கோள்களின் கோலாட்டம் -1.23  12 பாவங்களின் முக்கிய விதிகள் முதல் பாவத்தின் முக்கிய விதிகள்.


images (49)

1 ) 1 – க்குரியவர், கேந்திர, திரிகோணங்களில் இருந்து, இன்னொரு கேந்திர திரிகோணாதிபதியோடு சேர்ந்து இருந்து, சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகத்தால் பார்க்கப்பட்டால், அந்த ஜாதகர் செல்வம், செல்வாக்கில் குறையின்றி சர்வ சுகங்களையும் அனுபவிப்பார். ( மேற்படி கிரகங்கள் எந்த வகையிலும் கெடாமல் இருக்க வேண்டும். )
2 ) 1 – ல் புதன், சனி, சேர்க்கை, பாவர் பார்வை – அழுக்கடைந்த விகாரமான சரீரம் உள்ளவன். கெட்ட காரியத்தில் நாட்டம் உண்டு. வித்தை, தனம், வாகம், சுகங்கள் குறைவுபடும்.
3 ) 1 – க்குரியவர் சுக்கிரன், 4 – க்குரியவர் லக்கினத்திலிருந்தால் நல்ல யோகத்தை தருகிறது.
4 ) 1 – இல் சூரியன், குரு, புதன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை தார தோஷம் உள்ளவன் பெண்களால் தொல்லைகள் உண்டு.
5 ) லக்கினம், அல்லது 1 – க்குரியவரை, சனி, சந், செவ், இவர்கள் ஏக காலத்தில் பார்த்தால், உடலில் ஊனம் ஏற்டும். இவரோடு புதன், சனி, 3, 6 – க்குரியவராகி 1 – க்குரியவருடன் சேர்ந்து, 3, 6, 8, 12 – ல் இருந்தாலும் மேற்படி பலன்.
6 ) 1- க்குரியவர் 3, 6, 8 – இல் 5 – க்குரியவர் 12 – ல் சந்திரனோடு சேர்ந்து இருந்தாலும், 3 – ல் லக்கினாதிபதி சுக்கிரன், புதன், சேர்ந்து சனியால் பார்க்கப்பட்டு இருந்தாலும் உடல் எச்சுகத்தையும் அனுபவிக்காத நிலை ஏற்படும்.
7 ) 1 – இல் 3, 6 – க்குரியவர், கேது சேர்க்கை பெற்று 5, 10 – க்குரியவரால் பார்க்கப்பட்டால், 3, 6 – க்குரியவரின் திசையில் அனேக சொத்தை விரையம் செய்வார். நோய்த்தொல்லை, கடன் பகையும் சேரும்.
8 ) 1 – ல் பாக்கிய விரையாதிபதி இருந்து, மாந்தி சேர்க்கை பெற்று, 1- க்குரியவர் 3, 6, 8, 12 – லிருப்பின் வீட்டிற்கு அடங்காமை, தாய், தாந்தை சொல் கேளாமை, திருட்டு குணம் உடையவன். அரச தண்டனைகள் பெறுவான்.
9 ) 1 – ல் 5, 4 – க்குரியவர் சேர்க்கை, 11 – ல் 2 – க்குரியவர் இருந்தால் பெரும் செல்வந்த குடும்பத்தில் ஜெனனம் ஏற்பட்டு பலவகை சுகங்களை அனுபவிப்பார்.
10) 1 – ல் 5, 7 – க்குரியவர் சேர்க்கை, 2 – க்குரியவர் 2 லிலோ, 2 – ஆமிடத்தை பார்ப்பதோ மிகுந்த சிறப்பைத் தரும். மனைவி வகை செல்வம், அதிகாரம் கிட்டும்.
11) 1 – ல் பாவர், 1 – க்குரியவர் மாந்தியுடன் சேர்ந்து 6 – க்குரியவரின் தொடர்பை பெற்றால், உடல் பலம், குன்றியவன் அடிக்கடி நோய்த் தொல்லை காணும். ஆயுள் பலம் குறைந்தவன்.
12) 1 – க்குரியவர் நீச்சம் பெற்று, 1 – ல் பாவர் இருந்து, 6 – க்குரியவரின் தொடர்பு பெற்றால், இளைத்த தேகம், கடின நோய்த தொல்லை, கல்வியில் தடை.
13) 1 – க்குரியவர் 6 – ல் பாவர் சாரம் பெற்று, 1 – க்குரியவர் திசை நடந்தால், படு திண்டாட்டத்தை தந்துவிடும்.
14) 1 – ல் பாவர் இருந்து, 1 – க்குரியவர் குரு 12 – ல் அமர, 2 – க்குரியவர் பாதகம் பெற, படிக்காத முட்டாள், ஊர் சுற்றித் திரிபவன். திருடி பிழைக்கும் குணம் உள்ளவன்.
15) 3 – க்குரியவர் இரடை ராசியிலிருந்து, புதன் சேர்க்கை பெற்று, சந்திர ராசிநாதன் இரட்டை ராசியிலருக்க ராகு, கேது சேர்க்கை பார்வை பெற்றால் இரட்டை ஜெனனம் ஏற்படும்.
16) 1 – க்குரியவர் பாதகம் பெற்று, பாவருடன் சேர அவரை பாவர் பார்க்க பிறந்தவன். துர்குணம், கெட்ட நடத்தை, தாய், தந்தை பேச்சை கேட்காமை, ஊதாரியான செலவுகளை செய்பவன்.
17) 1 – ல் 2 – க்குரியவர் கேது சேர்க்கை பெற்று குருவால் பார்க்கப்பட்டால் மனக்கட்டுப்பாடு அதிகம் உண்டு. நல்ல வாக்குள்ளவன் ஆன்மீக வாழ்க்கையில் விருப்பம் உள்ளவன்.
18) 1 – ல் 4, 5 – க்குரியவர் இருந்து, 9 – க்குரியவர் நல்ல நிலையில் பலம் பெற்றால், பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறப்பான். அல்லது நல்ல கௌரவமான குடும்பத்தில் பிறப்பான். தெய்வ பக்தி உண்டு. 4 – க்குரியவர் தசாபுத்தி காலம் நல்ல யோகத்தை தருமூ.
19) உடல், உயிராதிபதி பலம் பெற்று சுயசாரம் அல்லது சுபர் சாரம் பெற்று இருப்பின், தெய்பக்தி, பொறுமையுடன் தொல்லைகளை சமாளித்தல், எந்த நிலையிலும், போராடி காரியத்தை சாதித்துக் கொள்வார். தீய பழக்கம் இருக்காது.
20) 1 – க்குரியவர் 3 – க்குரியவர் பரிவர்த்தனம் பெற்று, 1 – ல் சுக்கிரன் இருப்பின் அழகிய தேகம், கலைத்துறையில் ஆர்வம், கவிதை, கதை, கட்டுரைகளில் ஆற்றல் ஏற்படும். சிறந்த நடிகராவார்.
21) உடல், உயிராதிபதிகள் வாங்கிய சாராதிபதி எந்த பாவத்தில் உள்ளதோ, அந்த பாவத்தின் குணங்களே அந்த ஜாதகருக்கு எற்படும்.
22) 1 – க்குரியவர் சந்திரன் சாரம் பெற்று, சந்திரன் பெற்ற சாரநாதன் 1- ல் இருப்பின் சதா வெளியில் பிரயாணம் செய்பவன் பெரிய செலவாளி, ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவன்.images (50)
23) 1 – ல் 2, 4, 9 – க்குரியவர் சேர்க்கை இருந்து 12 – க்குடையவரின் தொடர்பு பெற்றால் தனமெல்லாம் கடன் கெடுத்து இழந்து போவான்.
24) 1 – க்குரியவர் 3 லிருந்து, 3 – க்குரியவரின் தொடர்பு பெற்று 9, 10 – க்குரியவர் லக்கினத்தைப் பார்த்தால், சினிமா, டிராமா, கூத்து போன்றவர்களில் முன்னணியில் வருவார்.
25) 1 – ல் புதன், இவருக்கு சனியின் தொடர்பு கிடைத்து, 7 – ல் செவ்வாய் இருந்து, 1 – க்கரியவர் உபய ராசியிலருந்தால் அன்னியர் வீட்டில் வளருவான், அல்லது தத்து போவான்.
26) 1 – க்குரியவர் 12 – க்குரியவர் சாரம் பெற்று, 6 – க்குரியவர் தொடர்பு பெற்றால், 1 – க்குரியவர், 7 – க்குரியவர் சனி, புதன் தொடர்பு பெற்றால் நோய்த் தொல்லைகளுக்கு அடிமையாவான் மத்திம வயதில் வாதம் ஏற்பட்டு நரம்புத் தொல்லையால் உடல் உனமாகும்.
27) லக்கினாதிபதி பாவர் சாரம் பெற்று, உடலாதிபதி நீச்ச பரிவர்த்தனை பெற்று ரோகாதிபதி, புதனுடன் தொடர்பு பெற்றால் உஷ்ள நீர் சம்பந்தப்பட்ட வியாதிகளால் உடம்பு தளரும். நரம்பு பலகீனத்தால் உடல் கெடும்.
28) 1 – க்குரியவருடன், 6, 8 – க்குரியவர் தொடர்பு பெற்றால் இவர்கள் தசாபுத்தி காலத்தில் தன் செயல்களாலே கடன் ஏற்பட்டு விடும்.
29) லக்கினாதிபதி 8 – ல் ராகு சாரம் பெற்று, 5, 10 – க்குரியவர் பலம் இழந்து 3, 9 – ல் ராகு, கேது இருப்பின் தன் உழைப்பை குடும்பத்திற்கே தியாகம் செய்வான். உடன் பிறப்புகளுக்கு தந்தையாக இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்துவான்.
30) லக்கினாதிபதி ராக சாரம் பெற்று, 5, 8 – க்குரியவரின் தொடர்பு பெற்று பாதகாதிபதியின் சம்பந்தம் கிட்டி கேந்திரத்திலிருந்தால் ஜெயில் வாசம் ஏற்படும். கிரிமினல் வழக்கால் தொல்லை. எமாற்று வேலை செய்வான்.
31) 1 – க்குரியவர், 9 – க்குரியவர் சாரம் பெற்று 1, 4, 7, 10 – லிருந்து குருவால் பார்க்கப்பட்டால், இவர் தசாபுத்தி நல்ல யோகத்தை தரும்.
32) லக்கினாதிபதி, 9 – க்குரியவர் நின்ற வீட்டிற்கு 5, 9, 11 – லிருப்பின் என்றும் பாக்கியம் உள்ளவன். ஏதோ ஒரு வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும் தரித்திரம் இல்லாதவன். தெய்வ அருள் பெற்றவன். பலருக்கு ஏதோ ஒரு வழியில் உதவியாக இருப்பான்.
33) 1 – ல் ராகு இருந்து, 1 – க்குரியவரையும் லக்கினத்தையும் 3 – க்குரியவர், அல்லது பாவர் பார்த்தால், இவர்கள் தசாபுத்தி காலங்களில் நரம்பு, வாய்வு, கண் போன்ற தொல்லைகளால் நோய் ஏற்படும் தகாத பெண்களின் உறவை உண்டாக்கும்.
34) லக்கினாதிபதி, அல்லது லக்கினம், 5 – க்குரியோர் சாரம் பெற்று இருப்பின் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வாழ்வான். அதே 5 – க்குரியவர் சந்திரனுக்கு 4, 7, 10 – லிருந்தால், நல்லபூமி, வாகனம் சொத்து சேர்க்கை ஏற்படும்.
35) லக்கினத்தில் 3, 12 – க்குரியவர் பாதகாதிபதி சேர்க்கை பெற்று பாதகாதிபதி திசை நடந்தால் பெரும் தன நஷ்டம் ஏற்படும். கடன் வேதனைகளும், உடன் பிறப்பால் பல தொல்லைகளும் காணும்.
36) 1 – ல் ராகு, 3, 6 – க்குரியவர் சாரம் பெற்று, செவ்வாய், சனியின் தொடர்பை பெற்றால், அக்கிரக திசாபுத்தி காலங்கள் தொழிலை பங்கப்படுத்தும். சொல்ல முடியாத இடையூறுகளைத்தரும்.
37) 1 – ல் லக்கினாதிபதி 3, 6 – க்குரியவர் சாரம் பெற்று, 8 – க்குரியவரின் தொடர்பை பெற்ற சூரியன் சேர்ந்திருப்பின், ஜாதகர் பிறக்கும்போதே நோயுடன் பிறக்கிறார். வினோதமான நோய்களை வெளிக்காட்டி பெரும் மருத்துவர்களையே திக்குமுக்காட வைக்கும்.
38) லக்கினத்தில பாவர், 8 – க்குரியவர் சாரம் பெற்று லக்கினாதிபதி மறைந்து பாவரால் பார்க்கப்பட்டால், வீட்டிற்கு அடங்காதவன். கல்வி பலம் குறைந்தவன் . ஈன வார்த்தைகள் பேசுவோன். சஞ்சாராமான வாழ்க்கை அமையும்.
39) வக்கிரம் பெற்ற குரு, 5 – லிருந்து, லக்கினாதிபதியுடன் இணைய புத்திரர்களால் பலவிதமான வருத்தங்கள் ஏற்படும்.
40) எந்த ஜாதகத்திலும், லக்கின, நவாம்ச லக்கினத்திற்கு இருபுறமும் பாவக்கிரகங்கள் இருந்தால், கத்திரியோகம், அந்த ஜாதகன் உயர்ந்த நிலையில் இருந்தாலும் பிற்கால நிலை கெட்டுவிடும். ஊரை விட்டு ஓடிப்போய் பசி பட்டினியால், வியாதியால் கஷ்டப்படுவான். சிலருக்கு சிறை வாழ்வும் கிடைக்கிறது.
41) லக்கின கேந்திரத்தில் சனி, குரு, கேது தொடர்பு ஏற்பட்டாலும் லக்கினத்தைப் பார்த்தாலும், ஞானநிலை கிட்டும்.
42) லக்கினத்திற்கு 3 – க்குரியவனும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் சேர்ந்து, ராகு, கேதுவின் தொடர்பை பெற்று இரட்டை ராசியிலிருந்தால் இரட்டைக் குழந்தை பிறக்கும்.
43) 1 – க்குரியவர், 1, 4, 7, 10 – லிருந்து, 5 – க்குரியவர் தொடர்பை பெற்றால் கீர்த்தி, செல்வாக்கு, பலரால் பாரட்டப்படுவது, அரசியலில் முன்னேற்றம், உயர்பதவி பெற வாய்ப்பு உண்டு. சுபத்தன்மை பெற்ற குரு பார்வை நல்லது.
44) 1 – ல் 3 – க்குரியவர் 9 – க்குரியவர் பலம் பெற்று, சுக்கிரன், குருவின் தொடர்பு இருப்பின் ஜப, தவங்கள் செய்து, மடாதிபதி ஆவார் தெய்வ பலம் கிட்டும்.
45) லக்கினாதிபதி எந்த கிரகமானாலும் பலம் பெற்று இருக்க வேண்டும். மேசம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் இந்த லக்கினத்திற்கு லக்கினாதிபதி 3, 6, 8 – இல் இருப்பது தவறில்லை.
46) லக்கினாதிபதி 5 – க்குரியவருடனோ, அல்லது சந்திரனோடு சேர்ந்து, நீச்ச அஸ்தமனம் வக்கிரம் பெற்றிருந்தால் தெளிவில்லாத மன நிலை, தேவை இல்லாத அச்சம், மனபயம் கோழைத்தனம், பலஹீனமான மனதுடையவர்.images (48)
47) 9 – ஆமிடத்தில் 2, 3 – க்குரியோர் இருந்து, 2 – ல் இருந்து 5 – க்குரியவர் இருக்க லக்கினத்தில் சுபக்கிரகமிருந்தால், கல்வி, புகழ் கனம், செல்வம் உடையவர்.
48) லக்கினாதிபதி சுபர் இருக்க, 5 – க்குரியவர் பலம் பெற்று, 2 – க்குரியவரின் தொடர்பை பெற்றால் தான தருமம் மிக்கவன். வசதி வாய்ப்புகள் கிட்டும்.
49) 5, 10 – க்குரியவர் கூடி சனிக்கு 3 – ல் நிற்க கொடை உள்ளம் உடையவர். வசதி மிக்கவர், தெய்வ பலம் உடையவர்.
50) 3, 5, 9 – க்குரியவர், புதனுடன் கூடி கேந்திரத்தில் நிற்க, குறை இல்லா சுகம் பெறுவர். வாழ்க்கையில் உன்ன நிலையை அடைவர். விஷ்ணு அம்சம் பெறுவர்.
51) லக்கினாதிபதியும், 3 – க்குரியவரும் கூடி கேந்திரம் பெற்று 9 – க்குரியவரின் தொடர்பு பெற்றால் அழகு மிக்கவன் தர்ம குணம் உடையவன். வசதி வாய்ப்புக்களை பெறுவான்.
52) லக்கினாதிபதி பலம் பெற்று அந்த ராசியாதிபதி திரிகோணம் அடைய, 5 – க்குரியவர் பார்க்க, பாக்கியம் மிக்கவன். தனம் உள்ளவன் பூமி யோகம் உண்டு.
53) 2, 3 – க்குரியவர் திரிகோணமடைந்து, சந்திரன் பார்க்க, தொடர்பு பெற, ஜோதிடம் சிற்பம், நன்னூல், கணிதம் இவைகள் அறிந்தவன்.
54) 2 – க்குரியவர் சந்திரனுடன் தொடர்பு பெற்று, சரராசியிலிருந்து அந்த ராசியாதிபதியும், லக்கினாதிபதியும் கேந்திரம் அடைய குரு பார்க்க பிறந்தவன், பல கலைகளை அறிந்தவன், இலக்கிய இலக்கணத்தில் நல்ல பாண்டித்யம் உடையவன்.
55) லக்கினாதிபதி 9 – ல் புதனுக்கு 1, 4, 7, 10 – ல் 2- க்குரியவர் இருப்பின் இதிகாச நூல்களில் பாண்டித்யம் உள்ளவன். அதிகார ஆக்னை உடையவன். வாழ்க்கையில் எதையும் சமாளிக்கும் திறன் மிக்கவர்.
56) 3, 12 – க்குடையவர்கள் கூடி திரிகோணம் பெற்று 2 – க்குரியவர், புதனுக்கு கேந்திரம் பெற்றால், புலமை தன்மை, பல நூல்களை எழுதும் ஆற்றல், கதை, கவிதை, கட்டுரை, காவியங்களில் சிறப்பு, கணிதம், ஜோதிடத்தில் வல்லவன்.
57) லக்கினாதிபதி கேந்திரம் அடைய அக்கேந்திராதிபதி திரிகோணமடைய, சந்திரன் ஆட்சி பெற, 12 – க்குரியவர் சந்திரன், குருவிற்கு கேந்திரத்தில் நிற்க, 5 – க்குரியோர் கேந்திரம் பெற வேத ஆகமம், வாகட வித்தை, கணிதம் ஜோதிடம், சித்தாந்தம் போன்றவைகளை கற்று சிறப்புடன் வாழ்வான்.
58) லக்கினாதிபதி திரிகோணம் பெற்று 2 – க்குரியவர் 11 – ல்இருந்து, 2 – ல் சுபர் இருக்க, அது சரராசியானால் பல ஊர் சுற்றும் தேச சஞ்சாரியாவார். அன்னிய தேசத்திலிருந்து தனம் தேடி வருவார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை பெறுவான்.images (46)
59) லக்கினம் உபய ராசியாக இருக்க, அதற்குரியவரும் உபயராசியில் 12 – க்குடையவருடன் சேர்ந்து இருக்க, செவ்வாய் 4 – க்குடையவருடன் கூடி எங்கிருப்பினும் தன் சொத்துக்களை இழந்து ஊரை விட்டு அன்னிய இடம் சென்று கடின உழைப்பால் உழலுவான்.
60) லக்கினாதிபதியும் 2 – க்குரியவரும் கூடி 6, 8, 12 – லிருக்க, 3, 9 – க்குரியவர் தொடர்பு பெற எக்காலத்திலும் இவன் வாழ்க்கையில் உயர்வும், கீர்த்தியும் பெற முடியாது.
61) லக்கினாதிபதியும் 9 – க்குரியவரும் கூடி 3 – ல், 6 – க்குரியவர் கேந்திரத்தில், சந்திரன் நீச்சம் அடைந்து, சனி, ராகு சேர்க்கை பெற்றால் ஒரு காசும் இல்லாத தரித்திரன், துர்க்குணம் உடையவன், கையில் ஓடு எடுத்து திரிவான்.
62) பாவர்கள் லக்கினத்தை பார்க்க, 9 – க்குரியவர், 12 – ல், 12 – க்குரியவர் 4 – ல், 3 – க்குரியவர் பலம் குறைந்து இருக்க, தாய், தந்தையின் பாவத்தை உருக்கொண்டு வந்தவன். வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெற முடியாமல் தவிப்பான். தீராத மன வேதனைகளை உடையவன்.
63) 3 – ல், 8 – க்குடையவர், 8 – க்குரியவருக்கு முன், பின் குருவும், சுக்கிரனும் நிற்க, சந்திரன், சுக்கிரனுக்கு 7 – ல் இருப்பின் ஆயுள் பலம் மிகுந்தவன். பல சுகங்களை அனுபவிப்பான். பலவகைத் தொழில்களில் நிபுணத்துவம் கிட்டும்.
64) தீர்க்காயுள் பெற்ற ஜாதகங்களின் கிரக அடைவை பார்க்கலாம். 3 –  ல் சனி, லக்கினத்தில் சந்திரன், 11 – ல் சுபர்கள், குரு திரிகோணத்தில், இருந்தாலும்.
65) குரு கேந்திரம் அடைந்து, குருவிற்கு திரிகோணத்தில் லக்கினாதிபதி நிற்கவும்.
66) கேந்திரத்தில் குரு இருந்து, சனி பார்க்க, 8 – க்குரியவர், திரிகோணம் பெற, 3 – ல் 2 – க்குடையவர். சந்திரனும் கூடி இருக்க பிறந்த ஜாதகர்கள் தீர்க்காயுளைப் பெற்றவராவார்.
67) லக்கினாதிபதி கேந்திரமடைய லக்கினத்தில் குரு 2 – க்குடையவர் நிற்க கல்வி தனம் உடையவர்.
68) லக்கினாதிபதி 12 – ல் நிற்க, 12 – க்குடையவர் லக்கினத்தில நிற்க திரி«£கணத்தில் ராகு நிற்க, சந்திரன் கேந்திரமடைய கல்விச் செல்வம் உடையவர்.
69) லக்கினாதிபதி சந்திரனுக்கு திரிகோணமடைய, 2 – க்குரியவர் கேந்திரத்தில் நிற்க, சந்திரன் கேந்திரமடைய கல்விச் செல்வம் உடையவர்.
70) லக்கினாதிபதி கேந்திரமடைய 2, 9 – க்குடையவர்கள் கூடி குருவுக்கு திரிகோணமடைய, பூமி, கல்வி, தனம் நிறைந்தவர்.
71) லக்கினாதிபதியும், 2 – க்குடையவரும் ஆட்சி அடைய, 9 – க்குடையவர் 4 – ல் நிற்க, 10 – க்குடையவர் லக்கினத்தில் நிற்க, கல்விச் செல்வம், நிறை பெற்ற வாழ்வு பெற்றவராவார்.
72) 9, 11 – க்குடையவர் கூடி 3 – ல் நிற்க, சத்தியம், தர்மம், பூமி, கல்வி உடையவர்.
73) லக்கினத்தில் சூரியன் நிற்க, 2 – ல் புதன் நிற்க, 9 – க்குடையவர் 11 – ல் நிற்க, பொருள் உடையவர்.
74) 1, 3, 4 – க்குரியவர்கள் மூவரும் கூடி திரிகோணமடைய 2 – க்குடையவர் குருவிற்கு 11 – ல் நிற்க, கல்வி, செல்வம் உடையவர்.
75) 4 – க்குடையவர் 4 – ல் நிற்க, 2 – க்குடையவர் 4 – க்கு, 2 – ல் நிற்க, 9 – க்குடையவர் 12 – ல் நிற்க, வேதாகம் கற்றவர்.
76) லக்கினாதிபதி 10 – ல் நிற்க, 2 – க்குடையவர் 9 – ல் நிற்க, 4 – க்குடையவர் 4 – ல் நிற்க சிவபக்தி உடையவர். லக்கினாதிபதி கேந்திரமடைய, அக்கேந்திராதிபதி திரிகோணம் அடைய, சந்திரன் ஆட்சி அடைய.
77) லக்கினாதிபதியும், 2- க்குடையவரும் கூடி கேந்திரமடைய, 4 – க்குடையவர் 9 – ல் நிற்க, 10 – க்குடையவர் திரிகோணமடைய இவர்களை குரு பார்க்க, தர்மம், கல்வி, தெய்வ பக்தி உடையவர்.
78) லக்கினாதிபதியும் 2 – க்குடையவரும் கூடி லக்கினத்தில் நிற்க, புதனுடையவர் ராகுவுடன் கூடி 10 – ல் நிற்க, பாக்கியாதிபதியாக இருப்பார்.
79) லக்கினாதிபதி ஆட்சி அடைய 3, 12 – க்குடையவர் குருவுக்கு திரிகோணத்தில் நிற்க, 10 – க்குடையவர் கேந்திரமடைய தெய்வச் செலவு, சுகவாழ்வு உடையவர்.
80) லக்கினாதிபதி 11 – ல்நிற்க, 4 – க்குடையவர் 9 – ல்  நிற்க, 5 – க்குடையவரை குரு பார்க்க, பிரவுவாக இருப்பான்.
81) லக்கினாதிபதி 9 – ல் நிற்க, 2 – க்குடையவர் 11 – ல் நிற்க, 2 – ல் குரு நிற்க, அன்னிய தேசம் போய் வாழ்வார்.images (45)
82) 5 – க்குடையவர் லக்கினத்திற்கு 12 – ல் நிற்க, குரு திரிகோணத்தில் நிற்க, 4 – க்குடையவர் 9 – ல் நிற்க, சந்திரன் குருவுக்கு திரிகோணமடைய உடனடி பலன்.
83) சரராசியில் 3 – க்குடையவர் நிற்க, சர ராசிக்குரியவர், லக்கினாதிபதி கேந்திரமடைய கல்வி, கீர்ததி உடையவர்.
84) 9 – க்கு கேந்திரத்தில் 3 – க்குடையவர் நிற். அந்த ராசிக்குடைய வரோடு, சந்திரன் கூடி கேந்திரமடைய அவரை சுக்கிரன் பார்க்க இரட்சிக்கும் தன்மை உடையவர்.
85) 11 – க்குடையவரும் செவ்வாயும் கூடி ஒரு ராசியில் நிற்க, அந்த ராசிக்கதிபதி உச்சமடைய அவரை சுக்கிரன் பார்க்க தனதான்ய பாக்கியம்.
86) 3 – க்குடையவர், லக்கினாதிபதி மாறி நிற்க, புதன் பார்க்க வீர தீரம் உடையவர்.

87) 4, 2 – க்குடையவர்கள் கூடி லக்கினத்தில நிற்க, புதன் பார்க்க வீர தீரம் உடையவர்
88) 2, 3, 11 – க்குடையவர்கள் மூலவரும் கூடி 9 – ல் நிற்க, அவர்களை 5 – க்குடையவர் பார்க்க, சுகம், தனம், வாகன யோகம் உடையவர்.
89) 7, 2 – க்குடையவர் கூடி 4 – ல் நிற்க, 4 – க்குடையவர் உச்சமடைய சுபர்கள் பார்க்க நீதி உயர்வு உடையவர்.
90) லக்கினாதிபதி ஆட்சி அடைய, 6 – ல் சந்திரனுக்கு 4 – க்குடையவர் நிற்க குரு பார்க்க சற்குணம் உடையவர்.
91) சந்திரனுக்கு 3 – க்குடையவர் உச்சமடைய, அந்த உச்ச ராசியில் நின்ற ராசியாதிபதி 5 – ல் நிற்க, புண்ணிய குணம் உடையவர்.
92) செவ்வாயும், 9 – க்குடையவரும் கூட 5 – ல் நிற்க ஆதாரம் உள்ளவர்.
93) 3 – க்குடையவரை 2 – க்குடையவர் பார்க்க, லக்கினாதிபதி 2 – ல் நிற்க புதன் பார்க்க நாராயண பக்தி உடையவர்.
94) குரு லக்கினத்தில் நிற்க, அவரை 5, 2,9 – க்குடையவர்களால் 7 – இல் இருந்து பார்க்க, கீர்த்தி உடையவர்.
95) 4 – ல் செவ்வாய் உச்சமடைந்து, குரு உச்சமடைந்து பார்க்க வீரம் பொருந்தியவர்.
96) குருவும், லக்கினாதிபதியும் கூடி 4 – ல் நிற்க, 4 – க்குடையவர் பார்க்க கல்வி, பொருள், ஆள், அடிமை, செல்வம் உடையவர்.
97) லக்கினாதிபதி 9 – ல் நிற்க, 9 – க்குடையவர் 4 – ல் நிற்க அல்லது சந்திரனுக்கு 3 – ல் 9 – க்குடையவர் நிற்க. கீர்த்தியை நிலைக்கச் செய்வார்.
98) 9, 4 – க்குடையவர் உபயராசியில் நிற்க, அவர்களோடு உபயராசியாதிபதி கூடி நிற்க சுதேச வாசி.
99) லக்கினாதிபதி ஸ்திர ராசியில் கேந்திரமடைய, அதற்குடையவர் சரராசியில் நிற்க, அவரை சர ராசிக்குரியவர் பார்க்க சுதேச வாசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *