கோள்களின் கோலாட்டம் -1.14  திரேக்கானத்தின் பலன்கள்.


மேசம்.images (14)

1 முதல் 10 பாகைக்குள் — புருஷ அங்காரக ஆயுத திரேக்கானம் – வெளுத்த துணி தரித்தவன், கருத்த நிறம் உள்ளவன். மிகுந்த பலசாலி போன்ற தோற்றம் உள்ளவன். பயப்படும்படியான தோற்றம். சிவந்த கண்கள் உள்ளவன். செவ்வாய் நாயகன், ஸ்திரீ கிரகம் பலம். கழுத்து வரை அதிபதி.
10 முதல் 20 பாகைக்குள் — நாற்கால பட்சி ஸ்திரீ திரேக்கானம் – சிவந்த ஆடை அணிந்தவன். ஆபரணம், தின்பண்டம் இவைகளில் ஆர்வம் உள்ளவன். குடம் போன்ற வயிறு, குதிரை போன்ற நீண்ட முகமும், தாகத்தால் பீடிக்கப்பட்டவர், சூரியன் நாயகன் ஆண் கிரகம் பலம், தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நர புருஷ ஆயுத திரேக்கானம் – கொடூர சித்தம் உள்ளவன். வித்தகளை அறிந்தவன். சிவப்பு, வெளுப்பு நிறம் கலந்தவன். வேலை செய்வதில் பற்று உள்ளவன். சாஸ்திர முறைகளை மீறி நடப்பவன். கோபிஷ்டன் சிவந்த துணி அணிந்தவன். குரு நாயகன், அலி கிரகம் பலம் – பாதம் வரை.

ரிசபம்.
1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ அக்னி திரேக்கானம் – சுருட்டையாகவும், அறுக்கப்பட்டதாகவும் இருக்கின்ற மயிர்களை உடையவன் குடம் போன்ற வயிறை உடையவன்.
ஓரிடத்தில் பொசுக்கப்பட்ட துணி உடையவன் தாகமுடையவன், அதிகமான சாப்பாட்டு பிரியன், ஆபரணங்களை விரும்பும் ஸ்திரீ சுக்கிரன் நாயகன். ஸ்திரீ கிரகபலம் – கழுத்து வரை.
10 முதல் 20 பாகைக்குள் — நர நாற்கால் திரேக்காணம் – வயல், நெல், வீடு, பசு இவைகளை பரீட்சை செய்யும் முறையையோ இவைகள் சம்பந்தமான காரியங்கள் செய்யும் முறையோ கீதம் வாத்தியம், சித்திரம் வரைதல் முதலிய கலைகளை அறிந்தவனும், வண்டியோட்டுவது பயிரிடுவது, இவற்றில் சாமர்த்தியம் வாய்ந்தவனும், அதிக பசி உள்ளவனும், ஆட்டின் முகமுள்ளவனும், அழுக்கடைந்த வஸ்திர – முள்ளவனுமான புருஷ வடிவமாக இருக்கிறது. புதன் நாயகன் ஆண் கிரகம் பலம் – தெப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நர புருஷ நாற்கால் திரேக்காணம் – யானைக் கொப்பான சரீரம், வெள்ளி நிறமான தெத்திப்பல், கூர்மையான பாதம், பொன்னிறமான சரீரம், அங்கும் இங்கும் அலையும் மனதுடையவன். சனி நாயகன் — அலி கிரகம் பலம் – பாதம் வரை.

மிதுனம்.
1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ திரேக்கானம் – நல்ல ரூபத்துடன் கூடியவள், நகை செய்வதில் பற்று உள்ளவள். சந்ததி இல்லாதவள். உயர தூக்கப்பட்ட கைகளை உடையவள். மாதவிடாய் தோஷம் உள்ளவள் ( அ) காம பீடையுள்ளவளும், ஊசியால் செய்யக்கூடிய நெசவு முதலிய காரியத்தை விரும்புவாள். ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத பட்சி திரேக்கானம் – தோட்டத்தில் வசிப்பவள். கவசமுள்ளவன். ( கண்ணாடி போன்ற ) ஆயுதம் உள்ளவன். சூரத்தன்மையுள்ளவன், கருடனை போன்ற மூக்கு உள்ளவன். விளையாட்டு புத்திரன். நகை பணம் இவ்விஷயங்களில் கவலையை உடையவன், சுக்கிர நாயகன், ஆண் கிரகம் பலம் தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நர ஆயுத திரேக்கானம் – அலங்கரிக்கப்பட்டவள், அதிகமான ரத்தினம் உள்ளவன், பாணப்பை கவசம் தரித்தவன், வில் ஆயுதத்துடன் கூடயவன், நாட்டியம், வாத்தியம், சித்திரம் எழுதுதல் போன்ற கலைகளில் சாமார்த்தியம் உள்ளவன். கவிதை, பாடல்களை இயற்றுபவன், சனி நாயகன் – அலி கிரக பலம் – பாதம் வரை.


கடகம்.
1 முதல் 10 பாகைக்குள் — நாற்கால் புருஷ திரேக்கானம் – இலை, கிழங்கு, பழம் இவற்றைத் தரித்தவனும், யானைக் கொப்பான சரீரமுடையவனும், காட்டில் வாசனை நிரம்பிய இடங்களில் வசிப்பவனும், பெருத்த கால் உள்ளவன், பன்றிக் கொப்பான முகம் உள்ளவனும் ஆவான். சந்திரன் நாயகன் — ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்ப திரேக்கானம் – சிரசில் தாமரை புஷ்பங்கள் உள்ளவளும், சர்மங்கள் கூடியவளும், தனிமையான இடத்தை அடைந்தவளும், கதறும் குணம் உள்ளவளும் ஆவாள். செவ்வாய் நாயகன் – ஆண் கிரகம் பலம் – பாதம் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நரசர்ப்ப திரேக்கானம், சுவர்ணமயமான ஆபரணங்களை உடையவன், பாம்பினால் சுற்றப்பட்டவன், மனையாளும் நகை செய்வதற்கு வேண்டி சமுத்திரத்தில் பிரயாணம் செய்பவன். குரு நாயகன் அலிக்கிரகம் பலம் – பாதம் வரை.

சிம்மம்.
1 முதல் 10 பாகைக்குள் — நர நாற்கால் பட்சி திரேக்கானம் – கழுகு, நரி, நாய் போன்றதாயும், அழுக்கடைந்த துணியுடன் கூடியவன். தாய், தந்தை¬யை விட்டுப் பிரிந்தவன் போல கதறுவான். சூரியன் நாயகன் – ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத திரேகானம் – குதிரையைப் போல் உள்ளவன். வெண்ணிறமான மாலையை தலையில் அணிந்தவன். எளிதில் அண்ட முடியாதவன், ஆயுதம் தரித்தவனும் வளைந்த நுனி மூக்கை உடையவனும், மான்தோல் கம்பளம் போன்றவற்றில் இருப்வன். குரு நாயகன் ஆண் கிரகம் பலம் – தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நர நாற்கால் ஆயுத திரேக்காணம் – கரடி முகம், குரங்குக்கொப்பான சேஷ்டைய நீண்ட மீசை, சுருட்டையான மயிர்கள் சுழி, பழம், மாமிசத்தை தரிப்பவன், செவ்வாய் நாயகன், அலி கிரகம் பலம், பாதம் வரை.

கன்னி.
1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ திரேக்கானம் – புஷ்பம் நிரம்பிய குடத்துடன் அழுக்கடைந்த வஸ்திரத்தால் மறைக்கப்பட்ட சரீரமுடையவளாகவும், வஸ்திரம், தனம் இவற்றின் சேர்க்கையை விரும்புவளாகவும் தந்தை வீட்டை விரும்புவளாகவும் உள்ளது. புதன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம், கழுத்து வரை.
10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத திர«க்கானம் — எழுதுகோலை தரித்த கருப்புநிறமுள்ள வஸ்திரத்தை தலையில் சுற்றப்பட்டவனும், செலவு வரவு இரண்டையும் செய்கிறவனும், ரோமங்கள் அடர்ந்த சரீரமுடையவனும் ஆயுதம் தரித்தவனும் ஆவான். சனி நாயகன், ஆண் கிரகம் பலம் – தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — ஸ்திரீ திரேக்கானம் வெண்ணிற – முள்ளவளும், வெண் பட்டை தரித்தவளும் மிக்க உயரம் உள்ளவளும், கும்பம், கரண்டி இவற்றை கைகளையுடையவளும், மனதடக்கம் உள்ள கோயிலை நேர்த்தி போக நினைப்பவளும் ஆவாள். சுக்கிரன் நாயகன் அலி கிரகம் பலம், பாதம்வரை.

துலாம்.
1 முதல் 10 பாகைக்குள் — நர திரேக்கானம் – வீதியின் நடுவில் உள்ள கடையை உடையவனும் தராசை கையில் தாங்கியவன், சாமான்களை எடை போட்டு நிறுப்பதிலும், படியால் அளப்பதிலும் சமர்த்தன், சுக்கிரன் நாயகன் ஸ்திரீ கிரகம்பலம் – கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — நரபட்சி திர«க்கானம் – கழுகு முகம். பசிதாகம் உள்வன், பாத்திர பண்டங்களில் அதிக பழக்க வழக்கமுள்ளவன். மனைவி, குழந்தைகளை மனதில் சதா சிந்தித்துக் கொண்டு இருக்கும் சனி நாயகன் ஆண் கிரகம்பலம் தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நாற்கால் திரேக்கானம் – சுவர்ணமயமான பானப்பை கவசம் இவற்றை தரித்தவன். ரத்திரனங்களால் அலங்கரிக்கப்-பட்டவன். குரங்கின் ரூபம் உள்ளவன், பழம், மாமிசம் தரித்தவன், வேட்டைக்கு செல்பவன், புதன் நாயகன், அலி கிரகம் பலம் பாதம் வரை.

விருச்சிகம்.
1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்ப திரேக்கானம் – வஸ்திரம் ஆபரணம் சரிவர இல்லாதவளும் தனது இருப்பிடத்திலிருந்து விலகியவளும், பாம்பினால் கடிபட்ட பாதத்தையுடையவளும் அழகு பொருந்தியவளுமான தோற்றம், கடலில் இருந்து கரையை நோக்கி வரும் தன்மை செவ்வாய் நாயகன் – ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்ப திரேக்கானம் – ஆமை, குடம் இவற்றிற்கொப்பான சரீரமுடையவளும் பாம்பினால் சுற்றப்பட்ட ஸ்திரீயானவள். கணவனுக்காக இடம், சுகம் இவைகளை விரும்புகிறாள். குரு நாயகன், ஆண கிரகம் பலம்- தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நாற்கால் திரேக்கானம் – பெரிதான கன்னங்களுள்ளதும், ஆமைக் கொப்பான முகம் உள்ளதும், நாய், மான், பன்றி, இவற்றிற்கு பலத்தை தரக்கூடியவனும், வாசனை திரவியங்கள் அடங்கிய இடத்தை அமைத்தவனும், ஆவான். சந்திரன் நாயகன், அலி கிரகம்பலம் – பாதம்வரை.
  மீனம்.
1 முதல் 10 பாகைக்குள் — நரநாற்கால் ஆயுத திரேக்கானம் – மனிதனின் முகம் உள்ளதாலும், குதிரைக்கொப்பான சரீரம் ஆச்ரமம். வேள்வியில் பங்கு பெறும் தோற்றமும் உண்டு. புதன் நாயகன் ஸ்திரீ கிரகம்பலம் – கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ திரேக்கானம் – மனதைக் கவரக் கூடியவளும், செண்பக புஷ்பம், தங்கம் இவற்றிற்கொப்பான நிறமுள்ளவளும், கடலில் விளையும் பொருள்களை தித்தவளும், பத்மாசனத்தை அமைத்து இருப்பவளும் ஆவாள். செவ்வாய் நாயகன். ஆண் கிரகம் பலம் – தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நர ஆயுத திரேக்கானம் – நீண்ட தாடியுள்ளவனும், செண்பக தங்கம் போன்ற நிறம் உள்ளவனும், தண்டத்தை தாங்கிக் கொண்டு உள்ளவனும் சிறந்த ஆசனத்தில் அமர்ந்தவனும் வெண்பட்டு, மான்தோலை தரித்துக் கொண்டுள்ளவனும் ஆவான். சூரியன் நாயகன் அலிகிரகம் பலம் – பாதம் வரை.

மகரம்.
1 முதல் 10 பாகைக்குள் — புருஷ நிகடத் திரேக்கானம் – மயிர்கள் அடர்ந்தவனும், மீனின் பல்களை போல் பல் அமைந்தவனும், பன்றியின் தேகம் போன்ற அமைப்பு உள்ளவனும் மாடு கட்டும், தும்பு, வலை விலங்கு இவைகள் தரித்தவன் பயங்கர முகம் உள்ளவன். சனி நாயகன் ஸ்திரீ கிரகம்பலம் – கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ திரேக்கானம் – கீதம், வாத்தியம் முதலிய கலைகளில் சமர்த்தையாகவும் தாமரை இதழ் போல் நீண்ட கண்ணுள்ளவளும் கருத்த நிறம் உள்ளவளும், விசித்திரமான பொருள்களைத் தேடுகின்றவளும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட இரும்பு போன்ற காதுகளையுடையவளுமானவன், சுக்கிரன் நாயகன் ஆண் கிரகம்பலம் – தொப்புள்வரை.
20 முதல் 30 பாகைக்குள் — புருஷ ஆயுத திரேக்கானம் – அரசர்களுக் கொப்பான, சரீரமும் சம்பத்துடன் கூடியதாகவும், பணப்பை, வில், கவசம் இவைகளுடன் கூடியதாக தோளில் வைக்கப்பட்ட ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான கும்பத்தைத் தரித்துக் கொண்டு உள்ளது. புதன் நாயகன், அலி கிரகம்பலம் – பாதம் வரை.

கும்பம்.
1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்கானம் – எண்ணெய்கள், ஜலம் உணவு இவற்றின் லாபத்தில் கவலை அடைந்த மனதை உடையதாகவும், கம்பளத்துடன் கூடியதாகவும், பட்டு வஸ்திரமுடையதாகவும், மான் தோல் உடன் கூடியதாகவும் கழுகுக்கொப்பான முகமுடையதாயும், இருப்பது சனி நாயகன், ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ அக்னி திரேக்கானம் – அழுக்கடைந்த துணியினால் சுற்றப்பட்டவள். சிரசில் மண் பாத்திரங்களுடன் கூடியது. காட்டில் பொசுக்கப்பட்ட வண்டியில் உலோகங்கள் எடுக்கப்படுவது புதன் நாயகன் ஆண் கிரகம்பலம் – தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நர திரேக்காணம் – கருத்த நிறமுள்ளது. உரோமங்கள் நிறைந்த காதுகளை கொண்டது. கிரீடம் உள்ள, மரப்ட்டை இலைகள் மட்டுப்பால் முதலிய மரத்தின் பால்கள், பழம் இவற்றால் பல லோகங்களை ஒன்றாக சேர்த்து செய்யப்பட்ட குடங்களை தரித்திருக்கிறது. ஓரிடம் விட்டு மற்றோரிடம் போய் சேரும்படி செய்கிறது. சுக்கிரன் நாயகன் அலி கிரகம் பலம் – பாதம் வரை.

மீனம்.
1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்கானம் – பாத்திரம், முத்துக்கள், ரத்தினங்கள், சங்கு இவற்றுடன் கலந்த பொருள்களால் சம்பந்தம் பெற்ற கையை உடையவனும், அலங்காரங்களுடன் கூடியவனுமான, மனையாளின் ஆபரணத்திற்காக கடல் தாண்டி செல்கிறான். குரு நாயகன் ஸ்திரீ கிரகம்பலம் கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ திரேக்கானம் – செண்பகத்திற் – கொப்பான முகமுள்ளவனும், சேடிகள், வேலையாட்கள், இவர்களுடன் கூடியவளுமான ஸ்திரீயாக மிகவும் உயர்ந்தவளும், கொடி இவைகளுடன் கூடின தெப்பத்தை அடைகிறது. கடலில் இருந்து கரையை அடையும் அமைப்பு சந்திரன் நாயகன், ஆண் கிரகம்பலம் – தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — சர்ப்ப நர திரேக்கானம் – பாம்பினால் சுற்றப்பட்ட சரீரமுடையவனும், துணிகள் இல்லாதவனும், திருடர்கள், நெருப்பு இவற்றால் கலங்கின மனதுள்ளவனுமான காட்டில், ஒரு குழியில் கதறும் நிலை – செவ்வாய் நாயகன் – அலி கிரகம்பலம் – பாதம் வரை.

திரேக்காண பலன்.
ஜாதகன் எந்த திரேக்கானத்தில் பிறந்தானோ, அந்த திரேக்கானத்திற்கு சொல்லிய சுபாவம், குணம் உள்ளவனாய இருப்பான்.
அதில் சொல்லப்பட்ட வஸ்துக்கள் மூலம் லாபமோ நஷ்டமோ கஷ்டமோ அடைவான். திருடர்களையும் அறியலாம்.
குரு – செவ், முதல் திரேக்கானத்தில் இருப்பது நலம் சனி – புதன் 2 – வது, திரேக்கானத்தில் இருப்பது நலம். சுக – சந் – 3 -வது திரேக்கானத்தில் இருப்பது நலம். லக்னாதிபதி திரேக்கான ராசியில் உச்சம் பெறுவது மிக்க நலம்.
எந்தி திரேக்கானத்தில் பாவக்கிரகங்கள் உள்ளதோ அந்த பாவத்தில் குறிப்பிட்ட அங்கங்களில் அடையாளங்கள் ஏற்படும்.
சர லக்கினத்தில் ( மேசம், கடகம், துலாம், மகரம் ) பிறந்தவர்களுக்கு முதல் திரேக்கானத்தில் உள்ள கிரகத்தின் தசை சிறந்த பலனைத் தரும். உபயலக்கினத்தில் ( மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ) பிறந்தவர்களுக்கு கடைசி திரேக்கானத்தில் உள்ள கிரகத்தின் தசை சிறந்த பலனைத் தரும்.
ஸ்திர லக்கினத்தில் ( ரிசபத், சிம்மம், விருச்சிகம், கும்பம் ) பிறந்தவர்களுக்கு மத்திம திரேக்கானத்தில் உள்ள கிரகத்தின் தசை சிறந்த பலனைத் தரும்.
சந்திரன்
சர்ப திரேக்கானத்தில் இருந்தால் கொடூர சுபாவம்.
ஆயுத திரேக்கானத்தில் இருந்தால் பிராணிகளை அதிகமாக இம்சிப்பான்.
சதுஸ்பாத திரேக்கானத்தில் இருந்தால் குரு பத்தினியை புணர்வான்.
பட்சி திரேக்கானத்தில் இருந்தால் அங்கும் இங்கும் அலைந்து திரிவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *