கோள்களின் கோலாட்டம் – 1.11 நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.

43

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்தால் முன்னிற்கு முரணாக செயல்படும் ஜாதகமாகும்.  லக்கினாதிபதியால் கிடைக்கும் பலன்கள் ஜாதகனுக்கு கிடைக்காது சரிவர செயல்படாது.

                2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் பலன்கள் ஜாதகருக்கு கிடைக்காது.  சந்திரன் அமர்ந்தால் அனுபவிக்க இயலாது.

                3 –  க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமைந்தால் 3 – க்குரியவரால் 3 – ஆம் பாவத்தில் கிடைக்கக்கூடிய பலன்கள் முழுமையாக இல்லாமல் போகலாம்.  அப்படி கிடைத்தாலும் அதை அனுபவிக்க முடியாமல் போகும்.  இதே போல் 12 பாவத்திற்குரியவர் அமைப்பும் பார்த்து பலன்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம்,

                லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ – சந்திரனோ அமைந்தால் லக்கினாதிபதியால் கிடைக்கக்கூடிய பலன்கள் சிறப்புகள் உயர்வுகள் ஜாதகருக்கு உறுதியாக கிடைக்கும்.

                2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின எதிரிடையான நட்சத்திரத்தில்  லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் அனைத்து பலன்களும் ஜாதகருக்கு கிடைக்கும் அனுபவிக்கும் நிலையும் ஏற்படும்.

                3 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 3 – க்குரியவரால் கிடைக்கும் அனைத்து பலன்களும் ஜாதகருக்கு கிடைக்கும் அனுபவிக்கும் நிலையும் ஏற்படும்.

                இதே போல் 12 பாவத்திற்குரியவர்களின் பலனையும் பார்த்து நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

                நட்சத்திரங்களின் எதிரிடை, சாதக நிலைகளை அந்தந்த பாதரீதியாக பார்ப்பது சூட்சம நிலையாகும் அப்படி பாத ரீதியாக நட்சத்திர எதிரிடை, சாதக நிலை அமைந்து விட்டால் சொல்லும் பலன்களில் தவறு வருவதற்கில்லை.

                உதாரணமாக :-  லக்கினாதிபதியாக சுக்கிரன் நின்ற நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரத்தின் முதல் பாதம் எனில் இதன் எதிரிடையான நட்சத்திரம் அஸ்தல் முதல் பாதமாக வரும் இந்த நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் எதுவோ அது இந்த ஜாதகருக்கு எதிரிடையாக செயல்பட்டு பாதிப்பான பலன்களைத் தரும்.

                இதே போல் லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரமான அனுசம் முதல் பாதத்திற்கு சாதகமான நட்சத்திரம் சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதமாகும்.  இந்த சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நிற்கும் கிரகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் சாதகமாக செயல்பட்டு நல்ல பலன்களை அதன் தசாபுத்தி காலங்களில் தரும்.

                நட்சத்திரங்களின் எதிரிடை —  சாதக தன்மைகளை நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் பார்ப்பது சூட்சும நிலை.  பாதரீதியாக பார்ப்பது அதி சூட்சும நிலை இவ்வகை நிலைகளைப் பொறுத்தே கோள்களின் சூட்சம விளையாட்டுக்கள் ஏற்படுகிறது.

                எந்த ஒரு பாவாதிபதியானாலும் அந்த பாவாதிபதி பெற்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் எந்த ஒரு பாவத்தின் அதிபதி நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி எதிரிடையாக செயல்படுவார்.

                5 – ஆம் பாவாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் 9 – ஆம் பாவாதிபதி நின்றால் தந்தையால் குழந்தைகளுக்கு பெற்ற பிள்ளைகளுக்கு எதிரி£ன செயல்கள் இதேபோல் பலன்கள் மாறி மாறி செயல்படும் என்பதை ஜோதிட கலைஞர்கள் வாசகநேயர்கள் யுக்தியோடு தெரிந்து செயல்படுவது நல்லது.  இதன் மூலம் மிக நுட்பமான சூட்சுமமான பலன்களை எளிதில் அறியலாம்.

                எந்த ஒரு கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது லக்கினம் அல்லது லக்கினாதிபதி நின்றால் அந்த கிரகத்தின் காரகத்திற்கு எதிர்ப்பாக ஜாதக செயல்படுவார்.

                உதாரணமாக சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது லக்கினம்.  லக்கினாதிபதி இருந்தால் ஜாதகர் தந்தைக்கு எதிராக செயல்படுவார்.  தந்தை மீது பற்றில்லாதவராக தந்தை மகன் மீது பற்று இல்லாதவராக அரசாங்கத்திற்கு விரோதமாக, அரசாங்க ஆதரவு இல்லாதவராக இருப்பார்.  ஆக சூரியனுக்கு உரிய காரக பலன்கள் இல்லாமல் இருக்கும்.

 40

                                ஆதிக்கம் செலுத்தும் கிரகம்.

 

                ஒருவரின் பிறந்த கிழமைக்குரியவர், நட்சத்திரத்திற்குரியவர், ராசிக்குரியவர், லக்கினத்திற்கு உரியவர், லக்கினம் நின்ற நட்சத்திரத்திற்கு உரியவர்களாக எந்த கிரகங்கள் வருகிறதோ அந்த கிரகத்தின் நட்சத்திரத்திலோ, ராசியிலோ, அந்த கிரகத்தின் நட்சத்திரங்கள் உள்ள ராசியிலோ, அந்த கிரகம் உள்ள ராசியிலோ அல்லது அக்கிரகம் பார்த்த ராசிகளிலோ எந்த பாவாதிபதி உள்ளாரோ அப்பாவாதிபதிகளின் இயக்கமே ஜாதகருக்கு மேலோங்கி இருக்கும்.

                உதாரணமாக ஒருவர் பிறந்த கிழமை, திங்கள், நட்சத்திரம், ரோகிணி, ராசி, ரிசபம், லக்கினம் துலாம் நின்ற நட்சத்திரம் விசாகம் என்றால் சந்திரன், சுக்கிரன், குரு போன்ற கிரகங்களின் ஆதிகத்திற்கு உட்பட்டு இவர் பிறந்து உள்ளார்.  இவர் 10 – க்குரியவர் சந்திரனாகி 2 – இல்  உள்ள சுக்கிரன் கேதுவைப் பார்ப்பதால் இவர் நாவன்மை சொல்லாற்றல் கல்வி என்ற வழியிலேதான் தனது உயர்வுகளை பெற முடியும் என்பதாகிறது.

                ஜாதகத்தை ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களாக உள்ளவைகளின் காரகத்திற்கு தக்கவாறு தனது ஆதிபத்தியத்தின் மூலம் ஜாதகருக்கு தனது பலன்களை தரும் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களில் பலமான கிரகம் எதுவோ அது முதலிடம் வகிக்கும்.  வக்கிரம் அஸ்தானம் பெற்ற கிரகங்களை முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பது சரியாகி வராது.

                ஜாதகரை ஆதிக்கம் செலுத்தும் கிரகங்கள் ஐந்தில மூன்று கிரகங்கள் பலம் குறைந்ததாகவோ நீச்ச அஸ்தமனம் வக்கிரம் பெற்றதாக இருந்து விட்டால் ஜாதகரின் உயர்வு பற்றி சிந்திக்க வழியில்லை.  அவ்வகை ஜாதகம் எந்த அளவில் போக அமைப்பு பொருந்தியதாக இருப்பினும் அந்த யோகத்திற்கு எதிராகவே ஜாதகரின் வாழ்க்கை நிலை அமையும்.

                பிறப்பு காலத்தில ஆதிக்கம் செலத்தும் கிரகங்களின் நட்சத்திரம் ராசிகளில் கோச்சாரத்தில் எந்த பாவாதிபதிகள் வருகிறார்களோ அப்பாவ பலன்கள் உறுதியாக அந்த காலங்களில் நடக்கும்.

                உதாரணம் :-

                ஜாதகரின் பிறந்த கிழமை நாதன் :-                        சந்திரன்

                ஜாதகரின் பிறந்த நட்சத்திரநாதன்:-                        சந்திரன்

                ஜாதகரின் பிறந்த ராசி நாதன்:-                                     சுக்கிரன்

                ஜாதகரின் லக்கின நாதன் :-                                                   சுக்கிரன்

                ஜாதகரின் லக்கினம் நின்ற நட்சத்திரநாதன்:-       குரு

                                          

                சந்திரன், சுக்கிரன், குரு போன்றவர்கள் மூலமே ஜாதகருக்கு பலன்கள் கிடைது வரும்.  ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களோடு ராகு, கேது தொடர்பு பெற்றால் அவர்களும் சேர்ந்து நல்ல தீய பலன்களை தங்கள் மூலம் தர தகுதி பெற்றவர்களே.

                உதாரணமாக எடுத்துக்கொண்ட ஜாதகருக்கு சந்திரன், சுக்கிரன், குரு போன்றவர்களும் இவர்களோடு சேர்ந்த ராகு, கேதுக்களும் சேர்ந்து நல்ல தீய பலன்களைத் தர தக்கவர்களாக சந்திரன், சுக்கிரன், குரு, ராகு, கேது போன்றவர்கள் வருகிறார்கள்.  இவர்கள் மூலமே ஜாதகருக்கு பலன்கள் கிடைக்கும்.

                உதாரணமாக எடுத்துக் கொண்ட ஜாதகருக்கு பலன் தர அதிகாரம் பெற்றவர்களாக வரும் கிரகங்கள் சந்திரன், சுக்கிரன், குரு, ராகு, கேதுவும் இவர்களுடைய நட்சத்திரங்களும் ஆகும்.  இவருக்கு ரோகிணி, அஸ்தல்ம், திருவோணம், பரணி, பூரம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அசுவனி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் கோச்சாரத்தில்.

                லக்கினாதிபதி வரும்போது சாதனைகளை செய்வது மகிழ்ச்சி பாராட்டு, பிறர் பணம் கிடைப்பது நெடும் பயணம் ஏற்படுவது பிரசங்கம் மேடை பேச்சு போன்றவைகளும், 2 – ஆம் பாவாதிபதி வரும்போது வருமானம் வருமானத்திற்காக வாய்ப்பு, குடும்ப காரியங்கள் கடன் தீர்தல் அல்லது குறைத்தலும் நாவன்மை சொல்லாற்றலும்.

                3 – ஆம் பாவாதிபதி வரும்போது அன்னியர்கள், தொடர்பு, சகாயம், குறுகிய பயணம், காரிய வெற்றி யோக பாக்கியம் உடன்பிறப்பு வகை காரியங்களும்.

                4 – ஆம் பாவாதிபதி வரும்போது தன் சுகம் அதிகரித்தலும் நிலம், வீடு, வாகன சேர்க்கை அவ்வகை காரியங்களும் தாய் வகை பிரச்னைகளையும் தரும் மற்றும் நான்காம் பாவ விசயங்கள்.

                5 – ஆம் பாவதிபதி வரும் போது தெய்வீக உபசானா வகையில் சிறப்பு புகழ், பதவி, கீர்த்தி, புத்திர உற்பத்தி அவ்வகை சிந்தனை அவர்களுக்கு நற்காரியங்களை செய்வது மற்றும் ஐந்தாம் பாவ விசயங்கள்.

                6 – ஆம் பாவாதிபதி வரும்போது கடன் கிடைத்தல், உடல்உபாதை, தந்தைக்கு ஆயுள் பயம் தொழில் வாய்ப்பு திருட்டுத்தனமான காரியங்களை செய்தல், செய்யத்தூண்டுதல், பொருள்களை விற்று செலவுகளை சமாளித்தல் எதிர்பாராத தனம் கிடைத்தல் மற்றும் ஆறாம் பாவ விசயங்கள்.

                7 – ஆம் பாவாதிபதி வரும்போது அப்பாவ விசயங்களும் இதே போல் 8, 9, 10, 11, 12 – ஆம்பாவதிபதிகள் வரும்போது அப்பாவ பலன்களையும் பெறுவார்.

