கோள்களின் கோலாட்டம் – 1.10 கோள்களின் இயக்கம்

51

 

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்ற வார்த்தைகளுக்கு பொருள் தேடுவது என்றால் எங்கும் செல்ல வேண்டாம்.  இதன் பொருள் நம்மிடமே உள்ளது.  ஆண் அண்டத்தில் உள்ள கோள்களின் கதிர் வீச்சு பிண்டமான நம்மை ஆட்கொள்வதில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.  அண்டத்தில் உள்ள கோள்களின் கதிர்வீச்சு பூமியில் பாய்வதையே அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கிறோம்.  பஞ்ச பூதங்களை நவக்கிரகமாகவும், 27 நட்சத்திரங்களாகவும் பாகுபடுத்தி விட்டு இவைகளையே மனிதனின் அங்கங்களில் குடியேற செய்து வீட்டின் உரிமையாளராக பஞ்சபூதமும் அவரின் உதவியாளர்களாக நவக்கிரகங்-களும், இந்த உதவியாளர்களுக்கு காரியதரிசிகளாக  27 நட்சத்திரங்களும் இருந்து மனித உடலுக்கு வாடகையாக தந்து வாடகையை வசூலிக்கும் தன்மைகளைப் பார்க்கும்போது இதன் விநோதம் என்ன? அதன் விளையாட்டும் ஆடும் ஆட்டமும் படுத்தும் பாடும் அப்பப்பா…..

                பஞ்சபூதங்களான பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற தன்மைகளின் பிரதிபலிப்பாக குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், புதன், சனி, ராகு, கேது முறையே பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற இயக்கத்தை எடுத்துக் கொண்டு மேசம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளை தன்னுள் அடக்கி மனிதனை இயக்கும் கர்த்தாவாக திகழ்ந்து சிவசக்தி சொரூபமாக நின்று இயங்கும் ” ஜம் ” பீஜத்தின் தன்மையான ‘‘ நகாரம் ’’ இதுவே.  லம், ‘ க்லீம் ’ பீஜத்தின் தன்மையான ‘‘ மகாரம் ’’ ‘‘றீம்’’ பீஜத்தின் தன்மையான ‘ வகாரம் ’ இதுவே யம்

‘‘ ஸ்ரீம் ’’ பீஜத்தின் தன்மையான ‘‘ யகாரம் ’’ இதுவே ஹம்.  இதுவே தான் அண்டமான நின்று இயங்கும் ‘‘ நமசிவய ’’ இதன் ஒடுக்கமே பரம்பொருள்.  இதுவே ஜோதிமயம்.  இதனுள் நின்று செயல்படுவதே சக்திமயம்.

                ஜோதிமயமாக நின்று இயங்கும் பராசக்தியின் பல உரு தோற்றப் பிரிவுகளே படைக்கும் தொழிலுக்கான பிரம்மா இவரின் இயக்கத்தில் குரு காக்கும் தொழிலுக்கான விஷ்ணு இவரின் இயக்கத்தில் சுக்கிரன், சந்திரன், அழிக்கும் தொழிலுக்கான ருத்திரன் இவரின் இயக்கத்தில் சனி, ராகு, கேது அருள் பாலிக்கும் தொழிலுக்கான மகேஸ்வரன், இவரின் இயக்கத்தில் புதன் ஆக நவக்கிரகங்கள் அவரவரின் இயக்க கர்தாவின் ஏவலாளிகளாக நின்று செயல்படுவது தான் மனித தேகம்.  மரம், செடி, கொடி, புல் பூண்டு, ஊர்வன, பறப்பன, நடப்பன போன்ற அனைத்தும் நவக்கிரங்களின் சக்தி மூலமே நடைபெறுகிறது.

                இந்த நவக்கிரகங்கள் மனித தேகத்தினுள் புகுந்து விளையாடும் போது? நான்.. எனது..சாதூர்யம்..திறமை..பராக்கிரமம்..புத்திசாலித்தனம் முயற்சி.. என்பதெல்லாம் எங்கே? இந்த மனிதனுக்க எது சொந்தம்? மனிதனி தேகத்தில் அமைந்த 72000 நாடி நரம்புகளும், நவக்கிரகங்களின் உப அதிகாரிகள் பங்கு எடுத்து செயல்படுவதேயாகும்.  இம்மனிதனின் தேகத்தின் முக்கியமான அம்சம் வாதம்-பித்தம்-சிலேத்துமம்.  இவைகளில் குரு-புதன்-சனி-வாத அதிகாரியாகவும், சூரியன்-செவ்வாய்-ராகு-கேது பித்த அதிகாரியாகவும் நின்று செயல்படுவதை கண்கூடாக பார்க்கலாம்.

                நமது தேகத்தின் கால் பகுதியை பிரம்மாவும், வயிற்றின் பகுதியை விஷ்ணுவும், மார்பின் பகுதியை ருத்திரனும், கண்டஸ்தானத்தின் பகுதியை மகேஸ்வரனும், புருவ மத்தியில் சதாசிவமும் நின்று மற்ற பகுதிகைளை நவக்கிரகங்களுக்கு அளித்து நவக்கிரகங்கள் தனது இயக்கத்தை 27 நட்சத்திரங்களுக்கு அதன் தேவதைகளுக்கு பங்கிட்டு தந்து நடத்தும் மாயா வினோதத்தை என்ன சொல்வது?

                எலும்பு மாமிசம் தோல், நரம்பு, ரோமம் போன்றவற்றின் பராமரிப்பு குருவும், வேர்வை, மூத்திரம், வாய்நீர், உதிரம், விந்து போன்றவற்றின் பாராமரிப்பு சுக்கிரன்-சந்திரனும், பசி, தாகம், நித்திரை, மைதுனம், சோம்பல் போன்றவற்றின் பராமரிப்பு சூரியன், செவ்வாயும், உசும்புதல் நடத்தல், இருத்தல் தாண்டல், படுத்தல் போன்றவற்றின் பராமரிப்பு புதனும், பயம் மோகம், துவேசம் வெட்கம் திடம் போன்றவற்றின் பராமரிப்பு சனி-ராகு-கேதுக்கள் எடுத்துக்கொண்டு ஆடும் கோலாட்டம் அப்பப்பா… குரூர குணத்தின் செயலாளராக சந்திரன், புதன், குரு, சுக்கிரன் நின்று நர்த்தனம் புரியும் லீலையை சொல்லவும் வேண்டுமா? சத்தியம், தர்மம், போன்றவற்றிற்கு குரு, புதன், சுக்கிரன் அதர்மம் கலந்து சந்திரன், சூரியன், சனி, செவ்வாய், ராகு தர்மம் அதர்மம் கலந்து நிலைக்கு சந்திரன், கேதுவாக நின்று இயங்கும் இதே போல் நமது தேகத்தின் ஒவ்வொரு மயிர் துவாரத்திலும் நின்றுஇயங்கும் தெய்வம் கிரகம் நட்சத்திரம் தன் தேவதைகள் போன்ற அமைப்பை இதுவரையில் நாம் தத்துவார்த்தமாகவும் சித்தர்கள் ஞானிகள் மகான்களின் வழிமுறைகளிலும் பார்த்தோம்.  இவ்வமைப்பு பெற்ற கிரகங்கள் மனித பிறவி எடுத்த நாம் இப்பூமியில் அவதரித்த பிறந்த நேரத்திற்கொப்ப ஊழ்வினை புண்ணிய பாவங்களுக்கு தக்கப்டி சோதிட சாஸ்திர ரீதியில் ஜாதகத்தில அமர்ந்து நடத்தும் நாடகங்களை செயல்பாடு இயக்கங்களை பற்றிய விசயங்களை பார்க்கலாம்.

                நிலத்தின் இயக்க கர்த்தவான குரு வார்த்தை ( நாளை ) யும், நீரின் இயக்ககர்த்தாவான சுக்கிரன்-சந்திரன் திதியையும் நெருப்பின் இயக்க கர்த்தாவான சூரியன், செவ்வாய் நட்சத்திரத்தையும் காற்றின் இயக்க கர்த்தாவான புதன் யோகத்தையும், ஆகாயத்தையுன் இயக்க கர்த்தாவான சனி, ராகு, கேது கரணத்தையும், இயக்கும் தன்மையை, ‘‘ பஞ்சாங்கம் ’’ இதுவே நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் போன்ற ஐந்து.

                அண்டத்திலிருந்து செயல்படும் இவைகள் பிண்டமான பூமி நீரில் அடங்கி பூமிநீர் இரண்டும் நெருப்பில் அடங்கி நிலம், நீர், நெருப்பு, மூன்றும் காற்றில் அடங்கி இவைகள் நான்கும் ஆகாயத்தில் அடங்கி ஒடுங்கி செயல்படும்.  இவ்வுண்மை நிலையை கண்டவரே வியோமவெளி யான, பரவெளியில் நின்று ஒளிப்பிழம்பாக இருந்து அருள்பாலிக்கும் சித்தர் மகான் யோகி மகரிஷி போன்றவர்கள் இந்லையை வாசி மூலம் அறியும் பெரும் பாக்கியத்தை பெறும் வாய்ப்பு மனித பிறவிக்கேயாகும்.

                ‘‘அரிது அரிது மானிட பிறவி கிடைத்தல் ’’ என்ற பெரும் பேற்றை பெற்ற இம் மனித பிறவியை நவக்கிரகங்களின் கதிர்வீச்சு காற்றில் கலந்து சுவாசத்தின் மூலம் மனித தேகத்திற்குள் சென்று தோற்றுவிக்கும் விசித்திரங்கள் தான் எத்தனை எத்தனை..

                பராசக்தியின் படைப்பில் எவ்வளவோ மாற்றங்கள், விசித்திரங்கள், வினோதங்கள் இவையெல்லாம் எப்படி எவ்விதத்தில் நிகழ்கின்றன என்பதை சிந்தித்துப்பார்த்தால் சிந்தனை தான் சிறகடித்து பறக்குமே ஒழிய நிலையான முடிவிற்கும் இடத்திற்கும் வரமுடிவதில்லை.  இதேபோல் அத்தெய்வத்தால் சிருஷ்டிக்கப்பட்ட நவநாயகர்கள் நடத்தம் வினோத விசித்திரங்களை காணும்போது மிகவும் ஆச்சரியமும் ஆராய்ச்சிக்குரியதாகவும் உள்ளது.  நவக்கிரகங்கள் நம்மை பல கோணங்களிலும் இயக்கி நன்மை தீமைகளை அடை செய்கின்றன.  இதே போல் நம் உடல் உறுப்புகளையும் இயங்க செய்கின்றன.

                * நம் கண்களுக்கு ஒரு விதமான காந்த சக்தியையும் எலும்புகளுக்கு பலத்தையும் உடலை இயக்கும் ஆன்மாவாக உடலை உருவாக்க காரணமாக, தந்தை என்ற தகுதியோடு செயல்படும் சூரியன்…

                * உடலுக்கும், மனத்திற்கும், எண்ணங்களுக்கும் தாய்க்கும் அதிபதியாக சந்திரன் நன்று இயங்குகிறார்.  இவர் மிகவும் துரிதமாக செயல்படும் கிரகமாகும்.  க்ஷண நேரத்தில் மனிதனின் மனதை மாற்கும் தன்மை உள்ள இவர் செய்யும் வினோதங்கள் பல.. பல..பல..

                * வீறு கொண்டு செயல்பட செய்யும் தைரிய பராக்கிரம சாதுர்யம் உஷ்ணத்தை ஏற்றும் கோபத்தை  தோற்றுவித்து இரத்த வேகத்தை அதிகப்படுத்தும் சகோதரகாரகர் எனற் பொறுப்பை ஏற்று செயல்படும் பூமகன் செவ்வாய் நகைச்சுவை நரம்புகளை முறுக்கேற்றும் நிலை அறிவாற்றல் பலவகையான சூழ்நிலைகளிலும் அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளும் ஆற்றல் தாய்வகை மாமன் என்ற தகுதியை பெற்ற புதனின் மர்மம்.

                * உடலின் தலைமையகமாக இருந்து செயல்படும் மூளையை கொண்டு செயல்படும் காரண காரியங்களுக்கும் போக பாக்கியமான உடல் உறவிற்கும் வம்சவிருத்திக்கும், ஆஸ்திக தன்மைக்கும் பணம் என்ற பெரும் தகுதிக்கு உரியவராக குரு காம உணர்வு உல்லாசம், அழகுபடுத்திக் கொள்ளும் தன்மை மதியை மயங்கச் செய்யும் உணர்வுகளுக்கும் கணவன், மனைவியை அழைத்து வரும் பொறுப்பாளராகவும் நின்று இயங்கும் சுக்கிரன் தன் லீலா வினோதங்களை நடத்தும் பாங்கே தனி.

                * நீச்ச உச்ச தன்மைகளுக்கும் பலாத்காரம், பிடிவாதம், நியாயம், தர்மம், புண்ணியம், பாவம் இவைகளை சீர்தூக்கி பார்க்கும் அதிகாரம் பெறுவதோடு ஆயுளுக்கு பொறுப்பாளாரக நின்று இயங்கும் சனி.

                * யோகத்தையும், உடல் உறுப்புகளில் இடுப்பிற்கு கீழ் உள்ளவைகளை செயல்படுத்தும் திறன், அறுவறுக்க தக்கவைகளை அனுபவிக்க தூண்டும் ராகு.

                * ஞானம் எந்த காரியத்தை எவ்வகையில் செயல்பட வேண்டும்.  இடம், பொருள் அறிந்து செயல்படும் ஆற்றல் எதையும் சிந்தித்து செயல்படும் தன்மை போன்றவைகளை இயக்கும் கேது.

                இவர்கள் நமது வினை விதி செயல்களுக்கொப்ப நமது உடல் அமையும் சக துக்கங்களை தன்னுடன் வைத்து நடத்தும் கோலாட்டம் எந்தெந்த வகையில் எப்படி செயல்பட்டு மனித வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை கோள்கள் மூலம் அறியும் பல சிறப்பு விதிகளைப் பற்றி பார்க்கலாம்.

 44

                                                            நட்சத்திர இயக்கம்.

                சோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு உள்ள விசயங்கள் அனைத்தும் நடைமுறைக்கு ஒத்து வருவதாக இல்லை.  பலவகையான கணிதங்கள் ஆய்வுகள் செய்தும் பலன்கள் தவறுவததை பார்க்கும் போது இந்த கோள்களின் கோலாட்டத்தை நினைக்கும் போது புரியாத புதிராக உள்ளதை யாரும் மறுக்க இயலாது.  இவ்வகை கோலாட்டத்தை ஒரளவாவது எவ்வகையிலாவது தெரிந்து நடந்து கொண்டால் நம் வாழ்க்கைக்கும் பெரும் வழிகாட்டியாக இருக்கும்.  ஜாதகத்தில் சொல்லப்பட்டுள்ள எத்தணை வர்க்க கணிதங்கள் உண்டோ அத்துணை கணிதங்களையும் போட்டு பார்த்து பல நூல்களில் சொல்லப்பட்டுள்ள பாடல்களை அனுசரித்து பலன்களை சொல்லும்அபாது பலன்கள் பிசகி விடுவதைப் பார்க்கிறோம்.  இதற்கு எங்காவது ஒரு வழி தென்படுமா என்ற ஆதங்கத்தோடு வாசி நிலையில் இருந்து பார்த்தபோது ஒரு வழி தென்பட்டது.

                அவ்வழியின் முழுவடிவமே இந்த நூல் என்றால் மிகையாகாது.  ஒரு சின்ன விசயத்தில் பெரும் ரகசியமே அடங்கி உள்ளதைப் பார்க்கும்போது இது கோள்களின் கோலாட்டமே என்பது உறுதியாகிறது.  பல வகையான ஆராய்ச்சிகள் நூல்களின் ஆதாரங்கள் எல்லாம் ஒரு சின்ன சமாசாரத்தில் பறந்து விடுகிறது.  எனில் இந்த கோள்களின் கோலாட்டத்தை என்ன வென்று சொல்வது.

                பெரும் ஜோதிட மேதைகள் ஆராய்ச்சியாளர்கள், வானிலை ஆய்வாளர்கள், அனுபவசாலிகள் எல்லாம் இந்த கோள்களிடம் என்ன செய்ய இயலும்?

                கிழமை-திதி-நட்சத்திரம் இந்த மூன்றும் நமக்கு சாதாரண விஷயம். இதில் எவ்வளவு நட்பங்களை அடக்கி உள்ளார்கள்.  எவ்வளவு செயல்பாடுகள் இத்தோடு யோகம்-கரணம் இந்த ஐந்தும் பஞ்ச பூதங்களாக நின்று நம்மை கோள்களின் வழியாக எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதை காணும்போது இதற்கு என்ன பெயர் சொல்வது.  இது கோலாட்டம் தானே, ஒரு ஜாதகத்தில் கோணாதிபதி, கேந்திராதிபதி, உச்சம், ஆட்சி, நட்பு, பல யோகங்கள், சப்தவர்கம், அட்டவர்கம், தசவர்கம் இதில் எல்லாம் நுழைந்து பார்த்து இன்னும் என்னென்ன வழிகள் எல்லாம் உள்ளதோ அதில் எல்லாம் நுழைந்து வெளியே பந்து ஒரு பல நிர்ணயம் செய்யும் போது ‘‘ ரிசல்ட் ’’.

                ஜாதகத்தில் சொல்லப்பட்ட வர்தனீ குல சம்பதாம் பதவீ பூர்வ புண்ணியனாம் என்ற நிலைப்படி ஜாதகனின் குலசம்பத்து வர்கங்களின் தன்மையையும், அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு தக்கப்படிதான் கோள்களின் கோலாட்டம் என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டியதாகும்.  ஜாதகத்தில் சொல்லப்பட்ட எந்த யோகமானாலும் அவன் செய்த பாவ புண்ணியத்திற்கு தக்கப்படிதான் செயல்படும் என்பது உறுதியான ஒன்றாகும்.

                இப்பூர்வ பாவபுண்ணிய பலத்தை நாம் நட்சத்திரங்களின் அமைப்பை பொறுத்தே தான் தெரிந்து கொள்ளமுடியும் என்பது தெளிவு, 27 நட்சத்திரங்கள் ஒரு ஜாதகனின் பலமான கட்டிடத்திற்கு உரிய தூண்கள் ஆகும்.  இந்த தூண்களின் பலம் குறைந்தால் கூட்டம் ஆடத்தான் செய்யும். இந்த 27 தூண்களில் எந்த இடத்தில் உள்ள தூண் பலம் குறைந்ததாக உள்ளதோ அந்த இடம் மட்டும் பழுதாகி விடலாம்.  அந்த பழுதான இடத்தில் எவ்வளவு பலம் பொருந்திய கோள் இருந்தும் என்ன பயன்?

                நட்சத்திரங்கள் என்னும் தூண்களின் பலம் அறிய பல நூல்களில் பல முறைகள் சொல்லி உள்ளனர்.  அதை பெரும்பாலான ஜோதிட ஆய்வாளர்கள் பெரிதாக எடுத்துக் கொளவதில்லை.  இதனால் என்ன வரப்போகிறது என்ற நிலையில் அதை எல்லாம் கண்டு கொள்வதில்லை. காரணம் அதை பெரிய அளவில் எந்த நூலிலும் சொல்லப்படவில்லை.

                அப்படி பெரிய அளவிலும் சொல்லப்படாத ஒரு சின்ன விசயத்தை பெரிய ரகசியமான சமாச்சாரம் உள்ளதைப் பார்க்கும்போது இது கோலாட்டம்தானே?

                ஜெய்முனி சூத்திரம் 8000, பெரிய வருஷாதி நூல் சினேந்திரமாலை, குமாரசுவாமியம், சுகர் பிரம்மரிஷி வக்கியம், போன்ற பழைய  பிரதிகளின் அடிப்படையில் சொல்லப்பட்டவைகளை கையாண்டு பார்த்ததில் கிடைத்த முத்தை ஏன் மாணிக்கத்தைத்தான் உங்கள் முன் வைத்துள்ளேன். அதில் சொல்லி உள்ள சின்ன விசயங்களை மிகைப்படுத்தி பார்த்த பொழுது ஆச்சரியப்படும் அளவில் பலன்கள் கிடைத்தபோது இந்த கோலாட்டத்தை என்ன சொல்வது.

                பல பெரிய யோகங்களை அடக்கிக் கொண்டுள்ள ஜாதகத்தை பார்க்கும் போது அதற்குரியவர்நிலை… யோகத்திற்கும், ஜாதகருக்கும் சம்பந்தம் இல்லாத ஒன்றை காண்கிறோம்.  அதே சமயத்தில் எந்தவிதமான யோகங்களையும் தன்னுள் அடக்கிக் கொள்ளாத ஒரு ஜாதகத்தைப் பார்க்கும்போது, அதற்குரியவர்நிலை ஆச்சரியப்படும்படியாக உள்ளது.

                இதற்கெல்லாம் காரணம் ஜாதகத்தின் நட்சத்திர தூண்களே.  இத்தூண்களின் அமைப்பைப் பொறுத்தே அனைத்தும் நிகழ்கிறது.  கோள்களுக்கு ஆதாரமே நட்சத்திரங்கள்தானே.  ஒருவரின் உயர்ந்த நிலை, பதவி, கௌரவம், பணபலம், உடல்பலம் போன்ற எல்லாவற்றிற்கும் நட்சத்திரத்தூண்கள் சரியாக இருக்க வேண்டும் என்பது உறுதியாகும்.

                ஒரு ஜாதகத்தை கையில் எடுத்துக்கொண்டோமேயானால், அந்த ஜாதகனின் நிலை இப்படித்தான் என்பதை முதலில் நிர்ணயம் செய்து கொள்ள வழி வகுப்பது இந்த நட்சத்திரத் தூண்களே.  இந்த நட்சத்திரத் தூண்கள் பலம் இழந்து எதிரிடையான நிலையில் இருந்தால் என்னதான் போகவானாக ஜனித்து இருந்தாலும் அது செயல்படுவதில்லை என்பது கண்கூடு.  ஜாதகர் பிறக்கும் போது நின்ற கோள்களின் அடிப்படையான ஆதாரமான ஊன்றுகோலான நட்சத்திரங்கள் ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரங்களின் கோள்கள் நின்று விட்டால் அவ்வளவே.

 

 45

 

நட்சத்திரங்களின் எதிரிடை.

                ஒருவரின் பிறந்த லக்கினமோ அல்லது லக்கினத்தின் எதிரிடையான நட்சத்திரமாக ஜாதகர் பிறந்த நட்சத்திரம் அமைந்துவிட்டால் இவரின் நிலை எவ்வளவு உயர்ந்ததாக இருந்துவிட்டாலும் இவர் அனுபவிக்காத நிலையை தந்து விடுகிறது.

                * ஜாதகரின் லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் பிறந்த லக்கினம் அமைந்துவிட்டால் இவர் வாழ்க்கை விசித்திரமாகத்தான் இருக்கும்.

                * லக்கினத்தின் 4,5,7,9,10,11 க்குரியவர்கள் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரம் ஜாதகரின் பிறந்த நட்சத்திரமாக இருந்து விட்டாலும் பாதிப்பான பலன்களையே தந்துவிடுகிறது.

                * ஒரு பாவாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் இன்னொரு பாவாதிபதி நின்றால் அந்த பாவத்தின் பலன்கள் செயல்படாமல் நின்றுவிடுகிறது.

                * உதாரணமாக :- நான்காம் பாவாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் 10- ஆம் பாவாதிபதி நின்றால் தொழில் வகை-தாய் வகை சுகம் ஜாதகருக்கு கிடைப்பதில்லை.

                * தன குடும்ப வாக்குஸ்தானதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரம் ஜாதகரின் பிறந்த நட்சத்திரமாக வந்தால் மேற்படி பலன்கள் சித்திப்பதில்லை.

                * சகோதர தைரிய வீரிய பராக்கிரம ஸ்தானாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரம் ஜாதகரின் பிறந்த நட்சத்திரமாக வந்தாலும் மேற்படி பலன்கள் சித்திப்பதில்லை.

                *  எந்த ஒரு பாவதிபதியின் நட்சத்திரன் எதிரிடையான நட்சத்திரம் ஜாதகரின் பிறந்த நட்சத்திரமாக வந்து விட்டால் அந்த ஜாதகருக்கு அப்பாவத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் முழுமையா கிடைப்பதில்லை என்பதை அனுபவத்தில் காணலாம்.

                * ஜாதகரின் லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் 5, 9 – க்குரியவர்கள் நிற்பது மிகவும் தவறை காட்டுவதாகும்.  இப்படிப்பட்ட ஜாதகங்கள் யாவும் பூர்வ கர்ம தோஷம் மிகுந்ததாக உள்ள ஜாதகமாக செயல்படுவதையும் பார்க்கலாம்.

                * தலைவர் காமராஜைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது.  அவர் ஜாதகத்தில் லக்கினாதிபதியான சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான ஆயில்யம் நின்ற நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்ததால் தான் அவர் எவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்த போதிலும் தனிப்பட்ட சுகம் எதுவும் அடைய முடியாத நிலைக்கு ஆளானார்.

                * இதே போல் சந்திரனின் எதிரிடையான நட்சத்திரத்தில், 7 -க்குரிய சனி உத்திராடத்தில் அமைந்ததால் இல்லற சுகம் பாதித்தது.  9 – க்குரிய – வரான குரு, சந்திரனின் எதிரிடையான ஆயில்யம் நின்ற நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்ததால் தான் அவர் எவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்த போதிலும் தனிப்பட்ட சுகம் எதுவும் அடைய முடியாத நிலைக்கு ஆளானார்.

                * இதே போல் சந்திரனின் எதிரிடையான நட்சத்திரத்தில், 7 – க்குரிய உத்திராடத்தில் அமைந்ததால் இல்லற சுகம் பாதித்தது. 9 – க்குரியவரான குரு, சந்திரனின் எதிரிடையான நட்சத்திரமான ரேவதியில் இருந்ததால் அரச பதவிகள் நிலைக்காமல் போனதற்கு ஒரு காரணமாக அமைவதைப் பார்க்கும்போது இது ‘‘ கோள்களின் கோலாட்டம் ’’ என்பதில் சிறிதும் சந்தேகமில்லையே.  இதே போல் சாதாரண நி¬யில் இருந்த இவர் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வர சாதகமாக இருந்த நட்சத்திரம் என்னவாக இருக்கலாம் அதையும் பார்க்கலாமே ..

                * பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான 5 – க்குரிய செவ்வாய் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரமான மகத்தில் நாலுக்குரிய சுக்கிரன் வாக்குஸ்தானாதிபதியான சூரியன் நின்ற நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தில் சுக்கிரன் அமர்ந்ததால் கல்வி அறிவு இல்லாமலே பெரும் புகழ் பெறக் காரணமாகிறது.

                * பதவி ஸ்தானாதிபதியும் பாக்கியாதிபதியுமான குரு நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் பூர்வ புண்ய ஸ்தானாதிபதியும் ராஜ்ய ஸ்தானாதிபதியுமான செவ்வாய் அமர்ந்து உள்ளதால் இவருக்கு உயர்ந்த பதவிகள் சென் இடமெல்லாம் சிறப்பு பெரிய ராஜ தந்திரியாக பவனி வந்தார் என்றால் இதுவும் ஒரு கோலாட்டம்தானே.

                * தற்போது இந்த கோலாட்டத்தில் சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கும் பிரதமர் நரசிம்மராவ் ஜாதகப்படி அவரின் சாதக நட்சத்திரங்களின் நிலையும் எதிரிடையான நட்சத்திரங்களின் நிலையும் எவ்வாறு அமைந்து உள்ளது என்பதை பார்க்கலாம்.  இவர் தற்போது இந்த கோள்களின் பலத்தால் தான் நிற்கிறார் என்பது மறுக்க முடியாது. 

                இவரின் முதல் பலம் லக்கினாதிபதியான புதன் நின்ற நட்சத்திரத்தில் எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரனும் எதிரிடையான நட்சத்திரத்தில்

9-க்குரிய சுக்கிரனும் இல்லாமல் இருப்பதுதான்.

                * லக்கினாதிபதியான புதனின் சாதகமான நட்சத்திரத்தில் 9 – க்குரிய சுக்கிரன் இருப்பது 5 – க்குரிய சனி இருப்பது இவரின் பூர்வ புண்ணிய பலமே என்றால் தவறில்லை.  அரசியல் வாழ்வில் நீடித்த நிலையில் ஏதோ ஓர் பதவியை நீண்ட காலமாக வகித்து வந்த இவரின் பூர்வ புண்ணிய பலமே என்றால் தவறில்லை.  அரசியல் வாழ்வில் நீடித்த நிலையில் ஏதோ ஓர் பதவியை நீண்ட காலமாக வகித்து வந்த இவரின் ஜாதகம் பற்றி சொல்லும்போது இக்கோலாட்டத்தின் வினோதத்தை அறிய முடிகிறது.

                லக்கினாதிபதியான புதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரமான பூரத்தில் குரு உள்ளதால் இவருக்கு அடிக்கடி மறைமுக எதிர்ப்புகளும் பதவிக்கு ஆபத்து வரும் சூழ்நிலைகளும் உருவாகிறது.

                * தற்சமயம் இவருக்கு தசாநாதனான செவ்வாய் சாதகமான செவ்வாய் நின்ற நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தில் லக்கினாதிபதியான புதன் உள்ளதால் இவரை 10.3.1995 வரை அசைக்க முடியாத நிலையே காணுகிறது.  இத்தேதிக்குப் பின் இவராக ஒரு முடிவிற்கு வரும் நிலையே தெரிகிறது.

                சிறப்புமிக்க பாரம்பரித்தில் பிறந்து வழிவழியாக அரச பதவிகளில் நின்று செயல்பட்ட இந்தியாவையே விலைக்கு வாங்கும் தகுதி படைத்த குடும்பத்தில் பிறந்த அரச பதவியை வகித்து அரசியலில் தன் காலத்தை கழித்து எதிர்பாராத வகையில் துர்மரணமடைந்த மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இருவர் ஜாதகத்தில் ஏற்பட்ட கோலாட்டத்தைப் பற்றி பார்க்கலாமா?

                ரோஜாவின் ராஜாவாகத் திகழ்ந்த நேரு அவர்களின் புதல்வியும் மக்கள் மனதில் குடி கொண்ட இந்திராகாந்தி அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி நின்ற நட்சத்திரமாக உத்திராடத்தின் சாதகமான நட்சத்திரமான பூசத்தில் லக்கினம் அமைந்த நிலை 9 – க்குரிய குரு ரோகிணியால் அமர்ந்த நிலை,  இரண்டும் இவரின் பதவிகளுக்கு பேரும் புகழுக்கும் காரணமாக இருந்த நிலையாகும்.  9 – க்குரிய குரு நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில், 5 – 10 – க்குரிய செவ்வாய், புதன் நின்றதால் தைரியம்-பராக்கிரமம்-ராஜதந்திரம்-அரசியல் சிறப்பு- கல்விவளம்-பேச்சுதிறன் எல்லாம் அமைந்தது.  இப்படி அமைந்த இவரின் ஜாதக நிலையில் கோள்களின் கோலாட்டம் நட்சத்திரங்களின் எதிரிடையாக நின்று செயல்பட்ட ஒரு வினோத நிலைமை பார்க்கும்போது…

                ஆயுள்காரகரும், அஷ்டமாதிபதியுமான சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் இவரின் விரையாதிபதி அமர்ந்து உள்ளது. 12-ல் உள்ள கேது அமர்ந்து உள்ளது குறிப்பிடத் தக்கது.  இவரின் உயிர் இழப்புக்கு புதன் என்ற அரசியல் வாழ்வு கேது என்ற அன்னிய மறைமுக எதிர்ப்பு சக்திகள் காரணமாகிறது.  இவர் இறந்தது புதன் கிழமை என்பது மறக்கமுடியாதது.

                புதன் நின்ற நட்சத்திரத்தின எதிரிடையான நட்சத்திரத்தைப் பெற்று செவ்வாய் புத்தி காலத்தில், புதனின் எதிரிடையான நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில், புதனின் நட்சத்திரமான ஆயில்யத்தில் சனி இருந்து தனது தசையை நடத்தும்போது, லக்கினாதிபதியான சந்திரன் ( என்ற உடலுக்கு ) நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தைப் பெற்ற செவ்வாய் என்ற ஆயுதத்தால் மரணம் ஏற்பட்டது.  இதுவும் 3 – ஆம் இடம் என்ற அடிமை ஸ்தானமான ( தனது வேலைக்காரர் என்ற ) பாவத்திற்கும் புதனே வருகிறார் என்றால் இந்த கோலாட்டத்தை என்னவென்று எப்படியென்று சொல்வது?

                முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் புதல்வர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஜாதகத்தை ஆய்வு செய்யும்போது இவரின் ஜாதகப்படி அமைந்த கோள்களைப் பார்க்கும்போது இவருக்கு எப்படி பிரதமர் பதவி கிடைத்தது என்ற சிந்தனைக் ஜோதிட ஆய்வாளர்களை இட்டு செல்லும் இவர் பிரதமர் ஆவதற்கும், யாருமே சிந்தித்து பார்க்க முடியாத அளவில் கற்பனை கூட பண்ண இயலாத ஒரு நிலையில் இவர் மரணம் ஏற்பட்ட கோர நிலைக்கு என்ன காரணம் என ஆய்வு செய்யும்போது…

                9 – க்குரிய பாக்கியாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினாதிபதி புதன், 5 – க்குரிய ராஜ்ய ஸ்தானாதிபதியான சனி நின்ற நட்சத்திரன் சாதகமான நட்சத்திரத்தில் சந்திரன் 9- க்குரியவரான சுக்கிரன் அமைந்துள்ள சிறப்பு இவருக்கு எதிர்பாராத பிரதமர் பதவியை தந்தது.  சனி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தை பெற்ற சந்திரன் வீட்டில் உள்ள ராகு தசையில் லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தைப் பெற்ற குருவின் புத்தி காலத்தில் இவருக்கு பிரதமர் பதவி கிடைத்தது.

                இவருக்கு பாதிப்பை தந்த எதிரிடையான நட்சத்திரங்க¬ப் பற்றி பார்க்கும்போது…

                5, 6 – க்குரிய சனியின் சாதகமான நட்சத்திரத்தை பெற்ற சந்திரன் வீட்டில் இருந்த ராகு ஐந்தாமிட ராஜ்ஜிய பதவியும் ஆளும் இட சத்துரு ஸ்தான பலனையும் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  பிரதமர் பதவி தந்த இதே ராகு தசைதான் ராஜீவ் காந்தியை எதிரிகளால் உயிர் இழக்க செய்த விந்தையை காணலாம்.

                ஆயுள்காரகர் சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் உடல் காரகர் சந்திரன் நின்று உள்ளது.  இங்கே ஆறுக்குடைய ஆதிபத்தியம் பெற்ற சனி சத்துருக்களால் சந்திரன் என்ற உடலுக்கு பாதிப்பை தர வாய்ப்பை உண்டாக்கி உள்ளது.  லக்கினாதிபதி புதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரமான திருவாதிரையில் ஆயுள்காரகர் சனி அமர்ந்து உள்ளதால் லக்கினாதிபதியான ஜாதகனின் உயிர் பீதி பயத்தை அதிர்ச்சியைத் தரும் அளவில் பிரிந்தது.  இம்மாதிரி செயல்கள் அனைத்தும் நட்சத்திரங்களின் அடிப்படையிலேயே செயல்படுகிறது என்பதை அறியலாம்.

                நமது இந்தியாவின் தற்போது உள்ள ஜனாதிபதி சங்கரதயாள்சர்மா அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தில் 9 -க்குரிய புதன் உள்ளார்.  சந்திரன் உள்ளார் 9-க்குரிய புதன் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினம் அமர்ந்து உள்ளதால் இவருக்கு இவ்வகை சிறப்புகள் கிடைத்து உள்ளது.  இந்த சிறப்பு நீடித்த அளவில் இருக்கும்.  இவருக்கு லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் புதன் இருந்து தனது தசையை நடத்தும் காலத்தில் லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரமான கேட்டையில் ராகு உள்ள புத்தி காலத்தில் ஜனாதிபதி பதவி கிடைத்து உள்ளது.  இன்னும் மூன்று வருட காலம் அவர் பதவியில் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

                கவிதைகளுக்கு நாயகனாய் வார்த்தைக்கு சித்தனாய் எழுத்தில் சுடர் ஒளியாய் ஆன்மீகத்தில் ஜோதியாய், படைப்பில் ஞானியாக திகழ்ந்து வரும் வார்த்தை சித்தர் வலம்புரிஜான் பிரம்ம ஞானியாகத் திகழும் நட்சத்திர சாதக பாதகங்களை ஆய்வு செய்யும்போது,

                லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் பாக்கியாதிபதி புதன், சந்திரன் இவர்கள் இருவரும் நினவாற்றல் கற்பனா வளம் சாதுர்யமம், மனபலம் நுட்பமான ஆய்வு திறன் கதை, கட்டுரை, கவிதைகளை படைக்கும் ஆற்றல் போன்றவை-களோடு, கல்வி ஞானத்தையும் தருகிறார்கள்.

                5 -க்குரிய ராஜ்ஜிய ஸ்தானாதிபதியான சனி நின்ற நட்சத்திரத்திற்கு 9-க்குரிய பாக்கிய ஸ்தானாதிபதியான புதன் சாதகமான நட்சத்திரத்தில் உள்ளதால் இவருக்கு பதவிகள் கிடைத்து.  இனியும் கிட்டும்.  இதில் 9-க்குரிய புதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் 5-க்கரிய சனி இருந்ததால் இடையில் தடை ஏற்பட காரணமாகியது.  எது எப்படி இருப்பினும் லக்கினாதிபதிக்கு 5,9க்குரியவர்கள் நின்ற நட்சத்திர அமைப்பு நன்றாக உள்ளதால் இவர் செல்வாக்கு எக்காரணத்தை கொண்டும் குறைய வழி இல்லை, பட்டம் பதவிகள் கிடைக்கும்.

                பாக்கியாதிபதியான புதன் நின்ற நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தில் ராகு உள்ளதால், 5-க்கரிய சனி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் ராகு உள்ளதால் இந்த ராகு புத்தியில் ஏதாவது ஒரு பதவி கிட்டும் வாய்ப்பு உறுதியாக தெரிகிறது.

                சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் 9 -க்குரியவர் 3,6 -க்குரியவர் நின்ற நட்சத்திரம் ஏற்பட்டதால் இவர் அடிக்கடி பல வகையான எதிர்ப்புகள் போட்டி பொறாமைகள் மனகலக்கம் பயம் வேதனை போன்றவைகளை அனுபவிக்க வேண்டி உள்ளது.

                5 – க்குரிய சனி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் 9-க்குரிய புதன் உள்ளதால் லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தில் புதன் உள்ளதால் சனி தசாகாலம் உயர்வும் உண்டு.

                * சந்திரன் -சுக்கிரன், குரு போன்றவர்களின் நட்சத்திரங்களில் 1, 4, 5, 8, 9, 10, 11 – க்குரியவர்கள் செல்லும்போது எந்த ஒரு சுப பலனும் நடைமுறையில் வருவதை காணலாம்.  2, 3, 7, 12 -க்குரியவர்கள் செல்லும் போது சிறப்பான பலன்களை காண முடியாது.

                9 – குரியவரின் சாதகமான நட்சத்திரங்களான கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நச்டத்திரங்களில் 1, 4, 5, 9,10, 11 – க்குரியவர்கள் செல்லும்போது சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.

                தன் வாழ்க்கையில் பல வகையான கஷ்டங்களை துன்பங்களை அனுபவித்து தனது கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படா வண்ணம் செயலாற்றி ஆன்ம பலம், தெய்வ பலம் மிகுந்த தயாள குணம், தர்ம சிந்தனையின் உருவாக திகழ்ந்து இன்று ஓரளவுதன் வாழ்க்கையை சிறப்புடன் நடத்தி வரும் திருவாளர் எஸ்.எஸ்.மணியன் அவர்கள் ஜாதகப்படி சாதக பாதகங்களை பார்க்கலாம்.

                லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் பாக்கியாதிபதியான புதன் நின்றுள்ளார்.  பாக்கியாதிபதியான புதன் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில், ராகு உள்ளதால் சிறப்பான பலன்களை தருவார்.  இவ்வமைப்பு இவருக்கு உள்ளதால் கீழ்நிலைக்கு வராமல் மேற்படி நட்சத்திர அமைப்பு இவரை பாதுகாக்கும். 51 வயதுக்கு மேல் இவர் உயர்வடையும் வாய்ப்ப்குள் உள்ளது.

                லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் சாதகமான சந்திரன் நின்றதால் இவருக்கு அடிக்கடி பல பாதிப்புகள் மன பயம், குழப்பம், ஏற்றம், இறக்கம் போன்றவை நிகழ்ந்து மறையும்.

                நட்சத்திரங்களின் சாதக நிலையில் உள்ள நட்சத்திரங்களின் உள்ளே கிரகங்கள் தனது ஆதிபத்தியத்திற்கொப் உயர்வு தாழ்வுகளை தருவார்கள்.  வம்சாவழி அவரவர் செய்த புண்ணிய பாவங்களுக்கு தக்கபடி அவர்களின் உயர்வான பதவிகள் யோகம் அமைகிறது.  நட்சத்திரங்களின் எதிரிடையான நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து தசை நடத்தும்போது புத்திநாதன் பெற்ற நட்சத்திரம் சாதகமான நிலையில் இருப்பின் சாதக பாதகம் கலந்து நடக்கும்.  இதில் எந்த கிரகம் பலவானாக உள்ளாரோ அக்கிரகத்தின் பலன்கள் அதிகரித்து காணும்.

                * தெய்வபலம், வம்சாவழி, பாரம்பர்ய தன்மை, குலத்தின் சிறப்பு, புண்ணியத்தின் பலம் போன்றவைகளை பொறுத்து பலன்கள் சிறந்து காணப்படுவதும் தாழ்ந்து காணப்படுவதுமான இருக்கும்.  ஆனால், சுப பலன்களை தராமல் இருக்காது.

                * கோள்கள் மனிதனை தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்தி பலவகையான செயல்களில் ஈடுபடுத்தி அவர்களின் உயர்வு, தாழ்வை நிகழ்த்துகிறது.  அவ்வகையில் உயர்வடைந்த சில ஜாதகங்களைப் பார்க்கும்போது அரசியலில் ஈடுபட செய்து அதன்மூலம் மக்களின் நன் மதிப்பை பெற வைத்த பிரதமர், ஜனாதிபதி, மந்திரி, முதல்வர், எம்.பி., எம்.எல்.ஏ போன்ற பதவிகளைத் தேடித்ர சூரியன், புதன், செவ்வாய், சனி என்ற நான்கு கோள்களின் ஆதிக்கம் நல்லமுறையில் இருந்தால் அவர்கள் அரசியலில் உயர் பதவிகளை பெற வழிவகுக்கும்.  அரசு சம்பந்தப்பட்டவைக்கு ஆன்ம பலம் பொருந்திய சூரியன் மக்களின் தன்னை சார்ந்தவர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுத்தர உதவும் புதன் ( இவர் சகலவிதமான செயல்களுக்கும் தூண்டும் கோலாய் இருப்பவர் ) அத்தோடு அறிவாற்றலுக்கு சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளும் செயலுக்கும் உரியவர் புதன், எதையுமே துணிந்து தைரியத்தோடு சமாளிக்கும் ஆற்றலுக்கும், நிர்வாகத்திறனுக்கும் உரிய செவ்வாய், கடுமையான செயல்களுக்கும் அந்நிய பரிபாலனத்திற்கும் எதையும் சீர்தூக்கி பார்த்து செயல்படுத்தும் திறனுக்கும் உரிய சனி போன்ற கோள்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் அவர்கள் அரசியல் நிபுணர்களாகவும் சாதூர்யம் மிக்கவர்ககளாகவும, நாவன்மை பேச்சுதிறனுக்கு உரியவர்களாகவும், உயர்ந்த பதவிகளை பெறுபவர்களாகவும் ஆகின்றனர்.  இதற்கு பின் நட்சத்திர இயக்கம் தொடங்க வேண்டும்.  அவ்வகையில் உள்ள சில ஜாதகங்களை உதாரணமாக பார்ப்போம்.

                * 5, 9, 10 – ஆம் இடங்கள் அரசியல் பதவி அரசருக்கு சமமான அந்தஸ்துகளை தரக்கூடியவைகள் இந்த இடங்களில் சூரிய, புதன், செவ், சனி போன்றவர்களின் தொடர்பு இருந்தால் நல்ல பதவிகள் கிடைக்கிறது.

அது நீண்ட நாள் வரை செயல்படுகிறது.  தற்போது இந்தியாவின் பிரதமராக உள்ள திரு . நரசிம்மராவ் அவர்கள் தனது 36 வயது முதல் தொடர்ந்து பல பதவிகளில் அரசியல் ரீதியாக இருந்து வந்தவர்.  அவருக்கு 10 – ஆம் இடத்தில் சூரி, புதன், செவ், சனி யோகாதிபதியாக 10 – க்கு வெற்றி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

                * எந்த லக்கினமாக இருந்தாலும் ஒரு சில கிரகங்களின் சேர்க்கையானது 3, 5, 6, 9, 10 – இல் இருந்தால் அதனுடைய சிறப்புத் தன்மை பொருந்தியதாக உள்ளத.  அதே போல் 1, 5, 9, 10 – க்குரியவர்கள் நின்ற நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று சாதகமான நட்சத்திரங்களில் அமைந்து விட்டால் அதன் சிறப்பே தனியாக உள்ளது.

                * 5 – க்குரிய சனி 10 – இல், 10 – க்குரியவர் 3 -ல், 3 -க்குரியவர் 9-இல் சூரியன், புதன் சேர்க்கை உள்ள ஜாதகம் நமது ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அவர்களின் ஜாதகமாகும். 

                * 5 -க்குரிய செவ்வாய் 3-ல், 3-க்குரியவர் வுதன் சூரியனுடன் சேர்க்கை, 9 .க்குரியவர் 5-க்குரியவர் ஒருவருக்கொருவர் தொடர்பு இது மறைந்த தலைவர் காமராஜர் ஜாதகம்.

                5 -ல் சூரியன், புதன், 9-க்குரியவர் பார்வை, 10-க்குரியவர் 5-க்குரியவர் சூரியனோ பரிவர்த்னை இந்த ஜாதகம் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களுடையது.

                * சூரியன், சந்திரன் சேர்க்கையை 9 -க்குரியவர் பார்வை, 10 -க்குரியவர் பலம் பெற்று 10-ஆம் இடத்தை பார்க்கும் அமைப்பு தலைவர் கருணாநிதி ஜாதகத்தில்.

                5 – க்குரியவர் 10-ல், 10-க்ரியவர் 3, 9 -க்குரியவரோடு இணைவு சூரியன், புதன் சேர்க்கை இது மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி உடையது.

                * 5 -க்குரியவர் 10 -ல், 9 -க்குரியவர் 5-ல், 1,9 – க்குரியவர் சேர்க்கை 5 – ல் உள்ள இந்த ஜாதகம் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுடையது.

                * 9 – 1 -க்குரியவர் 1-ல், 5 -க்குரியவர் 11- ல், 3 -க்குரியவர் 9 – ஆம் இடத்தைப் பார்க்கும் இந்த ஜாதகம் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களுடையது.

                * 5 – க்குரிய சனி 10-ல், 3, 9 க்குரியவர் சேர்க்கை, லக்கினத்தில் செவ்வாயோடு, 10 -க்கு வெற்றி ஸ்தானத்தில் சூரியன் அமைந்த இது வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்களுடையது.

                மேலே சொன்ன உதாரண ஜாதகங்கள் படி பார்க்கும்போது சூரியன், புதன், செவ்வாய், சனி தொடர்புகள் 3, 5, 6, 9, 10 – ஆம் இடத்தின் இணைவுகள் இல்லாமல் எந்த ஜாதகமும் இல்லை.  இவ்வகை அமைப்பு பெற்ற ஜாதகங்கள் அரசியல் வாழ்க்கையில், மேடை பேச்சில் மக்களின் அன்பை பெறும் வழிகளில் தனது செயல்களை உருவாக்கிவிடுகிறது.

                அடுத்து ஆன்மீக துறையில் தொடர்பு சிறப்பு மிகுந்தவர்களுக்கு சனி, குரு, சந்திரன், கேது, சுக்கிரன், சூரியன் போன்ற கிரகங்களின் தொடர்பு ஒன்றுக்குள் ஒன்றாக நின்று மனிதனை இயக்கினால் அவர்கள் ஆன்மீக வழியில் சிறப்பு மிக்கவர்களாக உள்ளனர்.  இத்தோடு 1, 4, 5, 10, 12 – ஆம் பாவாதிபதிகளின் தொடர்பும் தேவைப்படுகிறது.  இவ்வகையில் உள்ள சில ஜாதகங்களைப் பார்க்கலாம்.

 • 10 – ல் சூரியன், புதன், சுக்கிரன் இணைவு 5 – இல் கேது, சந்திரனுக்கு குருபார்வை, 10-க்கு, 9- ல் சனி இந்த அமைப்பு ஆதி சங்கரருக்கு உரியது கடக லக்னம்.
 • 10 -ல் குரு, சூரியன், புதன் சேர்க்கை சந்திரன் பார்வை 10 – க்கு
 • 5 – ல் சனி, கேது போன்ற அமைப்பு காஞ்சிமா முனிவர் சங்கராச்சாரியார் அவர்களுடையதாகும்.  சிம்ம லக்னம்.
 • 4 – க்குரிய செவ்வாய் 3 – இல், 3 -க்குரியவர் புதன் சூரியனுடன் சேர்க்கை 9 – க்குரியவர் 5 – க்குரியவர் ஒருவருக்கொருவர் தொடர்பு இது மறைந்து தலைவர் காமராஜர் ஜாதகம்.
 • 5 – ல் சூரியன், புதன், 9 – க்குரியவரின் பார்வை, 10 – க்குரியவர் 5 – க்கரியவர் சூரியனோ பரிவர்த்தனை இந்த ஜாதகம் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களுடையது.
 • 10 – ல் சூரியன், சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை சனி, கேது, சந்திரன் தொடர்பு.  இது அருணகிரிநாதர் ஜாதகம்.  தனுசு லக்னம்.

                மேற்படி கோள்களின் அமைப்பு ஆன்மீகத் துறையிலும் சன்னியாச வாழ்க்கைக்கும் இட்டு செல்கிறது.

                இனி கலைத்துறை, சினிமாத்துறைக்கு உரிய கோள்களின் ஆதிக்கமானது மனிதனுக்கு எவ்வகையில் அமையும் என்றால் கலைக்கு அதிபதி சுக்கிரன் அழகுக்கதிபதி சந்திரன் வேடத்திற்கு அதிபதி புதன். நடிப்பிற்கு அதிபதி சனி, பார்வைக்கு அதிபதி சூரியன் போன்றவர்களின் தொடர்பு ஒன்றுக்கொன்று ஒன்று இருந்து 1,2,3,5,6,10 – ஆம் இடத்தில இணைவுகள் ஏற்பட்டால் சினிமா கலைத்துறையில் கோள்கள் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது.  அவ்வகை ஜாதகங்கள் சிலவற்றை பார்ப்போம்.

 •  3 – ல் சனி, சூரியன், புதன் சேர்க்கை, சந்திரன், குரு.. உள்ள ஜாதகம் கமலஹாசன் அவர்களுடையது.  சிம்ம லக்னம்.
 •   சூரியன் – சனி – சந்திரன் – புதன் – சேர்க்கை பெற்று, 3 – ல் சுக்கிரன் உள்ள ரிசப லக்கின ஜாதகம் இசைஞானி இளையராஜா.
 • 5 – ல் சுக்கிரன் – புதன் இருந்து தனித்தன்மை பொருந்தியதாக உள்ள சிம்ம லக்கின ஜாதகம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
 • 10 – ல் சனி – கேது, 9 – ல் சுக்கிரன் – புதன் போன்ற சிறப்பு மிகுந்த அமைப்பை பெற ஜாதகம் நடிப்பின் இமயம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கும்ப லக்கினம்.
 •                சூரியன் – சுக்கிரன் – புதன் – செவ்வாய் இணைவு 9 – ல் சந்திரன் அமைந்த ஜாதகம் அமிதாப்பச்சன் கும்ப லக்னம்.
 •                சனிக்கு திரிகோணத்தில் சுக்கிரன் பலம் பெற்று சூரியன் – புதன் சேர்க்கை இருப்பின் கலைத்துறையில் பிரகாசிப்பர்.  இந்த அமைப்பு ஏ.பி.நாகராஜன் அவர்களுக்க உள்ளது.
 •                 சனி – சுக்கிரன் – குரு தொடர்பு பெற்று சூரியன் – புதன் சேர்க்கை இருப்பின் கலைத்துறையில் பிரகாசிப்பர்.  இந்த அமைப்பு வி.சாந்தாராம் அவர்களுக்கு  உள்ளது.

 

                                                                சங்கீத ஞானம்.

 

                கோள்களின் ஆதிக்கத்திற்கும் விளையாட்டிற்கும் கட்டுப்பட்ட மனிதனுக்கு சங்கீத ஞானத்தை தந்து விளையாடும் அமைப்புகள் சிலவற்றை பார்ப்போம்.

                ஜாதகத்தின் 2 – ஆம் இடம் விளையாட்டு.

                ஜாதகத்தின் 3 – ஆம் இடம் இசை.

                கையும் – காலம் உபயோகப்படுத்தும் இசைக்கருவி பயிற்சி 3-12 – ம் இடம்.

                சுக்கிரன் – புதன் – சந்திரன் – சனியின் தொடர்பு இசை சங்கீத ஞானத்திற்கு உறுதுணை.

 • 5 ஆம் இடத்திற்கு சனி, செவ்வாய், சுக்கிரன் போன்றவர்களின் தொடர்பு ஏற்பட்டால் தவில், தபேலா, மிருதங்கள், டோலக், கஞ்சிரா முதலியவற்றின் உயர்வு தருகிறது.
 •  மிதுனம் – துலாம் – கும்பம் பிறப்பு லக்கினமாகி குறுகிய ராசிகளான மேசம், ரிசபம், கும்பம், மீனம் இவற்றின் ஒன்றில் சந்திரன் அசுவனி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரம், அவிட்டம் 3 – 4 பாதம் சதையம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரம் பெற்று இருந்தால் புல்லாங்குழல் ஷெனாய், வீனை முதலியவற்றில் தேர்ச்சி கிட்டும்.
 •  மிதுனம் – துலாம் – கும்பம் பிறப்பு லக்கினம் ஆகி நீண்ட ராசிகளான சிம்மம் – கன்னி – துலாம் – விருச்சிகம் போன்ற ராசியில் ஜனித்தவர் நாதஸ்வரம் – கிளாரினெட் போன்றவற்றில் தேர்ச்சி பெறுவர்.
 • கடகம் . கன்னி – விருச்சிகம் – மீனம் போன்ற ராசிகள் பிறப்பு லக்கினமாகவோ சந்திரா லக்கினமாகவோ 3 ஆம் இடமாகவோ அமைந்தால் ஜலதரங்கம், புல்லாங்குழல் வாய்ப்பாட்டில் தேர்ச்சி 2 – க்குரியவர் சுக்கிரன் சம்பந்தம் பெற்றால் இனிமையான குரல் அமைப்பு கிட்டும்.
 • மிதுனம் – துலாம் – கும்பம் – கனி – விருச்சிகம் போன்றவைகளில் ஒன்றில் சுக்கிரன் இருப்பது வீணை வித்வான் நல்ல இனிமையான சங்கீத ஞானம் கிட்டும்.
 •  மேசம் – ரிசபம் – கும்பம் – மீனம் போன்ற ராசியில் புதன் சுக்கிரன் தொடர்பு இருப்பின் வயலின் தேர்ச்சி கிட்டும்.
 •  5 – ஆம் இடத்தை சனி வலிமையுடன் பார்த்தோ இருந்தோ சுக்கிரன் தொடர்பு பெற்றால் இசை ஆசிரியர் மேற்படி அமைப்பில் புதன் தொடர்பு பெற்றால் பாடல்களை இயற்றலாம்.
 • 5 ஆம் பாவத்தில சனி – புதன் – சுக்கிரன் தொடர்பு பெற்று பலமுடன் இருந்தால் மனக்கிளர்ச்சி உணர்வுகளை தூண்டும் தத்துவ பாடல்களை இயற்றுவார்.
 •  5 – க்குரியவராகவோ 5 – ஆம் இடத்திலோ சனியின் தொடர்பு ஏற்பட்டு குரு – செவ்வாய் – செவ்வாய் – சந்திரன் தொடர்பு ஏற்பட்டால் பாடல்களை இயற்றும் ஆசிரியராக, இசை மேதையாக வரலாம்.
 • 5 –  ல் கேது இருந்து சுக்கிரன் – புதன் – செவ்வாய் – சேர்க்கை எங்கு இருந்தாலும் பாடல்களை இயற்றுவதில் சிறப்பு மிக்கவர்.  இந்த அமைப்பு கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு உள்ளது.
 • 2 – க்குரியவர் சுக்கிரன் தொடர்பு விருச்சிகத்தில் சந்திரன் இருப்பின் இனிமையான குரலில் பாடி பரவசப்படுத்தும் பாடகர் ஆவார்.  இந்த அமைப்பு லதா மங்கேஸ்கருக்கு உள்ளது.

                இதுவரையில் நாம் பார்த்த கோள்களின் அமைப்புப்படி உள்ள பலன்களை நடைமுறைக்கு எல்லோருக்கும் வருகிறதா?  என்பது கேள்விக் குறியான விசயமாக இருந்த போதிலும் இவ்வகை பலன்களை கோள்களின் இயக்கம் அவரவர் பெற்ற நட்சத்திரங்களின் அமைப்பை பொறுத்தே செயல்படும் யோக அமைப்புக்குத் தக்கபடி உயர்வு தாழ்வு கிட்டும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.  கலைத்துறையில் ஈடுபாடு ஏற்படும் அமைப்பு ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் அவன் ‘‘ லைட்பாய்’’ ஆக இருப்பதும், ‘‘ தயாரிப்பாளராக ’’  ‘‘ டைரக்டராக ’’ இருப்பதும் அவன் பெற்ற யோகத்தை பொறுத்தேயாகும்.  ஆனால் அவன் செயல்படுவது கலைத்துறைதான்.

 

   கிரகத்திற்கு கிரகம் நிற்கும் பலன்.

 1. அருக்கனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                அரசன் அம்புலி ஆரல் இருந்திடில் அவனே

                                மெத்த தீரன் மிதமோகி வெகு நபர் நேசன்

                                புத்தி செலுத்தும் மிகுயூகி புவியாளும் அரசனே.

                சூரியனுக்கு 4,5,9,10 – ல் குரு – சந்-செவ்வாய்க்குரிய பாடல்.

 

 1. அல்லோனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                அருக்கன் அரசன் அசுரன் மந்தன் இருந்திடில்

                                கலைக்கரசனும் யோகவான் போகவான்

                                முற்பிறவியில் வரும் பலன்கள் வீண் போகாதே

                சந்திரனுக்கு 4, 5, 10-ல் சூரியன், குரு, சுக்கிரன் – சனிக்குரிய பாடல்.

 

 1. மங்களனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                மன்னன் மாலவன் தின்னவன் இருந்திடில்

                                உயர்ந்த யோகன் கனவிலும் மறவா தீரன்

                                முன்னவர் செய்தவப்பயனாய் சீமானாகி அரசாள்வானே

                செவ்வாய்க்கு 4, 5, 9, 10 – ல் குரு, புதன், ராகுக்குரிய பாடல்.

 

 1. மாலவனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                மந்தன் மன்னன் நன்னவன் இருந்திடில்

                                ஓதிடும் பற்கலைகளிலும் திறவானென்றும்

                                ஞானமிகு அம்பிகை வாசியோகனே

                புதனுக்கு 4,5,9,10 – இல் சனி அருளி, குரு, கேதுக்குரிய பாடல்

 1. மன்னவனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                மந்தன் மங்களன் அசுரன் இருந்திடில்

                                கடினத்தன்மை ஆளுடன் கனகமும் தனமும்

                                வண்மையுள் இனத்தார்க்கும் ஊரார்க்கும் அரசனே

                குருவிற்கு 4,5,9,10 – இல் சனி, செவ்வாய், சுக்கிரக்குரிய பாடல்.

 

 1. அசுரனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                அரசன் மந்தன் ஞானி இருந்திடில்

                                கலைஞானி சிறப்புறும் கூத்தாடி வெகுதனவான

                                போகமுடன் வெகுபூமி வாகனங்கள் பகன்றிடலாமே

                சுக்கிரனுக்கு 4,5,9,10 – இல் கேது, சுக்கிரன், புதனுக்குரிய பாடல்.

 

 1. மந்தனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                நன்னவன் அசுரன் மாலவன் இருந்திடில்

                                மின்னோன் செய்த பாக்யிமே வடிவெடுத்து

                                வந்த ஞானத்தால் உயர் புகழ் பெற்றிடுவானே

                சனிக்கு 4, 5, 9 10 – இல் சூரியன், சுக்கிரன், புதனுக்குரிய பாடல்.

 

 1. அரவிற்கு நாலைந்து ஒன்பது பத்தினில்

                                அருக்கன் அசுரன் மந்தன் இருந்திடில்

                                நெஞ்சனங்கட்கு பகலும் திட சிந்தனை

                                கூறும் ஆன்ம ஞானி சாது சங்க பிரியனே

                ராகு, கேதுவிற்கு 4, 5, 9, 10 – ல் சூரிய, சுக்கிர, சனிக்குரிய பாடல்.

 

                                                                சூரி, சந், குரு கேந்திர அமைப்பு மிக நல்லது.  இதில் யாராவது இருவர் சேர்ந்து இவர்களுக்கு 4,5,7,9,10 – ல் ஒருவர் இருப்பது விசேஷம்.

                குரு, சந், 1,4,7,10 – இல் இருப்பது குரு சந்திரயோகம்.  கஜகேசரி யோகமாகும்.  இந்த யோகம் நன்கு செயல்பட வேண்டுமானால் இவர்களுக்கு துணையாக சூரி, செ, சனி போன்றவர்கள் இருந்தேயாக வேண்டும்.

                சூரியனுக்கு 1,3,4,5,6,7,9,10,11 என்ற ஏற்படும் போதும் குருவிற்கு 1,4,7,10 என்ற நிலை ஏற்படும்போதும் இவர்களோடு செவ்வாய், சனி தொடர்பு எப்படியும் இருக்க வேண்டும்.

                சூரியனுக்கு 1,4,7,10 – ல் சந்திரன் அமையும்போது அல்லது 5,9 என்ற நிலை ஏற்படும்போது செவ்வாய்க்கோ, சூரியனுக்கோ, சந்திரனுக்கோ நிச்சயமாக குரு பார்வை கிடைக்க வேண்டும்.

                குரு, சூரி, சந் போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் 4,5,7,9,10 ஆக இருந்து சோபனம், அதிகண்டம், சூலம் அர்ஷனம், வஜ்ரம், வரியான், சுபம், சுபப்பிரியம், வைதிநதி நாமயோகங்கள் ஒன்றில் பிறந்தால் ஜாதகர் சிறப்பான் பலன்கள் அடைவது உறுதி.

                குருவிற்கு 1,4,5,7,910 – ல் சந்திரன் அமைந்த கிரக நிலை உள்ள ஜாதகங்களுக்கு, சூரியனுக்கு சந்திரன் அல்லது செவ்வாய் 1,4,5,7,9,10 என்ற நிலை நிச்சயமாய் இருக்க வேண்டும்.  அத்தோடு செவ்வாய் ஆட்சி உச்சம் திக்பலம் பெற்றும் இருந்திடல் வேண்டும்.  இப்படி அமைந்த நிலையானது ஜாதகரை நிச்சயமாய் உயர்த்தும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *