38

கோள்களின் கோலாட்டம் – 1.12 நட்சத்திர பாவ ஆய்வு

45

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.              

சூரியன் நின்றால்:-  தந்தை வகை ஆதரவு சுகம் சொத்து வகைகள் கிடைப்பது அரிது.   அரசாங்க வகையால் தொல்லைகள் கண், எலும்புகளில் பாதிப்பு அரசு வகை தொழில் இல்லாமை நீடிக்காமை.

 

சந்திரன் நின்றால் :- தாய் வகை ஆதரவு, சுகம் சொத்து வகைகள் கிடைப்பது அரிது.  மனக்கலக்கம், பயம், உடல் பாதிப்பு, ஜலகண்டம், தொழில் வகையில் பல துன்பங்கள், எதிலும் பிடிப்பற்ற நிலை.

 35

செவ்வாய்நின்றால்:- சகோதரர்கள் இல்லாமை, ஒற்றுமைக்குறைவு, பிரிந்து வாழ்வது, இரத்த சம்பந்தமான நோய் தொல்லைகள், நிலம், விவசாய விசயங்களின் பாதிப்பு எதிர்பாராத விபத்து நெருப்பால் பயம்.

 

புதன் நின்றால்:-  மாமன் வர்க நாசம், அவர்களால் நன்மை இல்லாத நிலை கல்வியில் தடை, கற்ற கல்வி கைகொடுக்காத சூழ்நிலை, நரம்பு, தோல் சம்பந்தமான நோய் பயம், தொழில் வியாபாரங்களால் பாதிப்பு.

 33

குரு நின்றால்:- குழந்தைகள் பாதிப்பு அவர்களால் நன்மை இல்லாமை அவர்களால் அவமானம், பொருளாதாரத்தில் சீர்குலைவு, அடிக்கடி பணத்தட்டுப்பாடு, மூளை வளர்ச்சி குறைவு, உயர்ந்த பதவிகளில் வீழ்ச்சி இறக்கம்.

 

சுக்கிரன் நின்றால்:- இல்லற வாழ்வு சிறப்பில்லாமை, கணவன், மனைவி ஒற்றுமைக் குறைவு, விவாக தடை, தாய் வகை பாதிப்பு, மேக ரோகங்கள், பெண்கள் கையில் அபகீர்த்தி பாதிப்பு, துர்நடத்தையால் அவமானம்.

 

சனி நின்றால்:- நீண்ட ஆயுளுக்கு பங்கம் கடுமையான சோதனைகளுக்கு ஆளாகுதல், தோல் – வாதம் போன்ற நோய் தொல்லை சிறை பயம் அபராதம், தகாத நடவடிக்கைகளால் அவமானம் எதிரிகளால் வரும் ஆபத்துக்கள்.

ராகு, கேது நின்றால்:-தாய், தந்தை வர்காதிகளுக்கு குற்றம், தரித்திர தன்மை, பிற மதத்தினரால் பயம், துர்தேவதா தேவதைகளால் பாதிப்பு, மது, மங்கை போன்ற ஈடுபாடுகள் அதிகம்.  வெளியிடங்களில் ஏற்படும் அவமானம்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு.  

சிம்ம லக்னம்

Simmam

                லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற

                நட்சத்திரத்தில் எதிரிடையான நட்சத்திரத்தில்.

 

  சந்திரன் நின்றால்:- தாய், தாய் வகை ஒற்றுமையில் குறைவு, பிரயாணத்தில் பாதிப்பு, இடது கண் கோளாறு, அரசு வகை தொழில் தொடர்புகள் பாதிப்பு, குடும்ப முன்னேற்றம் தடைபடுதல் செய்யும் காரியங்கள் வெற்றி பெறாநிலை, நிலம், வீடு, வாகனங்களால் செலவீனம் பாதிப்பு, குழந்தைகளுக்கு எதிர்பாராத ஆபத்து, ஆயுள்பயம், நாஸ்தீக தன்மை, எதிரிகள் வீழ்ச்சி, கணன், மனைவி விரோத நிலை.

செவ்வாய் நின்றால்:- உடன் பிறப்புக்களால் வரும் தீங்கு, ரத்த சம்பந்தமான பாதிப்புகள், வீண் சண்டை, நிலை, வீடு, வாகன விசயமின்மை திடீர் வீழ்ச்சி, தாய் – தந்தை வகை சொத்துக்கள் இழப்பு, பூர்வீக சொத்து விரையம், எதிரிகள் பலம் பெறுதல்.

 புதன் நின்றால்:- பொருளாதார வீழ்ச்சி, எத்தொழிலும் விருத்தயாகாமை, லாபம் பெற முடியாமை, மூத்த சகோதர வகை பாதிப்புகள், மாமன் வகை குற்றங்கள், உடன் பிறப்பின் பாக்கியங்களுக்கு பங்கம், விரையம், தாய்க்கு ஆயுள் பயம், புத்திர புத்திரிகளின் இல்லறம் தொழில் பாதிப்புகள் எதிரிகளுக்கு ஏற்படும் பங்கம் மனைவிக்கு அல்லது கணவனுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்.

குரு நின்றால்:-  குழந்தைகளுக்கு எதிர்பாராத வகையில் பாதிப்புகள், பூர்வீக சொத்தால் வரும் தொல்லைகள் அச்சொத்து விருத்தியில்லாமை, தெய்வீக விசயங்களால் வரும் இடையூறுகள் மனக்குழப்பம் கௌரவ குறைவு அதிர்ஷ்டமில்லாத நிலை, விபத்துக்களால் ஏற்படும் செலவீனம், பயம் தந்தை இழப்பு, அவருக்கு ஏற்படும் பாதிப்புகள் தொழில் முடக்கம்.

சுக்கிரன் நின்றால்:- பெண்கள் வகையில் ஏற்படும் அவமானம், காதல் தோல்வி, இல்லற வாழ்வு பாதிப்பு, வீரிய பலம் இல்லாத நிலை, தொழில் வகையில் ஏற்படும் தடைகள், குடும்பத்தில் உள்ள பொருள்கள் உடமைகளுக்கு சேதம், உடன் பிறப்பிற்கு ஏற்படும் கணடாதி தோஷங்கள், பிரயாணங்களில் வரும் பயம், நிலம், வீடு வாகன இழப்பு குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு, மனைவி அல்லது கணவனின் பாக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்பு, ஜாதகனுக்கு எதிர்பாராமல் வரும் ஆயுள் பயம்.

 சனி நின்றால்:-  கணவன், மனைவி ஒற்றுமையில் பாதிப்பு, மனைவி வகையினரின் எதிர்ப்புகள், வாத வாயு ரோகங்கள், உடல் ஹீனம், தேக பங்கம், தந்தையின் தொழில் ஜீவனம் பாதிப்பு, உடன் பிறப்பிற்கு புத்திர தோஷம், பூர்வீக சொத்தால் பாதிப்பு, நிலம், வீடு, வாகன விசயங்களால் பொருள் இழப்பு, குழந்தைகளின் முன்னேற்றம் தடைபடுதல், தொழிலில் தடை.

 ராக நின்றால்:-  பொருளாதார பாதிப்பு, பிற மதத்தினரால் வரும் கெடுதல் விஷபயம், மாந்திரீக தொல்லை அறுவறுக்கத் தக்க நோய்கள் மன பேதம், செயற்கை மரணம்.

கேது நின்றால்:- நாஸ்தீக தன்மை.  பிற மதத்தினால் வரும் பயம் தொல்லைகள், விஷ ஜந்துக்களால் வரும் ஆபத்து, துர்தேவதா சேஷ்டைகளால் வரும் பாதிப்பு கெட்ட ஆவிகளின் தொல்லை.

கடக  லக்னம்.

kadakam

                லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.

 சூரியன் இருந்தால்:- பிதா தனகுறைவு, கண் கோளாறுகளால் பாதிப்பு, தந்தை வழி குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடும் சொல்லால் அவமானம், குழந்தைகளால் ஈமக்கிரிகை செய்ய முடியாத நிலை, தாய் சுகம் கெடுதல், மனைவிக்கு இரகசிய நோய்.

செவ்வாய் இருந்தால்:-புத்திரர் அற்பம், புத்தி சுவாதினம் அற்ற குழந்தைகள், பாக்கியம் பிரயோசனப்படாமல் போகுதல், இரத்த காயம், விபத்து, தொழிலில் மறைமுக எதிரிகளால் இழப்பு, அவமானம், நஷ்டம், சகோதர பலம் குறைதல்.

புதன்இருந்தால்:-அம்மான்வர்க்கத்தாருக்கு பிரயோசனம் இல்லாமை சகோதரர்கள் பிரிந்திருத்தல் நாடோடி தன் ஊரைவிட்டு வெளியேறுதல், சுயஸ்தானத்தில் தங்காமை, வித்தை பங்கம், இரகசிய மனவருத்தல், நிலையான புத்தி இல்லாமை, எப்போதும் சுயநலக்காரர்களால் சூழ்ந்திருத்தல்.

குரு இருந்தால்:-எதிரிகளால் அபாயம், மறைமுக நோய், பாக்கியம் இல்லாததிருத்தல், கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத நிலை, கடன் தொல்லை பிதா ஆதரவு இல்லாதிருத்தல், மேலோர் சாபம்.

சுக்கிரன் நின்றால்:-களத்திர சுகம் கிட்டாமை, இரகசிய தொடர்பு அதனால் அவமானம், கீர்த்தி பங்கம், மாதா சுகக் குறைவு, மாதவின் ஆதரவு இல்லாதிருத்தல், வீடு நிலம், வாகனங்களால் கண்டம், நஷ்டம் எப்போதும் சுகக்கேடு.

சனி இருந்தால்:-ஆயுள் பீதி, அங்க ஹீனம், மரணத்திற்கு ஒப்பான வேதனையை நித்தமும் அனுபவித்தல், மனைவியை பிறர் கொண்டு செல்லல், திருமணத்தினால் அவமான, இல்லறத்தினால் சுகம் கிட்டாமை.

ராகு இருந்தால்:-பாட்டன் வகையில் இலாபின்மை, மருந்து மாந்தீரிகத்தால் பீடை, முன்ஜென்மம் தோஷம், அதனால் ஏற்படும் விவகாரம், கோணல் புத்தி, சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால்:-சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

மேச, விருச்சிக லக்னம்:-

com

 

லக்கினாதிபதி செவ்வாய் ஆகி அவர் இருந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில்

    சூரியன் இருந்தால்:- புத்திரர்களால் இலாபமின்மை தேவையான நேரத்தில் புத்தி செயல்படாமை, செய் தொழில் நஷ்டம், விரும்பாத தொழில், ராஜ்ஜிய விரோதம், அரசாங்க  சம்பந்தப்பட்ட செயல்களில் அவமானம், தனித்திருத்தல், குடியினால் மனம் பேதலித்தல்.

சந்திரன் இருந்தால்:- மாதா குண தோஷம், தந்தைக்கு இரண்டு தார நிலை உடல்நல குறைவினால் தாயின் மனோநிலை சரியில்லாமை, ஊன, ஈன பெண்களின் தொடர்பு தன் நிலைக்கு ஒவ்வாத காரியத்தை செய்தல்.

 புதன் இருந்தால்:- கண்டம், விபத்து, சகோதர ஒற்றுமை குறைவு, புத்திரர் கலகம், அற்பம், அம்மான் வர்க்கத்தாருக்கு கெடுதல், தனித்திருத்தல், முறையற்ற வழியில் வந்த லாபத்தினால் வந்த கெடுதி.

குரு இருந்தால்:- வித்தை குறைவு, அன்னிய தேச வாசம், பாக்கிய நஷ்டம், தனம் எப்போதும் நில்லாமை, குடும்பத்தில் கோளாறு, பிராமண சாபம், கையாடல் மோசடி.

சுக்கிரன் நின்றால்:- ஒழுக்கம், குறைவுள்ள களத்திரம், அதனால் நஷ்டம், தம் எப்போதும் நில்லாமை, குடும்பத்தில் கோளாறு, பிராமண சாபம், கையாடல் மோசடி.

சனி இருந்தால்:- எக்காரியத்திலும் லாபமின்மை, ஈனத்தொழில், அதிக பிரயாசை உழைப்பினால் நஷ்டம், சகோதரர்களால் பீடை கலக்கம், கீழ் சாதியினரால் அவமானம், கண்டம் விபத்து ஙிணீநீளீ றிணீவீஸீ  அதனால் ஏற்படும் கோளாறுகள்.

 ராகு இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

 கேது இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

மிதுன ,கன்னி லக்கினம்.

comm1

 

    லக்கினாதிபதி, புதனாகி அவர் இருந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில்

   சூரியன் இருந்தால்:- அற்ப சகோதரம் , சகோதர ஒற்றுமை குறைவு, அரசாங்க அவமரியாதை சகோதர பிரிவு தந்தையின் ஆதரவு இல்லாதிருத்தல், தந்தையின் செல்வ நிலை நாளுக்கு நாள் தேய்தல்.

சந்திரன் இருந்தால்:- எப்போதும் குடும்பத்தில் குழப்பம், வார்த்தை மாறுதல், செய் தொழிலில் திருப்தியின்மை, பொருளாதார சிக்கல், எப்போதும் அந்நியரை சார்ந்திருக்கும் நிலை.

செவ்வாய் இருந்தால்:- எதிரிகளால் ஆபத்து, மறைமுக நோய், நோயின் தாக்கம் எப்போதும் அதிகமாய் இருத்தல், மூத்த சகோதரருடன் பிணக்கம், ஆபத்து, தொலைதூரம் செல்லுதல்.

குரு இருந்தால்:- தாயின் ஆசையை நிறைவேற்ற இயலாமை, வீடு அமைப்பினால் ஏற்படும் தோஷம், தொழிலினால் லாபமின்மை, பிறர் லாபம், ஏமாளித்தனம், சூது வஞ்சனை குறையுள்ள உள்ளம், அதிகார துஷ்பிரயோகம்.

சுக்கிரன் இருந்தால்:- புத்திரர்களால் தொல்லை, அவமானம் சந்ததி இல்லாதிருத்தல், மனக்கட்டுப்பாடு இல்லாமை, போக சுகம் அற்று போதல், அதனால் ஏற்படும் மனஇறுக்கம், அந்நிய தேச வாழ்க்கை, களத்திரம் அமைய தாமதமாகுதல் அதனால் ஏற்படும் அவமானம், கூட்டாளிகளால் நஷ்டம்.

சனி இருந்தால்:- ஆயுள் பீதி, மலடு தன்மை, அற்ப புத்திரம், எதிரிகளால் அவமானம், ஆயுத பயம், ரண சிகிச்சை, பிரயாண ஆபத்து, தந்தைக்கு பீடை.

ராகு இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

 கேது இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

 

தனுசு ,மீன ,லக்கினம்.

Comm2

லக்கினாதிபதி குருவாகி உள்ள தனுசு, மீன

லக்னதாரர்களுக்கு லக்னாதிபதி இருந்த

 நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில்

 

சூரியன் இருந்தால்:-பிதாவிற்கு பாதிப்பு, புண்ணிய யாத்திரைகள் தடைபடல், நோய், கடன் தொல்லை, இரகசிய விரோதிகளால் ஆபத்து துக்கம்.

சந்திரன் இருந்தால்:-தாயின் உடல் நலக்குறைவு கண்டம், விபத்து அவமானம், பெரியோரை நிந்தித்தல், சுபசோபன விஷயங்களில் தாமதம் புத்திரர்களால் அவமானம், புத்திர நாஸ்தி.

செவ்வாய் இருந்தால்:-ரண சிகிச்சை, ஆயுத பயம், ஊர் ஊராக சுற்றுதல், தீயோர் சூழ்ந்திருத்தல், இரகசிய மணம், தீய வழிகளில் நாட்டம், பாவ செய்கையுடைய புத்திரர்கள், துர்குணமுடைய புத்திரர்கள், தனக்குறைவு, வாக்கினால் அவமானம், குடும்பத்தில் கலகம்.

 புதன் இருந்தால்:-வித்தை பங்கம், விபரீத பழக்கம், சுகக்குறைவு, களத்திர ஹானி, அலிகளின் சேர்க்கை, செய்தொழில் பங்கம், விபரீத புத்தி, சேஷ்டை அதிகம்.

சுக்கிரன் இருந்தால்:-இரகசிய வியாதியினால் தொல்லை, மிக குறைந்த வயதுள்ள பெண்களின் சேர்க்கையால் அவமானம் அந்தஸ்து இழத்தல், மூத்த சகோதரர் பிரிவு.

சனி இருந்தால்:-நாணயம் கெடல், சகோதரர் ஒற்றுமை குறைவு, ஆண் தன்மை குறைதல், கோழைத்தனம், ஈகை குணம் இல்லாதிருத்தல், வஞ்சம் பொய் சூது எண்ணங்கள் எப்போதும் குடி கொண்டிருத்தல், மித மிஞ்சிய குடி அதனால் ஏற்படும் அவமானம்.

ராகு இருந்தால்:-சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால்:-சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

ரிஷப, துலா லக்னம் .

comm3

லக்னாதிபதி சுக்கிரன் இருந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான   நட்சத்திரத்தில்.                                                                         

 சூரியன் இருந்தால்:-  தாயால் துக்கம், தாய், தந்தையர் பிரிந்திருத்தல், அரசாங்கத்தாரால் தொல்லை, வாகன நஷ்டம், மூத்த சகோதரர்களால் கடும் தொல்லை, தந்தையின் செல்வ நிலை பாதிப்பு.

 சந்திரன் இருந்தால்:- மனோ வியாகூலம், ஸ்திர புத்தி இன்மை, சஞ்சல மனம், தாய்க்கு ரோகம், ஊன ஈன புத்திரர்களால் ஆண், வாரிசு இல்லாமல் குழந்தைகளால் துக்கம் சகோதரி பாதிப்பு.

செவ்வாய் இருந்தால்:- இரத்த சம்பந்த தொடர்பு அறுந்து போதல், ஆயுத ரணங்கள், கொடூர செய்கை, தன வீழ்ச்சி குடும்ப சுக குன்றுதல், சொன்ன வார்த்தையை காப்பாற்றாமை, ஈன களத்திரம், அந்நிய குல சம்பந்தம், விபரீத உறவு சுய தேசத்தை விட்டு வெளியேறுதல்.

புதன் இருந்தால்:- தர்க்க வாதத்தினால் அவமானம், செல்வமின்மை, தீயோர் தொடர்பு, சிறைபடுதல், பிதாவின் ஸ்தானம் பங்கமடைதல், இளைய தார பிள்ளைகளால் தொல்லை, அதனால் அவமானம், தற்கொலை சிந்தனை.

குரு இருந்தால்:- பிராமண தோஷம், விபரீத வித்தை தக்க சமயத்தில் வித்தை மறந்து போதல், அதனால் அவமானம், தன நிலையில் வீழ்ச்சி, கண்டம், விபத்து, அவமானம், இரகசிய செய்கையால் வேதனை.

சனி இருந்தால்:- நீச தேவதைகளின் தொல்லை, அந்தஸ்திற்கும் அறிவிற்கும் சம்பந்தம் இல்லாத தொழில் அதனால் பாதிப்பு இறை சக்தி இல்லாமை.

 ராகு இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

 

மகர  கும்ப லக்னம் .

comm4

 

 

                லக்னாதிபதி சனிபகவான் இருந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான    நட்சத்திரத்தில்                                                                           

சூரியன் இருந்தால் :-  தந்தை மகன் உறவு பாதிப்பு, களத்திர துக்கம், விபத்து அவமானம், ஆறாத காயம், நித்திய ஈனம், அரசாங்க சம்பந்தப்பட்ட அனைத்திலும் தோல்வி துக்கம்.

சந்திரன் இருந்தால் :-  தாயால் அவமானம், தாய்க்கு ரோகம், சபல புத்தி உடைய களத்திரம், ஸ்திர புத்தி இல்லாமை, மிக விரைவில் நோய் வாய்ப்படும் களத்திரம்.

செவ்வாய் இருந்தால் :-  வீடு நிலம் வாகனம் போன்றவற்றில் பாதிப்பு, சகோதரர்களால் பீடை, துக்கம் அதிக செலவு அதனால் அவமானம் எதிலும் லாபமின்மை, செய் தொழில் பாதிப்பு.

 குரு இருந்தால் :-  தன நஷ்டம், திரவிய லாபம் இல்லாதிருத்தல், மேலோரால் தொல்லை, சகோதர வகை பிரிவு, நஷ்டம், வித்தை குறைவு, வலது கண் ரோகம்.

சுக்கிரன் இருந்தால்  :-  விபரீத காமம், முறையற்ற புணர்ச்சி, தாய், தந்தையர் ஒற்றுமை குறைவு குடும்ப கலகம், வாகன நஷ்டம் ஆபத்து, வீடு மனையோகம் இல்லாமை, வெட்டி செலவு, கலைகளில் ஈடுபாடு கூட்டி கொடுக்கும் குணம்.

ராகு இருந்தால்  :-  சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால் :-  சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

நட்சத்திர சாதக நிலை

சிம்ம லக்னம்

Simmam

சூரியன் லக்கினாதிபதியாகி அவர் நின்ற நட்சத்திரத்தின்

சாதகமான நட்சத்திரத்தில்

சந்திரன் இருந்தால்:-  நல்ல அயன சயன சுகம் கிடைக்கும்.  தாய்க்கு ஆயுள் பலம், அடிக்கடி பிரயாணங்கள் கிட்டும்.  சுபகாரிய செலவுகள் காணும்.  நல்ல காரியங்களுக்கு பணம் செலவிடுவர்.  மன அமைதிக்கான சூழ்நிலைகள் ஏற்படும்.  சகோதரர்களின் தொழில் விருத்தியாகும்.  தாய் வகை பாக்கியம் கிடைக்கும்.  குழந்தைகளுக்கு ஆயுள் பலம் ஏற்படும்.  பட்டம் பதவிகள் ஏற்படும்.  நல்ல பொருள் கிட்டும்.

செவ்வாய் இருந்தால்:-வீடு, மனை, வாகன அமைப்பு உண்டாகும்.தந்தையின் உடல்நிலை, ஆயுள் பலம் நன்றாய் அமையும்.  தர்ம காரியங்களை அடிக்கடி செய்ய சந்தர்ப்பம் அமையும்.  களத்திர வர்க்க உறவினர்களால் லாபம் கிட்டும்.  தாய், தந்தையர் ஒற்றுமையுடன் இருப்பர் குழந்தைகளுக்கு வெளி தேச வாசம் ஏற்படும்.  சகோதரர்களுக்கு தன லாபம் உண்டாகும்.

 புதன் இருந்தால்:- தன தான்ய லாபம் கிட்டும்.  செய் தொழிலும் அதிக லாபம் வரும்.  கலைகளில் தேர்ச்சியும் அம்மான் வர்க்கத்தார்க்கு மேன்மையும் உண்டாகும்.  சகோதரர்கள் சுபகாரியத்தை முன்னிட்டு தன விரயம் செய்வர்.  மூத்த சகோதரர் உறவு நல்லபடியாய் அமையும்.  தாய்க்கு தனலாபமும் தந்தைக்கு சகோதரர்களால் ஆதாயமும் உண்டாகும்.

 குரு இருந்தால்:-நல்ல சற்புத்திர அமைப்பு ஏற்படும்.  எதிர்பாராத தனவரத்து திடீர் என ஏற்படும்.  கல்வி கேள்வி சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் மறைமுக சாஸ்திரங்களில் தேர்ச்சியும் ஏற்படும்.  நீண்ட ஆயுளும் தெய்வ பலமும் மிகும்.

சுக்கிரன் இருந்தால்:-அதிக தைரியமும், வீரியமும் உண்டாகும்.  போகம் மிகுந்த வாழ்க்கை உண்டாகும்.  கலைகளில் தேர்ச்சியும் கலை சம்பந்தப்பட்ட துறைகளில் ஜீவனமும் அமையும்.  பெண் சகோதரர்களால் லாபம் உண்டாகும்.  தந்தையின் தன நிலை மேலோங்கும்.  களத்திர வர்க்கத்தாரால் மேன்மையுண்டாகும்.

சனி இருந்தால்:-களத்திரத்தால் ஆதாயம் ஏற்படும்.  நோய் அணுகாது.  மறைமுக எதிரிகள் மறைவர்.  தனக்கு கீழ்ப்பட்டவர்களின் ஆதாவு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

ராகு இருந்தால்:-எதிர்பாராத யோகம், கடின உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வரும் நிலை.  ஒய்வில்லாமல் சிந்திக்கும் ஆற்றல், எவ்வகை தொழிலிலும் நுழைந்து, திறமையுடன் செயல்படும் ஆற்றல், அந்நிய நாட்டின் தொடர்புகள்.  பிற மதத்தினரின் அரவணைப்பு.

கேது இருந்தால்:-ஞானம் புத்தி, தெய்வீக தன்மை, மத கலாசாரங்களில் பற்று, எதையும் சிந்திது செயலாற்றும் திறன் மறைமுக சக்திகளின் தூண்டுதலால் ஏற்படும் நன்மைகள், பலவகையான ஸ்தல வழிபாடுகள், சாஸ்திர ஞானம் மந்திர சித்தி, அமானுஷ்ய சக்திகளால் ஏற்படும் லாபம்.

கடக லக்னம்

kadakam

லக்னாதிபதி சந்திரனாகி சந்திரன் நின்ற நட்சத்திரத்திற்கு

 சாதகமான நட்சத்திரத்தில்.

 

சூரியன் இருந்தால் :- தன தான்ய சம்பத்து சேர்க்கை, நல்ல வாக்கு பலம் அமைதியான மனமகிழ்ச்சி மிக்க குடும்பம்.  தாயின் அரவணைப்பு தந்தைக்கு மிக்க முன்னேற்றம் முதலியவை உண்டாகும்.

செவ்வாய் இருந்தால்:- பெண் சகோதரர்களால் ஆதரவும் அதனால் முன்னேற்றமும், கலைகளில் நாட்டமும் அதில் தேர்ச்சியும், நல்ல தைரியம், பராக்கிரமும் ஏற்படும்.  அது மட்டுமில்லாது வெளிதேச உத்தியோகமும் படகு போன்ற வீடும் அமையும்.  விவசாயத்தில் நல்ல பலன் உண்டாகும். வாகன வசதிகள் ஏற்படும்.

புதன் இருந்தால்:- நல்ல சகோதரர்கள் அமைவார்கள்.  சகோதரர்கள் அனைவருக்கும் நல்ல அந்தஸ்து உண்டாகும்.  கலைகளில் தேர்ச்சியும் – வாயினால் உண்டாகும் அனைத்து தொழில்களிலும் நல்ல பிரபலமும் வெகுமானமும் கலைத்துறையில் நல்ல ஈடுபாடும் ஏற்படும்.  மிகுந்த மேதாவிலாசம் ஏற்படும்.  பிறருக்கு உதவக்கூடிய வாய்ப்பு அதிக அளவு கிட்டும்.

குரு இருந்தால்:- சொல்லுக்கு எதிரிகள் கட்டுப்படும் நிலை ஏற்படும்.  ஆலய நிர்மாண பணிகள் செய்ய வாய்ப்பு ஏற்படும்.  பெரியோர்களின் ஆசி, புண்ணிய நதியில் நீராடும் வாய்ப்பு முதலியவை உண்டாகும்.

சுக்கிரன் இருந்தால்:- பெண்களால் லாபம் நல்ல களத்திரம் கிட்டும்.  தாயின் உடல்நிலை நல்ல நிலையில் இருக்கும்.  வீடு, வாகனம் முதலியவை ஆடம்பரமாய் அமையும்.  எப்போதும் எதிலும் சுகம் அனுபவித்து கொண்டிருக்கும் தன்மை.  எதிலும் வெற்றி, பங்கு வியாபாரத்தில் அதிக அளவு லாபம் அழகிய ரூப லாவண்யம் மிக்க மனைவி அதனால் ஐஸ்வர்யம் முதலியவை உண்டாகும்.

சனி இருந்தால்:- மறைத்து வைத்த தனம் கிட்டுதல், பூர்வ சொத்துக்கள் கிட்டுதல், நீண்ட ஆயுள் தனக்கு மேம்பட்ட அந்தஸ்த்தில் இருந்து மனைவி அமைதல், எத்தொழிலும் தந்தைக்கு நிகரற்ற லாபம் காணுதல், இரும்பு சம்பந்தப்பட்ட வகையில் ஜீவனம் ஏற்பட்டு அதில் நல்ல அந்தஸ்து போன்றவை உண்டாகும்.

ராகு இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

மேஷ ,விருச்சிக லக்னம்.

comm3

செவ்வாய் லக்னாதிபதியாகி செவ்வாய் இருந்த நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தில்

சூரியன் இருந்தால்:-  நல்ல சத் புததிரர்கள் அவர்களால் குலமே பெருமை அடைதல், எத்தொழிலிலும் நிகரற்ற தலைமை ஸ்தானத்தை வகித்தல் அரசியலில் ஆதாயம் அந்தஸ்து, மந்திர உபதேசம் பெறல் ஆன்மீக நாட்டம் சிவபக்தி நல்ல மனோதிடம், அபரிமிதமான மூளை, பலம் முதலியவை உண்டாகும்.

சந்திரன் இருந்தால்:- பூர்வ புண்ணய வசத்தால், அனைத்து யோக பாக்கியங்களையும் அனுபவித்தல் தந்தையின் ஆதரவு மிக பலமாய் இருக்கும்.  தாய், தந்தையர் ஒற்றுமை மிக நன்றாக இருக்கும்.  உயர் கல்வி அமையும்.  கல்வியினால் அந்தஸ்தும், அதனால் லாபமும் உண்டாகும். ஆலயம் புதுப்பித்தல், டிரஸ்டியாய் இருத்தல் போன்ற பல தெய்வீக பணிகளை செய்ய வாய்ப்பு கிட்டும்.  கடல் கடந்து செல்லும் பாக்கியமும் அங்கு புகழ் பெரும் நிலையும் உண்டாகும்.

புதன் இருந்தால்:-  வேத ஞான சாஸ்திரத்தில் அதிக தேர்ச்சி அதனால் லாபம் கண்ணால் பார்த்ததை கையால் செய்யும் ஆற்றல் எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் குணம்.  மூத்த சகோதரத்தால் லாபம், அம்மான் வர்க்கத்தாரின் நிலை உயர்தல், பல மொழிகளில் தேர்ச்சி முதலியவை உண்டாகும்.

குரு இருந்தால்:-தன தான்ய விருத்தி, சொல்லுக்கு மதிப்பு, அமைதியான குடும்ப வாழ்க்கை, சத் புத்திரர்களை பெறும் வாய்ப்பு, மந்திர உபதேசம் பெரியோர்களின் ஆதரவு.  பாக்கியத்தினால் உண்டாகும் லாபம் பெரியோர்களின் நேசம், பக்தி புண்ய ஸ்தலங்களுக்கு வாய்ப்பு, தன புழக்கம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் நிலை.  அந்நிய தேசத்தில தனம் தேடும் நிலை புத்திரர்களினால் ஆதரவு போன்றவை உண்டாகும்.

சுக்கிரன் இருந்தால்:-தன் அந்தஸ்த்திற்கு மேற்பட்ட இடத்தில் இருந்து களத்திரம் அமைதல், அதனால் லாபம், மனம் கோணாமல் நடக்கும் மனைவி அனைத்து சுகங்களும் குறைவற்று அனுபவிக்கும் நிலை, கலைகளில் தீவிர நாட்டம் இசையில் மிகுந்த விருப்பம் நல்ல நண்பர்கள் அமைதல், சகோதரர்களின் வாழ்க்கை மேன்மை அடையும் நிலை போன்றவை உண்டாகும்.

சனி இருந்தால்:-நல்ல வீடு, வாகன அமைப்பு, சகோதரர்களுக்கு லாபம், நல்ல தைரியம் வீரியம் இருக்கும்.  மாதாவிற்கு நீண்ட ஆயுள் நல்ல பொறுப்புள்ள பணிகளில் ஜீவனம் ஏற்படும்.  பழைய பொருட்களை வாங்கி விற்றலில் நிகரற்ற லாபத்தை தரும்.  நியாயம், நீதி, தர்மத்தின் பேரில் ஆழ்ந்த ஈடுபாடு முதலியவை உண்டாகும்.

ராகு இருந்தால்:-சிம்ம லக்னத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால் :- சிம்ம லக்னத்திற்கு சொன்ன பலன்.

மிதுன கன்னி லக்னம்

Comm2

லக்கினாதிபதி புதனாகி புதன் இருந்து நட்சத்திரத்திற்கு

 சாதகமான நட்சத்திரத்தில்.

சூரியன் இருந்தால்:-நல்ல தைரியம், வீரியம், பராக்கிரமம், நல்ல ஆதரவு உள்ள சகோதரர்கள் அரசாங்கத்தில் நல்ல ஆதரவு, நல்ல தூக்கம், திட ஆரோக்கியம் தந்தையின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்தல் பெபாது ஜென்ம தொடர்பால் உண்டாகும் ஜீவனம், அதனால் மேன்மை, இலாபம், அந்தஸ்து முதலியவை உண்டாகும்.

சந்திரன் இருந்தால்:-மாதாவின் ஆதரவு, மிகும், தாய்க்கு நல்ல ஆயுளும் வித்தைகளில் நல்ல தேர்ச்சியும் உண்டு.  குடும்பம் மிக உன்னத நிலைக்கு வளர்ந்து செல்லும், பெரியோர்களின் ஆதரவினால் தனம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.  ஆபரண தொழிலில் நிகரற்ற லாபம் தரும் கலைத்துறையிலும் ஜீவனம் அமையும், அதில் பொருள் சேர்க்கையும் உண்டாகும்.

குரு இருந்தால்:-குடும்பம், கோயிலாக இருக்கும்.  பெரிய குடும்பமாக இருக்கும்.  நிச்சயமாய் மனைவி ஒரு மந்திரியாய் அமைவாள்.  தாயின் ஆதரவும் அன்பும் எப்போதும் இருக்கும்.  நல்ல வீடு அமையும்.  அதனால் பாக்கியமும் செல்வமும் வளரும் அமைப்பு உண்டாகும்.

சுக்கிரன் இருந்தால்:-போகம் மிகுந்த வாழ்க்கை அமையும்.  எதிர்பால் உள்ளவரின் ஆதரவும் அதனால் எப்போதும் லாபம் உண்டாகும்.  நல்ல வாகனங்கள் அமையும்.  அடுத்தவர்களின் உதவியால் ஆடம்பர உல்லாச வாழ்க்கை அனுபவிக்கும் யோகம் உண்டாகும்.

சனி இருந்தால்:-தர்ம சிந்தனையுள்ள புத்திரன் அதனால் பெருமை குரு ஸ்தானத்தில் தந்தை அமைவார்.  பிதாவின் அறிவு எப்போதும் துணை நிற்கும்.  தோல்விகளை படிக்கட்டுகள் ஆக்கும் மனோதிடம் எப்போதும் இருக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வல்லமை உண்டாகும்.

ராகு இருந்தால்:-சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால்:- சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

தனுசு மீனம் லக்னம்

Comm2

லக்னாதிபதி குருவாகி குரு நின்ற நட்சத்திரத்திற்கு

 சாதகமான நட்சத்திரத்தில்

சூரியன் இருந்தால்:-பிதாவிற்கு நல்ல ஆயுள் காலத்தையும், பிதாவினால் மிகுந்த ஆதரவும் கிட்டும்.  புண்ணிய தீர்த்த யாத்திரைகள் கைகூடும்.  நோய் அணுகாது.  குருவருள் பாக்கியத்தினால் கிட்டும்.  எதிரிகள் அனைவரும் தன்னைத்தானே அடங்கிப் போவர்.  தலைமை பதவி எப்போதும் காத்திருக்கும்.  அரசு வகையில் இருப்பவர்களால் பலவித அனுகூலங்கள் எப்போதும் கிட்டும்.

சந்திரன் இருந்தால்:-மாதா அன்பும், ஆதரவும், ஆயுளும் பெருகும்.  நல்ல சத் புத்திரர்களினால் குலப் பெருமையும் கௌரவமும் ஓங்கும்.  மந்திர தீட்சை கிட்டும்.  பெரியவர்கள், ஞானிகள் போன்றவர்களின் ஆசி கிட்டும்.  அது எப்போதும் துணை நிற்கும்.  ஆன்மீகத்தில் மனது எப்போதும் நாட்டம் கொண்டிருக்கும் நிலையான ஸ்திரமான புத்தி உண்டாகும்.  அலைபாயாத மனம்  கிட்டும் விரைவில் தியானம் கைகூடும்.

செவ்வாய் இருந்தால்:-தன தான்ய  விருத்தி ஏற்படும்.  வாக்கு பலம் உண்டாகும்.  வாக்கு பலிதம் உண்டாகும்.  தந்தைக்கு ஆயுள் பலமும், தீர்த்த யாத்திரையும் உண்டாகும்.  சகோதர ஆதரவு மிகவும் உண்டாகும்.  நல்ல அயன சயன சுகம் கிடைக்கும்.  அடிக்கடி பிரயாணங்கள் உண்டாகும்.  சுப செலவுகள் அதிகம் உண்டாகும்.  சகோதரர்களின் தொழில் விருத்தியாகும்.  அதனால் லாபமும் மேன்மையும் உண்டாகும்.

புதன் இருந்தால்:-கலைகளில் தேர்ச்சியும் நல்ல ஆதாயமும் படித்த பண்புள்ள மனைவி கிட்டும்.  அம்மான் வர்க்கத்தாருக்கு மேன்மையும் ல்£பமும் உண்டாகும்.  எழுத்துத் துறையில் பிரகாசம் ஏற்படும்.  மிகுந்த மூளை பலம் உண்டாகும்.  நண்பர்களால் எப்போதும் ஆதாயம் கிடைக்கும்.  மாதா ஆதரவும் மாதாவிற்கு வித்யா அய்யாசமும் உண்டாகும்.  தாயின் பண்பு குடும்பத்தை கோயிலாக்கும்.

சுக்கிரன் இருந்தால்:-பெண் சகோதரத்தால் லாபம் எதிரிகள் ஒடுங்குதல், காதலில் ஜெயம், பெண்களால் ஆதாயம் எத்தொழிலும் லாபம், கவர்ச்சியான பேச்சு எவரையும் வசப்படுத்தும் திறம், கலையினால் புகழும் செல்வாக்கும் செல்வமும் உண்டாகுதல்.

சனி இருந்தால்:-நிலையான, சொத்துக்கள், குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், கறுப்பு வர்ண சம்பந்தப்பட்ட பொருள்களில் அதிக லாபம் காணும்.  கீழ்மட்டத்தில் உள்ளவர்களிடம் சம்போக நிலை ஏற்படும்.  ஆன்ம விசாரம் ஏற்படும்.  தீவிர மத சம்பந்தப்பட்ட சடங்குகளில் நம்பிக்கையும் பற்றும் ஏற்படும்.

ராகு இருந்தால்:-சிம்ம லக்னத்திற்கு சொன்ன பதில்.

கேது இருந்தால்:- சிம்ம லக்னத்திற்கு சொன்ன பதில்.

ரிஷப துலா லக்னம்

comm3

லக்னாதிபதி சுக்கிரனாகி சுக்கிரன் நின்ற நட்சத்திரத்திற்கு

சாதகமான நட்சத்திரத்தில்

சூரியன் இருந்தால்:-  நல்ல குடும்ப அமைப்பு, தாய், தந்தையர் ஒற்றுமை, நிலம், வாகன யோகம், அதனால் ஆதாயம் மூத்த சகோதரரால் இலாபம், நல்ல நண்பர்கள் குடும்ப பாரம்பரிய சொத்து அழியாதிருத்தல் போன்றவை ஏற்படும்.

சந்திரன் இருந்தால்:-மாதா ஆயுள் பங்கபடாதிருத்தல், தைரிய, வீரியம், பராக்கிரமம் பெருகுதல், தொழில் நிலையில் நல்ல முன்னேற்றம் காணுதல், தீர்த்த யாத்திரை புண்ணிய யாத்திரை சென்று புண்ணிய நதிகளில் நீராடும் யோகம் கிடைத்தல்.

செவ்வாய் இருந்தால்:-நல்ல அயன சயன சுகம் கிடைக்கும்.  களத்திரனால் லாபமும் நல்ல களத்திரமும் உண்டாகும்.  தன நிலை எப்போதும் குறையாது.  கையில் காசு புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.  மிகப் பெரிய கண்டங்களில் இருந்து கடைசி நேரத்தில் தப்பிக்கும் நிலை ஏற்படும்.  நிகரற்ற வாக்குவன்மை உண்டாகும்.  பிரயாணங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.

புதன் இருந்தால்:-குடும்ப சுகம் இருக்கும்.  குழந்தைகளால் மேன்மையும் அவர்களால் ஆதரவும் கிட்டும்.  கலைகளில் தேர்ச்சியும் அதனால் பிரபல்யமும் உண்டாகும்.  சுப செலவுகள் அதிகமாக ஏற்படும்.  தூரதேச பிரயாணமும் அந்நிய தேசத்தில் பொருள் தேடும் நிலை ஏற்படும்.

குரு இருந்தால்:-குரு சாஸ்திரத்தில் நிகரற்ற தேர்ச்சி ஏற்படும்.  கற்போர் தொடர்பினால் வாழ்க்கை மேன்மை அடையும்.  குரு அந்தஸ்து கிட்டும்.  மறைமுக சாஸ்திரத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் நம்பிக்கையும் தேர்ச்சியும் ஏற்படும்.  நோய் தொல்லை தீரும்.  சத்ரு பயம் அறவே இராது.  தெய்வ பயம் எப்போதும் துணை நிற்கும்.

சனி இருந்தால்:-பாக்கியங்கள் பூர்வ புண்ணியங்கள் பெருகி மிகுந்த யோகத்தை தரும்.  தர்ம ஸ்தாபனங்களை நிர்வகித்தல் அறக்கட்டளைகளை ஸ்தாபித்தல், கோயில் கட்டுதல், குளம் வெட்டுதல் போன்ற அறப்பணிகள் செய்ய வாய்ப்பு கிட்டும்.  மனமானது நீதி நியாயம் போன்றவற்றில்  எப்போதும் நிலைத்து நிற்கும் தர்ம புத்திரன் மூலம் புகழ் செல்வாக்கு ஓங்கும்.

ராகு இருந்தால்:-சிம்ம லக்னத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால்:-சிம்ம லக்னத்திற்கு சொன்ன பலன்.

மகரம் கும்ப லக்னம்

comm4

சனி லக்னாதிபதியாகி சனி நின்ற நட்சத்திரத்திற்கு

சாதகமான நட்சத்திரத்தில்.

சூரியன் இருந்தால் :- நல்ல அறிவுள்ள மனைவி அமைவாள்.  மனைவியின் ஆதரவு எப்போதும் கிட்டும்.  மறைமுக எதிர்ப்புகள், விஷ சூனியங்கள் அண்டாது.  சகோதரர்களுக்கு தெய்வ அனுக்கிரகம் கிட்டும்.  தந்தை, மகன் உறவு மிக கண்ணியமாய் இருக்கும்.  அரசாங்க சம்பந்தப்பட்ட அனைத்திலும் எப்போதும் ஆதரவும் வெற்றியும் உண்டாகும்.

சந்திரன் இருந்தால்:-குணவதியான  தாய் நல்ல குணமுள்ள தாரம் எதிலும் உறுதியான மனநிலை, நோய் அணுகாத நிலை தாய்க்கு நீடித்த ஆயுள் கீழோர் தொடர்பினால் லாபம்.

செவ்வாய் இருந்தால்:-வீடு, நிலை, வானம், முதலியவை நல்ல முறையில் அமையும்.  சகோதர ஒற்றுமை மிகும் சகோதரர்களால் ஆதரவும் அன்பும் கிட்டும்.  தொழில் ஸ்திர தன்மையுடன் நடந்து லாபம் கிட்டும்.  எத்தொழிலும் ஆதாயத்தை தரும் தைரியம், பராக்கிரமத்தால் காரியங்கள் செய்யப்படும்.

புதன் இருந்தால்:-நுண் கலைகளில் ஆழ்ந்து அதில் இருக்கும் ரகசியங்களை அறிந்து கொள்ளும் திறம் ஏற்படும்.  நல்ல புத்திர, புத்திரிகள் மூலம் செல்வாக்கும், குலபெருமையும் தழைத்தோங்கும்.  எதிரிகள் தொல்லை, அறவே இராது.  பிதாவிற்கு ஆயுள் பலம் மிகும்.  புண்ய யாத்திரைகள் கைகூடும்.

குரு இருந்தால்:-தன தானிய சம்பத்து எப்போதும் நிலைத்து நிற்கும்.  செய் தொழில் ஆதாயம் கிட்டும்.  அயன சயன சுகம் அமையும்.  மேதா விலாசம் ஏற்படும்.  வேதாந்தத்தில் பற்று ஏற்படும்.  எதையும் தீவிரமாக சிந்தித்து செயல்படுத்தும் தன்மை இருக்கும்.

சுக்கிரன் இருந்தால்:-சாஸ்திரப்படி உள்ள சூட்சும வீடு அமையும்.  மாதா ஆயுள் சுகம் பெருகும்.  வாகன வசதி உண்டாகும்.  பிதாவின் ஆயுள் அந்தஸ்து உயரும்.  எதிர பாலினர் ஆள் ஆதாயம் மிகும்.  ரகசிய சம்போகம் வெளியில் தெரியாது.  அதனால் அவமானம் உண்டாகாது.  கலைகளினால் பெரும் புகழும் கிட்டும்.

ராகு இருந்தால்:-சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

கேது இருந்தால்:-சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>