                மேலே சொல்லும் நட்சத்திரங்களில் வரும் கிரகங்களில் வரும் கிரகங்களின் தன்மைகேற்ப பலன்கள் கிட்டும்.  சந்திரன் மேற்படி நட்சத்திரங்களில் வரும் நாளிலும் பலன்கள் நடைமுறையில் வரும்.

                ஒருவரின் ஜாதகப்படி ஆதிக்கம் செலுத்தி தன் மூலம் பலன்களை தர தகுதி பெற்ற கிரகங்களின் நட்சத்திரங்களில் 2, 6, 10 – க்குரியவர்கள் கோச்சார காலத்தில் வரும்போது சிறப்பு மிக்க பலன்களை பொருள் வசதி, தன விர்ததி, ஆதாயம், காரிய ஜெயம் தொழில் வாய்ப்பு, பதவி, புகழ், விருது, பாராட்டு சத்காரியங்கள் நடைமுறையில் வருவதைப் பார்க்கலாம்.

                வக்கிரம், நீச்சம், அஸ்தமம் பெற்ற கிரகங்கள்,  பாதகாதிபதியாக உள்ள கிரகங்கள், 3, 4, 12 – ஆம் பாவாதிபதிகள் வரும்போது பல பாதிப்பான பலன்களை பெறுவர்.

                ஆதிக்கத்திற்க உரிய பலன்களை தன் மூலம் தகுதி பெற்ற கிரகங்கள் 1, 2, 5, 6, 10 – க்குரியவர்களாக இருந்து விட்டால் அந்த ஜாதகர் மிக உயர்ந்த ஜாதகராக இருப்பார்.  இந்த ஜாதகர் எப்போதும் நன்மையான பலன்களையே பெறுவார்.  இந்த நிலையைப் பெற்றவர்கள் புண்ணியம் பெற்ற பிறவிகளே.

 41

 நட்சத்திர இயக்கம்.

                லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரகத்தின் காரகம் ஜாதகருக்கு பயன் தராது அல்லது அந்த காரகம் இல்லாமல் போய்விடும் அல்லது மிகவும் பாதிக்கும்.

                தசாநாதன் அல்லது புத்திநாதன் அல்லது சந்திர நாதன், நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையாகத் திரமாக பிறந்த நட்சத்திரம் வந்தால் சுப பலன்கள் இருக்காது.  அந்த திசாபுத்தி அந்திர காலங்கள் பாதிப்பே.  ஜாதகருக்கு எந்த பலனும் இருக்காது.

                திசாநாதன், புத்திநாதன் அல்லது சந்திர நாதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் கோச்சாரத்தில் எந்த கிரகம் வருகிறதோ அந்த கிரகத்தின் காரகம் ஆதிபத்தியம்  ( பாவ பலன்கள் ) பாதிப்படையும்.

                திசாநாதன் சாதகமான நட்சத்திரத்தில் இருந்து புத்தி நாதன் எதிரிடை நட்சத்திரத்தில் இருந்தால் கிரகங்களின் நைசர்க்க பலத்தை பொறுத்து பலன் சொல்ல வேண்டும்.

                                                                                                                                                             *  ஜெனன காலத்தில் உள்ள ஒரு கிரகத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் கோச்சாரத்தில் கிரகம் சஞ்சரிக்கும் போது அக்கிரக ஆதிபத்தியம் மூலம் பாதிப்பை தரும் ( உ.ம் ) ஜெனன காலத்தில் செவ்வாயின் எதிரிடை நட்சத்திரத்தில் 6 – ஆம் பாவாதிபதி கோச்சாரத்தில் வரும்போது அந்த ஜாதகருக்கு சகோதர வகையில் இடையூறுகள், குழப்பம், பாதிப்பு எதிர்ப்பு நோய் தொல்லைகள் காணும்.

                லக்னம், 4, 9 பாவாதிபதி லக்கானாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தில் இருந்தால் கிரகங்கள் எவ்வளவு வலுப்பெற்று இருந்தாலும் யோகத்தை தராது.  இவ்வமைப்பில் ஜனித்தவன் குடும்பம் சிதறுண்டு போகும்.  நிலம், வீடு, வாகன பலம் சேதம்.  தாய், தந்தை வகையில் பாதிப்பு தொல்லை தாய், தந்தை விட்டு பிரிந்து சென்று விடும் நிலை ஆகிய பலன்கள் கடுமையாக நடக்கும்.

                * லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் நின்ற எதிரிடை நட்சத்திரத்தில் 2 – ஆம் பாவாதி இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குடும்பத்தை விட்டு பிரிதல் பண தட்டுப்பாடு, பண்த்தொல்லை, கண் கோளாறு, பல வகையில் பாதிப்பு திருட்டு பயம், நீச்ச வார்த்தை பேசுதல், திக்கி பேசுதல், வாக்கு நாணயம் தவறுதல் வழக்கு வியாஜ்ஜியங்கள் ஏற்படுதல்.

                *லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரங்கள் அதன் திரிகோண நட்சத்திரங்களில் 3 . ஆம் பாவாதி நின்றால் உடன்பிறப்பு வகையில் பகை பிரயாணத்தில இடையூறு உயிருக்கு உயிரான நண்பர் இழப்பு, பாக, தகாத இச்சைகள், அதனால் அவமானம், தகாத, கெட்ட, பழைய உணவு வகைகளை உண்ணுதல், காரிய தடை, வீரிய பலம் கெடுதல், உடல்நிலை சரிவர இருக்காது.  தனிப்பட்ட சுகங்களை பாதிக்கும்.  சகோதர வகை பிரயோசனப்படாது.  தொண்டை, காது சம்பந்தப்பட்ட வியாதிகள் தாக்கும்.

                லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் அல்லது அதன் திரிகோண நட்சத்திரத்தில் 5 – ஆம் பாவாதிபதி இருந்தால் பூர்வீக சொத்துகளில் வில்லங்கம், வழக்கு வியாஜ்ஜியங்கள், திருமண விஷயத்தில் கோளாறு, புத்திர தோஷம், மத்திம வயதில் புத்திர, புத்திரிகளை இழந்து புத்திர சோகம் அடைதல் மனக் கோளாறு காதல் தோல்வி, லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தில் 6 – ஆம் பாவாதிபதி இருந்தால் பட்டப்படிப்பு தடைபடுதல், கடுமையான நோய் தொல்லைகள் வேண்டாத வேலைகளை செய்து மாட்டிக் கொள்ளுதல் அகால போஜனம், திருட்டு, பொருள்களை பறி கொடுத்தல், திருடர்களால் ஆபத்து, சிறை பயம், கடன் தொல்லையில் சொத்துக்கள் இழப்பு, தாய் வழி மாமன் விருத்தி இல்லாமல் போகுதல் எதிரிகளால் பயம், மூத்த உடன் பிறப்புக்கு மதிப்பு,ஆயுள் பயம்.

                லக்னாதிபதி நின்ற நட்த்திரங்களில் எதிரிடைய நட்சத்திரத்தில் அதன் திரிகோண நட்சத்திரங்களில் 7 – ஆம் பாவாதிபதி இருந்தால் களத்திர ஹானி, இல்வாழ்வில் குழப்பம் கூட்டு தொழில் பங்கம் பெண்களால் அப கீர்த்தி கணவன் மனைவியிடையே கருத்து வேற்றுமை, கலப்பு மணம் புரிதல், தாயாரின் சொத்து வகையில் குழப்பம், நீண்ட ஆயுளுக்கு பங்கம், காம இச்சையால் தவறான வழியில் செல்லுதல் இரகசிய நோய், அதில் அவமானம் ஒப்பந்தம் குத்தகையில் பாதிப்பு நஷ்டம்.

                லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தில் எதிரிடை நட்சத்திரத்தில் அதன் திரிகோண நட்சத்திரத்தில் 8 – ஆம் பாவாதிபதி இருந்தால் செயற்கை மரணம்.  நீர், நெருப்பு கயிறால் பயம், நம்பிக்கை, மோசம் வழி கெட்ட பெயர் எடுத்தல், எதிரிகளால் பயம், கடத்தப்படுதல், பலாத்காரம், அறுவை சிகிச்சை, தொத்து நோயால் தொல்லை, கற்பழிப்பு, ஜெயில் தண்டனை, கீழே விழுதல், கீர்த்தி பங்கம் முதலியவை உண்டாகும்.

                * லக்னாதிபதி எதிரிடை நட்சத்திரத்தில் அதன் திரிகோண நட்சத்திரங்களில் 9 – ஆம் பாவாதிபதி இருந்தால் பாக்கியம் இழப்பு, பதவி பறிபோதல், அவமானம் நாஸ்திக தன்மை, கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் தோல்வி, கெட்ட ஆவிகளால் தொல்லை, தந்தை , தந்தை வகை விரோதம், ஆபத்து கண்டம், கடல் ஆகாய பயணங்களில் ஆபத்து, தந்தையின் உடல் நிலை உயர்வு நிலைகளில் பாதிப்பு சொத்து வகையில் தகராறு பாதிப்பு.

                லக்னாதிபதியின் எதிரிடை நட்சத்திரங்களில் அதன் திரிகோண நட்சத்திரங்களில் 10 – பாவாதிபதி இருந்தால் தன் பெற்றோர்களுக்க தன்னை சேர்ந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கரும சடங்குகள் செய்ய முடியாமற் போகுதல் நிலையான தொழில் இல்லாமை, சமூக பணிகளில் கெட்ட பெயர், ஸ்தல யாத்திரைகளில் பாதிப்பு, பட்டம் பதவி இழப்பு, மூத்தவர்களுக்கு ஆபத்து, தொழில் பிடிப்பற்ற நிலை.

                * லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடைய நட்சத்திரத்தில் அதன் திரிகோண நட்சத்திரங்களில் 11 – ஆம் பாவாதிபதி இருந்தால் இன பந்துக்களால் தொல்லை எடுத்த காரியத் தோல்வி, உடல் பாதிப்பு, தாயின் நீண்ட ஆயுள் கெடுதல், மருமகன், மருமகளால் தொல்லை, கடிதங்கள் மூலம் வருத்தம், எதிரியால் தோல்வி, மூத்த சகோதர வகையில் திருப்தியற்ற நிலை அல்லது இல்லாமை 2 – ஆம் தாரத்தினால் விவகாரம், பாட்டன், பாட்டிமார்களால் தொல்லை பாதிபபு போன்றவை உண்டாகும்.

                லக்னாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தில் திரிகோண நட்சத்திரங்களில் 12 – ஆம் பாவாதிபதி இருந்தால் தூக்கம் இன்மை, படுக்கை சுகம் கெடுதல், தொலை தூர பயணத்தால் பாதிப்பு, பரதேச வாசம், மோசடி, பிரிவிணை, ராஜ துரோக செயல்கள் சிறை பயம், கீழ்தரப்பட்ட ஆட்களால் ஆபத்து, மிருக பயம், உடல் பங்கம், சூறையாடுதல், கொள்ளை அடித்தல் அரசாங்க விரோத காரியத்தால் பயம், இடக்கண் கோளாறு, தேகத்தில் இடது பாகம் கோளாறு, கால் பாதம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

                *தனகாரகன் அல்லது தனாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தில் ராசியாதிபதி செல்லும் போது தன நஷ்டம் திருட்டு பயம், சோரபயம் போன்றவை ஏற்படும்.

                திசா நாதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்களில் கோச்சாரத்தில் எந்த பாவாதிபதி சஞ்சாரம் செய்கிறாரோ அக்காலத்தில் அப்பாவ சம்பந்தப்பட்ட விஷயங்கள் மூலம் பாதிப்பு ஏற்படும்.  இப்பாதிப்பு திசா நாதன் நட்சத்திரத்திலோ அப்பாவதிபதிகளின் நட்சத்திரங்களிலோ அதன் திரிகோண நட்சத்திரங்கள் வரும் நாளில் ஏற்படும் இதன்படி புத்தி நாதனுக்கும் அந்திர நாதனுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *