கோள்களின் கோலாட்டம் -1.21  சில துர்யோகங்கள்.


91

1) 8 – ல், 8 – க்குரியவர், பலம் குன்றி சந்திரன் சனி, சூரியன் சேர்க்கை இருந்தால், இவர் பிறந்த வீடு இயற்கை சீற்றத்தாலோ, விபத்தினாலோ, அந்த வீட்டை விற்றோ சென்றுவிடுவார்.
2) 8 – க்குரியவர் சுபராக இருந்து பாக்கியத்திலிருந்தால் பெரிய வீட்டை விற்று சிறிய வீட்டிற்கு போக வேண்டியது வரும். அஸ்தமனம் பெற்றால் பிறந்த மனை ஜலத்திற்கோ, நெருப்பிற்கோ இரையாகும்.
3) 8 – ல் ராசி – செவ்வாய் சேர்க்கை 3 பாகைக்குள் இருப்பின் பிறந்த வீட்டில் நிம்மதி. சௌக்கியம் இருக்காது, சனி பார்த்தால் அங்கு இருப்பவர்களுக்கு விபத்து ஏற்படும். மேற்கு பாகத்தில் கெட்ட பெண் துர்க்குணம் படைத்தவள் வசிப்பாள்.
4) 5 – ல் சூரியன், கேது, குரு சேர்க்கை இருப்பின் இவர்களை செவ்வாய் பார்த்தால் பொய் சாட்சி சொல்வதாலோ, தர்மத்திற்கு விரோதமாக நடப்பதாலோ கெட்ட நடவடிக்கையாலோ வீட்டை விட்டு ஓடிப்போக வேண்டிவரும். குழந்தை இல்லாமல் வீட்டை பங்காளி எடுப்பார்.
5) லக்கினத்தில் ராகு, லக்கினத்திற்கும், லக்கினாதிபதிக்கும் அவர் பார்வை இல்லாமல் இருக்க, லக்கினாதிபதி நீச்ச நவாம்சத்தில் இருப்பின் தன் வீட்டை விட்டு வேறு வீட்டில் போய் வசிப்பான். இவன் வீடு நியாயமில்லாத முறையில் பிறருக்கு போய் சேரும்.
6. குருவும், சந்திரனும் பரஸ்பரகேந்திரத்தில் ( 4, 7, 10 ) நீச்சமோ அஸ்தமனமோலப்பையோ – கெட்ட ஆதிபத்தியமோ பெறாமல் இருந்தால் ஜெயகேசரி யோகம். இவை இரண்டும் நவாம்சராசியில் 6, 8 – இல் ( அ ) அக்களத்தில் அமைந்து விட்டால் இவ்யோகம் பயன் இல்லை. நவாம்சத்தில் நீச்சமும் பெறக்கூடாது.
*உச்சனை உச்சன் பார்க்கும்போது ஏற்படும் தோஷம், இரண்டு கிரகங்களுக்கும் பரஸ்பரம் 180 பாகைக்குள் இருந்தால் மட்டுமே பாதிக்கும். உச்ச கிரகம் எத்தனையாவது பாதத்தில் உள்ளதோ அதற்கு நேர் அத்தனையாவது பாதத்தில் அந்த உச்சகிரகம் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *