுன லக்கினத்தில் தோய்ந்து பிறந்திடவே

புல்சேயும் பொன் இரவிபொல்லாதவர்-நல்லவெள்ளி

தானொருவன் நல்லவன் சனி குருவுங் கூடியிடில்

மேனரச யோகமில்லை மீது”

                                                       ( சந்திர காவியம் )

 

                மிதுன லக்கினத்திற்கு குரு-சனி சேர்க்கை ” ராஜயோகம் ” என ‘‘ கவி ’’ கூறுகிறது. ஆனால் அனுபவத்தில் குரு-சனி ‘ பரஸ்பர பார்வை’

( அ ) 5,9,3,10 பார்வைகள் மட்டுமே யோகத்தைத் தரும்.  மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரி, செவ்வாய், குரு கொடுமைகளை அதிகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்கள் ஆகிறார்கள்.

                இந்த லக்கினக்காரர்களுக்கு சுக்கிரன்-புதன் சேர்க்கை எங்கு இருப்பினும் நல்ல யோகத்தை விருத்தி செய்கிறார்கள்.  சந்திரன் மாரகத்தை செய்யான்.  ஆனால் குரு பகவான் கேந்திராதிபதி தோஷத்தில் பலம் பெற்றவராகி- பாதகாதிபதியானதால், இவர் 1,4,5,7.9.10,11 ஆகிய ஸ்தானங்கள் ஒன்றில் அமர்ந்ததிருந்தால் ஜாதகர்களின் பாடு படு திண்டாட்டம்தான்.  இவ்வித அமைப்புப் பெற்ற மிதுன லக்கினக்காரர்களுக்கு வெளி உலகில் மதிப்பும் மரியாதையும் நல்லபடி இருக்கும்.  ஆனால் உள்ளே ஏராளமான தொல்லைகள் மனைவி, உடல் நலம் புத்திரர்கள், தொழில் பாக்கியம் ஆகிய விஷயங்களில் இடையூறுகளைத் தந்து கொண்டே இருப்பார்.  இந்தக் குரு பகவான் அதிலும் குரு திசை வந்து விட்டாலோ, வெளி வட்டாரத்தில் உயர்த்திக் கொண்டே போவார்.  தனிப்பட்ட முறையில் பல பாதகங்களைச் செய்து கொண்டே இருப்பார்.

                இது போல் மிதுன லக்கினகாரர்களுக்கு 7 ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள் எதுவானாலும் தங்கள் தசாபுத்தி காலங்களில் நன்மையான பலன்களைத் தருவதில்லை.  அதிலும் 7-ஆம் வீட்டில் இருக்கும் ரிககம் தனது திசையை ‘மூலம்’ சாரம் பெற்று நடத்தினால் கேது புத்தி வரையிலும் ‘ பூராடம்’ சாரம் பெற்று நடத்தினால்-சுக்கிர புத்தி வரையிலும் ‘உத்திராடம்’ சாரம் பெற்று நடத்தினால் – சூரிய புத்தியில் 4-ல் ஒரு பங்கு வரையிலும் பல தொல்லைகளை நிச்சம் தருகிறது.

                ஜெமினி ராசி லக்கினத்தில் பிறந்த இவர்களுக்கு சூரியன் குரு, செவ்வாய், இவர்களின் சேர்க்கை ( அ ) பார்வைக்கு மாரகம் தரக்கூடிய அதிகாரம் உண்டு.  இவர்களோடு ராகு, கேதுக்கள் சேர்க்கை பெற்றோ ( அ) தொடர்பு பெற்றோ பலமுடன் இருப்பின் இவர்களம் மாரகத்தை தரக்கூடியவர்களே.

                இந்த மிதுன லக்கினகாரக்களக்குப் பெருபாவியான குரு பகவான் தனது வீட்டிற்க மறைந்து இருப்பினும் ( அ) உடல் ஸ்தானம் என்கிற சந்திரனுக்கு 2,3,6.8,12 ஆகிய இடங்களில் அமர்ந்து இருப்பினும் நல்ல யோகங்களை விருத்தி செய்யக் காரணம் ஆகிறார்.  2-ல் உள்ள குருபகவான் சனி சாரம் பெற்றாலும் நல்ல யோக பலன் உண்டு.

                இந்த மிதுன லக்கினக்காரகர்கள் எக்காரணம் கொண்டும் மனம் தளர்ந்தவிடக்கூடாது மனம் தளர்ந்தால் மென்மேலும் சிக்கல்களே தொடரும்.  ஆகவே எவ்வித சோதனைகள் வந்தாலும் துணிந்து போராடினால் நிச்சயமான வெற்றி உங்கள் பக்கம்தான்-இதில் சந்தேகமில்லை.

இதே லக்கினத்திற்கு,

                அந்தணரும் கேந்திர மேர

                அவர் செய்யும் கொடுமையிது மெத்தவுண்டு

                குரு 1,4,7,10-ல் இருப்பது தவறு.  ஆயுள் குற்றத்தை தர இடம் உள்ளது. மிதுன லக்கினத்திற்கு குரு பலம் பெறுவது தவறு 9 – ல் வரும்போது பலன் சொல்ல முடியாத நிலையே.

                செப்புவாய் உபயத்தில் செனித்த பேர்க்கு

                சிறந்த தொரு சப்தமனு மாகாதப்பா

  இந்த பாடலும் குருவைப் பற்றி நல்ல பலனை சொல்லவில்லை.

                பத்தாமிட மீன மாகில் அதில்

                பவுமனும் பால் மதி சேர்ந்திருந்தாலும்

                சிறப்பாக கங்கா ஸ்நானம் செய்வாண்டி

                இப்பாடலில் செவ்வாய், சந்திரன் 10-ல் இருந்தால் புண்ணிய தீர்த்தம் ஆடும் வாய்ப்பு கிட்டும் என சொல்கிறது.

 

     கடக லக்கினம்.

” கடக லக்கினத்தோர்க்கமைச்சன் சேய்கபராங்

காரகன் யோககாரகனா

முடனிருந்திடினும் பிரபல யோக

முற்றவனி ரவியோ கொல்லான்

றிடமுள பளிங்கு மாலிவர சுபர்

செப்பிய விவரொடுங்கொடிய

முடவன் மாரகனாமாரகத்தான்

முற்றிடிற் கண்டடமு மொழியே”

                                          ( யவன காவியம் )

“சுங்கனிந்து மைந்தனிவர் சூழாக்கொடுக்கோட்கள்

மங்கலன்மா வேந்தனிவர் மன்னுகின்ற-துங்கமுள்ள

நல்லோர் கணல்லயோகக் கிறைவனாகுமவன்

சொல்லுறிற்பூ சிதனமாய் சொலல்

                                           ( தாண்டவ மாலை )

“நூதலுங்கடகம் புதர்புந்திநேயாய் செய்பவர் குரு செவ்வாய்,

இதமார் சுபனாம் செய்யோகம் இருக்கும்”

                                             ( ஜாதக அலங்காரம் )

“கார்க்கடக லக்கினத்தில் காணச் சனித்தவர்க்கு

சொற்புதனும் சக்கிரனும் சொல்பாவி-நற்குருவும்

செல்சேய் நல்லவர்கள் செய் குருவும் கூடியிடில்

நல்யோகந் தந்திடுவர் நாடு.”                   

                மேற்படி கவிகள் படி பார்க்கும்போது, கடக லக்கினத்தில பிறந்தவர்களுக்கு குரு-செவ்வாய் சேர்க்கை ( அ ) பார்வை-கேந்திர திரி கோணங்களில் இருப்பின் யோகத்தை செய்ய தகுதி உடையவர்களே.

                குரு-செவ்வாயின் சம்பந்தம் பெறாத சூரியன்-சந்திரன் யோகத்தைத் தரமாட்டார்கள்.  கடகலக்கினத்திற்கு யோகாதிகள் என்கிற வகையில் குரு-செவ்வாய்-சூரியன்-ராகு ஆகியவர்களை நாம் எடுத்துக்கொள்ள இடமுண்டு.  ஆனால் புதன், சுக்கிரன், சனி கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றால் நிச்சயம் யோகத்தைத் தருவதில்லை.  இது அடியேன் அனுபவம்.

                கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாதிப்பைத் தரும் கிரக வரிசையில் சுக்கிரன்-புதன்-சனி-கேது கிரகங்களைச் சொல்லியுள்ளனர். ஆனால் பாதிப்பைத் தரும் கிரகங்கள் 3,6,8 ஆகிய ஸ்தானங்களிலிருந்து சூரியன், சந்திரன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பை பெற்று இருப்பின் மறைமுகமாக ஜாதகனை முன்னேற்றம் அடையச் செய்யும் செய்து, பலவித குறுக்க வழி வருமானங்களைத் தந்து ஒரு உயர்ந்த அந்தஸ்தையும் தந்து விடுகிறார்கள்.

                இருப்பினும் “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல, குடும்ப சுகம்-மனைவி-புத்திரர்-புத்திரி போன்றவைகளில் ஏதோ ஒரு வகையில் சிக்கலை உண்டாக்கி உடல் நலம்-மனநிலை பாதிப்பைத் தந்து, ஒரு சந்நியாசி கோலத்தைஉண்டாக்குவர்.

                இவ்வகை அமைப்பை பெற்றவர்கள், மாற்றான் தோட்டத்து மல்லிகையை ‘ நோட்டம் ‘ விடாமல் இருந்தால் சரி, அப்படி நோட்டம் விடாமல் இருப்பது இவர்கள் வாழ்க்கைக்கு ஒளி சேர்ப்பதாக அமையும்.  இந்த லக்கினத்தில் பிறந்த பெரும்பாலான ஆண்கள், தம் மமைவியை துன்புறத்தாமல் இருப்பதில்லை.  பெண்கள் தன் கணவனிடத்தில் அலட்சிய நோக்கோடு செயல்படாமல் இருப்பதில்லை.

                நிலையான இடத்தில் தன் தொழிலைப் பலப்படுத்த முடியாத இளைஞர்களுக்கு சனி, ராக திசைகள் பெரும் யோகத்தைத் தருகிறது.  ஆனால் நிலையற்றதாகவே அவை இருக்கும்.  குரு திசை கடைக்கூறும்,செவ்வாய் திசை முதற்கூறம் யோகத்தைத் தருகிறது.  சூரியன் பிதுர்நிலை, சந்திரன் மனோநிலை தடுமாறச் ªச்யவர்.  கேது சந்நியாசத்தை உண்டாக்குவர்.  சக்கிரன் மதுபானம், பெண்கள் வகை உல்லாசம்.  சல்லாபங்களைத் தந்து ஜாதகரை படு குழியில் தள்ளுவார்.  ராக காம இச்சையை அதிகப்படுத்துவார்.  சனி, புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களோடு சம்பந்தப்பட்ட எந்தக் கிரகங்களும் கண்டம், விபத்து, மாரகம் போன்றவைகளைத் தராமல் இருக்காது.  ஆனால் குருவும், செவ்வாயும் ஒன்று சேர்ந்து இருப்பின் எவ்வகை பாதிப்பு ஏற்பட்டாலும், தன்நிலையை உயர்த்தி அறிவையும் புகட்டுவார்கள்.           

                கூறப்பா கடகத்தில் ஜெனித்த பேர்க்கு

                கொடுமை பலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி”

                இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் பாதிப்பான பலன்களையே எங்கிருந்தாலும் தருகிறார்.  5,9-ல் இருப்பது அதிக பாதிப்பு இல்லை.

                இந்த சுக்கிரன் மற்ற கிரகங்களோடு சேரும்போது பலன்கள் மாறுபட்டு நடக்கிறது.

                அஞ்சுக்கும் பத்துக்கும் மடையோன்-அவர்

                அன்பாக வைத்தேழு தனலாபம் பத்தில்

                கொஞ்சும் குழவிக்கு யோகம் -சித்தர்

                கூறினார் விதி தீர்க்கும் அறிந்துறை தோழி

                செவ்வாய் 2,5,7,10,11-ல் இருப்பது மிக நல்லதாக சொல்கிறது.  இப்பாடல் நல்லமுறையில் சரியாக வருகிறது.

 

சிம்ம லக்கினம்.

 

“சிங்க வோரையினிலுத்தவர்க் கிரவி

சேய் சுபர்கவி புதன்பாவர்

மங்கல குசனும் யோககாரனாய்

வரினுமம் மண் மகனாலுக்

கங்க மாயுள் ளோனாதலிற்றீமை

யாம் பலனீ குவன் வெள்ளி

பங்குமாரகாரகமாரகத் தானம்

பரிவினுங் கண்ட மாய்ப்பகரே”

                                       ( யவன காவியம்)

 

” புந்தியும் பார்கவனும் போற்றற் கரும்பாவி

செந்நிறத்த செவ்வாயே செம்மைக் கோள்- அந்நிறத்தாய்

யோகமுற்றோர் இப்பலனை யோராதளித்திடுவார்

ஆகமதியாரார் புகர் ”

                                       ( தாண்டவ மாலை )

 

” முதலே சிங்கம் புந்தி புகர் மோதும் பாவர்,

செய்சுபனாம் ”,

” சேர்ந்த சிங்க லக்கினத்தைச் சேர ஜனித்தவர்க்கு

ஏந்துசனி சுக்கிரனுமே பாவி – போந்த செவ்வாய்

ஏறுமிரவி நல்லன் இன்புகர் செய் கூடியிடில்

வீரிய யோகங்களுண்டாம் வேறு ”.

                                            ( சந்திர காவியம் )

 

” யாரப்பா சிங்கத்தில் ஜெனித்த பேர்க்கு

பவுமனுமே திரிகோணமேரி நிற்க

சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூதி

சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு

வீரப்பா மற்றயிடந்தனிலே நிற்க

வெகுமோசம் வருகுமடா விளையால் துன்பம் ”.

                                              (   புலிப்பாணி  )

 

” திரித்தியை கருமணைப்பாரு – அவர்

திடமாக யீறிரண்டு தசம் நட்பு கோணம்

கரும் பிதிர்வர்க்கமுண்டாம் – சென்மென்

கனவானந் தொழிலள்ளோன் நேசனாந்தோழி ”.

 

                புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது என்ற நியதியில் பிறந்த இந்த சிம்ம லக்கினக்காரக்ளின் செயல்பாடுகள் தன்மைகள் தனித்தன்மை பொருந்தியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

                மேற்கண்ட கவிகளின்படி 2, 11 க்குரிய புதன் மாரக தன்மை பொருந்தியவனாக வந்தாலும் நல்ல யோக பலன்களை தருவதில் தவறில்லை.  இவர் நல்ல இடங்களில் இருந்து சூரியன் – செவ்வாய் தொடர்பை பெற்றால் கல்வியில் நல்ல தேர்ச்சியை தருகிறார் மருத்துவத்துறை – பொறியியல்துறை, கணக்கு துறையில் தேர்ச்சியும் உயர்தர பதவிகளும் கிடைக்கிறது.  3.10 க்குரிய சுக்கிரன் இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்க தனித்த நிலையில் நன்மைகள் செய்வதில்லை.  தனித்த நிலையில் இறந்துவிட்டால் அவர் காலம் வரும்போது பல பாதிப்பான பலன்களை தருகிறார்.  செவ்வாயுடன் சேரும்போது யோகத்திற்கான வாய்ப்பு உள்ளது.  தர்மகர்மாதிபதி யோகம் என்ற அமைப்பு உண்டாகிறது இதுவும் முழுமையாக செயல்படுவது இல்லை.

                4,9 க்குரிய செவ்வாய் தனித்து யோகங்களை தருவதில்லை.  தனித்து இருந்து தனது தசாபுத்தி காலங்களை நடத்தும்போது பாதிப்பான பலன்களையே தருகிறார்.  குரு, புதன், சூரியன், ராகுவின் சேர்க்கைகள் பெற்று 1,4,5, 7, 9, 10,11 – ல் உள்ள போது அவரால் நல்ல பலன்கள் கிடைக்கிறது.  5, 8 க்குரிய குரு இந்த லக்கினத்திற்கு சமநிலையில் நின்று தன்னோடு சேர்ந்த கிரகங்களுக்கு தக்கடிப நன்மை தீமைகளைத் தருகிறார்.  6, 7 – க்குரிய சனி மாரகாதிபதி என்ற நிலையில் சுக்கிரன், புதன், குரு இவர்களோடு சந்திரன் இணைவு பெறும்போது பெறும் தீமைகளை தருகிறார்.  சனி, செவ்வாய், புதன், கேது சேர்க்கையில் சுக்கிரன், தொடர்பு இல்லாமல் இருந்தால் மிக நல்ல பலன்களைத் தருகிறது.  சனி, சுக்கிரன், சந்திரன் சேர்க்கை தொடர்பு அவர் தசாபுத்தி காலங்களில் மிகவும் பாதிப்பான பலன்களை தருகிறது.  இவர்களோடு லக்கினாதிபதியான சூரியன் சேர்க்கை கூடாது.  மற்றபடி யாருடன் சேர்ந்தாம் சிறப்பான பலனை தருகிறார்.  தனித்த சனி, சூரியன், சேர்க்கை சுக்கிரன், சூரியன், சேர்க்கை ஒருவாறு நல்ல பலன்களையே தருகிறார்கள்.  12-க்குரிய சந்திரன் யாருடன் இருந்தாம் தனித்து இருந்தாலும் பெறும் நன்மைகளைத் தருவதில்லை.

 

 

 

 

 

                                                கன்னி லக்னம்.

 

                ” கன்னிலக்கினத்தக்கசுரருக்கிறைபொன்

                 காரியுஞ்சுபர்மதியரிசேய்

                 மன்னிய மூவரசுபராங்கவி

                 மாலுமேயோக காரகராம்

                 உன்னியவன்னோர்மருவினுமதிக

                 யோகமே தரவரவசுபர்

                 பன்னுமாரகராமாரகத்தானப்

                 பதிவரிற்கண்டமாம்பலனே ”

                                                                                                                                              (யவன காவியம் )

                செவ்வாயுஞ் செம்பொன்னுஞ்சேரா மதியுமிவர்

                செவ்வாயர்வெள்ளி விளம்புங்கால் – ஒவ்வசுபன்

                பார்ப்பவனும் பங்கய்மா வைரிமைந்தன்னானிவர்கள்

                ஆர்ப்பொருமாயோகத்தாராங்கு ”

                                                                                                                                            (தாண்டவமாலை )

                ”மாதேகன்னி சேய்மதிபொன் மன்னும் பாவர் புதன் சுபனாகும்

                காலேயோகம் புந்திபுகர் ”

                                                                                                                                                 (ஜாதக அலங்காரம் )

 

                மேற்கண்ட கவிகளின்படி 1 – 10  – க்கு புதனும், 2, 9 – க்கு சுக்கிரனும் 5 – 6 – க்கு சனியும் ஆதிபத்தியம் பெறுவதால் இந்த கன்னி லக்கினக்காரர்- களுக்கு இவர்கள் யோக பலன்களைத் தருவார்கள் என்றும், குரு 4 – 7 – க்கும், செவ்வாய் 3 – 8 -க்கும், சந்திரன் 11 – க்கும், சூரியன் 12 – க்கும் ஆதிபத்தியம் பெறுவதால் இவர்கள் தீமையான பலன்களைத் தருவர் எனவும், யோக கிரகங்களுடன் சேர்ந்த இராகு-கேது யோக பலன்களையும், தீமைதரும் கிரகங்களுடன் சேர்ந்த இராகு – கேது தீமையான பலன்களையும் தருவார்கள் எனவும் ஜோதிட சுருதிகள் சொல்லுகின்றன.

                4 – 7 – க்குடைய குரு மிகவும் பாதிப்பைத் தருவார் என்றும் குரு நின்ற வீட்டின் அதிபதி, குருவிற்கோ, லக்கினத்திற்கோ, அல்லது சந்திரனுக்கு 5 – 9 – ல், இருப்பின் லட்சுமியே வீட்டில் வாசம் செய்வாள்.  மனையில் தெய்வம் உண்டு என ஆணித்தரமாக சொல்கிறார் ” புலிப்பாணி

முனிவர்.  இது மறக்க முடியாத உண்மை, உண்மையே..

                சுக்கிரன் – புதன் – சனி ஆகியவர்கள், செவ்வாய் – சூரியன் – குரு ஆகியோரின் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரத்திற்கு 3-5-7-ல் இருப்பின், சனி தசாபுத்தி காலங்களில் கண்டம்-விபத்து-நோய்த்தொல்லை, சொத்துக் களை இழத்தல், மாரகம் போன்ற பாதிப்புகள் நிச்சயம்.  சந்திரன், கன்னி லக்கினத்தாருக்கு ‘ சுபர் – பாவர் ‘  என்ற வரிசையில் பெறாமல் சமநிலையில் செயல்படுகிறார்.

                பாவர்கள் என்று சொல்லப்படும் சூரியன்-செவ்வாய்-குரு ஆகியவர்கள் 3-6-8-12 – ல், இருந்த, சனி சுக்கிரன், புதன், சந்திரன், ராகு, கேது தனப்பிராப்தியும் பெரிய முன்னேற்றகளையும் தந்து, கடைசியில்

”ஓட்டாண்டியாக ” நிற்க வைப்பார்கள்.  இந்த கன்னிலக்கினக்காரக்களுக்கு பெண்களாலேயே யோகமும்,  பின் தரித்திரமும் வரும், பெற்ற அன்னை

( அ ) சிற்றன்னையின் அரவணைப்பு குறைந்து, அவர்களே பகைவர்களாக மாறி செயல்படும் விந்தையான அமைப்பு இவர்களுக்கே உரியது, கவர்ச்சியான உடல் அமைப்புடன் சிரித்துப்பேசி வசீகரிக்கும் தன்மையும் கொண்ட இவர்கள் இல்லறத்தில் இன்பம் பெறுவது கடினமே, கடினமான குணம் கொண்ட மனைவி ( அ ) மாமியார் – மாமனாரால் தொல்லைகள் பல பெறும் கன்னிலக்கினத்தாருக்க சுகமான வாழ்வு அல்லது மிதமான சொத்து, சொகுசுவாகம் – நாகரிக ஆடையாபரணம் ஆகியவைகளுக்கு குறைவிருக்காது.

                மேலும் இந்த லக்கினத்தாருக்கு சனியுடன், புதன்- சுக்கிரன் – ராகு – கேது சேர்க்கை ( அ ) பார்வை இருப்பின் நலமான யோகம் கண்டிப்பாக உண்டு.  சூரியன் – புதனுடன் குரு சம்பந்தம் பெற்றாலோ, ( அ ) குரு நின்ற வீட்டின் அதிபதி கெட்டுவிட்டாலோ,கேந்திராதி பத்தியம் கிடையாது.   ‘கஜகேசரியோகம் ‘  – ‘சசிமங்களயோகம்’  ‘குருமங்களயோகம்’ ஆகியவைகள் நன்மை தருவதில்லை.  சுக்கிரன் புதன் சேர்க்கையான தர்மகர்மாதிபதி யோகம், 1,5-ல் சந்திரன் அமைந்து, சூரியன் – செவ்வாய் – ரா க – கேது இன்றி சந்திரனுக்கு 2-12-ல் மற்ற கிரகங்கள் இருந்து தரும் அன்பாசுனபாயோகம் எவ்விதத்திலாயினும் யோகங்களைத் தந்திடும்.

                எதிர்பாராத வகையில் வாழ்வில் முன்னேற்றம் பெறும் இவர்கள், தாய், உடன்பிறப்பு, புத்திரர் வகையில் நன்மதிப்பு மன அமைதி பெற முடியாதவர்கள், ஆயினும், இந்த கன்னி லக்கினக்காரர்கள் தாழ்ந்த வாழ்க்கையை நிச்சயமாக அடையமாட்டார்கள்.  அனேகருக்கு யோகம் உள்ள, லட்சுகடாட்சம் பொருந்திய கணவனுக்கு தைரியம் ஊட்டுபவளாக மனைவி அமைகிறாள்.  சிலருக்கு இரண்டுதாரம் ஏற்படுகிறது.  இரண்டாம் தாரம் திருபூதிப்படுவதில்லை. சிலர் ” சின்னவீடு ” வைத்துக் கொண்டு நாடகமாடுவதும் உண்டு.  பெண்களின் அரவணைப்பு இவர்களை அணைக்கத் துரத்தி வரும்.  இவர்கள் பெண் தெய்வ வழிபாடு உபாசனைகள் செய்து வந்தால் வித்யாபலம், தொழில், ஞானம் சாதுர்ய திறமைகள் மேலோங்கும்.  வாழ்வு உயர்வு பெறும்.

                குறித்திட்டேன் கன்னியிலே பிறந்தபேர்க்கு

                குற்றம் வந்து சேருமடா குருவினாலே

இந்த லக்கினத்திற்கு குரு தீமையான பலனைத் தருவார் என்கிறது.

 

 

 

 

                                                                                துலாம் லக்கினம்.

                துலை தன்க்கருணன் புகர்சனிசுபராஞ்

                சூரியனிலமகன் சுபர்

                கலைமதிமகனும்மயோககாரகனாங்

                காணுமவ்விருவருமருவிற்

                றலமிசை மிகுந்த பலனது துருவர்

                தபனனுங்குருவுமாரகராங்

                குலநவமிரண்டே முடையவர்கொல்லார்

                கொல்வதம் மாரகர்குணமே.

                                                                                                                                             (யவன காவியம் )

 

                குருவிரவி சேய்கொடியர்கூறுசனிபுந்தி

                மருவு நலமுடையார் வண்டில்-திருமருவும்

                யோகத்தாரிந்து மேயச்சுதனுமொண்ணுதன்மீ

                தாகுமறகத்தாயறி.

                                                                                                                                              (தாண்டவமாலை )

                ”போலாந் குலாத்திற் சேய்பரிது குருவும் பாவர் சனியுதனும்

                மேலாம் சுபர்கள் மதிபுந்தியோகன் மாரகன் சேயே ”

                                                                                                                                         (ஜாதக அலங்காரம் )

                துலையிற் பிறந்தார்க்குச் சூரியன் சேய்பொன்னும்

                சொலும்பாவி புந்திசனிசுங்கன் நிலை சுபர்கள்

                புந்திமதியுங் கூடிற் பேராசர்யோக முண்டாம்

                வந்த செவ்வாய் கொல்லான் வளைந்து

   ( சந்திர காவியம் )

                மேலே சொல்லிய பாடல்களின் பிரகாரம் துலாலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் – சுக்கிரன் – சனி சுபபலன்களைத் தருவார் என்றும் சூரியன் – செவ்வாய் அசுபபலன்களைத் தருவார் என்றும், சந்திரன் – புதன் யோக பலன்களைத் தருவதாகவும் சொல்லப்பட்டு உள்ளது.  ஆனால் புலிப்பாணி கூறுவது,

                ” கொற்றவனே கதிரவனும் கோணமேற

                சீரினேன் ஜென்மனுக்கு யோகம் மெத்த ”

என்றபடி சூரியன் 5 – 9 -ல் இருப்பினும் யோகபலனைத் தருபவார் எனச் சொல்லி உள்ளது.  நடைமுறையில் செயல்படுத்துவதாகும்.  இதேபோல் சுக்கிரன் 1,4,5,7,9,10 -ல் இருந்து அந்த வீட்டின் அதிபதி சுக்கிரனுக்கு நல்ல நிலையில் இருப்பின் நல்ல யோகங்களை விர்த்தி செய்கிறார்.                                                                                                                                                                                                                                                               

                லக்கினாதிபதியான சுக்கிரன் 8 – க்குரிய ஆதிபத்திய தோஷம் செய்யார் என பல நூல்கள் சொல்லி இருப்பினும், லக்கினாதிபதியான சுக்கிரன் திசை, திருவாதிரை, சுவாதி, சதயம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் துலாலக்கினமாக பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை வரும்போது மாரகம், கண்டம் தர இடம் உண்டு.  இக்காலம் மிருத்துஞ்ச ஹோமம் பயன்தரும்.

                இந்த லக்கினத்தில் பிறந்த அனேகருக்கு 2 தாரம் ஏற்படுகிறது.  யோகபலன்களைத் தரும் புதன், சுக்கிரன், சனி போன்ற கிரகங்கல் பாதிப்பைத் தருவதையும் பார்க்கிறோம்.  காரணம் என்ன? புதன் பாக்கிய பிரையாதிபதி, கொடுத்து, கெடுக்கும் தன்மை உள்ளவர்.  சந்திரன் நிலையான தன்மை பெற்றவர் அல்ல.  இவ்வமைப்பு பெற்ற புதன், சந்திரன் சேர்க்கை யோக பலனை விர்த்தி செய்வதில்லை.  யோக பலன்களைத் தந்தால் கடைசியில் கெடுத்துவிடுவது கண்கூடு.  மேலும் இந்தப் புதன், சந்திரன் சேர்க்கையோடும், 2, 7 – க்குரிய செவ்வாய் சேர்ந்தால் போச்சு, அவர்கள் தசாபுத்திவரம்காலம் காமம் தலைக்கேறி கண் மறைத்து கண்றாவியான செயல்களையும், குழந்தை, குமரி, கிழவி என்ற தராதரம் இன்றி செயல்படும் எண்ணத்தைத் தந்து, வேடிக்கை பார்க்க வைத்து விடுகிறார்கள்கள்.  ” அவன் அவன் தலை எழுத்து.

                புதன், சனி சேர்க்கையானது, துலாம், மகரம், கும்பம், மீனம், மிதுனம், கடகம் போன்ற இடங்களில் இருப்பின், உறுதியாக யோகபலன்களைத் தராமலிருக்காது.  இவர்கள் தசாபுத்தி காலங்களில், சொத்து சேர்க்கை – கௌரவம்-பட்டம் பதவி உண்டு

                துலாம் லக்கினத்திற்கு ராகு, கேது, செவ்வாய் போன்றவர்கள் அதிக பாதிப்பைத் தருவதில்லை.  செவ்வாய் சமத்துவமான கிரகமாக செயல்படுகிறார்.  ராகு, கேதுவோடு புதன், சனி சேர்க்கைபெற்றால் ராகு, கேது தசாபுத்தி காலங்கள் நன்மையைச் செய்கிறது.  லக்கினாதிபதியான சுக்கிரனோடு சேர்க்கைப் பெற்ற ராகு, கேது முக்கால் பங்கு யோக பலனையும், கால் பங்கு அவயயோகத்தையும் தருகிறார்கள்,

                பூர்ண சுபகிரகம் என சொல்லப்படும் குரு, துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பூர்ண பாவியாகி பலவித பாதிப்பு – நோய் – கடன் – சத்ரு உபாதைகளை தர காரணமாகிறார்.  இவர் தனுசு, கும்பம், மீனம், கன்னி, மிதுனம் ராசிகளில் தனித்தோ, அல்லது வேறு எந்தஒரு கிரகம் சேர்க்கை பெற்றோ இருப்பினும்.  குரு தனது தசாபுத்தி காலங்களில் நல்ல யோகத்தைத் தந்து அடுத்துவரும் தசையில் ஒன்றும் செயல்படமுடியாத அளவு செய்துவிடுகிறார். 

                பூர்ண பாவியாகிய சனி, துலாம் லக்கினத்திற்கு பூர்ண சுபராகி விடுவதால் யோகத் தன்மை பெற்று நல்ல பலன்களை தர வல்லவராகி விடுவதாக நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது.  ஆனால், இவர் தசா புத்திகள் நடக்கும்போது ஏற்படும் பலன்களை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.  பலவிதமான சோதனைகளுக்கு உட்பட்டுவருபவர் களுக்கு, மட்டும் தான் தெரியும்.

                பலாபலன்களில் பாதிப்பை எழுத இடம் கொள்ளாத சனி இங்கு பாபியாக செயல்படும் காரணம்?

                கிருத்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், சித்திரை, மிருகசீரிடம், புனர்பூசம், விசாகம்.  பூரட்டாதி நட்சத்திரம் பெற்ற சனி, பாபியாகி மிகவும் பாதிப்பான பலன்களைத் தருவது உண்மையே.  சூரியன், ராகு, கேது, செவ்வாய் ஆகியோருக்கு குருவின் பார்வையோ – சேர்க்கையோ, துலா லக்கின ஜாதகருக்கு இருப்பின் புத்திர கணவன், மனைவி, தொழில், குடும்ப ஒற்றுமை, தனநிலை போன்றவைகளில் பாதிப்பைத் தந்து விடுகிறது.  தீராத நோய்த் தொல்லைகளையும் தரலாம்.

                மேலே சொல்லப்பட்ட நட்சத்ரத்தை பெறாத சனி யோகபலன்களை நிச்சயம் தருவார். 

                இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு தர்மகர்மாதிபதியோகம், கஜகேசரியோகம், குரு மங்களயோகம் தருவதில்லை.  அதியோகம், சசிமங்களயோகம் போன்றவைகள் நன்மை பல தருகிறது.

 

                                                                                விருச்சிக லக்னம்.

                ”தேளினிற் செனித் தோற்கிரு சுடரோடுந்

                                தேவர்கட்கிரை வனுஞ்சுபராய்

                கோளாறு சேய் மாலுசனனுமதர்

                                குபேரனுமி ரவியும் யோகர்

                கேறுடன் கூடிலி ராஜயோக மதாங்

                                கிளத்தியவசுபர் மாரகராய்

                நாளுமே கொடுப்பர் குருசனி கொல்லார்

                                நங்கையற்கினிய தெள்ளமுதே ”

                                                        ( யவன காவியம் )

                ” புந்தியஞ்சேயும் புகரும் பொல்லாக் கொடியர்

                இந்து வொருத்தனே யேந்தினழயாய் – சந்ததமும்

                நல்லனிஞ் ஞால நலனளிப்போன் ஞாயிறுடன்

                அல்லவனுமாகவறு

                                                       ( தாண்டவமாலை )

                ” ஏய தேள்புதன் சேயும்பளிங்கே

                இயன்ற பாவர் இந்து சுபன் ”

                                                       (  ஜாதக அலங்காரம் )

                ” தேளிர் பிறந்தார்க்கு சேய்புகர் மான் மைபாவி

                நாளும் பொன்னி ரவி நல்லாவரா – நீளிரவி

                சந்திரனுங்கூடியிடிற்றாறரசர் யோகமுண்டாஞ்

                சொந்த குரு ககரி கொல்லாம் சொல்”

                மேற்கூறிய கவிகளின்படி இந்த விருச்சிக லக்கினத்திற்கு இரு சுடர்கள் அதாவது சூரியனும் – சந்திரனும், குபேரனென்று சொல்லப்படும் குருவும் யோகாதிபதிகள் ஆவார்.  இவர்கள் ஒருவருக்கொருவர் எங்கு இணைந்திருப்பினும் யோகத்தை தரக்கூடியவர்கள்.  லக்கினாதிபதியான செவ்வாய் 6 – க்குடைய ஆதிபத்தியமும் பெற்றதனால் அகுபராகிறார்.  8-11 – க்குடைய புதன் மாரகராகிறார். 7-12 – க்குடைய சுக்கிரனும் மாரகஸ்தானத்தை வகிப்பதால், புதன் – சுக்கிரன் எங்கிருப்பினும் அவர்களின் தசாபுத்தி காலங்களில் கண்டம் – மாரகம் – கணவன் ( அ ) மனைவி பிரிவினை, தொழிலூ பாதிப்பு போன்றவைகளைத் தருகிறார்கள்.  இவர்களோடு செவ்வாய்-ராகு-கேது சேர்க்கை பெறின் பாதிப்புகள் உறுதியாக நடைபெறுமென கூறலாம்.

                இந்த விருச்சிக லக்கினத்தாருக்கு சனி அதிக பாதிப்பைத் தருவதில்லை.  இந்த சனியோடு புதன் – குரு சேர்க்கை பெறின், ஏதோ ஒருவகையில் திறமை பெற்றவராகவும், தரித்திரமில்லா வாழ்க்கை வாழ்பவராகவும், வாக்கு மேன்மை தெய்வபலம் ஆகியவை சிறந்து விளங்கும்படி இருப்பதையும் நடைமுறையில் காணலாம்.  விருச்சிக லக்கினத்திற்கு 2-5-க்குரிய குரு எங்கு இருப்பினும் நன்மைகள் தராமல் இருக்கமாட்டார்.  இவரோடு சம்பந்தப்பட்ட சூரியன்-சந்திரன்ஆகிய இருவரும் ஆதிபத்திய – காரகப்படி, நல்ல யோகத்தை தர காரணமாகிறார்கள்.  நடைமுறையில் ஆய்வு செய்யும் போது சூரியன் – சந்திரன்-குரு ஆகீயவர்களின் தொடர்பை எவ்விதத்திலாயினும் பெற்ற இந்த விருச்சிக லக்கினக்காரர்கள் அரசாங்க தொடர்புள்ள தொழில் நிறுவனங்கள் – பொதுத்தொண்டு போன்றவைகளில் சிறப்பான அங்கம் வகிப்பவர்களாக இருப்பார்கள்.  அனேகர் பொதுமக்களிடையே செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்பதவிகளை வகிப்பவர்களாகவும் இருப்பார்கள்.  ஞானம், அறிவு, யுக்தி மிகுந்தவர்களாகவும் எழுத்தாற்றல் பெற்றவர்களாகவும் இருப்பதைக் காணலாம்.

                செவ்வாய்-சுக்கிரன்-சனி-ராகு-கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றிருக்கும் இந்த விருச்சிக லக்கினக்காரர்கள் தீய செயலுக்கு உட்படுவதும், சூதாட்டம் – மது – மங்கை போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.  பலருக்கு அனேக மனைவிகள் உண்டாவதும் உண்டு.  இத்தகைய அமைப்பு பெற்றவர்களில் சிலர், கொலை – பாதகம், ராகு – கேதுவுடன், புதன் சேர்க்கை பெற்றிருக்கும் அமைப்புக்கொண்ட விருச்சிக லக்கினக்காரர்கள் நல்ல நலைமையில் இருப்பதையும் காண்கிறோம். குரு, புதன் சேர்க்கை புத்திர நாசத்தையும், குடும்பம் பாதிப்படைதலும் மூடத்தனமாக காரியங்கள் செய்வதையும் முரட்டு சுபாவத்தையும், நாஸ்திகத்தன்மையையும் தருகிறார்கள்.

                இவரோடு சம்பந்தப்பட்ட சந்திரன் – செவ்வாய் தீராத உடல் வியாதிகளையும், இனம் புரியாத மனபயம் – காம இச்சை அதிகரித்தலால் சில பல பாதிப்புகளையும் தருவார்.  தன் உடல்நிலையைத் தானே கெடுத்துக் கொள்ளும் மனோபாவத்தையும் தருவார்கள்.

                இந்த விருச்சிக லக்கினக்காரர்களுக்கு ” குரு திசை ” சுபத்தைத் தருகிறது.  குற்றங்களை நீக்கி நன்மைகளை அதிகரிக்கச் செய்கிறது.  செவ்வாய் . சுக்கிரன் – ராகு – கேது சேர்க்கை வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளைத் தருகிறது.

                ” உன்னதமான லக்கினம் ” என்று புகழ்ந்து சொல்லப்படும் விருச்சிகத்தை லக்கினமாகக் கொண்டவர்களுக்கு சூரியன் – சந்திரன் – குரு ஆகியோரின் தொடர்புகள் ஜாதகத்தில் நன்கு இருப்பின் ‘ ஒருவரப் பிரசாதமே ‘.  இந்தலக்கினத்திற்கு புதன் – சனி சேர்க்கை 5, 9, 11 – ல் இருப்பின் எவ்வகையிலும் குறைவில்லா வாழ்க்கையைத் தருகிறார்கள்.  ஆனால், இல்லறத்தில் மட்டும் தீராத குழப்பம் காணும்-  சூரியன் – குரு சேர்க்கை 5, 2, 6, 9, 10  ஆகிய இடங்களில் இருந்து செவ்வாயின் தொடர்பை பெற்றால், உன்னத பதவிகளை வகிக்கும் வாய்ப்பு கிட்டும்.  சூரியன்- புதன்சேர்க்கை நல்ல பாண்டித்யமும், கல்வி அறிவும், குடும்ப சூழ்நிலையும், மனைவி வகையில் நல்ல நிலைமையும், தெய்வீக ஆன்மீக தொடர்புகளில் பிரகாசமும், அரசியல், ராணுவம், காவல் போன்ற துறைகளில் புகழும் கிடைக்கிறது.

                சூரியன் – சந்திரன் சேர்க்கை 5, 6, 10, 11 – ல் இருந்தால் மட்டுமே யோகம் தரும். குரு – சந்திரகேந்திரயோகம்.  கஜகேசரி யோகம், நன்மையைச் செய்கிறது.  குரு, செவ்வாய் தொடர்பான குருமங்கள யோகமும் நற்பலனைத் தருகிறது.  விருச்சிகத்தில் செவ்வாய், ரிசபத்தில் சந்திரன் அமைந்த சந்திரமங்கள் யோகம் நன்கு பிரகாசிக்கிறது.

 

 

                                                                தனுசு லக்னம்.

                வில்லினுக்கிரவிசேய் சுபராகும்

                                வெள்ளியங்கொரு வனேபாவி

                யெல்லு மாலவனும் யோகரா மன்றி

                                யியைந் தொரு ராசியிலிருப்பின்

                நல்லவாம் பலனைத் தருவர் மாரகராய்

                                நவிலுவர்கவி புதனிவரை

                யல்லிருங் குழலாயிரண்டு மூன்றேழி

                                ஒனுகினுங் கண்ட மென்றுரையே

                                               ( யவன காவியம் )

                ” ஒருவன் புகர்பொல்லா னொண்சேயிரவி

                மருவுநல் யோகரென மன்னுந் – திருவிடையோர்

                பார்க்கவனும் புந்தியென்று பாம்மேரகலல்குல்

                சீர்க்க மலச் சேயிழையாய் செப்பு ”.

                                               ( தாண்டவமாலை )

                                ஆயுதனுசில் புகர்பாவி

                                யாரால் பருதி சுபனாகும் ”

                                               ( ஜாதக அலங்காரம் )

                ” தனுசிற் பிறந்தவர்கக்கு தண்புகர் பொன்பாவி

                சனி செவ்வாய் சூரியன்றான் நல்லர் ”

                                                       ( சந்திர காவியம் )

                ” பாரப்பா வில்லு தனில் உதித்த பேர்க்கு

                பகருவேன் புந்தியுமே பகையுமாவர் ”

                                             ( புலிப்பாணி)

                ”ஆறுக்கும் பதினொன்றுக்குடையோன் அவர்

                அன்பாக கேந்திரம் அமர்ந்திருந்தாலும்

                பாரினில் தாயாதிபண்டு – சென்மன்

                பாங்காக கொள்வரண்டி தோழி ”

                மேற்படி பாடல்களின் படி 1-4 – க்குரிய குரு லக்கினாதிபதி என்றாலும் அவர் 1, 4, 7, 10 – ல் இருப்பது அவர் தசாபுத்தி காலங்களில் மிகுந்த பாதிப்பை தருகிறது.  சனி 2,3, – க்குரிய நல்ல யோகக்ளைத்  தருவதில் சிறப்புடையவராகிறார் இவர்.  2, 3, 6, 11 – ல் இருப்பது சிறப்புடையதாகும்.  குரு, சனி, சூரியன், புதன், ராகு, கேது இவர்கள் 5 – க்குரிய 9 – க்குரியவர்களான செவ்வாய் – சூரியனின் நட்சத்திரங்களைப் பெருவபது நல்ல பயன்களைத் தரும் நிலை ஏற்படுகிறது.  மேற்படி கிரகங்களோடு சந்திரன், சம்பந்தப்பட்டால் பலன்கள் தரும் போல் தந்து கெடுத்துவிடுகிறது.

                இந்த லக்கினத்திற்கு குரு, செவ்வாய், தொடர்பான குரு மங்களயோகம், சூரியன்-புதன் சேர்க்கையான தர்மகர்மாதி யோகம் போன்றவைகள் நன்மை செய்யும்.  கஜகேசரி யோகம்.  சந்திர மங்கள யோகம், அதியோகம் மாளவியாயோகம் போன்றவை சிறப்பைத் தராது.

                5, 12 – க்குரிய செவ்வாய் 9 – க்குரிய சூரியன் சுபத்தன்மை பெற்று யோகத்தின் நிலையில் உள்ளபோது இவர்களோடு குரு, புதன் சம்பந்தப்படும் போது நல்ல பலன்களைத் தருகிறது.

                6, 11 – க்குரிய சுக்கிரன் 11 – 4 -ல் இருந்தால் தாய்வழி சொத்துக்கு வழி வகுக்கின்றார் மற்ற இடங்களில் உள்ள போது நல்ல பலன்களை எதிர் பார்க்க முடிவதில்லை.  இவரோடு குரு, புதன், சூரியன், செவ்வாய், தொடக்க பலவகை பாதிப்பை தருகிறது.

                7, 10 – க்குரிய புதன் தனித்து இருந்தாலும், சுக்கிரன், சந்திரன், குரு வோடு, சேர்ந்தாலும் மிக பாதிப்பான பலன்களைத் தருகிறது.

                ராகு, கேதுக்கள் யாருடன் சேர்ந்தாலும் நல்ல பலன்களை தருகிறார்கள்.  தனித்து உள்ளபோது 2, 3,6, 9, 10, 11 – ல் இருப்பின் நல்ல யோகத்தைத் தருவதில் தவறுவதில்லை.

                8 – க்குரிய சந்திரன், குரு, புதன், சுக்கிரன் உடன் சேர்ந்தால் மட்டுமே பெறும் பாதிப்புகளைத் தருகிறார்.  தனித்து உள்ளபோது பெரும் பாதிப்புக்கள் இல்லையென்றே சொல்லலாம்.  குரு 3, 6, 8, 12 – ல் இருப்பது ஓர் வகையில் நல்லயோகம் என்றே சொல்லலாம். இந்த அமைப்பை பெற்றவர்கள் தகுதிகள் பலபெற்றவராகவே உள்ளனர்.  இவர்கள் சோடை போகாதவர்கள் என்றே சொல்லலாம்.

                சேர்க்கையானது பாதிப்பை தருகிறது.  ஜாதகரின் உடல் நலம் மன நலத்தை கெடுதியை உண்டாக்குகிறது.  3, 12 – க்குரிய குரு தவறைத்தான் அதிகம் செய்கிறார்.  இவர் 3, 6, 8, 12 – உள்ள போது பெரும் பாதிப்புகளுக்கு இடம் இல்லை.  எதிர்பாராத யோகமும் கிடைத்துவிடுகிறது.  4, 11 – க்குரிய செவ்வாய் இக்குருவுடன் சனி, சந்திரன், சூரியனும் சேருவதோ ராகு, கேதுவின் தொடர்பு பெறுவதோ தனித்து இருப்பதோ பெரும் பாதிப்பிற்கு காரணமாகிறது.  இந்த லக்கினக்காரக்ள் செவ்வாயை நம்பி செயல் படமுடியாது.

                5 – 10 – க்குரிய சுக்கிரன் தனித்து எங்கு இருந்தாலும் யாருடன் சேர்ந்தாலும் தனக்குரிய யோக பலன்களைத் தருவதில் தவறுவதில்லை.  இந்த சுக்கிரனோடு புதன் – சனி – ராகு, கேதுக்களின் சேர்க்கை மிக நல்ல பலன்களைத் தருகிறது.  6, 9 – க்குரிய புதன்தனித்து இருக்கும் போது தரும் பலன்களை விட வேறு பல கிரகத்தோடும் சேர்ந்தாலும், பார்த்தாலும், பார்க்கப்பட்டாலும் நல்ல பலன்களைத் தருகிறார்.  அவர் காரக பலன்கள் அதிகரிக்கின்றது.

                7, 8 – க்குரிய சந்திரன், சூரியர்கள் யாருடன் சேர்ந்தாலும் தனித்து இருந்தாலும் சுப பலன்களைத் தருவதில்லை.  எந்த கிரகங்களோடு சேருகிறார்களோ அக்கிரகங்களின் பலன்களே தடைபடுத்துகின்றனர்.

                கஜகேசரி யோகம் – அதியோகம் – சந்திரமங்கள் யோகம் – குருமங்கள் யோகம் போன்ற எதுவுமே இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பிரகாசிப்பதில்லை.  தர்மகர்மாதிபதி யோகம் இந்த லக்கினத்திற்கு செயல்பட நியாயம் உள்ளது.  இந்த யோகமானது, பெரும் சிறப்பை தராவிட்டாலும் குறைவற்ற வாழ்க்கை உறுதியாக தருகிறது.  இந்த லக்கினத்தைப் பெற்றவர்கள் உழைப்பையே பெரும் மூலதனமாக வைத்து செயல்படுவர் பயன் பெறுவர்.

                6 – ல் பாவர் இருந்து 1, 5, 9 – ல் புதன் இருப்பின் எதிரிகளை அழித்து அதிர்ஷ்டமான வாழ்க்கையை பெறுபவன்.

 

                                                    மகர லக்னம்

                              

                                ” மகரமாம் பவனத்துதித்தவர் தமக்கு

                                                மண்மகன் மால் கவி சுபராஞ்

                                சுகமதி குருவுமத மராய் வருவர்

                                                சுக்கிரன் யோகனாமதியின்

                                மகனையே சேரின ரச யோகமதா

                                                மந்தனும் பரிதியுங்கொல்லான்

                                ககன வான வருக்கிறைவனுமதியுங்

                                                கண்டகஞ் சªய்யுமாரகரே ”

                                                  ( யவன காவியம் )

                ” ஆரல் பொன்னிந்து பொல்லா ரானவர் சுங்கன்புந்தி

                வீரமிகுயோக பரன் வெள்ளியே – காரனைய

                கூந்தன் மடமானே கும்விகொல் லானென்றே

                ஆயந்துணந்தோர் தாமுரைத்தா ராம் ”

                                                   ( தாண்டவ மாலை )

                ”மாகஞ்சுருவிற் குரு செவ்வாய் மதியம் பாவர் புகர்புந்தி

                ஆகுஞ்சுபரா மா யோக மருளும் சுக்கிரன் ”

                                                  ( ஜாதக அலங்காரம் )

                ”தாய் மகரலக்கினந்தான் றோன்றப் பிறந்தவர்க்கு

                கேய் விளங்குஞ்சந்திரனு மே குருவூம் -தீய்பாவி

                வெள்ளி செவ்வாய் நல்லாண் ”

                                                  ( சந்திரகாவியம் )

                அரைந்திட்டேன் இன்னமொன்று அன்பாய் கேளு

                அப்பனே மகரத்தில் உதித்த சேய்க்கு ”வுமனுமே யாகாதப்பா

                திறந்திட்டேன் திரவியமும் மணையும் சேதம் புலிப்பாணி”

                                ஆறுக்கும் ஒன்பதுக்குடையோன் அவர்

                                அன்பாக திரிகோணம் உச்சத்திலேறே

                                ஆறினில் தீயர்கள் நிற்க – சென்மன்

                                அதிர்ஷ்டவானாம் சத்துருபுங்கனும் தோழி.

                மேற்படி கவிகளின்படி ஆய்வு செய்து பார்க்கும்போது லக்கினாதிபதி சனி எங்கிருந்தாலும் பெரிய தவறுகளைத் தருவதில்லை 1, 4, 6, 9, 10 போன்ற இடங்களில் இருந்தால் நல்லபலன்களைத் தருகிறார்.  இவரோடு சுக்கிரன்-புதன்-ராகு, கேதுக்கள் சேருவது சிறப்பைத் தருவது.  குருவுடன் சேர்க்கை சிறப்பை தருவதில்லை.  இதே போல் சந்திரன் – செவ்வாய்.

 

 கும்ப லக்கினம்.

                                                ”எழுந்த கும்பத்துக்கனுவழி மழைக்கோ

                                                                ளிருஞ்சனி சுபரிடருசுடர்க

                                                ளழிந்தவரசுவர் யோக காரகரா

                                                                மொண்கவி சேயுடன் கூடி

                                                செழுந்தரா தலத்திற் செல்வமுந்தருவர்

                                                                சேய்மதி மாரகர் குருவும்

                                                விழுந்தடிற் கொல்லாரசுபர்மாரகத்தின்

                                                                மேவிடக்கண்டமுமாமே ”

                                                          ( யவன காவியம் )

                பொன்மதிசேய் பொல்லார்புகரொருவனே புனிதன்

                நன்னயஞ்சேர்யோக நயந்தளிப்போன் – கன்னனிகர்

                ஆனமொளி மாதேயசுரர் தமக்கென்றும்

                ஞானநிலையுரைப்போனன்கு ”

                                                           ( தாண்டவமாலை )

                ” பாகார் கும்பக்குரு மதிசேய் பாவர் சுக்கிரன் சுபனாகும்

                தாகார் யோகம் பளிங்குபுதன் ”

                                                           ( ஜாதக அலங்காரம் )

                ”கும்ப விலக்கினத்திற் கூடிப் பிறந்தவர்க்குப்

                பம்புகுரு சேய்பாவி பண்பிறவி- விம்புபகர்

                புந்தி சனிநல்லன் புகர் சேயுங்கூடியிடிற்

                றந்தரசா யோகந்தரும் ”

                                                          ( சந்திரகாவியம் )

                ”பாடினேன் இன்ன மொரு புதுமை கேளு

        பாங்கான கும்பத்தி லுதித்தசேய்க்கு

                ஆடினேன் அசுர குரு கோண மேற

                அப்பனே கூப்பரிகை மேடையுண்டு ”

                                                         ( புலிப்பாணி )

                உண்டு பதிக்கொரு நான்கில் – நல்ல

                உத்தமர் அம்புலி உச்சத்திலேற

                பண்டு பொருள்களும் உண்டு.

 

                லக்கினாதிபதியான சனி 12 – க்குரியவராகி விடுவதால் இவர் தரும் பலன்கள் குறைவே இவர் சுக்கிரன் புதன், குருவுடன் ராகு, கேதுவுடன் சேரும்போது நல்லப்பலன்களை தர வாய்ப்பு உள்ளது.  தனித்த சனி எங்கு அமர்ந்தாலும் யோக பலன்களைத் தருவதில்லை.  யோகம் தந்தால் கொடுத்தவனே, பறித்துக் கொண்டாண்டி என்ற நிலை 2,11 – க்குரிய இந்த லக்கினத்திற்கு சுபதன்மை பொருந்தியவர் ஒன்றே சொல்லலாம்.  இவர்தனித்து 1, 2, 5, 6, 8, 10, 11 போன்ற இடங்களில் இருந்தால் நல்ல பலனைத் தருகிறார்.  இந்த இடங்களில் இவரோடு ராகு, கேது, சூரியன், சுக்கிரன் சேருவது நன்மையே தருகிறது.  3, 10 – க்குரிய செவ்வாய் இந்த லக்கினத்திற்கு பாபியாகி விடுகிறார்.  சூரியன், செவ், சனி, சேர்க்கை எங்கு இருப்பினும் அதிகபட்ச பாதிப்பான பலனைத் தருகிறார்.  குரு, செவ், சுக், சேர்க்கையானது எங்கு இருந்தாலும் தவறே.  எதிர்பாரார விபத்து ஆயுள் பயம் போன்றவைகளை தந்து விடுகிறார்.  இவர்களோடு சனி தொடர்பு பெறுவது தவறை அதிகப்படுத்துவதாக இருக்கிறது.

                4, 9 – க்குரிய சுக்கிரன் 3, 6, 8, 12 – ல் இருப்பது சிறப்பாக தெரிகிறது. அவர் தசாபுத்தி காலங்களில் பல நன்மைகளை செய்கிறது,  இவரோடு ராகு, கேது, சனி, புதன் தொடர்பு பெறுவதும் நல்லதே.  5, 8 – க்குரிய புதன் சுபன் எந்றாலும் இவர் செய்யும் நல்ல பலன்களை கடைசியில் கெடுத்து விடுகிறது.  இவர் 4, 5, 8, 10 – ல்இருப்பது யோக பலன்தரும் அமைப்பேயாகும்.  இவரோடு சேர்ந்த ராகு – கேதுக்கள்நன்மையே செய்கின்றனர்.  6 – க்குரிய சந்திரன் சனி, குருவுடன் தொடர்பு பெறுவது நன்மை தருகிறது.  கடின உமைழப்பை தந்து உயர்த்துகிறது.  7 – க்குரிய சூரியன் 3, 5, 10, 11 – ல் இருந்தால் நல்ல பலனைத் தருகிறது.  மதற்ற இடங்களில் இருப்பது தவறைத் தருகிறது.

                இந்த லக்கினத்திற்கு கஜகேசரி யோகம், குரு மங்கலயோகம், அதியோகம் நன்மைகளைத் தருவதிலலை.  மாளவியா யோகம், நிபுணயோகம் நன்மையான பலன்களை தருகிறது.  சந்திரமங்கள யோகமும் சிறப்பு பெறுவதில்லை.  சந்திரன் 4-ல் இருப்பது ஒருவகையில் நல்ல பலன்களை தந்துவிடுகிறார்.

 

 மீன லக்கினம்

                                ” மீனனுக்கலவேன் சேய் சுப்ரிரவி

                                                மேதைசுக்கிரன் சனிபாபி

                                மானசேய் குருவும் யோகராய் வருவர்

                                                மருவிடின் மிகவதியோம்

                                தானர்க்கினறவும் மாலவன் பரிதி

                                                சனியுடனால் வர்மாரகராம்

                                ஆனசேய் ª£கல்லான் சுருதியுத்தியினோ

                                                டனுபவத்தாலி துரையே ”

                                                     ( யவன காவியம் )           

                காரிபகுர் வெய்யோன்மால் காணாக் கடுங்கொடியர்

                ஆரலோடிந்துவிவ ரானவரே – சேர்ந்தக்கால்

                செய்யோன் குருவிவரே செல்வமளிக்கும் பெரியோர்

                ஐயநுனி நூலிடையா யாய்ந்து

                                                     ( தாண்டவ மாலை )

                ” பாவி மீனங் காரி புதன் பளிங்கு சூரியந் பாவியரே

                மேவும் செவ்வாய் மதிசுபராம் விளங்குயோகங் குருவால் ”

                                                              ( ஜாதக அலங்காரம் )

                ” மீன விலக்கினந்தான் மேலா பிறந்தவர்க்குச்

                சூன சனிபுந்திபுகள் சூரியன் பொன் – ஊனமுடன்

                பாவியாஞ் சேய்மதியும் பண்புடைய நல்லவர்கள்

                கோவுகுரு செவ்வாய் கூடில் ”

                                                     ( சந்திரகாவியம் )

                ” கூறே நீ மீனத்தில் குழவி தோன்ற

                கொற்றவனே மாலோடு வெள்ளியாகா ”

                                                  ( புலிப்பாணி )

                றாலேழக் குடையோன்பைபாரு – அவர்

                நலமாக திரிகோணண் தன லாப மேற

                நாலில் சுபர்களும் நிற்க – சேய்க்கு

                நாரியுடன் கூடி சகித்திருப்பாண்டி தோழி

 

                லக்கினாதிபதியான குரு கேந்திராதிபதி என்ற நிலையில் அவயோகத்திற்கு வழிவகுக்கும்இவர் 5,9 – ல் இருப்பது விசேஷமாக தெரிகிறது.  4, 7 – ல் 10 – ல் இருந்து புதன் – சுக்கிரன் தொடர்பு பெற்றுவிட்டால் பெரும் பதிப்புக்கு ஆளாக்கிவிடுகிறார்.  முழுப் பாவத்தன்மை பெற்று விடுகிறார்.  மாரகம், ஆயுள்பயம் கண்டாதித் தோஷங்களைத் தர தயங்குவதில்லை.

                2, 9 – க்குரிய செவ்வாய் முழு சுபனாகி யோகாதிபதி ஒன்றாலும் தனித்த செவ்வாய் போக பலனைத் தருவதில்லை.  குரு – சந்திரன் உடன் சேரும்போது அவரின் தொடர்பு  பெறும்போது நல்ல பலன்களைத் தருகிறார்.  இந்த லக்கினத்திற்கு கஜகேசரி யோகம்.  சந்திரமங்கல யோகம்.  குரு மங்கள யோகம்.  பிரகாசிக்கின்றது.  இது ஜாதகரை உயர்த்துகிறது.  இவரோடு சேர்ந்த ராகு, கேது நன்மைகளையே தருகின்றனர்.  3, 8 – க்கரிய சுக்கிரன் அசுபத்தன்மை பெற்றுபாபியானாலும் இவரோடு சனி, ராகு, கேது, புதன், சூரியன், இணைவு பெரும்போது பீதி பலம் நீடித்த உபாதைகள் சோகமான நிலைகளை உண்டாக்குவதில் தவறுவதில்லை.  தனித்த சுக்கிரன் பெரும்பாதிப்புகளைத் தருவதில்லை.

                4, 7 – க்குரிய புதன் – சுக்கிரன் – சூரியனோடு தெடார்பு பெறும்போது சோதனையான பலன்களையே தருகிறார்.  தனித்த புதன் நன்மை செய்கிறார்.  செவ்வாய், சந்திரனோடு சேரும்போது மாறுப்பட்ட பலனைத் தருகிறார்.  இவரோடு சேர்ந்த ராகு, கேதுக்கள் பாதிப்பையே செய்கின்றனர்.  5 – க்கரிய சந்திரன் யாருடன் சேர்ந்தாலும் தனது தசாபுத்தி காலத்தில் பெரும் தவறுகளே செய்வதில்லை.  6 – க்குரிய சூரியன், புதன், சனி, சுக்கிரனோடு சேர்ந்தால் பாதிப்போ.  இவர் தனித்து 3, 6, 11, 12 – ல் இருந்தால் நல்ல பலன்களைத் தருகிறார்.

                இந்த லக்கினத்திற்கு குரு, சந்தி, செவ் போன்றவர்கள் தனித்து இருந்தா£களேயானால் அவர்களின் முழுபலனை தருவதில்லை.  அவர்களின் காரக பலன்கள் கெட்டுவிடுகிறது.

                                                யோகத்தைத் தரும் மிருத்துபாகை அந்தகாம்சம்.

யோகத்தைத் தரும் மீருத்துபகை அந்தகாம்சம்
மேஷம் இதன் 21வது பாகை 21வது பாகை இல்லை
ரிஷபம் இதன் 14வது பாகை 9வது பாகை 6 முதல் 10 வரை பாகை
மிதுனம் இதன் 24வது பாகை 21வது பாகை 9 முதல் 15 வரை பாகை
கடகம் இதன் 7வது பாகை 22வது பாகை 18 முதல் 27 வரை பாகை
சிம்மம் இதன் 21வது பாகை 25வது பாகை 19 முதல் 21 வரை பாகை
கன்னி இதன் 14வது பாகை 2வது பாகை இல்லை
துலாம் இதன் 24வது பாகை 4வது பாகை 27 முதல் 30 வரை பாகை
விருச்சிகம் இதன் 7வது பாகை 23வது பாகை 20 முதல் 23 வரை பாகை
தனுசு இதன் 21வது பாகை 18வது பாகை 26 முதல் 29 வரை பாகை
மகரம் இதன் 14வது பாகை 20வது பாகை 29முதல் 10 வரை பாகை
கும்பம் இதன் 24வது பாகை 24வது பாகை 6 முதல் 29 வரை பாகை
மீனம் இதன் 7வது பாகை 10வது பாகை இல்லை

                யோகத்தை தரும் பாகையில் எந்த ஒரு கிரகம் இருப்பினும் அந்த கிரகத்தின் காலம் வரும்போது யோக பலன்களை தரும் அப்பாகையில் உள்ள கிரகம் எந்த தன்மையில் உள்ளதோ அவ்வகை மூலம் யோகம் தரும்.  இப்பாகையில் லக்கினமோ – லக்கினாதிபதியோ இருந்து விட்டால் அந்த ஜாதகம் யோக ஜாதகம் என்பதில் சந்தேகமில்லை.                குறிப்பிட்ட ராசியின் மிருத்துப்பாகையில் எந்த ஒரு கிரகம் இருப்பினும் அந்த கிரகத்தின் காலம் வரும்போது அக்கிரகத்தின் ஆதிபத்தி யகாரகம் மூலம் மருத்துவப் பயம், விபத்து, ஆயுள்பயத்தை தருகிறது.  இப்பாகையில் லக்கினமோ – லக்கினாதிபதியோ இருந்துவிட்டால் நீடித்த ஆயுளுக்கு பங்கம் ஏற்படுகிறது.                அந்த காம்சப்பாகை உள்ள ராசியில் எந்த ஒரு கிரகம் இருந்தாலும் அது செயல்படுவதில்லை.  ஒளிவற்ற நிலைஅக்காலம் வரும்போது பிரகாசிப்பதில்லை.  இப்பாகையில் லக்கினமோ – லக்கினாதிபதியோ இருந்து விட்டால் அந்த ஜாதகம் பிரகாசிப்பதில்லை.                மேலே சொல்லியுள்ள விசயங்கள் சிறப்பு விதிகள் ஆகும்.  இவ்வகை பலன்களை அனுபவ ரீதியாக பார்க்கலாம்.                     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *