கோள்களின் கோலாட்டம் -1.24  2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்.

images


1) 2 – க்குடையோர், நீச்ச, சத்துருஸ்தானங்களிலிருந்து நீச்ச, சத்துரு அம்சத்தை அடைந்தால், அல்லது நீச்ச கிரகத்தால் பார்க்கப்பட்டால் தன்கு இல்லாமையால், அடுத்தவரிடம் வாங்கி உண்பான். அடுத்தவர்களை நீச்ச வழியில் உடன்டச் செய்து, அவ்வகை வருமானங்களை வைத்து ஜீவிப்பான்.
2) 2 – க்குடையவர் 3, 6, 8, 12 – ல் இருந்து ராகுவின் தொடர்ரபை பெற்றாலும், 2- க்குரியவர் சனியாகி நீச்சம் பெற்று, செவ்வாய் சேர்க்கை இருப்பினும் மேற்கண்ட பலன்.
3) 2 – ல், 9, 11 – க்குரியவர் பலம் பெற்றிருப்பினும், 1- க்குரியவர் 2- ஆமிடத்தை, பார்த்து, 1 – க்குரியவரை குரு, 5, 9 – ஆம் பார்வையால் பார்த்து இருக்க 2 – க்குரியவர், 2, 11 – ல் பாக்கியாதிபதியோடு கூட குறை இல்லாத தனம் உள்ளவன். அடுத்தவர்களுடைய தனம் இவர்களிடம் விளையாடும், இறப்பு வரையில் தரித்திரம் என்பதை பார்க்காதவன்.
மேற்படி கிரக தசாபுத்தி காலங்களில், எதிர்பாராத தனம் வந்து சேரும். லாட்டரி, ரேஸ், பந்தயங்களின் மூலம் பணம் வரும்.
4) 2 – க்குரியவர், ஆட்சி பெற்று சுபரோடு கூடி இருப்பினும், சுக்கிரன் 1- க்குரியவர், சேர்க்கை பெற்றாலும், 2 – க்குரியவர் சூரியன் சேர்க்கை பெற்று சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றாலும் இவர்களின் கண் அழகே தனி. மீன்விழி, மான்விழி என வர்ணிப்பர். இவர்களின் கண்களும், முகமும் எல்லோரையும் ஈர்க்கும் வசீகர சக்தி வாய்ந்தது. கலைத்துறையில் பிரகாசிப்பார்.
5) 2 – ல் குரு சுபர் சேர்க்கை பெற்று இருப்பினும், புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று, பாவர் பார்வை இல்லாமலிருப்பினும், 2 – ல் சுக்கிரன் வர்க்காதிபதி வலுத்தாலும், 2 – க்குரியவர் கேந்திர திரிகோணங்களிலிருந்-தாலும், மேடை பேச்சில் வல்லவர், எழுத்து துறையில் புகழ் பெற்றவர். நாவன்மை மிக்கவர். தன் பேச்சால், எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் பெற்றவர்.
6) 2 – க்குரியவர், சனியின் தொடimages (54)ர்பு பெற்றிருப்பினும், 2 – ல் சூரியன், சனி இருந்து, செவ்வாயின் தொடர்பை ஏற்றிருப்பினும், 2 – ல் சுக்கிரன், சூரியன், ராகு இருந்து, பாவர் தொடர்பை பெற்று இருப்பினும் 2 – ல் பாவர்களுடைய ஆதிக்கம் இருப்பினும் கண்களுக்கு கவசம் அணிவார். கண் பார்வையில் கோளாறு ஏற்படும். கண்ணில் ரண சிகிச்சை காணும். மேற்படி கிரக தசாபுத்தி காலங்களில் குடும்பத்தில் துக்ககரமான சம்பவங்கள் நடக்கும்.
7) 2 – க்குரியவர், பலகீனம் அடைந்து சுக்கிரனோடு சேர்ந்து 6, 8, 12 – லிருப்பினும், 2 – க்குரியவரோடு சூரியன், சுக்கிரன் சேர்ந்து சனி, செவ்வாயின் தொடர்பை பெற்று 6, 8, 12 – லிருப்பினும் பிறவியிலேயே கண் ஈனமாகும். அல்லது மத்திம வயதில் வரலாம். இவர் தசா புத்தி காலத்தில் தன, குடும்ப நிலை கெட்டுவிடும்.
8) 2- க்குரியவர், சனி, சுக்கிரன் சேர்க்கை பெற்று 2, 6, 8, 12 – ல் இருப்பின், மாலையில் கண் தெரியாதவன். நாவன்மை குறைந்தவன் நீச்ச தொடர்புகளை பெற்றவன். இல்லற வாழ்க்கை சிறப்பற்றவன்.
9) 2, 6, 8, 12 – ல் சூரியன், சந்திரன் சேர்க்கை பெற்று, சனி, செவ்வாயின் தொடர்பை பெற்றாலும், 2- க்குரியவர் நீச்ச அஸ்தமனம் பெற்று 2 லிருந்து செவ்வாய் லக்கினத்திற்கோ சுக்கிரனுக்கோ 5 – ல் ராகுவுடன் சேர்ந்து, சூரியன், சனி தொடர்பை பெற்றாலும், 2 – க்குரியவர் செவ்வாய், கேது, சூரியன் சேர்க்கை பெற்று சனியின் தொடர்பை பெற்றாலும் கண் பார்வை கெடலாம். இவர்கள் திசாபுத்தி காலத்தில் யாருடைய ஆதரவுமின்றி, குடும்பத்தை விட்டு ஒதுங்க வேண்டிய சூழ்நிலை வரலாம். விரக்கிதயின் காரணமாக தற்கொலைக்கு ஆளாவார்.
10) 2 – ல் சூரியன், புதன் சேர்க்கை இருந்து, செவ்வாயின் தொடர்பை பெற்றால், மிகுந்த உணர்ச்சி உள்ளவர். கல்வி, வித்தையில் புகழ் பெற்றவர். நல்ல தொழில்களில் ஈடுபட்டுத் தனத்தை தேடுவார். பெண்கள் விசயத்தில் காதல் வசப்பட்டு மாட்டிக்கொண்டு விழிப்பார்.
11) சிம்மத்தில் சூரியன் இருந்து, அல்லது சூரியனோடு சுக்கிரன் செவ்வாய், சனி தொடர்பு பெற்றால் வலது கண் பழுதடையும், சிம்மத்தில் சந்திரன் இருந்து அல்லது சூரியன், சுக்கிரன், செவ்வாய், சனி தொடர்பு பெற்றால், இடது கண் பழுதடையும். கண் ஆபரேசன் செய்ய, புதன், வியாழன், வெள்ளிக்கிழமை நலம். இக்கிழமை காலங்களில் நேத்திரம், ஜீவன் இருக்க வேண்டும்.
12) 2 – க்குரியவர்க்கு, குருவிற்கு, 3,10, 11 – ல் சூரியன் ஆட்சி, உச்சம் பெற்றால், தனத்திற்குப் பஞ்சமே ஏற்படாது. அதிர்ஷ்ட பங்கமே கிடையாது.
13) 4, 8 – ல் சனி இருந்து சுப ஆதிபத்தியம் பெற்று குருவை பார்த்தால் வம்பு, வழக்கு, பூர்வீக சொத்துக்களால் மரணத்தின் மூலம் அதிர்ஷ்டம் ஏற்படும். 1, 4, 7, 10 – ல் சனி சந்திரனிருந்தால் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
14) 2, 5, 9 – க்குரியவர் 10, 12, 11 – லிருந்தால் வாலிபத்தில் சொற்ப தனயோகம் 7, 8, 9 – லிருந்தால் 25 முதல் 40 வயதுக்குள் யோகம். 1, 2, 3 லிருந்தால், 50 வயது வரை யோகம்.
15) 2 – ல் 8 – க்குரியவர் சுபர் பார்வை பெற்றால் உயில், மரண சாசன மூலம் சொத்து சேர்க்கை, வரும் மனைவியால் சொத்து சேர்க்கை ஏற்படும்.
16) கிருத்திகை, மூலம் இவற்றில் கேது இருந்து, ரேவதி, பரணி, ஆயில்யம், பூசம், சித்திரை, சுவாதியில் சனி இருந்து, புனர்பூசம், திருவாதிரையில் சுக்கிரன் இருந்து, இவர்கள், 2, 6, 8 – ல் இருந்தால், கண் பங்கமடையும். குடும்பத்தொல்லைகள் கணக்கில் அடங்கா.
17) 2 – க்குடையவர் ஆட்சி பெற்று 9, 4 – க்குரியவர் தொடர்பு பெற்ற புதன பலம் பெற்றால் கல்வியில் விருத்தி உண்டு. வாக்கு, நாணயம் தவறாதவன். தன விருத்தி உண்டு. வெளிநாடு செல்லும் யோகம் பல மொழிகளை அறிவான்.
18) 2 – ல் 2, 4, 5 – க்குரியவர் இருந்து சுபத்தன்மை பெற்ற கிரகங்களால் பார்க்கப்பட்டு இருப்பின், மேற்படி கிரகதிசாபுத்தி காலங்களில் தன விருத்தி, வீடு, வாகன சேர்க்கை சுபச்செலவுகள் நல்ல வாய்ப்புகள் கிட்டும்.
19) 2 – க்குரியவர் பலம் பெற்று சந்திரன், குரு சுபதன்மை பெற்று 4 – க்குரியவர் தொடர்பு பெற்றால், சுக போஜனம் விதவிதமான ஆகாரங்கள் சாப்பிடுவான்.
20) 2 – ல் சுக்கிரன், 5 – ல், 3 – க்குரியவர் மாந்தி சேர்ந்து, 2 – க்குடையவர் தொடர்பு பெற்றால் கல்வியில் தேர்ச்சி பெற்றவன். சாஸ்திரங்களை திறம்பட பேசுவான். வாக்கில் மென்மையும் வசீகர சக்தியும் இருக்கும். வம்ச விருத்தியில் பாதிப்பு காணும். ரத்த பந்த வகையில் பிரேத சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படும்.
21) 2 – க்குரியவர் கேந்திரம் பெற்று, 4, 5 – க்குரியவர் பலம் பெற்று இவர்களை சுபர் பார்த்தால், கல்வியில் நல்ல தேர்ச்சி உண்டு. மனோ – திடம்மிக்கவன். தெய்வீக ஞானம் பெற்றவன். ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவான். இவருக்கு பிறக்கும் குழந்தைகளும் கல்வி அறிவு மிக்கவரே.
22) 2 – ல், 7, 8 – க்குரியவர் இருந்து, 3, 11 – க்குடையவரின் தொடர்பு பெற்று, மேற்படி கிரக தசாபுத்திகள் நடக்கும்போது மிகவும் கஷ்டத்தை தரும். தனசேதம், வாக்கு நாணயம் தவறுதல், எதிர்பாராத வகையில் ஆயுள் பலம் ஏற்படும்.
23) 2 – க்குரியவர், ராகு, 6 – க்குடையவர் தொடர்பு பெற்றாலும் 2, 6, 12 – க்குடையவரின் தொடர்பு பெற்றாலும், 2 – க்கு 8 – ஆமிடத்தில் உள்ள கிரக தசாபுத்திகள் வந்தாலும், கடன்தொல்லை, குடும்பத்தில் அபகீர்த்தி உடன்பிறப்பு வகை விரோதம், குடும்பத்தில் தனக்கஷ்டம், முகம், பல் வகையில் நோய் ஏற்பட்டு அதன் அழுகு கெடும். 2 – மிடத்தை பாவர்கள் பார்க்க, 2 – ல் சனி அல்லது ராகு இருக்க, நாயால் பயம் ஏற்படும்.
24) 2 – ல் 1, 5 – க்குரியவர் சேர்க்கை பெற்று 2 – க்குரியவர் தொடர்பு பெற்று பாவரின் பார்வை பெற்றால், கல்வியில் உயர்ந்த நிலையிலிருந்- தாலும், அக்கல்வியில் தனவிருத்தித இருக்காது. குடும்பத்தில் அமைதி இல்லாத நிலை, எவ்வளவுதான் சம்பாதித்தாலும் போதாத குறை.
25) 2 – க்குரியவர், 5, 9 – க்குரியவருடன் கூடி இவர்கள் தசாபுத்தி நடக்கும் காலம் எதிர்பாராத தனம், பரிசுப்பொருட்கள் கிட்டும்.
26) 2 – ல் சனி இருந்தாலும், பார்ததாலும், 7 – க்குடையவருடன் கூடினாலும், 2 – க்குரியவர் பலம் பெற்று இவருடன் தொடர்பு பெற்£லும் இரண்டு குடும்பம் அமையும். பெண்கள் ஆனால் 2 – ஆம் தாரமாக வாழ்க்கைப்படுவர். இவ்வமைப்பு பெற்றவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் தீராத மன வருத்தம் காணும்.
27) 2 – ல், 8 – க்குரியவர், இவரை சனியும் 1, 2 – க்குரியவரும் பார்த்தால் துர்வார்த்தை பேசுவோன். குடும்பத்தில் அக்கரை இல்லாதவன், கல்வி தடைபடும். காசை தண்ணீரைப்போல இறைப்பான்.
28) 2 – இல் ராகு, மாந்தி 2 – க்குரியவர் புதன் சாரம் பெற்று சூரியனுடன் சேர்ந்து, சனியின் தொடர்பை பெற்றால், ஒரு கண் பழுதாகும். இல்லற வாழ்க்கை சரிப்படாது. வெறுக்கக்கூடிய வஸ்துக்களை சாப்பிடுவான்.
29) 2 – க்கு அதிபதி புதனாகி,9, 3 – க்குரியவர், கேது தொடர்பால் பெற்றால் லட்சக்கணக்கான ரூபாய்களில் புழக்கம் ஏற்படும். நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி போன்றவைகளில் புழக்கம் காணும். ஜாதகர் அதனால் சுகம் அடைய முடியாது.
30) 2 – க்குரியவர், 4, 7, 10 – ல் நல்ல பலம் பெற்று சுபச்சந்திரனின் தொடர்பு ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் நல்ல போஜனம், தங்கம், வெள்ளி தட்டுகளில் ஆகாரம் உண்பதும்,உயர்ந்த நிலையில் உள்ளவர்களோடு, சாப்பிடுவதும் உண்டாகும்.
31) 2 அல்லது 10, 11 – ஆம் வீடு சுபர் வீடாகி இதற்கு சுபர் பார்வை சேர்க்கை இருப்பினும் 5, 9, 11 – ஆமிடங்களை குரு பார்த்திருப்பினும், 2, 9 – க்குரியவருடன் குரு சேர்ந்து இருப்பினும் இவர்கள் திசாபுத்தி காலத்தில் அக்கிரகங்களின் கிழமைகளில் பணம் வரும்.
32) 2, 5 – க்குரியவர் சேர்க்கை, 6, 8, 12 – லிருப்பின் நோய்த் தொல்லையால் கல்வி தடைபடும். கீழ்த்தரமான வார்ததைகளை உபயோகிப்பர். அகால போஜனம். நீச்ச வழியில்தான் சமபாதனை. குடும்ப பொறுப்பு. இவர் தலையில் விழும்.
33) 2 – ல் பாவர், அல்லது 2- அமிடத்தை பாவர் பார்த்தாலும் இவரோடு ராகு, கேது, சனி தொடர்பு பெற்றாலும், கவிச்சி பொருட்களில் நாட்டம் அதிகம். கடினமான வார்த்தைகளை பேசுவான் வாக்கு தடை உண்டு. கல்வி தடைப்பட்டுவிடும். குடும்ப விரோதம் காணும். மாமிசத்தை விரும்பி புசிப்பான்.
34) 2 – ல் சனி இருந்து இவருடன் 8, 12 – க்குடையவர் இருந்து செவ்வாய், ராக, கேதுவின் தொடர்பை பெற்றால் பணம் தங்காத நிலை, பணத்திற்காக, பல தவறுகளை செய்ய வேண்டிய சூழ்நிலை, குடும்பத்திற்கு அடங்னாமை, காவல்துறை, அரசு வகையால் தண்டனைகள் அடைதல், தூக்குத் தண்டனையும் கிடைக்க வழி உண்டு.
35) 2 – ல், 6 – க்குரியவர் பலம் பெற்று இருந்து 6 – மிடத்தை சனி, ராக, கேது, சூரியன் பார்ததிருந்தால் சகவாச தோஷத்தால் பெரிய குற்றல் செய்வான். பண ஆசைக்காக அல்ல.images (53)
36) 2 – மிடத்தில சூரியன், சந்திரன் சேர்ந்திருப்பதால், திருமணம் தாமதமாகும். இது ஒரு விதத்தில் களத்திர தோஷமாகும். இப்படியாக அமைந்த ஜாதகர்களுக்கு 2 – மிடத்தில் சூரியன், சந்திரன் உள்ள ஜாதகத்தை இணைப்பதன் மூலம் எதிர்கால வாழ்க்கை உள்ளதாக அமையும்.
37) எந்த லக்கினத்துக்கும் குடும்பாதி நீச்சம் பெற்று ராகு, கேதுவுடன் அமர்ந்திருந்தால் திருமணம் காலதாமதமாகும்.
38) சனி வாக்குஸ்தானாதிபதியாகி வக்கிரமடைந்து எங்கே இருந்தாலும், வக்கிரமடைந்த கிரகம் வாங்குஸ்தானமான 2 – மிடத்திலிருந்தாலும், அல்லது வாக்குஸ்தானாதிபதியை நோக்கினாலும் இந்த அமைப்பில் பிறந்த ஜாதர்கள் மந்த கதியில் வெக தாமதமாகவே வார்த்தையை உச்சரிப்பான். கடும்பத்தில் குழப்பம், நாணய குறைவு, பண்ததட்டுப்பாடு ஏற்படும். 29 வயதிற்குள் திருமணம் நடந்தால் ஏகப்பட்ட குழப்பம், பிரிவினை போன்றவை ஏற்படும். சுபக்கிரக பார்வை இருந்தால் பாதிப்பு ஏற்பட்டு விலகும்.
39) மேசம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம் லக்கினத்திற்கு 2 – மிடமாகவும், நவாம்சத்திற்கும் மேற்படியே 2 – ஆமிடமாக அமைந்து, சந்திரன், செவ்வாய், சுக்கிரன் இருந்தாலும், இவர்களில் யாராவது ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் துரிதமாக தெளிவாக வார்த்தைகளை பேசுவார். வார்த்தை சித்தன்.
40) வாக்குஸ்தானாதிபதியின் யோக காரகனாய், கேந்திரங்களில் உச்சம் பெற்றிருக்க, வாக்குஸ்தானத்தில் கேது இருக்க, புத்திரஸ்தானா-திபதி, நோக்கினாலும், இருவரும் பலமாக இருந்தாலும் இந்நிலை கிரக அமைப்பில் பிறந்தவர்கள் சமயோசிதமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வார்.
41) 2 – க்குரியவர் 6, 8, 12 – ல் மறைந்து, வக்கிரம், அஸ்தமனம் யுத்தத்தில் இருந்து, 2 – ஆமிடத்தில் சந்திரனுடன் ராகு, சனி சேர்ந்து இருந்தால் பேய், பிசாசுகளின் தொல்லையால் உடல், ஆரோக்கிய குறைவும், நிம்மதி அற்ற வாழ்க்கையும் ஏற்படும். இந்த கிரக அமைப்பை, அல்லது இக்கிரகங்கள் அமர்ந்திருக்கும் ராசிநாதனை குரு பார்த்திருந்தால் தெய்வ பலத்தினால் உடன் நிவாரணமும், தெய்வபலமும் ஏற்படும்.
42) 2, 8, 9 – க்குரியவர் கூடி கேந்திரம் பெற்று லக்கினாதிபதியால், பார்க்கப்பட்டால் சில காலம் துன்பத்தில் பல வகையான பாதிப்புகளால் தள்ளப்பட்டு, 40 வயதிற்கு மேல் சுய முயற்சியால் பல தொழில் நுட்பங்களை அறிந்து செல்வமும், செல்வாக்கும் பெற்று வளமோடு இருப்பான்.
43) 1,2, 11 – க்குரியவர்கள் அவர்களுக்கு திரிகோண கேந்திரத்தில் நிற்க தன் சுய முயற்சியால் பல தொழில் நுட்பங்களை அறிந்து செல்வமும், செல்வாக்கும் பெற்று வளமோடு இருப்பான்.
44) 9 – க்குடையவர் 10 – ல், 2 – க்குரியவர் லக்கினத்தில், லக்கினாதிபதி கேந்திரத்தில், 4 – க்குடையவர் 12 – ல் கெடாத வாழ்வும், துயரமில்லாத நிலையும், மங்காத செல்வமும் உடையவர்.
45) 2, 6 – க்குரியவர்கள் நீச்சம் அடைய, பாவர்கள் பார்க்க, மனைவியினால் துயரமடைந்து, சொத்து சுகங்களை இழந்து தனி மனிதனாக காலம் கழிப்பான்.
46) சந்திரனும், சூரியனும் 2 – ல் நிற்க, 2 – க்குரியவர் 6 – ல் நிற்க, குரு 12 – ல் இருக்க, பூமி பொருட்கள் அழிந்து வாழ்வான். பலரிடம் அண்டி ஜீவிக்கும் நிலை தவிர வேறு ஜீவனம் இல்லை.
47) 1, 12 – க்குரியவரும், ராகுவும் கூடி 2 – ல் இருக்க, 6 – க்குடையவர் பலம் பெற, உண்ண, உடுக்க, இருக்க இடமின்றி மனத்துயர்த்-தோடு, காலம் கழிப்பான். கனவிலும் கூட செல்வம் அடையமாட்டான்.
48) 2 – ல் புதன், குரு திரிகோணத்தில், 4 – ல் சந்திரன் நிற்க, வாக்கில் சிறந்தவர் வித்தையில் வல்லவர். தமிழ் பாண்டியத்தியம் உள்ளவர். சாஸ்திர ஆராய்ச்சியில் சிறந்தவர். பல நூல்களை கற்று, வியாக்கியானங்கள் செய்து புகழ் பெறுவான்.
49) 11 – ல் குரு இருந்து, சுக்கிரன், புதன், சந்திரன், செவ்வாய்,  கேது, லக்கினாதிபதி, 6 பேர்களையும், பார்க்க, தனம், கல்வியில் சிறப்புடன் இருப்பர். காவிய நூல் படைப்பார். பல மொழிகளில் தேர்ச்சி கிடைக்கும். ஞானநூல் ஆசிரியர் ஆவார்.
50) லக்கினத்தில் ராகு நிற்க, 7, 6 – க்குடையவர் கூடி 4 – ல் நிற்க பல நூல்களை கற்று புகழ் பெற்றவர்களோடு இருந்து பல வினோத வித்தையில் கீர்த்தியும் – புகழும் பெறுவர்.
51) லக்கினாதிபதி நீச்சம் அடைந்து 4 – ல் உள்ள சனியோடு, 8 – க்குரியவர் சேர, ( பி ) 2 – க்குரியரும், சுக்கிரனும், புதனும் கூடி 6, 8, 12 – ல் நிற்க, ( சி ) 2 -க்குரியவர், 6 – க்குரியவர், சுக்கிரன், தூமன் மூவரும் 6, 8 – ல் நிற்க, ( டி ) 2 – க்குரியவர், தூமன், எமகண்டன் மூவரும் கூடி நிற்கப் பிறந்தவர்கள். பேச்சுத்திறன் அற்றவர்கள், திக்கி,திக்கி பேசுவார்கள்.
52) 2 – ல், 8 – க்குரியவர் நிற்க, 4 – ல் பாவிகள் இருக்க, ( பி, 12 – க்குடையவர் 2 – ல் இருக்க, ( சி ) 2, 4 – க்குரியவர், சந்திரன் – ராகு நால்வரும், கூடி 2 – இல் நிற்க, ( டி ) சுக்கிரன் – சந்திரன் – குரு மூவரும் கூடி 2 – ல் சுபரிருக்க, பிறந்தவர்கள், வெள்ளி, தங்க பாத்திரங்களில் சாப்பிடுவார்.
53) 2 – க்குரியவர் சந்திரன், குரு மூவரும் கேந்திர திரிகோணம் அடைந்து, 2 – ல் சுபர் இருக்க, ( பி ) 2, 4 – க்குரியவர், சந்திரன் – ராகு நால்வரும் கூடி, 2 – ல் நிற்க ( சி ) சுக் – சந்திரன் – குரு மூவரும் கூடி 2 – ல் நிற்க, ( டி ) 2 – ஆமிடத்தை 4, 9, 10 – க்குடையவர் பார்க்க, 2 – இல் சுபரிருக்க, பிறந்தவர்கள், வெள்ளி, தங்க பாத்திரங்களில் சாப்பிடுவார்.
54) 4, 11 – க்குரியவர் கூடி 9 – இல் நிற்க, செவ்வாய் பார்க்க ( பி ) சந்திரன், செவ்வாய், 2, 4 – க்குரியவர்கள் நால்வரும் கூடி 2 – ல் நிற்க ( சி ) 6, 4, 11 – க்குரியவர்கள் 2 லிருந்து, சந்திரன் பார்த்து, லக்கினத்தில் குரு இருக்க ( டி ) சந்திரன், செவ்வாய், 9 , 11 – க்குரியவர் நால்வரும் திரி«£கணத்தில் நிற்க, 3, 4 – க்குரியவர் பார்க்க ( இ ) லக்கினாதிபதி 2 – லிருக்க, 2 – க்குடையவர் 11 – ல், 4, 11 – க்குடையவர் பார்க்க பிறந்தவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத யோகங்களையும், சூதாட்டம், ரேஸ், பந்தயம் லாட்டரி போன்றவற்றில் எதிர்பாராத செல்வத்தை அடைவார். இச் செல்வத்தால், பலவகையான தெய்வ காரியங்களுக்கு தானம் தருமங்களை செய்வார். குறைந்த முதலீடுகளில் தொழில் செய்தாலும், பெரும் லாபத்தைத் தரும். வைத்துவிட்டுச் சென்ற பொருள்கள், சொத்துக்கள் கிட்டும். புராதன இடங்களில் தோட்டம், துறவுகளில் புதையல் யோகமும் கிட்டும்.
55) 1, 12 – க்குடையவரும், ராகு மூவரும் கூடி 2 – ல் நிற்க, கனவிலும் செல்வம் அடையமாட்டார்.
56) சந்திரனும் 2 – க்குடையவரும் கூடி நிற்க, செவ்வாய் திரிகோணமடைய லக்கினாதிபதி நீச்சம் பெற்று, 3 – க்குடையவரோடு கூடி நிற்க ஆடையின்றி தரித்திரம்.
57) சந்திரனும், 2, 6, 12 – க்குடையவர்களும் லக்கினத்திற்கு 2 – க்குடையவர்களும் நால்வரும் 6 – ல் நிற்க, மனத்துயரத்தோடு காலம் கழிப்பார்.
58) சந்திரனுக்கு 6, 8, 12 – ல் நிற்க, பாபர்கள் சுபஸ்தானங்களில் நிற்க சுபர்களை சனி பார்க்க கொடிய தரித்திரம்.
59) லக்கினாதிபதியும் 4 – க்குடையவரும், குருவும், மூவரும் கூடி நன்மையான ராசி, திரிகோண கேந்திரமுடைய சந்திரன், சுக்கிரன், புதன் இவர்களில் ஒருவர் 2 – ல் நிற்க, ஜோதிட வித்துவான்.
60) குரு கேந்திரமடைய, சுக்கிரன் 4 – ல் நிற்க, புதன் திரிகோணமடைய ஜோதிட சித்தாந்தி.
61) குரு திரிகோணமடையவும், சக்கிரன், குருவுக்கு கேந்திரமடையவும், புதன் கேந்திரத்தில் நிற்கவும், குருவின் கேந்திரத்தில் சந்திரனும், கேதுவும் கூடி நிற்க, ஜோதிடம், இலக்கியம், கற்றவர்.
62) சுக்கிரன் உச்சமடைய, புதன் 3 – ல் நிற்க, தனுசு லக்கினமாயிருந்து 11 – ல் குரு நிற்க, வாக்கில் சிறந்தவராம்.images (52)
63) 2 – ல் புதன் நிற்க, குரு திரிகோணமடைய 4 – இல் சந்திரன் நிற்க வித்தையில் வல்லவர்.
64) 2 – க்குடையவர் லக்கினத்தில் நிற்க, 7 – ல் சந்திரன், புதன் நிற்க தமிழ் பண்டிதர் பாக்கியவான்.
65) 2 – க்குடையவர் லக்கினத்தில் நிற்க, சந்திரனும், புதனும் கேந்திரமடைய 4 – க்குடையவர் 11 – ல் நிற்க செவ்வாய் கேந்திரமடைய அல்லது சுக்கிரன், செவ்வாய்க்கு 3 – ல் நிற்க, பாக்கியம் செல்வம், பல பாஷை பண்டிதர்.
66) 2 – ல் புதன் நிற்க, 2 – க்குடையவர், லக்கினத்தில் நிற்க, 4 – ல் சந்திரன் நிற்க, குரு 10 – ல்நிற்க, அவருக்கு 3 – ல் சுக்கிரன் நிற்க, யோக்கியவான். வாக்குவளம், யூகம் கல்வி உடையவர்.
67) லக்கினாதிபதி லக்கினத்தில் நிற்க, 2 – ல் புதன் நிற்க, 4 – ல் சந்திரன் நிற்க, குரு திரிகோணமடைய லக்கினத்தைப் பார்க்க சாஸ்திர ஆராய்ச்சியாளர் ஆவான்.
68) 2 – ல் குரு நிற்க, 2 – க்குடையவரை குரு பார்க்க, புதன், குருவுக்கு 11 – ல் நிற்க, சுக்கிரன் லக்கினத்தில் நிற்க, யோக்கியம், பாக்கியம், கல்வி உண்மை உடையவர்.
69) செவ்வாய், புதனுக்கு கேந்திரமடையவும், சந்திரன், சுக்கிரனோடு கூடி திரிகோணமடைய குரு 11 – ல்நிற்க, சாஸ்திர ஆராய்ச்சியாளர் சாஸ்திர ஆராய்ச்சி உடையவர்.
70) குருவுக்கு 2 – ல் 1 – க்குடையவர் நிற்க, அவரோடு சந்திரன் கூடி நிற்க புதனும், 9 – க்குடையவரும் கூடி 3 – ல் நிற்க 4 – இல் சுக்கிரன் நிற்க கவி மாலை செய்து புகழ் பெறுவார்.
71) சுக்கிரனும், புதனும் 2 – ல் நிற்க, குரு பார்க்க கல்விமான்.
72) சந்திரன், சுக்கிரன், புதன் மூவரும் கூடி 4 – ல் நிற்க, குரு பார்க்க கல்விமான்.
73) 2, 3, 4, 5, 7, 9, 10 இதற்குடையவர்கள் சுபர்களாயிருந்து ஆட்சி பெற்று நிற்க கல்விமான்.
74) சூரியனை 2 – க்குடையவர் பார்க்க, செவ்வாயை குரு பார்க்க நூல்களை கற்றவர். தமிழ்ப்புலவர்.
75) புதனை லக்கினாதிபதி பார்க்க, சனி நட்புடன் இருக்க தமிழ் புலவர்.
76) சுக்கிரன் உபய ராசியில் நிற்க அவருக்கு நேரில் சந்திரன், குரு நிற்க மேற்படி பலன்.
77) புதன் 2 – ல் நிற்க, செவ்வாய் திரிகோணமடைய, சுக்கிரன் ஆட்சி பெற்று நிற்க, சந்திரன் நட்பில் நிற்க, குரு 9 – ல் இருந்து பார்க்க, சூரியன் லக்கினத்தில் நிற்க, உயர்ந்த காவிய நூல் படைப்பார்.
78) குரு திரிகோணமேரி, சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன் லக்கினத்தைப் பார்க்க, சனி லக்கின கேந்திரமடைய அழியாத கீர்த்தி, காவியம் படைப்பார்.
79) லக்கினத்தில் குரு இருந்து, புதன், சந்திரன், சுக்கிரனைப் பார்க்க ஸ்திர லக்கினத்தில் ஜெனனமானவரும் தனம். கல்வியில் சிறப்புடன் இருப்பார். லக்கினத்தில் குரு இருந்து கேது – சந்திரன் – செவ்வாய் – புதன நால்வரையும் பார்க்க மேற்படி பலன்.
80) 11 – ல் இருந்து சந்திரன், சுக்கிரன், சூரியன், சனி, ராகு ஐவரையும் பார்கக கல்வி அறிவு உடையவர்.
81) 11 – ல் இருந்து, சுக்கிரன், புதன், சந்திரன், செவ்வாய், கேது, லக்கினாதிபதி ஆறு பேர்களையும் பார்க்க  ஞானநூல் ஆசிரியர்.
82) 11 – ல் இருந்து, சூரியன், பூர்ண சந்திரன், புதன் மூவரும் பார்க்க கல்வியில் தேர்ச்சி உள்ளவர்.
83) 11 – ல் இருந்து, சூரியன், பூர்ண சந்திரன் புதன் மூவரும் பார்க்க கல்வியில் தேர்ச்சி உள்ளவர்.
84) 11 – ல் குரு இருந்து சூரியன், பூர்ண சந்திரன் புதன் நால்வரையும் பார்க்க வீரம்த்தன்மை உடையவர்.
85) 4 – க்குடையவரும் லக்கினாதிபதியும் கூடி திரிகோணமடைய குரு பார்க்க, கணிதத்தில் வல்லவர்.
86) லக்கினாதிபதி சூரியனுடன் கூடி 5 – ல்நிற்க, லக்கினத்தை குரு பார்க்க கணிதத்தில் வல்லவர்.
87) சுக்கிரனும், குருவும் ஒருவரை ஒருவர் பார்க்க மேற்படி பலன்.
88) 4 – ல் குரு நின்று சனியைப் பார்க்க, புதன் லக்கினத்தில் நிற்க, 2 – ல் சூரியன், சுக்கிரன் கூடி சனியைப் பார்க்க வாகடநூல் பண்டிதர்.images (51)
89) லக்கினத்திற்கு 4 – லும், சுக்கிரனுக்கு திரி«£கணத்திலும் சனி நிற்க மேற்படி பலன்.
90) 7, 6 – க்குடையவர்கள் கூடி 4 – ல் நிற்க லக்கினத்தில் ராகு நிற்க விநோத வித்தையில் கீர்த்தியுள்ளவர்.
91) சூரியனும், சந்திரனும் கூடி நட்பு உச்சமடைய 2 – ல் 4, 10 – க்குடையவர்கள் நிற்க மேற்படி பலன்.
92) லக்கினாதிபதியும், 4 – க்குடையவரும் கூடி 9 – ல் நிற்க, ராக கூடி நிற்க, புதன் 6 – ல் நிற்க, குரு லக்கினத்திலிருந்து பார்க்க மேற்படி பலன்.
93) 3 – ல் 3, 4, 6, 8 – க்குடையவர்கள் நிற்க, 9 – லிருந்து செவ்வாய் பார்க்க மேற்படி பலனே.
94) 3 – ல் 3, 4, 6, 8 – க்குடையவர்கள் நிற்க, 9 – லிருந்து செவ்வாய் பார்க்க மேற்படி பலனே.
95) 6 – ல்சுக்கிரன், கேது கூடி நிற்க, சனி 11 – ல் நிற்க, 9 ஆமிடம் சூனியமாய் இருக்க, ஊமையன், லக்கினத்தில் குரு 7 – ல் சந்திரன், புதன் நிற்க கணித இலக்கண நூல் ஆசிரியர்.
96) சனி 4 – ல் நிற்க, லக்கினாதிபதி நீச்சமடைய சந்திரனுக்கு 10 – ல் 8 – க்குடையவர் நிற்க, ஊமை 5 – ல் குரு நிற்க, 11 – ல் சந்திரன் நிற்க காவியங்கள் செய்வார்.
97) 2 – க்குடையவரும், சுக்கிரனும், புதனும் கூடி 6, 8, 12 – ல் நிற்க, ஊமை.
98) 6 – க்குடையவர், சுக்கிரன், புதனும் கூடி 6, 8, – ல் நிற்க 8, 2 – க்குடையவர்களைப் பலங்குறைந்து நிற்க ஊமை, குரு பார்த்தாலும் ஊமை.
99) 2 – க்குடையவர், தூமன், எமகண்டன் மூவரும் கூடி 8 – ல் நிற்க, ஊமை, குரு 2- ல் நின்றால் சில நேரங்களில் வாய் குளறும். 2 – ல் சந்திரன் நின்றால் வாக்கு பங்கமில்லை.
100) புதன், சனி, சூரியன், மூவரும், கூடி 12 – ல் நிற்க, செவ்வாய், 8 – ல் நிற்க, ஊமை, லக்கினத்தில் சுக்கிரனும் 3 – ல் குருவும் இருந்தால் தமிழ்ப்புலவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *