கோள்களின் கோலாட்டம் -1.22  உபகிரக பலன்கள் விபரம்.

 சூரியன் ஸ்புடத்தோடு 4 ராசி 13 பாகை கூட்ட வரும்
தூமன் இருக்குமிடம். 

லக்கினத்திற்கு,
1 – ல் தூமனிருப்பின், தற்கொலை, ஜலகண்டம்
2 – ல் தூமனிருப்பின், பேச்சு சாதுர்யம் குறை, திக்குவாய்.
3 – ல் தூமனிருப்பின், உடன் பிறப்பு பாதிப்பு, ஊனம்
4 – ல் தூமனிருப்பின், தாய்மாமன் வர்க்கம்,தெய்வகாரியம்
செய்தல்
5 – ல் தூமனிருப்பின், மகா கோபி
6 – ல் தூமனிருப்பின், நாய், பூனை விலங்கு பயம்.
7 – ல் தூமனிருப்பின், மதமாற்றம், ஊர்மாற்றம்
8 – ல் தூமனிருப்பின், ஆயுத பயம், ஹீனம்
9 – ல் தூமனிருப்பின், தபோபலம் குறையும்
10-ல் தூமனிருப்பின், இடி, மின்சார பயம்
11-ல் தூமனிருப்பின், புதிய வீடுகள் வாங்குவது
12 -ல்தூமனிருப்பின், வீட்டை விட்டு அலைந்து திரிதல்

வியதீ பாதன்.
 360 பாகையிலிருந்து தூமன் ஸ்புடத்தை கழிக்க
வருவது வியதீபாதன் 
லக்கினத்திற்கு,
1 – ல் இருப்பின் தோல் வியாதி
2 – ல் இருப்பின் அதிக சாமார்த்தியம்
3 – ல் இருப்பின் சங்கீத ஞானம்
4 – ல் இருப்பின் குதிரை வாகனம்
5 – ல் இருப்பின் புத்திரசோகம்
6 – ல் இருப்பின் அவ்வப்போது சுகசோபனம்
7 – ல் இருப்பின் மகாதரித்திரம்
8 – ல் இருப்பின் பலகலை வித்துவான்
9 – ல் இருப்பின் பாக்கியம் அறியாதவன்
10-ல் இருப்பின் நெருப்பு பயம்
11-ல் இருப்பின் பெரியோர், அரசாங்க ஆதரவு
12-ல் இருப்பின் ஜாதிக்குப் புறம்பான தொழில்

பரிவேடன்.
வியாதீபாதன் ஸ்புடத்தோடு 180 பாகை கூட்ட வரும் ராசி
பரிவேடன் ராசியாகும்
லக்கினத்திற்கு,
1 – ல் இருப்பின் விஷஜந்து, பாம்பு கடியால் கண்டம்
2 – ல் இருப்பின் அதிக சம்பத்தை தேடுவான்
3 – ல் இருப்பின் மன வியாதி, சித்தப்பிரமை
4 – ல் இருப்பின் அந்நிய தேசவாசம், சஞ்சாரி
5 – ல் இருப்பின் காராக்கிரஹவாசம், காவல்துறை பயம்
6 – ல் இருப்பின் நம்பிக்கை மோசம் செய்தல்
7 – ல் இருப்பின் கண் கோளாறு
8 – ல் இருப்பின் ஆயுதத்தால் உடல் ஈனம்
9 – ல் இருப்பின் மாதா, பிதா, குரு துரோகி
10-ல் இருப்பின் அதிகமானஸ்தன், யோக்கியன்
11-ல் இருப்பின் வாக்கு, சாமார்த்தியம் இல்லாதவன்
12-ல் இருப்பின் நீண்ட நாள் ரோகி, வைத்திய செலவீனன்.

இந்திர தனுசு.
360 பாகையிலிருந்து பரிவேடன் ஸ்புடத்தை
கழிக்க வரும் ராசி இந்திர தனுசு உள்ள இடம் 
லக்கினத்திற்கு,
1 –  ல் இருப்பின் வாதரோகம், அதிக சரீர பீடை
2 – ல் இருப்பின் செவி நோய், காது கேளாமை
3 – ல் இருப்பின் பல கொலைகள் செய்த பாதகன்
4 – ல் இருப்பின் பூர்வீக சொத்து நாசம்
5 – ல் இருப்பின் மந்திரவாதி
6 – ல் இருப்பின் சத்துரு பயம்
7 – ல் இருப்பின் குறையுள்ள அங்கம், சரியில்லாத மனைவி
8 – ல் இருப்பின் காரியத்தடை
9 –  ல் இருப்பின் காரகிரகத்தால், புத்திரர்களால் பயம்
10- ல் இருப்பின் அவசர போஜனம்
11- ல் இருப்பின் வேட்டையாடுதல்
12- ல் இருப்பின் ராஜகோபம், நாடு கடத்தப்படுதல்.

உபகேதி.
இந்திர தனுசுடன் 17 பாகையை கூட்ட வரும்
ராசி உபகேது உள்ள ராசியாகும். 
லக்கினத்திற்கு,
1 – ல் இருப்பின் வழுக்கைதலை, தலைமுடி அற்றவன்
2 – ல் இருப்பின் பணமில்லாதவன்
3 – ல் இருப்பின் மூக்கரையன் வாசனை திரவியம் உ உபயோகிப்போன்
4 – ல் இருப்பின் வாசனை திரவியம், இருதய நோய்
இரட்டை ஜெனனம் பிறப்பு
5 – ல் இருப்பின் இரட்டை ஜெனனம்
6 – ல் இருப்பின் ஆஸ்துமா, அன்னிய வீட்டில் மரணம்
7 – ல் இருப்பின் களவு முதலியவைகளால் பயம்
8 – ல் இருப்பின் விஷம், நெருப்பு இவைகளால் அகாலமரணம்
9 – ல் இருப்பின் சூரன்
10-ல் இருப்பின் மரம், செடி, கொடிகளால் கண்டம்
11-ல் இருப்பின் புதையல் யோகம்
12-ல் இருப்பின் சயன சுகம் இல்லை. துக்கம்.
குறிப்பு — இந்த உபகிரகத்தின் பலன்களை சந்திரன் நின்ற வீட்டிலிருந்தும் பார்க்கலாம்.
இதில் குறிப்பிட்ட பலன்கள் வேறு கிரகத்தின் தொடர்பு ஏற்படும்போது மாறி நடக்கலாம். சேர்ந்த கிரகத்திற்கு தக்கபடி பலன்கள் செயல்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *