19

கோள்களின் கோலாட்டம் -1.9 ஜோதிட சிறப்பு விதிகள்

                                                28ஜென்ம லக்கினஸ்புடத்தை 5 – ல்பெருக்கி வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் மாந்தியின் புடத்தை கூட்ட வருகிற மொத்த ஸ்புடம் ஜீவன் அல்லது பிராணன் என்றும்,

சிறப்பு விதிகள் ( A )

 •                  ஜெனன காலத்தில் சந்திரனுடைய ஸ்புடத்தை 8 – ஆல் பெருக்கி வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் மாந்தியின் ஸ்புடத்தை கூட்ட வருகின்ற மொத்த ஸ்புடம் தேகம் என்றும்,
 •                  ஜெனன காலத்தில் மாந்தியினுடைய ஸ்புடத்தை 7 – ஆல் பெருக்கி வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் சூரியனுடைய ஸ்புடத்தை கூட்ட வருகின்ற மொத்தஸ்புடம் மிருத்தியு என்றும்,
 •                ஜீவஸ்புடத்தையும், தேகஸ்புடத்தையும், கூட்டி வருகின்ற மொத்த தொகைமிருத்தி யூஸ்புடத்தைவிட அதிகமாக இருபூபின் பூர்ண ஆயுள் ஏற்படும்.  குறைந்தால் அற்பு ஆயுள்.
 •                  ஜீவன் – தேகம் – மிருத்தியு இந்த மூன்று ஸ்புடங்களையும் ஒன்றாகக் கூட்டி வருகின்ற மொத்த  ஸ்புடதொகைக்கு உரிய ராசியில் சநி கோச்சாரத்தில் வரும்போது தனநாசம் ஏற்படும்.  இந்த ராசிக்கு 1, 5,9 ல் அல்லது ஸ்புடதொகைக்குரிய நவாம்சராசியில் சனிவரும்போது கண்டம், மாரகம் ஏற்படும்.
 •                 சூரியனுடைய அஷ்டவர்கத்தில் சூரியன் இருக்கும் ராசியில் எத்தனை பரல் உண்டே அத்தனையாவது கெற்பமாக.  ஜாதகர் ஜெனிப்பார்.  சூரியன் பலத்தை பொருத்து ஏற்றம் இறக்கம் செய்யும்.
 •                 ஜென்ம லக்கினத்திற்கு 1, 4,7, 10 – ல் புதன் இருந்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் 1, 4, 7, 10 – ல் செவ்வாய் இருப்பின் அவதார யோகம் நல்ல நிலையில் வாழ்வர்.
 •                  சுக்கிரன் கோபுராம் சத்திலும் குரு பாராவதாம்சத்திலும் இருந்து சந்திரனும், பாராவதாம் சத்திலிருந்தால்  ஹரிஹர பிரம்மயோகம்.  இது எவ்வித குறைவும் இன்றி ஆரோக்கியத்துடன் தர்மவான் என பெயர்கிட்டும்.
 •                  மாளவியாயோகம், குரு, சனி சேர்க்கை இருப்பினும் பார்வை இருப்பினும், சுக்கிரனுடன் கேது சேர்ந்தாலும் கிட்டாது.
 •                  ஜென்ம நட்சத்திராதிபதி தன் உச்ச ராசி அம்சத்தில் இருப்பின் லட்சுமி யோகம்.
 •                 லக்கினத்தில குரு – சுக்கிரன்சேர்க்கை 3 – ல் செவ்வாய்-சனி சேர்க்கை இருப்பின் லட்சுமி யோகம், 25 வயதுக்கு மேல் பாக்கியமும் 30  வயதுக்கு மேல் அதிபாக்கியயோகமும் ஏற்படும்.  விரோதத்தால் கண்டம் வரும் தப்பித்தால் 61 – வயதில் கண்டம் 71 – வயதில் மாரகம் ஏற்படும்,
 •                  ஸ்திர ராசியில் பிறந்தவர்களுக்கு 2 – ல் பாவர் இருந்து சந்திரனுக்கு 8, 12 – ல் பாவர் இருப்பின் யோக பங்கம் ஏற்படும்.  துக்கம் ஏற்படும்.
 •                எந்த கிரகம் நீச்ச ஸ்தானத்தில் உள்ளதோ அந்த ஸ்தானாதிபதி குரு அல்லது அந்த நீச்சஸ்தானத்தில் உச்சமடையும் கிரகமாவது சந்திரனுக்கு 1, 4, 7, 10 – ல் இருப்பின் நீச்சபங்கம் ஏற்படும்.

                               யோகதன்      25

                லக்கின 5, 9 ஆம் பாவாதிபதிகளின் உதயலக்கின ராசி எதுவோ அந்த இராசியே நவாம்ச சக்கரத்திலும் திரேக்காண சக்கரத்திலும் இருப்பின் அக்கிரகம் யோகதன் ஆவார்.

 • யோகதனாக வரும் ரிககத்தோடு 6 – க்குரியவர் சேர்க்கை, பார்வை பெற்று இருப்பின் 6 – க்குரிய திசை யோகம் தரும்.
 • சனி- செவ், யோகதனைப் பார்த்தால் யோகமும், பெரிய பதவியும் உண்டு.  குரு, சுக், சந்திரன யோகதனைப் பார்த்தால் ஜலயோகம் பெரிய பதவி உண்டு.  குரு, சந்திரன் யோகதனைப் பார்த்தாலம் மேற்படி பலன் ராகு யோகதனுடன் கூடி இருப்பின் பூமியோகம்.
 • யோகதனுக்கு 6 – க்குரியவர் 1, 4, 5, 7, 9, 10 – ல் இருப்பின் யோகமே. 
 • யோகதனுடன் 7 – க்குரியவர் பார்க்க கூட வெகு பெண்களை அடையவான்.
 • யோகதனுக்கு 12 – க்குரியவர் யோகதனுடன் சேர பார்க்க சொர்ண பொக்கிஷ அதிகாரி.
 • யோகதனுக்கு 3 -க்குரியவர் யோகதனுடன் காவல் விலங்கு தண்டனை கிட்டும்.
 • யோகதனுக்கு 4 – க்குரியவர் யோகதனுடன் கூட, பார்க்கபெரிய பதவி உண்டு.
 • யோகதனுக்கு 5-க்குரியவர் யோகதனுடன் கூட, பார்க்க மந்திரியாவான்.
 • யோகதனுக்கு 8 – ல் செவ்வாய், ராகு இருப்பின் அக்கினை அதிகாரி, கசாப்புக்கடை அதிகாரி இல்லையேல் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
 • யோகதனுக்கு 8 – ல் சூரி, சனி இருப்பின் வாதரோகம், ராகு இருப்பின் விஷபயம், சந்திரன், இருப்பின் சுயரோகம்.  புதன், இருப்பின் அபிசார ரோகம், செவ்வாய் இருப்பின் புண், ரணம் வரும்.
 • பிறப்பு ஜாதகத்தில் எந்த கிரகம் பலம் பெற்று 3, 6, 10, 11 போன்ற இடத்தில் உள்ளதோ அந்த கிரகத்திற்குரிய நபர்கள் காரகம் மூலம் பலன்கள் அடையலாம்.
 • ராகு, சந்திரன் சேர்க்கை இருப்பது ஒரு வகை சண்டாளயோகம்.
 • சனி 5 – ல் 10 – ல் இருப்பின் மனைவியின் போக்கே ஜாதகருக்கு எமனாக முடியும்.
 • 4 – க்குரியவர் நீசம் அடைந்து 1, 2 ஆம் இடத்தைப் பார்த்தால் மன நிம்மதியோ, சுகமோ பூர்ணமாக இருக்காது.
 • பிறந்த லக்கினமான ராசியை, ராசி சக்கரத்திலோ நவாம்ச சக்கிரத்திலோ சனி பார்த்தால் முன் பிறப்பில் விட்டதை பூர்த்தி செய்ய மட்டும் பிறப்பார் எனலாம்.
 • பிறந்த  ராசியின் 12 – ம் இடமும் நவாம்சத்தின் 12 – ம் இடமும் சூரியன் தொடர்பு பெற்றாலும் முன் பிறப்பில் விட்டதை பூர்த்தி செய்ய மட்டும் பிறப்பார் எனலாம்.
 • 4 – ல் சந் – மாந்தி ( அ ) நவாம்ச ராசியில் சந்திரன் மாந்தி இணைவு இருப்பின் தற்கொலை புரியும் வாய்ப்பு உண்டு. 
 • சுக்கிரன் சேர்க்கை நல்ல நிலையில் சிம்மராசியில் இருப்பின் கலை சம்பந்தமான விஷயங்களில் நல்ல திறமை ஏற்படுவதுடன் பிற்காலத்தில் சினிமா நாடக சம்பந்தமான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும்.
 • ஜென்ம லக்கினத்திற்கோ, சந்திரன் நின்ற ராசிக்கோ 12 – ல் குரு கோச்சார ரீதியில் பெயர்ச்சி அடையும்போது வெகுகாலமாக சுணக்கமடைந்த திருமணம் நடைபெற்று குடும்ப வாழ்க்கை ஏற்படுகிறது.
 • மேசம், கடகம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் சனி இருந்து சந்திரன் தொடர்பு பெற்று பாவர் சம்பந்தம் பெற்றால் ( அ ) 9 – ல் சனி, சந், சேர்ந்த பாவருடன் சேர்ந்து பார்த்து இருப்பின் காலில் ரோகம் ª£நண்டியாகும் வாய்ப்பு உண்டு.
 • லக்கினாதிபதி, சுக்கிரன் வலுப்பெற்று சந், சூரியன் இருவருக்கும் 6, 8, 12- ல் இருப்பின் வயோதிக காலத்தில் தாய், தந்தையை நிர்க்கதியாக விட்டு தானும் மனைவியும் மக்களும் சந்தோஷமாக வாழ்வர்.
 • 1, 9, 10 – க்குரியவர்கள் சரராசியில் இருப்பினும் சரராசி கிரகங்களின் சாரம் பெற்று இருப்பின் பிறந்த இடம்விட்டு வெளிநாடு வெளியிடங்களில் பொருள் தேடுவர்.   
 • லக்கினத்தில் குரு ( அ ) சந்திரன் பலம் பெற்று இருப்பினும் ( அ ) பார்த்தாலும், லக்கினத்தில் லக்கினாதிபதி பலம் பெற்று இருப்பினும் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் உண்டு.
 • லக்கினத்தில் சூரியன் – புதன் – கேது சேர்க்கை நல்ல நிலையில் இருந்தால், தெய்வீகபக்தி, தெய்வீக நாட்டம் முதலிய எண்ணம், இளமை முதல் பலம் பெறும். பிற்காலத்தில் காடுமலை திரிந்து அபூர்வமான மூலிகை – களையும், மகான்களை சந்தித்து அருளாசி பெரும் பாக்கிய மாக, அமையும்.
 • லக்கினத்தில் பாவக்கிரகங்கள் பலம் பெற்று அமைவது நல்லதே. செல்வசுகம், இளகிய மனம், பரோபகாரசிந்தை ஏழை எளியவர்களுடன் பழகி வாழும் மனமும் அதனால் செல்வத்தையும் புண்ணியத்தையும் வாழ்க்கையில் சமமாக அடைவர்.
 • 1, 3 – க்குரியவர்களோடு புதன், செவ்வாய், சனி கூடி எங்கு இருப்பினும் சிறுநீர் நோய், கல்லடைப்பு நோய் ஏற்படும்.
 • ஜென்மலக்கினத்தில் பாவகிரகங்கள் இருந்தால் தாய்க்கு தோஷம். பிரசவ காலத்தில் தாயா, பிள்ளையா, என்ற கேள்வியோடு பிரசவம் வரலாம்.
 • ( ஜென்மலக்கினத்திற்க ) குரு லக்கினாதிபதியாகி இவரை புதன் பார்த்தால் அரச பதவியில் உள்ளவர்களுக்கு நேசம் ஆவார். வாழ்நாளில் பெரும்பகுதி அரச மரியாதை இருக்கும்.
 • புதன் கேந்திராதி பத்தியம் பெற்றோ ( அ ) லக்கினத்திற்கோ சந்திரனுக்கோ 1, 4, 7, 10 – ல் இருந்து 2 – ஆம் இடத்தை லக்கினாதிபதி குருவோடு பார்த்து இருந்தால் வாக்குபலிதம், வாக்குவசியம் ஏற்படும். ஜோதிடத்தில் புகழ் பெறுவர்.
 • லக்கினாதிபதி நல்ல பலன் பெற்று இருந்தால் வாழ்க்கையில் ஓர் உச்ச நிலை வந்தே தீரும்.
 • சனி, சுக், சந், 6, 8, 12 ஆக இருப்பது ( அ ) சுக், சந்தி, சேர்க்கை, சனிக்கும் 6, 8, 12 ஆக அமைவது மணவாழ்வு சோபிக்காது. இல்லற வாழ்வு கடலில் தத்தளிப்பதற்குட்- பட்டது போல் ஆகிவிடும்.

 

யோக சித்த புருஷநிலையடைய

 • மகர லக்கினமாகி, சனி, குரு சேர்ந்து, கேது வேறு கிரகத்தோடு 5, 6, 11 – ல் இருந்து, புதன் ஏதோ ஒரு கிரகத் தோடு, சேர்ந்து எங்கேனும் இருக்க, பார்க்க, ஞானமணி சித்தனாவான்.
 • மேசத்தில் சந்திரன், சுபத்தன்மை பொருந்தி சுபகிரகங்கள் சூழ்ந்து நின்றால் குணவான். ஞானி, குரு ஆவான்.
 • சனி சந்திரன் சுபத்தன்மை பொருந்தி சேர்ந்து இருப்பின் ஆயுள்பலம் பெற்று இல்லறத்திலிருந்தே யோக நிஷ்டை கைவல்யம் பெறுவர்.
 • மகர லக்கினமாகி 9 – ல் சந்திரன் தனித்து இருக்க, குரு, சுக், செவ், கூடி இருப்பின் அஷ்டாங்கயோக ஞானி. அதிக வயதுடன் இருப்பான்.

 

காம சேஷ்டைகள்

 • பிறந்த ராசிக்கு 3, 7 – க்குரியவரோடு ராசியாதிபதி சேர்க்கை பெற்று பெண் ராசியிலிருந்தால் காம இச்சை தூண்டப்பட்டு விபரீத செயல்கள் நடக்கும். ஓரினசேர்க்கை புணர்ச்சிக்கு வழி வகுக்கும்.
 • ராசிக்கு 3 – ல் ராசியாதிபதி இருந்து ராசிக்கு 3, 7 – க்குரியவர் சேர்க்கை பெற்றால் மேற்படி பலன்.
 • 3, 5, 7, 12 – க்குரியவர் சேர்க்கை பார்வை ராசியாதிபதிக்கு கிடைத்தாலும், ராசிக்குமேல் 6 – ல் 12 – க்குரியவரோடு சுக்கிரன் சேர்ந்தாலும் மேற்படிபலனே.
 • 36 முதல் 38 விதிகள் 1, 3, 4, 5, 6, 7, 12 -க்குரியவர்களின் திசாபுத்தி அந்தரகாலங்களில் தான் நடக்கும்.

 

நீச்சபங்க ராஜயோக விதிகள்

 • எந்த கிரகம் நீச்சத்திலிருக்கிறதோ, அந்த கிரகத்தின் நீச்ச ராசிக்கு அதிபதியும், அந்த கிரகத்தின் உச்சராசிக்கு அதிபதியும் சந்திரனுக்கு 1, 4, 7, 10 – ல் இருந்தால் ராஜயோகம்.
 • நீச்சம் அடைந்த கிரகத்தின் ராசிநாதன் தனது உச்சத்திலோ, கேந்திரத்திலிருந்து சந்திரனுக்கு 4, 7, 10 – ல் வந்தால் ராஜயோகம்.
 • நீச்சம் அடைந்த ராசி எதுவோ, அந்த ராசிக்கு அதிபனால் நீச்சம் அடைந்த கிரகம் பார்க்கப்பட்டால் ராஜயோகம்.
 • நீச்சம் அடைந்த கிரகம் உள்ள ராசிநாதன் நீச்சம் அடைந்த கிரகத்தின் உச்ச வீட்டின் அதிபனோடு லக்கினத்திற்கோ, ராசிக்கோ 1, 4, 7, 10 – லிருந்தால் ராஜயோகம்.
 • நீச்ச கிரகம் இருந்த வீட்டுக்குடையவன் தக்குரிய உச்ச வீட்டில் இருக்க இதற்குடையவன் 5, 9 லிருக்க ( அ ) சந்திரன்காகிலும் ( அ ) நீச்சனுக்காகிலும் கேந்திரத்திலிருக்க அதோடு குருவர்க்க மேற்படில், நீச்சபங்க ராஜயோகம். ( முதல் தரம் ) சுந்தசேகரம்.
 • எந்த கிரகம் நீச்ச ஸ்தானத்திலிருக்கிறதோ அந்த நீச்ச ஸ்தானாதிபதியாவது ( அ ) அந்த நீச்ச ஸ்தானத்தில் உச்சம் அடையும் கிரகமாவது சந்திரன் நின்றராசிக்கு 1,4, 7, 10 – ல் இருந்தால் நீச்ச பங்க ராஜயோகம் ( கர்க்கஹோசர )

 

                சிறப்பு விதிகள் ( B )

 • சனி சுக்கிரன் இல்லத்தில் இருப்பது இல்லறத்தை பாதிக்கலாம். சனி லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருப்பது நலமே.
 • லக்கினாதிபதி 6, 8, 12 போன்ற ஸ்தானங்களில் அமையப் பெற்றவர்களுக்கு 5, 7, 10, 11 – க்குரியவர்கள் பலம் பெற்று நல்ல இடத்தில் நிற்பது நலமே.

     திறத்தால் உயராவிடுனும் இணைந்தால் கைதூக்கிவிடுவர்.  சுயபலம் இல்லாத சூழ்நிலைக்கு பலியாக வேண்டிவரும்.

 • லக்கினாதிபதி பலம் பெற்று 5, 7, 10, 11 ஆகிய இடத்தின் அதிபதிகளோடு சேர்ந்து உள்ளவர்கள் பெரிய நிலைகளை தொடமுடியும்.
 • 7 – ல் செவ் ( அ ) 8 – ல் சனி ( அ ) சந்திரன் – சுக் 6, 8 ஆக வருவது கூடாது. இல்லற பாதிப்பு, மறுமணம், திருமணமானவர்களை சேரும் அமைப்பு தரும்.
 • கேந்திராதிபதி தோஷம், சகடதோஷம் அஸ்தமன தோஷம் இருப்பின், குரு, சுக், புதன் பார்வையால் நன்மை இல்லை.
 • ராகு, கேது, 2, 8 – ல் இருந்தால் தேமாஷம் ஆனால் மேசம், ரிசபம், மிதுனம், சிம்மம், தனுசு ராசியில் இருப்பின் தோஷம் இல்லை.
 • சனி, சுக்கிரன் சேர்க்கை 3- ல் இருப்பின் முன்பின் யோசிக்காமல் எதுவும் செய்ய நேரிடும். மணவாழ்வில் சச்சரவு உண்டு. 
 • சனி, சுக் சேர்க்கை 6 – ல் இருப்பின் நல்ல விஷய ஞானங்கள் இருந்தும் சோபிக்காது. பல பெண்களை போகித்தவன், தாரதோஷம் உண்டு.  பெண்களால் அபகீர்த்தி உண்டு.  பல ஊர்களை சுற்றிய காமுகன் ஆவான்.
 • 7 – க்குரியவர் சுபராகி பலமான சனியோடு எங்குசேர்ந்து இருப்பினும் புனர்பூயோகம். மறுமணம் புரியும் யோகம் வரலாம்.
 • லக்கினாதிபதி நின்ற வீட்டிற்கு 5, 9 – ல் சந், சூரியன் இருப்பின் ஜாதகர் உயர்ந்த அந்தஸ்தை பெறுவர். லக்கினாதிபதியோடு இத்தனை கிரகம் சேர்ந்தாலும் அத்தனை பலமும் லக்கினத்திற்கு கிடைக்கிறது.
 • 6 – ஆம் பாவம் பலம் பெற்று இருந்தால் வாத பித்த சிலேத்தும மாதுஸ்திதிதோஷத்தால் உடல் பாதிப்பை அடைவர். நவாம்சநிலையை பார்க்கவும்.
 • 8 – ஆம் பாவ பலமாக இருந்தால் ஸ்திரி கோபத்தால் தேவ – குரு பிதுர், தெய்வ தோஷத்தால் பாதிப்பை அடைவர். நவாம்சநிலையை பார்க்கவும்.
 • 12 – ம் பாவம் பலமாயிருந்தால் ஸ்திரீ சாபத்தால் போட்டி பொறாமை வைராக்கியத்தால் அதர்வன தோஷத்தால் மாந்தீரிக குற்றத்தால் பாதிப்பை அடைவர்.  நவாம்ச நிலையையும் பார்க்கவும்.
 • புதன் நின்ற வீட்டிற்கு 5, 7 ஆதிபத்திய பலனோ ( அ ) அந்த வீட்டு ( அ ) அந்த வீட்டின் அதிபர் நின்ற இடத்தின் பலனை சிறப்பாகத் தருவார்.
 • சனி, அந்தந்த பாவத்துக்கு 8 – க்ரியவர் நவாம்ச ராசியில் உள்ள இடத்தை அடையும்போது அந்த பாவத்துக்கு தீங்கு ஏற்படும்.
 • «ரியனுடைய அஷ்டவர்க்கத்தில் சூரியன் தான் இருக்கும் ராசியில் எத்தனை பரல் உள்ளதோ அத்தனையாவது கர்பமான நபராக இருப்பார்.
 • ஒரு வீட்டில் தனியாக ஒரு கிரகம் யார் சேர்க்கை பார்வை பரிவர்த்தனை இன்றி இருப்பின், அக்கிரகத்தின் காரகத்தன்மைக்கு பிற பலம் இராது.
 • தனித்னியாக கிரகங்கள் நிற்குமாயின், அக்கிரகங்களின் சுயபலம் எவ்விதத்திலும் அதிக பலம் ஏற்பட்டு இருந்தாலும் அதுவேறு கிரகத்தின் இணைவு பலத்தைக் காட்டிலும் குறைவானதே.
 • தனி கிரகமாய் நிற்கும் கிரகம் எவ்விதத்தாகிலும் பலம் பொருந்திய தாயினும் அந்த பாவத்தின் காரக பலனைத் தவிர கூட்டுபலன் கிடையாது.
 • ஒரு கிரகம் தனியாக இருப்பதைவிட வேறு கிரகத்துடன் இணைந்து இருப்பது அதிக பலத்தைத் தரும். அப்படி இணைந்து இருப்பதால், அந்த பாவக பலன் அதிகப்படும்.
 • சுக்கிரனோடு, குரு, சனி, கேது சேர்ந்தாலும் பார்த்தாலும், மனைவியோகம் கிட்டாது.
 • ஜென்ம நட்சத்திராதிபதி தன் உச்ச ராசி அம்சத்தில் இருப்பின் லட்சுமி யோகம்.
 • லக்கினத்தில் குரு – சுக் சேர்க்கை 3 – ல் செவ், சனி சேர்க்கை இருப்பின் லட்சுமியோகம், 25 வயதுக்கு மேல் யோகம் தரம்.
 • இரு ஆதிபத்தியம் பெற்று உள்ளகோள்கள் முதலில் மூலத்திரிகோணராசி பாவபலனையும் பின் சுயஷேத்திர பலனையும் தரும்.
 • நவாம்ச லக்கினாதிபதி ஆண் கிரகத்தோடு சேர்ந்து 3, 7, 8, 9 – ல் இருப்பின் திருமண வாழ்வு இராது. சரிபடாது.
 • எந்த லக்கினமானாலும் சரி, துலாராசியில் தனித்த சுக்கிரன், விருச்சிக ராசியில் தனித்த செவ்வாய் பார்வையும் பெறாமல் இருந்தால் மேற்படி தசாபுத்திகாலங்களில் கணவன், ( அ ) மனைவி பிரிவினை ஆயுள் தோஷம் கண்டம் ஏற்படலாம்.
 • அஸ்தமனத்தில் இருக்கும் கிரகம் தசாபுத்தி காலங்களில் சிறப்பைத்தராது. ஜெனன காலத்தில் அஸ்தமனமான கிரகம், கோச்சாரத்தில் அஸ்தனம் பெற்று அக்கிரகம் தசாபுத்தியும் இருப்பின் எக்காரியமும் சோபிக்காது.
 • 6, 8 – ம் பாவாதிபதிகள், ஒன்றாய் கூடி, சனி சேர்க்கை பார்வை இருப்பின் அற்ப ஆயுள்.
 • மேசம், மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம் இவற்றில் 8 – க்குரியவர் மீனத்திற்கு 2, 7, – க்குரியவர், தனுசு, கன்னிக்கு 11 -க்குரியவர் பலத்தை அறிந்து நன்மை, தீமைகளை சொல்லவு.

 

             சிறப்பு விதிகள் ( C )

 

” பாவஸ்ய சக்ர ஸஹ்தித்யா யோகே நபல மீரயேத்

ராசி மாத்ரஸ்தி தேர்ஜ்ஞழனம் வ்ய பிர ஹ தம்பவேத் ”

                                ஜாதகார்ண வபதீபிகா கருத்துப்படி ராசி சக்கரத்தை வைத்து பலன் சொல்லுவது தவறு என்பதும் பாவக சக்கிரப்படி பலன் சொல்லுவதே சாஸ்திர சம்மதமும் அனுபவ சித்தமும் ஆகும்.

                                ” சாதக முகூர்த்தமாதி சாற்று மாரூடங்கட்குப்

                                போதனா முறையே பாவப்புடத்தினாற் கோள்கள்நின்ற

                                நீதி சேர் தலங்க ளோர்ந்து பலனெலாம் நிகழ்த்த வேண்டி,

                                ஓதீனார் சீபதக் கோனுத்தம் சீடர்க்கம்மா “

                ஜாதகம் – முகூர்த்தம் – ஆரூடம் ஆகியவைகளுக்கு அவசியமாகப் பாவ சக்கரத்தைக் கொண்டே பலா பலன்களை நிச்சயத்தறியவேனும் என்பது ஸ்ரீபதி கூற்று.

                ஒரு கிரகம் எந்த சாரத்தில் இருந்தபோதும் அக்கிரகம் பாருடைய வீட்டில் அமைந்துள்ளதோ அக்கிரகத்தின் குணம்தான் பிரதானமாக இருக்கும்.

                ஜெனன லக்கினம் எதுவாக இருந்தாலுமூ ஜெனன லக்கினாதிபதி நின்ற இடத்திற்கு 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் லக்னம் சூரியன், சந்திரன் இருப்பதும் 1, 5, 9 – ல் சூரிய – சந்திரன் நின்ற வீட்டதிபதிகள் இருப்பதும் மிகுந்த சிறப்பு.

                லக்கினாதிபதி நின்ற இடத்திற்கு 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் லக்னிம் சூரியன், சந்திரன் இருப்பதும் 1, 5, 9 – ல் சூரிய- சந்திரன் நின்ற வீட்டதிபதிகள் இருப்பதும் மிகுந்த சிறப்பு.

                லக்கினாதிபதி நின்ற இடத்திற்கு 1, 4, 5, 7, 10 – ல் அதிக கிரகங்கள் நிற்பது ஜாதக பலத்தை காட்டும்.

                லக்கினாதிபதிக்கு 6, 8, 12 – ல் அதிக கிரகங்கள் வரக்கூடாது. 

                தனித்து நிற்கும் எந்த ஒரு கிரகமும் பலன்களைத் தரமுடியாது. 

                ஒருவரின் லக்கினம் நன்கு செயல்படவேண்டுமானால் 4-ம் பாவாதிபதி  நல்லநிலையில் இருக்கவேண்டும்.  இதேபோல் எந்த ஒரு பாவமும் நன்கு செயல்படவேண்டும் என்றால் அந்த பாவத்தின் நான்காம் பாவாதிபதி நன்றாக இருக்க வேண்டும்.

                ” மத்யம் தினகதெ பாகுறள

                முகூர்த்தோபி ஜிதாஹ்வய

                அபிஜித் ஸர்வ தே சேஷ ¨

                முக்யம் தோஷ விநாச கிருத் “

சூரியன் உச்சியில் வருகின்ற சமயம் அபிஜித் முகூர்த்தம் முக்கியமான தோஷங்களை இல்லாமல் செய்கிறது.

                ” நசார வானரா நச லக்ன யோ ரசா

                நவிஷ்டிரிக் தோ நதீதி கிரகச்ச

                ரவி பிரவே சாஸ்தமயே சகாலே

                கோதூளி லக்குன பஹ ¨ கார்ய ஸித்தி ”     

   சூரிய உதயமும், அஸ்தமனமும் ஆகும் வேளை கோதூளி முகூர்த்தம் ஆகும்.  இக்காலத்தில் செய்யும் சகல காரியங்களுக்கும் சித்தியாகும்.  இதற்கு தி, வாரம், லக்கினம், விஷடிரத்தை கிரக தோஷம் ஒன்றுமே கிடையாது.

                வக்ரீ சுவச்சபலா சவக்ரஸ்ஸகிதே

                மத்யம் பலம் துங்கரே

                வக்ரீ நீச பல ஸ்வா நீச பாவானே வக்ரீ

                பலம் துங்கஜம்

                வக்கிரம் பெற்ற கிரகம் மற்றொரு வக்ரம் பெற்ற கிரகத்தோடு கூடியிருக்கும் போது மிக அதிக அளவு பலம் பெறுகிறது.  வக்கிரம் பெற்று கிரகமானது தன்னுடைய உச்ச ராசியில் இருக்கும்போது மத்திம பலன், சொந்த வீட்டில் பலம் இல்லை, நீச்ச ராசியில் இருப்பின் பலம் அதிக பலம்.

                பாப கிரகம் வக்கிரம் பெற்றால் சுப பலனும், சுபகிரகம் வக்கிரம் பெற்றால் பாப பலனும் ஏற்படுகிறது.

                குரு பாப கிரகங்களை கெடுதி செய்யும் கிரகங்களைப் பார்ப்பது நல்லது யோகத்தை தரும் ஆதிபத்தியம் கொண்ட எந்த கிரகத்தையும் குரு நோக்கிடல் கூடாது.

                சநி நின்ற வீட்டிற்கு 9, 10 – ஆம் பாவாதிபதி அல்லது அப்பாவத்தில் உள்ளவர்கள் சனிக்கு நட்பாகவோ,  நல்ல ஆதிபத்தியம் பெற்றவராகவோ இருந்துவிட்டால் சனி பா£வையும் அவர் தசாபுத்தியும் நல்ல யோகதை செய்து விடுகிறது.

 

நட்சத்திரம் முதல் பாதம் இயக்குவது 2 வது பாதம் இயக்குவது 3 வது பாதம் இயக்குவது 4 வது பாதம் இயக்குவது தலைமை
அஸ்வினி செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் சூரியன்
பரணி சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் சூரியன்
கார்த்திகை குரு சனி சனி குரு சூரியன்
ரோகிணி செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் சந்திரன்
மிருகஷேரிஷம் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் சந்திரன்
திருவாதிரை குரு சனி சனி குரு சந்திரன்
புனர்பூசம் செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன்
பூசம் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய்
ஆயில்யம் குரு சனி சனி குரு
மகம் செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் புதன்
பூரம் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் புதன்
உத்திரம் குரு சனி சனி குரு புதன்
அஸ்தம் செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் குரு
சித்திரை சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் குரு
சுவாதி குரு சனி சனி குரு குரு
விசாகம் செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் சுக்கிரன்
அனுஷம் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் சுக்கிரன்
கேட்டை குரு சனி சனி குரு சுக்கிரன்
மூலம் செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் சனி
பூராடம் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் சனி
உத்திராடம் குரு சனி சனி குரு சனி
திருவோணம் செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் ராகு
அவிட்டம் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் ராகு
சதயம் குரு சனி சனி குரு ராகு
பூரோட்டாதி செவ்வாய் சுக்கிரன் புதன் சந்திரன் கேது
உத்திரட்டாதி சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் கேது
ரேவதி குரு சனி சனி குரு கேது

 

                9 கிரகங்கள் மூன்மூன்று நட்சத்திரங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து ஒவ்வொரு பாதத்தை ஒவ்வொரு கிரகத்தின் இயக்கத்தில் செயல்படவைக்கும் சிறப்பு விதியை பட்டியல் போட்டுத் தந்துள்ளேன்.

                உதாரணம் அசுவனி, பரணி, கிருத்திகை இம்மூன்று நட்சத்திரத்தை சூரியன் தலைமையேற்று தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, முதல் பாதங்கலை செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் மூலம் பலன்களை தர செய்கிறார்.

                ஒரு விருச்சிக லக்கின ஜாதகம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

 cOMM5

 

                இவருக்கு புதன் தசை நடப்பதாக வைத்தக் கொண்டால், தசாநாதன் புதன் ஆயில்யம் 4 – ல் உள்ளார்.  இவர் செவ்வாயின் தலைமையின் கீழ் குருவின் மூலமாக தனது பலன்களைத் தரவேண்டி உள்ளது.

                லக்கினாதிபதி செவ்வாய் ஆகி விடுவதால் இந்த ஜாதகரை புதன் தசாகாலம் முழுவதும் செவ்வாய் தான் தலைமை ஏற்று நடத்த வேண்டி உள்ளது.  இவரின் தலைமையின் கீழ் குரு மூலமாக புதன் தனது பலன்களை தரவேண்டும்.

                தசாநாதன் புதனின் 8, 11 – க்குரிய பலன்கள் 1, 6 என்ற ஆதிபத்தியத்தின் கீழ் 2, 5 – க்குரிய குரு மூலம் வருகிறது.

 

                தசாநாதனின்புதனின் ஆதிபத்தியம் இத ஸ்தூல நிலை.

                போராட்டம் மரண பயம் மனக்கலக்கம் கௌரவம், பணபலம், லாபம், கடின உழைப்பு, காரிய வெற்றி போன்ற இவைகளை.

                தலைமை ஏற்ற செவ்வாய் ஆதிபத்தியம் இது சூட்சும நிலை.

                ஜாதகனின் உயர்வு, போராட்டம், வெளியிட மதிப்பு, கடன் நோய், எதிர்ப்பு போன்றவைகள் மூலம்.

 

 

இயக்கும் குருவின் ஆதிபத்தியம் இது அதி சூட்சும நிலை.

வாக்கு, சாதுர்யம், திறமை, பூர்வ புண்ணியபலம், தெய்வ அனுக்கிரகம் அதிர்ணடம், பெரியோர்களின் ஆதரவு என்ற வழியில் தருகிறார்.

                இதே போல் ஒவ்வொரு ஜாதகரின் தசா பலன் புத்தி பலன் அந்திர பலன்களையும் பார்க்கலாம்.

                உதாரண ஜாதகம் கேட்டை 1 – ல் லக்கினம் அமைந்ததால் இது சுக்கிரனின் தலைமையின் கீழ் குருவின் இயக்கத்தில் வருவதால் இந்த ஜாதகமே.  சுக்கிர – குருவின் இயக்கத்தில் செயல்படுவதாக கொள்ளலாம்.

சூரியன்:-

                                                     பாரப்ப மூன்று அறு பத்து ஒன்று

                     பகருகின்ற பன்னொன்றில் வெய்யோன் நிற்கில்

      சீரப்பா சீவனுட மனையில் தானும்

      சி சிவா தெய்வங்கள் காத்து இருக்கும்.

1, 3, 6, 10, 11 – ல் சூரியன் இருப்பது நல்லது.  இப்பாடல் மேச- ரிசப-கடக-சிம்ம-விருச்சிக-தனுசு போன்ற லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பொருந்து.

 

சந்திரன்:-

                     கேளப்பா கலையினுட பெருமை சொல்வேன்

      கனமுள்ள தனலாபம் கேந்திர கோணம்

      ஆறப்பா அகம் பொருளும் நிலமுங்காடி

                      அப்பனே கிட்டுமடா.

1, 2, 4,,5, 7,9, 10 – ல் சந்திரன் இருப்பது நல்லது.  இப்பாடல் மேசம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், மீனம் போன்ற லக்கினத்திற்கு பொருந்து.

 

செவ்வாய்;

கேளப்பா  செவ்வாயும் ஓன்று பத்து

கனமுள்ள தனலாபம் ஆறில் நிற்க

ஆளப்பா அகம் பொருளும் நிலமும் செம்பொன்னும்

அப்பனே  கிட்டுமடா

1,6,10,11ல் செவ்வாய் இருப்பது குறிக்கும் பாடல்  இது மேஷம்  கடகம் சிம்மம்  விருச்சிகம்  தனுசு   மீனம்  லக்னங்களுக்குபொருந்தும்

புதன்:

சொல்லுகிறேன் இரு மூன்று  ஈராறெட்டும்

சுகமில்லை ஜென்மத்துக்கு குய்யரோகம்

 சொல்லுகிறேன் கேந்திர கோணம் நன்று

1, 4 ,5, 7 ,9, 10 புதன் இருப்பது குறிக்கும் பாடல்  இது

 ரிஷபம் மிதுனம் சிம்மம் கன்னி துலாம்  மகரம் கும்பம் லக்னங்களுக்கு பொருந்தும்

குரு

பாரப்பா பரம குரு நாலு எழு பத்து

பகருகின்ற கோணமுடன் தனமும் லாபம்

சீரப்பா ஜன்மனுக்கு யோகம் செப்பு

4, 7 ,10, 5, 9, 2, 11 குரு   இருப்பது குறிக்கும் பாடல்  இது

மேஷம்  கடகம் விருச்சிகம்  கும்பம் மீனம்  லக்னங்களுக்கு பொருந்தும்

சுக்கிரன்

கேளப்பா ஆசுர குரு கேந்திர கோணம்

கெட்டவர்கள் கண்ணுற்று  பார்த்திட்டாலும்

ஆளப்பா அசுர குரு பலனளிப்பார்

1, 4, 7, 5, 9 ,10 சுக்கிரன் இருக்கும் பாடல்

ரிஷபம் மிதுனம் கன்னி துலாம்   மகரம் கும்பம் மீனம்  லக்னங்களுக்கு பொருந்தும்

சனி

கனமுள்ள நவுமாறு லாபம் மூன்று

கதிர் மைந்தன் அதிலிருக்க விதியும்  தீர்க்கம்

3, 6, 9, 11 சனி இருப்பதை குறிக்கும் பாடல் இது

மேஷம்  ரிஷபம்  மிதுனம்  கன்னி  துலாம் விருச்சிகம் 

தனுசு  மகரம் கும்பம்  லக்னங்களுக்கு பொருந்தும்

ராகு     கேது

சொல்லப்பா செம்பாம்பு கோணம் லாபம்

சுய தேச அரசர் லாபம்

கேது  1, 4, 9, 11 இருப்பதை குறிக்கும் பாடல் இதுமேஷம் மிதுனம் துலாம் கடகம் மகரம்விருச்சிகம் தனுசு   மீனம்  லக்னங்களுக்கு பொருந்தும்

   புல்லப்பா கருநாகம் கேந்திரங்கள் நலம்

புனிதமுள்ள செம்பாம்பின் பதியைப்பரே

ரகு 1, 4, 7, 10 ல் இருப்பது நல்லதுராகு அமர்ந்த வீட்டின் அதிபதியை பொருத்து யோகம் நடக்கும்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>